11.6.10

தேவதையா அல்லது பிசாசா? யாரைக் காதலிக்கிறீர்கள்?

-----------------------------------------------------------------------
தேவதையா அல்லது பிசாசா? யாரைக் காதலிக்கிறீர்கள்?

யாரைக் காதலிக்கிறீர்கள்? தேவதையையா அல்லது பிசாசையா? ஹீரோவையா அல்லது வில்லனையா?
----------------------------------------------------------------------------------------------------------

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாடவேண்டும்....உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்... நீ காண வேண்டும்
நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்...நானாக வேண்டும்”
------கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சராசரியாகத் தினமும் 2 மின்னஞ்சலாவது தங்களுடைய காதலைப் பற்றி வாசகர்கள் எழுதியதாக இருக்கும். அதாவது தங்கள் ஜாதகத்தை அனுப்பினால், தங்களுடைய காதல் நிறைவேறுமா? பார்த்துச் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதப்பெற்றதாக இருக்கும்.

சில அஞ்சல்கள் வரும்போதே இணைப்பில் ஜாதகங்களுடனும், கடிதத்தில் பல please களுடனும் அவசியம் பார்த்துச் சொல்லும்படியான வேண்டுகோள்களுடன் வரும்.

தங்கள் காதல் வரலாற்றையும் சிலர் விவரித்து எழுதியிருப்பார்கள். பெரும்பாலும் வீட்டிலுள்ள பெருசுகளைத்தான் வில்லனாகச் சித்தரித்திருப்பார்கள். அவர்களை ஓரம்கட்டிவிட்டுக் கல்யாணம் செய்துகொள்ளலாமா? பின்னால் காதல் வாழ்வில் பிரச்சினை ஏதாவது வந்தால், அவர்களுடைய உதவியின்றித் தானே அதைச் சமாளிக்கமுடியுமா என்றும் கேட்டு எழுதியிருப்பார்கள்.

வரும் அஞ்சல்களில் 70% அஞ்சல்கள் இளம் பெண்களிடம் இருந்துதான் வரும்!

எல்லாம் காலக் கோளாறு. அதீதப் படிப்பு, பன்னாட்டு நிறுவனத்தில் அற்புதமான வேலை, கைநிறையச் சம்பளம். கட்டற்ற பொருளாதாரச் சுதந்திரம், வெளியுலகை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு, நாகரீகத்தின் தாக்கம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உடன் வேலை பார்க்கும் இளைஞனெல்லாம் சூர்யாவாகவும், அஜீத்தாகவும், சமீர்கானாகவும், ஷாருக்கானாகவும் தெரிகிறார்கள். அதேபோல இளைஞர்களுக்கு உடன் வேலைபார்க்கும் சிட்டுக்கள் எல்லாம், அனுஷ்கா சர்மாவாகவும், தீபிகா படுகோனேவாகவும், ஷமீரா ரெட்டியாகவும், நயந்தாராவாகவும், திரிஷாவாகவும் தெரிகிறார்கள்.

தெரியட்டும். தவறில்லை!

ஆனால் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள் தெரியாமல் போய்விடுகிறார்கள். அதுதான் சோகம். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அத்துடன் இன்று நன்றி, விசுவாசமும் இல்லை!

பெற்று, வளர்த்து ஆளாக்கிய அவர்களுடைய நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புக்களை வீணாக்கிவிடுகிறார்கள். அவர்களுடைய கனவுகளை எல்லாம் கானல்களாக மாற்றிவிடுகிறார்கள். அத்துடன் அவர்களுக்குத் தலை குனிவை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

தங்களுடைய பிள்ளைகளுக்கு எந்தமாதிரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

இதில் பையன்களைவிடப் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மிகவும் நொடித்துப்போய்விடுகிறார்கள். நொந்துபோய் விடுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. காதலனின் உண்மையான முகம், திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும். அதுபோல காதலியின் உண்மையான முகமும் திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும்.

“பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா”

என்று கவியரசர் தன் பாட்டில் எழுதிவைத்ததைப்போல காதலனின் மிருக குணம் திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும். அதுபோல காதலித்தபோது தேவதையாகத் தெரிந்தவள், திருமனத்திற்குப் பிறகு பிசாசாகத் தெரிவாள்.

பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணத்திலும் இந்தப் பிரச்சினை உண்டு என்றாலும், அதில் வித்தியாசம் இருக்கிறது. அவர்களும், மற்ற நெருங்கிய உறவினர்களும் கைகொடுக்க வருவார்கள். காதல் திருமணத்தில் யாரும் வரமாட்டார்கள். கண்ணீர் விடும்போது இரக்கப்பட்டு வந்தால் மட்டுமே உண்டு.

அதனால்தான் கவியரசர் இப்படி எழுதினார்:

“காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்
பெற்றோர்கள் பார்ப்பதினால் என்ன நன்மையா - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதினால் வரும் நன்மையே!”

உருகி, உருகி எத்தனை காதல் பாட்டுக்களைத் திரைப்படங்களுக்காக எழுதியவர் அவர். தன் அனுபவங்களை வைத்துத்தான் இதையும் எழுதினார்.

நல்ல விஷயங்களை நாம் கேட்க மாட்டோம். அல்லது விதி நம்மைக் கேட்கவிடாது. பலரும் கெட்ட பின்னேதான் ஞானியாவர்கள். அதாவது ஞானம் பிறக்கும்.

சரி போகட்டும், அது அவர்களுடைய (பெற்றவர்களுடைய) தலை எழுத்து, வயதான காலத்தில் பிள்ளைகளால் அவதிப்பட வேண்டும் என்பது அவர்களுடைய விதி என்று, அதை ஒதுக்கிவைத்துவிட்டு சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பெற்றவர்கள் ஏதாவது சொன்னால், “சும்மா மொக்கை போடாதே!” என்று அவர்களின் வாயை அடைத்து விடும் பிள்ளைகள்தான் இப்போது அதிகம் என்பது வேதனையான விஷயம்!.
----------------------------------------------------------------------------------------------------
அந்த மாதிரித் தங்கள் காதலை சிலாகித்து எழுதப்பெற்று வரும் மின்னஞ்சல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நான் காதலுக்கு எதிரியில்லை. முறையற்ற காதலுக்கு மட்டும் எதிரி. முறையற்ற காதல் என்பது என்ன என்று என்னால் 50 பக்கங்களுக்கு எழுதமுடியும். ஆனால் எழுத விரும்பவில்லை. அதற்கு எழுத்தில் சொல்லமுடியாத சில காரணங்கள் இருக்கின்றது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். காதல் புனிதமானது. அந்த உணர்விற்கு நிகராக சுகம் தரும் உணர்வு எதுவுமில்லை!

காதலர்கள், தங்கள் காதலை வெற்றிபெறச் செய்து, இல்வாழ்விலும் வெற்றி பெற்று வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு நிகரான வாழ்க்கை வேறு இல்லை!

காதல் வெற்றி பெற்று, இல் வாழ்க்கை வெற்றி பெறவில்லை என்றால் எப்படி இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்

ஆகவே, என்னுடைய பதில் பொதுவாக இப்படி இருக்கும்:

“காதல் புனிதமானது. காதலிப்பவனையே நீ மணந்துகொள். இந்த ஜோதிடக் கருமத்தை எல்லாம் பார்க்காதே. என்ன பிரச்சினை வந்தாலும் ஏற்றுக்கொள். மூன்று வருடமாகக் காதலிக்கிறேன் என்கிறாய். ஜாதகம் பொருந்தவில்லை என்று தெரிந்தால் என்ன செய்வாய்? அவனை உதறி விடுவாயா? உன்னால் முடியுமா பெண்ணே? இல்லை அவன்தான் உன்னை லேசில் விட்டுவிடுவானா? காதலிப்பவனை மணந்துகொள். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். அதுதான் உண்மையான காதல். உண்மை தோற்கக்கூடாது. உன் காதலைப் பொய்யாக்கி விடாதே!”

அதற்கு உடனே பதில் வரும்.

“சார், என் காதலனை நான் பார்த்துக்கொள்கிறேன். என் பெற்றோர்களிடம், விஷயத்தைச் சொல்லி, அவர்களுடைய சம்மதத்தை எப்படிப் பெறுவது? என் ஜாதகத்தில் அதற்கு வழி உள்ளதா? ப்ளீஸ் பார்த்துச் சொல்லுங்களேன்!”

(தொடரும்)

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறுத்தியுள்ளேன். இதன் அடுத்த பகுதி 14.6.2010 திங்களன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

30 comments:

  1. ஐயா கட்டுரை நன்றாக உள்ளது. வகுப்பறைக்கு புதிய வண்ணம் நன்றாக உள்ளது. இருப்பினும் IE browser ல் சரிவர தெரியவில்லை. மேலும் main page ல் பதிவுகளின் எண்ணிகையை குறைத்தால் தளம் விரைவாக பதிவிறக்கம் ஆகும் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  2. வகுப்பறை மேலும் பொலிவு பெற்றுள்ளது.'சிக்' என்று காட்சி அளிக்கிறது.
    சமயம் அறிந்து மாற்றங்களை அறிமுக‌ப்படுத்தும் தங்கள் பணி வாழ்க!

    இன்றைய செய்தித்தாள் கூற்றுப்படி விவாகரத்து சுலபமாகப் பெறும்படி சட்டத்
    திருத்தம் வருகிறதாம். குரட்டை விட்டால் கூட விவாகரத்து! சபாஷ்! 2020ல் இந்தியா சூப்பர் பவர் ஆவ‌தற்கு மிக அவசியமான சட்டம் வருகிறது. வாழ்க காதல்! வளர்க வக்கீல்கள்!

    ReplyDelete
  3. //“சார், என் காதலனை நான் பார்த்துக்கொள்கிறேன். என் பெற்றோர்களிடம், விஷயத்தைச் சொல்லி, அவர்களுடைய சம்மதத்தை எப்படிப் பெறுவது? என் ஜாதகத்தில் அதற்கு வழி உள்ளதா? ப்ளீஸ் பார்த்துச் சொல்லுங்களேன்!”//

    ஐயா இதற்கு காரணம். விதி மீது உள்ள நம்பிக்கை. நீங்கள் தான் 337 பற்றி சொல்லி இருக்கீறீர்களே அதனால் தான் இம்மாதிரி கேள்விகள் என்று நினைகிறேன்.

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,
    வண்ண மாற்றங்கள் அருமை.
    நீதி போதனை வகுப்பும் மிக அருமை..
    காதல் தான் இந்த புவியை இயக்குகிறது
    என்றால் அது மிகையாகாது
    ஏனென்றால் அது தெய்வீகமானது...
    தெய்வம் என்பது அன்பென்பதால்......
    காதல் பலவகை அதில் இதோ சில வகை;
    பொருளாதாரக் காதல்,புரியாதக் காதல்,
    உரிமைக் காதல்,உறவுக் காதல்,
    பந்தாக் காதல்,பரவசக் காதல்,
    பழிவாங்கும் காதல்,
    அழகுக்கான... காதல்?,
    அன்புக் காதல்,
    விவேகமான காதல்,
    உண்மைக் காதல்..........

    அன்பென்னும் அஸ்திவாரத்தினால்
    விவேகமென்னும் கோவில் எழுப்பி
    அதனுள் உண்மை என்னும் விக்ரகம் கொண்டு
    பூஜிக்கும் போது அது தெய்வீக காதலாகுகிறது.
    (*******இந்த பூஜையில் யாரையும் பலிகொடுக்கக்கூடாது********)
    ****I WOULD SAY THAT...LOVE IS NOT A FAHSION BUT IT IS A FUSION.....****
    அதற்கு மேலும் ஓன்று உண்டு!!!!!
    காதல் இல்லையேல் சாதல்
    உண்மைதான் ஆனால்
    வாழ்வில் காதலிக்க நிறைய இருக்கு,
    அத்தனையும் சரி விகிதத்தில்
    காதலிக்கும் போது; ஆண் பெண் காதல்
    என்பது மாத்திரமே வாழ்க்கை
    என்பதாகாது என்பது புரியும்.
    நாம் விசுவாசத்தோடு காதலிக்க
    வேண்டியவர்கள் என்றால்முதலில்...
    மாதா, பிதா, குரு, தெய்வம்....
    இவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில்
    நமக்குள் ஒரு தெளிவு பிறக்கும்.....
    நன்றி.

    ReplyDelete
  5. nalla Pathivu , kathalil ungal parvai nandru ,...

    ReplyDelete
  6. அன்புத் தோழி!!
    உறவு என்பது அன்பு வழிப்பட்டது,
    உற்ற உன்னதக் காதலை உன்
    பெற்ற தாய் தந்தையரிடம் கூறத் தயக்கம் ஏன்?
    சுயநலம் இல்லாமல் யோசி....
    உனது காதல் வென்றாலும்? கொன்றாலும்?
    சாதகப் பாதகம் என்ன என்று...
    உனது களவை; வெளிச்சத்திற்கு கொண்டுவர
    உன்னை உறுத்தும் தடையாய் நிற்பது எது?
    குடும்ப மதிப்பா? பெற்றோரின் நியாயமான ஆசையா?
    உன்னோடு பிறந்தவர்களின் வாழ்க்கைக்கு கேள்விக்குறியா?
    உன் காதலனின் குடும்ப மதிப்பா,
    அவனின் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த திறமையா? (காதலனுக்கு இது போதும்).......
    ஆம், இவைகளில் சிலவே... என்றால் நீ எவ்வளவு சுயநலவாதி என்பதை நீ அறிந்துக் கொ(ல்ல)ள்ள..இதுவே தருணம். உன்னை கருவோடும், மார்போடும், நெஞ்சோடும் சுமந்தோருக்கு நீ சரியான பரிசளிக்கும் நேரம் இது... தாமதம் ஏன்? நடத்து உன் கண்மூடித்தனமான கத்திரிக்காய் வியாபாரத்தை...

    இல்லை, இல்லை.. மேல் உள்ள எதுவும் இல்லை எல்லாமே சரிதான் என்றால் நீ காதலில் ஒரு நூறு விழுக்காடு வெற்றி பெற்றுவிட்டாய் பிறகு என்ன தயக்கம். உன்னை பெற்றவர்கள் "உன்னை விட உன்னை" அதிகம் நேசிப்பவர்கள்...!!!!!!!!
    மறக்காமல் எனக்கு அழைப்பிதழை அனுப்பு! பரிசோடு வருகிறேன்!!

    ReplyDelete
  7. ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்!

    அறம், பொருள்,..............., வீடுபேறு பற்றி எழும் நீங்கள் இன்பத்தை மட்டுமே திரை கொண்டு மறைப்பது ஏன்? நான் எனது குழந்தைகளிடம் அடிக்கடி கூறுவதுண்டு... இந்த உலகில் எதுவுமே தவறில்லை... சரியான ஒரு வயதில் சரியான ஒருவருடன், சரியான ஒரு இடத்தில், சரியான ஒரு காரியத்தை செய்தால்! என்று...

    காதலைப் (இன்பத்தை) பாடும்போது கம்பனும், வள்ளுவனும் நிச்சயமாக உங்கள் வயதைக் கடந்தவர்களாகத் தான் இருதிருக்க முடியும், ஆகவே இந்த மாணவனின் வேண்டுகோள்... கம்பனைப் போல் அழகும், கற்பனையும்; வள்ளுவனைப் போல் சுருங்கச் சொல்லி பெரிதாக விளக்கும் திறமையும், பாரதியைப் போல் தீர்க்கமான கருத்தாழமிக்க பொருளும், கண்ணதாசனை போன்ற எளிமையான நடையும் கொண்டு எழுதும் திறமை ஒருங்கே கொண்ட நீவீர், இன்பத்தை திரைகொண்டு மறைக் காமல்.. எழுங்கள்... வயதானது உமக்கே! உமது எழுத்துக்கு அல்ல.... கவிஞன் மரணத்தில் ஜனனம் ஆகிறான் என்றார் கண்ணதாசன்... அது எல்லாக் கலைஞனுக்கும் பொருந்தும்....

    இனி அறம், பொருள், இன்பம், வீடுபேறு யாவும் உண்டு வகுப்பறையில்..... அப்படித்தானே குருவே!!!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  8. Pugazhenthi said...
    ஐயா கட்டுரை நன்றாக உள்ளது. வகுப்பறைக்கு புதிய வண்ணம் நன்றாக உள்ளது. இருப்பினும் IE browser ல் சரிவர தெரியவில்லை. மேலும் main page ல் பதிவுகளின் எண்ணிகையை குறைத்தால் தளம் விரைவாக பதிவிறக்கம் ஆகும் என்பது என் தாழ்மையான கருத்து./////

    நன்று முயற்சி செய்கிறேன்!

    ReplyDelete
  9. /////kmr.krishnan said...
    வகுப்பறை மேலும் பொலிவு பெற்றுள்ளது.'சிக்' என்று காட்சி அளிக்கிறது.
    சமயம் அறிந்து மாற்றங்களை அறிமுக‌ப்படுத்தும் தங்கள் பணி வாழ்க!
    இன்றைய செய்தித்தாள் கூற்றுப்படி விவாகரத்து சுலபமாகப் பெறும்படி சட்டத்
    திருத்தம் வருகிறதாம். குரட்டை விட்டால் கூட விவாகரத்து! சபாஷ்! 2020ல் இந்தியா சூப்பர் பவர் ஆவ‌தற்கு மிக அவசியமான சட்டம் வருகிறது. வாழ்க காதல்! வளர்க வக்கீல்கள்!/////

    வளர்க நம் நாகரீக வாழ்க்கை முறை!

    ReplyDelete
  10. //////KULIR NILA said...
    //“சார், என் காதலனை நான் பார்த்துக்கொள்கிறேன். என் பெற்றோர்களிடம், விஷயத்தைச் சொல்லி, அவர்களுடைய சம்மதத்தை எப்படிப் பெறுவது? என் ஜாதகத்தில் அதற்கு வழி உள்ளதா? ப்ளீஸ் பார்த்துச் சொல்லுங்களேன்!”//
    ஐயா இதற்கு காரணம். விதி மீது உள்ள நம்பிக்கை. நீங்கள் தான் 337 பற்றி சொல்லி இருக்கீறீர்களே அதனால் தான் இம்மாதிரி கேள்விகள் என்று நினைகிறேன்./////

    உங்கள் நினைப்பு வாழ்க! 337ம் வாழ்க!

    ReplyDelete
  11. Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    வண்ண மாற்றங்கள் அருமை.
    நீதி போதனை வகுப்பும் மிக அருமை..
    காதல் தான் இந்த புவியை இயக்குகிறது
    என்றால் அது மிகையாகாது
    ஏனென்றால் அது தெய்வீகமானது...
    தெய்வம் என்பது அன்பென்பதால்......
    காதல் பலவகை அதில் இதோ சில வகை;
    பொருளாதாரக் காதல்,புரியாதக் காதல்,
    உரிமைக் காதல்,உறவுக் காதல்,
    பந்தாக் காதல்,பரவசக் காதல்,
    பழிவாங்கும் காதல்,
    அழகுக்கான... காதல்?,
    அன்புக் காதல்,
    விவேகமான காதல்,
    உண்மைக் காதல்.........
    அன்பென்னும் அஸ்திவாரத்தினால்
    விவேகமென்னும் கோவில் எழுப்பி
    அதனுள் உண்மை என்னும் விக்ரகம் கொண்டு
    பூஜிக்கும் போது அது தெய்வீக காதலாகுகிறது.
    (*******இந்த பூஜையில் யாரையும் பலிகொடுக்கக்கூடாது********)
    ****I WOULD SAY THAT...LOVE IS NOT A FAHSION BUT IT IS A FUSION.....****
    அதற்கு மேலும் ஓன்று உண்டு!!!!!
    காதல் இல்லையேல் சாதல்
    உண்மைதான் ஆனால்
    வாழ்வில் காதலிக்க நிறைய இருக்கு,
    அத்தனையும் சரி விகிதத்தில்
    காதலிக்கும் போது; ஆண் பெண் காதல்
    என்பது மாத்திரமே வாழ்க்கை
    என்பதாகாது என்பது புரியும்.
    நாம் விசுவாசத்தோடு காதலிக்க
    வேண்டியவர்கள் என்றால்முதலில்...
    மாதா, பிதா, குரு, தெய்வம்....
    இவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில்
    நமக்குள் ஒரு தெளிவு பிறக்கும்.....
    நன்றி./////

    தெளிவு பிறந்தால் சரி! எல்லாம் கெடுவதற்கு முன்பு பிறந்தால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  12. ////Soundarraju said...
    nalla Pathivu , kathalil ungal parvai nandru ,.../////

    என்ன அதற்குள் முடித்துவிட்டீர்கள்? இன்னும் இருக்கிறது!

    ReplyDelete
  13. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்!
    அறம், பொருள்,..............., வீடுபேறு பற்றி எழும் நீங்கள் இன்பத்தை மட்டுமே திரை கொண்டு மறைப்பது ஏன்? நான் எனது குழந்தைகளிடம் அடிக்கடி கூறுவதுண்டு... இந்த உலகில் எதுவுமே தவறில்லை... சரியான ஒரு வயதில் சரியான ஒருவருடன், சரியான ஒரு இடத்தில், சரியான ஒரு காரியத்தை செய்தால்! என்று...
    காதலைப் (இன்பத்தை) பாடும்போது கம்பனும், வள்ளுவனும் நிச்சயமாக உங்கள் வயதைக் கடந்தவர்களாகத் தான் இருதிருக்க முடியும், ஆகவே இந்த மாணவனின் வேண்டுகோள்... கம்பனைப் போல் அழகும், கற்பனையும்; வள்ளுவனைப் போல் சுருங்கச் சொல்லி பெரிதாக விளக்கும் திறமையும், பாரதியைப் போல் தீர்க்கமான கருத்தாழமிக்க பொருளும், கண்ணதாசனை போன்ற எளிமையான நடையும் கொண்டு எழுதும் திறமை ஒருங்கே கொண்ட நீவீர், இன்பத்தை திரைகொண்டு மறைக் காமல்.. எழுங்கள்... வயதானது உமக்கே! உமது எழுத்துக்கு அல்ல.... கவிஞன் மரணத்தில் ஜனனம் ஆகிறான் என்றார் கண்ணதாசன்... அது எல்லாக் கலைஞனுக்கும் பொருந்தும்....
    இனி அறம், பொருள், இன்பம், வீடுபேறு யாவும் உண்டு வகுப்பறையில்..... அப்படித்தானே குருவே!!!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ. ////

    நான் எதையும் மறைக்கவில்லை. இன்பத்தை அவரவர்களாகவே தேடிக்கொண்டு விடுவார்கள். அறம்தான் கசக்கும். அதனால்தான் அறத்தைப் பற்றி அதிகமாக எழுதுகிறேன்!

    ReplyDelete
  14. Ayya,

    Migavum nandrana Pathivu, ennai pondra valibargalai migavum seinthikka vaithu vittathu,

    Nandri

    Loga

    ReplyDelete
  15. எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சராசரியாகத் தினமும் 2 மின்னஞ்சலாவது தங்களுடைய காதலைப் பற்றி வாசகர்கள் எழுதியதாக இருக்கும்.
    ================================

    Don't even dignify such questions with a response would be my request. Most of it would be just by trolls and/or for flame baiting purposes.

    Any thinking man will consider a dozen other factors besides love before making a move. And if he is thinking you can be sure he has not been in love recently. L.O.L!

    We know that we readers are here for information with substance not for fleeting salacious entertainment. There are other lifestyle coaches online these lovers can contact and get mentored by.

    So relax :P

    ReplyDelete
  16. சொல் பேச்சைக் கேட்கும் அல்லது தங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் குழந்தைகள் பிறப்பார்களா, கணவன் அல்லது மனைவி கிடைப்பார்களா போன்ற கேள்விகள் வருவதில்லையோ. போகட்டும். காதல் திருமணத்திற்கு 2,5,7 அதிபதிகளின் தொடர்பு அவசியம் என்று படித்திருக்கிறேன். சுக்கிரனையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அவரில்லாமல் (காதல்/திருமணம் போன்றவை) ஒன்றும் நடவாது. லக்னாதிபதி அடிபட்டு கோமாவில் படுத்திருக்கும் ஜாதகத்தில் மற்ற எந்த நல்ல அம்சங்கள் இருந்தும் பிரயோஜனமில்லை.

    ReplyDelete
  17. காதல் குறித்த உங்கள் விளக்கம் மிகத் தெளிவானது. இன்றைய இளைஞர்கள் காதல் என்று எதைச் சொல்லுகிறார்கள். இளமையின் காரணமாக ஏற்படும் ஓர் இனக்கவர்ச்சியையா, அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணிடம், அல்லது ஒரு பெண் மற்றொரு ஆணிடம் ஆழ்ந்த நட்பு பாரட்டுவதையும், ஒருவருக்கொருவர் ஆதரவாக, எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதை 'காதல்' என்று நினைக்கிறார்களா? மகாத்மா காந்தியின் இளைய மகனை, ராஜாஜியின் இளைய மகள் காதலித்தாள். செய்தி தந்தைமார்களுக்குச் சென்றது. மகாத்மா உடனே திருமணம் செய்யவுமில்லை, திருமணத்தை மறுக்கவுமில்லை. காலம் தாழ்த்தினார். கால ஓட்டத்தின் காரணமாகவும், இருவரும் பிரிந்திருக்கும் காலத்திலும் அவ்விருவரின் காதல் உண்மையானதுதானா என்பதை அவர் பாணியில் காந்திஜி சோதித்துப் பின் திருமணத்துக்கு அனுமதி தந்தார். இளம் வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியும், வேலை பார்க்குமிடத்தில் அதிலும் இருவரும் தற்போதைய சூழலில் அதிகம் ஊதியம் பெறும் வேலையில் இருந்தால், வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெற்றுவிடலாம் என்றுகூட சிலர் காதல் செய்கின்றனர். இவர்கள் பணத்துக்கும், வசதிகளுக்கும், ஆடம்பரத்துக்கும் ஆட்பட்டு, மனித உணர்வுகள், ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல், குடும்பத்தின் மற்றவர்களோடு அனுசரித்தல் போன்ற மென்மையான உணர்வுகளை மறந்து விடுகின்றனர். நீங்களே குறிப்பிட்டது போல, நானும் காதலுக்கு எதிரியல்ல. இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  18. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    வகுப்பறை வித்தியாசமாகவும்,பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது.

    “காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
    கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்
    பெற்றோர்கள் பார்ப்பதினால் என்ன நன்மையா - அவர்கள்
    மற்றதையும் பார்ப்பதினால் வரும் நன்மையே!”
    --------------
    கவியரசர் கருத்துக்கள் அவரின் அனுபவ பூர்வமானதும்,
    வாழ்க்கைக்கு வழிகாட்டியுமாகும்.

    ----படிப்பு,வேலை,சுதந்திரம்,வெளியுலகை முழுமையாகத்
    தெரிந்து கொள்ளும் வாய்ப்பு---
    இவர்கள் கவியரசரின் கருத்துக்களைப் பின்பற்றினால்
    வாழ்க்கையில் கண்டிப்பாக சிறப்போடு வாழலாம்.
    -தங்களுக்கு நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-11

    ReplyDelete
  19. ////bhuvanar said...
    Ayya,
    Migavum nandrana Pathivu, ennai pondra valibargalai migavum seinthikka vaithu vittathu,
    Nandri
    Loga/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  20. ////ராஜ் said...
    எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சராசரியாகத் தினமும் 2 மின்னஞ்சலாவது தங்களுடைய காதலைப் பற்றி வாசகர்கள் எழுதியதாக இருக்கும்.
    ================================
    Don't even dignify such questions with a response would be my request. Most of it would be just by trolls and/or for flame baiting purposes.
    Any thinking man will consider a dozen other factors besides love before making a move. And if he is thinking you can be sure he has not been in love recently. L.O.L!
    We know that we readers are here for information with substance not for fleeting salacious entertainment. There are other lifestyle coaches online these lovers can contact and get mentored by.
    So relax :P//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. //////ananth said...
    சொல் பேச்சைக் கேட்கும் அல்லது தங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் குழந்தைகள் பிறப்பார்களா, கணவன் அல்லது மனைவி கிடைப்பார்களா போன்ற கேள்விகள் வருவதில்லையோ. போகட்டும். காதல் திருமணத்திற்கு 2,5,7 அதிபதிகளின் தொடர்பு அவசியம் என்று படித்திருக்கிறேன். சுக்கிரனையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அவரில்லாமல் (காதல்/திருமணம் போன்றவை) ஒன்றும் நடவாது. லக்னாதிபதி அடிபட்டு கோமாவில் படுத்திருக்கும் ஜாதகத்தில் மற்ற எந்த நல்ல அம்சங்கள் இருந்தும் பிரயோஜனமில்லை./////

    லக்கினாதிபதி மட்டுமல்ல, சுக்கிரனும் ஆட்டத்தில் இல்லை என்றால் காதல் இல்லை!

    ReplyDelete
  22. /////Thanjavooraan said...
    காதல் குறித்த உங்கள் விளக்கம் மிகத் தெளிவானது. இன்றைய இளைஞர்கள் காதல் என்று எதைச் சொல்லுகிறார்கள். இளமையின் காரணமாக ஏற்படும் ஓர் இனக்கவர்ச்சியையா, அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணிடம், அல்லது ஒரு பெண் மற்றொரு ஆணிடம் ஆழ்ந்த நட்பு பாரட்டுவதையும், ஒருவருக்கொருவர் ஆதரவாக, எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதை 'காதல்' என்று நினைக்கிறார்களா? மகாத்மா காந்தியின் இளைய மகனை, ராஜாஜியின் இளைய மகள் காதலித்தாள். செய்தி தந்தைமார்களுக்குச் சென்றது. மகாத்மா உடனே திருமணம் செய்யவுமில்லை, திருமணத்தை மறுக்கவுமில்லை. காலம் தாழ்த்தினார். கால ஓட்டத்தின் காரணமாகவும், இருவரும் பிரிந்திருக்கும் காலத்திலும் அவ்விருவரின் காதல் உண்மையானதுதானா என்பதை அவர் பாணியில் காந்திஜி சோதித்துப் பின் திருமணத்துக்கு அனுமதி தந்தார். இளம் வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியும், வேலை பார்க்குமிடத்தில் அதிலும் இருவரும் தற்போதைய சூழலில் அதிகம் ஊதியம் பெறும் வேலையில் இருந்தால், வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் பெற்றுவிடலாம் என்றுகூட சிலர் காதல் செய்கின்றனர். இவர்கள் பணத்துக்கும், வசதிகளுக்கும், ஆடம்பரத்துக்கும் ஆட்பட்டு, மனித உணர்வுகள், ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல், குடும்பத்தின் மற்றவர்களோடு அனுசரித்தல் போன்ற மென்மையான உணர்வுகளை மறந்து விடுகின்றனர். நீங்களே குறிப்பிட்டது போல, நானும் காதலுக்கு எதிரியல்ல. இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள்!/////

    உங்களின் மேன்மையான கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    வகுப்பறை வித்தியாசமாகவும்,பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது.
    “காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
    கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்
    பெற்றோர்கள் பார்ப்பதினால் என்ன நன்மையா - அவர்கள்
    மற்றதையும் பார்ப்பதினால் வரும் நன்மையே!” --------------
    கவியரசர் கருத்துக்கள் அவரின் அனுபவ பூர்வமானதும்,
    வாழ்க்கைக்கு வழிகாட்டியுமாகும்.
    ----படிப்பு,வேலை,சுதந்திரம்,வெளியுலகை முழுமையாகத்
    தெரிந்து கொள்ளும் வாய்ப்பு---
    இவர்கள் கவியரசரின் கருத்துக்களைப் பின்பற்றினால்
    வாழ்க்கையில் கண்டிப்பாக சிறப்போடு வாழலாம்.
    -தங்களுக்கு நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    உங்களுடைய எண்ணப்பகிர்விற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  24. (ஆஹா.. காதல் என்பது எதுவரை?...
    கல்யாணம் ஆகும்...அதுவரை..)
    என்ற பழைய பாடலை ஒத்த பதிவு..

    (ஒற்றைக் காதல் ஊரில் இல்லையப்பா..டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ணைக் காதலி...லவ் பண்ணுடா மகனே..லவ் பண்ணுடா..)
    என்று காதலை எளிமைப்படுத்திய ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் பாடல் காதல் ஒரு அம்பிட்டமின் கெமிஸ்ட்ரி சப்ஜெக்ட் என்ற சுஜாதாவின் பார்வையுடன் ஒத்துப் போகிறது..

    என்றென்றும் காதல் தனிமனிதனுக்குத்தான் சொந்தம்..குடும்பத்துக்கு சொந்தமானதல்ல..
    திருமண பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாதது...
    எந்த கால கட்டத்திலும் {திருமணத்துக்கு முன்னும் பின்னும்..(திருமணமே வேண்டுமா வேண்டாமா என்ற ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் பார்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதே..
    அதனால்தான் விவாகரத்தை எளிதாக்க சட்ட நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படு சூழல்..)}
    50 :50 என்ற விகிதத்திலே மனமும் உடலும் கலக்கவில்லை என்றால் அது பூட்டைக்கேஸ்தான்...
    காதலும் காமமும் ஒன்றெனக் கலந்ததுதான்..விகிதாச்சாரம் கொண்டு பிரிக்க முடியாதது..
    மன உடல் ஒருங்கினைப்பிலேதான் பிரச்சினை..
    பழைய காலங்களில் காதலில் மனதின் ஆதிக்க விகிதாச்சாரம் கூடியும் இப்போது உடலின் ஆதிக்க விகிதாச்சாரம் கூட ஆரம்பித்திருப்பதுதான் இந்த அலசலுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்..
    தனி மனித அடிப்படையில் பார்க்கும்போது வாழ்வின் கால கட்டங்களைப் பொறுத்தும், காதல் வயப்படும்
    இருபாலரின் (திருமணம் ஆன அல்லது ஆகாத) உணர்வு அடிப்படையிலும் கூட காதல் கேள்விக்குரியதாகி விடுகிறது..இல்லை பற்றித்தீயாக ஆட்கொண்டு விடுகிறது..
    கள்ளக்காதல் என்று வெறும் வார்த்தைஜாலங்களினால் புறந்தள்ளப்பட்டாலும் காதலுக்குக் கண்ணில்லை என்ற பார்வையில் பார்த்தால் குடும்ப உறவுகள் புறந்தள்ளப்பட்டு காதல் (அல்லது கள்ளக்காதல்) முன்னுரிமை கொடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பதும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்வதும் காதல் பற்றிய சமுதாயத்தின் பார்வையில் தனி மனித விருப்பம் என்கிற அளவிலான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து..

    ReplyDelete
  25. //////minorwall said...
    (ஆஹா.. காதல் என்பது எதுவரை?...
    கல்யாணம் ஆகும்...அதுவரை..)
    என்ற பழைய பாடலை ஒத்த பதிவு..
    (ஒற்றைக் காதல் ஊரில் இல்லையப்பா..டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ணைக் காதலி...லவ் பண்ணுடா மகனே..லவ் பண்ணுடா..)
    என்று காதலை எளிமைப்படுத்திய ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் பாடல் காதல் ஒரு அம்பிட்டமின் கெமிஸ்ட்ரி சப்ஜெக்ட் என்ற சுஜாதாவின் பார்வையுடன் ஒத்துப் போகிறது..
    என்றென்றும் காதல் தனிமனிதனுக்குத்தான் சொந்தம்..குடும்பத்துக்கு சொந்தமானதல்ல..
    திருமண பந்தத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாதது...
    எந்த கால கட்டத்திலும் {திருமணத்துக்கு முன்னும் பின்னும்..(திருமணமே வேண்டுமா வேண்டாமா என்ற ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் பார்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதே..
    அதனால்தான் விவாகரத்தை எளிதாக்க சட்ட நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படு சூழல்..)}
    50 :50 என்ற விகிதத்திலே மனமும் உடலும் கலக்கவில்லை என்றால் அது பூட்டைக்கேஸ்தான்...
    காதலும் காமமும் ஒன்றெனக் கலந்ததுதான்..விகிதாச்சாரம் கொண்டு பிரிக்க முடியாதது..
    மன உடல் ஒருங்கினைப்பிலேதான் பிரச்சினை..
    பழைய காலங்களில் காதலில் மனதின் ஆதிக்க விகிதாச்சாரம் கூடியும் இப்போது உடலின் ஆதிக்க விகிதாச்சாரம் கூட ஆரம்பித்திருப்பதுதான் இந்த அலசலுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்..
    தனி மனித அடிப்படையில் பார்க்கும்போது வாழ்வின் கால கட்டங்களைப் பொறுத்தும், காதல் வயப்படும்
    இருபாலரின் (திருமணம் ஆன அல்லது ஆகாத) உணர்வு அடிப்படையிலும் கூட காதல் கேள்விக்குரியதாகி விடுகிறது..இல்லை பற்றித்தீயாக ஆட்கொண்டு விடுகிறது..
    கள்ளக்காதல் என்று வெறும் வார்த்தைஜாலங்களினால் புறந்தள்ளப்பட்டாலும் காதலுக்குக் கண்ணில்லை என்ற பார்வையில் பார்த்தால் குடும்ப உறவுகள் புறந்தள்ளப்பட்டு காதல் (அல்லது கள்ளக்காதல்) முன்னுரிமை கொடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பதும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்வதும் காதல் பற்றிய சமுதாயத்தின் பார்வையில் தனி மனித விருப்பம் என்கிற அளவிலான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து..////

    கள்ளக்காகாதலுக்கு அங்கீகாரமா? என்ன சுவாமி கவிழ்த்துவிட்டீர்கள்? கள்ளக்காதலினால் பாதிக்கப்படும், ஒரு கணவன், ஒரு மனைவி, அவர்களுடைய குழந்தைகள், என்று எத்தனை ஜீவன்களுக்கு மன உளைச்சல்? பாதிப்பு? அவமானங்கள்? அவற்றை எந்தக் கணக்கில் எழுதுவது?

    ReplyDelete
  26. நல்ல சொன்னீங்க..

    ReplyDelete
  27. ///ராசராசசோழன் said...
    நல்ல சொன்னீங்க.. ////

    எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவைல்லை. இருந்தாலும் நன்றி!

    ReplyDelete
  28. தனக்கு பிடிக்கவில்லை என்பவரிடம் இருந்து விலகி செல்லும் பாதையை தேர்வு செய்தல் ..அதைப் போலவே தனக்கு பிடிக்காதவரிடமிருந்தும் விலகி இருப்பதையே விரும்புதல்..அதைப் போலவே பிடித்தவர்கள் நெருங்குவதையும் தவறு என்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை..இதே பாதையை தேர்வு செய்து பயணிக்கும் பெருங்கூட்டம் காலகாலமாகவே இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்..
    பூப்போலே உன் புன்னகையில்..என்ற பாடலை கொண்ட கவரிமான் திரைப்படம் என் மனக்கண் முன் நிழலாடுகிறது..
    என் பார்வை சரி என்று நானே சட்டத்தை கையில் எடுப்பது சரிதான்..(எனக்கு)
    சுமுகத் தீர்வு காணப்பட வேண்டிய விஷயங்களுக்கு வன்முறை தீர்வானால் யார் வாழ்வு பாதிப்படையும் என்று தீர்க்கமாக ஆராய்ந்தால் இத்தகைய வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியதன் அவசியம் இந்த சமூகத்துக்கு உண்டு என்பது புரியும்..

    ReplyDelete
  29. ///minorwall said...
    தனக்கு பிடிக்கவில்லை என்பவரிடம் இருந்து விலகி செல்லும் பாதையை தேர்வு செய்தல் ..அதைப் போலவே தனக்கு பிடிக்காதவரிடமிருந்தும் விலகி இருப்பதையே விரும்புதல்..அதைப் போலவே பிடித்தவர்கள் நெருங்குவதையும் தவறு என்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை..இதே பாதையை தேர்வு செய்து பயணிக்கும் பெருங்கூட்டம் காலகாலமாகவே இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்..
    பூப்போலே உன் புன்னகையில்..என்ற பாடலை கொண்ட கவரிமான் திரைப்படம் என் மனக்கண் முன் நிழலாடுகிறது..
    என் பார்வை சரி என்று நானே சட்டத்தை கையில் எடுப்பது சரிதான்..(எனக்கு)
    சுமுகத் தீர்வு காணப்பட வேண்டிய விஷயங்களுக்கு வன்முறை தீர்வானால் யார் வாழ்வு பாதிப்படையும் என்று தீர்க்கமாக ஆராய்ந்தால் இத்தகைய வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியதன் அவசியம் இந்த சமூகத்துக்கு உண்டு என்பது புரியும்..////

    எங்கள் (கோவை) பகுதியில் நிறைய வெட்டுக் குத்து எல்லாம் நடக்கும். எல்லாவற்றிற்கும் ஒரு முறை, நியாயம், தர்மம் உள்ளது. பிடிக்கவில்லை வேறு பாதை என்றால், விவாகத்தை ரத்து செய்து விட்டு, அடுத்த பாதையில் செல்லலாம். அதுதான் நியாயம். கள்ளம் இருக்கக்கூடாது மைனர். துபாய் என்றால் தலையைச் சீவி விடுவார்கள் மைனர். நீங்கள் ஜப்பானில் இருந்து கொண்டு வித்தியாசமாகச் சிந்திக்கிறீர்கள்:-)))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com