9.4.13

Astrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்?


Astrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்?
 
Popcorn Post No.42


1970ஆம் ஆண்டு திரைக்கு வந்த சொர்க்கம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான பாடல் ஒன்று கீழே உள்ள வரிகளைக்கொண்ட பல்லவியுடன் துவங்கும்:

“பொன்மகள் வந்தாள்
பொருள்கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே!”


அதே பாடலின் சரணத்தின் கடைசி பத்தியில் இப்படி எழுதியிருப்பார்:

“செல்வத்தின் அனைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
இன்பத்தின் மனதிலே குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்”

-------------------------------------------
செல்வத்தின் அனைப்பில் கிடக்க அனைவருக்கும் ஆசைதான். ஆனால் நடக்க வேண்டுமே? செல்வத்தின் அனைப்பில் இருப்பவன் கூட வெல்வெட்டின் விரிப்பில் நடப்பதும் கிடையாது. சுகத்தில் மிதப்பதும் கிடையாது. வந்த செல்வத்தை விடாமல் தக்க வைத்துக்கொள்ளும் அவதியில் பலர் இருக்கிறார்கள்

சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் சுகம் கூட பெரிய செல்வந்தனுக்குக் கிடைப்பதில்லை. செல்வம் வந்தவுடன் கூடவே கஞ்சத்தனமும் வந்துவிடும்!
ஸ்ரீதேவி வந்தால் கூடவே அவளுடைய அக்கா மூதேவியும் வந்துவிடுவாள். அக்காவை உள்ளே விடக்கூடாது. அப்போதுதான் வந்த செல்வத்தால் பயன்பெற முடியும். சுகப்பட முடியும்!

அதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது பாடத்தைப் பார்ப்போம்!
-------------------------------------------------
சொகுசான வாழ்க்கைக்கான கிரக அமைப்பு: (Planetary position for luxurious life)

1
சுகாதிபதியும், பாக்யாதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் குடியிருந்தால், ஜாதகன் செள்கரியமான சொகுசான் வாழ்க்கை வாழ்வான். அதாவது 4ஆம் அதிப்தியும், ஒன்பதாம் அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் இருக்க வேண்டும் (This combination will confer a luxurious life)

2
குரு பகவான் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டை நேரடியாகப் பார்க்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டு அதிபதியுடன் கூட்டாக கேந்திரத்திலோ அல்லது திரிகோண வீட்டிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்

3.
நான்காம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனையாகி, ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்ந்திருந்தாலும், வாழ்க்கை செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமானதை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

பாப்கார்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++

25 comments:

  1. குருவிற்கு வணக்கம்
    நல்ல பாப்கான் பதிவு ,
    நன்றி

    ReplyDelete
  2. கும்ப ,சிம்ம லக்னங்களுக்கு 4,9 ம் அதிபதிகள் ஒருவரே,
    அதனால் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு வாய்பில்லை,
    லக்னத்தை ஏழாம் பார்வையாக பார்த்தாலும் பலன் உண்டா?

    ReplyDelete
  3. ,செல்வம் இல்லை அது
    செல்வோம்.. என வரும் செல்வம்

    நாளடைவில் மாறுபடுக் கூடியது..
    நாம் பயன் படுத்திய

    அந்நாளின் 1,2,3,5,10,20,25,50 பைசாக்கள்
    இந்நாளில் இல்லை..

    100 ருபாயாக வந்தும் எப்போ
    1000 ருபா coin வரும் என எதிர்பார்த்து

    சுவைத்து மகிழ்ந்தோம்
    சுவைக்க தந்த பாப்(பா)கார்ன்னை..

    ReplyDelete
  4. Ayya, came back to Seattle after a very long trip. Very nice to read popcorn . Also very happy to know that 2nd point (Guru) arul)is there in my horo. Lot to read -9 months portions ayya. Kalai -seattle

    ReplyDelete
  5. நேற்று மாதிரி இன்றும் இருக்கும் என்று டாஸ்மாக் நினைவில் வந்தால் பாப்கார்ன் கொடுத்து விட்டார் ஐயா. ஆனால் சுவை குறையவில்லை. அந்த படம் பார்க்க முடியவில்லை. கடலில் நெட் வொர்க் அத்தனை பலம் இல்லை.

    ReplyDelete
  6. வாத்தியாரைய்யா அவர்களுக்கு வணக்கங்கள். இன்றைய பாப்கார்ன் பொட்டலம் சுவையானது எனினும் சிறியது.நார்மலாக ஒரு மனிதன் சந்தோக்ஷமாக வாழ எப்படிப் பட்ட அமைப்பு தேவை?.இன்றைய செல்வந்தர்கள் நாளை எப்படியோ?
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  7. 3 மட்ரும் 4 ஆம் வீடுகளுக்கு அதிபதி சனி, 9ஆம் வீடு அதிபதி சந்திரன் இருவரும் 3 ம்ட்ரும் 9 ஆம் வீடுகளில் பரிவர்த்தனை ஆகியுள்ள்னர்.

    இந்த அமைப்பு மெல் சொன்ன பலனை தருமா?

    ReplyDelete
  8. சுகத்தைப் பெறுவதற்கு 4ம் இடம். அப்படி அடைந்த சுகத்தை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தருவது 9ம் இடம். இந்த இரண்டு ஸ்தானாதிபர்களும் ஒருவருக்கொருவர் 6,8 என்ற ஏடாகூட நிலையில் இருந்தால் கஷ்டம்தான்.

    ReplyDelete
  9. கும்ப ,சிம்ம லக்னங்களுக்கு 4,9 ம் அதிபதிகள் ஒருவரே,
    அதனால் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு வாய்பில்லை,
    லக்னத்தில் இருந்து திரிகோண வீட்டில் (5ம் இடத்தில்)அமர்ந்திருந்தால்?

    ReplyDelete
  10. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல பாப்கான் பதிவு ,
    நன்றி////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  11. ////Blogger rajanblogs said...
    கும்ப ,சிம்ம லக்னங்களுக்கு 4,9 ம் அதிபதிகள் ஒருவரே,
    அதனால் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு வாய்பில்லை,
    லக்னத்தை ஏழாம் பார்வையாக பார்த்தாலும் பலன் உண்டா?////

    இரு இடங்களுக்கு அதிபதி என்னும்போது திரிகோணங்களில் இருந்தால் போதும்! Placementற்கு மட்டும்தான் சொல்லப்பட்டுள்ளது. Aspect இந்தக் கணக்கில் வராது

    ReplyDelete
  12. ////Blogger eswari sekar said...
    vanakam sir////

    உங்களின் மேலான வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger அய்யர் said...
    ,செல்வம் இல்லை அது
    செல்வோம்.. என வரும் செல்வம்
    நாளடைவில் மாறுபடுக் கூடியது..
    நாம் பயன் படுத்திய
    அந்நாளின் 1,2,3,5,10,20,25,50 பைசாக்கள்
    இந்நாளில் இல்லை..
    100 ருபாயாக வந்தும் எப்போ
    1000 ருபா coin வரும் என எதிர்பார்த்து
    சுவைத்து மகிழ்ந்தோம்
    சுவைக்க தந்த பாப்(பா)கார்ன்னை..////

    அக்காலத்து பைசாக்களும் இல்லை. அதை பயன் படுத்தியவர்களும் இல்லை. சிவலோகம் சென்றுவிட்டார்கள். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  14. /////Blogger கலையரசி said...
    Ayya, came back to Seattle after a very long trip. Very nice to read popcorn . Also very happy to know that 2nd point (Guru) arul)is there in my horo. Lot to read -9 months portions ayya. Kalai -seattle////

    சாப்பாடுதான் ஆறிப்போகும். பாடங்கள் ஆறாது. நேரம் கிடைக்கும்போது மெதுவாகப் படியுங்கள்!

    ReplyDelete

  15. ///Blogger thanusu said...
    நேற்று மாதிரி இன்றும் இருக்கும் என்று டாஸ்மாக் நினைவில் வந்தால் பாப்கார்ன் கொடுத்து விட்டார் ஐயா. ஆனால் சுவை குறையவில்லை. அந்த படம் பார்க்க முடியவில்லை. கடலில் நெட் வொர்க் அத்தனை பலம் இல்லை.///

    பேசாமல் ஒரு வேலையைப் பிடித்து நகரத்திற்கு வந்து விடுங்கள். கடலில்/கப்பலில் எத்தனை நாட்கள்தான் த்ண்ணீரையே பார்த்துக்கொண்டிருப்பது?

    ReplyDelete
  16. ////Blogger C Jeevanantham said...
    நல்ல பதிவு ஐயா////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  17. ////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியாரைய்யா அவர்களுக்கு வணக்கங்கள். இன்றைய பாப்கார்ன் பொட்டலம் சுவையானது எனினும் சிறியது.நார்மலாக ஒரு மனிதன் சந்தோக்ஷமாக வாழ எப்படிப் பட்ட அமைப்பு தேவை?.இன்றைய செல்வந்தர்கள் நாளை எப்படியோ?
    நன்றியுடன்,
    -Peeyes.//;///

    எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாக வாழ்வதற்கு நல்ல மனது (Strong Mind) வேண்டும். அதற்கான கிரக நிலையைப் பழைய பாடங்களில் விரிவாக எழுதியுள்ளேன் அண்ணா!

    ReplyDelete
  18. ////Blogger saravanan said...
    3 மற்றும் 4 ஆம் வீடுகளுக்கு அதிபதி சனி, 9ஆம் வீடு அதிபதி சந்திரன் இருவரும் 3 ம்ற்றும் 9 ஆம் வீடுகளில் பரிவர்த்தனை ஆகியுள்ள்னர்.
    இந்த அமைப்பு மெல் சொன்ன பலனை தருமா?////

    தராது! எதற்காக 3 ஆம் வீட்டைக் கூட்டிக்கொண்டு வந்து இன்றைய ஆட்டத்தில் சேர்க்கிறீர்கள்? இன்றைய ஆட்டம் 4 மற்றும் 9ஆம் வீடுகளுக்கு இடையேதானே?

    ReplyDelete
  19. /////Blogger Ak Ananth said...
    சுகத்தைப் பெறுவதற்கு 4ம் இடம். அப்படி அடைந்த சுகத்தை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தருவது 9ம் இடம். இந்த இரண்டு ஸ்தானாதிபர்களும் ஒருவருக்கொருவர் 6,8 என்ற ஏடாகூட நிலையில் இருந்தால் கஷ்டம்தான்.////

    ஆமாம்!
    பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
    பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது!
    அந்த நிலைமைதான்

    ReplyDelete
  20. Blogger rama said...
    கும்ப ,சிம்ம லக்னங்களுக்கு 4,9 ம் அதிபதிகள் ஒருவரே,
    அதனால் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு வாய்பில்லை,
    லக்னத்தில் இருந்து திரிகோண வீட்டில் (5ம் இடத்தில்)அமர்ந்திருந்தால்?//////

    இருவரும் ஒருவராக இருந்தால் என்ன? தள்ளி வைக்க முடியுமா? சட்டம் இடம் கொடுக்குமா?
    திரிகோண் வீடுகளில் இருந்தால் போதும்!

    ReplyDelete
  21. ஜதகனின்(28 vayathu) வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இல்லை,ஆனால் துன்பம் நிறைந்தாக ullathu.........?

    மீன லக்னம், 4 அம் வீட்டு அதிபதி புதனுடன் குரு பகவான் கூட்டாக with சுக்ரன் and Maanthi , 10 ஆம் இடமான கேந்திரத்தீல். ஆனால் 8 ஆம் இடத்தில் சனி பகவான், இது ஒரு வேலை, சனி பகவானின் பார்வையால் இருக்குமோ.....?

    ReplyDelete
  22. நல்ல பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  23. ஐயா

    பதிவு நன்றாக உள்ளது. தயவுசெய்து குரு பெயர்ச்சி பலன்களை நேரம் கிடைக்கும் எழுதுங்களேன்.

    நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com