ஒரு மீன் சமுத்திரத்தை விமர்சிக்கிறது
SP.VR.சுப்பையா
ந்ம்மூர் ஜனங்கள்
வாழ்க்கையை வெளியே தொலைத்துவிட்டு
சினிமாக் கொட்டகையின்
செயற்கை இருட்டில் தேடுகிறார்கள்
வேறெங்கிலும் வடித்த
வேர்வையை விடவும்
சினிமா டிக்கெட்டுக்குச்
சிந்தியதே அதிகம்
திரையரங்குகள்
தேனீக்களைக் கூட
கொசுக்களாய் அல்லவா
மாற்றிவிட்டன
இந்த சினிமா
மயில்கள்
கலாபம் விரித்து
நிழல் கொடுக்கும் என்று
நினைத்தோம்
ஆனால் அவையோ
ந்ம்
ஓய்வு நேரங்களின் மேல்
ந்ச்சமிட்டு விட்டன
பணக்கார வீட்டுப்
பெண்களைப்போல
நாளுக்கொரு புடவைகட்டும்
நகரத்துச் சுவர்கள்
அந்தச் சுவரொட்டிகளில் -
கசாப்புக் கடையில் தொங்கும்
உரிக்கப்பட்ட ஆடுகளாய்
உல்லாச நடிகைகள்
அவர்கள்
விரல் மோதிரம் போலவே
உடலில் ஆடையும்
அணிந்திருப்பார்கள்
இங்கு நிகழ்பவை என்ன?
மாற்றங்களா?
ஏமாற்றங்களா?
சினிமா!
எவ்வளவு அற்புதமான ஆயுதம்
நமக்கு
அதில்
முதுகு சொற்யத்தான் சம்மதம்!
- 15.8.1983 சினிமா எக்ஸ்பிரஸ்
இதழில் ஒரு பிரபல் கவிஞர் எழுதியது
யார் அந்தப் பிரபலம்?
முடிந்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்
என்ன க்ளு வேண்டுமா?
தருகிறேன் -
அவர் மனைவி சென்னைக் கல்லூரியொன்றில்
பேராசிரியையாகப் பணியாற்றுகின்றார்.
அவர் ஒரு கவிதாயினி !
-------------------------
ஜோதிடம் பற்றி ந்ம் பதிவர்கள் அளித்த்
தீர்ப்பைப் படித்தீர்களா?
இல்லையென்றால் இங்கே சொடுக்கிப் படிக்கவும்
சார்,
ReplyDeleteவைரமுத்து?
///வைரமுத்து? ///
ReplyDeleteசரியான விடைதான் சிவபாலன் அவர்களே!