Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும் - பகுதி 2
அகண்ட வரிசை இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய பதிவை வலையில் ஏற்றுவது தாமதப்ப்ட்டுவிட்டது. பொறுத்துக்கொள்ளவும்
---------------------------------------------------------------------------------
“வருடம் என்னும் பெயருக்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. வருடை என்னும் சொல், வருடம் என்று மருவியிருக்க வேண்டும்.
வருடை என்பது மேட ராசியின் பெயர். பாவை நோன்பை விளக்கும் பரிபாடல் 11-ஆம் பாடலில் வானத்தில் கோள்கள் இருக்கும் நிலையை விவரிக்கையில், ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்று வருகிறது. செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேட ராசியை அடைந்தது என்று பொருள்.வருடை என்பது ஒரு ஆடு. அது மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட ராசி. அது குறிக்கும் மாதம் சித்திரை மாதம். அம்மாதம் தான் வருடத்தின் முதல் மாதம் என்று காட்டும் வகையில், நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
என்று ஆட்டினைத் தலையாகக் கொண்டு, சூரியன் இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில் ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது!”
இணையத்தில் படித்தேன்.
-----------------------------------
அதை எல்லாம் விட்டு விட்டு முக்கியமான செய்தியை மட்டும் பார்ப்போம்
1. சூரியன் வானத்தில் தன்னுடைய புதிய சுழற்சியை அல்லது சுற்றை மேஷத்தில் துவங்குகிறது. 30 பாகைகளை அது நாளொன்றுக்கு ஒரு பாகை வீதம் கடந்து, அடுத்த ராசிக்குள் (ரிஷபத்தில்) நுழைகிறது. அவ்வாறாக வானமண்டத்தில் உள்ள 12 ராசிகளையும் (மொத்தம் 360 பாகைகள்) கடந்து மீண்டும் மேஷத்திற்கு வருவதற்குள் ஒரு ஆண்டு காலம் முடிந்திருக்கும்.
இந்த சுழற்சியை எல்லாம் நமது மகா முனிவர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே (அதாவது 1,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே) கணித்து எழுதிவைத் திருக்கிறார்கள். அவர்களுடைய காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான உபகரணங்களும் (equipments) கிடையாது. Computer, satelite, telescopes, planetorium போன்றவைகள் கிடையாது.
இன்றைய விஞ்ஞானம் சொல்லும் கணக்குகளும், அவர்களுடைய கணக்குகளும் ஒன்றாகவே உள்ளன. அவர்களுக்கு அது எப்படி சாத்தியமாயிற்று? தெய்வ சக்தி, தெய்வ அருள், ஞானம் என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
வானமண்டலத்தை எப்படி 12 ராசிகளாகப் பிரித்தார்கள்? எப்படி பெயர் சூட்டினார்கள்? எப்படி அடையாளச் சின்னங்களைக் கொடுத்தார்கள்? என்பதற்கெல்லாம் நாம் பலவிதமான கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் பதில் சொல்வதற்கு அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை. ஆகவே கேள்வி கேட்காமல் அவற்றை அப்படியே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் அதுதான் நமக்கு நல்லது
----------------------------------------------------------
இதில் இன்னொரு முக்கிய செய்தியும் உள்ளது. சுற்றுக்கு 360 பாகைகள். 360 நாட்கள் என்னும் கணக்குப்படி வாக்கியப் பஞ்சாங்கம் 360 நாட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கம் 365 நாட்களைக் கொண்டது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அதனதன் அயனாம்சம் தன்னிச்சையாகச் சரி செய்துகொள்ளும். அயனாம்சம் என்பது வடமொழிச் சொல் (Movement of planets)
அயனாம்சத்தில் 3 விதமான அயனாம்சங்கள் உள்ளன. லஹரி அயனாம்சம்! ராமன் அயனாம்சம், கே.பி அயானாம்சம் என்று மூன்று வகை அயனாம்சங்கள் உள்ளன.
------------------------------------------------
கால்சந்திப்பில் பிறந்தவர்களுக்கு இரண்டு விதமான ஜாதகங்கள் இருக்கும். நட்சத்திர சந்திப்பில் பிறந்தவர்களூக்கும் இரண்டு விதமான ஜாதகங்கள் இருக்கும்.
ஜாதகமே மாறும் பொழுது, லக்கினமே மாறும் பொழுது பலன்களும் மாறாதா?
உதாரணத்திற்கு இரண்டு ஜாதகங்களைக் கீழே கொடுத்துள்ளேன்
இரண்டுமே ஒரே தேதிக்கு, ஒரே பிறந்த நேரத்திற்கு, ஒரே ஊர் பிறப்பிற்கு உரியதுதான். நன்றாகக் கவனித்துப்பாருங்கள்
அயனாம்சத்தில் (பஞ்சாங்கத்தில்) உள்ள குழப்பம் இது!
இரண்டிற்கும் லக்கினமும் மாறுகிறது. நட்சத்திரமும் மாறுகிறது. தசாபுத்தியும் மாறுகிறது. முதலில் உள்ளது லஹரி பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவதாக உள்ளது ராமன் பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது
-------------------------------------------------------
அதே போல ஒரே தேதிக்கு, ஒரே பிறந்த நேரத்திற்கு, ஒரே ஊர் பிறப்பிற்கு, ஒரே அயனாம்சத்திற்கு ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு விதமான ஜாதகங்கள் உள்ளன. (இரண்டிலும் ஐந்து நிமிட இடைவெளியில்) லக்கினம் மாறிவிடுவதைக் கவனியுங்கள்!
-------------------------------------------------------
http://www.mysticscripts.com/astrology/vedic-astrology/ayanamsa-calculator/
--------------------------------------------------------------------------------------------
ஆகவே முதலில் உங்கள் பிறந்த நேரம் சரியானதுதான் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரே வீட்டில் நான்கு பேர்களுடைய கைக்கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை)
உங்கள் ஜாதகம் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ளுங்கள்
----------------------------------------------------------
சர்வ நிச்சயாமக் இது மட்டும் உண்மை
ஜோதிடம் உண்மை
உங்களுக்கென்று ஒரு ஜாதகம் இருக்கும்
அதுவும் உண்மை!
அதற்கு உரிய பலன்களின் படிதான் உங்கள் வாழ்க்கை நடக்கும்.
அதுவும் உண்மை!
அனைவருக்கும் 337பரல்கள் தான். அதன்படி பலன்கள் சரிசமமாக இருக்கும் அதுவும் உண்மை!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நல்லது ஐயா
ReplyDeleteவாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.இன்றைய பாடம் தாமதமாக வலையேற்றப் பட்டாலும், இது மிக முக்கியமாக தேவைப் படும் ஒரு பாடமே.கால சந்திப்பில் பிறந்த ஜாதக குழப்பத்தை ஓரளவிற்க்கு தீர்மனித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
ReplyDeleteபாடத்திற்கு நன்றிகள்.தொடர்ந்து வரப்போகும் பாடங்களை எதிர் பார்த்துக் கொண்டுள்ளோம்.
-Peeyes.
நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் ஐயா. என்னுடைய ஜாதகத்தில் லக்னம், ராசி இரண்டுமே சந்திப்பாக இருக்கும் நேரத்தில் அல்லாடுகிறது. (நட்சத்திரம் உத்திராடம் 2ஆம் பாதத்தில் சந்திரன் நுழையும் நேரம்(தனுசு மற்றும் மகரம்) மற்றும் விசாகம் 3ல் இருந்து 4க்கு (துலாமில் இருந்து விருச்சிகத்துக்கு) லக்னம் மாறும் கால சந்திப்பு.
ReplyDeleteதிருக்கணிதப்படி கணித்தால் எல்லாம் குழப்பமே. அதனால் வாக்கியப்படி மகர ராசி, துலாம் லக்னம் என்ற நிலைப்பாட்டில் உள்ள ஜாதகத்துக்கு கணிக்கும் பலன்மட்டுமே என் வாழ்வுடன் 95 சதவீதம் ஒத்துப்போகிறது.
இதே சிக்கலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் ஜாதகம் பலவற்றையும் அலசிப்பார்த்தேன். எனக்கு புலப்பட்ட உண்மை என்னவென்றால் எந்த ராசியில் இருந்து ஒன்றிரண்டு நிமிடங்களில் அடுத்த ராசிக்கு மாறுகிறதோ அந்த புதிய ராசியின் அல்லது லக்னத்தின் தாக்கம் பெரும்பாலும் இல்லை. கடைசியாக இருந்த ராசி அல்லது லக்னத்தின் பாதிப்புதான் அழுத்தமாக இருக்கிறது. (பெரும்பாலும்)
Unmai... kadaisiyil sonna unmai
ReplyDeleteUNMAI unmai.. UNMAI..
////Blogger C Jeevanantham said...
ReplyDeleteநல்லது ஐயா////
நன்றி ஜீவானந்தம்!
////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteவாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.இன்றைய பாடம் தாமதமாக வலையேற்றப் பட்டாலும், இது மிக முக்கியமாக தேவைப் படும் ஒரு பாடமே.கால சந்திப்பில் பிறந்த ஜாதக குழப்பத்தை ஓரளவிற்க்கு தீர்மனித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
பாடத்திற்கு நன்றிகள்.தொடர்ந்து வரப்போகும் பாடங்களை எதிர் பார்த்துக் கொண்டுள்ளோம்.
-Peeyes.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!
/////Blogger சரண் said...
ReplyDeleteநீங்கள் சொல்லியிருப்பது சரிதான் ஐயா. என்னுடைய ஜாதகத்தில் லக்னம், ராசி இரண்டுமே சந்திப்பாக இருக்கும் நேரத்தில் அல்லாடுகிறது. (நட்சத்திரம் உத்திராடம் 2ஆம் பாதத்தில் சந்திரன் நுழையும் நேரம்(தனுசு மற்றும் மகரம்) மற்றும் விசாகம் 3ல் இருந்து 4க்கு (துலாமில் இருந்து விருச்சிகத்துக்கு) லக்னம் மாறும் கால சந்திப்பு.
திருக்கணிதப்படி கணித்தால் எல்லாம் குழப்பமே. அதனால் வாக்கியப்படி மகர ராசி, துலாம் லக்னம் என்ற நிலைப்பாட்டில் உள்ள ஜாதகத்துக்கு கணிக்கும் பலன்மட்டுமே என் வாழ்வுடன் 95 சதவீதம் ஒத்துப்போகிறது.
இதே சிக்கலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் ஜாதகம் பலவற்றையும் அலசிப்பார்த்தேன். எனக்கு புலப்பட்ட உண்மை என்னவென்றால் எந்த ராசியில் இருந்து ஒன்றிரண்டு நிமிடங்களில் அடுத்த ராசிக்கு மாறுகிறதோ அந்த புதிய ராசியின் அல்லது லக்னத்தின் தாக்கம் பெரும்பாலும் இல்லை. கடைசியாக இருந்த ராசி அல்லது லக்னத்தின் பாதிப்புதான் அழுத்தமாக இருக்கிறது. (பெரும்பாலும்)/////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteUnmai... kadaisiyil sonna unmai
UNMAI unmai.. UNMAI..////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
Thanks for the lesson Sir!
ReplyDeleteசந்திரனை வைத்து மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பது புதிய செய்தி!. எந்த ஊர் என்று நீங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்!
ReplyDeleteஅய்யா ,தாங்கள் யுகாதி கொண்டாடுபவர்களிடம் விசாரித்துப்
பார்க்கவும், ஒவ்வொரு ப்ரதமையும் மொரு புதிய மாதம் பிறக்கிறது.. (அமாவாசைக்குப்பின் வரும் ப்ரதமை)
good evening sir,
ReplyDeletepresent sir.
HAPPY TAMIL NEW YEAR TO U AND CLASS STUDENTS
//சந்திரனை வைத்து மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பது புதிய செய்தி!. எந்த ஊர் என்று நீங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்!//
ReplyDeleteஇதற்கான பதில் பழைய பாடத்தில் உள்ளது.
http://classroom2007.blogspot.com/2012/05/blog-post_20.html
அதில் நம் வகுப்பறை மாணவியான பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
பஞ்சாங்கங்களில், வருடம், மாதம் கணக்கிடப்படும் முறையில், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது 'சௌரமானம்' எனப்படும். தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இம்முறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சந்திரமானம்’ (சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுதல்) நடைமுறையில் உள்ளது.
வாக்கியப் பஞ்சாங்கங்களிலும் 365 நாட்கள்தான் கணக்கிடப்படுகின்றன. வேண்டுமானால் எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள். சூரியனின் சஞ்சாரமும் ஒரே சீராக இருப்பதில்லை. அதனால்தான் தமிழ் மாதங்களில் மிகக் குறைவாக 28 நாட்களும் மிக அதிகமாக 32 நாட்களும் இருக்கின்றன. 28 நாட்கள் உள்ள மாதங்களில் மிகவும் வேகமாக சஞ்சரித்து அடுத்த ராசிக்கு செல்வதாகவும் 32 நாட்கள் உள்ள மாதத்தில் மெதுவாக சஞ்சரித்து அடுத்த ராசிக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. இதை விரிவாக விளக்க வேண்டுமானால் பின்னூட்டத்தில் முடியாது.
ReplyDeleteஅனந் சார்,
ReplyDeleteபாடங்களை கண்டுப்டித்துக் கொடுத்து
உதவியதற்கு நன்றிகள் பல
நாங்கள் வசிக்கும் இடமும் கர்னாடகா தான்.
/////Blogger G Alasiam said...
ReplyDeleteThanks for the lesson Sir!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!1
////Blogger rajanblogs said...
ReplyDeleteசந்திரனை வைத்து மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பது புதிய செய்தி!. எந்த ஊர் என்று நீங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்!
அய்யா ,தாங்கள் யுகாதி கொண்டாடுபவர்களிடம் விசாரித்துப்
பார்க்கவும், ஒவ்வொரு ப்ரதமையும் மொரு புதிய மாதம் பிறக்கிறது.. (அமாவாசைக்குப்பின் வரும் ப்ரதமை)/////
உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!
///Blogger sundari said...
ReplyDeletegood evening sir,
present sir.
HAPPY TAMIL NEW YEAR TO U AND CLASS STUDENTS/////
நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி!
/////Blogger Ak Ananth said...
ReplyDelete//சந்திரனை வைத்து மாதப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள் என்பது புதிய செய்தி!. எந்த ஊர் என்று நீங்கள் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்!//
இதற்கான பதில் பழைய பாடத்தில் உள்ளது.
http://classroom2007.blogspot.com/2012/05/blog-post_20.html
அதில் நம் வகுப்பறை மாணவியான பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
பஞ்சாங்கங்களில், வருடம், மாதம் கணக்கிடப்படும் முறையில், சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது 'சௌரமானம்' எனப்படும். தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஒரிஸ்ஸா, வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இம்முறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர குஜராத் முதலிய மாநிலங்களில் ‘சந்திரமானம்’ (சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுதல்) நடைமுறையில் உள்ளது.///
பிரமாதம். இது உங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. எப்படியோ பிடித்துக்கொடுத்துவிட்டீர்கள். நன்றி உரித்தாகுக! எனக்கு நினைவில் இல்லை!
////Blogger Ak Ananth said...
ReplyDeleteவாக்கியப் பஞ்சாங்கங்களிலும் 365 நாட்கள்தான் கணக்கிடப்படுகின்றன. வேண்டுமானால் எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள். சூரியனின் சஞ்சாரமும் ஒரே சீராக இருப்பதில்லை. அதனால்தான் தமிழ் மாதங்களில் மிகக் குறைவாக 28 நாட்களும் மிக அதிகமாக 32 நாட்களும் இருக்கின்றன. 28 நாட்கள் உள்ள மாதங்களில் மிகவும் வேகமாக சஞ்சரித்து அடுத்த ராசிக்கு செல்வதாகவும் 32 நாட்கள் உள்ள மாதத்தில் மெதுவாக சஞ்சரித்து அடுத்த ராசிக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது. இதை விரிவாக விளக்க வேண்டுமானால் பின்னூட்டத்தில் முடியாது./////
நீங்கள் சொல்லும் விஷ்யம் கேலண்டர்களிலும் உள்ளது. ஆனால் தசாக்களில், அப்படியே லம்ப்பாக மாதததைதான் தூக்கிவைத்துக் கணக்கிடுகிறோம்
////Blogger rajanblogs said...
ReplyDeleteஅனந் சார்,
பாடங்களை கண்டுப்டித்துக் கொடுத்து
உதவியதற்கு நன்றிகள் பல
நாங்கள் வசிக்கும் இடமும் கர்னாடகா தான்.////
ஆமாம் நன்றி தெரிவிக்க வேண்டிய மேட்டர்தான் அது!
நல்ல பதிவுக்கு நன்றி
ReplyDelete