28.6.10

எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

“இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே!”
------ரமண மகரிஷி

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

------திருவள்ளுவர்
-----------------------------------------------------------------------------
குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.
------------------------------------------------------------------------
அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு.

மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!
------------------------------------------------------------------------------------------------------
“வாத்தி (யார்), எதற்காக இந்தக் கதை?”

“இன்னுமா தெரியவில்லை? அடுத்த தொடர் பாடத்திற்கான முன்னோட்டம் தான் இது? ஆமாம், அடுத்த பாடம், நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். விரிவாக எழுதிப் பதிவிட உள்ளேன். அது ஜூலைத் திங்கள் முதல் தேதியில் இருந்து துவங்கும்!”

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

29 comments:

  1. நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. என்ன புரிந்து கொண்டேன் . . .

    அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் - . . .

    தன் பணிகளிலேயே கவணமாக இருக்கின்றான் (சுயநலவாதி) கிருஷ்ணன் என்பதை (ஒரு மாணவனாக)புரிந்து கொண்டேன்,

    யார் எந்நிலையில் இருந்தாலும் தம் பணிகள் செயல்களிலேயே உறுதியாக இருப்பவர்கள் என்றுமே மதிக்கப்படுவதில்லை என்பதை (ஆலோசகராக)புரிந்து கொண்டேன்

    ReplyDelete
  3. எட்டாம் இடம் பற்றி மின் அஞ்ச‌லில்தான் பாடம் அனுப்பப் போவதாக முன்னர்
    கூறியுள்ளீர்கள்.இப்போது திறந்த பாடமாக வெளியிடுகிறீர்கள். எப்படி வந்த‌து இந்த மாற்றம்?.

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    "உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை”---
    *- - - - - - - - - -
    “உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்" --பகவான் கிருஷ்ணர்
    - - - -- - - - - -- - - - - -
    இவைகள் என்றும் மனதில் நிலைத்து இருக்க வேண்டிய போதனைகள் .
    மரணம் எப்படி வரும்?,என்றைக்கு வரும்?
    இது மறைத்து வைக்கப்பட்டுள்ள உண்மையாகும்.
    தன்னால் மற்றவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவிட முடியுமோ அவற்றினை காலமிருக்கும்போதே,விரைந்து உதவுவதை செயல்படுத்தி விட வேண்டும்.

    "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது"

    சுய நலம் கருதாமல்,எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி தான் பெற்றுள்ள அனுபவங்கள்,கற்ற கலைகள் யாவற்றையும்
    அடுத்தவர்களுக்குத் தங்களைப்போல் போதிப்பவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்ப்பார்கள்.
    தான் கற்ற கலைகள் தன்னோடு மறைவதனால் தனக்கோ மற்றவர்களுக்கோ எவ்விதத்திலும் உதவிடப் போவதில்லை.
    தகுந்த நேரத்தில் கற்ற கலைகளை மற்றவர்களுக்குப் போதிக்காததால்,ஆதி காலத்தில் சுலபமாகப் பயனளித்த வைத்திய முறைகள்,ஜோதிடக்கலை,நன்மையளிக்கும் நோய்களைத் தீர்க்கும் மந்திர முறைகள் இன்னும் பலவும் மறைந்துப் போய் விட்டன.

    அதனால்தான் "காலம் பொன்போன்றது",

    "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்",

    "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"

    என்றெல்லாம் கூறியுள்ளார்கள் போலும்.
    - - - - - - - - - -- - - - - - - -
    எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். விரிவாக எழுதிப் பதிவிட உள்ளமைக்கு மிக்க நன்றி.


    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-28

    ReplyDelete
  5. its a nice story. i like krishna for his wittyness & rajathanthiram..in mahabaratham . ...really nice story...

    ReplyDelete
  6. ஐயா, வணக்கம்...!
    கிருஷ்ண பகவானின் போதனைகள் வேண்டுமானால் வீணாகலாம், ஆனால் தங்கள் போதனைகள் ஒருபோதும் வீணாகாது குருதேவா.. எட்டாமிடத்துக்கு ஒரு சிறப்பான முன்னோட்டம் தந்துவிட்டீர்கள்.. தங்கள் மாணவர்களை மனதளவில் சிறப்பாக தயார்படுத்திவிட்டீர்கள்.. ஏற்கனவே எட்டாமிடத்தின் பாடங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.. தற்போது என் ஆவல் மேலும் கூடிவிட்டது....

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  7. THANKS SIR FOR POSTING ON THE LESSONS OF 8TH HOUSE, I HOPE AND PRAY TO GOD THAT U WILL NOT GET DISTRUBED BY THE MAILS WITH PERSONAL ISSUES BY THE FELLOW STUDENTS ON THIS ISSUE AND EVERY ONE JUST KEEP LEARNING HERE

    ReplyDelete
  8. வருது...வருது..விலகு..விலகு.....வேங்கை வெளியே வருது....

    " ஐயா, நீங்கள் சொன்னது போல் அமைப்பு, எனது ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் உள்ளது. ஆகவே நான் சீக்கிரம் டிக்கெட் வாங்கிவிடுவேனா?" என்று யாரும் கேட்கக்கூடாது என்றுதான் கிருஷ்ண உபதேசமா?..நல்லது...நாங்க ரெடி..ஆரம்பிங்க ஐயா.

    அன்புடன்,
    செங்கோவி

    ReplyDelete
  9. /////Alasiam G said...
    நன்றிகள் ஐயா!////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. ////visu said...
    என்ன புரிந்து கொண்டேன் . . .
    அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் - . . .
    தன் பணிகளிலேயே கவனமாக இருக்கின்றான் (சுயநலவாதி) கிருஷ்ணன் என்பதை (ஒரு மாணவனாக)புரிந்து கொண்டேன்,
    யார் எந்நிலையில் இருந்தாலும் தம் பணிகள் செயல்களிலேயே உறுதியாக இருப்பவர்கள் என்றுமே மதிக்கப்படுவதில்லை என்பதை (ஆலோசகராக)புரிந்து கொண்டேன்/////

    என்ன சுவாமி குழப்பம்? பகவான் சுயநலவாதியா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

    ReplyDelete
  11. //////kmr.krishnan said...
    எட்டாம் இடம் பற்றி மின் அஞ்ச‌லில்தான் பாடம் அனுப்பப் போவதாக முன்னர்
    கூறியுள்ளீர்கள்.இப்போது திறந்த பாடமாக வெளியிடுகிறீர்கள். எப்படி வந்த‌து இந்த மாற்றம்?.///////

    புத்தகத்திற்காக எட்டாம் பகுதி வேண்டும். அத்துடன் அதிக வேலைப்பளு காரணமாக மின்னஞ்சல் பாடங்களை நிறுத்திவைத்திருக்கிறேன். அதன் காரணமாகவே எட்டாம் வீட்டைப் பற்றிய பாடத்தை வலைப்பூவிலேயே ஏற்றுவது என்று முடிவு செய்துள்ளேன்

    ReplyDelete
  12. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    "உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை”---
    *- - - - - - - - - -
    “உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்" --பகவான் கிருஷ்ணர்
    - - - -- - - - - -- - - - - -
    இவைகள் என்றும் மனதில் நிலைத்து இருக்க வேண்டிய போதனைகள் .
    மரணம் எப்படி வரும்?,என்றைக்கு வரும்?
    இது மறைத்து வைக்கப்பட்டுள்ள உண்மையாகும்.
    தன்னால் மற்றவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவிட முடியுமோ அவற்றினை காலமிருக்கும்போதே,விரைந்து உதவுவதை செயல்படுத்தி விட வேண்டும்.
    "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது"
    சுய நலம் கருதாமல்,எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி தான் பெற்றுள்ள அனுபவங்கள்,கற்ற கலைகள் யாவற்றையும்
    அடுத்தவர்களுக்குத் தங்களைப்போல் போதிப்பவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்ப்பார்கள்.
    தான் கற்ற கலைகள் தன்னோடு மறைவதனால் தனக்கோ மற்றவர்களுக்கோ எவ்விதத்திலும் உதவிடப் போவதில்லை.
    தகுந்த நேரத்தில் கற்ற கலைகளை மற்றவர்களுக்குப் போதிக்காததால்,ஆதி காலத்தில் சுலபமாகப் பயனளித்த வைத்திய முறைகள்,ஜோதிடக்கலை,நன்மையளிக்கும் நோய்களைத் தீர்க்கும் மந்திர முறைகள் இன்னும் பலவும் மறைந்துப் போய் விட்டன.
    அதனால்தான் "காலம் பொன்போன்றது",
    "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்",
    "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"
    என்றெல்லாம் கூறியுள்ளார்கள் போலும்.
    - - - - - - - - - -- - - - - - - -
    எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். விரிவாக எழுதிப் பதிவிட உள்ளமைக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  13. //////Jack Sparrow said...
    its a nice story. i like krishna for his wittyness & rajathanthiram..in mahabaratham . ...really nice story...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Uma said...
    eagerly awaiting/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. /////M. Thiruvel Murugan said...
    ஐயா, வணக்கம்...!
    கிருஷ்ண பகவானின் போதனைகள் வேண்டுமானால் வீணாகலாம், ஆனால் தங்கள் போதனைகள் ஒருபோதும் வீணாகாது குருதேவா.. எட்டாமிடத்துக்கு ஒரு சிறப்பான முன்னோட்டம் தந்துவிட்டீர்கள்.. தங்கள் மாணவர்களை மனதளவில் சிறப்பாக தயார்படுத்திவிட்டீர்கள்.. ஏற்கனவே எட்டாமிடத்தின் பாடங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.. தற்போது என் ஆவல் மேலும் கூடிவிட்டது....
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்//////

    பகவானின் போதனைகள் நாம் எடுத்துக்கொள்ளாமல் விட்டால் மட்டுமே வீணாகும்!

    ReplyDelete
  16. ///Ram said...
    THANKS SIR FOR POSTING ON THE LESSONS OF 8TH HOUSE, I HOPE AND PRAY TO GOD THAT U WILL NOT GET DISTRUBED BY THE MAILS WITH PERSONAL ISSUES BY THE FELLOW STUDENTS ON THIS ISSUE AND EVERY ONE JUST KEEP LEARNING HERE/////

    ஆமாம், அனைவரும் முழுப்பாடம் முடியும்வரை சொந்த ஜாதகத்தைவைத்துக் கேள்வி கேட்காமல் இருப்பது நல்லது!

    ReplyDelete
  17. ///SHEN said...
    வருது...வருது..விலகு..விலகு.....வேங்கை வெளியே வருது....
    " ஐயா, நீங்கள் சொன்னது போல் அமைப்பு, எனது ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் உள்ளது. ஆகவே நான் சீக்கிரம் டிக்கெட் வாங்கிவிடுவேனா?" என்று யாரும் கேட்கக்கூடாது என்றுதான் கிருஷ்ண உபதேசமா?..நல்லது...நாங்க ரெடி..ஆரம்பிங்க ஐயா.
    அன்புடன்,
    செங்கோவி////

    ஆமாம். முழுப் பாடம் முடியும்வரை கேள்வி கேட்காமல் படித்துத் தெளிதல் நல்லது!

    ReplyDelete
  18. Nalla pathivu , padipatharkkum nenchil pathipatharkkum ,..( Intresting Topic )ban

    ReplyDelete
  19. ஆயுள் ஸ்தானமான 8ம் வீட்டப் பற்றிய பாடத்திற்கு நல்லதொரு முன்னோட்டம் கொடுத்திருக்கிறீர்கள். உயிர் இழப்பு உட்பட பல இழப்புகளுக்குக் காரணமாக இருக்கக் கூடிய இடம். House for occult studies என்றும் படித்திருக்கிறேன். occult studies என்னை அதிகம் கவர்ந்திழுத்திருக்கின்றன. அதற்கான பலமான கிரக நிலைகளும் என் ஜாதகத்தில் இருக்கிறது. 8ம் இடம் அதன் அதிபதியின் அனுகிரகம் இல்லாமல் ஜோதிடம் போன்றவை கைவருவது கடினம். நான் சொல்வது ஒரு பொருட்டே அல்ல. தாங்கள் சொல்லப் போவதுதான் முக்கியம்.

    ReplyDelete
  20. Nice explanation.
    Congrats... Continue...

    ReplyDelete
  21. //////Soundarraju said...
    Nalla pathivu , padipatharkkum nenchil pathipatharkkum ,..( Intresting Topic )ban////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////ananth said...
    ஆயுள் ஸ்தானமான 8ம் வீட்டப் பற்றிய பாடத்திற்கு நல்லதொரு முன்னோட்டம் கொடுத்திருக்கிறீர்கள். உயிர் இழப்பு உட்பட பல இழப்புகளுக்குக் காரணமாக இருக்கக் கூடிய இடம். House for occult studies என்றும் படித்திருக்கிறேன். occult studies என்னை அதிகம் கவர்ந்திழுத்திருக்கின்றன. அதற்கான பலமான கிரக நிலைகளும் என் ஜாதகத்தில் இருக்கிறது. 8ம் இடம் அதன் அதிபதியின் அனுகிரகம் இல்லாமல் ஜோதிடம் போன்றவை கைவருவது கடினம். நான் சொல்வது ஒரு பொருட்டே அல்ல. தாங்கள் சொல்லப் போவதுதான் முக்கியம்.//////

    எந்தப் படிப்பாக இருக்கட்டும், புதனின் ஆசீர்வாதம் இல்லாமல் புத்தியில் ஏறாது. உங்களுக்குதான் புதனின் ஆசி இருக்கிறதே! நீங்கள் படிக்கலாம் ஆனந்த்!

    ReplyDelete
  23. //////CJeevanantham said...
    Nice explanation.
    Congrats... Continue...//////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  24. very good lesson !. have been learning from your blog for a long time. keep up the efforts !.

    ReplyDelete
  25. i have been following your blogsite for more than six months !. it has been very useful to me and i have learned a lot. ofcourse, there is lot to learn yet. i want to thank you as my guru .- murali

    ReplyDelete
  26. அய்யா !, உங்கள் வலை பதிவுகளை ஆறு மாதங்களுக்கு மேலாக வாசித்து கொண்டிருக்கிறேன் !. நானும் உங்கள் மாணவனாக சேர விரும்புகிறேன் !, அதற்கு என்ன செய்ய வேண்டும் .

    ReplyDelete
  27. ////Blogger murali krishna g said...
    1
    very good lesson !. have been learning from your blog for a long time. keep up the efforts !.
    2
    i have been following your blogsite for more than six months !. it has been very useful to me and i have learned a lot. ofcourse, there is lot to learn yet. i want to thank you as my guru .- murali
    3
    அய்யா !, உங்கள் வலை பதிவுகளை ஆறு மாதங்களுக்கு மேலாக வாசித்து கொண்டிருக்கிறேன் !. நானும் உங்கள் மாணவனாக சேர விரும்புகிறேன் !, அதற்கு என்ன செய்ய வேண்டும் /////.

    மின்னஞ்சல் மூலம் எழுத வேண்டும். இங்கே எழுதினால் எப்படிப் பதில் சொல்ல முடியும்? என் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  28. All syllabus are super.very intresting to read

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com