வாரத்தில் எத்தனை நாட்கள்?
'வாரத்தில் எத்தனை நாட்கள்' என்ற தலைப்பைப்
பார்த்தவுடன் என்னடா வில்லங்கமான தலைப்பாக
இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்!
வாத்தியார் அந்த மாதிரியான விஷயங்களையெல்லாம்
எழுதுவேனா?
இது அடுத்த சர்வே!
நேற்று வயது என்னவென்று கேட்டுப் பதிவிட்டிருந்தேன்
நேற்று வகுப்பிற்கு வராமல் டிமிக்கி கொடுத்த கண்மணிகள்
எல்லாம் இங்கே சொடுக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் கீழே
படியுங்கள்.
இன்றைய கேள்வி வாரத்தில் எத்தனை நாட்கள் தமிழ்மணத்திற்கு
வந்து போகிறீர்கள்? கீழே பதிந்து உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள்
இன்னும் இரண்டு சர்வே படிவங்கள் அடுத்தடுத்து வரும்
முடிவில் பதிவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செய்திகளைப்
புள்ளி' விவரங்களுடன் எழுதவுள்ளேன்.
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்
படிவம் கீழே உள்ளது!
30.1.07
29.1.07
உங்கள் வயதென்ன நண்பரே?
உங்கள் வயதென்ன நண்பரே?
பெண்களிடம் வயதையும், ஆண்களிடம் வருமானத்தையும்
கேட்கக் கூடாது என்பார்கள்!
ஆனால் ஒரு நல்ல காரியத்திற்க்காகத் தெரிந்து கொள்வதில்
தவறு இல்லை! சொல்வதாலும் ஒன்றும் குறைந்து விடாது!
பதிவுகளில் உள்ள பதிவர்களின் வயதையும், வந்து படித்துவிட்டுப்
போகின்றவர்களின் வயதையும் ஒரு முக்கியமான காரணத்திற்காகத்
தெரிந்து கொள்ள விழைகின்றேன்
இந்த வரிசையில் அடுத்தடுத்து இன்னும் மூன்று சர்வே பதிவுகளும்
தொடர்ந்து வரும். அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கெல்லாம்
(அதாவது பதிவுலக குறுநில மன்னர்களுக்கெல்லாம்) பயன்படும்படியான
செய்திகளைத் தரவுள்ளேன்
ஆகவே உங்கள் அனைவரையும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்
அன்புடன்
SP.VR. சுப்பையா
சர்வே படிவம் - இங்கே சொடுக்குங்கள்

26.1.07
கடவுள் என்ன கேட்பார்?
கடவுள் என்ன கேட்பார்?
இந்தப் பதிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்தான்!
மற்றவர்கள் பதிவை விட்டு தயவுசெய்து விலகவும்!
---------------------------------------------------------------
1
என்ன வாகனம் வைத்திருந்தீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எத்தனை பேர்களுக்கு லிஃப்ட் கொடுத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
-------------------------
2
எத்தனை சதுர அடிகளில் வீடு கட்டினீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எத்தனை பேரை வீட்டிற்கு அழைத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
3
எத்தனை புத்தாடைகள் வாங்கினீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்....
பழைய ஆடைகளை எத்தனை ஏழைகளுக்குத் தந்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
4
எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எவ்வளவு கொடுத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
5
எவ்வளவு பெரிய பதவியில் இருந்தீர்கள் என்று கடவுள் கேட்க மாட்டார்.....
எவ்வளவு உண்மையாய் உழைத்தீர்கள் என்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
6
உங்கள் நிறம் என்னவாக இருக்கிறதென்று கடவுள் கேட்க மாட்டார்......
உங்கள் குணம் என்னவாக இருக்கிறதென்றுதான் கடவுள் கேட்பார்!
--------------------------
நமது நம்பிக்கை' மாத இதழ் வெளியிட்டுள்ள நாட்குறிப்பேட்டில்
உள்ள வரிகள் பலவற்றில் என் நெஞ்சைத் தொட்ட வரிகளைக்
கொடுத்துள்ளேன். அதோடு அந்த இதழ் நிர்வாகத்திற்கும் என்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
--------------------------
கீழே உள்ளது என்னுடைய சேர்க்கை!
கடவுள் நீ எத்தனை ஜல்லிப் பதிவுகள் போட்டாய் என்று கேட்க மாட்டார்....
எத்தனை பதிவுகள் உருப்படியாக, பயனுள்ளதாகப் போட்டாய் என்றுதான்
கேட்பார்!
--------------------------
எத்தனை பின்னூட்டங்கள் வாங்கினாய் என்று கேட்க மாட்டார்........
நேர்மையான பின்னூட்டங்கள் எத்தனை உனக்கு வந்தன என்றுதான் கேட்பார்!
---------------------------

21.1.07
இயேசு காவியம்
இயேசு காவியம் - ஆக்கம் - கவியரசர் கண்ணதாசன்
"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!
மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்
-----------------------------------------------------------------யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!
மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற இறவாக்
காவியமான 'இயேசு காவியம்' படிப்பவர்களின் மனதில் படிக்கும்
போது ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில்
கீழே கொடுத்துள்ளேன்.
நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம்
புத்தகத்தைப் பிரித்தவுடன் 'என்னுரை' பகுதியில் தன்னுரையாகக்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப்
படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!
"இயேசு காவியம் - பேச்சுவாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி.
கலைக்காவிரியின் சார்பில் தந்தையர் என்னைச் சந்தித்துப்
பேசிய பொழுதும், திரு.சந்திரமோகன் என்னை விடாப்பிடி
யாகக் குற்றாலத்திற்குக் கூட்டிச் சென்றபொழுதும் இது
ஏதோ ஒரிரு நாள் வேலை என்றே நான் எண்ணியிருந்தேன்.
ஆனால், வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப்
பிடித்தது. 'என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம்
கைவைத்து விட்டோம்' என்று பீதியடைந்தேன்.இயேசு பெருமான்
அருள் பாலித்தார்! நான் இதுவரை உழைக்காத வகையில்,
தொடர்ந்து பதினைந்து நாட்கள், தினமும் எட்டு மணி நேரம்
வேலை செய்து இதை முடித்தேன் என்றால் அது அவரது
கருணையே!"
காவியம் எழுதப்பெற்ற கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?
மேலும் கவியரசர் சொல்கின்றார்,"பலர் என்னை இறவாக்
காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு.அந்த
இறவாக் காவியம் 'இயேசு காவியம்'தான் என்று நான்
உறுதியாகக் கூறமுடியும்"
இந்தக் காவியம் உருவாவதற்குக் கவியரசருக்கு உறுதுணையாக
இருந்த அன்பர் திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் மனம்
நெகிழ்ந்து இப்படிச சொல்கின்றார்.
"தமிழகத்தின் தனிப்பெரும் கவிஞராய் விளங்கிய கண்ணதாசன்
அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகிலுள்ள அனைவருக்கும்
பொதுவான சொத்து.அந்த சொத்தில் நமக்கும் உரிமை
உண்டு என்று எண்பித்து, பேருவகை கொண்டு,இறைமகன்
இயேசுவின் புகழ் பாடும்படி அழைத்தோம்.கிறிஸ்துவின்
வரலாற்றையே காவியமாக வடிக்க வேண்டினோம். கவிஞரும்
அதை உடனே ஏற்று அற்புதமாக எழுதிக்கொடுத்தார்
குற்றலாம் அருவி தோற்கும் அளவிற்குக் கவிதை வெள்ளம்
அங்கே கரைபுரண்டோடியது!"
மேலும் அவர் இந்த நூலைப் பற்றி, "தம் வேலை முடிந்ததும், கவிஞர்
அவர்கள் காவியத்தை, விவிலியத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்ற
கிறிஸதுவ அறிஞர்கள் ஆய்ந்து ஆலோசனை கூறவேண்டுமென
விரும்பினார். தனது நூல், யாராலும் குறைசொல்ல முடியாத
அளவுக்குச் சிறப்புடன் அமைய வேண்டுமென்பதில்
அவர் கருத்தாயிருந்தார்" என்கின்றார்.
அதன்படி காவிய நூல் அச்சாவதற்கு முன்பு, பதினோரு பேர்கள்
கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பெற்று, அவர்கள் சமர்ப்பித்த
சில திருத்தங்கள் கவியரசர் அவர்களால் சரி செய்யப்பெற்றுப்
பின் பதிப்பிக்கப் பெற்றதாம். அந்தக் குழுவில் எட்டு அருள்
திருவாளர்களும், மூன்று தமிழ் அறிஞர்களும் கூடிப் பணியாற்றி
யிருக்கிறார்கள் எனும்போது இந்த நூல் உருவான பிரம்மாண்டம்
கண்ணில் வந்து நிற்கின்றது!
1981ம் ஆண்டு ஜூன் மாதம், கவியரசர் மேல் நாட்டுப் பயணம்
மேற்கொள்வதற்குச் சில தினங்கள் முன்பு அவருடைய ஒப்புதலைப்
பெற்ற புத்தகம் அச்சிற்குத் தயாரானதாம். தாயகம் திரும்பியதும்,
சிறப்பான முறையில் வெளியீட்டு விழா நடத்தவேண்டும் என்று
கவியரசர் பெரிதும் விரும்பினாராம்.
ஆனால் இறைத்திட்டம் வேறு வகையில் அமைந்துவிட்டது.
ஆமாம், அவர் தாயகம் திரும்பாமலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அதைப் பற்றித் தன் கண்ணில் நீர் திரையிட திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ்
இப்படிக் கூறுகின்றார்.
"இருப்பேன் பலநாள் என்றானே - எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே - அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே - அந்த
தேவன் அருகில் அழைத்தானோ!"
என்னவொரு அற்புதமான மனவெளிப்பாடு பாருங்கள்!
1982ம் ஆண்டு பதிப்பிக்கபெற்ற இந்த நூல் இதுவரை ஆறு
பதிப்புக்களைக் கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு
மேலும் விற்றுள்ளது. ]
இந்த அரிய நூலைப் படிக்கும் வாய்ப்பை எனக்கு இறைவன்
இன்றுதான் நல்கினார்.
அடியவன் படித்து மகிழ்ந்து எழுதுவதற்கு 2002ம் ஆண்டு
வெளிவந்த பதிப்பு உதவியது. அதன் பதிப்பாசிரியர்
திரு.செ.பிலோமின்ராஜ் அவர்கள், "இறைமகன் இயேசுவின்
வாழ்வையும், வாக்கையும் கவிதை வடிவில் படித்து
மகிழ்வதில் மக்களின் தாகம் இன்னும் தணியவில்லை
என்பதை இதுவரை வெளியான பதிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன!"
என்று தன் பதிப்புரையில் சிறப்பாகக் கூறியுள்ளார்
படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர்
அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற ஆதங்கத்தில்
இதற்கு ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.
இயேசுநாதரின் வரலாறு கவிதை வடிவில் அற்புதமாக எழுதப்
பெற்றுள்ள இந்த நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில்
உள்ள அத்தனை கவிதைகளுமே முத்துக்கள். எல்லாவற்றையும்
எடுத்து நான் எழுத விரும்பினாலும் பதிப்பாளர்கள் தங்கள்
காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது!
அதேபோல மிகவும் அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக்
குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது
என்ற திகைப்புத்தான் மேலிடும். ஒரு காவியத்தில் அதைச்
செய்வதும் சரியல்ல!
ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து
வாங்கிப் படியுங்கள்.அதுதான் எழுதிய கவியரசருக்கும்,
வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும்
மரியாதையும், நன்றிக் கடனுமாகும்.
பதிப்பாளர்களின் முகவரி:
கலைக்காவிரி,
49-J, பாரதியார் சாலை,
திருச்சிராப்பள்ளி - 620 001
நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------
19.1.07
யார் இந்தப் பெண்மணி?
யார் இந்தப் பெண்மணி?
இன்று பொது அறிவுப்பாடம்!
கீழேயுள்ள படத்தில் ஐந்து பெண்மணிகள்
வரிசையாக அமர்ந்துள்ளனர்.
பார்த்தாலே தெரியும் எந்தத்துறையில் இருந்து
தமிழ்நாட்டைக் கலக்கினார்கள் என்று!
சரி, கேள்விக்கு வருகிறேன்.
படத்தில் (from left to right ) ஐந்தாவதாக இருக்கும்
பெண்மணி யார்?
பதிலைத் தெரிந்துகொள்ள கூகுள் ஆண்டவரிடமெல்லாம்
போகவேண்டாம். சர்வ நிச்சயமாகக் கிடைக்காது!
எங்கே கண்டுபிடியுங்கள் - எத்தனை பேர் தேறுகிறீர்கள்
என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்!
என்னுடைய மற்றொரு 'வலைப்பூ'விற்குத் தொடுப்பு இங்கே உள்ளது
அதில் கவியரசர் கண்ணதாசன் அவர்களைப்பற்றிய தொடர் உள்ளது
படித்து மகிழுங்கள்!

18.1.07
எங்கே நிம்மதி? புது பிளாக்கரில் உள்ளது அது!
எங்கே நிம்மதி? புது பிளாக்கரில் உள்ளது அது!
என்ன கவியரசரின் பாடல் வரி போல இருக்கிறதா?
இல்லை ந்ண்பரே! மேலே படியுங்கள்!
இரண்டு நாட்களாக பழைய பிளாக்கர் 'இடக்கு' செய்ததால்
அதை 'முடக்கி' வைத்து விட்டு புது பிளாக்கருக்குத்
துணிவுடன் மாறிவிட்டேன்.
சகோதரி 'பொன்ஸ்' அவர்களுடைய, மற்றும் சகோதரர்
சிங்கைக் கண்ணன் அவர்களுடைய செயல்முறை
விளக்கங்கள் கை கொடுக்க, அடியேனும் புது பிளாக்கருக்கு
மாறிவிட்டேன்!
புது பிளாக்கர் நான்கு வழித் தங்கரத சாலை போல
மிக அற்புதமாக இருக்கிறது!
எனக்கு மாறுவதற்குப் பிடித்தநேரம் 30 நிமிடங்கள்தான்
அதோடு எனது 'தோண்டிப பார்க்கும்" முயற்சியால்
Web Counter' ஐ வலைபூவில் சேர்ப்பதற்கும் கற்றுக்கொண்டேன்
முன்புபோல டெம்பிளேட்டில் நீங்கள் எதையும் நுழைப்பதற்கு
புது பிளாக்கர் உங்களை அனுமதிக்காது .
அதற்கென்று 'Page elements' என்ற பகுதி உள்ளது
அதைச் சொடுக்கினால்
Add a page element - HTML/ Java Script - Add a third party
functionality or other code to your blog
என்ற பகுதில் நீங்கள் அதைச் சேர்த்துவிடலாம்
Please change to new blog and enjoy all the facilities
available in it!
My sincere thanks to Google, Ponns Ammaiyaar & Mr.Koviyaar
அன்புடன்,

17.1.07
என்ன அடக்கம் பார்த்தீர்களா?
அசோக வனத்தில் இருந்த சீதா பிராட்டியார், தன் இருப்பிடம் கண்டு செல்ல வந்த
அனுமனைப் பார்த்ததும் கேட்டார்.
"அனுமரே! நீங்கள் ஏன் வந்தீர்கள். ராமபிரானுக்கு நீங்கள்
உற்ற தோழரல்லாவா? நீங்கள் வந்த்தால் அவருக்கு இப்போது
யார் துணை? வேறு யாராவது ஒரு எளியவரை
அனுப்பியிருக்கலாமே!"
அனுமன் பதில் சொன்னார்." தேவி அவரோடு இருப்பவர்களில்
அடியேன்தான் எளியவன்"

14.1.07
எது காப்பாற்றியது?
எது காப்பாற்றியது?
அடர்ந்த காட்டுப்பகுதி. மரத்தில் இருந்த இரண்டு
புறாக்களுக்கு, வேடன் ஒருவன் தன் வில்லில் அம்பை
ஏற்றிக் குறிபார்க்கத் துவங்கினான்.
அந்த இரண்டு புறாக்களில், பெண் புறா அதைக் கவனித்து
விட்டுத் தன் அருகிலிருந்த ஆண் புறாவை எச்சரித்தது.
அதோடு மட்டுமில்லாமல் வா பறந்து அருகில் உள்ள
வேறாவது பாதுகாப்பான மரத்திற்குப் பொய்விடலாம்
என்றும் சொன்னது..
உடனே, ஆண் புறா சொல்லிற்று, நாம் இப்போது எங்கே
யும் பறந்து செல்ல முடியாது, மேலே ஒரு கழுகு நமக்காக
வட்டமடித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி
விட்டு, அந்த மரத்திலேயே சற்று நகர்ந்து இலைகளுக்குள்
மறைந்து உட்கார்ந்ததோடு, பெண் புறாவிற்கும்
தன் அருகில் இடமளித்து உட்காரவைத்தது!. அதோடு
பெண் புறாவிடம் 'கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்,
நம்பிக்கையோடு இரு' என்றும் சொன்னது.
புறாக்கள் இரண்டும் சட்டென்று இலைகளுக்குள் மறைந்து
விட்டதைக் கண்ட வேடன், பின்னால் ஐந்தாறடி நகர்ந்து
கொண்டே வந்து, கையில் உள்ள வில், அம்புடன்
அவற்றைத் தேடத்துவங்கினான்.
அப்போதுதான், அது நடந்தது!
அப்படிப் பின்புறமாக நடந்து கொண்டே வந்தவன், ஒரு
பாம்புப்புற்றின் அருகே தன்னையறியாமல் வரவும்,
அப்போதுதான் புற்றிலிருந்து வெளியே வந்த கொடிய
விஷப்பாம்பு ஒன்று அவனைத் தீண்டிவிட்டது.
அடுத்த வினாடி அவன் மரணத்தை நோக்கிப் பயணமான
தோடு, அலறிக் கொண்டே கீழே சாயயவும், அதே நேரம்
அவன் கை வில்லிலிருந்து வெளிப்ப்ட்ட அம்பு சீறிப்பாய்ந்த
தோடு, திசை மாறி, மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகின்மேல் பாய்ந்து தாக்க, அதுவும் அவனோடு சேர்ந்து
மரணத்தை நோக்கிப் பயனப்பட்டது!
கொடிய ஆபத்திலிருந்து!புறாக்கள் இரண்டும் தப்பித்து
விட்டன
அவற்றைக் காப்பாற்றியது எது?
இறைவன் மேல் அவை கொண்டிருந்த நம்பிக்கைத்தான்
அவைகளைக் காப்பாற்றியது!

வணக்கம்!
அன்பு நிறைந்த என் பதிவுலக நண்பர்களுக்கு,
வணக்கம்!
இந்த வகுப்பில் ஆசான், மாணாக்கன் என்ற பேதம் கிடையாது!
நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது, ஆகவே
வகுப்பைத் துவங்கி விட்டேன்.
இணையப் பதிவுலகிற்கு வந்த பிறகு அடியவன் கற்றுக்
கொண்டது ஒரு கை மண் அளவுதான்.
இன்னுமொரு கை அளவிற்கு மண்ணைத்தேடி
வந்துவிட்டேன்.
திருவாளர்கள் விக்கிப்பசங்க, மயூரேசன், பி.கே.பி, ஞானவெட்டியான், செல்லா, கோவியார், எஸ்.கே, வெட்டிப்பயல், லக்கியார், செந்தழல்ரவி, செந்தில் குமரன், நாமக்கல் சிபி, கே.ஆர்.எஸ், வடுவூர் குமார், யோகன் பாரிஸ், எஸ்.பாலபாரதி, செல்வன், குமரன், ஜி.ராகவன் போன்றவர்களிடமிருந்தும், இன்னும் பலரிடமிருந்து (பல பெயர்கள் உள்ளன. அடக்கம் கருதிச் சொல்லவில்லை) பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன்.
பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அதை என்னுடைய பல்சுவைப் பதிவின் நூறாவது பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.
பல தொழில் நுட்ப விஷயங்களையும் இவ்ர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அதற்குத் துணை புரிந்த அனைவருக்கும் என் நன்றி!
அது தொடர வேண்டுமென்பதற்காக இந்தப் புதிய பதிவு.
அடியவன் கற்கவேண்டியதும், கற்றுக் கொண்டதும் தொடர்ந்து இந்தப் பதிவில் வரும்!
என்னுடைய 'பலசுவை' ப் பதிவும் தொடரும் (http://devakottai.blogspot.com)
அதில் தொடர்கள் மட்டும்தான்.