+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செம்மொழித் தமிழ் மாநாட்டில் வாத்தியாரின் உரை கேட்க வருக! வருக!
செம்மொழித் தமிழ் மாநாட்டில் வாத்தியார் உரையாற்றும் விவரம்!
--------------------------------------------------------------------------------
1
தேதி: 24.06.2010 வியாழக்கிழமை
நேரம்: பிற்பகல் 2:15 முதல் 2:45 வரை
இடம்: முரசொலி மாறன் அரங்கம்
தலைப்பு:
‘இனியது, இனியது, இணையம்!
2.
தேதி: 26.06.2010 சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 3:15 முதல் 3:45 வரை
இடம்: முரசொலி மாறன் அரங்கம்
தலைப்பு:
‘எங்கே இணையம்? எங்கே இணையம்?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!’
------------------------------------------------------------------------------------
கோவையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள நமது வகுப்பறை மாணவர்களையும், மற்றும் இணைய நண்பர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்!
நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வாத்தியார் உரை சிறப்பாக அமைய
ReplyDeleteவாழ்த்துக்கள்!
Good Luck dear !
ReplyDeleteவாத்தியாரே..
ReplyDeleteமன்னிக்கணும்..!
இது எனக்கு ஏற்புடையதாக இல்லை..!
வாழ்த்துக்கள்
ReplyDelete/////DHANA said...
ReplyDeleteவாத்தியார் உரை சிறப்பாக அமைய
வாழ்த்துக்கள்!////
நல்லது. நன்றி தனா!
/////யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteGood Luck dear !//////
நல்லது. நன்றி நண்பரே!
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
மன்னிக்கணும்..!
இது எனக்கு ஏற்புடையதாக இல்லை..!//////
எது ஏற்புடையதாக இல்லை? அதைச் சொல்லுங்கள் ஊனா தானா!
/////NandaKumar said...
ReplyDeleteவாழ்த்துக்கள்///////
நல்லது. நன்றி நண்பரே!
மட்டற்ற மகிழ்ச்சி .... எனது இல்லம் விழா நடைபெறும் கொடிசியா-விற்கு அருகில் தான் உள்ளது(near to airport nehru nagar ) . தங்களை நேரில் காண்பதற்கும் தங்கள் உரை கேட்பதற்கும் இது ஒரு இனிய வாய்ப்பு.
ReplyDeleteமகிழ்ச்சி ... மகிழ்ச்சி.... கட்டாயம் வருகிறேன்
Regards,
S Manikandan
/////Manikandan said...
ReplyDeleteமட்டற்ற மகிழ்ச்சி .... எனது இல்லம் விழா நடைபெறும் கொடிசியா-விற்கு அருகில் தான் உள்ளது(near to airport nehru nagar ) . தங்களை நேரில் காண்பதற்கும் தங்கள் உரை கேட்பதற்கும் இது ஒரு இனிய வாய்ப்பு.
மகிழ்ச்சி ... மகிழ்ச்சி.... கட்டாயம் வருகிறேன்
Regards,
S Manikandan//////
எனக்கும் மகிழ்ச்சி! வாருங்கள் சந்திப்போம்! நன்றி!
வாழ்த்துக்கள்!
ReplyDeleteகொடுத்து வைத்த வாத்தியார்! செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற!எவ்வளவு பெரிய பெருமை! அதுவும் பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் மத்தியில்!
வாத்தியாரின் உரையை கேட்க முடியாத ஏக்கத்தில் நாங்கள்! வெளிநாட்டில்! முடிந்தால் அதன் வீடியோ லிங்க்-இ வகுப்பறையின் அடுத்த பதிவில் இணைக்கலாமே! என் போன்றோர் பார்ப்பதற்கு! கேட்பதற்கும்!
வாழ்த்துக்கள்!
ஏது?
ReplyDeleteசெம்மொழித்தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள
கோவைக்கு
வாத்தியார் சுனா வீனா சுனா அழைக்கிறார்..வாரீர்..வாரீர்..
என்று கோவை பகுதிகளில் எங்கும் ஆளுயர கட்-அவுட் கள் இருக்கும் போலே தெரிகிறதே..
கலக்குறீங்க சார்..வாழ்த்துக்கள்..
Valthukkal ,...
ReplyDelete////Sai Gokula Krishna said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
கொடுத்து வைத்த வாத்தியார்! செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற!எவ்வளவு பெரிய பெருமை! அதுவும் பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் மத்தியில்!
வாத்தியாரின் உரையை கேட்க முடியாத ஏக்கத்தில் நாங்கள்! வெளிநாட்டில்! முடிந்தால் அதன் வீடியோ லிங்க்-இ வகுப்பறையின் அடுத்த பதிவில் இணைக்கலாமே! என் போன்றோர் பார்ப்பதற்கு! கேட்பதற்கும்!
வாழ்த்துக்கள்!//////
உங்களின் அன்பிற்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி! என் உரையின் சுருக்கத்தை வகுப்பறையில் வெளியிட
உள்ளேன். நீங்கள் கேட்டுள்ளவைகள் அமைப்பாளர்களிடம் இருந்து கிடைத்தால், வலை ஏற்றுகிறேன்.
//////minorwall said...
ReplyDeleteஏது?
செம்மொழித்தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள
கோவைக்கு வாத்தியார் சுனா வீனா சுனா அழைக்கிறார்..வாரீர்..வாரீர்.
என்று கோவை பகுதிகளில் எங்கும் ஆளுயர கட்-அவுட் கள் இருக்கும் போலே தெரிகிறதே..
கலக்குறீங்க சார்..வாழ்த்துக்கள்../////
உங்களுடைய (மாணவர்களுடைய) அன்பைவிடவா கட்டவுட்கள் உயர்ந்தவை மைனர்?
/////Soundarraju said...
ReplyDeleteValthukkal ,...//////
நல்லது. நன்றி நண்பரே!
இதுவரை இணையத்தில் பாடம் எடுத்தீர்கள். தற்போது நேரில் பாடம் எடுக்கப் போகும் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு வலை தளத்திற்கு வருகை புரியும் வலைஞர்களின் எண்ணிக்கையை
ReplyDeleteவைத்தே அழைப்பு வாத்தியாருக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.எனவே வாத்தியாரின் வலை தளத்துடன் தொடர்புடைய அனைவரின் பிரதிநிதியாகத்தான் வாத்தியார் இரண்டு உரைகள் நிகழ்த்துகிறார்.
கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் நேரில் செல்வது நம்மை நாமே கவுரவப்படுத்திக் கொள்வது போல!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteசெம்மொழித் தமிழ் மாநாட்டில்
வாத்தியாரின் உரை- இதனைக் கேட்பதற்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.
தலைப்பு:
‘இனியது, இனியது, இணையம்!
தலைப்பு:
‘எங்கே இணையம்? எங்கே இணையம்? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!’
மிகவும் அருமையான தலைப்புக்கள்.
தங்களின் சேவை மனப்பாண்மைக்கு இந்த தலைப்புக்கள் மூலமாக ஆற்றும் உரைக்கு,
முதன்மை பரிசு நிச்சயம் உண்டு.
தங்களின் உரை, முதன்மையானது என தேர்ந்தெடுக்கப்பட்டு,தகுந்த பரிசுகள் கிடைக்க
வேண்டுமென பிராத்திக்கிறேன்.ஆண்டவன் அருள் தங்களுக்கு நிச்சயமாக உண்டு.
வாழ்த்துக்கள்.
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-06-23
////பாலா said...
ReplyDeleteஇதுவரை இணையத்தில் பாடம் எடுத்தீர்கள். தற்போது நேரில் பாடம் எடுக்கப் போகும் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்./////
இணையத்தமிழின் சார்பாக 400 பேர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் 90% பேர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அங்கே, அவர்களுக்கு நான் எப்படிப் பாடம் எடுக்க முடியும்? உரையை மட்டும் நிகழ்த்திவிட்டு, ஜகா வாங்கிவிட வேண்டியதுதான்!:-))))))
//////kmr.krishnan said...
ReplyDeleteஒரு வலை தளத்திற்கு வருகை புரியும் வலைஞர்களின் எண்ணிக்கையை வைத்தே அழைப்பு வாத்தியாருக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.எனவே வாத்தியாரின் வலை தளத்துடன் தொடர்புடைய அனைவரின் பிரதிநிதியாகத்தான் வாத்தியார் இரண்டு உரைகள் நிகழ்த்துகிறார்.
கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் நேரில் செல்வது நம்மை நாமே கவுரவப்படுத்திக் கொள்வது போல!/////
உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!
///////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
செம்மொழித் தமிழ் மாநாட்டில் வாத்தியாரின் உரை- இதனைக் கேட்பதற்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.
தலைப்பு:
‘இனியது, இனியது, இணையம்!
தலைப்பு:
‘எங்கே இணையம்? எங்கே இணையம்? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!’
மிகவும் அருமையான தலைப்புக்கள்.
தங்களின் சேவை மனப்பாண்மைக்கு இந்த தலைப்புக்கள் மூலமாக ஆற்றும் உரைக்கு,
முதன்மை பரிசு நிச்சயம் உண்டு.
தங்களின் உரை, முதன்மையானது என தேர்ந்தெடுக்கப்பட்டு,தகுந்த பரிசுகள் கிடைக்க
வேண்டுமென பிராத்திக்கிறேன்.ஆண்டவன் அருள் தங்களுக்கு நிச்சயமாக உண்டு.
வாழ்த்துக்கள்.
தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி //////
நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அந்தப் பக்குவம் வந்துவிட்டது. பரிசுகள் எதுவும் வேண்டாம். போரடிக்காமல் உரை நன்றாக இருந்து, அனைவருக்கும் பிடித்தால் மட்டும் போதும்! உங்களின் (வகுப்பறை மாணவர்களின்) அன்பைவிட உயர்ந்த பரிசு எதுவும் இல்லை!
அய்யா,தங்கள் சொற்பொழிவை நேரில் வந்து கேட்க வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்காக அதனை வலையில் ஏற்றம் செய்ய ஆவன செய்யுமாறு
ReplyDeleteஅன்புடன் கோருகிறேன்.
அரசு.
சிறப்பாக அமைய இறை ஆசிகள் ஜயா...
ReplyDeleteவாழ்த்துக்கள் sir
ReplyDelete//////ARASU said...
ReplyDeleteஅய்யா,தங்கள் சொற்பொழிவை நேரில் வந்து கேட்க வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்காக அதனை வலையில் ஏற்றம் செய்ய ஆவன செய்யுமாறு
அன்புடன் கோருகிறேன்.
அரசு./////
நல்லது. முயற்சி செய்கிறேன்!
/////Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteசிறப்பாக அமைய இறை ஆசிகள் ஜயா...////
ஆமாம். அவன் கருணையுடன், உங்களின் அன்பும்!
//////தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
ReplyDeleteவாழ்த்துக்கள் sir///////
நல்லது. நன்றி தமிழரே!
அன்னைத் தமிழுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்!
ReplyDeleteதமிழன்னையின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர் நமது கண்ணதாசனார்...
இன்று அவரின் பிறந்த நாள் 83-வது.. அதே சமயம் அவரை தமது மானசீக குருவாக கொண்ட வாத்தியார் ஐயா அவர்கள் செம்மொழி மாநாட்டில் உரை செய்குவது எங்களைப் போன்றோருக்கு மிக்க மகிழ்ச்சி...... வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் ஐயா.
தங்களது பேச்சு அனைவரையும் ஈர்க்கும் தன்மையது (ஏன் எனில் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் - தமிழ் கடவுள் முருகன் தங்கள் நாவில் வந்து விளையாடுவதை) தங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள். செம்மொழி மகாநாட்டில் வகுப்பறை புகழ் பரவட்டும்
ReplyDeleteவணக்கம் சார் ,
ReplyDeleteநீங்க கலந்துகொண்ட விழாவின் link www.techsatish.net இல் இருக்கு சார்....but
நான் வந்து கண்டு பிடிக்க முடியல்ல உங்களுடைய speech சார், பாத்து சொல்லுங்க சார் part 1 , or part 2வில் , இருக்குமா எண்டு ?
thanks
Thanuja
வாத்தியார் உரை அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ReplyDeleteஉரை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
இந்நேரம் தங்களுடைய உரை மாநாட்டில் முடிந்திருக்கும். மிக நன்றாகவே அமைந்திருக்கும் ஐயமில்லை. கேட்கமுடியாமல் போனது வருத்தம் தருகிறது. ஆழ்ந்த புலமையும், பல துறைகளில் ஞானமும், உண்மையான மொழிப்பற்றும் உள்ளவர்களால்தான் பயனுள்ள கருத்துக்களை இதயத்திலிருந்து தரமுடியும். கேட்கமுடியாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது "வகுப்பு அறையில்" வெளியிடுவதாகக் கூறியிருக்கிறீர்கள். படிக்கிறேன். தங்கள் பயணமும், உங்களால் பயனடையும் ஆயிரமாயிரம் பேரின் வாழ்வும் வெற்றி பெறட்டும். மற்றுமொரு செய்தி. "செந்தமிழ் நாடெனும் போதினிலே" பாடலைக் கொடுத்திருக்கிறீர்கள். மதுரைத் தமிழ்ச்சங்கம் அறிவித்த ஒரு போட்டிக்கு பாரதியைக் கட்டாயப்படுத்தி அவரது நண்பர்கள் ஒரு பாடலை அனுப்பச் சொன்னார்கள். பாரதி மறுத்தான். சங்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பயந்து தனக்கு பரிசளிக்கமாட்டார்கள் என்றான். எங்களுக்காகவாவது எழுதுங்கள் என்று அவர்கள் வற்புறுத்தியதன் விளைவாக இந்தப் பாடலை எழுதி அனுப்பினான். கிடைத்த பரிசு என்ன தெரியுமா? உங்களுக்குத் தெரியும். தெரியாதவர்களுக்காகச் சொல்கிறேன். மூன்றாவது பரிசு! முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற பாடல்கள் எவை? இன்று அவை கிடைக்கின்றனவா? மூன்றாம் பரிசாயினும், காலத்தால் அழிக்கமுடியாத பாடல் "செந்தமிழ் நாடெனும் போதினிலே". இதனை ஒரு தகவலுக்காகச் சொல்லுகிறேன். வேறொன்றுமில்லை. நன்றி.
ReplyDeleteDear Sir,
ReplyDeletevalthukkal.
அரங்குக்குள் நுழைய அனுமதி இல்லை. வாயிலில் இருக்கும் காவல்துறையினர் அழகான ஆங்கிலத்தில் ஐ டி கார்டு இருக்கா? ஸ்மார்ட் கார்டு இருக்கா? எனக்கேட்டு விரட்டப்பட்டோம். நமது கோவையில் நடக்கும் மாநாட்டிற்கு நமக்கே அனுமதி தேவையாய் இருக்கே என நொந்துகொண்டே மாநாட்டு பந்தல் சென்றோம். அங்கே ஒரு கவிஞர் நீர் தான் தலைவர்... நீரே தலைவர்... தமிழின் முகவரி கேட்டால் அது மு.கருணாநிதி... கோவைக்கு வந்துள்ளோம் 'கோ'வை பாட என ஒரே தலைவர் புராணம் பாடினார். பிடிக்காமல் கண்காட்சி செல்லலாம் என்றால் மாநாடு காண வந்தோரெல்லாம் கண்காட்சி வாயிலிலே பலவரிசையில் காத்து நின்று கொண்டிருந்தனர்.....( அவர்களுக்கும் அந்தக்கவிஞரின் புகழ்ச்சிப்பா பிடிக்கவில்லையோ..) அப்படியே உணவகம் சென்று மெசின் காப்பி பத்து ரூபாய் (ஒரு ரூபாய் அடக்க விலை ஆகுமா?) கொடுத்து சற்றே கால் வலித்ததால் அமர்ந்து விட்டு பின் சென்று பார்க்கிங்ல் இருந்து பைக் எடுத்து மெல்ல மெல்ல சரவணம்பட்டி வழியாக வந்து மனைவியை சொகுசு பஸ்ஸில் ஏற்றி விட்டு ( காசு அதிகம் என திட்டு வேறு ) வீடு வந்து சேர்ந்து இதோ உங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்... எப்பவாச்சும் அனுமதி தேவையில்லாத அரங்கத்தில் பேசுங்கள்... ..குடும்பத்துடன் மீண்டும் வருகிறோம்.. வணக்கம்
ReplyDelete//////Alasiam G said...
ReplyDeleteஅன்னைத் தமிழுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்!
தமிழன்னையின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர் நமது கண்ணதாசனார்...
இன்று அவரின் பிறந்த நாள் 83-வது.. அதே சமயம் அவரை தமது மானசீக குருவாக கொண்ட வாத்தியார் ஐயா அவர்கள் செம்மொழி மாநாட்டில் உரை செய்குவது எங்களைப் போன்றோருக்கு மிக்க மகிழ்ச்சி...... வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் ஐயா./////
ஆமாம். நன்றி ஆலாசியம். கவியரசருக்காக இன்று ஒரு பதிவு எழுதியிருக்கலாம். மாநாட்டு வேலையால் முடியாமல் போய்விட்டது.
/////Shiva said...
ReplyDeleteதங்களது பேச்சு அனைவரையும் ஈர்க்கும் தன்மையது (ஏன் எனில் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் - தமிழ் கடவுள் முருகன் தங்கள் நாவில் வந்து விளையாடுவதை) தங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள்/////
தாங்கள்தான் தமிழ்ப்பயணி சிவாவா? அப்படியென்றால் கேட்டிருப்பீர்கள்! எனக்கு முருகன் அருள் உண்டு. என்னை எழுத வைப்பவனே அவன்தான். ஆனால் நீங்கள் சொல்லும் அளவிற்கு அவனருள் இன்னும் கிட்டவில்லை!
////krish said...
ReplyDeleteவாழ்த்துக்கள். செம்மொழி மகாநாட்டில் வகுப்பறை புகழ் பரவட்டும்/////
நன்றி க்ரீஷ்!
/////Thanuja said...
ReplyDeleteவணக்கம் சார் ,
நீங்க கலந்துகொண்ட விழாவின் link www.techsatish.net இல் இருக்கு சார்....but
நான் வந்து கண்டு பிடிக்க முடியல்ல உங்களுடைய speech சார், பாத்து சொல்லுங்க சார் part 1 , or part 2வில் , இருக்குமா எண்டு ?
thanks
Thanuja///
அது இல்லை சகோதரி!
/////Arul said...
ReplyDeleteவாத்தியார் உரை அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
உரை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.../////
நல்லது. நன்றி!
///Thanjavooraan said...
ReplyDeleteஇந்நேரம் தங்களுடைய உரை மாநாட்டில் முடிந்திருக்கும். மிக நன்றாகவே அமைந்திருக்கும் ஐயமில்லை. கேட்கமுடியாமல் போனது வருத்தம் தருகிறது. ஆழ்ந்த புலமையும், பல துறைகளில் ஞானமும், உண்மையான மொழிப்பற்றும் உள்ளவர்களால்தான் பயனுள்ள கருத்துக்களை இதயத்திலிருந்து தரமுடியும். கேட்கமுடியாமல் போனால் என்ன? இருக்கவே இருக்கிறது "வகுப்பு அறையில்" வெளியிடுவதாகக் கூறியிருக்கிறீர்கள். படிக்கிறேன். தங்கள் பயணமும், உங்களால் பயனடையும் ஆயிரமாயிரம் பேரின் வாழ்வும் வெற்றி பெறட்டும். மற்றுமொரு செய்தி. "செந்தமிழ் நாடெனும் போதினிலே" பாடலைக் கொடுத்திருக்கிறீர்கள். மதுரைத் தமிழ்ச்சங்கம் அறிவித்த ஒரு போட்டிக்கு பாரதியைக் கட்டாயப்படுத்தி அவரது நண்பர்கள் ஒரு பாடலை அனுப்பச் சொன்னார்கள். பாரதி மறுத்தான். சங்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பயந்து தனக்கு பரிசளிக்கமாட்டார்கள் என்றான். எங்களுக்காகவாவது எழுதுங்கள் என்று அவர்கள் வற்புறுத்தியதன் விளைவாக இந்தப் பாடலை எழுதி அனுப்பினான். கிடைத்த பரிசு என்ன தெரியுமா? உங்களுக்குத் தெரியும். தெரியாதவர்களுக்காகச் சொல்கிறேன். மூன்றாவது பரிசு! முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற பாடல்கள் எவை? இன்று அவை கிடைக்கின்றனவா? மூன்றாம் பரிசாயினும், காலத்தால் அழிக்கமுடியாத பாடல் "செந்தமிழ் நாடெனும் போதினிலே". இதனை ஒரு தகவலுக்காகச் சொல்லுகிறேன். வேறொன்றுமில்லை. நன்றி./////
"செந்தமிழ் நாடெனும் போதினிலே" பாடலைப் பற்றிய செய்தி எனக்கும் புதிதுதான். அறியத்தந்தமைக்கு நன்றி சார்!
////arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
valthukkal.////
நன்றி நைனா(ர்)
/////கே.பழனிசாமி, அன்னூர் said...
ReplyDeleteஅரங்குக்குள் நுழைய அனுமதி இல்லை. வாயிலில் இருக்கும் காவல்துறையினர் அழகான ஆங்கிலத்தில் ஐ டி கார்டு இருக்கா? ஸ்மார்ட் கார்டு இருக்கா? எனக்கேட்டு விரட்டப்பட்டோம். நமது கோவையில் நடக்கும் மாநாட்டிற்கு நமக்கே அனுமதி தேவையாய் இருக்கே என நொந்துகொண்டே மாநாட்டு பந்தல் சென்றோம். அங்கே ஒரு கவிஞர் நீர் தான் தலைவர்... நீரே தலைவர்... தமிழின் முகவரி கேட்டால் அது மு.கருணாநிதி... கோவைக்கு வந்துள்ளோம் 'கோ'வை பாட என ஒரே தலைவர் புராணம் பாடினார். பிடிக்காமல் கண்காட்சி செல்லலாம் என்றால் மாநாடு காண வந்தோரெல்லாம் கண்காட்சி வாயிலிலே பலவரிசையில் காத்து நின்று கொண்டிருந்தனர்.....( அவர்களுக்கும் அந்தக்கவிஞரின் புகழ்ச்சிப்பா பிடிக்கவில்லையோ..) அப்படியே உணவகம் சென்று மெசின் காப்பி பத்து ரூபாய் (ஒரு ரூபாய் அடக்க விலை ஆகுமா?) கொடுத்து சற்றே கால் வலித்ததால் அமர்ந்து விட்டு பின் சென்று பார்க்கிங்ல் இருந்து பைக் எடுத்து மெல்ல மெல்ல சரவணம்பட்டி வழியாக வந்து மனைவியை சொகுசு பஸ்ஸில் ஏற்றி விட்டு ( காசு அதிகம் என திட்டு வேறு ) வீடு வந்து சேர்ந்து இதோ உங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்... எப்பவாச்சும் அனுமதி தேவையில்லாத அரங்கத்தில் பேசுங்கள்... ..குடும்பத்துடன் மீண்டும் வருகிறோம்.. வணக்கம்////////
என்னிடமும் அனுமதி அட்டையைக் கேட்டார்கள். அழைப்பாக வந்திருந்த மின்னஞ்சலை, காவல்துறை அதிகாரி ஒருவரிடம் காட்டி உள்ளே நுழைந்தேன். பிறகு அங்கே 4 நாட்களுக்குமான அனுமதி அட்டை ஒன்றை வழங்கினார்கள். பாதுகாப்புக் கெடுபிடிகளால், ஏகத்தும் குழப்பங்கள்!