14.6.10

தஹி வடா என்றால் தெரியுமா?

-----------------------------------------------------------------------------
தஹி வடா என்றால் தெரியுமா?

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று

தஹி வடா என்றால் என்ன?

நமக்குத் தெரியாது. அது வடமொழிச் சொல் அதனால் தெரியாது.

தயிர்வடை என்றால் தெரியும். அதற்குப் பொருள் அதுதான். அதுபோல ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத பல சொற்கள் உள்ளன. முடிந்தவரை அவற்றைத்  தொகுத்து, சொல் விளக்கத்துடன் தருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இன்று முதல் பகுதி. படித்து மகிழுங்கள். பயனடையுங்கள். முடிந்தவர்கள் மனனம் செய்து வையுங்கள். அது உங்களின் ஜோதிட அறிவை மேம்படுத்தும்!
-----------------------------------------------------------------------------------------
பஞ்சாங்கம்:

நாள்(திகதி அல்லது தேதி, கிழமை), நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உள்ளடக்கியது பஞ்சாங்கம் ஆகும். பஞ்ச + அங்கம் (ஐந்து பகுதிகள் - Five Parts) = பஞ்சாங்கம்!

1.
நட்சத்திரம்

நமக்கு வேண்டிய ஒருவரின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள அவர் பிறந்த தமிழ் மாதத்தின் பெயர் மற்றும் நட்சத்திரத்துடன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறந்த தேதியை (Date of birth)வைத்துக் கொண்டாடுவது சரியாக வராது. கேக் வெட்டுவதற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும். அது வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்து விட்டுப்போனது. நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, முடிந்தால் அர்ச்சனை செய்து மகிழ்வதற்கு நட்சத்திரம்தான் முக்கியம். அதுதான் சரியான பிறந்த நாள்.

நீங்கள் மாசி மகத்தன்று பிறந்தவர் என்றால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நட்சத்திரத்தன்று பிறந்த நாளைக் கொண்டாடுங்கள். பிறந்த தேதி என்றால் மாசி மகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேதியில் வரும். நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் வராது. அதை நினைவில் கொள்ளுங்கள்.

(எதற்காக வாத்தியார் மகம் நட்சத்திரம்? தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும். மகத்தில் பிறந்தவர்கள் தவம் செய்து பெறப்பட்டவர்கள் என்று பொருள்)
---------------------------------------------------------------------------------
2.
திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது.

மாதம் 30 திதிகள்.

ஒவ்வொரு மாதமும் - அதாவது 30 தினங்களுக்கு ஒருமுறை சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். 0 பாகையில் இரண்டும் இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசையில் இருந்து பதினைந்தாம் நாள் அவ்விரண்டு கிரகங்களும் எதிர் எதிராக இருக்கும். 180 பாகை வித்தியாசத்தில் இருக்கும். (ஒரு சுற்று வட்டத்திற்கு 360 பாகைகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!)

அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 15 திதிகள் (அவற்றை வளர்பிறைத் திதிகள் என்பார்கள். சிலர் வளர் பிறைத் தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் மட்டுமே சுபகாரியங்களைச் செய்வார்கள். சுபகாரியம் என்றால் திருமணம். புதுமனை புகுவிழா, புதுத் தொழில் துவங்கும் நன்னாள் போன்றவை)

பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை 15 திதிகள்(அவைகள் தேய்பிறைத் திதிகள் எனப்படும்)

1. பிரதமை, 2. துவிதியை, 3. திரிதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13, திரயோதசி, 14. சதுர்த்தசி

அமாவாசை + வளர்பிறைத் திதிகள் 14 + பெளர்ணமி + தேய்பிறைத் திதிகள் 14 = ஆக மொத்தம் 30 திதிகள். கணக்கு சரியாகிவிட்டதா?

ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அது என்ன?

அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட வேண்டும். தந்தையார் அல்லது தாயார் மேல் உலகம் சென்றிருந்தால், அவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும். திதி கொடுக்க வேண்டும்.

சதுர்த்தி, விநாயகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
பஞ்சமி, உலக நாயகி அன்னை பராசக்தியை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சஷ்டி, சேவற்கொடியோனை, (அதாங்க நம்ம வேலுச்சாமி), முருகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
அஷ்டமி, கோகுலக் கிருஷ்ணனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
நவமி, ராம அவதாரத்தை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
ஏகாதசி, துவாதசி, ஆகிய இரண்டு திதிகளும் செல்வத்தை அள்ளித்தரும் பள்ளிகொண்ட பெருமாளை வணங்குதற்கு ஏற்ற திதிகளாகும்.
திரயோதசி, எம்பெருமான் ஈசனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சதுர்த்தசி, சிவனையும், கணபதியையும் ஒரு சேர வணங்குதற்கு ஏற்ற திதியாகும்

விநாயகரில் துவங்கி, விநாயகரிலேயே முடிவதைக் கவனியுங்கள்

பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும். அத்துடன் எல்லா தெய்வங்களையும் வணங்கி மகிழ ஏற்ற திதியாகும்.

திதிகளின் பயன் அவ்வளவுதானா?

இல்லை! அதி முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. ஒருவரின் தந்தை அல்லது தாயார் இறந்துவிட்டால் அவர்களுடைய இறந்த நாளைத் திதியை வைத்துத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆண்டுதோறும் அந்த நாளில் ஆண்டுத்திதி (வருஷாப்தி) கொடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். அல்லது தட்டில் பத்துப் பத்து டாலராக இரண்டு பேருக்குக் கொடுக்கலாம் (இது தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு)

எந்தத் தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையில் இன்ன திதி என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.

முதலில் வந்த பின்னூட்டங்களில் வாரம், யோகம் மற்றும் கரணம் பற்றி எழுதும்படி கேட்டுள்ளார்கள். நாளை அதை எழுதுகிறேன்
--------------------------------------------------------------------------------------------
3
கேந்திரம்: 1, 4, 7 மற்றும் 10 வீடுகள் கேந்திர வீடுகள் எனப்படும்.

4
கேந்திர அதிபதி: 1, 4, 7 மற்றும் 10 வீடுகளுக்கு உரிய கிரகங்களைக் குறிக்கும்.

5
திரிகோணம்: 1, 5 மற்றும் 9 ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும்.

6
திரிகோண அதிபதி 1, 5 மற்றும் 9 ஆம் வீடுகளுக்கு உரிய கிரகங்களைக் குறிக்கும்.

கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ள கிரகங்களால் நன்மையான பலன்கள் கிடைக்கும். அவைகள் தீய கிரகங்கள் என்றாலும் கிடைத்த கேந்திர அல்லது திரிகோணப் பதவியால் நன்மைகளையே அதிகமாகச் செய்யும்.
----------------------------------------------------------

7 பார்வை:
(Aspect, look, glance) கிரகத்தின் பார்வையைக் குறிக்கும். கிரகங்களுக்கு ஏழாம் பார்வை உண்டு. குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் கூடிதலாக மேலும் 2 பார்வைகள் உண்டு. குருவிற்கு - 5, 9, செவ்வாய்க்கு 4, 8, சனிக்கு 3, 10ஆம் பார்வை கூடுதலாக உண்டு.

நன்மையான கிரகங்களின் பார்வையால், நன்மைகள் கிடைக்கும். தீய கிரகங்களின் பார்வையால் தீமைகளே அதிகம் இருக்கும்
------------------------------------------------------

8
கெட்டுப்போன நிலைமை (Affliction): சாம்பாரில் மறந்து இரண்டுமுறை உப்பைப் போட்டால் என்ன ஆகும்? கெட்டுப்போய்விடும். ரசித்துச் சாப்பிட முடியாது. நன்றாகப் படிக்கும் பையன், ஒரு போக்கிரியுடன் சேர்ந்து சுற்றினால் என்ன ஆகும்? கவனம் சிதறும். பெயர் கெடும். ஒழுங்காகப் படித்துத் தேர முடியாது. அப்படித்தான் ஒரு சுப கிரகம் அல்லது நன்மையைச் செய்யக்கூடிய கிரகம், ஒரு தீய கிரகத்துடன் சேர்ந்து ஜாதகத்தில் இருப்பது நன்மை பயக்க்ஊடியது அல்ல! அதைத்தான் கெட்டுப்போய்விட்டது என்பார்கள். சேர்ந்தால் மட்டும் அல்ல பார்த்தாலும் அதே நிலைமைதான்.

Affliction - A planet that is aspected by or is associated with malefics is said to be afflicted.
Affliction - Affliction refers to a condition or cause of suffering. A planet that is aspected by or is associated with malefics is said to be afflicted.
---------------------------------------------

9
அஸ்தமனம். (Combustion)

அஸ்தமனமாகும் கிரகம் அடிபட்டுப்போகும். அதனால் உரிய பலன்களை ஜாதகனுக்குத் தரமுடியாது.

சூரியனுக்கு அருகில் பத்து பாகைக்குள் வரும் கிரகம் அந்தமனமாகிவிடும்.

Combustion means a planet losing its strength, so if a chart has 3 planets combust, means the person really loses the major fruits of life.
---------------------------------------

10
சங்கமம்: (Conjunction) சங்ககமாகுதல், சங்கமித்தல். உங்களுக்கும் புரியும்படி சொன்னால் ஈறுடல் ஓருடலாக இருக்கும் நிலைமை அதாவது இரண்டு கிரகங்கள் 0 பாகையில் இருக்கும் நிலைமை.

Two planets having the same longitude are said to be in conjunction.

சங்கமித்தால் சங்கமித்ததோடு சரி. ஜாதகனுக்கு நன்மைகள் இருக்காது.
--------------------------------------

11
சேர்க்கை (Association): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் கூட்டாக ஒரு ராசியில் இருக்கும் நிலைமை. உங்களுக்கும் புரியும்படி சொன்னால் ஒருவர் மேல் ஒருவர் படாமல் தள்ளி நிற்கும் நிலைமை.

அப்படித் தள்ளி நின்று சேர்க்கையாக இருந்தால், ஜாதகனுக்கு அவர்கள் இருவரும் கூட்டாக பல நன்மைகளைச் செய்வார்கள். யோகத்தைத் தருவார்கள். சச்சினும், தோனியும் சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினால் எப்படி இருக்கும்? பலன்கள் அப்படியிருக்கும்!

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதி தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

40 comments:

  1. பொறுமையாக அடிப்படைப்பாடத்தை நினை ஊட்டியதற்கு மிக்க நன்றி.எல்லாம் தெரிந்ததுதானே என்ற எண்ணம் இல்லாமல் கருத்து ஊன்றிப் படித்தேன்.உபயோகமாக இருந்தது.

    தாஹி இல்லை! தஹி என்றால் தயிர்.
    பஞ்சு+அங்கம் இல்லை. பஞ்ச+ அங்கம்=பஞ்சாங்கம்‌

    வாரம், கரணம், யோகம் பற்றியும் சிறு குறிப்பு கொடுத்தால் தான் கட்டுரை முழுமை பெறும்.

    ReplyDelete
  2. Dear Sir

    Thanks Sir.

    Thanks to know all astro related words.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பஞ்சாங்கம் விபரம், மற்றும் 1.நட்சத்திரம்,2.திதி,3.கேந்திரம்,4.கேந்திரஅதிபதி,5.திரிகோணம்,6.திரிகோண அதிபதி, 7.பார்வை,8.கெட்டுப்போன நிலைமை,9.அஸ்தமனம்,10.சங்கமம்,11.
    சேர்க்கை-இவைகளுக்கான விளக்கங்கள்,உதாரணங்களுடன் நன்றாகப் புரியும்படி உள்ளது. ----
    தங்களுக்கு மிக்க நன்றி.

    -----இதே போல்-யோகம், கரணம் பற்றிய விவரங்களையும் தயவு செய்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-14

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,

    புதிய உரை
    புதுப் பொழிவு,
    புரிந்தது.....

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    பொறுமையாக அடிப்படைப்பாடத்தை நினை ஊட்டியதற்கு மிக்க நன்றி.எல்லாம் தெரிந்ததுதானே என்ற எண்ணம் இல்லாமல் கருத்து ஊன்றிப் படித்தேன்.உபயோகமாக இருந்தது.
    தாஹி இல்லை! தஹி என்றால் தயிர்.
    பஞ்சு+அங்கம் இல்லை. பஞ்ச+ அங்கம்=பஞ்சாங்கம்‌/////

    அதிகாலை 4:40ற்கே பதிவைப் படித்துப் பின்னூட்டமா! நன்றி கிருஷ்ணன் சார். நீங்கள் சுட்டிக்காட்டிய எழுத்துப்பிழைகளைத் திருத்திவிட்டேன்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////வாரம், கரணம், யோகம் பற்றியும் சிறு குறிப்பு கொடுத்தால் தான் கட்டுரை முழுமை பெறும்.///////

    நன்றி நாளை எழுதுகிறேன்

    ReplyDelete
  6. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Thanks Sir.
    Thanks to know all astro related words.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    எல்லாம் உங்களைப்போன்றோருக் காகத்தான் ராஜாராமன்!

    ReplyDelete
  7. /////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பஞ்சாங்கம் விபரம், மற்றும் 1.நட்சத்திரம்,2.திதி,3.கேந்திரம்,4.கேந்திரஅதிபதி,5.திரிகோணம்,6.திரிகோண அதிபதி, 7.பார்வை,8.கெட்டுப்போன நிலைமை,9.அஸ்தமனம்,10.சங்கமம்,11.
    சேர்க்கை-இவைகளுக்கான விளக்கங்கள்,உதாரணங்களுடன் நன்றாகப் புரியும்படி உள்ளது. ----
    தங்களுக்கு மிக்க நன்றி.
    -----இதே போல்-யோகம், கரணம் பற்றிய விவரங்களையும் தயவு செய்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றை நாளை எழுதுகிறேன்

    ReplyDelete
  8. இதை சொல்லகராதியாக தொகுத்து நூலாக வெளியிட்டால் பயன் உள்ளதாகுமே

    ReplyDelete
  9. அம்மாவாசைக்கும்பௌர்ணமிக்கும் இடைப்பட்ட விவரங்களை தெளிவாக உணர்த்தி உள்ளீர்கள். நன்றி ஐயா!

    ReplyDelete
  10. Vanakam sir,

    Sir, nalla information about the basics....enaku vanthu meena lagnam and lagnathipathi guru is in tenth house within six degrees to sun, being combusted by sun...perusa problems varuma sir?

    thanks
    Thanuja

    ReplyDelete
  11. பஞ்சாங்கம் பற்றிய பாடம் நன்றாக உள்ளது.....அது ஏன் சார் தஹி வடா பெர் வச்சிங்க இந்த பாடத்துக்கு ...உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ?.......யோகங்கள் பாடம் நிறைவடைந்து விட்டதா அய்யா ...

    நன்றி வணக்கம்......

    ReplyDelete
  12. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    புதிய உரை
    புதுப் பொழிவு,
    புரிந்தது.....
    நன்றிகள் ஐயா! /////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. /////visu said...
    இதை சொல்லகராதியாக தொகுத்து நூலாக வெளியிட்டால் பயன் உள்ளதாகுமே/////

    ஆகா, செய்துவிடுகிறேன். வரவுள்ள ஜோதிட நூல்களில் இந்தப் பகுதியும் வரும்!

    ReplyDelete
  14. ////நானானி said...
    அம்மாவாசைக்கும்பௌர்ணமிக்கும் இடைப்பட்ட விவரங்களை தெளிவாக உணர்த்தி உள்ளீர்கள். நன்றி ஐயா!/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. /////Thanuja said...
    Vanakam sir,
    Sir, nalla information about the basics....enaku vanthu meena lagnam and lagnathipathi guru is in tenth house within six degrees to sun, being combusted by sun...perusa problems varuma sir?
    thanks
    Thanuja/////

    லக்கினாதிபதி கேந்திரத்தில் உள்ளார். அது ப்ளஸ் பாயிண்ட். ஆறாம் அதிபதி வில்லனிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். அது மைன்ஸ் பாயிண்ட். பெரிதாக பாதிப்பு இருக்காது. லக்கினாதிபதியின் செயல்பாடுகள் தாமதமாகும். இதற்கு நஷ்ட ஈடு வேறு இடத்தில் வழங்கப்பெற்றிருக்கும். அதையும் பாருங்கள். அனைவருக்கும் - யாராயிருந்தாலும், மொத்தப்பரல்கள் 337தானே? அதையும் நினைவில் வைத்து கவலைப் படுவதை விட்டொழியுங்கள்!

    ReplyDelete
  16. ////astroadhi said...
    பஞ்சாங்கம் பற்றிய பாடம் நன்றாக உள்ளது.....அது ஏன் சார் தஹி வடா பெர் வச்சிங்க இந்த பாடத்துக்கு ...உங்களுக்கு ரொம்ப புடிக்குமோ?.......யோகங்கள் பாடம் நிறைவடைந்து விட்டதா அய்யா ...
    நன்றி வணக்கம்.....////.

    யோகங்கள் பாடம் இன்னும் உள்ளது. மீண்டும் வரும்.
    இந்தப் பதிவிற்கு ஜோதிடச் சொற்கள் என்று பெயர் வைத்தால், பலர் உள்ளே வரமாட்டார்கள். தஹிவடா என்று பெயர்வைத்தால் - என்னமோ - ஏதோ என்று பலரும் வருவார்கள். அதனால்தான் அந்தத் தலைப்பு. இந்தவகைத் தலைப்பிற்குப் பெயர் கொக்கித் தலைப்பு. அதாவது கொக்கி போட்டு இழுப்பது!:-)))

    ReplyDelete
  17. GoodMorning Sir,
    I was going through the lessons again .
    You have mentioned about Kendras and i remembered this doubt ,i wanted to ask long back.

    I have read abt kendrathipathya dosha for mithuna ,kanya ,dhanur,meena lagnas.

    For mithuna,kanya lagnas ,Guru bhagwan becomes a malefic as he owns too kendras
    For dhanur,meena lagnas, bhuda becomes a malefic as he owns 2 kendras.

    For ex now if lagna is Midhuna/kanya and if Guru bhawan sits on lagna (without any other
    planet's aspect /conjunction ) or in 7th to lagna (on dhanus),will he do good because
    he is strongly placed or will he do bad as he suffers from kendrathipathya dosha for mithuna lagna

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா,
    ராகு,கேது கிரகங்களுக்கும் பார்வை உண்டா அய்யா? தெரிவிக்க வேண்டுகிறேன்.
    அரசு.

    ReplyDelete
  19. ///////Sowmya said...
    GoodMorning Sir,
    I was going through the lessons again .
    You have mentioned about Kendras and i remembered this doubt ,i wanted to ask long back.
    I have read abt kendrathipathya dosha for mithuna ,kanya ,dhanur,meena lagnas.
    For mithuna,kanya lagnas ,Guru bhagwan becomes a malefic as he owns too kendras
    For dhanur,meena lagnas, bhuda becomes a malefic as he owns 2 kendras.
    For ex now if lagna is Midhuna/kanya and if Guru bhawan sits on lagna (without any other
    planet's aspect /conjunction ) or in 7th to lagna (on dhanus),will he do good because
    he is strongly placed or will he do bad as he suffers from kendrathipathya dosha for mithuna lagna//////

    கேந்திராதிபதிகள் நிலை
    கொடியோர்கள் கேந்திரத்தோ ராகிற்கொடார்கள்
    கொடிய பலன்நல்லோர் கொடுப்பர் ‐ கடல்புடைசூழ்
    வையகத்தோர் தங்கட்கு வைவேன் மலர்விழியாய்
    ஐயப்பா டின்றி யறி (4)

    Angular Lords
    “If malefics happen to be angular lords, they will not give bad effects.
    Similarly, benefics as angular lords, will not confer any good effects

    இதையும் மீறி பரல்கள் அதிகமாக இருந்தால், குரு பகவான் நன்மையையே செய்வார்!

    ReplyDelete
  20. ////ARASU said...
    வணக்கம் அய்யா,
    ராகு,கேது கிரகங்களுக்கும் பார்வை உண்டா அய்யா? தெரிவிக்க வேண்டுகிறேன்.
    அரசு./////

    அது பற்றி இருவிதமான கருத்துக்கள் உள்ளன. ராகுவுடன் சேர்ந்தால் எதிரில் கேது. கேதுவுடன் சேர்ந்தால் எதிரில் ராகு. அவர்களுடன் சேர்வதே பாவம். அதாவது சந்திரனுடன் ராகு சேர்ந்தால் பெரிய மனப்போராட்டம். அத்துடன் கேதுவின் பார்வையும் சேர்ந்தால் என்ன ஆகும்? ஒரே சமயத்தில் இரண்டு மேஜர் ஆக்ஸிடெண்ட்! பார்வையும் இருந்தால் பரவாயில்லை என்கிறீர்களா? நல்லது வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  21. Thanks a lot sir .
    Ample learning scope for all of us .
    Thanks to all our stars .

    As you talked about rahu + moon combination ,i get this doubt..
    Moon is also a karaka for mother ..
    Isn't mother affected by this combination ?
    Or closeness to mother ,physical ,mental health of mother determined
    only by 4th house ,its parals,its lords position ,parals?

    I am trying to generalise by asking this question ?
    If a karaka is afflicted,how does it affect its portfolios?
    Say in the same situation i have asked ,if we see a rahu + moon combination,
    but 4th house lord is very very strong and placed strongly ,what can we conclude ?
    I think here rahu would affect only the mind of the native ,person's relation with mother would be good because of strong 4th lord .Am i right ,sir ?

    ReplyDelete
  22. //அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பஞ்சாங்கம் விபரம், மற்றும் 1.நட்சத்திரம்,2.திதி,3.கேந்திரம்,4.கேந்திரஅதிபதி,5.திரிகோணம்,6.திரிகோண அதிபதி, 7.பார்வை,8.கெட்டுப்போன நிலைமை,9.அஸ்தமனம்,10.சங்கமம்,11.
    சேர்க்கை-இவைகளுக்கான விளக்கங்கள்,உதாரணங்களுடன் நன்றாகப் புரியும்படி உள்ளது. ----
    தங்களுக்கு மிக்க நன்றி. //
    Repeattuuu

    ReplyDelete
  23. பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்.//

    மற்றும் சத்ய நாராயண பூஜைக்கு உகந்த நாள். அம்மன் வழிபாட்டிற்கும் ஏற்ற நாள்.

    மற்ற பாடங்களுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. Ayya,

    Suriyan ku 10 Pagaikul irukum Graham Asthamanam agi vidum.Suriyanum antha grahamum 2 Rasikalil irunthalum athey nilai thaana?

    For Example :Suriyan Mesha Rasiyil 29 Pagaiyilyum Sani Rishibathil 34 Pagaiyilum irunthalum Asthamanam thanna?

    ReplyDelete
  25. /////Sowmya said...
    Thanks a lot sir .
    Ample learning scope for all of us.
    Thanks to all our stars.
    As you talked about rahu + moon combination ,i get this doubt..
    Moon is also a karaka for mother ..
    Isn't mother affected by this combination ?
    Or closeness to mother ,physical ,mental health of mother determined
    only by 4th house ,its parals,its lords position ,parals?
    I am trying to generalise by asking this question ?
    If a karaka is afflicted,how does it affect its portfolios?
    Say in the same situation i have asked ,if we see a rahu + moon combination,
    but 4th house lord is very very strong and placed strongly ,what can we conclude ?
    I think here rahu would affect only the mind of the native ,person's relation with mother would be good because of strong 4th lord .Am i right ,sir?/////

    சந்திரன் மனகாரகன் மற்றும் தாய்க்குக்காரகன்
    மனதிற்கான வீடு 5ஆம் வீடு.
    தாய்க்கான வீடு 4ஆம் வீடு

    4ஆம் வீடு, அதன் அதிபதி, 4ஆம் வீட்டுப்பரல்கள், அதிபதியின் சுயவர்க்கப்பரல்கள், 4ஆம் வீட்டில் போய் அமர்ந்திருக்கும், கிரகம் அல்லது 4ஆம் வீட்டைப் பார்க்கும் கிரகம், 4ஆம் அதிபதி எங்கிருந்தாலும் அவருடன் சேர்ந்திருக்கும் கிரகம், அல்லது அவரைப் பார்க்கும் கிரகம், அதேபோல் காரகனின் சுயவர்க்கப் பரல்கள் மற்றும் மேற்கூறிய இத்யாதிகள் அவை அனைத்தும் சேர்த்துத்தான் தாய்க்கான பலன்.

    அதே வீட்டிற்குக் காரகனாக செவ்வாயைச் சேர்த்துக் கொண்டால், இடம், வாசல், பூமிக்கான பலன்
    அதே வீட்டிற்குக் காரகனாக சுக்கிரனைச் சேர்த்துக்கொண்டால், வசதி, வாகனங்கள் சுகங்களுக்கான பலன்

    ஐந்தாம் வீட்டிற்கும் அதே வாய்ப்பாடுதான்.

    என்ன தலை சுற்றுகிறதா? சுற்றத்தான் செய்யும். ஜோதிடம் என்றால் சும்மாவா?

    ReplyDelete
  26. //////Eswari said...
    //அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பஞ்சாங்கம் விபரம், மற்றும் 1.நட்சத்திரம்,2.திதி,3.கேந்திரம்,4.கேந்திரஅதிபதி,5.திரிகோணம்,6.திரிகோண அதிபதி, 7.பார்வை,8.கெட்டுப்போன நிலைமை,9.அஸ்தமனம்,10.சங்கமம்,11.
    சேர்க்கை-இவைகளுக்கான விளக்கங்கள்,உதாரணங்களுடன் நன்றாகப் புரியும்படி உள்ளது. ----
    தங்களுக்கு மிக்க நன்றி. //
    Repeattuuu////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. ////Uma said...
    பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்.//
    மற்றும் சத்ய நாராயண பூஜைக்கு உகந்த நாள். அம்மன் வழிபாட்டிற்கும் ஏற்ற நாள்.
    மற்ற பாடங்களுக்கு காத்திருக்கிறேன்.////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. ///Strider said...
    Ayya,
    Suriyan ku 10 Pagaikul irukum Graham Asthamanam agi vidum.Suriyanum antha grahamum 2 Rasikalil irunthalum athey nilai thaana?
    For Example :Suriyan Mesha Rasiyil 29 Pagaiyilyum Sani Rishibathil 34 Pagaiyilum irunthalum Asthamanam thanna?/////

    என்ன குழப்பம்? சூரியன் எப்படி இரண்டு ராசிகளில் இருக்க முடியும்? அதைச் சொல்லுங்கள் முதலில்

    ReplyDelete
  29. கேந்திராதிபதிகள் நிலை பற்றி தாங்கள் கொடுத்த வீமகவியின் பாடல் சரிதான். இருப்பினும் 4ம் இட கேந்திராதிபதியாக இருப்பதற்கும் 10ம் இட கேந்திராதிபதியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்னொன்று பாப கிரகங்கள் கேந்திராதிபதிகளானால் அதே நேரத்தில் கோணாதிபதிகளாகவும் இருந்தால்தன் நன்மை செய்வார்கள். (இல்லாவிட்டால் தீமை செய்யாமல் இருப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.) இது நான் பிருஹத் பராசர ஹோரையில் படித்தது. பி வி ராமன் அவர்களும் தனது How to Judge A Horoscope என்ற புத்தகத்திலும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

    ReplyDelete
  30. /////ananth said...
    கேந்திராதிபதிகள் நிலை பற்றி தாங்கள் கொடுத்த வீமகவியின் பாடல் சரிதான். இருப்பினும் 4ம் இட கேந்திராதிபதியாக இருப்பதற்கும் 10ம் இட கேந்திராதிபதியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்னொன்று பாப கிரகங்கள் கேந்திராதிபதிகளானால் அதே நேரத்தில் கோணாதிபதிகளாகவும் இருந்தால்தன் நன்மை செய்வார்கள். (இல்லாவிட்டால் தீமை செய்யாமல் இருப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.) இது நான் பிருஹத் பராசர ஹோரையில் படித்தது. பி வி ராமன் அவர்களும் தனது How to Judge A Horoscope என்ற புத்தகத்திலும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். ////

    உண்மைதான்! உங்களுடைய மேலதிகத்தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  31. ஐயா,

    சொந்த பந்தங்களை ஒரே இடத்தில் பார்த்தமாதிரி இருக்குது இந்த பதிவை படிக்கையில்...மிகவும் உபயோகமான பதிவு (வழக்கம்போல்)!..ஒரு சந்தேகம்...இயற்கையிலேயே சில கிரகங்கள் தீயவை..ராசி சக்கரத்தை பொருத்தும் (3,6,11அதிபதிகள்) தீயவை என முன்பு படித்தேன். இயற்கையில் நல்ல கிரகமாக இருந்து, சக்கரத்தைப் பொறுத்து தீயவை ஆனால் எப்படி எடுத்துக்கொள்வது? இதன்படி 9ல் 6 கிரகங்கள் தீயவை ஆகி விடுகின்றனவே...

    அன்புடன்,
    செங்கோவி

    ReplyDelete
  32. ///Strider said...
    Ayya,
    Suriyan ku 10 Pagaikul irukum Graham Asthamanam agi vidum.Suriyanum antha grahamum 2 Rasikalil irunthalum athey nilai thaana?
    For Example :Suriyan Mesha Rasiyil 29 Pagaiyilyum Sani Rishibathil 34 Pagaiyilum irunthalum Asthamanam thanna?/////

    என்ன குழப்பம்? சூரியன் எப்படி இரண்டு ராசிகளில் இருக்க முடியும்? அதைச் சொல்லுங்கள் முதலில்

    Ayya Suriyan 2 Rasikalil irupathaga nan koora villai.Suriyan oru Rasiyin Kadasi 5 Pagai-yilum ennoru Graham Suriyan irukum Rasiku Adutha Rasiyil Mudhal 5 Pagai kul irunthalum Athu Asthamanam thaana enbathu thaan en kelvi..

    ReplyDelete
  33. ///////SHEN said...
    ஐயா,
    சொந்த பந்தங்களை ஒரே இடத்தில் பார்த்தமாதிரி இருக்குது இந்த பதிவை படிக்கையில்...மிகவும் உபயோகமான பதிவு (வழக்கம்போல்)!..ஒரு சந்தேகம்...இயற்கையிலேயே சில கிரகங்கள் தீயவை..ராசி சக்கரத்தை பொருத்தும் (3,6,11அதிபதிகள்) தீயவை என முன்பு படித்தேன். இயற்கையில் நல்ல கிரகமாக இருந்து, சக்கரத்தைப் பொறுத்து தீயவை ஆனால் எப்படி எடுத்துக்கொள்வது? இதன்படி 9ல் 6 கிரகங்கள் தீயவை ஆகி விடுகின்றனவே...
    அன்புடன்,
    செங்கோவி///////

    ஆமாம் அது தீமைதான். சுபகிரகங்கள் அப்படி அமைப்பில் வந்து இருந்தால் தீமை செய்யாது. நன்மை செய்வதை நிறுத்திவிடும்!

    ReplyDelete
  34. //////Strider said...
    ///Strider said...
    Ayya,
    Suriyan ku 10 Pagaikul irukum Graham Asthamanam agi vidum.Suriyanum antha grahamum 2 Rasikalil irunthalum athey nilai thaana?
    For Example :Suriyan Mesha Rasiyil 29 Pagaiyilyum Sani Rishibathil 34 Pagaiyilum irunthalum Asthamanam thanna?/////
    என்ன குழப்பம்? சூரியன் எப்படி இரண்டு ராசிகளில் இருக்க முடியும்? அதைச் சொல்லுங்கள் முதலில்
    Ayya Suriyan 2 Rasikalil irupathaga nan koora villai.Suriyan oru Rasiyin Kadasi 5 Pagai-yilum ennoru Graham Suriyan irukum Rasiku Adutha Rasiyil Mudhal 5 Pagai kul irunthalum Athu Asthamanam thaana enbathu thaan en kelvi..//////////

    ராசி சந்திப்புக்களில் இருந்தாலும் அஸ்தமனம்தான். அதனால்தான் ராசிகளைப் பார்ப்பதோடு, கிரகங்கள் இருக்கும் பாகைகளையும், நட்சத்திர சாரத்தையும் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  35. //
    ஆமாம் அது தீமைதான். சுபகிரகங்கள் அப்படி அமைப்பில் வந்து இருந்தால் தீமை செய்யாது. நன்மை செய்வதை நிறுத்திவிடும்!//

    ஐயா,
    தங்கள் பதிலிற்கு நன்றி. தங்கள் அறிவுரைப்படியே, தெரிந்தவர்களின் ஜாதகங்களை வைத்துக்கொண்டே, உங்கள் பாடங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். தீய கிரகம் என்பதை அதன் இயற்கைத்தன்மையை வைத்தே இதுவரை கணித்து வந்தேன். அதனால்தான் இந்த குழப்பம். அடியேனுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை :
    1. ஒருகிரகத்தின் தன்மையை, அதன் இயற்கைக் குணத்தை வைத்து மதிப்பிடுவதா அல்லது ராசி சக்கரத்தில் அதன் இடத்தை வைத்தா? எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது?
    2. ஒரு ஜாதகத்தில் ஐந்தில் சனி இருந்தால் தத்துப்பிள்ளை யோகம் என்றீர்கள். அந்த சனி, ராசி சக்கரத்தைப் பொறுத்து நல்லது என்றால் எப்படி பலன் சொல்வது? அதே போன்று புனர்ப்பூ இருந்தாலும் நீங்கி விடுமா?
    3. ஐந்தில் சுக்கிரன் இருந்து, அந்த ஜாதகத்திற்கு சுக்கிரன் தீயது என்றால் புத்திர பாக்கியத்தை பாதிக்கும் எனலாமா? ( இதைத் தவிர புத்திரகாரகன், அந்த வீடு , அஷ்டக வர்க்கம் போன்றவற்றையும் பார்க்கவேண்டும் என்றாலும்...)
    4. ராசி சக்கர இடம்தான் முக்கியம் என்றால், இயற்கைத்தன்மையை எங்கு எப்படி உபயோகிப்பது?

    இதுவரை நானாக கணித்த பல விஷயங்கள் இதனால் மாறுவதாலேயே மீண்டும் கேட்கிறேன்.தயவு செய்து விளக்கவும்.

    அன்புடன்,
    செங்கோவி

    ReplyDelete
  36. ////SP.VR. SUBBAIYA said...
    ////ARASU said...
    வணக்கம் அய்யா,
    ராகு,கேது கிரகங்களுக்கும் பார்வை உண்டா அய்யா? தெரிவிக்க வேண்டுகிறேன்.
    அரசு./////

    அது பற்றி இருவிதமான கருத்துக்கள் உள்ளன. ராகுவுடன் சேர்ந்தால் எதிரில் கேது. கேதுவுடன் சேர்ந்தால் எதிரில் ராகு. அவர்களுடன் சேர்வதே பாவம். அதாவது சந்திரனுடன் ராகு சேர்ந்தால் பெரிய மனப்போராட்டம். அத்துடன் கேதுவின் பார்வையும் சேர்ந்தால் என்ன ஆகும்? ஒரே சமயத்தில் இரண்டு மேஜர் ஆக்ஸிடெண்ட்! பார்வையும் இருந்தால் பரவாயில்லை என்கிறீர்களா? நல்லது வைத்துக்கொள்ளுங்கள்.////

    ராகு,கேது கிரகங்கள் தாம் இருந்த வீட்டிலிருந்து 7ஆம் வீட்டைத் தவிர
    3 , 11ஆம் வீடுகளைப் பார்க்கும் என்று வேறு எங்கோ படித்த ஞாபகம்..
    இந்த கேள்வியை எழுப்பிய நண்பர் ARASU இந்த வகைப் பார்வையை குறித்து கேள்வி கேட்டுள்ளாரா என்று தெரியவில்லை.
    எனக்கும் இந்த பார்வை விவரத்தை நமது முந்தைய பாடங்களில் படித்ததாக நினைவிலில்லை..
    தகவலை ஆசிரியரின் பார்வைக்கு விட்டு உறுதிப்படித்தக் கோருகிறேன்..

    ReplyDelete
  37. SHEN said...
    // ஆமாம் அது தீமைதான். சுபகிரகங்கள் அப்படி அமைப்பில் வந்து இருந்தால் தீமை செய்யாது. நன்மை செய்வதை நிறுத்திவிடும்!//
    ஐயா,
    தங்கள் பதிலிற்கு நன்றி. தங்கள் அறிவுரைப்படியே, தெரிந்தவர்களின் ஜாதகங்களை வைத்துக்கொண்டே, உங்கள் பாடங்களை படித்துக்கொண்டிருக்கிறேன். தீய கிரகம் என்பதை அதன் இயற்கைத்தன்மையை வைத்தே இதுவரை கணித்து வந்தேன். அதனால்தான் இந்த குழப்பம். அடியேனுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை :
    1. ஒருகிரகத்தின் தன்மையை, அதன் இயற்கைக் குணத்தை வைத்து மதிப்பிடுவதா அல்லது ராசி சக்கரத்தில் அதன் இடத்தை வைத்தா? எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது?
    2. ஒரு ஜாதகத்தில் ஐந்தில் சனி இருந்தால் தத்துப்பிள்ளை யோகம் என்றீர்கள். அந்த சனி, ராசி சக்கரத்தைப் பொறுத்து நல்லது என்றால் எப்படி பலன் சொல்வது? அதே போன்று புனர்ப்பூ இருந்தாலும் நீங்கி விடுமா?
    3. ஐந்தில் சுக்கிரன் இருந்து, அந்த ஜாதகத்திற்கு சுக்கிரன் தீயது என்றால் புத்திர பாக்கியத்தை பாதிக்கும் எனலாமா? ( இதைத் தவிர புத்திரகாரகன், அந்த வீடு , அஷ்டக வர்க்கம் போன்றவற்றையும் பார்க்கவேண்டும் என்றாலும்...)
    4. ராசி சக்கர இடம்தான் முக்கியம் என்றால், இயற்கைத்தன்மையை எங்கு எப்படி உபயோகிப்பது?
    இதுவரை நானாக கணித்த பல விஷயங்கள் இதனால் மாறுவதாலேயே மீண்டும் கேட்கிறேன்.தயவு செய்து விளக்கவும்.
    அன்புடன்,
    செங்கோவி/////

    கெட்டிகாரத்தனத்தை எல்லாம் நல்ல இடத்தில் வேலை கிடைத்தால்தான் காட்டமுடியும். நாணயத்திற்கும், நேர்மைக்கும் அதே கதிதான். அதைப்போல ஜாதகத்தில் கிடைக்கும் இடத்தை அல்லது அமர்ந்திருக்கும் இடத்தை வைத்துத்தான் கிரகங்களின் பலன்கள். இயற்கைத்தனம் மட்டும் தனியாக வேலை செய்யாது. விளக்கம் போதுமா?

    ReplyDelete
  38. /////minorwall said...
    ////SP.VR. SUBBAIYA said...
    ////ARASU said...
    வணக்கம் அய்யா,
    ராகு,கேது கிரகங்களுக்கும் பார்வை உண்டா அய்யா? தெரிவிக்க வேண்டுகிறேன்.
    அரசு./////
    அது பற்றி இருவிதமான கருத்துக்கள் உள்ளன. ராகுவுடன் சேர்ந்தால் எதிரில் கேது. கேதுவுடன் சேர்ந்தால் எதிரில் ராகு. அவர்களுடன் சேர்வதே பாவம். அதாவது சந்திரனுடன் ராகு சேர்ந்தால் பெரிய மனப்போராட்டம். அத்துடன் கேதுவின் பார்வையும் சேர்ந்தால் என்ன ஆகும்? ஒரே சமயத்தில் இரண்டு மேஜர் ஆக்ஸிடெண்ட்! பார்வையும் இருந்தால் பரவாயில்லை என்கிறீர்களா? நல்லது வைத்துக்கொள்ளுங்கள்.////
    ராகு,கேது கிரகங்கள் தாம் இருந்த வீட்டிலிருந்து 7ஆம் வீட்டைத் தவிர
    3 , 11ஆம் வீடுகளைப் பார்க்கும் என்று வேறு எங்கோ படித்த ஞாபகம்..
    இந்த கேள்வியை எழுப்பிய நண்பர் ARASU இந்த வகைப் பார்வையை குறித்து கேள்வி கேட்டுள்ளாரா என்று தெரியவில்லை.
    எனக்கும் இந்த பார்வை விவரத்தை நமது முந்தைய பாடங்களில் படித்ததாக நினைவிலில்லை..
    தகவலை ஆசிரியரின் பார்வைக்கு விட்டு உறுதிப்படித்தக் கோருகிறேன்.//////

    என்ன பார்வை உந்தன் பார்வை எல்லாம் 7 கிரகங்களுக்கு மட்டும்தான். ராகு & கேது கோஷ்டிகளுக்குப் பார்வை இல்லை மைனர்!

    ReplyDelete
  39. கேந்திராதிபதிகள் நிலை
    கொடியோர்கள் கேந்திரத்தோ ராகிற்கொடார்கள்
    கொடிய பலன்நல்லோர் கொடுப்பர் ‐ கடல்புடைசூழ்
    வையகத்தோர் தங்கட்கு வைவேன் மலர்விழியாய்
    ஐயப்பா டின்றி யறி (4)

    Dear Sir,

    As per above mentioned kendra athipatiya dosha how long will be there.Their first dasa/bukthi only or throught life?

    Because for me simha lagnam,lagnapathi suryan (suya paral - 4) with sukran (suya paral - 3) in the 10th house.Sukra dasa is going to come.How sukran will give result?

    ReplyDelete
  40. /////rama said...
    கேந்திராதிபதிகள் நிலை
    கொடியோர்கள் கேந்திரத்தோ ராகிற்கொடார்கள்
    கொடிய பலன்நல்லோர் கொடுப்பர் ‐ கடல்புடைசூழ்
    வையகத்தோர் தங்கட்கு வைவேன் மலர்விழியாய்
    ஐயப்பா டின்றி யறி (4)
    Dear Sir,
    As per above mentioned kendra athipatiya dosha how long will be there.Their first dasa/bukthi only or throught life?///////

    ஒவ்வொருமுறை அவர்களுடைய தசாபுக்தி வரும்போதும் அப்படி இருக்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com