புத்தாண்டு பொதுப் பலன்!
ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் அமிர்தயோக வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்தில் புத்தாண்டு பிறந்திருக்கிறது .
வகுப்பறையின் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!.
புத்தாண்டைப் பற்றி பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.
தமிழ் ஆண்டுகள் அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். தனுசு லக்கினத்தில் ஆண்டு பிறந்துள்ளதால் சுபகிரகமான குரு, லக்கினாதிபதியாகி இந்த ஆண்டின்
அரசனாக இருக்கிறார். குருவும், சந்திரனும் பலத்துடன் இருப்பதால் அனைவருக்கும் இந்த ஆண்டில் பலவிதமான நன்மைகள் உண்டாகும்!.
மண்ணில் விசய வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங் களெங்கே நண்ணும்
பயம்பெருகி நொந்த பரிவாரமெல்லாம்
ந்யங்களின்றி வாடுமென் நாட்டு!
-
இடைக்காடர் சித்தரின் பாடல்
சித்தரின் பாடலின் படி இந்த ஆண்டு மழை மிகுதியாக இருக்கும். எல்லா பயிர்களும் நன்கு விளையும். ஆனால், மக்கள் சொந்தங்களை விடுத்து விலகி
நிற்பார்கள். மக்களுடைய மனதில் பய உணர்வு இருக்கும் என்று அறிய வருகிறோம்!
சித்தர் பாடல் பலிக்குமா என்று தெரியவில்லை. எத்தர்கள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்த சந்தேகம்!
பாடலின் கடைசி வரியைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. மக்கள் சொந்தங்களை விட்டு விலகி ரொம்ப நாளாகிவிட்டது. கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் இப்போது ஏது? எல்லாம் மைக்ரோ ஃபாமிலி களாகிவிட்டன!
பெண்களும் நிறைய மாறி விட்டார்கள். பி.இ,, எம்.பி.ஏ என்று படித்து பல நிறுவனங்களில் இன்று பணி புரிகிறார்கள். கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். தலை நிறைய பூ வைத்துக்கொள்கிறார்கள். மாலையில் சாட் ஐட்டங்கள் உண்வாகிறது. கையில் கேலக்ஸி போன்கள். கண்ணில் வண்ணக் கனவுகள் இளம் வயதில் ரம்மியமாகத்தான் இருக்கிறார்கள். ஆனல் பலருக்கு குணம்தான் சரியாக இல்லை!.
தன்னைவிட அதிகம் படித்த, அதிகம் சம்பாதிக்கும் கண்வன் வேணும் என்கிறார்கள். நெருக்கிப் பேசினால், அவன் வீட்டில் எத்தனை லக்கேஜ்? என்கிறார்கள்.அதாவது பைய்னின் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறப்புக்கள் எல்லாம் சுமக்க வேண்டிய லக்கேஜாம். எப்ப்டி இருக்கிறது?
பையன் தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
முதலில் நீங்கள் பிறந்த ஆண்டின் தமிழ்ப் பெயரைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
வருடங்களின் பெயர்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன். 1987 - 1988 ஆம் ஆண்டில் இருந்து விவரம் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு வேண்டுபவர்கள்.
அறுபது ஆண்டுகளைக் கழித்து விட்டுப் பின் நோக்கிப் பார்க்கலாம்.;
தமிழ் வருட ங்கள வரிசையில் ஸ்ரீவிஜய வருடம். இது இந்த வ்ருட வரிசையில் 27வது வருடமாகும். வருடம் என்பது வர்ஷா என்னும் வடமொழிச்சொல்லின் நேரடிச் சொல். வர்ஷா என்றால் பொழிவது என்று பொருள். (வருடம் முழுவதும் நன்மைகளைப் பொழிய வேண்டும் என்பதற்காக அப்படி வைத்திருப்பார்களோ?
வருடத்திற்கு உரிய சரியான தமிழ்(ற்) சொல் ஆண்டு என்பது ஆகும். அதை நினைவில் வையுங்கள்
எண் - பெயர் - Name, வருடம்
1 ப ரபவ Prabhava 1987 - 1988
2 விபவ Vibhava 1988 - 1989
3 சுக்ல Sukla 1989 - 1990
4 ப ரேமா தூத Pramodhudha 1990 - 1991
5 பிரசோர்பதி Prajorpati 1991 - 1992
6 ஆங் கீரச Angirasa 1992 - 1993
7 ஸ்ரீமுக Srimukha 1993 - 1994
8 பவ Bhava 1994 - 1995
9 யுவ Yuva 1995 - 1996
10 தாது Dhatu 1996 - 1997
11 ஈ ஸ்வர Esvara 1997 - 1998
12 வெகுதான்ய Vehudhaniya 1998 - 1999
13 பிரமாதி Pramathi 1999 - 2000
14 விக்கிரம Vikrama 2000 - 2001
15 வி ஷூ Vishu 2001 - 2002
16 சி த்திரபானு Chitrabanu 2002 - 2003
17 சுபானு Subanu 2003 - 2004
18 தாரண Tarana 2004 - 2005
19 பா ர்த்திப Parthiba 2005 - 2006
20 வி ய Viya 2006 - 2007
21 சர் வசி த்து Sarvasithu 2007 - 2008
22 ச ர்வதாரி Sarvadhari 2008 - 2009
23 விரோதி Virodhi 2009 - 2010
24 விக்ருதி Vikruthi 2010 - 2011
25 கர Kara 2011 - 2012
26 நந்தன Nandhana 2012 - 2013
27 விஜய Vijaya 2013-2014
28 ஜய Jaya 2014 - 2015
29 மன்மத Manmatha 2015 - 2016
30 , துன்முகி Dhunmuki 2016 - 2017
31 ஹேவிளம்பி Hevilambi 2017 - 2018
32 விளம்பி Vilambi 2018 - 2019
33 விகாரி Vikari 2019 - 2020
34 சா ர்வரி Sarvari 2020 - 2021
35 பிலவ Pilava 2021 - 2022
36 சுபகிருது Subakrithu 2022 - 2023
37 சோபகிருது Sobakrithu 2023 - 2024
38 குரோதி Krodhi 2024 - 2025
39 விசுவாசுவ Visuvaasuva 2025 - 2026
40 பிரபாவ Parabhaava 2026 - 2027
41 பிலவங்க Plavanga 2027 - 2028
42 கீலக Keelaka 2028 - 2029
43 செளமிய Saumya 2029 - 2030
44 சாதாரண Sadharana 2030 - 2031
45 விரோதிகிருது Virodhikrithu 2031 - 2032
46 பரிதாபி Paridhaabi 2032 - 2033
47 பி ரமாதீச Pramaadhisa 2033 - 2034
48 ஆனந்த Aanandha 2034 - 2035
49 ராட்சச Rakshasa 2035 - 2036
50 நள Nala 2036 - 2037
51 பிங் கள Pingala 2037 - 2038
52 காளயுக் தி Kalayukthi 2038 - 2039
53 சி த்தா ர்த்தி Siddharthi 2039 - 2040
54 ரெள்த்திரி' Raudhri 2040 - 2041
55 துன்மதி Thunmathi 2041 - 2042
56 துந்துபி Dhundubhi 2042 - 2043
57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043 - 2044
58 ர க்தாட்சி Raktakshi 2044 - 2045
59 குரோதன Krodhana 2045 - 2046
60 அட்சய Akshaya 2046 - 2047
-------------------------------------------------------------
புத்தாண்டு துவக்கத்திற்கும் சித்திரை முதல் தேதிக்கும், மேஷ ராசிக்கும் என்ன தொடர்பு? அதை நாளை விரிவாகப் பார்ப்போம். அத்துடன் தலைப்பில் உள்ள நீங்களும் உங்கள் ஜாதகமும் பற்றியும் விவரமாகப் பார்ப்போம்
பொறுத்திருங்கள்
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!