ஜோதிடம்பற்றி வந்த தீர்ப்பு!
ஜோதிடத்தைப் பற்றி நான்
ஜோதிடத்தைப் பற்றி நான்
என்ன நினைககிறேன் என்பதைவிட
என் வகுப்புக் கண்மணிகளும்,
என் வகுப்புக் கண்மணிகளும்,
பதிவுலக நண்பர்களும் என்ன
நினைக்கிறார்கள் என்பதைத்
நினைக்கிறார்கள் என்பதைத்
தெரிந்து கொள்ள ஒரு சர்வே
படிவத்தைக் கொடுத்திருந்தேன்.
படிவத்தைக் கொடுத்திருந்தேன்.
Hit Counter 200 ஐத் தாண்டியுள்ளது
முடிவு தெரிந்துவிட்டது.
முடிவு தெரிந்துவிட்டது.
42% பேர்கள் ஜோதிடம் பொய் - நம்பிக்கை
யில்லை என்று வாக்களிதிருக்கிறார்கள்.
31% பேர்கள் ஜோதிடம் உண்மை - நம்பிக்கை
31% பேர்கள் ஜோதிடம் உண்மை - நம்பிக்கை
யுள்ளது என்று வாக்களிதிருக்கிறார்கள்.
27% கருத்து எதுவுமில்லை - நடு நிலைமை
27% கருத்து எதுவுமில்லை - நடு நிலைமை
என்று சொல்லியிருக்கிறார்கள்.
வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி!
எனது கருத்தை நான் கூறிவிடுகிறேன்.
முதலில் நானும் (இளைஞனாக இருந்த
வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி!
எனது கருத்தை நான் கூறிவிடுகிறேன்.
முதலில் நானும் (இளைஞனாக இருந்த
காலத்தில்) ஜோதிடத்தைக் கேலியாகப்
பார்த்தவன்தான்.
"திருவரங்க நாதனையும்,
"திருவரங்க நாதனையும்,
தில்லை நடராஜனையும்
பீரங்கி வைத்துப்
பிளக்கும் நாள் என்னாளோ" என்று பலர்
பிளக்கும் நாள் என்னாளோ" என்று பலர்
முழக்கமிட்ட மேடைகளில்
தானும் ஏறி நாத்திகம் பேசிய கவியரசர்
தானும் ஏறி நாத்திகம் பேசிய கவியரசர்
கண்ணதாசன், தன்னை
உணர்ந்து, இறைவனை உணர்ந்து
உணர்ந்து, இறைவனை உணர்ந்து
34 வயதிற்குமேல் தொடர்ந்து
20 ஆண்டுகள் பல அற்புதமான
20 ஆண்டுகள் பல அற்புதமான
பக்திப் பாடல்களை எழுதியதோடு
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற 10 பாகங்கள்
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற 10 பாகங்கள்
கொண்ட நூலையும், இயேசு காவியம்
என்ற அற்புதமான புத்த்கத்தையும்
எழுதினாரோ-
அந்த மன மாற்றத்திற்கு
அந்த மன மாற்றத்திற்கு
என்ன காரணமோ அதே காராணம்தான்
என் பார்வையையும்,
என் பார்வையையும்,
கண்ணோட்டத்தையும் மாற்றியது.
ஆம், பட்டறிவுதான் அதற்குக் காரணம்.
என் தந்தைக்குப் பழக்கமான ஒரு ஜோதிடரும்,
கேரள ஜோதிடர் ஒருவரும் சில ஜாதகங்களைப்
பார்த்துவிட்டுக் கொடுத்த பலன்கள்
(predictions) 100% மிகவும் சரியாக இருந்ததால்
(predictions) 100% மிகவும் சரியாக இருந்ததால்
அவை என் மன நிலையை, என்னுடைய
நிலைப் பாட்டைப் புரட்டிப்போட்டன.
இதில் - அதாவது ஜோதிடத்தில் - ஏதோ
இதில் - அதாவது ஜோதிடத்தில் - ஏதோ
இருக்கிறது (Something is there) என்ற எண்ணம்
முதலில் ஏற்பட்டது. அதை ஏன் நாமும் கற்றுத்
தெரிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம்
தெரிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம்
பிறகு ஏற்பட்டது.
இப்போதாவது சில பல்கலைக் கழகங்களில்
ஜோதிடப் பாடத்தில் பட்டப் படிப்பெல்லாம் உள்ளது.
நான் தேடலில் ஈடுபட்ட காலத்தில்
அந்த வசதியெல்லாம் இல்லை.
-------------------------------------------------------------------------------------
அந்த வசதி இப்போது உள்ள இடங்கள்
List of Institutions in India where Astrology
அந்த வசதியெல்லாம் இல்லை.
-------------------------------------------------------------------------------------
அந்த வசதி இப்போது உள்ள இடங்கள்
List of Institutions in India where Astrology
is Being Taught
ஜோதிடத்தைப் பாடமாகக் கற்றுத் தரும்
இந்தியப் பல்கலைக் கழகங்களின் விவரம்
ஜோதிடத்தைப் பாடமாகக் கற்றுத் தரும்
இந்தியப் பல்கலைக் கழகங்களின் விவரம்
அறிய சுட்டி இங்கே உள்ளது.
http://www.education.nic.in/circulars/astrologycurriculum.htm
---------------------------------------------------------------------------------------------
மதுரை காமராஜ் பலகலைக் கழகத்தில்
http://www.education.nic.in/circulars/astrologycurriculum.htm
---------------------------------------------------------------------------------------------
மதுரை காமராஜ் பலகலைக் கழகத்தில்
ஜோதிடப் பாடம் தமிழில் கற்றுத்தரப்படுகிறது,
விவரங்களுக்கு சுட்டி இங்கே உள்ளது
http://www.mkudde.org/courses_dip.php
---------------------------------------------------------------------------------------------------
ஏகலைவன் போல பல நூல்களை
வாங்கி - 3 வருடப் போராட்டங்களுக்குப்
http://www.mkudde.org/courses_dip.php
---------------------------------------------------------------------------------------------------
ஏகலைவன் போல பல நூல்களை
வாங்கி - 3 வருடப் போராட்டங்களுக்குப்
பிறகு ஓரளவு 'அறிவியல்' ஜோதிடத்தில்
தெளிவு பெற்றேன்.
பிறகு ஜோதிடம் தெரிந்த அல்லது ஜோதிடத்தில்
பிறகு ஜோதிடம் தெரிந்த அல்லது ஜோதிடத்தில்
ஞானம் உள்ள நண்பர்கள் பரீட்சயமானார்கள்.
மணிக் கணக்கில் கலந்துரையாடினேன்.
ஜோதிடம் சம்பந்தமாக கிடைக்த புத்தகங்களை
யெல்லாம் வாங்கிக் குவித்தேன். செய்தித்
தாள்களிலும், சஞ்சிகைகளிலும்
வந்த தகவல்களையெல்லாம் கத்தரித்துச்
வந்த தகவல்களையெல்லாம் கத்தரித்துச்
சேகரிக்க ஆரம்பித்தேன்.
எதற்காக?
ஜோதிடனாகி பணம் சம்பாதிக்க வேண்டு
எதற்காக?
ஜோதிடனாகி பணம் சம்பாதிக்க வேண்டு
மென்ற ஆர்வத்திலா?
(அல்ல! பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல!)
(அல்ல! பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல!)
கசடற கற்க வேண்டும் என்ற ஆதங்கத்தில்.
எனக்கு இறையருளால் வேறு நல்ல தொழில் உள்ளது!
நான் படித்த புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்த
எனக்கு இறையருளால் வேறு நல்ல தொழில் உள்ளது!
நான் படித்த புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்த
முக்கியமான செய்தி இதுதான்.
கல்வி, மருத்துவம், ஜோதிடம் - இம் மூன்றும்
கல்வி, மருத்துவம், ஜோதிடம் - இம் மூன்றும்
பண்டைய காலத்தில் தர்மத் தொழில்கள்.
இந்தத் தொழிலைச் செய்பவன் மக்களிடம்
காசு வாங்கக்கூடாது. அரசு மான்யத்தில்
காசு வாங்கக்கூடாது. அரசு மான்யத்தில்
வாழ்க்கையை நடத்த வேண்டும். இப்போது
அப்படியில்லை என்பதுதான் வருந்த வேண்டிய
விஷ்யம்.
கிளி ஜோதிடம், குறி பார்த்துச் சொல்லுதல்,
விஷ்யம்.
கிளி ஜோதிடம், குறி பார்த்துச் சொல்லுதல்,
அறை குறைப் பண்டிதர்களின் காசாசை -
இது போன்றவற்றால்தான் - ஜோதிடம்
சிலரிடம் பொய்யாகப் போய்விட்டது.
சரவளி, காலப் பிரகாசிகா, கேரள மணிகண்ட
சிலரிடம் பொய்யாகப் போய்விட்டது.
சரவளி, காலப் பிரகாசிகா, கேரள மணிகண்ட
ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம் போன்ற
நூல்களிலெல்லாம் சேர்த்தால் இரண்டு லெட்சம்
பாடல்களுக்குமேல் உள்ளது. அதையெல்லாம்
படித்து முடிப்பதற்குள் (நம்க்கு) தாவு தீர்ந்து
படித்து முடிப்பதற்குள் (நம்க்கு) தாவு தீர்ந்து
விடும். ஆயுள் முடிந்துவிடும்
அந்தக் காலத்தில் ஒரு dedication உடன் கற்றார்கள்.
வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் ஆகிய
அந்தக் காலத்தில் ஒரு dedication உடன் கற்றார்கள்.
வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் ஆகிய
மூன்றையும் இந்த உலகிற்குப்பரிசாக
அளித்தவர்கள் நாம்தான்.
இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வ்ணிகம்
இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வ்ணிகம்
செய்ய வந்த சீனர்கள், மற்றும் கிரேக்கர்கள்
மூலமாகத்தான் அவை உலகெங்கும் பரவின
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்,
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்,
சனி ஆகிய கோள்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும்
ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான்
நாம் கிழமைகளாக வடிவமைத்தோம்
சூரியனுக்கு - ஞாயிறு (ஞாயிறு என்றாலும்
சூரியனுக்கு - ஞாயிறு (ஞாயிறு என்றாலும்
சூரியன் என்றுதான் பொருள்படும்) என்றும்,
சந்திரனுக்குத் திங்கள் என்றும் அப்படியே
ஏழு நாட்களையும் பெயரிட்டு அழைத்தார்கள்.
ஏழு நாட்களையும் பெயரிட்டு அழைத்தார்கள்.
மீதம் உள்ள இரண்டு கோள்களுக்கு (ராகு, கேது)
தினமும் 90 நிமிடங்கள் ஒவ்வொரு நாளிலும்
ஆட்சி பலம் உண்டு. அதை ராகு காலம்
என்றும், எம கண்டம் என்றும் கணித்தார்கள்.
என்றும், எம கண்டம் என்றும் கணித்தார்கள்.
கணீத்தவ்ர்கள் எல்லாம் பராசுரர், ஜெய்மானி,
அகத்தியர் போன்ற முனிவர்கள்
அவைதான் இன்று உலக அளவில் அத்தனை
அவைதான் இன்று உலக அளவில் அத்தனை
நாடுகளாலும் பின்ப்ற்ற்ப் படுகின்றது.
Sunday is for SUN, Monday is for Moon,Tuesday is for
Sunday is for SUN, Monday is for Moon,Tuesday is for
Mars, Wednesday is for Mercury, Thursday is for Jupiter,
Friday is for Venus and Saturday is for Saturn.
Orbit ல் - அதாவது வானவெளியில் ஒவ்வொரு
Orbit ல் - அதாவது வானவெளியில் ஒவ்வொரு
கோளும் சுற்றிவரும் நாட்களைக் கணித்து
எழுதியவர்களும் நாம்தான்.
இன்று Kolkatta & Chennai யில் உள்ள planatorium ங்கள்
கொடுக்கும் புள்ளி விவரஙகளோடு ந்மது நூற்களில்
கொடுக்கும் புள்ளி விவரஙகளோடு ந்மது நூற்களில்
உள்ள் தகவல்களோடு ஒப்பிட்டால் மிகவும் சரியாக
உள்ளது.
இது பராசுரர், ஜெய்மானி போன்ற முனிவர்
களுக்கெல்லாம் (அவர்கள் எல்லாம் உஜ்ஜயினியில்
விக்கிரமாத்திதான் ஆட்சி செய்த காலத்திற்கு முன்பு
வாழ்ந்தவர்கள்) எப்படி சாத்தியமாயிற்று?
அவர்கள் காலத்தில் Computer, telescope, satelites,
அவர்கள் காலத்தில் Computer, telescope, satelites,
planatorium போன்றவைகள் ஒன்றுகூட இல்லையே?
பெளர்ணமியன்றும், அமாவாசையன்றும், பெரிய
பெளர்ணமியன்றும், அமாவாசையன்றும், பெரிய
ஆறுகளில் நீரோட்டம் அதி வேகமாகவும், கடல்களில்
அலைகள் கடுமையானதாகவும் இருக்கும்.
மன நோயாளிகளுக்கு அன்று மன உளைச்சல்
மன நோயாளிகளுக்கு அன்று மன உளைச்சல்
அதிகமாகவும் இருக்கும்.
ஏன்?
சந்திரனில் இருந்து வரும் கதிர்வீச்சு அன்று
அதிகமாக இருக்கும்.
(Magnetic Rays from the moon will be more
(Magnetic Rays from the moon will be more
on that day and it will affect all the
waterly bodies in the earth)
waterly bodies in the earth)
அன்று மட்டும் ஏன் அதிகம்?
விஞ்ஞானம் இன்றுவரை பதில் சொல்லாமல்
விஞ்ஞானம் இன்றுவரை பதில் சொல்லாமல்
மெளனமாக இருக்கிறது!
அந்த தினங்களில் மனித உடம்பில் இரத்த ஓட்டம்
அந்த தினங்களில் மனித உடம்பில் இரத்த ஓட்டம்
அதிகமாக இருக்குமாம் ஆக்வே அறுவை
சிகிச்சைகளைத் தள்ளிப் போடப் பரிந்துரைக்கப்
பெற்றுள்ளது. (Please see the scanned news paper
cutting on the top of the post)
மருத்துவர்களில் பலருக்கு ஜோதிடத்தில் மிகுந்த
மருத்துவர்களில் பலருக்கு ஜோதிடத்தில் மிகுந்த
நம்பிக்கையுண்டு. எனக்கு பல மருத்து நண்பர்கள்
உண்டு. அதனால் தெரியும்
கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.
கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.
கடவுள் இரண்டு இடங்களில் சிரிப்பாரம்.
இந்த சாதனையை நான் செய்தேன் என்று
ஒருவன் சொல்லும்போதும்,
உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்று
தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவனிடம் மருத்துவர்
சொல்லும் கடவுள் சிரிப்பாராம்.
ஜோதிடமும், வான சாஸ்திரமும் கடல் போன்றது.
ஜோதிடமும், வான சாஸ்திரமும் கடல் போன்றது.
அதில் மூழ்கிக்கிடைத்த பல முத்துக்களில் இன்று
ஒன்றைத் தந்துள்ளேன்.
நாளைக்கும் ஒன்றைத் தருகிறேன்.
மற்ற முத்துக்கள் எல்லாம் என்னிடமே
மற்ற முத்துக்கள் எல்லாம் என்னிடமே
இருந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணம்
சர்வே முடிவுகளைப் படித்தவுடன் ஏற்பட்டுள்ளது.
கஷ்டப்பட்டு எழுதி, தட்டச்சு செய்து, பதிட்டுவிட்டு,
கஷ்டப்பட்டு எழுதி, தட்டச்சு செய்து, பதிட்டுவிட்டு,
உங்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள
நான் தயாரில்லை........!
ஜோதிடத்தில் உள்ள சுவையான தகவல்ளை
ஜோதிடத்தில் உள்ள சுவையான தகவல்ளை
வைத்து ஒரு ஐம்பது பதிவுகளாவது போட
வேண்டுமென்றிருந்தேன்.
சர்வேயின் முடிவு என் எண்ணத்தை மாற்றியுள்ளது.
ஆகவே தொடர்ந்து ஜோதிடத்தைப் பற்றி எழுதும்
ஆசை இல்லை.
என் நிலைப்பாட்டை சுட்டிக் காட்ட இந்தப் பதிவில்
சொல்லவந்த விஷயங்களை மட்டும் நாளையும்
சொல்லவந்த விஷயங்களை மட்டும் நாளையும்
தொடர்ந்து சொல்வதாக உள்ளேன்.
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன்.
நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா.
(மற்றவை நாளை)
----------------------------------------------
நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா.
(மற்றவை நாளை)
----------------------------------------------
நடக்குமென்பார் நடக்காது!
ReplyDeleteநடக்காதென்பார் நடந்து விடும்!
அய்யா
ReplyDeleteபதிவிற்கு மிக்க நன்றி!
எனினும் நீங்கள் படித்தவற்றில் மிக சுவாரசியமான விசயம் ஏதாவது இருந்தால் நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள்.
உள்ளேன் அய்யா சொல்லவந்தேன்..
நன்றி!
இங்க வந்த தீர்ப்ப வெச்சி நீங்க செய்ய நினைத்த காரியத்தை செய்யாமல் விடுவது சரியாக படவில்லை ஐயா...
ReplyDeleteதாங்கள் கற்று தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி கொடுங்கள்... அல்லது வலையேற்றுங்கள். பின்னாளில் கண்டிப்பாக பயன்படும்...
பல ஆண்டுகளாக சொல்லி வந்த அரிசந்திரன் கதையால் ஒரு காந்திதான் உருவாகினார்.
சுப்பையா சார்,
ReplyDeleteஜோதிடம் உண்மை என வைத்துக்கொள்வ்வொம்.
இந்த உண்மையை உண்மையாக கணிக்கும் ஜோதிடர் எத்தனை பேர்?. அவ்வாறு கணிப்பவரின் கணிப்பின் கன்ஸிஸ்டென்சி என்ன? அவ்வாறு கணிப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி?
நல்ல ஜோசியர் கிடைத்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்னும் அவரிடம் சென்று ஆலோசனை பெறுவது சாத்தியமா?
ஜோதிடம், ஆயூர்வேதம், சித்த மருத்துவம் போன்றவை நல்ல அறிவியல்தான். அவைகள் தற்காலத்திற்கு ஏற்றவாறு வளரவில்லை. சரியான முறையில் டாகுமெண்ட் செய்யப்படவில்லை அதனால் அவைகள் வேலைசெய்வதில்லை என்பது என் தாழ்மையானக் கருத்து
// இங்க வந்த தீர்ப்ப வெச்சி நீங்க செய்ய நினைத்த காரியத்தை செய்யாமல் விடுவது சரியாக படவில்லை ஐயா...
ReplyDeleteதாங்கள் கற்று தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி கொடுங்கள்... அல்லது வலையேற்றுங்கள். பின்னாளில் கண்டிப்பாக பயன்படும்...//
இதையே நானும் வழிமொழிகிறேன்.
தயவு செய்து எழுத நினைத்ததைக் கைவிடாதீர்கள்!
வைசா
அண்ணா!
ReplyDeleteநாளை என்பது அவன் செயல் என்பதே! என் நம்பிக்கை! சோதிடம் பற்றி- என்னைப் போன்ற மிக மிக மிகச் சாதாரணமானவனுக்கு நல்ல சோதிடர் எப்படி வந்து சந்திப்பார். நல்ல வைத்தியரே உயிராபத்து நேரத்தில் என் போன்றவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள்.
நிற்க....தீபாவளி அன்று கையில் காப்பு;களி என அந்த மாகாபெரியவருக்கு எந்தச் சோதிடருமே! சொல்லமுடியாமல் போய்விட்டதே! அல்லது அவருக்குக் ஜாதகக் குறிப்பில்லையா?
அட பாவிகளா? இந்த சுனாமி பற்றி ஒரு சோதிடரும் மூச்சுக் கூட விடலையே!
எதோ போங்கண்ணா இதுவும் காசு மெத்தினவங்க மேலும் காசு அவாவில அலைவது போல் தான்!
என் சிற்றறிவுக்குப் படுது.
மூடி மறைப்பதனால் அது ஏமாற்று வேலையாக இருக்குமோ என்று பலருக்கும் தோன்றும்.
ReplyDeleteயார் வேண்டுமானாலும் கற்கலாம்,
யாருக்கு வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்ற நிலை முன்பு இருந்ததில்லை.அதனால் பலருக்கு
அதன் மேல் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரிந்ததை,நீஙகள் அறிந்ததை பிறர் அறியத்தருவது தவறல்ல.அனைவரும் ஏற்கவேண்டும் என்ற சாக்குப்போக்குகள் சரியாக இருக்காது.
நம்பிக்கை உள்ளவர்களுக்கு நீங்கள்
கற்றதை வாசிக்கத் தருவது,நீங்கள்
கற்றததை கூர்மை படுத்த உதவும்.
மேலும்,நம்பிக்கை இல்லாதார்க்கு உங்கள் விளக்கம் ஏற்புடையதாகக் கூட
மாறலாமல்லவா?
ஜோதிடம் மதம் கடந்த ஒன்றாகவே இருக்கவேண்டும்.அப்போது பலர் ஜோதிடத்தை ஏற்கலாம்.
ஜோதிடமும்,கடவுளும் வேறு வேறாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்பது எனது கருத்து.கலந்தது எந்த
நிலையில் என்று தெரியவில்லை.
ஜாதக பரிகாரமாக சுந்தரகாண்டத்தின் ஒரு சர்க்கம் படிக்கச்சொல்லும் போது அதன் மீது நம்பத்தன்மை போய்விடுகிறது.
வெட்டிப்பயலின் கடைசி வரிகள் தான் எனக்கும்.
ReplyDeleteஎன்றாவது யாருக்காவது உபயோகப்படும்.
ஏன் நானே உங்களிடம் வரலாம்,கற்றுக்கொள்ள.
Whatever Vettipayal (Balaji) said is correct.
ReplyDeleteYou should not change your decision by a small survey.Do you think all the voters, who voted against the astrology, really don't believe in predictions?
So you have to (should) reveal whatever you know about our ancient science.Please continue to write on this.
கட்டாயம் நீங்கள் கற்றுத் தெளிந்ததை எங்களுக்கும் சொல்ல வேண்டும்.
ReplyDeleteகுழப்பம் இல்லாமல் ஜோதிடத்தில் நம்பிக்கை, பின்னால் வருபவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
உங்களல் முடிந்தபோது பதிவிட வேண்டும்.
///நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது:
ReplyDeleteநடக்குமென்பார் நடக்காது!
நடக்காதென்பார் நடந்து விடும்! //
பதில் பாட்டு (உபயம் கவியரசர்)
"இறைவன் இருப்பதை நானறிவேன்
என்ன அவனே தானறிவான்"
///நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது:
ReplyDeleteநடக்குமென்பார் நடக்காது!
நடக்காதென்பார் நடந்து விடும்! //
பதில் பாட்டு (உபயம் கவியரசர்)
"இறைவன் இருப்பதை நானறிவேன்
என்ன அவனே தானறிவான்"
///சிவபாலன் அவர்கள் சொல்லியது: உள்ளேன் அய்யா சொல்ல வந்தேன்///
ReplyDeleteஆகா, வாருங்கள்,
பதிவேட்டில் பதிவாகிவிட்டது:-))))
///வெட்டிப்பயல் அவர்கள் சொல்லியது: பல ஆண்டுகளாக சொல்லி வந்த அரிசந்திரன் கதையால் ஒரு காந்திதான் உருவாகினார். ////
ReplyDeleteசிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே! சிந்திக்க வைக்கும் வரிகள்
நன்றி!
///ஜோதிடம், ஆயூர்வேதம், சித்த மருத்துவம் போன்றவை நல்ல அறிவியல்தான். அவைகள் தற்காலத்திற்கு ஏற்றவாறு வளரவில்லை. சரியான முறையில் டாகுமெண்ட் செய்யப்படவில்லை அதனால் அவைகள் வேலைசெய்வதில்லை என்பது என் தாழ்மையானக் கருத்து ///
ReplyDeleteஉண்மைதான். பலர் அவற்றைத் தங்கள் குடும்ப சொத்தாக்கி காலம் காலமாக முடக்கி வைத்ததுதான் காரணம்.
நிலைமை இப்போது அப்படியில்லை
சுவடிகள் எல்லாம் புத்தகவடிவில் பலரும் பயன்படக் கிடைக்கின்றன
ஆர்வம் இருக்கும் யாரும் படிக்கலாம்
சர்வேயின் தீர்ப்பை வைத்து நீங்கள் இந்த முடிவுக்கு வந்தது சரியல்ல என்று நினைக்கிறேன்!
ReplyDeleteநம்பிக்கை இல்லாதவர்கள், இருப்பவர்கள் என்று பலரும் இப்பதிவுலகில் உண்டு!
நீங்கள் எழுதும்போது அதில் ஆர்வமில்லாதவர்களும் ஒரு சில செய்திகளை அறிந்து கொள்ள முடியும்!
அதனால் அத்தொடரை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
/// வைசா அவர்கள் சொல்லியது: இதையே நானும் வழிமொழிகிறேன்.
ReplyDeleteதயவு செய்து எழுத நினைத்ததைக் கைவிடாதீர்கள்!///
திருவாளர் வெட்டிப்பயல் அவர்களும் இதையேதான் சொல்லியிருக்கிறார்
மீண்டும் யோசித்து ஒரு முடிவெடுக்கிறேன் நண்பரே
நன்றி!
////யோகன் பாரிஸ் அவர்கள் சொல்லியது:இந்த சுனாமி பற்றி ஒரு சோதிடரும் மூச்சுக் கூட விடலையே!
ReplyDeleteஎதோ போங்கண்ணா இதுவும் காசு மெத்தினவங்க மேலும் காசு அவாவில அலைவது போல் தான்!
என் சிற்றறிவுக்குப் படுது. ///
7 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இருந்தார். அவர் இயற்கைச் சீற்றங்களைக் கணித்து முன்பே பதிடுவார்.அவர் இப்போது இல்லையே
(Bangalore Venkatraaman, Ex.Editor, Astrological Magazine, Bangalore)
///ராவணன் அவர்கள் சொல்லியது:
ReplyDeleteநம்பிக்கை உள்ளவர்களுக்கு நீங்கள்
கற்றதை வாசிக்கத் தருவது,நீங்கள்
கற்றததை கூர்மை படுத்த உதவும்.
மேலும்,நம்பிக்கை இல்லாதார்க்கு உங்கள் விளக்கம் ஏற்புடையதாகக் கூட
மாறலாமல்லவா?//
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ந்ன்றி!
///ஜோதிடம் மதம் கடந்த ஒன்றாகவே இருக்கவேண்டும்.அப்போது பலர் ஜோதிடத்தை ஏற்கலாம்.///
ஜோதிடம் அறிவியலைச் சார்ந்தது.
ரஷ்யாவிலும் ஜோதிட வல்லுனர்கள் இருக்கிறார்கள். அங்கேயும் ஜோதிடத்தில் பட்டப்படிப்பு உண்டு.
ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தேவைப் படுமென்றால் பதிவிடத் தயாராக உள்ளேன்
ரஷ்யாவில் ஏது மதம்?
நம் நாட்டில் மட்டுமே மக்கள் ஜோதிடத்தையும், மதங்களையும்
இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள்
கண்ணாதாசன் சொன்னார்.
"மதங்கள் பல இருக்கலாம் அவைகள் ஆறுகளைப் போன்றவை - ஆனால் அவைகள் கலக்கும் இடம் ஒன்றுதான்
அதுதான் கடல் - இறைவன் கடலைப் போன்றவன் - இறைவன் ந்ம் அனைவருக்கும் ஒருவன்தான்"
அறிஞர் அண்ணாவும் சொல்வாராம்:
ஒன்றே குலம்:
ஒருவனே தேவன்!
///Mr.vaduvurr kumar Said: வெட்டிப்பயலின் கடைசி வரிகள் தான் எனக்கும்.
ReplyDeleteஎன்றாவது யாருக்காவது உபயோகப்படும்.
ஏன் நானே உங்களிடம் வரலாம்,கற்றுக்கொள்ள. //
வாருங்கள் குமார்! உங்கள் கருத்திற்கு நன்றி!
/// அன்பு செல்வரஜ் அவர்கள் சொல்லியது: Whatever Vettipayal (Balaji) said is correct.
ReplyDeleteYou should not change your decision by a small survey.Do you think all the voters, who voted against the astrology, really don't believe in predictions?
So you have to (should) reveal whatever you know about our ancient science.Please continue to write on this.//
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே! I will reconsider my decision!
/// வல்லி சிம்ஹன் அவர்கள் சொல்லியது: கட்டாயம் நீங்கள் கற்றுத் தெளிந்ததை எங்களுக்கும் சொல்ல வேண்டும்.
ReplyDeleteகுழப்பம் இல்லாமல் ஜோதிடத்தில் நம்பிக்கை, பின்னால் வருபவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
உங்களல் முடிந்தபோது பதிவிட வேண்டும். //
நன்றி சகோதரி! மீண்டும் ஒருமுறை
எனது கருத்தைப் பரிசீலனை செய்கிறேன்!
சோதிடம் பற்றி நீங்கள் கற்றதை அவசியம் மற்றவருக்கு சொல்ல வேண்டும். கல்வியின் பயன் என்பதே அதனை மற்றவருக்கு பயன்படச்செய்யவேண்டும் என்பதே. சோதிடம் பற்றி எனக்கும்பகிர்ந்துக்கொள்ள சில விபரங்கள் உள்ளது. நீங்கள் துவங்குங்கள். சோதியில் கலக்க நான் ரெடி
ReplyDelete/// Mr.Anbu Said: சோதிடம் பற்றி நீங்கள் கற்றதை அவசியம் மற்றவருக்கு சொல்ல வேண்டும். கல்வியின் பயன் என்பதே அதனை மற்றவருக்கு பயன்படச்செய்யவேண்டும் என்பதே. சோதிடம் பற்றி எனக்கும்பகிர்ந்துக்கொள்ள சில விபரங்கள் உள்ளது. நீங்கள் துவங்குங்கள். சோதியில் கலக்க நான் ரெடி //
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்ப்ரே!
சில பல கால இடைவேளிக்குப்பின் இன்றுதான் தங்களது பல பதிவுகளைப் பார்த்தேன், அதில் இதுவும் ஒன்று....ஜோதிடம் பற்றி இன்னும் நீங்கள் எழுதாமை, நீங்கள் இன்னும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. என் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு பயன்படும். தயவு செய்து தொடர வேண்டுகிறேன்.
ReplyDelete///சில பல கால இடைவேளிக்குப்பின் இன்றுதான் தங்களது பல பதிவுகளைப் பார்த்தேன், அதில் இதுவும் ஒன்று....ஜோதிடம் பற்றி இன்னும் நீங்கள் எழுதாமை, நீங்கள் இன்னும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. என் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு பயன்படும். தயவு செய்து தொடர வேண்டுகிறேன்.
ReplyDeleteThursday, February 22, 2007 12:49:00 PM ///
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!
தொடரை ஆரம்பித்துவிட்டேன்
இன்றையப் பதிவைப் பாருங்கள்!
ஐயா தீர்ப்பை வைத்து செயலை
ReplyDeleteமுடிவுக்கு கொண்டுவராதிர்கள்
தொடருங்கள் ஆதரவோடு எதிர்
பார்க்கிறேன்.
மேலும் என் இந்த சந்தேகத்துக்கும்
பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது
உதாரணத்துக்கு ஒருவர் தை மாதம்
முதலாம் திகதி பிறக்கிறார் அறுபதாவது
வருடம் வரும் போது அதே திகதி மாதம் நாள் நேரம் ராகு கேது நிலைகள்
அனைத்தும் வருமல்லவா அப்படியானால் ஒருவரது அறுபது வருட
வாழ்க்கையின் நிகழ்ந்த சம்பவங்கள்
அனைத்தும் இன்னுருவர் அறுபதாவது
வருடம் பிறக்கும் போது அது சுழச்சி
முறையில் நடக்கும் தானே.
தமிழில் நடைமுறையில் உள்ள அறுபது
வருட பஞ்சாங்க முறையில் தானே
ஜேதிடம் கனிக்கப்படுகிறது(அதற்காக
இந்திராகந்தி மாதிரியோ ராஜீவ்காந்தி
போன்று இன்னொருவர் ஏன் பிறக்கவில்லை என கேட்கவரவில்லை
என் கேள்வியை புரிந்து கொள்வீர்கள்
என நினைக்கிறேன்)
நட்புடன்
சதா
அன்பு சுப்பையா,
ReplyDelete//சரவளி, காலப் பிரகாசிகா, கேரள மணிகண்டஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம் போன்ற நூல்களிலெல்லாம் சேர்த்தால் இரண்டு லெட்சம்
பாடல்களுக்குமேல் உள்ளது. அதையெல்லாம் படித்து முடிப்பதற்குள் (நமக்கு) தாவு தீர்ந்து விடும். ஆயுள் முடிந்துவிடும்//
சாதக சாகரம், குமார சுவாமீயம், சாதக சிந்தாமணி,சாதக சூடாமணி, மங்களேசுவரியம், புவன தீபிகை, ஜாதக தீபிகை....இவையெல்லாம் வேண்டாமா?
/// சதாந்தன் அவர்கள் சொல்லியது: அறுபதாவது
ReplyDeleteவருடம் வரும் போது அதே திதி மாதம் நாள் நேரம் ராகு கேது நிலைகள்
அனைத்தும் வருமல்லவா ///
வராது நண்பரே!
ஜோதிடம் என்பது வானவியல் மற்றும் கணிதத்தை
அடிப்படையாகக் கொண்டது.
சனி ஒரு முழு சுற்றை முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம்
30 ஆண்டுகள் - குரு 12 ஆண்டுகள் - நீங்கள் சொல்லும் ராகு 18 ஆண்டுகள்
ஆக் இந்த மூன்று கோள்கள் மட்டும் பழைய நிலைக்கு வர
30 x 12 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.
மற்ற கோள்களையும் கணக்கிட்டீர்களானால்
உங்களுக்கு நிலைமை தெரியவரும்.
அது பற்றியெல்லாம் பின் வரும் பதிவுகளில்
அதனதன் வரிசையில் சொல்லவிருக்கிறேன்.
உங்களுக்கு உடனே தெரிந்தாகவேண்டுமென்றால்
ஜாதகம் கணிக்கும் மென்பொருளைப் பற்றிய விவரங்கள்
என்னுடைய முந்தையப் பதிவில் உள்ளது
3.1.2006 ல் பதிந்த பதிவு அது. அதன் சுட்டி (Link) கீழே உள்ளது
http://devakottai.blogspot.com/2006/01/blog-post_03.html
முதலில், அதில் உங்கள் ஜாதகத்தைக் கணித்துப் பாருங்கள்
பிறகு சரியாக 60 ஆண்டுகளைக் கூட்டி மறுபடியும் ஒரு தடவை
கணித்துப் பாருங்கள். பார்த்துவிட்டு, என்ன வந்தது என்று உங்கள்
பின்னூட்டத்தில் மீண்டும் சொல்லுங்கள்!
நன்றி, நண்பரே
அன்புடன்
SP.VR.சுப்பையா
///ஞான வெட்டியான் அவர்கள் சொல்லியது: சாதக சாகரம், குமார சுவாமீயம், சாதக சிந்தாமணி,சாதக சூடாமணி, மங்களேசுவரியம், புவன தீபிகை, ஜாதக தீபிகை....இவையெல்லாம் வேண்டாமா? ///
ReplyDeleteஒவ்வொன்றும் ஒரு தங்கச் சுரங்கம் நண்பரே!
ஒரே நாளில் அவ்வளவையும் சொல்லி - இதெல்லாம்
உள்ளது என்றால் - வகுப்புக்கு வரும் பிள்ளைகள்
பயந்து விடுவார்கள்.
ஆகவே என் வகுப்பில் கொஞ்சம் படிக்க வைத்துவிட்டுப்
பட்டப் படிப்பிற்கு உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்!
மடக்கி உட்காரவைத்துச் சொல்லிக் கொடுங்கள்:-)))))
தயவுசெய்து உஙகள் பதிவை தொடரவும். ஜோதிட அறிவியலில் எனக்கு உங்கள் பதிவை படித்த பிறகு மிகுந்த நம்பிக்கை வந்துள்ளது.
ReplyDeleteஐயா! புதிய மாணவன் ஆஜர்.
ReplyDelete1. செவ்வாய் கிழமை நாங்கள் செய்யும் அறுவை சிகித்சைகளில் ரத்த போக்கு சற்று அதிகம் இருப்பதை பல வருஷங்களாக கவனித்து இருக்கிறோம்.
2. சுனாமி பற்றி ஆற்காடு ஜோதிடரின் பஞ்சாகத்தில் தெளிவாக இருந்ததை நண்பர் நிகழ்ச்சிக்கு பிறகு காட்டினார்.
நன்றி!