Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 22
ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 22
இதற்கு முன் பாடங்கலைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
-------------------------------------------------------
ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில்
வையுங்கள்.
நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?
மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?
தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!
-----------------------------------------------------
22. விசாகம் 4ஆம் பாதம் மட்டும்
இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் குரு பகவானின் நட்சத்திரம்!
இந்த நட்சத்திரத்திற்கு
1. மிருகசீரிஷம்
2. ஆயில்யம்
3. மகம்
4. சித்திரை
5. விசாகம் (ஏக நட்சத்திரம்)
6. மூலம்
7. திருவோணம்
8. அவிட்டம்
ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள்.
விருச்சிக ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம் வீடு.. மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.
விருச்சிக ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு. துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். சித்திரை 3 & 4ம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் விசாகம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 10 நட்சத்திரங்களும் பொருந்தாது.
அஸ்விணி, ரோஹிணி, பூசம், சுவாதி, ஆகிய 4 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு செய்து எடுத்துக் கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆய்தங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம் அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteவிருச்சகராசியை பற்றி தாங்கள்
அளித்த கருத்து அருமை
நன்றி
ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகக் கூடியவர்களாக இருந்தால் பொருத்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எல்லா பொருத்தங்களும் இருந்து இருவர் ஜாதகத்திலும் 2ம் இடத்தை (வாக்குஸ்தானம்) தீய கிரகங்கள் பதம் பார்த்திருந்தால் என்ன செய்வது.
ReplyDeletePresent Sir
ReplyDeleteவண்க்கம் ஐயா,
ReplyDelete/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
விருச்சகராசியை பற்றி தாங்கள்
அளித்த கருத்து அருமை
நன்றி/////
நல்லது. நன்றி உதயகுமார்!
/////Blogger Ak Ananth said...
ReplyDeleteஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகக் கூடியவர்களாக இருந்தால் பொருத்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எல்லா பொருத்தங்களும் இருந்து இருவர் ஜாதகத்திலும் 2ம் இடத்தை (வாக்குஸ்தானம்) தீய கிரகங்கள் பதம் பார்த்திருந்தால் என்ன செய்வது.////
வேறென்ன தினசரி, வாக்குவாதம், சண்டைதான். கடைசியில் சில விவாகரத்திலும் முடிவதுண்டு! இதை எல்லாம் பொருத்தம் பார்த்துச் சொல்லும் ஜோதிடர் சிலசமயம் கவனிப்பதில்லை. அது ஒரு குறைதான்! நன்றி ஆனந்த்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeletePresent Sir/////
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
////Blogger Geetha Lakshmi A said...
ReplyDeleteவண்க்கம் ஐயா,////
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!