+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Which is the greatest of all human blessings?
ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?எல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு.
கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். வாழ்க்கையை வியாபாரம் என்றார். வியாபாரத்தில் வரவும் இருக்கும்; செலவும் இருக்கும்.ஜனனத்தை அவர் வரவு வைக்கச் சொன்னார். மரணத்தைச் செலவு எழுதச்சொன்னார்.
பாடலைப் பாருங்கள்:
போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)
வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)
போனால் போகட்டும் போடா, என்று சர்வ அலட்சியத்துடன் பாடலைத் துவக்கியவர், கூக்குரலாலே உயிர் திரும்பக் கிடைக்காது, கோர்ட்டுக்குப் போய் ரிட் பெட்டிஷன் போட்டாலும் ஜெயிக்காது, எமனின் கோட்டையில்
நுழைந்தவர்கள் யாரும் திரும்ப முடியாது என்று யதார்த்த உண்மைகளைச் சொன்னவர், முத்தாய்ப்பாய், ஆறுதலாய், நமக்கும் மேலே ஒருவனடா என்று சொல்லிப் பாடலை நிறைவு செய்தார்!
அதோடு கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தார்: “எமன் வந்து கூப்பிட்டால் அவனுடன் செல்வதற்கு நீ தயாராக இருக்கிறாயா? இருந்தால், நீ அதிர்ஷ்டசாலி!” என்றார்.
அப்படி எத்தனை பேர்கள் இருக்கப்போகிறார்கள்?
நூற்றுக்கு ஒருவர் இருந்தால் ஆச்சரியமே!
எமனிடம் தாவா செய்ய முடியுமா?
எமன் வந்தவுடன், நம்மால் அவனிடம் இப்படிக் கேட்க முடியுமா?
“அப்பனே சற்று இரு; எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு வருகிறேன். என் மனைவி அப்பாவி. வீட்டுச் சாவிகளை எல்லாம் எங்கே வைத்திருக்கி றேன், ரேசன் கார்டை எங்கே வைத்திருக்கிறேன் என்கின்ற சிறு
விஷயங்கள் கூட அவளுக்குத் தெரியாது. கொடுக்கல், வாங்கலில் யாராரிடம், எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறேன், யாராருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான விஷயங்களும் அவளுக்குத் தெரியாது. எனக்குப் பின்னால் என்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து, அவளுக்கு
உதவ மாட்டார்கள். அவள் தெருவில் நிற்கும்படியாகிவிடலாம்! அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு!”
இல்லை. கேட்டவுடன், அவர் கொடுக்கத்தான் போகிறாரா?
கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்!
மரணப் படுக்கையில் படுத்திருப்பவன்கூட, வைத்தியர் நம்மைக் காப்பாற்றி விடுவார், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடுதான் படுத்திருப்பான்.
என்ன காரணம்?
எந்த மனிதனுமே மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை! அதுதான் காரணம்
-------------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தை பிறப்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகப்பிரசவம். தாயின் வயிற்றைச் சற்றுக் கிழித்துக்கொண்டு சிசேரியன் செய்யப்பட்டுப் பிறக்கும் குழந்தை.
மேலோட்டமாகப் பார்த்தால் மரணத்திலும் இரண்டுவகைதான். இயற்கையான மரணம் அல்லது துர் மரணம் (அகால மரணம்)
என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் மரணம் மரணம்தான். இழப்பு இழப்புத்தான். சாதாரண இழப்பல்ல. ஒரு உயிரின் இழப்பு.
தமிழில் மரணத்தை நாசுக்காகச் சொல்லும்போது, இறைவனடி சேர்ந்து விட்டார் என்போம். எங்கள் பகுதியில் சிவபதவி அடைந்துவிட்டார் என்று சொல்வார்கள். இயற்கை எய்திவிட்டார் என்றும் சொல்வார்கள். சிலர்
மரணத்தை வைகுண்டப் பிராப்தி அடைந்துவிட்டார் என்பார்கள்!
------------------------------------------------------------------------------------------
இதயம் துடிப்பது நின்றுவிட்டால் அதைத்தான் மரணம் என்று நாம் குறிப்பிடுவோம். ஆனால் மருத்துவ உலகம் என்ன சொல்கிறது?
உடல் செல்களின் இயக்கம் நின்று போவதுதான் மரணம் என்கிறது மருத்துவம்.
இதயம் செயல்படாமல் நின்று விட்ட பிறகும், மூளையானது இயங்கிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் 2 மணி நேரம் வரை கூட மூளை இயங்கிக் கொண்டிருப்பது உண்டு. இது கிளினிக்கல் டெத் என்று அழைக்கப்படுகிறது.
பின்னர்தான் மூளையின் இயக்கமும் நின்று போகிறது. இதை செரிபரல் டெத் என்று குறிப்பிடுகிறார்கள்.
இப்போதுதான் ஒருவர் உண்மையிலேயே மரணம் அடைந்ததாக கருதப்படுகிறது.
விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்தவர்களுக்கு சில சமயங்களில் மூளை தனது இயக்கத்தை நிறுத்தியிருக்கும். ஆனால் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்களது உடல்கள்தான் தானமாக
அளிக்கப்படுகிறது. எனவே, மூளையும், இதயமும் தங்களது இயக்கத்தை நிறுத்துவதே மரணமாகும்.
Death is the termination of the biological functions that define a living organism. The word refers both to a particular process and to the condition that results thereby.
----------------------------------------------------------------------------------------------
மரணத்தை விரிவாகச் சொல்வதற்குத்தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன?
Died - சாவு, மரணம்
Expired - காலாவதியாகுதல். இறந்து போதல்
killed - put to death - கொல்லப்படுதல். பொதுவாக விபத்தில் இறப்பவர்களுக்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்
Murdered - The unlawful killing of one human by another - கொலை செய்யப்பட்டு இறப்பதைக் குறிக்கும் சொல்
Assassination - An assassination is the targeted killing of a public figure, usually for political purposes. பிரபலங்கள், தலைவர்கள் கொல்லப்பட்டு இறக்கும்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்
Strangled to death - To kill by squeezing the throat so as to choke or suffocate; throttle. கழுத்தை நெறித்துக் கொல்லப்படும் நிலைமை
Suffocated to death - To kill or destroy by preventing access of air or oxygen. மூச்சுத்திணறி இறக்கும் நிலைமை
Drowned to death - To kill by submerging and suffocating in water or another liquid. தண்ணீரில் மூழ்கி இறத்தல்
Killed in a stampede - A sudden headlong rush or flight of a crowd of people. கூட்ட நெரிசலில் சிக்கி இறத்தல்
Deceased - a more formal word for dead - செத்துப்போனவரைக் குறிக்கும் யதார்த்தமான சொல்
Died in the fire accident - தீ விபத்தில் இறத்தல்
Shot dead - சுடப்பட்டு இறத்தல்
Hanged - தூக்கில் இடப்பட்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்கி இறத்தல்
Suicide - The act or an instance of intentionally killing oneself. உயிரை மாய்த்துக்கொள்ளுதல். தற்கொலை
Poisoned to death - விஷம் வைத்து அல்லது கொடுத்துக் கொல்லப்படுதல்
Electocuted - killed by an electric current - மின்சாரம் தாக்கி இறத்தல்
இன்னும் பல சொற்கள் உள்ளன: homicide, infanticide, fratricide, sororicide, matricide,patricide, parricide regicide.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தனை வகைவகையான, விரிவான சொற்கள் பிறப்பிற்குக் கிடையாது. அதை மனதில் கொள்க!
=====================================================
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
Which is the greatest of all human blessings?
மரணம்தான் அது.
உரிய காலத்தில் வலியில்லாமல், நாம் அறியாமல் உயிர் நம்மைவிட்டுப் பிரியும் நிலை இருக்கிறதே, அதுதான் உன்னதமான வரம். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வரம் கிடைக்க வேண்டும். அந்த வரம் கிடைத்திருக் கிறதா? அல்லது இல்லையா என்பதைச் சொல்லும் இடம்தான் எட்டாம் வீடு!
“சாவை, வரம் என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?”
நான் சொல்லவில்லை சுவாமி! அதைச் சொன்ன ஞானியின் பெயருடனே அந்த வைர வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்
அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:
Death may be the greatest of all human blessings. ~ Socrates
மரணம்தான் மனிதனுக்குக் கிடைத்த உன்னதமான வரம்!
--சாக்ரட்டீஸ்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!