எது காப்பாற்றியது?
அடர்ந்த காட்டுப்பகுதி. மரத்தில் இருந்த இரண்டு
புறாக்களுக்கு, வேடன் ஒருவன் தன் வில்லில் அம்பை
ஏற்றிக் குறிபார்க்கத் துவங்கினான்.
அந்த இரண்டு புறாக்களில், பெண் புறா அதைக் கவனித்து
விட்டுத் தன் அருகிலிருந்த ஆண் புறாவை எச்சரித்தது.
அதோடு மட்டுமில்லாமல் வா பறந்து அருகில் உள்ள
வேறாவது பாதுகாப்பான மரத்திற்குப் பொய்விடலாம்
என்றும் சொன்னது..
உடனே, ஆண் புறா சொல்லிற்று, நாம் இப்போது எங்கே
யும் பறந்து செல்ல முடியாது, மேலே ஒரு கழுகு நமக்காக
வட்டமடித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி
விட்டு, அந்த மரத்திலேயே சற்று நகர்ந்து இலைகளுக்குள்
மறைந்து உட்கார்ந்ததோடு, பெண் புறாவிற்கும்
தன் அருகில் இடமளித்து உட்காரவைத்தது!. அதோடு
பெண் புறாவிடம் 'கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்,
நம்பிக்கையோடு இரு' என்றும் சொன்னது.
புறாக்கள் இரண்டும் சட்டென்று இலைகளுக்குள் மறைந்து
விட்டதைக் கண்ட வேடன், பின்னால் ஐந்தாறடி நகர்ந்து
கொண்டே வந்து, கையில் உள்ள வில், அம்புடன்
அவற்றைத் தேடத்துவங்கினான்.
அப்போதுதான், அது நடந்தது!
அப்படிப் பின்புறமாக நடந்து கொண்டே வந்தவன், ஒரு
பாம்புப்புற்றின் அருகே தன்னையறியாமல் வரவும்,
அப்போதுதான் புற்றிலிருந்து வெளியே வந்த கொடிய
விஷப்பாம்பு ஒன்று அவனைத் தீண்டிவிட்டது.
அடுத்த வினாடி அவன் மரணத்தை நோக்கிப் பயணமான
தோடு, அலறிக் கொண்டே கீழே சாயயவும், அதே நேரம்
அவன் கை வில்லிலிருந்து வெளிப்ப்ட்ட அம்பு சீறிப்பாய்ந்த
தோடு, திசை மாறி, மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகின்மேல் பாய்ந்து தாக்க, அதுவும் அவனோடு சேர்ந்து
மரணத்தை நோக்கிப் பயனப்பட்டது!
கொடிய ஆபத்திலிருந்து!புறாக்கள் இரண்டும் தப்பித்து
விட்டன
அவற்றைக் காப்பாற்றியது எது?
இறைவன் மேல் அவை கொண்டிருந்த நம்பிக்கைத்தான்
அவைகளைக் காப்பாற்றியது!
புதுவகுப்பு துவக்கியிருக்கும் வாத்தியார் ஐயாவை மாணவ்ர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.முதல் பாடத்திலேயே அழகான நீதிக்கதையை எங்களுக்கு போதித்திருக்கிறீர்கள்.நன்றி
ReplyDelete//Mr.Selvan said: முதல் பாடத்திலேயே அழகான நீதிக்கதையை எங்களுக்கு போதித்திருக்கிறீர்கள்.நன்றி//
ReplyDeleteபாடங்கள், படங்களுடன், பரீட்சைகளும் உண்டு செல்வன்!
அருமை
ReplyDelete