வாரத்தில் எத்தனை நாட்கள்?
'வாரத்தில் எத்தனை நாட்கள்' என்ற தலைப்பைப்
பார்த்தவுடன் என்னடா வில்லங்கமான தலைப்பாக
இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்!
வாத்தியார் அந்த மாதிரியான விஷயங்களையெல்லாம்
எழுதுவேனா?
இது அடுத்த சர்வே!
நேற்று வயது என்னவென்று கேட்டுப் பதிவிட்டிருந்தேன்
நேற்று வகுப்பிற்கு வராமல் டிமிக்கி கொடுத்த கண்மணிகள்
எல்லாம் இங்கே சொடுக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் கீழே
படியுங்கள்.
இன்றைய கேள்வி வாரத்தில் எத்தனை நாட்கள் தமிழ்மணத்திற்கு
வந்து போகிறீர்கள்? கீழே பதிந்து உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள்
இன்னும் இரண்டு சர்வே படிவங்கள் அடுத்தடுத்து வரும்
முடிவில் பதிவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செய்திகளைப்
புள்ளி' விவரங்களுடன் எழுதவுள்ளேன்.
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்
படிவம் கீழே உள்ளது!
ஐயா,
ReplyDeleteநான் குத்திவிட்டேன்.
/*கணக்கெல்லாம் கிடையாது (இஷ்டம்போல)*/
இதுதான் என் தேர்வு.
வாருங்கள் வெற்றி!
ReplyDeleteஒத்துழைபிற்கு நன்றி!
//கணக்கெல்லாம் கிடையாது (இஷ்டம்போல)//
ReplyDelete:))
வில்லங்கமான புள்ளி விவரங்களோடு வராமல் இருந்தா சரி.
ReplyDeleteஉதாரணத்துக்கு, 30 வயசுக்கு மேல இருக்கரவன் (திருமணம் ஆன கோஷ்டி) எழு நாளும் இணையமே கதின்னு கெடக்கரான். something wrong?
:)
//Mr.G.K.Said: கணக்கெல்லாம் கிடையாது (இஷ்டம்போல)//
ReplyDeleteநன்றி, கோவியாரே!
// சர்வேசன் அவர்கள் சொல்லியது:வில்லங்கமான புள்ளி விவரங்களோடு வராமல் இருந்தா சரி.//
ReplyDeleteஅதெல்லாம் வராது நண்பரே!
Sir,
ReplyDeleteஐந்து நாட்கள் (சனி, ஞாயிறு வரமாட்டேன)
ஐயா!!!
ReplyDeleteசொல்லிவிட்டேன்.
//Mr.Sivabalam Said: ஐந்து நாட்கள் (சனி, ஞாயிறு வரமாட்டேன்//
ReplyDeleteஇது முக்கியமான செய்தி! நீ்ங்கள் மட்டுமில்லை - வெளிநாடுகளில், இங்கே சென்னை, பெஙகளூர், செகந்திராபாத் போன்ற நகரங்களில் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளஞர்களுக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை! அவர்களும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பதிவுகளுக்கு வருவதில்லை!
//நன்மனம் அவர்கள் சொல்லியது:சொல்லிவிட்டேன்.//
ReplyDeleteநன்றி ந்ண்பரே!
நானும் ஐந்து (அ) ஆறு நாட்கள் மட்டுமே. மாதத்தில் 2,4 சனி மற்றும் அனைத்து ஞாயிறும் வரமாட்டேன்
ReplyDeleteசென்ஷி