1
குட்டிக்கதை: அரிசி மூட்டை
தங்கள் பள்ளி மாணவன் அண்ணாமலை, ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்ததற்காக, பாராட்டு விழா நடந்து கொண் டிருந்தது.
நகர மேயர், மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்வித்துறை அதிகாரி, பள்ளித் தலைமை ஆசிரியர், என்று பலரும் பாராட்டிப்பேச, அவனுக்குத் 'மாணவமணி' என்ற விருதும் வழங்கப்பெற்றது.
விருது பெற்ற அண்ணாமலை, அனுமதி பெற்று ஏற்புரையாகப் பேசும் போது கலக்கலாக இப்படிச் சொன்னான்
"என்னைப் பாராட்டியவர்கள், தன் முனைப்பும், கடும் உழைப்பும்தான் என்னுடைய இந்த வெற்றிக் காரணம் என்று சொன்னார்கள். அதைவிட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு பள்ளியில் நான் சேர்ந்த புதிதில், என்னுடைய வகுப்புத் தோழன் ஒருவன் என்னுடைய உருவத்தை வைத்து, அரிசி மூட்டை என்று பட்டப் பெயரை வைக்க, அது வகுப்பு முழுவதும் பரவி, பின் பள்ளி முழுவதும் பரவி விட்டது. முதலில் முதுகுக்குப் பின்னால் இருந்து சொல்லியவர்கள் கூடப் பிறகு நேரிலும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்தில் வருத்தமாகவும், வேதனை யாகவும் இருந்தது. பிறகு பழகிப் போய்விட்டது. அந்த வருடம் நான் ஒரு உறுதி கொண்டேன். இந்தப் பள்ளியை விட்டுப் போகும்போது, இந்தப் பெயரோடு போகக்கூடாது.அனைவரும் பாராட்டும் வண்ணம் வேறு ஒரு நல்ல பெயரோடுதான் போகவேண்டும் என்று! அந்த வைராக்கியமான உறுதிதான் என்னுடைய இந்த வெற்றிக்கும், தமிழ் மாணவ மணி என்ற சிறப்பானதொரு விருதிற்கும் காரணம்"
கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது!
மனவுறுதி, தன்முனைப்பு, முயற்சி மற்றும் கடும் உழைப்பு ஆகியவை இருந்தால் எதுதான் சாத்தியமாகாது?
அன்புடன்
வாத்தியார்
================================================================
2
ஆங்கிலத்தைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் நயம்பட உரைத்தது!
கவியரசர் கண்ணதாசனின் உரையை அவருடைய சொந்தக் குரலிலேயே கேட்டு மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
our sincere thanks to the person who uploaded this video clipping in the net
============================================================
3
உணவைத் தேடி ஒரு வேட்டை!
கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்!
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

மிகவும் அருமையான குட்டி கதை.
ReplyDeleteகுட்டிக்கதை நன்றாக் உள்ளது. பள்ளியில் பெயர் வைப்பது சுவாரஸ்யமானது. ஒரு சக மாணவனின் பெயர் 'மூணுபூரி';இன்னொருவன் 'அஞ்சுஇட்லி'
ReplyDeleteஅதுபோல இது அரிசிமூட்டை; அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டது அபாரம்.
கவியரசு கண்ணதாசன் அந்த உரை தற்போது நடந்து வரும் ஒரு விவாதத்திற்கு முன்னரே அவருடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆம்!தமிழை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதலாமே என்று ஒரு ஆலோசனை முன் எடுக்கப்பட்டது. அதாவது இப்போது நான் ஆங்கில எழுத்துகளை வைத்து
தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்கிறேன் அல்லவா, அதே போல டிரான்ஸ்லிடெரேஷன் ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதலாமே என்பது ஒரு பார்வை. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மிருகங்கள் ஒன்றையொன்று அடித்து உண்பது இயற்கை. மனிதன் அப்படி சக மனிதனை உணவாகச் சாப்பிடாவிட்டாலும் அதற்குச்சமமான அடுத்தவர்களின் வாழ்வைக் கெடுப்பது என்பதைத் திட்டமிட்டுச் செய்கிறான்.
குட்டிக் கதை அருமை.
ReplyDeleteகண்ணதாசன் உரை மிக ரசிக்க வைத்தது.
01.
ReplyDeleteஅவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும் என்ற
பா.விஜய் அவர்களின்
பாடல் வரிகள் நிழலாடியது
(பாடல் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே)
02.
எண்ணங்களை வெளிப்டுத்துவதே
எல்லோருக்கும் மொழி
இது பற்றி சொன்னால்
இப்போதும் பிரச்சனை தான்
03.
உணவை தேடி என சொன்னது
உடலுக்கான உணவு
எண்ணங்களுக்கான உணவில் தான்
எல்லோரும் யாரையே நம்பி இருக்கின்றனர்
இந்த காண் ஒளியை பாருங்கள்
இது சொல்ல வரும் விஷயம் புரியும்
http://www.youtube.com/watch?v=qlyjvZhdg7s
----------
ஒரு
பாசந்தி
பக்கோடா
பிஃல்டர் காபி சாப்பிட்ட மாதிரி
பேஷ்.. பேஷ்..
குட்டிக் கதை அருமை... கண்ணதாசன் காணொளிக்கு நன்றி ஐயா...
ReplyDelete////Blogger Chokkan Subramanian said...
ReplyDeleteமிகவும் அருமையான குட்டி கதை.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கான ஊக்க மருந்து!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteகுட்டிக்கதை நன்றாக் உள்ளது. பள்ளியில் பெயர் வைப்பது சுவாரஸ்யமானது. ஒரு சக மாணவனின் பெயர் 'மூணுபூரி';இன்னொருவன் 'அஞ்சுஇட்லி'
அதுபோல இது அரிசிமூட்டை; அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டது அபாரம்.
கவியரசு கண்ணதாசன் அந்த உரை தற்போது நடந்து வரும் ஒரு விவாதத்திற்கு முன்னரே அவருடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆம்!தமிழை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதலாமே என்று ஒரு ஆலோசனை முன் எடுக்கப்பட்டது. அதாவது இப்போது நான் ஆங்கில எழுத்துகளை வைத்து
தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்கிறேன் அல்லவா, அதே போல டிரான்ஸ்லிடெரேஷன் ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதலாமே என்பது ஒரு பார்வை. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மிருகங்கள் ஒன்றையொன்று அடித்து உண்பது இயற்கை. மனிதன் அப்படி சக மனிதனை உணவாகச் சாப்பிடாவிட்டாலும் அதற்குச்சமமான அடுத்தவர்களின் வாழ்வைக் கெடுப்பது என்பதைத் திட்டமிட்டுச் செய்கிறான்./////
உங்களின் பாராட்டிற்கும், கருத்துப் பகிர்விற்கும் கிருஷ்ணன் சார்!
குட்டிக்கதை நன்று...
ReplyDeleteகவியரசு காணொளிக்கு நன்றி ஐயா.
///Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteகுட்டிக் கதை அருமை.
கண்ணதாசன் உரை மிக ரசிக்க வைத்தது.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Blogger வேப்பிலை said...
ReplyDelete01.
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும் என்ற
பா.விஜய் அவர்களின்
பாடல் வரிகள் நிழலாடியது
(பாடல் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே)
02.
எண்ணங்களை வெளிப்டுத்துவதே
எல்லோருக்கும் மொழி
இது பற்றி சொன்னால்
இப்போதும் பிரச்சனை தான்
03.
உணவை தேடி என சொன்னது
உடலுக்கான உணவு
எண்ணங்களுக்கான உணவில் தான்
எல்லோரும் யாரையே நம்பி இருக்கின்றனர்
இந்த காண் ஒளியை பாருங்கள்
இது சொல்ல வரும் விஷயம் புரியும்
http://www.youtube.com/watch?v=qlyjvZhdg7s
----------
ஒரு
பாசந்தி
பக்கோடா
பிஃல்டர் காபி சாப்பிட்ட மாதிரி
பேஷ்.. பேஷ்../////
அப்பாடா, இப்போதுதான் முதல்முறையாக பேஷ்..பேஷ்..என்று சொல்லியிருக்கிறீர்கள் வேப்பைலையாரே!
அதற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!
///Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteகுட்டிக் கதை அருமை... கண்ணதாசன் காணொளிக்கு நன்றி ஐயா...////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!