21.11.13

உளவியல் குட்டிக்கதை: கைத் துப்பாக்கி

 

1
உளவியல் குட்டிக்கதை: கைத் துப்பாக்கி

கதையின் தலைப்பு: கைத் துப்பாக்கி

காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேந்திரன் தன் மனைவி சுஜாதாவைக் கைத்தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பதட்டத்தோடு பேசினார்.

"சுஜாதா, ஒரு முக்கியமான விஷயம்."

மனைவி இடைமறித்தார், "நீங்கள் கூப்பிடுவீர்கள் என்று தெரியும்.உங்கள் கைத்துப்பாக்கிதானே?"

"ஆமாம், அவசரத்தில் அதை வைத்துவிட்டு வந்து விட்டேன்.நம் வாண்டுப்பயல் கண்ணில் படுமுன் அதை எடுத்து உள்ளே வை!"

"அவன் கண்ணில் படாமல் இருக்குமா? எடுத்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்து, நீட்டி, ஹாண்ட்ஸ் அப் என்று சொல்லி விட்டான்"

"அடடா, அப்புறம் என்ன செய்து சமாளித்தாய்?"

"என்ன செய்திருப்பேன் - ஊகம் செய்து சொல்லுங்கள் பார்க்கலாம்?"

"கெஞ்சிப் பிடித்து - அதை வாங்கினாயா?"

"கெஞ்சுவதாவது - பிடிப்பதாவது! ஒரு அடி நகர்ந்தால்கூட, தெரியாமல் டிரிக்கரை அழுத்தி விட்டான் என்றால் என்ன செய்வது?"

"பிறகு எப்படி வாங்கினாய்?"

உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவள் உற்சாகமாகச் சொன்னாள்,  "ஏமாற்றி வாங்கினேன். என்னங்க..அவனைப் பிடிக்காதீர்கள் என்று குரல் கொடுத்தேன். நீங்கள்தான் பின்னால் வருகிறீர்கள் என்று நினைத்துத் திரும்பினான். பாய்ந்து சென்று அப்படியே அமுக்கிப் பிடித்து,  வாங்கிவிட்டேன்.

மகேந்திரனுக்குப் பரம சந்தோஷம். இவள் அல்லவா காவல்துறையில் இருக்க வேண்டியவள் என்று நினைத்துக் கொண்டார்.
--------------------------------------------------
2
ஒரு மகிழ்ச்சியான விஷயம்:-)))

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. ஆனாலும் கூகுள் ஆண்டவரின் துணையோடு வகுப்பறை நடக்கும்.  (Through auto post settings in the blog) இன்றையப் பாடத்தை மேலே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கருத்தை (விமர்சனத்தை) பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள்.

நாளை வழக்கம் போல பக்தி மலர் உண்டு. அது வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான பக்தி மலர். அனைவரும் நாளை தவறாமல் வகுப்பறைக்கு வந்து அந்த பக்தி மலரைப் படித்து மகிழும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

உங்களுடைய பின்னூட்டங்களும், அதற்கான பதில்களும், வாத்தியார் திரும்பி வந்த பிறகு சனிக்கிழமையன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

5 comments:

  1. ஐயா காலை வணக்கம்.

    இரண்டு சிறுகதைகளும் அருமை

    முருகரின் அருளால் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

    பக்தி மலருக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்

    நன்றி ஐயா!

    ReplyDelete
  2. வகுப்பறையில் இப்போ
    வரும் பாடம் பல்சுவையை அல்லவா

    நினைவூட்டுகிறது..
    நிஜமாகவே வகுப்பறையில்

    வரும் பாடம் எதுவானாலும் நமக்கு
    வளமே சேர்க்கும்

    ReplyDelete
  3. ////Blogger Lakhsmi Nagaraj said...
    ஐயா காலை வணக்கம்.
    இரண்டு சிறுகதைகளும் அருமை
    முருகரின் அருளால் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
    பக்தி மலருக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்
    நன்றி ஐயா!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  4. //////Blogger arul said...
    good story/////

    நல்லது.உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    வகுப்பறையில் இப்போ
    வரும் பாடம் பல்சுவையை அல்லவா
    நினைவூட்டுகிறது..
    நிஜமாகவே வகுப்பறையில்
    வரும் பாடம் எதுவானாலும் நமக்கு
    வளமே சேர்க்கும்/////

    நல்லது.உங்களின் பாராட்டிற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com