25.2.07
ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 3
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 3
நேரம்
என்னோட நேரம் சாமி, நான் என்ன செய்ய?' என்று
சொல்வோமே அந்த நேரத்தைப் பற்றியதல்ல
இந்தப் பதிவு
இது உண்மையிலேயே உள்ள நேரத்தைப் (Time)
பற்றிய பதிவு
நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்
சென்னையில் காலை மணி 10.00 என்று வைத்துக்
கொள்வோம். அதே நேரத்தில் சிங்கப்பூரில் என்ன
மணி என்று கேட்டால் சட்டெனப் பதில் சொல்ல
வராது.
அப்போது சிங்கப்பூரில் மணி 12.30 PM
நம் பதிவர்களைக் கேட்டால் கூகுள் ஆண்டவரிடம்
கேட்டுச் சொல்லி விடுவார்கள்.
சரி அறிவியல் பூர்வமாக எப்படி மாறுபடுகிறது
என்று (கூகுள் ஆண்டவரிடம் கேட்காமல்) சொல்லுங்கள்
என்றால் விஷயமறிந்த சிலர் மட்டுமே சொல்லக்
கூடும்
எல்லோரும் அறிந்து கொள்வதற்காக இப்போது
அதைச் சொல்கிறேன். பூமியின் அச்சரேகை/தீர்கரேகை
வைத்து அது கணக்கிடப் படுகிறது
பூமியின் வட்டம் 360 பாகை (degree)
நாள் ஒன்றிற்கு 24 மணி x 60 நிமிடம் = 1,440 நிமிடங்கள்
1,440 நிமிடங்கள் வகுத்தல் 360 பாகை = ஒரு பாகைக்கு
4 நிமிடங்கள்
லண்டன் மாநகரத்தில் இருந்துதான் இந்த
(அச்சரேகை/தீர்கரேகை) Time Zone கணக்கிடப் படுகிறது
It is called as Greenwich Mean Time (GMT)
------------------------------------------------------------------
Coordinated Universal Time (UTC).
Longitude at a point may be determined by calculating
the time difference Since there are 24 hours in a day
and 360 degrees in a circle, the sun moves across the
sky at a rate of 15 degrees per hour
(360°/24 hours = 15° per hour). So if the time zone a
person is in is three hours ahead of UTC then that
person is near 45° longitude (3 hours × 15° per hour = 45°).
-------------------------------------------------------------
Standard time zone Singapore UTC/GMT +8 hours
Standard time zone India UTC/GMT + 5.5 hours
------------------------------------------------------------
இந்தியன் Time Zone என்பது பொது!
இந்தியாவில் அனைவரும் அதன்படி
Indian Standard Time (IST) ஐ த்தான் பயன் படுத்துகிறோம்
ஆனால் ஜோதிடத்திற்கு உள்ளூர் நேரம் அவசியம்
உதாரணத்திற்கு
கல்கத்தாவின் தீர்க்கரேகை 88.24
மும்பையின் தீர்க்கரேகை 72.50
இரண்டு இடங்களுக்கும் உள்ள
வித்தியாசம் 16 பாகை x 4 நிமிடங்கள் = 64 நிமிடங்கள்
இந்தியாவின் நேரம் கான்பூரை மையமாக வைத்து
அமைக்கப்பெற்றுள்ளது. கான்பூரின் தீர்க்கரேகை 80.20
கான்பூரிலிருந்து கல்கத்தா + 8 பாகை
கான்பூரிலிருந்து மும்பை Minus 8 பாகை
அதனால் இரண்டு நகரங்களின் உள்ளூர் நேரம்
(Local Time) 30 நிமிடங்கள் வித்தியாசப்படும்
இந்திய நேரம் காலை 10.00 மணி என்றால் அதே
நொடியில்
கலகத்தாவின் உள்ளுர் நேரம் 10.30
மும்பையின் உள்ளூர் நேரம் 9.30 மட்டுமே
இதுபோல அனைத்து இந்திய நகரங்களிலும்,
கிராமங்களிலும் உள்ளுர் நேரம் மாறுபடும்
---------------------------------------------------------------------
ஜோதிடத்தின் அடிப்படை விதிகளில் இந்த நேரமும் ஒன்று
அதனால்தான் (அந்த நேர வித்தியாசத்தால்) ஒரே IST யில்
இரண்டு இடங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம்
வேறுபடும்.
அதற்கு உதாரண ஜாதகங்களைக் கணினியில் கணித்து
இந்தப் பதிவின் மேலே கொடுத்துள்ளேன் (In Screen Shot Format)
நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------
மருத்து மனைகளில் பிறந்த நேரத்தை இந்திய பொது
நேரத்தின்படிதான் (IST) எழுதி கொடுப்பர்கள்.
உள்ளூர் நேரத்தைப் பற்றி நாம் கவலைப் பட
வேண்டாம் ஜாதகம் எழுதும் ஜோதிடர் பார்த்துக்
கொள்வார்
அதுபோல கணினியும் தானகவே உள்ளூர் நேரத்திற்கு
மாற்றிக் கொண்டுதான் நம்முடைய ஜாதகத்தைக்
கணித்துக் காட்டும்
-----------------------------------------------------------------------------------
1. World time zone site: Click here for the link
2. Time Zone Converter: Click here for the link
3. இந்திய நகரங்களுக்குரிய அட்சரேகை, தீர்க்கரேகை
களைத்தெரிந்து கொள்ள உதவும் இணைய தள முகவரி
--------------------------------------------
(தொடரும்)
பார்க்க
ReplyDeleteசோதிடம் - விக்கிபீடியா கட்டுரை
நாடி சோதிடம் - விக்கிபீடியா கட்டுரை
இந்த கட்டுரைகளை எந்த தடையுமின்றி எதிர்கால சந்ததிக்காக நீங்கள் தொகுத்து மேம்படுத்தலாம்.
//இந்த கட்டுரைகளை எந்த தடையுமின்றி எதிர்கால சந்ததிக்காக நீங்கள் தொகுத்து மேம்படுத்தலாம்.//
ReplyDeleteவழிகாட்டலுக்கு நன்றி மயூரன் அவர்களே!
செய்துவிடுகிறேன்!
சார்
ReplyDeleteScreen Shot எல்லாம் தந்து எளிமைபடுத்தியுள்ளீர்கள்..
வகுப்பு சுவாரசியமாகத்தான் செல்லுகிறது
பதிவுக்கு நன்றி வாத்தியார் அய்யா.மயூரன் சொன்னதுபோல் இவற்றை தொகுத்து விக்கிபீடியாவில் ஏற்றினால் நம் முன்னோர் செல்வங்களை எல்லாம் பாதுகாத்தது போல் இருக்கும்.நல்ல பணியை செய்து நம் வருங்கால சந்ததியினர் படித்து பயன்பெறும் வகையில் இக்கலைகளை இணையத்தில் ஏற்றும் உங்களையும், ஞானவெட்டியான் அய்யாவையும் எத்தனை பாராட்டினாலும் தகும்
ReplyDelete///சிவபாலன் அவர்கள் சொல்லியது: Screen Shot எல்லாம் தந்து எளிமைபடுத்தியுள்ளீர்கள்..
ReplyDeleteவகுப்பு சுவாரசியமாகத்தான் செல்லுகிறது ///
தேவைப்படும் இடங்களில் சிமத்தைப் பாராமல் அப்படிச் செய்வதாக உள்ளேன். Screen Shot பற்றி எனக்கு
வகுப்பெடுத்தது நண்பர் வடுவூர் குமார்!
ஆசிரியருக்கே வகுப்பா என்று கேட்காதீர்கள் - பதிவில் பல தொழில் நுட்ப விஷ்யங்களில் நானும் மாணவன்தான். இங்கே பல ஆசிரியர்கள் உள்ளார்கள்:-))))
///சிவபாலன் அவர்கள் சொல்லியது: Screen Shot எல்லாம் தந்து எளிமைபடுத்தியுள்ளீர்கள்..
ReplyDeleteவகுப்பு சுவாரசியமாகத்தான் செல்லுகிறது ///
தேவைப்படும் இடங்களில் சிமத்தைப் பாராமல் அப்படிச் செய்வதாக உள்ளேன். Screen Shot பற்றி எனக்கு
வகுப்பெடுத்தது நண்பர் வடுவூர் குமார்!
ஆசிரியருக்கே வகுப்பா என்று கேட்காதீர்கள் - பதிவில் பல தொழில் நுட்ப விஷ்யங்களில் நானும் மாணவன்தான். இங்கே பல ஆசிரியர்கள் உள்ளார்கள்:-))))
/// செல்வன் அவர்கள் சொல்லியது: மயூரன் சொன்னதுபோல் இவற்றை தொகுத்து விக்கிபீடியாவில் ஏற்றினால் நம் முன்னோர் செல்வங்களை எல்லாம் பாதுகாத்தது போல் இருக்கும்.நல்ல பணியை செய்து நம் வருங்கால சந்ததியினர் படித்து பயன்பெறும் வகையில் இக்கலைகளை இணையத்தில் ஏற்றும் உங்களையும், ஞானவெட்டியான் அய்யாவையும் எத்தனை பாராட்டினாலும் தகும் ///
ReplyDeleteஉங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ஊக்க மருந்து போல! அடிக்கடிவந்து தாருங்கள்.
நன்றி
இவ்விடுகைக்குத் தொடர்பில்லாத ஒரு கருத்தைக் கூறுவதைப் பொருத்தருளவும்.
ReplyDeleteவிக்கிபீடியாவில் நானும் உறுப்பினனே! ஆயினும் என்ன முயன்றாலும் என்னால் என் கருத்துக்களை உட்செலுத்த இயலவில்லை. என்னவோ மணல்தொட்டி...அப்படியே செல்கிறது. தொழில்நுட்பம் அறியாத காரணம்தான்.
ஒன்று இவைகளை எங்களுக்குப் புரியும்படி விளக்கவேண்டும்.
அல்லது எங்களின் கருத்துக்களைத் தொழில் தெரிந்தவர்கள் புகுத்தவேண்டும்.
அப்பொழுது விக்கிபீடியாவில் எங்களின் எழுத்துக்கள் சேர்க்கப்படும்.
///ஞானவெட்டியான் அவர்கள் சொல்லியது:விக்கிபீடியாவில் நானும் உறுப்பினனே! ஆயினும் என்ன முயன்றாலும் என்னால் என் கருத்துக்களை உட்செலுத்த இயலவில்லை. என்னவோ மணல்தொட்டி...அப்படியே செல்கிறது. தொழில்நுட்பம் அறியாத காரணம்தான்.
ReplyDeleteஒன்று இவைகளை எங்களுக்குப் புரியும்படி விளக்கவேண்டும். ///
வாருங்கள் நண்பரே,
நான் இன்னும் உள்ளே சென்று பார்க்கவில்லை.
எனக்கும் உங்களுடைய அனுபவம் நேரிடலாம்
ஆகவே எனக்கும் சேர்த்து நீங்கள் குரல் கொடுத்துள்ளதாகவே நினைக்கிறேன்!
பொறுத்திருப்போம்! நம்து வலை நண்பர்கள் உதவிக்கு வருவார்கள்!
உங்களைத் தனியே விடுவேனா!
ReplyDelete//ஒன்று இவைகளை எங்களுக்குப் புரியும்படி விளக்கவேண்டும். //
உற்றுக் கவனியுங்கள். "எங்களுக்கு".
தீர்க்க ரேகைக்கும் ஜோதிடத்துக்கும் இப்படி ஒரு பொருத்தமா?
ReplyDeleteஇன்று ஒன்று புதிதாக கற்றுக்கொண்டேன் உங்கள் தயவால்.நன்றி
கட்டுரைக்கு சென்று 'தொகு' என்ற தத்தலை அமுக்கி அங்கே உங்கள் ஆக்கங்களை இட்ட பின்பு, 'பக்கத்தை சேமிக்கவும்' என்று தத்தலை அமுக்கி சேமிக்கவும்.
ReplyDelete'அண்மைய மாற்றங்கள்' பகுதியில் நீங்கள் செய்யும் மாற்றங்களை உடனுக்குடன் கவனிக்கலாம்.
வேண்டியவாறு எப்பொழுது திருத்தங்கள் மேற்கொள்லாம்.
தயவு செய்து உதவி பக்கங்களை ஒரு முறை படித்து பார்க்கவும்.
ஆர்வம் உள்ளவர்களை உள்வாங்க நாம் மிகவும் முயல்கின்றோம்.
ஞானவெட்டியான் ஐயாவுடன் நான் ஒருமுறை முன்பும் முயற்சி செய்திருக்கின்றேன்.
உண்மையில் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு கடினம் இல்லை.
ஒரு புதுக் கட்டுரையை பல வழிகளில் ஆரம்பிக்கலாம். சிகப்பு இணைப்புகள் ஏற்கனவே இருந்தால் அதை அமுக்கி ஆரம்பிக்கலாம். ஆக்கத்தை இட்ட பின்பு சேமிக்க மறந்துவிடாதீர்கள்.
சமுதாய வலைவாசல் பக்கத்தில் அடிப்பகுதில் ஒரு பெட்டி போட்டு இருக்கும். அங்கு தலைப்பை இடுங்கள், பின்னர் அதற்கு கீழே இருக்கும் தத்தலை அமுக்குங்கள். அது தொகுத்தல் பக்கத்துக்கு உங்களை எடுத்து செல்லும். அங்கே உங்கள் கட்டுரையை இடுங்கள். பின்னர் 'பக்கத்தை சேமிக்கவும்' என்ற தத்தலை அமுக்கி சேமியுங்கள்.
மேலும் கேள்விகள் இருந்தால் சமுதாய வலைவாசல் சென்று, அங்கிருந்து ஒத்தாசை பக்கம் சென்று கேள்விகளை தாருங்கள். இயன்றவரை உதவ முயல்வோம். ஆனால் முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள்.
மிக்க நன்றி.
இது சோதிடம் தொகுத்தல் பக்கம்
ReplyDeletehttp://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&action=edit
உங்கள் ஆக்கத்தை இட்ட பின்பு, சேமித்து விடுங்கள். நன்றி.
//வடுவூரார் சொல்லியது: தீர்க்க ரேகைக்கும் ஜோதிடத்துக்கும் இப்படி ஒரு பொருத்தமா?
ReplyDeleteஇன்று ஒன்று புதிதாக கற்றுக்கொண்டேன் உங்கள் தயவால்.நன்றி///
ஆமாம் வடுவூராரே! ஜோதிடம் என்பது வானவியலையும், பூமியியலையும், கணிதத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
15 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிருகு முனிவருக்கும், பாரசாரருக்கும், ஆரியபட்டருக்கும்
(இவர் பெயரில்தான் இந்திய ஏவுகணைத்தளம் இயங்குகிறது)
விஞ்ஞான உபகரணங்கள் எதுவுமில்லாத காலத்தில் இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரிந்து ஜோதிட அறிவியலை உண்டாக்கினார்கள் என்பதுதான் வியப்பாக உள்ளது
///நண்பர் நக்கீரன் சொல்லியது:
ReplyDeleteஇது சோதிடம் தொகுத்தல் பக்கம்
http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&action=edit
உங்கள் ஆக்கத்தை இட்ட பின்பு, சேமித்து விடுங்கள். நன்றி.//
விரிவான செய்திகளுக்கு நன்றி நண்பரே! செய்துவிடுகிறேன்
ஐயா,
ReplyDeleteபாகை விளக்கம் அருமை. நன்றி.
ஞானவெட்டியான் ஐயா - ஏற்கனவே உங்கள் பயனர் பக்கத்தை விக்கியில் பார்த்திருக்கிறேன். நுட்பக் காரணங்களால் நீங்கள் பங்களிக்க இயலாதது அறிந்து வருந்துகிறேன். இது குறித்து நீங்கள் தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவிலும் தெரிவித்து இருந்தீர்கள். விரைவில் எளிமைப்படுத்தப்பட்ட பயனர் கையேட்டை வெளியிடுகிறோம். அதற்கு முன் உங்களுக்கு என்ன ஐயம் என்றாலும் தயங்காமல் ravidreams_03 at yahoo dot com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். தொலைபேசி மூலமாகவோ இணைய அரட்டை மூலமாகவோ உங்களுக்கு உதவத் தயாராய் இருக்கிறேன். நன்றி
ReplyDelete//மதுரையம்பதி அவர்கள் சொல்லியது: ஐயா,
ReplyDeleteபாகை விளக்கம் அருமை. நன்றி.//
அருமையென்று சொல்லும் அளவிற்கு
இன்று பாடம் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!
/// ரவிசங்கர் அவர்கள் சொல்லியது: எளிமைப்படுத்தப்பட்ட பயனர் கையேட்டை வெளியிடுகிறோம்///
ReplyDeleteவருகைக்கு ந்ன்றி!
எனக்கும் ஒன்றை அனுப்பிவைக்க வேண்டுகிறேன்
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
நான் தமிழ் விக்கிபீடியாவின் முதல் பயனர்களுள் ஒருவன் (2003). கணினித் துறையைச் சேர்ந்தவனும் அல்ல. ஆரம்பத்தில் எவ்வித வழிகாட்டலும் இன்றிக் கடினமாகவே இருந்தது. ஒவ்வொன்றாகத் தேடித்தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது. இன்று எல்லாம் இலகுவாகிவிட்டது. துணிந்து இறங்குங்கள். தமிழ் விக்கிபீடியாவுக்கு உங்களைப் போன்ற பலர் தேவைப்படுகிறார்கள்.
ReplyDeleteவாத்தியார் ஐயா, அமெரிக்காவில் பிறக்கும் ஒருவருக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது? அங்கு நாள் , கிழமை, நேரம் எல்லாம் மாறியுள்ளதே? அதாவது நம்மூர் பஞ்சாங்கத்தை வைத்து கணிக்கும் ஜாதகம் சரியாக இருக்குமா?
ReplyDeleteநிறைய பேருக்கு இந்த ஐயம் உள்ளது. இது தொடர்பாக விளக்கமாக ஒரு பதிவு போட்டு தெளிவாக்க வேண்டும் என்பது மாணவனின் கோரிக்கை.
ஒரு சோதிடர் சொன்னார் 1 அல்லது 2 பாகை வேறுபாட்டினால் ஜாதக கணிப்பு மாறாது என்று, அவர் சொன்னது சரியா? அதாவது குனியமுத்தூரில் பிறந்தாலும் சூலூரில் பிறந்தாலும் ஒன்னா? அல்லது சேத்துப்பட்டில் பிறந்தாலும் அம்பத்தூரில் பிறந்தாலும், தாம்பரத்தில் பிறந்தாலும் ஒன்னா?
இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பக்கத்து பெரு நகரத்துக்கும் குழந்தை பிறந்த சிறு நகரத்துக்கும் பாகை அளவில் வேறுபாடு குறைவு என்றாலும் சூரிய உதயம் 4 நிமிடங்கள் வேறுபட்டது ஆனால் சோதிடர் பாகை முறை கொண்டு பெரு நகரத்தை வைத்தே ஜாதகத்தை கணித்தார்.
அமெரிக்க நகரங்களின் / கிராமங்களின் அச்ச & தீர்க்க ரேகையை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த சுட்டி உதவும்
http://terraserver.microsoft.com/default.aspx