10.6.10

Social Networking Sites - ஒரு பார்வை!

-----------------------------------------------------------------------------
Social Networking Sites - ஒரு பார்வை!

சமூக ஒருங்கிணைப்பு என்னும் பெயரில் நிறைய இணைய தளங்கள் உள்ளன.

அவற்றில் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்:

Yaari.com
Jhoos.com
Flikker
Face Book
Hi5
Linkedin
Orkut
Tagged
Twitter

இதுபோன்ற தளங்களில் உறுப்பினர்களாக உள்ள நண்பர்கள் மற்றும் நமது வகுப்பறை மாணவர்கள் பலரிடம் இருந்து என்னையும் அவர்களுடைய தளத்தில் சேரச்சொல்லி எனக்குத் தினமும் குறைந்தது 10 அழைப்புக்களாவது வருகின்றன. நான் யாருடைய அழைப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை.

எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யாரி டாட் காம் என்னும் தளத்தில் என்னையும் சேரச்சொல்லி நண்பர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன? ஏது? என்று எதையும் தெரிந்து கொள்ளாமலேயே வந்த அழைப்பை, அதில் சொல்லியிருந்த இணைப்பைக் கிளிக் செய்து அதில் சேர்ந்துவிட்டேன்.

அதற்குப் பிறகுதான் துயரமாகிவிட்டது. தொல்லையாகிவிட்டது.

நான் ஆன்லைனில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து வைத்திருந்த சமயம், எனது Contact Folderல் இருந்த அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் (அதுசமயம் சுமார் 600 முகவரிகள்) யாரி’யின் சர்வர் எனக்குத் தெரியாமலேயே - என் அனுமதியில்லாமலேயே அள்ளிக் கொண்டுபோய் விட்டது. அத்தனை பேர்களுக்கும் நான் அனுப்பியதுபோலவே தங்கள் தளத்தில் சேரச்சொல்லி அழைப்பு அனுப்பிவிட்டது. எத்தனைபேர்கள் சேர்ந்தார்களோ தெரியாது.

ஆனால், தில்லியில் மிக உயர் பதவியில் இருக்கும் ஒரு வி.வி,ஐ.பி’க்கும் அந்த அழைப்பு செல்ல, அவர்கள் அலுவலகத்தில், அவருடைய முதன்மை உதவியாளர் டென்சனாகிவிட்டார்.

”நீ யார்? இந்த யாரி தளம் யாருடையது? எதற்காக ‘இவரை’ அதில் சேரச் சொல்கிறாய்? உனக்கு இவருடைய மின்னனஞ்சல் முகவரி எப்படிக் கிடைத்தது? 24 மணி நேரத்திற்குள் தகுந்த பதில அனுப்பவும். இல்லை என்றால், இந்த அழைப்புக் குறித்து, உன் பெயரில் சைபர் க்ரைமில் புகார் செய்ய நேரிடும்” என்று நீண்டதொரு மின்னஞ்சல் எனக்கு வந்தது.

நான் அவர்களுக்கு, என்னுடைய முழு முகவரி, தொலைபேசி எண்களுடன் தகுந்த பதில் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட அந்தப் பெரியவருடன் (V.V.I.P) தொலை பேசியில் பேசி மீண்டு வந்தேன். அது பெரிய கதை.

ஆகவே, இன்றும் பல முக்கியமான முகவரிகள் என்னுடைய Contact Folderல் இருப்பதால், நான் இதுபோன்று வரும் எந்த அழைப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதேபோல அழைப்பை நினைவுறுத்தி அடுத்தடுத்து வரும் தொடர் மின்னஞ்சல்களையும் கண்டுகொள்வதில்லை!

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. ஒரு முறை ஏற்பட்ட கசப்பான அனுபவமே போதும்!

ஆகவே, யாரும் எனக்கு இதுபோன்ற அனாமதேயத் தளங்களில் சேரச்சொல்லி எனக்கு அழைப்பு அனுப்பவேண்டாம். அழைப்பை நீங்கள் அனுப்பியிருந்தாலும் சரி, வாத்தியாரிடம் இருந்து பதிலைக் காணவில்லையே என்று நினைக்க வேண்டாம்.

இதை ஒரு தன்னிலை விளக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------
மேலதிகத்தகவல்கள்
Social networking sites are not only for you to communicate or interact with other people globally but, this is also one effective way for business promotion. A lot of business minded people these days are now doing business online and use these social networking sites to respond to customer queries. It isn't just a social media site used to socialize with your friends but also, represents a huge pool of information from day to day living.

A social network service focuses on building and reflecting of social networks or social relations among people, e.g., who share interests and/or activities. A social network service essentially consists of a representation of each user (often a profile), his/her social links, and a variety of additional services. Most social network services are web based and provide means for users to interact over the internet, such as e-mail and instant messaging. Although online community services are sometimes considered as a social network service in a broader sense, social network service usually means an individual-centered service whereas online community services are group-centered. Social networking sites allow users to share ideas, activities, events, and interests within their individual networks.

The main types of social networking services are those which contain category places (such as former school-year or classmates), means to connect with friends (usually with self-description pages) and a recommendation system linked to trust. Popular methods now combine many of these, with Facebook, Bebo and Twitter widely used worldwide; MySpace and LinkedIn being the most widely used in North America;[1] Nexopia (mostly in Canada);[2] Bebo,[3] Hi5, Hyves (mostly in The Netherlands), StudiVZ (mostly in Germany), iWiW (mostly in Hungary), Tuenti (mostly in Spain), Decayenne, Tagged, XING,[4] Badoo[5] and Skyrock in parts of Europe;[6] Orkut and Hi5 in South America and Central America;[7] and Friendster, Mixi, Multiply, Orkut, Wretch, renren and Cyworld in Asia and the Pacific Islands and Orkut and Facebook in India.

There have been some attempts to standardize these services to avoid the need to duplicate entries of friends and interests (see the FOAF standard and the Open Source Initiative), but this has led to some concerns about privacy.

Although some of the largest social networks were founded on the notion of digitizing real world connections, many other networks as seen in the List of social networking websites focus on categories from books and music to non-profit business to motherhood as ways to provide both services and community to individuals with shared interests.

வாழ்க வளமுடன்!

37 comments:

  1. தங்களது அனுபவ கருத்து பரிமாற்றத்துக்கு நன்றிகள் ஐயா!
    இந்த தொந்தரவுக்குத் தான் நானும் அவைகளை ஒதுக்கியே வந்துள்ளேன்.
    "மாற்றாரை உறவென்று நம்பவேண்டாம்"
    "மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்".

    நல்ல வேலை அந்த "தில்லை அம்பலத்தார்" கருணையால் தாங்கள் அளித்த விளக்கம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

    ReplyDelete
  2. தாங்கள் முற்றிலும் சொல்வது உண்மையே! இதே அனுபவம் என‌க்கும் உள்ளது.. face book லும் account ஐ close செய்துவிட்டேன்

    ReplyDelete
  3. தங்களின் அனுபவங்கள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே இருக்கிறது.

    www. geni. com
    என்று ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் உங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களை ஒரு
    மரம் போல அமைத்து அதில் பல கிளைகள் ஏற்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள், உங்கள்
    பெற்றோர்கள், உங்கள் உடன் பிறந்தவர்கள், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள்.
    அடுத்த நிலை, உங்கள் உடன் பிறந்தவர்களின் குடும்பங்கள், அவரவர் மனைவி, குழந்தைகள்,
    உங்கள் இல்லாளது பெற்றோர், அவரது கூடப்பிறந்தவர்கள், அவரவர் மனைவி குழந்தைகள்.

    இப்படி ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது ஒரு பெரிய ஆலமரம் போன்று ஒரு 300 முதல் 400 பேர் நமது
    குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்கள் இருப்பது தெரியவருகிறது.

    துவக்கத்தில், இது பயனளிப்பது போல் தோன்றினாலும், இந்த வலைத்தளத்தை நிர்வாகிப்பவர்கள்
    நமது விவரங்களை நாம் அறியாதவர்க்கும் விற்பனை செய்கிறார்கள் என்றும் கொஞ்சம் கொஞ்சமாகத்
    தெரிய வருகிறது.

    துயர சம்பவங்களின் துவக்கமே இது தான்.

    யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்

    என்ற வள்ளுவப்பெருந்தகையின் கூற்று உண்மையாக இருக்கிறது.

    இது என்ன, இது என்ன என்ற மனக்கூக்குரல்களால் உந்தப்பட்டு, வாழ்க்கையை நடத்தும்பொழுது
    துயரங்களும் வருகின்றன். தேவையற்றவையும் தயார் நிலையில் நம் கண் முன்னே வந்து
    நம்மை கவர்ந்து பின் தாங்கவொண்ணா துயரும் தருகின்றன்.

    நன்றாகச் சொன்னீர்கள்.
    நான் இந்த social net work
    எல்லாவற்றினையும் delete
    செய்துவிட்டேன்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. ஐயா, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நமது மாணவர்கள் யாரும் இது போன்ற அழைப்பை அனுப்புவதாக எண்ணவேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த VIP க்கு ஏற்ப்பட்ட நிலை தான் உங்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கும். உங்களின் இந்த அனுபவம் நமது மாணவர்கள் எச்சரிக்கையோடு இருக்க உதவும்.
    நன்றி..........
    புகழேந்தி

    ReplyDelete
  5. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    தங்களின் அனுபவங்கள் எங்களுக்கு வழிகாட்டி.
    தங்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-10

    ReplyDelete
  6. nowadays,truly those are for business purpose . Also if u use it as a community site,it will really be a time eating garbage.

    ReplyDelete
  7. உண்மைதான். எல்லோருக்குமே சொல்லி இப்படி எச்சரித்தது நல்லதே.
    பல சமயங்களில் சுய அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள மறந்து விடுவதும் ஒரு தவறே..
    எனக்கு இதே வகையில் சென்ற சில வருடங்களில் எனது business contacts rival party க்கு தெரிந்து விடக்காரணமாக அமைந்துவிட்டது..
    netlog லே பார்த்தால் உங்களுடன் நெட்வொர்க்கில் உள்ளவர் யார் யாருடன் இப்போது கடலை போட்டு கொண்டிருக்கிறார் என்பது போன்ற privacy சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரிய வருகிறது..(இதே நிலைதான் நமக்கும்..)so , privacy மொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது..
    இன்னும் சில சமயங்களில் (ஒருவேளை i p அட்ரஸ் கொண்டு கண்டுபிடிப்பார்களோ என்னவோ) வீட்டின் அட்ரஸ் கண்டுபிடிக்காத குறைதான்..உங்களின் ஊரிலிருந்து இத்தனை கிலோமீட்டர் வளையத்துக்குள் உள்ள மனதிற்கினியவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று அடிக்கடி pop-up வேறு..
    நைஜீரியன் 420 என்று ஒரு கும்பல் அடிக்கடி உங்களுக்கு lottery அடித்திருக்கிறது..என்கிற வகையிலே அட்ரஸ் trace பண்ண முயற்சிக்கிறார்கள்..
    இன்னும் சில கும்பல் மலேசியாவிலிருந்து மெயில்கள் அனுப்பி அவர்களின் வங்கியில் deposit பண்ணி எடுக்காமல் இறந்தவர் என்று சில கதைகள் கூறி அதனை நீங்கள் பெற்று கொள்ள வழி செய்கிறேன் பேர்வழி என்று..
    இப்படி cheating கும்பலிடம் சிக்காமல் இருப்பது நல்லது..

    ReplyDelete
  8. சரியான நேரத்தில் எழுதியியமைக்கு thanks sir

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. ////Alasiam G said...
    தங்களது அனுபவ கருத்து பரிமாற்றத்துக்கு நன்றிகள் ஐயா!
    இந்த தொந்தரவுக்குத் தான் நானும் அவைகளை ஒதுக்கியே வந்துள்ளேன்.
    "மாற்றாரை உறவென்று நம்பவேண்டாம்"
    "மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்".
    நல்ல வேலை அந்த "தில்லை அம்பலத்தார்" கருணையால் தாங்கள் அளித்த விளக்கம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.////////

    வாத்தியாரின் சொல் அம்பலத்தில் ஏறினால் சரி:-))))

    ReplyDelete
  11. //Jawahar said...
    தாங்கள் முற்றிலும் சொல்வது உண்மையே! இதே அனுபவம் என‌க்கும் உள்ளது.. face book லும் account ஐ close செய்துவிட்டேன்////

    எதற்காக இந்த சமூக சேவையில் இத்தனை ஆசாமிகள் இறங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தால், அதன் அர்த்தம் பிடிபடும்! அவர்கள் விரித்திருக்கும் வலையும் கண்ணில்படும்!

    ReplyDelete
  12. /////sury said...
    தங்களின் அனுபவங்கள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே இருக்கிறது.
    www. geni. com
    என்று ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் உங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களை ஒரு
    மரம் போல அமைத்து அதில் பல கிளைகள் ஏற்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள், உங்கள்
    பெற்றோர்கள், உங்கள் உடன் பிறந்தவர்கள், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள்.
    அடுத்த நிலை, உங்கள் உடன் பிறந்தவர்களின் குடும்பங்கள், அவரவர் மனைவி, குழந்தைகள்,
    உங்கள் இல்லாளது பெற்றோர், அவரது கூடப்பிறந்தவர்கள், அவரவர் மனைவி குழந்தைகள்.
    இப்படி ஏற்படுத்திக்கொள்ளும்பொழுது ஒரு பெரிய ஆலமரம் போன்று ஒரு 300 முதல் 400 பேர் நமது
    குடும்பத்தில் நெருங்கிய சொந்தங்கள் இருப்பது தெரியவருகிறது.
    துவக்கத்தில், இது பயனளிப்பது போல் தோன்றினாலும், இந்த வலைத்தளத்தை நிர்வாகிப்பவர்கள்
    நமது விவரங்களை நாம் அறியாதவர்க்கும் விற்பனை செய்கிறார்கள் என்றும் கொஞ்சம் கொஞ்சமாகத்
    தெரிய வருகிறது.
    துயர சம்பவங்களின் துவக்கமே இது தான்.
    யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்
    என்ற வள்ளுவப்பெருந்தகையின் கூற்று உண்மையாக இருக்கிறது.
    இது என்ன, இது என்ன என்ற மனக்கூக்குரல்களால் உந்தப்பட்டு, வாழ்க்கையை நடத்தும்பொழுது
    துயரங்களும் வருகின்றன். தேவையற்றவையும் தயார் நிலையில் நம் கண் முன்னே வந்து
    நம்மை கவர்ந்து பின் தாங்கவொண்ணா துயரும் தருகின்றன
    நன்றாகச் சொன்னீர்கள்.
    நான் இந்த social net work
    எல்லாவற்றினையும் delete
    செய்துவிட்டேன்.
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com/////

    உங்களுடைய எண்ணப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Pugazhenthi said...
    ஐயா, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நமது மாணவர்கள் யாரும் இது போன்ற அழைப்பை அனுப்புவதாக எண்ணவேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட அந்த VIP க்கு ஏற்ப்பட்ட நிலை தான் உங்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கும். உங்களின் இந்த அனுபவம் நமது மாணவர்கள் எச்சரிக்கையோடு இருக்க உதவும்.
    நன்றி..........
    புகழேந்தி/////

    ஆமாம். அதை உணர்ந்துதான், ஒரு எச்சரிக்கைக்காகப் பதிவில் எழுதினேன். அனைவருக்கும் இது உதவும் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
  14. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    தங்களின் அனுபவங்கள் எங்களுக்கு வழிகாட்டி.
    தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    வாத்தியாரின் முதல் கடமை நல்ல வழியைக்காட்டுவதுதானே சுவாமி! அதுதான் இந்த வழியில் உள்ள சிக்கல்களை எடுத்து எழுதியுள்ளேன்!

    ReplyDelete
  15. ////Jack Sparrow said...
    nowadays,truly those are for business purpose . Also if u use it as a community site,it will really be a time eating garbage.//////

    யூ ட்யூப்பை கூகுள்காரர்கள் விலைக்கு வாங்கியதுபோல, தங்களுடைய தளத்தையும் எவனாவது விலைக்கு வாங்குவான் என்ற நப்பாசையில் இந்தமாதிரி பாப்புலாரிட்டி பிஸினெஸ்ஸில் இரங்கியிருக்கலாம்!

    ReplyDelete
  16. /////minorwall said...
    உண்மைதான். எல்லோருக்குமே சொல்லி இப்படி எச்சரித்தது நல்லதே.
    பல சமயங்களில் சுய அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள மறந்து விடுவதும் ஒரு தவறே..
    எனக்கு இதே வகையில் சென்ற சில வருடங்களில் எனது business contacts rival party க்கு தெரிந்து விடக்காரணமாக அமைந்துவிட்டது..
    netlog லே பார்த்தால் உங்களுடன் நெட்வொர்க்கில் உள்ளவர் யார் யாருடன் இப்போது கடலை போட்டு கொண்டிருக்கிறார் என்பது போன்ற privacy சம்பந்தப்பட்ட விவரங்கள் தெரிய வருகிறது..(இதே நிலைதான் நமக்கும்..)so , privacy மொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது..
    இன்னும் சில சமயங்களில் (ஒருவேளை i p அட்ரஸ் கொண்டு கண்டுபிடிப்பார்களோ என்னவோ) வீட்டின் அட்ரஸ் கண்டுபிடிக்காத குறைதான்..உங்களின் ஊரிலிருந்து இத்தனை கிலோமீட்டர் வளையத்துக்குள் உள்ள மனதிற்கினியவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று அடிக்கடி pop-up வேறு..
    நைஜீரியன் 420 என்று ஒரு கும்பல் அடிக்கடி உங்களுக்கு lottery அடித்திருக்கிறது..என்கிற வகையிலே அட்ரஸ் trace பண்ண முயற்சிக்கிறார்கள்..
    இன்னும் சில கும்பல் மலேசியாவிலிருந்து மெயில்கள் அனுப்பி அவர்களின் வங்கியில் deposit பண்ணி எடுக்காமல் இறந்தவர் என்று சில கதைகள் கூறி அதனை நீங்கள் பெற்று கொள்ள வழி செய்கிறேன் பேர்வழி என்று..
    இப்படி cheating கும்பலிடம் சிக்காமல் இருப்பது நல்லது..//////

    வங்கியில் கிடக்கும் பில்லியன் டாலர்களை வெளியே கொண்டுவர உதவும்படி கேட்டு எனக்கும் தினமும் 2 மின்னஞ்சல்களாவது வரும். 4 கிரகங்கள் வக்கிரமாக இருக்கும் ஜாதகர்கள் செய்யும் வேலை அது! நான் அவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை மைனர்!

    ReplyDelete
  17. /////RAJA said...
    சரியான நேரத்தில் எழுதியமைக்கு thanks sir/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  18. நல்ல பயனுள்ள தகவல் அல்லது எச்சரிக்கை. வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இவ்வளவு நடந்திருக்கிறது. எனக்கு 6ல் 38 பரல்கள். இந்த மாதிரியான தொல்லைகள் நான் இருக்கும் திசையில் கூட தலை வைத்துப் படுப்பதில்லை. (தங்களை குறை சொல்லவில்லை சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்).

    எனக்கும் இது போல் சில மின்னஞ்சல்கள் அவ்வப்போது வரும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே பல நாட்களைக் கழித்து விட்டேன் (காரணம் ஞாபக மறதி. பிறகு என்பது வரவே வராது. Tomorrow comes never என்பது போல்).

    //4 கிரகங்கள் வக்கிரமாக இருக்கும் ஜாதகர்கள் செய்யும் வேலை அது//

    நான் பார்த்த 20க்கும் அதிகமான ஜாதகங்களில் ராமகிருஷ்ன பரமஹம்சருக்குதான் அதிக பட்சமாக 3 கிரகங்கள் வக்கிரமாக இருக்கின்றன.

    ReplyDelete
  19. Dear sir, A very good and useful advise for your students.( how to be careful)also with your experience. on behalf of your students thanks a lot sir. Sakthi ganesh.

    ReplyDelete
  20. //வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். //

    appadiya sir ?

    subbu thatha.

    ReplyDelete
  21. இது போன்ற தளங்களில் ரிஜிஸ்டர் செய்யும் போது உங்கள் யாஹூ/ஜிமெயில் பயணர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை கொடுக்காம இருந்தால் இது போன்ற சங்கடங்கள் வராது.

    அது மட்டும் இல்லாமல் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை இது போன்ற தளஙகளின் பாஸ்வேர்டாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இன்னும் சிறப்பு

    ReplyDelete
  22. இடங்களின் வலிமையை கணிக்க அஷ்டவர்கத்தை பார்த்து 28 க்கு மேலே உள்ளதா என்பதை வைத்து என்று முந்தைய பாடங்களில் (http://classroom2007.blogspot.com/2008/10/basic-lesson.html )சொல்லப்பட்டாலும் வேலைகள் (Portfolios) அடிப்படையில் கீழே சொல்லப்பட்டவற்றை
    இடங்களின் காரகன் யார் யார் என்று இடங்களின் அடிப்படையில் இப்படிப் பிரித்தாலும்
    தந்தைக்குக் காரகன் சூரியன் - 9 ஆம் இடம்
    உடல் காரகன் சூரியன் -1 ஆம் இடம்
    தாய்க்குக் காரகன் சந்திரன் - 4 ஆம் இடம்
    மன காரகன் சந்திரன் -1 ஆம் இடம்
    ஆயுள் காரகன் சனி - 8 ஆம் இடம்
    தொழில் காரகன் சனி - 10 ஆம் இடம்
    களத்திர காரகன் சுக்கிரன் -7 ஆம் இடம்
    தன (பணம்) காரகன் குரு -2 ஆம் இடம்
    புத்திரகாரகன் குரு -5ஆம் இடம்
    கல்வி, புத்தி காரகன் புதன் - 4 ,5ஆம் இடம்
    ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!
    ---
    வரையில் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதால் மீதமுள்ள 3 , 6 , 11 , 12 இடங்களின் காரகன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல்..(அஷ்டவர்க்க வலிமையை கணிக்க காரகனும் தேவைப்படுவதால் )
    ஜாதகத்தில் ஒரு வீடு (House) நன்றாக இருந்து நல்ல பலன்களைத்தர வேண்டு
    மென்றால் அந்த வீடும், வீட்டின் நாயகரும் (Lord of that house), அந்த வீட்டின்
    காரகரும் (authority) 28 பரல்களுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்.
    courtesy :
    http://classroom2007.blogspot.com/2008/05/formula-no1.html

    ReplyDelete
  23. ////ananth said...
    நல்ல பயனுள்ள தகவல் அல்லது எச்சரிக்கை. வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இவ்வளவு நடந்திருக்கிறது. எனக்கு 6ல் 38 பரல்கள். இந்த மாதிரியான தொல்லைகள் நான் இருக்கும் திசையில் கூட தலை வைத்துப் படுப்பதில்லை. (தங்களை குறை சொல்லவில்லை சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்).
    எனக்கும் இது போல் சில மின்னஞ்சல்கள் அவ்வப்போது வரும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே பல நாட்களைக் கழித்து விட்டேன் (காரணம் ஞாபக மறதி. பிறகு என்பது வரவே வராது. Tomorrow comes never என்பது போல்).
    //4 கிரகங்கள் வக்கிரமாக இருக்கும் ஜாதகர்கள் செய்யும் வேலை அது//
    நான் பார்த்த 20க்கும் அதிகமான ஜாதகங்களில் ராமகிருஷ்ன பரமஹம்சருக்குதான் அதிக பட்சமாக 3 கிரகங்கள் வக்கிரமாக இருக்கின்றன.////

    வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  24. ////Sakthi Ganesh said...
    Dear sir, A very good and useful advise for your students.( how to be careful)also with your experience. on behalf of your students thanks a lot sir. Sakthi ganesh.////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சக்தி கணேஷ்!

    ReplyDelete
  25. /////sury said...
    //வாத்தியாரே தங்கள் ஜாதகத்தில் 6ம் இடம் அல்லது 6ம் அதிபதி பலவீனமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். //
    appadiya sir ?
    subbu thatha//////

    வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்!

    ReplyDelete
  26. ////வெங்கட்ராமன் said...
    இது போன்ற தளங்களில் ரிஜிஸ்டர் செய்யும் போது உங்கள் யாஹூ/ஜிமெயில் பயணர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை கொடுக்காம இருந்தால் இது போன்ற சங்கடங்கள் வராது.
    அது மட்டும் இல்லாமல் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை இது போன்ற தளஙகளின் பாஸ்வேர்டாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இன்னும் சிறப்பு////

    உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி!

    ReplyDelete
  27. /////minorwall said...
    இடங்களின் வலிமையை கணிக்க அஷ்டவர்கத்தை பார்த்து 28 க்கு மேலே உள்ளதா என்பதை வைத்து என்று முந்தைய பாடங்களில் (http://classroom2007.blogspot.com/2008/10/basic-lesson.html )சொல்லப்பட்டாலும் வேலைகள் (Portfolios) அடிப்படையில் கீழே சொல்லப்பட்டவற்றை
    இடங்களின் காரகன் யார் யார் என்று இடங்களின் அடிப்படையில் இப்படிப் பிரித்தாலும்
    தந்தைக்குக் காரகன் சூரியன் - 9 ஆம் இடம்
    உடல் காரகன் சூரியன் -1 ஆம் இடம்
    தாய்க்குக் காரகன் சந்திரன் - 4 ஆம் இடம்
    மன காரகன் சந்திரன் -1 ஆம் இடம்
    ஆயுள் காரகன் சனி - 8 ஆம் இடம்
    தொழில் காரகன் சனி - 10 ஆம் இடம்
    களத்திர காரகன் சுக்கிரன் -7 ஆம் இடம்
    தன (பணம்) காரகன் குரு -2 ஆம் இடம்
    புத்திரகாரகன் குரு -5ஆம் இடம்
    கல்வி, புத்தி காரகன் புதன் - 4 ,5ஆம் இடம்
    ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்! ---
    வரையில் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதால் மீதமுள்ள 3 , 6 , 11 , 12 இடங்களின் காரகன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல்..(அஷ்டவர்க்க வலிமையை கணிக்க காரகனும் தேவைப்படுவதால் )
    ஜாதகத்தில் ஒரு வீடு (House) நன்றாக இருந்து நல்ல பலன்களைத்தர வேண்டு
    மென்றால் அந்த வீடும், வீட்டின் நாயகரும் (Lord of that house), அந்த வீட்டின்
    காரகரும் (authority) 28 பரல்களுக்கு மேல் கொண்டிருக்க வேண்டும்
    courtesy : http://classroom2007.blogspot.com/2008/05/formula-no1.html/////

    3 , 6 , 11 , 12 இடங்களின் காரகர்கள்: 3ற்கு தைரிய ஸ்தானம் = செவ்வாய்
    11 லாபஸ்தானம் = நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் குரு என்று வைத்துக்கொள்ளலாம்.
    6 & 12ற்கும் நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் சனி என்று வைத்துக்கொள்ளலாம்.
    என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்...ஹி..ஹி..!

    ReplyDelete
  28. ////SP.VR. SUBBAIYA said...
    3 , 6 , 11 , 12 இடங்களின் காரகர்கள்: 3ற்கு தைரிய ஸ்தானம் = செவ்வாய்
    11 லாபஸ்தானம் = நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் குரு என்று வைத்துக்கொள்ளலாம்.
    6 & 12ற்கும் நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் சனி என்று வைத்துக்கொள்ளலாம்.
    என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்...ஹி..ஹி..!//////

    நன்றி சார்..
    நானும் அதைத்தான் நினைத்தேன்..ஆனால் 11ஆம் இட காரகனாக புதன் இருப்பாரோ என்று நினைத்தேன்.. ஏற்கனவே புத்திர பாக்கியம்
    keen intelligence
    என்று Mr . குரு ஓவர்லோட் ஆகி விட்டபடியால் இந்த portfolio வை Mr .புதன் கவனிக்கிராரோ என்று நினைத்தேன்..

    ReplyDelete
  29. //////minorwall said...
    ////SP.VR. SUBBAIYA said...
    3 , 6 , 11 , 12 இடங்களின் காரகர்கள்: 3ற்கு தைரிய ஸ்தானம் = செவ்வாய்
    11 லாபஸ்தானம் = நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் குரு என்று வைத்துக்கொள்ளலாம்.
    6 & 12ற்கும் நூல்களில் குறிப்பிடப்படவில்லை = நீங்கள் சனி என்று வைத்துக்கொள்ளலாம்.
    என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்...ஹி..ஹி..!//////
    நன்றி சார்..
    நானும் அதைத்தான் நினைத்தேன்..ஆனால் 11ஆம் இட காரகனாக புதன் இருப்பாரோ என்று நினைத்தேன்.. ஏற்கனவே புத்திர பாக்கியம்
    keen intelligence
    என்று Mr . குரு ஓவர்லோட் ஆகி விட்டபடியால் இந்த portfolio வை Mr .புதன் கவனிக்கிராரோ என்று நினைத்தேன்../////

    நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்சப்படி, உபரிச் சம்பளம், போனஸ் எல்லாம். கிரகங்களுக்கு அதெல்லாம் இல்லை மைனர்!:-))))))

    ReplyDelete
  30. //நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்சப்படி, உபரிச் சம்பளம், போனஸ் எல்லாம். கிரகங்களுக்கு அதெல்லாம் இல்லை மைனர்!:-)))))) //

    ஓவர்லோடு சில சமயம் ஆகத்தான் செய்கிறது. ஆயினும் இந்த கிரகங்கள் அதை எப்படி சமாளிக்கின்றன‌
    என்பது தனி அத்தியாயமாக நீங்கள் எழுதவேண்டும்.

    உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள்
    செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?

    அதே போல், இன்னொரு உதாரணம். கும்பம் லக்னமா இருந்தா, சனி லக்னாதிபதி. அதே சமயம் 12ம் இடத்திற்கும்
    சொந்தக்காரன். லக்னாதிபதி வேலையா அல்லது விரயாதிபதி வேலையா ?

    இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய்
    வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்?

    ஒரு சமயம் பார்த்தால், இந்த கிரஹங்கள் படும் பாடு போதும் போதும் என்றிருக்கிறது. தனது ஸ்வபாவம் ஒன்று.
    தனது காரகத்வம், தான் இருக்கும் இடம், எல்லாத்திற்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போகவேண்டும்.

    எனக்கு என்னமோ மன மோஹன் சிங்க் நினைவுக்கு வருகிறார்.

    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  31. //உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள்
    செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?//

    instead of saying thula lagnathipathi, sukran, by mistake, I have stated as vrichika lagnathipathi.
    Please read it as sukran as lagnathipathi, in Thulam, also owns 8th house, and becomes ashtamathipathi. What role is he expected to play? Some say, first 10 years as Lagnathipathi, and next ten years as ashtamathipathi.
    It is correct?
    subbu

    ReplyDelete
  32. ////SP.VR. SUBBAIYA said...
    வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்!////

    /////sury said... இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய்
    வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்? ////
    எனக்கும் இதே கதைதான்.விருச்சிக லக்கினம்..6ஆம் அதிபதி செவ்வாய் 12லே. ஆனால் 12ஆம் வீட்டுக்கு 33பரல். சுய வர்கத்தில் 5 பரல்.(12 லே படுத்துக்கிடக்கும் இதே செவ்வாய் லக்கினாதிபதியாவதால் சுய வலிமை பெற்றவராகயிருக்க வேண்டுமே?.அதற்காக இந்த அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது..)அதே சமயம் பரிவர்த்தனை பெற்று 12ஆம் அதிபதி சுக்கிரனை தன் வீட்டுக்கு (லக்கினத்துக்கு ) காவலுக்கு அனுப்பியிருக்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால் இருவரும் லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் ஆகி விடுவதால் இருவரும் தன் வீடுகளை தன் பார்வையில் வைத்துக்கொண்டுள்ளனர்.
    அதே சமயம் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதனால் உச்ச நிலை அந்தஸ்தும் பெற்று பலம் வாய்ந்தவர்களாகிவிடுகிரார்கள்..
    ஆசிரியர் ஏற்கனவே சொல்லியிருக்கும் பதில்கள் படி mixed results என்ற நிலையே..
    செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை விவரங்கள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன..
    கோட்சார பலன்கள் கூட ஒத்துப்போகின்றன..செவ்வாய் தசை ஜனன கால கட்டங்களில் கழிந்து 3வருடங்களே மீதமானதால் அதுவும் குழந்தைகள் ஜாதகம் அந்த வயதில் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென்பதால் தசா பலன்கள் விவரம் அறிய முடியவில்லை..எனக்கு ஜாதக சாஸ்திரத்தில் ஈடுபாடு என்பது சமீப 2 ஆண்டுகளாகத்தான் என்பதால் செவ்வாய் ,சுக்கிரன் புக்தி இன்னும் சமீப காலங்களில் நடப்புக்கு வராததால் அனுபவித்து சொல்ல முடியவில்லை..

    ReplyDelete
  33. I do have this type of experience.

    I 'm having contacts only with gtalk and orkut, I 'm not at all a member of any other social networks.

    I agree with you.

    (Sorry for typing in English - No tamil typewritting software here)

    ReplyDelete
  34. /////sury said...
    //நமக்குத்தான் ஓவர்லோடு. பஞ்சப்படி, உபரிச் சம்பளம், போனஸ் எல்லாம். கிரகங்களுக்கு அதெல்லாம் இல்லை மைனர்!:-)))))) //
    ஓவர்லோடு சில சமயம் ஆகத்தான் செய்கிறது. ஆயினும் இந்த கிரகங்கள் அதை எப்படி சமாளிக்கின்றன‌
    என்பது தனி அத்தியாயமாக நீங்கள் எழுதவேண்டும்.
    உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள் செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?///////

    ஒருவருக்கு வீட்டில் குடும்பத்தலைவர் பதவி. அலுவலகத்தில் குமாஸ்தா. இரண்டையும் கலந்து - அதுவும் வாரத்தில் ஆறு நாட்கள் செய்வார் இல்லையா? அப்படித்தான் இரண்டு காரகத்துவங்களுக்கும் உள்ள பலன்கள் கலந்தே வரும். சிலசமயம் (பரல்கள் குறைவாக இருந்தால்) லக்கினாதிபதியாக இருந்து செய்ய வேண்டிய வேலையைக்கூட செய்யாமல் விட்டுவிடுவார்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    அதே போல், இன்னொரு உதாரணம். கும்பம் லக்னமா இருந்தா, சனி லக்னாதிபதி. அதே சமயம் 12ம் இடத்திற்கும்
    சொந்தக்காரன். லக்னாதிபதி வேலையா அல்லது விரயாதிபதி வேலையா ?///////

    ஜாதகத்தில் சனி வலுவாக இருந்தால் (கேந்திர, திரிகோணங்களில் இருந்தால்) வெற்றிகரமான வாழ்க்கை. இல்லையென்றால் ஏமாற்றங்கள் நிறைந்த வாழ்க்கை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய் வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்?
    ஒரு சமயம் பார்த்தால், இந்த கிரஹங்கள் படும் பாடு போதும் போதும் என்றிருக்கிறது. தனது ஸ்வபாவம் ஒன்று. தனது காரகத்வம், தான் இருக்கும் இடம், எல்லாத்திற்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போகவேண்டும்.
    எனக்கு என்னமோ மன மோஹன் சிங்க் நினைவுக்கு வருகிறார்.
    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com/////

    அவரும் இப்படித்தான் கலவையாகத்தான் தனது வேலைகளைச் செய்ய முடியும் - கூட்டணி அரசு இல்லையா?

    ReplyDelete
  35. /////sury said...
    //உதாரணமாக, விருச்சிக லக்னாதிபதி, சுக்ரன் இவன் 8ம் வீட்டுக்கு அதிபதியாகிறான். லக்னாதிபதியாக காரியங்கள்
    செய்வானா அல்லது அஷ்டமாதிபதியாக செய்வானா ? எப்ப லக்னாதிபதி ? எப்ப அஷ்டமாதிபதி ?//
    instead of saying thula lagnathipathi, sukran, by mistake, I have stated as vrichika lagnathipathi.
    Please read it as sukran as lagnathipathi, in Thulam, also owns 8th house, and becomes ashtamathipathi. What role is he expected to play? Some say, first 10 years as Lagnathipathi, and next ten years as ashtamathipathi.
    It is correct?
    subbu/////

    Mixed results!

    ReplyDelete
  36. minorwall said...
    ////SP.VR. SUBBAIYA said...
    வரும் ஆனால் வராது என்னும் நிலைமை. பலவீனமாகவும் இருக்கிறார். அதுத்துடன் பலமாகவும் இருக்கிறார். ஆமாம் 6ஆம் அதிபதி 12ல் இருக்கிறார். ஆனால் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார்!////

    /////sury said... இன்னொரு உதாரணம். விருச்சிக லக்னம். செவ்வாய் லக்னாதிபதி. 6ம் இடத்திற்கும் இவனே அதிபதி. செவ்வாய்
    வலுத்து உச்சத்தில் அதாவது மகரத்தில் இருப்பதாக இருந்தால், செவ்வாய் தசை எப்படி இருக்கும்? ////
    எனக்கும் இதே கதைதான்.விருச்சிக லக்கினம்..6ஆம் அதிபதி செவ்வாய் 12லே. ஆனால் 12ஆம் வீட்டுக்கு 33பரல். சுய வர்கத்தில் 5 பரல்.(12 லே படுத்துக்கிடக்கும் இதே செவ்வாய் லக்கினாதிபதியாவதால் சுய வலிமை பெற்றவராகயிருக்க வேண்டுமே?.அதற்காக இந்த அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது..)அதே சமயம் பரிவர்த்தனை பெற்று 12ஆம் அதிபதி சுக்கிரனை தன் வீட்டுக்கு (லக்கினத்துக்கு ) காவலுக்கு அனுப்பியிருக்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால் இருவரும் லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் ஆகி விடுவதால் இருவரும் தன் வீடுகளை தன் பார்வையில் வைத்துக்கொண்டுள்ளனர்.
    அதே சமயம் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதனால் உச்ச நிலை அந்தஸ்தும் பெற்று பலம் வாய்ந்தவர்களாகிவிடுகிரார்கள்..
    ஆசிரியர் ஏற்கனவே சொல்லியிருக்கும் பதில்கள் படி mixed results என்ற நிலையே..
    செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை விவரங்கள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன..
    கோட்சார பலன்கள் கூட ஒத்துப்போகின்றன..செவ்வாய் தசை ஜனன கால கட்டங்களில் கழிந்து 3வருடங்களே மீதமானதால் அதுவும் குழந்தைகள் ஜாதகம் அந்த வயதில் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென்பதால் தசா பலன்கள் விவரம் அறிய முடியவில்லை..எனக்கு ஜாதக சாஸ்திரத்தில் ஈடுபாடு என்பது சமீப 2 ஆண்டுகளாகத்தான் என்பதால் செவ்வாய் ,சுக்கிரன் புக்தி இன்னும் சமீப காலங்களில் நடப்புக்கு வராததால் அனுபவித்து சொல்ல முடியவில்லை../////

    அதனால் என்ன? வரும்போது பாருங்கள்!

    ReplyDelete
  37. ////சிவமுருகன் said...
    I do have this type of experience.
    I 'm having contacts only with gtalk and orkut, I 'm not at all a member of any other social networks.
    I agree with you.
    (Sorry for typing in English - No tamil typewritting software here)////

    நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com