29.11.13

Devotional: அழகு, அருள், எழில் என்று எல்லாம் அவன்தான்!

 

Devotional: அழகு, அருள், எழில் என்று எல்லாம் அவன்தான்!

பக்தி மலர் 

அழகெல்லாம் முருகனே என்று துவங்கும் முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். பாடலைக் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார் 



Our sincere thanks to person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.11.13

இதுவும் புதிர்தான். பதிலைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

 
இதுவும் புதிர்தான். பதிலைச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

வழக்கமான ஜோதிடப் புதிர் அல்ல! இது உங்கள் புத்திசாலித்தனத்தைத் தட்டிப் பார்க்கும் புதிர். நன்றாக யோசித்து உங்கள் பதிலை, பின்னூட்டத்தில் (that is through comments box) சொல்லுங்கள். சரியான பதில், உங்கள் பின்னூட்டங்களையும் சேர்த்து நாளை காலை வெளியாகும்.

------------------------------------------------------------------------------
ஜப்பானியக் கப்பல் ஒன்று நடுக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்றிச் செல்லும் கார்கோ கப்பல் அது.

கப்பலின் கேப்டன் குளிப்பதற்காக் கப்பலில் இருந்த குளியலறைக்குச் சென்றிருந்தார். போனவர் சும்மா போகாமல் தன்னுடைய வைர மோதிரத்தையும், விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் கழற்றி, தன்னுடைய மேஜை மேல் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

குளியல் முடிந்து திரும்பி வந்தவருக்கு அதிர்ச்சி! 15 நிமிடங்களுக்கு முன்பு, தன் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றிருந்த, விலை உயர்ந்த அந்த இரண்டு சாமான்களையும் (பொருட்களையும்) காணவில்லை. அதாவது வைர மோதிரமும், ரோலக்ஸ் கைக்கெடிகாரமும் வைத்த இடத்தில் இல்லை. காணாமல் போயிருந்தது.

கேப்டன் பதற்றம் அடையாமல், கப்பலில் தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களும், தன் அறைக்கு வந்து போகக்கூடியவர்களுமான தன் உதவியாளர்கள் ஐந்து பேர்களை மட்டும் அழைத்துப் பேசலானார்.

அவருக்கு அவர்கள் மீதுதான் சந்தேகம். அவர்களில் ஒருவர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்றும் நம்பினார். அதை வெளிப்படுத்தாமல் சாந்தமாகப் பேசினார்.

“சென்ற 15 நிமிடங்களில் யார் யார் என்னென்ன வேலை செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார்.

1. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையற்காரர், “நான் கீழ்த் தளத்தில் உள்ள ஃபிரிட்ஜ்கள் இருக்கும் அறையில் பணி செய்து கொண்டிருந்தேன். சமையலுக்குத் தேவையான ஆட்டுக்கறியை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தேன்.” என்று சொன்னார். அவர் கனமான ஓவர்கோட்டை அணிந்திருந்தார்.

2. அடுத்து வாயைத் திறந்த கப்பலின் பராமரிப்புப் பொறியாளரான இந்தியர் இப்படிச் சொன்னார்: “ஜெனரேட்டர் அறையில் வேலை செய்து கொண்டிருந்தேன்” அவர் கையில் ஒரு டார்ச் லைட் இருந்தது.

3. இலங்கையைச் சேர்ந்த மாலுமி சொன்னார்: “கப்பலின் மேல் தளத்தில், கம்பத்தின் மேல் தலை கீழாகப் பறந்து கொண்டிருந்த கொடியை சரி செய்து, கம்பத்தில் நேராகப் பறக்க விட்டேன். இன்று காலையில் நடந்த தவறைச் சரி செய்தேன்.”

4. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், கப்பலின் தகவல் தொடர்பு அதிகாரியுமான மனிதர் (Radio Officer) இவ்வாறு சொன்னார்: “ இன்னும் 72 மணி நேரத்தில் அடுத்த துறைமுகத்தைச் சென்றடைந்துவிடுவோம் என்னும் தகவலை நமது கம்பெனியின் தலைமை அலுவலத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன்.”

5. ஜெர்மனியைச் சேர்ந்த மாலுமி சொன்னார்: “நேற்று இரவு முழுவதும் நான் டூட்டியில் இருந்ததால், எனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.”

அந்த ஐவரின் பேச்சையும் கேட்ட கேப்டன், அந்த ஐவரில் யார் பொய் சொல்கிறார் என்பதை உடனே கண்டு பிடித்து விட்டார். அத்துடன் நில்லாமல் பொய் சொன்னவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையையும் விட்டார். அதை எதிர்பார்க்காத அவன் உண்மையை ஒப்புக்கொண்டு, அவர் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் அந்த இரண்டு பொருட்களும் திரும்பி வந்தன!

இப்போது சொல்லுங்கள், அந்த ஐவரில் யார் திருடன்?

கேப்டன் எப்படி அதைக் கண்டு பிடித்தார்?
==================================================================
குறுஞ்செய்தி (SMS) மூலம் எனக்கு வந்த புதிர் இது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================================

27.11.13

Short Story: சிறுகதை - போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!


கதையின் தலைப்பு: போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 3

எங்கள் அப்பச்சி (My Father) சட்டென்று கதைகள் சொல்வதில் வல்லவர். சில கதைகள் அவர் மற்றவர்களுக்குச் சொல்லும்போது கேட்டதாக இருக்கும். இந்தக் கதை அப்படிக் கேட்டகதைதான்.  இது மூன்றாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து விரிவாக்கம் செய்து,  எழுத்தில்  வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம்.

ஒரு மாத இதழுக்காக எழுதியவற்றில் ஒரு கதையை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.
----------------------------------------------------------------------------
ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனும் செழிப்பாக இருந்தான். அவனுடைய நாடும் செழிப்பாக இருந்தது. ஆனால் மன்னனின் மனம் மட்டும் வறண்டுபோய்க் கிடந்தது. உள் மனதில், வெளியே சொல்ல முடியாத கவலை ஒன்று அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

என்ன கவலை?

அதை இப்போதே சொல்லி விட்டால் கதையின் சஸ்பென்ஸ் போய்விடும். ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

மன்னன் படு கஞ்சன். எல்லாவற்றையும் சேர்த்து வைப்பான்; பூட்டி வைப்பான். அதோடு கோபக்காரன்.

ஒரு நாள், வெளி தேசத்தில் இருந்து குதிரை வியாபாரியொருவன் மன்னனைப் பார்க்க வந்தான்.

வந்தவன் சும்மா வரவில்லை. மன்னன் தலையில் கட்டிவிட்டு, நல்ல வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போவோம் என்று பத்து  வெள்ளைக் குதிரைகளையும் கொண்டு வந்திருந்தான். வந்தவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அரசனைப் பூலோக இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளினான். நம் நாயகன் அதற்கெல்லாம் மசிபவனா என்ன? மசியவில்லை.

கடைசியில் வியாபாரி வந்த விஷயத்தைச் சொல்லிக் குதிரைகளைப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டான். மன்னனும் போய்ப்  பார்த்தான். அவனுடன் அவனுடைய கஞ்சத்தனமும் உடன் சென்று பார்த்தது.

பத்துக் குதிரைகளுமே நன்றாகத்தான் இருந்தன.

வியாபாரி ஒரு குதிரையின் விலை ஆயிரம் ரூபாய் என்றான். ஒரு மூட்டை அரிசி இரண்டு பணம் விற்ற காலம் அது!

கெளரவம் கருதி ஒரே ஒரு குதிரையை மட்டும் வாங்கிக் கொள்ள முடிவு செய்த மன்னன், “ஒரு குதிரை போதும். இருப்பதில் நல்ல குதிரையாக ஒரு குதிரையை நீயே காட்டு என்றான்!”

அவனும் காட்டினான். மன்னன் குதிரையின் காலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டுத் திரும்பினான்.

திரும்பியவன், தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, விற்பனைக்கு வந்திருக்கும் குதிரைகளில், நல்ல குதிரையாக ஒரு குதிரையைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினான்.

மந்திரி சட்டென்று யோசித்தவர், நாம் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று எண்ணியவர், மெதுவாகச் சொன்னார்:

“மன்னர்மன்னா, நமது நகரச் சிவன் கோவில் வாசலில், இரண்டு கண்களும் தெரியாத ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். அவனுக்குக் கண்பார்வை இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பறிபோனது. பெரிய ஞானி அவன். அவனுடைய பூர்வீகம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயமே கிடையாது. அவனை அழைத்து வந்து, குதிரைகளைப் பார்க்கச் சொன்னால், அவன் நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பான்.”

மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல், ஆட்களை அனுப்பி, அவனை அழைத்துவரச் செய்தான்.

வந்தவன், 5 நாழிகை நேரம் குதிரைகளைப் பரிசோதித்துவிட்டு, மன்னனை அழைத்து, இருப்பதில் இதுதான் உயர்வான குதிரை என்று சொல்லி ஒரு குதிரையைக் காட்டினான்.

வியாபாரி சொல்லி, மன்னன் அடையாளப் படுத்தி வைத்திருந்த குதிரைதான் அந்தக் குதிரை!

மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம்.

“எப்படிச் சொல்கிறாய்?”

“எல்லாக் குதிரைகளுக்கும் பைகளில் கொள்ளைப் போட்டு வாயில் கட்டிவிடச் சொன்னேன். அம்சமுள்ள குதிரை நிதானமாகத்தான் திங்கும். மேலும் அதன் சுவாசமும் சீராக இருக்கும். இன்னொன்று அதன் உடம்பில் இருந்து அதிக துர்நாற்றம் வீசாது. இதுபோன்று குதிரைக்கென்று உரிய சில லட்சணங்களை வைத்து அதைத் தெரிவு செய்தேன்”

மன்னனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

தன்னுடைய முதன் மந்திரியை அழைத்து, அந்த ஞானிக்குப் பரிசு வழங்கி, அனுப்பிவைக்கும்படி சொன்னான்.

என்ன பரிசு?

தினமும் ஒருவேளை உணவு. அதிகாலை உணவு. உங்கள் மொழியில் சொன்னால் ப்ரேக்ஃபாஸ்ட். அவனுக்கு அடையாள  லட்சினை (Identity Card) வழங்கப் பெற்றது. அரசானையிடப்பெற்று, அதன் நகலும் (Copy palm leaf) வழங்கப் பெற்றது.

கோவிலுக்கு அருகில் இருந்த வேதவிற்பன்னர்கள் விடுதியில், அவனுக்கு அனுதினமும் காலைப் பலகாரம் வழங்கப்பெற்றது.

கதையின் நீளத்தையும், உங்கள் பொறுமையையும் கருதி, கதை இனிச் சுருக்கமாகச் சொல்லப்படவுள்ளது. விவரிப்புக்கள் இருக்காது.

                                      ********************************
இதேபோன்று அடுத்தமாதம் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அது ஒரு வைர வியாபாரியை வைத்து. அதிலும், தன் திறமையைக் காட்டி மன்னனை அசத்தினான் அந்தப் பிச்சைக்கார ஞானி.

மன்னனின் உத்தரவின் பேரில், அவனுக்கு அடுத்து ஒரு பரிசும் கிடைத்தது.

ஆமாம் அடுத்த வேளை உணவு. மதிய உணவு. அதே விடுதியில். அதற்கான உத்தரவையும் மன்னன் பிறப்பித்தான்

ஒருமாதம் சென்றது.

தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முடிவைத் தேடும் முகமாக, அந்தப் பிச்சைக்கார ஞானியை அழைத்து வரச் செய்த மன்னன், தன்னுடைய பிரத்தியேக அறையில் அவனை அமரச் செய்து, அவனுடன், பேசலுற்றான்.

“நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்கப்போகிறேன். அது வேறு யாருக்கும் தெரியக்கூடாது. உனக்குப் பதில் தெரிந்தால் சொல்லு. இல்லையென்றால் அதை நீ உடனே மறந்து விட வேண்டும்”

“உத்தரவு மன்னா!” என்று பதில் சொன்னான் அவன். வேறு என்ன சொல்ல முடியும்?

”உனக்கு ஜோதிடம் தெரியுமா?”

”தெரியும் மன்னா!”

“என் பிறப்பைப் பற்றி நாட்டில் சிலர் கேவலமாகப் பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அரசல் புரசலாக என் காதில் விழுந்தது. அது பற்றி உன் கருத்து என்ன? என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து, அதைப் பற்றி நீ சொல்ல முடியுமா?”

“ஜாதகத்தை எதற்காகப் பார்க்க வேண்டும்? அது இல்லாமலேயே என்னால் சொல்ல முடியும்!”

மன்னனுக்குப் பயங்கர அதிர்ச்சி!

“ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணாதியங்களில் ஒன்றுகூட உங்களுக்கு இல்லை. அதைவைத்துச் சொல்கிறேன். உங்கள் பிறப்பில் கோளாறு இருக்கிறது. உங்கள் தந்தை உயிரோடு இல்லாததால், உங்கள் தாயாரைக் கேளுங்கள். சும்மா மேம்போக்காகக் கேட்காதீர்கள். மிரட்டிக் கேளுங்கள். உண்மை தெரியவரும்”

அதிர்ந்துபோன மன்னன், உடனே அதைச் செய்தான்

முதலில் உண்மையைச் சொல்ல மறுத்த மன்னனுடைய அன்புத் தாயார், தன் மகன், தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி  மிரட்டிக் கேட்டவுடன், கண்களில் நீரோடு உண்மையைச் சொல்லி முடித்தாள்.

தனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டு காலம் குழந்தைப் பேறு இல்லாமலிருந் ததையும், வேறு ஒரு ஆடவனுடன் கூடி, குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொண்ட கதையையும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னாள். அவனுடைய உண்மையான தந்தை தங்களுடைய அரண்மனையில் முன்பு வேலைபார்த்த சிப்பாய் என்றும் சொன்னாள். எல்லாவற்றையும் போட்டு உடைத்தாள்.

கலங்கிப்போன மன்னன், தன்னிலைக்கு வர இரண்டு நாழிகை நேரம் பிடித்தது

தன்னிலைக்கு வந்த மன்னன், திரும்பவும் வந்து அந்த ஞானியிடம் பேசலுற்றான்.

“ நீ சொல்வது உண்மைதான். என் தாயை விசாரித்துவிட்டேன். இப்போது சொல். நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?”

“நானோ கண் தெரியாதவன். என் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவன். கோவில் வாசலில் அமர்ந்து, என்னைப் படைத்த ஆண்டவன் திருவடிகளில் விழுந்து, என்னை உய்வித்து, அவனுடன் என்னைச் சேர்த்துக் கொள்ளூம்படி மன்றாடிக்கொண்டிருப்பவன். கிடைக்கும் உணவையே உண்டு கொண்டிருந் தவன். வெய்யிலோ மழையோ, கோவில் வாசலிலேயே படுத்து உறங்குபவன்.
என்னுடைய மேன்மையை, இரண்டு முறைகள் உங்களுக்கு உணரவைத்திருக் கிறேன். அப்போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, இவ்வளவு பெரிய அரண்மனையில் எங்காவது ஒரு ஓரத்தில் தங்கிக் கொள்ள என்னை அனுமதித்திருக்க வேண்டும். செய்தீர்களா? முதலில் ஒருவேளை உணவிற்கு வழி செய்தீர்கள். அடுத்த சந்தர்ப்பத்தில்
எனக்கு இரண்டாவது வேளை உணவிற்கும் உத்தரவு கொடுத்தீர்கள். உண்மையான அரச வாரிசென்றால் இந்த நீச குணமெல்லாம் இருக்காது. அதைவைத்துத்தான் சொன்னேன்!”

மன்னன் அதிர்ந்து விட்டான். அத்துடன் அரண்மனையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவனைத் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தான்.

நல்ல பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள். நல்ல  உயரிய குணம் உடையவர்களாகவே இருப்பார்கள்

இதைத்தான் அவ்வையார் தனது மூதுரைப் பாடலில் இவ்வாறு அருமையாகச் சொன்னார்:

    “அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
     நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
     கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
     சுட்டாலும் வெண்மை தரும்


பொருள்:  நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் குணம் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது
=============================================================
கதை எப்படி இருந்தது.? பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
======================================================================

26.11.13

Astrology: கணிதமேதை சீனிவாச ராமானுஜன்.

 

Astrology: கணிதமேதை சீனிவாச ராமானுஜன்.

ஆமாம். நேற்றையப் புதிரில் கொடுத்ததிருந்த ஜாதகத்திற்கு உரியவர் அவர்தான்!

அந்த மகா மேதையைப் பற்றிய அரிய தகவல்களைப் படிப்பதற்கான சுட்டி கீழே உள்ளது.

http://en.wikipedia.org/wiki/Srinivasa_Ramanujan

அந்த மேதையின் கதையை முழுமையாகப் படியுங்கள். அப்போதுதான் வறுமையும், நோயும் கைகோர்த்து ஆடி அவர் வாழ்க்கையில் எத்தனை பெரிய
சோகங்களை உண்டாக்கியுள்ளன என்பது புரியும். அவருடைய ஜாதகத்தில் கொடிபிடித்துக்கொண்டு முன்னால் செல்லும் கேது எல்லாக் கொடுமை களையும் அரங்கேற்றினான்.

காலதேவனும் அவரை விட்டு வைக்கவில்லை. 32 வயதில் வைகுண்டத்திற்கான விசா மற்றும் ப்ளைட்டிற்கான போர்டிங் பாஸ் ஆகியவற்றை அவருடைய கையில் திணித்து அவரை மேலே அனுப்பிவைத்துவிட்டான்.

அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?



Mathematics Genius S.Ramanujan
பிறந்த நாள்: DOB 22.12.1887
பிறந்த நேரம்: TOB 18.20 Hours
பிறந்த ஊர்: POB Erode

வாருங்கள் அலசுவோம்!

இங்கே அலசமுடியாது. கேலக்சி2007 வகுப்பில் அலசுவோம்!

http://galaxy2007.com/

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
====================================================

25.11.13

Astrology: Quiz.24. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 

Astrology: Quiz.24. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி நான்கு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர்  ஒரு மேதை. இந்தியர். உலகம் அறிந்த மனிதர்.

அடடா மூன்று க்ளூக்களைக் கொடுத்துவிட்டேனே!

பரவாயில்லை. கண்டு பிடித்துச் சொல்லுங்கள்

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

22.11.13

வாரி வழங்கிய வாரியார்!


வாரி வழங்கிய வாரியார்!

பக்தி மலர்!

எண்ணற்ற முருக பக்தர்கள் இருந்திருக்கிறார்கள். வீரபாகு, அருணகிரிநாதர், குமரகுருபரர் என்று வரிசைப் படுத்தலாம். நாம் அறிந்த முருக பக்தர்களுள் முதன்மையானவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

என்னுடைய சின்ன வயதில் வாரியார் சுவாமிகளின் சங்கீத உபன்நியாசம் என்றால் அடியவன் தவறாமல் ஆஜராகிவிடுவேன். முருகப்பெருமானின் பெருமைகளை தன் உரைகளின் மூலம் வாரி வழங்கியவர் வாரியார் சுவாமிகள்.

வாரியார் சுவாமிகளைப் பற்றிய செய்திகள் அடங்கிய காணொளி ஒன்று கிடைத்தது. அதை இன்று உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன். அனைவரும் பார்த்து மகிழுங்கள்!

முருகனருள் முன்னிற்கும்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------


 http://youtu.be/INtLsD14R-A
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==============================================================

21.11.13

உளவியல் குட்டிக்கதை: கைத் துப்பாக்கி

 

1
உளவியல் குட்டிக்கதை: கைத் துப்பாக்கி

கதையின் தலைப்பு: கைத் துப்பாக்கி

காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேந்திரன் தன் மனைவி சுஜாதாவைக் கைத்தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பதட்டத்தோடு பேசினார்.

"சுஜாதா, ஒரு முக்கியமான விஷயம்."

மனைவி இடைமறித்தார், "நீங்கள் கூப்பிடுவீர்கள் என்று தெரியும்.உங்கள் கைத்துப்பாக்கிதானே?"

"ஆமாம், அவசரத்தில் அதை வைத்துவிட்டு வந்து விட்டேன்.நம் வாண்டுப்பயல் கண்ணில் படுமுன் அதை எடுத்து உள்ளே வை!"

"அவன் கண்ணில் படாமல் இருக்குமா? எடுத்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்து, நீட்டி, ஹாண்ட்ஸ் அப் என்று சொல்லி விட்டான்"

"அடடா, அப்புறம் என்ன செய்து சமாளித்தாய்?"

"என்ன செய்திருப்பேன் - ஊகம் செய்து சொல்லுங்கள் பார்க்கலாம்?"

"கெஞ்சிப் பிடித்து - அதை வாங்கினாயா?"

"கெஞ்சுவதாவது - பிடிப்பதாவது! ஒரு அடி நகர்ந்தால்கூட, தெரியாமல் டிரிக்கரை அழுத்தி விட்டான் என்றால் என்ன செய்வது?"

"பிறகு எப்படி வாங்கினாய்?"

உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவள் உற்சாகமாகச் சொன்னாள்,  "ஏமாற்றி வாங்கினேன். என்னங்க..அவனைப் பிடிக்காதீர்கள் என்று குரல் கொடுத்தேன். நீங்கள்தான் பின்னால் வருகிறீர்கள் என்று நினைத்துத் திரும்பினான். பாய்ந்து சென்று அப்படியே அமுக்கிப் பிடித்து,  வாங்கிவிட்டேன்.

மகேந்திரனுக்குப் பரம சந்தோஷம். இவள் அல்லவா காவல்துறையில் இருக்க வேண்டியவள் என்று நினைத்துக் கொண்டார்.
--------------------------------------------------
2
ஒரு மகிழ்ச்சியான விஷயம்:-)))

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. ஆனாலும் கூகுள் ஆண்டவரின் துணையோடு வகுப்பறை நடக்கும்.  (Through auto post settings in the blog) இன்றையப் பாடத்தை மேலே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்தை (விமர்சனத்தை) பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.

நாளை வழக்கம் போல பக்தி மலர் உண்டு. அது வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான பக்தி மலர். அனைவரும் நாளை தவறாமல் வகுப்பறைக்கு வந்து அந்த பக்தி மலரைப் படித்து மகிழும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

உங்களுடைய பின்னூட்டங்களும், அதற்கான பதில்களும், வாத்தியார் திரும்பி வந்த பிறகு சனிக்கிழமையன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

20.11.13

குட்டிக்கதை: அரிசி மூட்டை

 1
குட்டிக்கதை: அரிசி மூட்டை

தங்கள் பள்ளி மாணவன் அண்ணாமலை, ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்ததற்காக, பாராட்டு விழா நடந்து கொண் டிருந்தது.

நகர மேயர், மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்வித்துறை அதிகாரி, பள்ளித் தலைமை ஆசிரியர், என்று பலரும் பாராட்டிப்பேச, அவனுக்குத் 'மாணவமணி' என்ற விருதும் வழங்கப்பெற்றது.

விருது பெற்ற அண்ணாமலை, அனுமதி பெற்று ஏற்புரையாகப் பேசும் போது கலக்கலாக இப்படிச் சொன்னான்

"என்னைப் பாராட்டியவர்கள், தன் முனைப்பும், கடும் உழைப்பும்தான் என்னுடைய இந்த வெற்றிக் காரணம் என்று சொன்னார்கள். அதைவிட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு பள்ளியில் நான் சேர்ந்த புதிதில், என்னுடைய வகுப்புத் தோழன் ஒருவன் என்னுடைய உருவத்தை வைத்து, அரிசி மூட்டை என்று பட்டப் பெயரை வைக்க, அது வகுப்பு முழுவதும் பரவி, பின் பள்ளி முழுவதும் பரவி விட்டது. முதலில் முதுகுக்குப் பின்னால் இருந்து சொல்லியவர்கள் கூடப் பிறகு நேரிலும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் வருத்தமாகவும், வேதனை யாகவும் இருந்தது. பிறகு பழகிப் போய்விட்டது. அந்த வருடம் நான் ஒரு உறுதி கொண்டேன். இந்தப் பள்ளியை விட்டுப் போகும்போது, இந்தப் பெயரோடு போகக்கூடாது.அனைவரும் பாராட்டும் வண்ணம் வேறு ஒரு நல்ல பெயரோடுதான் போகவேண்டும் என்று! அந்த வைராக்கியமான உறுதிதான் என்னுடைய இந்த வெற்றிக்கும், தமிழ் மாணவ மணி என்ற சிறப்பானதொரு விருதிற்கும் காரணம்"

கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது!

மனவுறுதி, தன்முனைப்பு, முயற்சி மற்றும் கடும் உழைப்பு ஆகியவை இருந்தால் எதுதான் சாத்தியமாகாது?

அன்புடன்
வாத்தியார்

================================================================
2

 
ஆங்கிலத்தைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் நயம்பட உரைத்தது!

கவியரசர் கண்ணதாசனின் உரையை அவருடைய சொந்தக் குரலிலேயே கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்



our sincere thanks to the person who uploaded this video clipping in the net
============================================================
3
உணவைத் தேடி ஒரு வேட்டை!

கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்!



=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.11.13

யாரென்று தெரிகிறதா?

1
யாரென்று தெரிகிறதா?

கீழே ஒரு புகைப்படத்தைக் கொடுத்துள்ளேன். அதைப் பார்த்து, அதில் உள்ள
பிரபலம் யாரென்று கண்டு பிடிக்க முடிகிறதா - பாருங்கள்.

கண்டுபிடிக்க முடிந்தால் யாரென்பதைச் சொல்லுங்கள்.

சரியான விடை நாளை - புதன் கிழமை அதிகாலையில் வெளியாகும்.

அன்புடன்,
வாத்தியார்
==================================================================
====================================================================
2



நேற்றுப் பதிவில் கொடுத்திருந்தது திருவாளர் ராஜாஜி அவர்களின் ஜாதகம்.

10.12.1878ஆம் ஆண்டு காலை 5:20 மணிக்கு, தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் (அக்கிராமம் முதலில் சேலம் மாவட்டத்தில் இருந்தது. மாவட்டங்களைப் பிரித்ததில், அது இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது.)

பிறப்பின்போது கர்ப்பச்செல் இருப்பு: செவ்வாய் திசையில் 4 வருடம் 8 மாதங்கள் 28 நாட்கள்.

சுமார் 25 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் வந்த விடைகளையும் சேர்த்துதான் அந்த எண்ணிக்கை. எண்ணிக்கை குறைந் ததற்குக் காரணம். 1900ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களின் ஜாதகத்தை அடித்துப் பார்ப்பதற்கு சில கணினி மென்பொருட்களில் வசதி இல்லை. ஆகவே பல பேர் முயற்சியைக் கைவிட்டிருப்பார்கள். ஜகந்நாத ஹோரா 

கை கொடுக்கும், அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சரியான விடையை எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்
=====================================================================================================
அலசல் பாடம்.
--------------------------
இந்திய அரசியலில் ஜொலித்த நட்சத்திரங்களில் ராஜாஜி என்று அழைக்கப்பெற்ற திரு.C.ராஜகோபாலாச்சாரியும் ஒருவர். மிகவும் நேர்மையானவர். கண்டிப்பு மிக்கவர்.ஊழல் இல்லாதவர்.

அடியவன் முன்பு பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த காலத்தில், ராஜாஜி அவர்களின் மூத்தமகன் வழிப்பேரன் (திரு.என்.சுதர்சன்) என்னுடன் பணி புரிந்தார். அப்போது அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். தன் தாத்தா ராஜாஜியைப் பற்றி நிறைய கதைகள் மற்றும் செய்திகளைச் சொல்வார். நானும் ஆர்வமுடன் அவற்றைக் கேட்பேன்.

அந்த அன்பர் படித்து முடித்து வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்த போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவரை (ராஜாஜியை) நச்சரித்திருக் கிறார்கள்.    “எங்காவது இவனுக்கு வேலை வாங்கிக் கொடுங்களேன்” என்றிருக்கிறார்கள். பெரியவர் மறுத்துவிட்டார்.

“சிபாரிசுக்கெல்லாம் நான் போகமாட்டேன். அவனையே முயற்சி செய்யச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.

முதலில் மறுத்துக் கூறியவர், பிறகு வீட்டிலுள்ள ஒட்டு மொத்த நபர்களின் வேண்டுகோளைத் தவிர்க்க முடியாமல், பேரனுக்கு ஒரு அறிமுகக்
கடிதத்தைக் கொடுத்து அனுப்பினார். எங்கள் நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குனர், அந்தக் கடித்ததைப் பார்த்துவிட்டு, ராஜாஜியின்
பேரன் என்ற காரணத்திற்காக உடனடியாக வேலையில் அமர்த்திக் கொண்டார்.

ராஜாஜி அவர்கள் ஆங்கில மொழியில் அதீதமாகத் தேர்ச்சி பெற்றவர். அவருடைய மகாபாரதம் நூலைப் படித்தவர்களுக்கு அது நன்கு தெரியும். தன்
பேரனுடைய ஆங்கில அறிவைப் பார்த்துவிட்டு, நிறுவனத்திற்குக் கொடுத்த  தன்னுடைய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு அவர் எழுதியிருந்தார்:

He says that he is graduate. If he is suitable, give him an opportunity to work in your company

எப்படி இருக்கிறது பாருங்கள்? அதுதான் ராஜாஜி!!!
======================================================
சரி கதை போதும். பாடத்தைக் கவனிப்போம் வாருங்கள்

Over to Galaxy2007 Classroom
======================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

18.11.13

Astrology: Quiz.23. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.23. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி மூன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் ஒரு அரசியல் தலைவர். அகில இந்தியாவும் அறிந்த மனிதர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

15.11.13

கூகுள் ஆண்டவரும் பழநியாண்டவரும்!

 

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
   தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
       - கந்தர் அலங்காரப் பாடல்

==============================================================
குமரேசன் இருக்கையில் கோள் என்ன செய்யும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சென்னிமலை முருகனின் பொலிவான தோற்றப் படம் ஒன்றும், கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றும் அலங்கரிக்கின்றன!
===================================================================
 2
தேவாரப் பாடலைப் பாடும் சீனத்துச் சிறுமி:



===========================================================
3
கூகுள் ஆண்டவரால், அவரின் தேடு பொறியால், என்னதான் சாத்தியப்படாது?
காணொளியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்:

இந்தக் காணொளியை நமக்கு அறியத் தந்தவர் நமது வகுப்பறை மாணவர் திரு.எம்.ரவி அவர்கள். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!


Our sincere thanks to the persons who uploaded these video clippings in the net!

அன்புடன்
வாத்தியார்

==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.11.13

கட்டியணைப்பதும் அதுதான்; கழுத்தை நெறிப்பதும் அதுதான்!

 
கட்டியணைப்பதும் அதுதான்; கழுத்தை நெறிப்பதும் அதுதான்!

ஒரு தேசத்தை, தேசத்தின் மக்களைக் கட்டியணைப்பது பொருளாதாரம்தான். அதே பொருளாதாரம்தான் சமயத்தில் வீழ்ச்சி அடைந்து கழுத்தை நெறிக்க ஆரம்பித்துவிடும். ஒட்டு மொத்த தேசத்திற்குமே - ஆட்சியாளர்களில் இருந்து சாதாரணக் குடிமகன்வரை அனைவருக்கும் மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடும்.

தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை இடர்பாடுகளின்றி நடப்பதற்கும் அதே பொருளாதாரம் முக்கியம். நன்றாகப் பொருள் ஈட்டுபவனுக்குப் பல பிரச்சனைகள் இருக்காது. பணத்தைவைத்து எல்லாவற்றையும் சமாளித்துவிடுவான். அது சரியில்லாதவன்பாடு அவஸ்தைதான்.

பொருளாதாரம் எப்படி செயல் படுகிறது என்பதைப் பற்றிய ஒளி, ஒலி வடிவ உரை ஒன்றை உங்களுக்காக வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டுப் பாருங்கள். உரை நிகழ்த்தியவருக்கும் அதைக் காணொளியாக வலை ஏற்றியவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்




13.11.13

Short Story: சிறுகதை: சாமர்த்தியமான பேச்சு!

 
செட்டிநாட்டுத் திருமாங்கல்யம். திருமணத்தின்போது 
மணமகளுக்கு அணிவிற்கப்பெறும் ஆபரணம். 
இதன் பெயர் கழுத்து உரு = கழுத்திரு. 
முற்காலத்தில் 100 பவுன் எடையில் செய்வார்கள். 
இப்போது தங்கத்தின் விலை எகிறிக்கொண்டே போவதால், 
21 பவுன்களில் முடித்துக்கொண்டு விடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
திரைப்படம் ஒன்றில் நடிகை சிநேகா கழுத்திரு அணிந்திருக்கும் காட்சி. 
இந்தப் படத்தை உங்களுக்காகத்தான் கொடுத்துள்ளேன்.
திரைப்படங்களுடன் ஒப்பிட்டுச் சொன்னால்தான் நமக்கு 
(என்னையும் சேர்த்துத்தான்) மனதிற்குள் ஏறும்!

 அதே திரைப்படத்தில் நாயகி சிநேகா நாயகன் நடிகர் சேரனுடன் 
இருக்கும் காட்சி
==================================================================
Short Story: சிறுகதை: சாமர்த்தியமான பேச்சு!

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 8

(எங்கள் அப்பச்சி சட்டென்று குட்டி குட்டிக் கதைகளைச் சொல்வதில் வல்லவர். அவரை வைத்துத்தான் எனக்கு கதைகளின் மேல் ஆர்வம் ஏற்பட்டது. அவர் சொன்ன கதைகளை எழுத்தில் கொண்டு வந்து
கொண்டிருக்கிறேன். சொன்ன கதைகள் வரிசையில் இது எட்டாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை விரிவு படுத்தி  எழுதியுள்ளேன்.ஒரு தமிழ் மாத இதழுக்காக தொடர்ந்து இத்தலைப்பில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இன்று அக்கதைகளில் ஒரு கதையை உங்களுக்கு அறியத்தருகிறேன்.)

அப்பச்சி என்ற சொல் எங்கள் பகுதி வழக்குச் சொல். தந்தையை அப்படித்தான் சொல்வோம். அழைப்போம். உங்கள் மொழியில் சொன்னால், We used to call our DADDY as appachi

பெரியப்பச்சி என்றால் தந்தையின் மூத்த சகோதரர். அதாவது பெரியப்பா!

சரி இப்போது கதையைப் பார்ப்போம்:
---------------------------------------------------
கதையின் தலைப்பு: சாமர்த்தியமான பேச்சு!

1951ஆம் ஆண்டு தை மாதத்தில் ஓரு நன்நாள். திருமண வீடு ஒன்றில் நிகழ்ந்த சம்பவம் இது.  மணப்பெண்  நடுத்தரக் குடும்பம் ஒன்றைச்  சேர்ந்தவள்.  அன்றைய நிலவரப்படி ஓரு வராகன் சீதனம்.  30 பவுன் நகைகள்
என்று திருமணத்திற்குத் தோது பேசியிருந்தார்கள்.  மொத்த செலவு பத்தாயிரம் ரூபாய்க்குள் வரும். 

அன்றையத் தேதியில் பத்தாயிரம் என்பது இன்றைய மதிப்பில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் ஆகும்.

தோது என்பது இங்கே வரதட்சனையைக் குறிக்கும்.  ஓரு வராகன் என்பது 3,500 ரூபாய்! அதுதான் சீதனம்!

பர்மா நொடித்துப்போன சமயம். பர்மாவிலிருந்து திரும்பி வந்திருந்த பெண்ணின் தந்தை, பல சிரமங்களுக்கிடையே அந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். முக்கிய நகையான கழுத்திரு அவரிடம் இல்லை. திருமணத்தில் திருப்பூட்டுவதற்கும் பெண்ணின் கழுத்தில் அன்றைய தினம் அணிந்து  கொள்வதற்கும் அது அவசியம் வேண்டும்.  அந்தக் காலத்தில், கழுத்திரு இல்லாதவர்களும், பெண்ணிற்கு அதைக் கொடுக்க முடியாதவர் களும், உள்ளூரில் இருக்கும் உறவினர்  வீடுகளிர் இரவல் வாங்கிக்  கட்டிவிட்டு,  அடுத்த நாள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.

இப்போது தங்கத்தின் அபரிதமான விலை உயர்வால் செல்வந்தர்களைத் தவிர வேறு எவரும் 100 பவுன்களில்  கழுத்திரு செய்வதில்லை  பலரும் 21 பவுன் தங்கத்தில் அல்லது 16 பவுன் தங்கத்தில்தான் கழுத்திருவைச் செய்கிறார்கள். காரைக்குடியில் உள்ள கடைகளில் ரெடிமேடாகக் கழுத்திருக்கள் விலைக்குக் கிடைக்கின்றன. அத்துடன் பலரும் கழுத்திருவிற்குப் பதிலாக தங்கள் பெண்ணிற்கு வைரப்  பூச்சரம் (Diamond Necklace) போட்டு அனுப்புவதையே விரும்புகிறார்கள். பூச்சரம் என்றால் எல்லா முக்கிய நிகழ்வுகளிலும் கழுத்தில் அணிந்து  கொள்ளலாம். கழுத்திருவை வங்கி லாக்கரில்தான் வைக்க
வேண்டும்.

எங்கள் ஊரில் 50ற்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. எல்லா மண்டபங்களிலும் வாடகைக்கு ஐம்பொன்னால் செய்யப்பெற்ற கழுத்திரு கிடைக்கும். தேவைப்படுபவர்கள் அதைப் பயன் படுத்திக்  கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் இந்த வசதி கிடையாது. மணப்பெண்ணின் தந்தை எங்கள் அப்பத்தா வழியில் எங்களுக்கு  உறவு. அவர் என்  தந்தையை ஆனுகிக் கேட்க, என் தந்தையாரும்,  செல்வந்தர் ஓருவர் வீட்டில் இருந்து, கெட்டிக் கழுத்திரு ஓன்றை இரவல் வாங்கிக்  கொடுத்திருந்தார். செல்வந்தர் தன்னுடைய வீட்டில் எப்போதும் 4 அல்லது 5 கழுத்திருக்களை வைத்திருப்பார். நம் வீடுகளில் அண்டா,  குண்டா, குடங்கள் வைத்திருப்பதைப்போல செல்வந்தர்கள் கழுத்திருவை, அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள். 

கெட்டிக் கழுத்திரு என்பது 100 பவுன் தங்கத்தில் செய்யப் பெற்றதாகும்.  அன்றைய மதிப்பு ஒரு  கழுத்துருவின் விலை ஏட்டாயிரம் ரூபாய்.  இன்றைய  மதிப்பு 24 லட்ச ரூபாய்.  அதை நினைவில் வையுங்கள்.

என்னுடைய தந்தையார்,  எங்கள் பெரிய அப்பச்சி மற்றும் அவருடைய உற்ற நண்பர் ஆகிய மூவரும் அந்தத் திருமணத்திற்குச்  சென்றிருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு,  பெண் அழைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி  சிறப்பாக நடந்தேறியது.  வந்திருந்த விருந்தினர்கள்  அனைவருக்கும் மாப்பிள்ளை வீட்டில் இரவு உணவு  சிறப்பாக வழங்கப் பெற்றது.

விருந்து முடிந்து என் தந்தையார்,  புறப்பட எத்தனிக்கும்போது,  பெண்ணின் தந்தை ஓடி வந்து, “வீரப்பா, போய் விடாதே. எல்லா  வேலையும் முடிந்து விட்டது.  சம்பந்தியிடம் கழுத்திருவை வாங்கிக்கொண்டு  புறப்பட வேண்டியதுதான்.  நானும் வருகிறேன். துணைக்கு ஆள் வேண்டும். போகிற வழியில், இரவல்  கொடுத்தவரிடம் நகையைக் கொண்டு போய்த் திருப்பிக் கொடுத்து விட்டுப் போய் விடுவோம்” என்று  சொன்னார்.

என் தந்தையாரும் சரியென்று சொல்ல, அவர் தன் சம்பந்தி செட்டியாரிடம் சென்று, “அய்த்தான், நாங்கள்  புறப்பட வேண்டும்,  கழுத்திருவைத் தாருங்கள். புறப்படுகிறோம்” என்று சொன்னார். 

அவர் மணவறைக்குள் சென்று,  அங்கே இருந்த தன் மனைவிடம்  பேச்சுக் கொடுக்க, அந்த ஆச்சி  சொன்னார்கள்: 

“முறைச் சிட்டையில் திகட்டல் இருக்கிறது.  அதைக் காலையில் பேசி, பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு  கழுத்திருவைக்  கொடுப்போம்.  இப்போது இல்லை என்று சொல்லி  அவரை அனுப்பிவையுங்கள்”

“இல்லை என்று எப்படிச் சொல்வது? அது நன்றாகவா இருக்கும்?” என்று புலம்பலாகச் சொல்ல, ஆச்சி  உடனே பதில் அளித்தார்கள்.

“இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? மாற்றிச் சொல்லுங்கள். இன்று வெள்ளிக்கிழமை. பெண்பிள்ளைகள்  இன்று வேண்டாம் என்று  சொல்கிறார்கள். ஆகவே,  நகையை நாளை வாங்கிக்கொண்டு போங்கள்
என்று  சொல்லுங்கள்”

அப்படியே அவரும் வந்து விஷயத்தைச் சொல்ல,  பெண்ணின் தந்தையாருக்குத் திக்’ கென்றிருந்து.

அவர் நேராக வந்து, என் தந்தையாரின் காதில் விஷயத்தைச் சொல்லி,  என்ன செய்யலாம் என்று குழம்பியவாறு கேட்டிருக்கிறார்.

அதைக் கவனித்துவிட்ட எங்கள் பெரியப்பச்சி, “டேய் என்னடா,  கிசுகிசு?  ஓருத்தன் காதை இன்னொருத்தன் கடிக்கிறீர்கள்?  எதுவாக இருந்தாலும்,  வெளிப்படையாகச் சொல்லுங்கடா?” என்று அதட்டவும்,  இருவரும் அவரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

ஓரு விநாடி கூட யோசிக்காமல் அவர் பதில் சொன்னார்:

“இப்படிக் கேட்டால் வராதுடா. நான் கேட்கிறேன் பார்,  உடனே கொண்டுவந்து கொடுப்பான் பார்”

அதை உடனே செயல்படுத்தவும் முனைந்தார். ஆருகில் இருந்த ஓரு சிறுவனை விட்டு,  மாப்பிள்ளையின் தந்தையை ஆழைத்துவரச்  சொன்னார். எங்களூரில், எங்கள் பெரியப்பச்சியைத் தெரியாதவர்கள் ஓருவர்
கூட இருக்க மாட்டார்கள். பிரபலமானவர். பெரியப்பச்சி  கூப்பிடுகிறார் என்று தெரிந்தவுடன், அவரும் விழுந்தடித்துக் கொண்டு வந்து அவர் எதிரில் நின்றார்.

“டேய்,  நாங்கள் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும்.  கழுத்திரு என் தம்பி இரவலாக வாங்கிக் கொடுத்தது. அதைக் கொடுத்தால்,   எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவோம்”

“அதான் சம்பந்தியிடம் சொன்னேனே அண்ணே!”

“என்ன சொன்னாய்?”

“இன்று வெள்ளிக்கிழமை. நாளை வந்து வாங்கிக்கொண்டு போங்கள் என்று சொல்லியிருக்கிறேனே.......”

எங்கள் பெரியப்பச்சி இடைமறித்து அவருடன் தொடர்ந்து பேசினார்:

“என்னடா வெள்ளிக்கிழமை.  நாங்கள் எங்கள் பெண்ணையே வெள்ளிக் கிழமை என்று பாராமல்,  உங்கள்  வீட்டிற்குக் கூட்டி அனுப்பியிருக்கிறோம். அவளைவிடவா அந்த நகை உசந்தது?”

“இன்று திருப்பிக்கொடுக்க என் சம்சாரம் பிரியப் படவில்லை........... அதனால்தான்”

“ஓகோ! உன் சம்சாரம் பிரியப்படவில்லையா? அப்படி யென்றால் சரி.  நாங்கள் நால்வர் இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் ஓரு  தம்ளர் சூடாகப் பால் கொண்டு வரச் சொல்.  அதோடு உங்கள் வீட்டுப்  பட்டாலையில் (பெட்டக சாலையில்) நான்கு மெத்தை விரிக்கச் சொல், இரவு  படுத்திருந்து விட்டு, அதிகாலை எழுந்தவுடன்  நகையை வாங்கிக்கொண்டு போகிறோம்.  சரிதானே?” என்று பெரியப்பச்சி அதிரடியாகக்  சொல்லவும், அவரின் முகம் பேயரைந்ததைப் போலாகிவிட்டது.

ஓடிச்சென்று,  தன் மனைவியைக் கடிந்து கொண்டார்.  அதோடு மாணிக்கம் செட்டியார்,  படுத்திருந்துவிட்டு,  ஆதிகாலையில்,  நகையை வாங்கிக்கொண்டு போவதாகச் சொன்னதையும் சொன்னார். கழுத்திருவைக்
கொடுத்தவர்கள்,  படுத்திருந்து, அதிகாலை நகையை வாங்கிக் கொண்டு போனால்,  போனது ஊருக்குள் தெரிந்தால், அது நமக்கு அசிங்கம்,  கேவலம் என்றும் சொன்னார்.

அடுத்த நிமிடம்,  நகை உரியவர்களிடம் வந்து சேர்ந்தது!

இது உண்மையில் நடந்த கதை.  ஓரு விஷயத்தை எப்படிக் கையாள வேண்டும்? சாமர்த்தியமாக எப்படி பேசவேண்டும்? என்பதற்கு  உதாரணமாக இந்தக் கதையை என் தந்தையார் என்னிடம் சொல்வார்.

உங்களுக்காக அதை இன்று எழுத்தில் கொடுத்திருக்கிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.11.13

Astrology: ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்!

 

Astrology: ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்!

நேற்றைய புதிருக்கு 100ற்கும் மேற்பட்டவர்கள் சரியான பதிலைச் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் பின்னூட்டத்தில் மட்டுமல்லாமல், தனி மின்னஞ்சல் மூலமாகவும் நிறையப் பேர்கள் பதில் எழுதியுள்ளார்கள். அவர்களையும் சேர்த்துத்தான் சொல்லியுள்ளேன். அசத்தல் பதிலால் அல்ல. அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டதால்!

உண்மைதான்! பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம்தான் அது. பகவானுக்கே ஜாதகமா என்று கேட்காதீர்கள். பூமியில் அவதாரம் எடுத்ததால் அவருக்கும் ஜாதகம் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர், அவருடைய ஜாதகத்தை தனது ராமகாவியத்தில் கொடுத்திருக்கிறார்.

"ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்" என்று ராமபிரானைப் பெருமைப் படுத்திச் சொல்வார்கள்.

நேற்று வந்த பதில்களில் முக்கியமான செய்திகளுடன் உள்ள பின்னூட்டங் களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

சரியான பதிலைச் சொன்னவர்களுக்கும் நன்றி. கலந்துகொண்டவர்களுக்கும் நன்றி!

நேற்றய பதிவிற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. வகுப்பறையின் 1,500 வது பதிவு அது!
---------------------------------------------------
1
////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வாத்தியாருக்கு வணக்கம்.
    Shri. ராமர் ஜாதகம்.
    சித்திரை மாதம் வளர்பிறை நவமி அன்று கடக லக்னத்தில் ஐந்து கிரகங்கள் (குரு சனி செவ்வாய் சுக்கிரன் சூரியன்) உச்சத்திலும் புனர்பூச நட்சத்திரத்தில் Shri. ராமர் அவதரித்தார்.
    ச‌ந்திரசேகரன் சூரியநாராயணன்
Monday, November 11, 2013 5:33:00 AM/////

2   
///////Blogger Ramasamy said...
    Sir,
    The native is bahwan sri Ramar.
    5 grahangal ucham - this is possible in god's avatars only.
    3 panchamaha purusha yogam. Amsa yogam-guru, sasa yogam-sani, ruchuga yogam-mars.
    I read in books 'Uchanai uchan parpathal Ramar vanavasam senrar'
    In some books, buthan is in mesham.
    Monday, November 11, 2013 6:35:00 AM/////

3  
/////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Indha Jathagam Avadhara Purusaragiya "Sri Ramar" Jadhagam endru enakku thondrugiradhu.
    Kattathil Budhan mattum naan paartha ramar jadhagathirkum idharkkum satru veru-padugiradhu. Naan paarthadhil Mesathil budhan, ingey rishabathil Budhan.
    Thank You.////
   
4  
/////Blogger Kirupanandan A said...
    5 கிரகங்கள் உச்சம், 1 கிரகம் ஆட்சி. பகவான் ஸ்ரீ ராமரின் ஜாதகம். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது.
    Monday, November 11, 2013 7:50:00 AM//////

5
//////Blogger Srinivasa Rajulu.M said...
    இந்த உன்னத ஜாதகம் ராமபக்தர்களின் பூஜை அறையை அலங்கரிக்கும் ஒரு அவதார புருடனின் ஜாதகம்.
    'சக்கரவர்த்தித் திருமகன்' என்றும் 'காகுத்தன்' என்றும் 'ரவி குல திலகன்' என்றும் அழைக்கப்படும் இவர் அவதரித்த நேரத்தில், இறையாணைக்குக் கட்டுப்பட்டது போல கிரகங்கள் கைக்கட்டி வாய் பொத்தி அவரவர்களின் உச்ச வீட்டிலோ, ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ இடம் பெற்றிருந்தார்கள். (புதன் கூட ரிஷபத்தில் இருந்திருப்பாரோ?)
    அவதார நோக்கமே, இந்த கிரகங்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்த ராக்கத மன்னனிடம் இருந்து விடுதலை பெற்றுத் தருவதே. (சனைஸ்சரனின் காலை முறித்துப் போட்ட அந்த அரக்கன் கதையை வாத்தியார் 'மாந்தி' பற்றிய பாடத்தில் கொடுத்துள்ளார்)
    Monday, November 11, 2013 8:00:00 AM//////

6   
/////Blogger Srinivasa Rajulu.M said...
    சில உபரித் தகவல்கள்:
    1) அச்சில் கிடைத்துள்ள ஸ்ரீ ராமரின் ஜாதகத்தில் 'புதனின்' அமைப்பு வெவ்வேறாகக் கொடுக்கப்பட்டு இருந்தாலும், வாத்தியார் கொடுத்துள்ள படி 'புதன் ரிஷப ராசியில் இருந்திருப்பார்' என்றே எண்ணத் தோன்றுகிறது (இதை முதல் பதிவில் நான் சரியாகக் குறிப்பிடவில்லை)
    2) வைணவச் சுடராழி திரு.ஜோசஃப் அவர்களின் காணொளி (மூன்று பாகங்கள்), காணவேண்டிய ஒன்று. கம்பனின் பாடல் ராமபிரானின் ஜாகதக் குறிப்பை இரத்தினச் சுருக்கமாக உணர்த்துகிறது. (வால்மீகியும் ஒரு ஸ்லோகத்தில் இந்த அமைப்பைச் சொல்லியிருக்கிறார்)
    1) http://www.youtube.com/watch?v=5FIToGe7Cj0
    2) http://www.youtube.com/watch?v=JFXd4_6z_ZY
    3) http://www.youtube.com/watch?v=h5X-aBGb0SI
    Monday, November 11, 2013 8:21:00 AM/////

7.   
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    I see 5 planets Uccham in this chart. Since you have mentioned that any software won't help us find the birth date, I think it is not a person from this Ugam. I heard Rama's chart has 5 planets uccham.
    Am I correct? Is this Lord Rama's chart?
    Monday, November 11, 2013 8:35:00 AM//////

8.   
/////Blogger sellaprasad said...
    காக்கும் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் ஸ்ரீராமருடைய ஜாதகம். பிறந்த தேதி கி.மு. 5114 ஜனவரி 10ம் தேதி பகல் 12 முதல் 1 மணிக்குள். http://bhakthiplanet.com/2013/04/birth-date-of-rama/
    Monday, November 11, 2013 9:01:00 AM//////

9.   
/////Blogger Srinivasa Rajulu.M said...
    இன்னுமொரு தகவல்:
    வால்மீகி, பாலகாண்டம் பதினெட்டாம் அத்தியாயம் 15-ஆம் ஸ்லோகம்:
    पुष्ये जातः तु भरतो मीन लग्ने प्रसन्न धीः।
    सार्पे जातौ तु सौमित्री कुळीरे अभ्युदिते रवौ॥ १-१८-१५
    இதன் அர்த்தமாவது:
    இராம பிரானைத் தொடர்ந்து, பரதன் அடுத்த நாள் பூச நக்ஷத்திரத்தில் மீன லக்கினத்திலும்;
    இலக்குவனும், சத்ருக்னனும் அதற்கும் அடுத்த நாள், ராமனைப் போலவே கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்திலும் பிறந்தனர்.
    ஆகவே, வாத்தியார் கொடுத்துள்ள ஜாதகம், இராமன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோருக்குப் பொருந்தும்.
    ஆனாலும், இது இராமன் ஜாதகம் என்றே பிரசித்தி பெற்றது./////

10.   
/////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Sri Rama Jayam....
    This is the horoscope of the Lord
    SriRama....
    நான் தினமும் வணங்கும் ஸ்ரீ ராமனின் ஜாதகம் .
    பி.கு. (இது உண்மை, எனது பாட்டி என் தாயிடம் உனக்கு அந்த ஸ்ரீராமனே வந்து பிறப்பான் என்று அனுதினமும் சொல்லியே நான் ராமனின் லக்னத்தில் பிறந்தேன் என்று எனக்கு ஸ்ரீராமன் என்று பெயர் சூடினார்கள் என்று சொல்வார்கள்.
    Monday, November 11, 2013 10:55:00 AM/////

11.   
/////Blogger சரண் said...
    என்னுடைய கணிப்பு இது ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் ஜாதகம்.
    இந்த கணிப்பிற்கு காரணம்:
    1.
    பிறந்த தேதியை கணிக்க எந்த மின் பொறியும் உதவாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி என்றால் இந்த ஜாதகத்துக்குரியவர் சரித்திரத்தையும் தாண்டி உதாரண புருஷர் அல்லது புராண காலத்தவருடையதாக இருக்க வேண்டும்.
    2.
    சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணரின் ஜாதகம் ஒரு ஆன்மிக மாத இதழில் வெளியாகியிருந்தது. ஒரு நொடி அதுவா என்று தோன்றினாலும் கிருஷ்ணன் ரோகிணி நட்சத்திரம். ஆனால் இங்கே சந்திரன் கடகத்தில். ஆக ஜாதகர் புனர்பூசம், பூசம், ஆயில்யத்தில் இருக்க வேண்டும். ராமரின் நட்சத்திரம் புனர்பூசம் என்று தெரியும். அதனால் அந்த கண்ணோட்டத்தில் தேடினேன்.
    3.
    ராம நவமியைப் பற்றி இணையத்தில் தேடிய போது சித்திரையில் கொண்டாடப்படுவது தெரிந்தது. சூரியன் உச்சம். ஓ.கே.
    4.
    சூரியனும் சனியும் உச்சமானாலும் இருவரும் சம சப்தம பார்வையாக இருப்பதால் தந்தைக்கு பிடித்த பிள்ளையாக ராமன் இருந்தாலும் அவராலேயே காட்டுக்கு அனுப்பப்படும் சூழ்நிலை.
    5.  7ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம். அவர் 5 மற்றும் 10க்கு உரியவர். கடக ராசிக்கு யோக காரகன். இடையில் சிரமப்பட்டாலும் காட்டுக்கு சென்றாலும் அவர் பாதணியை வைத்து ஆட்சி புரிந்த பரதன், காட்டுக்கு கூடவே வந்து கஷ்டப்பட்ட லக்ஷ்மணன் உள்ளிட்டோரை இளைய சகோதரர்களாக பெற்றிருந்தார்.
    6.  6ஆம் இடத்தில் இருந்த ராகு இவருக்கு கூனி உட்பட எதிரிகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறான்.
    7.  ஆயிரம் சோதனைகள் வந்தாலும் லக்னத்தில் அமைந்த உச்ச குரு அவதார மூர்த்தியாக அவர் இருக்க காரணம்.
    8.  4ஆம் இடத்தில் அமர்ந்த உச்சம் பெற்ற சனி 10ஆம் பார்வையாக லக்னத்தை பார்ப்பதும் உலகப்புகழுக்கு ஒரு காரணம்.
    9.  9ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் உச்சம், 7ஆம் அதிபதி சனி 4ல் உச்சம் இவை யாவும் கற்புக்கரசியாக போற்றப்படும் சீதாலெட்சுமி ராமருக்கு மனைவியாக அமைந்ததற்கும், ராமர் ஏக பத்தினி விரதனாக இருந்ததற்கும் ஒரு காரணம். சனீஸ்வரன் மேல் நாம் ஆயிரம் குற்றச்சாட்டு சொன்னாலும் நீதிமான். நேர்மைக்கு தலை வணங்குபவன்.
    வாத்தியார் ஐயா, என் மனதில் நினைவில் நின்ற விஷயங்களை வைத்து மனதில் தோன்றியதை பதிலாக எழுதியிருக்கிறேன்.
    நன்றி.
    Monday, November 11, 2013 11:15:00 AM/////

12.  
/////Blogger Arul Murugan. S said...
    The horoscope undoubtedly belongs to my favourite deity Lord Shri Ram, as five planets are in exalted state with kadaga rasi & kadaga lagna and 3 Pancha Mahapurusha Yogas.
    Additional comment: I have heard that Emperor Akbar had 3 Panchamahapurusha Yogas in his horoscope./////

13.   
/////Blogger Megalabala said...
    ஐயா நீங்கள் கொடுத்துள்ள இந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் தசரத மைந்தன் ஶ்ரீராமர்!
    லக்கினத்திலேயே லக்னாதிபதி சந்திரனுடன் குரு! குருமங்கள யோகம். அத்துடன் குரு, செவ்வாய், சுக்கிரன், சூரியன், ஆகியவை உச்சம். தேவையில்லாமல் சனியும் உச்சம். சனிதான் அத்தனையையும் கெடுத்து வைத்தார்! சரிதானா ஐயா?
    Monday, November 11, 2013 2:51:00 PM/////

14
//////Blogger kmr.krishnan said...
    முந்தைய பின்னூட்டம் பதிவான‌தா என்ற சந்தேகம் வந்திவிட்டதால் மீண்டும் எழுதுகிறேன்.
    இது பகவான் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியின் ஜாதகம்.//////

15.   
/////Blogger Senthil Nathan said...
    அய்யா
    பார்த்த உடனேயே தெரிகிறது, இந்த ஜாதகம் யாருடயது என்று
    "அவர் மனித குல மாணிக்கம்", மனிதன் ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் வாழ்ந்துக்காண்பிக்க பிறந்தவர், சூரிய வம்சத்திலும், ரகு குலத்திலும் பிறந்த மானிடர்களின் முன்னோடி "ஸ்ரீ இராமர்"
    பதில் சொல்லவே பெருமையாய் இருக்கிறது.....
    துரை.செந்தில் நாதன்/////
---------------------------------------------------------
புதிருக்கான உங்கள் விடைகளை மின்னஞ்சல் மூலம் எழுத வேண்டாம். பின்னூட்டம் மூலமே எழுதுங்கள். Please use the comments box in the blog for your answers and other comments.மின்னஞ்சல் மூலம் எழுதினால் கணக்கில் வராது. மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

அன்புடன்
வாத்தியார்


பி,கு: மின் தடை மற்றும் UPS Unitன் சொதப்பல் காரணமாக இன்று பதிவுகளை வலையே ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பொறுத்தருள்க!
==============================================================
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.11.13

Astrology: Quiz.23.உங்கள் ஜோதிட அறிவிற்கு சவாலான ஜாதகம்!

 

Quiz.23.உங்கள் ஜோதிட அறிவிற்கு சவாலான ஜாதகம்! ஜாதகர் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி மூன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

அதுதான் இங்கே கஷ்டம். இந்த ஜாதகத்திற்குக் கிரக அமைப்புக்களின் நிலையை/கணக்கை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்க எந்த மின்னியல் பொறிகளும் உங்களுக்கு உதவாது.

ஜாதகத்தின் அமைப்பை வைத்தும், உங்கள் சொற்ப அல்லது அதிகமான ஜோதிட அறிவை வைத்துத்தான் கண்டுபிடிக்க முடியும்.

அதனால்தான் தலைப்பிலேயே சொன்னேன். உங்கள் ஜோதிட அறிவிற்கு ஒரு சவாலான ஜாதகம் இது என்று.

க்ளூ வேண்டுமா?

க்ளூ கிடையாது. எப்படி க்ளூ கொடுத்தாலும் குட்டு உடைந்து விடும். ஆகவே க்ளூ கிடையாது.

முடிந்தவர்கள் பதில் எழுதுங்கள்

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.11.13

எதிர்காலத்தின் இசை!




எதிர்காலத்தின் இசை!

பக்தி மலர்

இந்த வாரம் பக்தி மலரை ஒரு அதிசயமான முருகன் பாடல் அலங்கரிக்கின்றது.

பாடலைப் பாடுபவர் சுசீலா ராமன்.
நமக்கு அறியத்தந்தவர் நம் வகுப்பறை மாணவர்.திரு.எம்.ரவி.
இருவருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
இப்பாடல் பெங்களூர் ரமணியம்மாள் அவர்களின் கணீர்க்குரலால் பாடப் பெற்றது. அத்துடன் மிகவும் பிரபலனானது.

அப்பாடலின் வரிவடிவம்:




 http://youtu.be/_e_Y5n9D3wg

இப்பாடலின் காணொளி வடிவத்தை வலையில் ஏற்றி வைத்துள்ள அன்பருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக!

Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

7.11.13

Astrology: திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்



Astrology: திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்

Astrology: 22ஆம் எண் புதிருக்கான பதில்!

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான, முக்கியமான பதில்:

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இது!
Example horoscope for Denial of Marriage
ஜாதகிக்கு திருமணம் நடைபெறவே இல்லை.

ஏழில் சூரியனுடன், ராகு கூட்டாக உள்ளதாலும், அத்துடன் சுக்கிரன் நீசமாகி எட்டாம் வீட்டில் அமர்ந்ததாலும் ஜாதகி திருமணமே ஆகாதவர்
என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னவர் திருமதி ஜனனி முருகேசன். அவருக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள் (The native will be a unmarried as sun in 7th house in the combo of raghu which is very unfavorable position for marriage.Also the sukran is neecham in 8th house. என்று தனது பின்னூட்டத்தில் சொல்லி உள்ளார். அனைவரையும் அதைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்)

அதைப்போலவே திரு,ராமசாமி அவர்களும், திருமதி தனலெட்சுமி அவர்களும், திரு. kaven (கெளரி சங்கர்)அவர்களூம் ஜாதகிக்கு மண வாழ்க்கை கிடையாது என்பதை அடித்துச் சொல்லியுள்ளார்கள். அவர்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

இடைச் சேர்க்கை: காலை 12.15 மணிக்கு
திருமதி ராதா ஸ்ரீதர் அவர்களும்  சரியான பதிலை எழுதியுள்ளார். இதை அவர் சுட்டிக்காட்டியபோதுதான் என் கவனத்திற்கு வந்தது. Oversight mistake.  அவருக்கும் எனது பாராட்டுக்கள்
------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கணிசமான அளவு, தங்களுக்கு இன்னும் திருமணமாகாததைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதாக இருக்கும். “சார், எனக்கு எவ்வளவோ முயன்றும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணமாகும்?” என்று கேட்டிருப்பார்கள்.

முற்காலத்தில் - அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிற்குப் 18 வயதானால், பெற்றவர்கள் முட்டிமோதி அவளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார்கள். ஆண்களுக்கு 21 வயதானால் போதும் செய்து வைத்துவிடுவார்கள்

இன்றையப் படிப்பு, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால், பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் வயது தள்ளிக்கொண்டே போகிறது. 25 வயது வரை பெண்களும், 30 வயதுவரை ஆண்களும் திருமணமாகாதது குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லை.

32 வயதைத் தாண்டினால்தான் கவலைப்பட ஆரம்பிக்கின்றார்கள்.

சிலருக்கு 35 வயது தாண்டியும் திருமணமாகவில்லை என்றால், யோசிக்க வேண்டிய விஷயம். அது அபாய கட்டம். குறிப்பாகப் பெண்களுக்கு அது சிக்கலான கட்டம்.

சில பெண்கள் திருமணமாகாமலேயே - அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது உண்டு.

ஜாதகத்தைப் பாருங்கள்.


இது ஒரு பெண்ணின் ஜாதகம். அம்மணி நன்றாகப் படித்தவர். வாத்தியாராகப் பணி செய்தவர். அவருக்குத் திருமணமே கூடி வராமல் போய்விட்டது. கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஏழாம் வீட்டில் ராகு. ஏழாம் வீட்டுக்காரன் சூரியனும் அந்த வீட்டிலேயே உள்ளான. ராகுவுடன் சேர்ந்து அவனும் கெட்டுள்ளான். 10ல் இருக்கும் சனிஷ்வரன் 10ஆம் பார்வையாக ஏழாம் வீட்டைப் பார்க்கிறார். அவர் லக்கினாதிபதியாக இருந்தாலும், 7ல் விழுகும் அவரது பார்வை தீமையானதுதான். placement, association & aspect of 4 malefic (including ketu) planets, 7th house is totally afflicted. ஏழாம் வீடு முழுதாகக் கெட்டு விட்டது.

அத்துடன் பாக்கியத்தைத் தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் - அந்த வீட்டிற்கு - பாக்கியஸ்தானத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளார். அது அவருக்குத் தீய வீடு. அத்துடன் பாக்கியத்திற்கு 12ஆம் அதிபதி புதனும் அங்கேயே உள்ளார். அது சாதகமான அமைப்பு அல்ல!

ஆகவே ஜாதகப்படியே ஜாதகிக்குத் திருமணத் தடை உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு ஆறுதல், லக்கினாதிபதி சனி, 11ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து10ல் உள்ளார். ஆகவே

ஜீவனத்திற்குக் குறை ஏற்படவில்லை. ஜாதகி தன் காலிலேயே நின்று டீச்சர் வேலை செய்து வாழ்நாளைக் கெளரவமாக ஓட்டினார்

7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
---------------------------------------------------------------------------------------------------
பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இது போன்ற அலசல் பாடங்கள், கேள்விகளுடன் உள்ள புதிர்ப் பாடங்கள், உதாரண ஜாதகங்கள் எல்லாம் வகுப்பறையில் இனி வராது. Galaxy2007 வகுப்பில் மட்டுமே வரும். இதை உங்களின் மேலான தகவலுக்காகச் சொல்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.11.13

Astrology: Quiz No.22: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.22: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி இருபத்தியிரண்டு!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.




அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=======================================================

5.11.13

விலையை கேட்டாலே கண்ணீர் வருது!

 
விலையை கேட்டாலே கண்ணீர் வருது!

எதெதற்குக் கண்ணீர் வரும் என்று எழுதினால் பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படி எல்லாம் எழுதி உங்களை இம்சிக்க விரும்பவில்லை. ஒரே ஒரு
செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

வெங்காயத்தை நறுக்கும் போது அல்லது வெட்டித் துண்டுகளாக்கும் போதுதான் கண்ணீர் வரும் என்பதில்லை! இப்போது நாளுக்கு நாள் உயர்ந்து
கொண்டேயிருக்கும் அதன் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது.

ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு அரை கிலோ வெங்காயமாது சமையலுக்குத் தேவை. இன்று வெங்காயம் விலையால் செஞ்சுரி அடித்திருக்கிறது.. ஒரு கிலோ வெங்காயத்தின் வில்லை Rs.100:00

இன்னோவா காரில் போகிறவனுக்கு விலையைப் பற்றிக் கவலையில்லை. இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கின்றவன் என்ன செய்வான்
சொல்லுங்கள்?

பனை ஏறிவிழுந்தவனை கடா ஏறி மிதித்ததாம்’  என்ற கிராமத்துக் கதை ஒன்று உள்ளது. அதாவது பனை மரத்தின் உச்சியில் இருந்து தவறி
விழுந்தவன், ‘அம்மா...சாமி.. அய்யோ ...சாமி’ என்று எழுவதற்குள், அந்தப் பக்கம் தறிகெட்டு ஓடி வந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்றும் அவனை
மிதித்துவிட்டுச் சென்றதாம். ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள்.

அதுபோல ஒரே நேரத்தில் இரண்டு அவலங்கள். மழை அதிகரித்துள்ளதால் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து, வரத்தும் பாதியாகக் குறைந்துள்ள தாம். நியாயமில்லாத மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் சேர்ந்து விலை உயரக் காரணமாம்.

அரசு என்ன சொல்கிறது?

Onion price rise may be due to hoarding: Centre

பதுக்கி வைத்திருக்கிறவனின் கிடங்குகளில் ரெய்டு நடத்தி, ஆசாமிகளை உள்ளே பிடித்துப் போட வேண்டியதுதானே?

ஆளுங்கட்சிகள் மற்றும் இன்றி எதிர்கட்சிகளும் இது பற்றிக் கவலைப் படாமல் இருக்கின்றன.

அவர்களுக்கு இதையெல்லாம் விட முக்கியப் பிரச்சினைகள் பல உள்ளன!

அடுத்து வரவுள்ள பாராளுமன்றத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? யாருடன் கூட்டு சேர்வது? அதுதான் முக்கியப் பிரச்சினை.

நீங்களும் நானும் அவதிப்பட்டால் அவர்களுக்கு என்ன கவலை? நாட்டு நலனில் என்ன அக்கறை?

முன்பு ஒருமுறை சூப்பர் ஸ்டார் சொன்னதைப்போல, கடவுள்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்


அடுத்த (அலசல்) புதிர் போட்டி நாளை வெளிவரும். பொறுத்திருங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.11.13

Astrology: Quiz.21. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.21. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தொன்று.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

1.11.13

வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

 
 
வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

நமது வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

பஞ்சாபியரைத் தன் புகழ்பாட வைத்த பழநிஅப்பன்!


பஞ்சாபியரைத் தன் புகழ்பாட வைத்த பழநிஅப்பன்!

பக்தி மலர்

இனம், மதம், மொழி என்று அனைத்தையும் தாண்டி எல்லோரையும் ஈர்க்கக்கூடியவன் பழநிஅப்பன். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சர்தார்ஜி ஒருவர், தமிழைக் கற்றுக்கொண்டு, முருகனின் பெருமைகளைச்
சொல்லும் அருணகிரிநாதன் கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றைப் பாடுவதை இன்று பதிவிட்டிருக்கிறேன்.

அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

இதை நமக்கு அறியத்த தந்த நமது வகுப்பறை மாணவர் திரு..சந்திரசேகரன் சூரியநாராயணன் அவர்களுக்கு  நமது நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Link:  http://www.youtube.com/watch?v=4goRNHD8oo0
Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
============================================================