20.4.13

டாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?


டாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?

கலக்கலான  செய்திகள் பல உள்ளன.  கடைசிவரை பொறுமையாகப் படியுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீங்கள் பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய பதிவுகளை பட்டியலிட்டுள்ளேன்

1

பன்முகத் திறமை உள்ளவரின் வலைப்பூ இது. பாரதியின் மேல் அவருக்குத் தான் எத்தனை பிரியம்! கலைகளின் மேல் எத்தனை காதல்? அவர் வயதுக்கு, பதிவுகளைப் படிப்பதே பெரிய விஷயம். ஆனால் அவர் பதிவுகளை எழுதி நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். படித்துப் பாருங்கள்
http://www.bharathipayilagam.blogspot.in/
-----------------
2
இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?

எல்லாம் கிடைக்கும் அங்கே!
அரசியல், உலகச் செய்திகள் இவற்றை நகைச்சுவை கலந்து தருகிறார். அத்துடன் தன்னைப்பற்றிய செய்தியையும் நகைச்சுவையுடனேயே தந்துள்ளார். சென்று பாருங்கள்
http://idlyvadai.blogspot.in/
----------------------
3
தான் பணிமாற்றம் பெற்று மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டதைக் கவிதை மொழியில் சொல்லியுள்ளார். படித்துப்பாருங்கள்
(தன் பெயருக்கு முன் உள்ள கவியாழி’ என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்!)
http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_18.html
------------------------------------------
4
படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. Face Book, Twitter, Cell Phone SMS, Chatting என்று எல்லாம் மாறிவிட்ட நிலையில் படிக்கும் பழக்கத்தின் அவசியத்தை சொல்லின் செல்வர் சிறப்பாகக் கூறியுள்ளார். அவர் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்
Reading Habit - Speech by Suki Sivam
http://youtu.be/-2SGmuIiBa4
-----------------------------------------
5
நடிகர் சத்யராஜும், இயக்குனர் மணிவண்ணனும் சேர்ந்து கலக்கிய படம் அமைதிப்படை.(ஆண்டு 1994) அதில் ஒரு காட்சியின் காணொளி உள்ளது. பார்த்துத்  ரசியுங்கள்!
http://youtu.be/t_pxN1QGj3E



----------------------------------------------
6.
இன்று மக்களைக் கவர்ந்திருக்கும் யதார்த்தமான காமெடிக்கு ஒரு சிறிய காட்சி காணொளி வடிவில் உள்ளது. பார்த்து மகிழுங்கள்
Paruthiveeran Comedy
http://youtu.be/ogvTus6FuyA




-----------------------------------------------
7
இந்தவாரப் பாடல்! (கவிஞர் தனுசுவிற்கு சமர்ப்பணம்)
படம்: வத்திக்குச்சி. நடிப்பு திலீபன் & அஞ்சலி
http://youtu.be/VBI2qrGcCDE


----------------------------
8
க்யூவில் நிற்பதற்கான யோசனை! (இது நல்லாயிருக்கே!)



-----------------------------
9

இந்தவாரப் படம்!



எந்த இடம் என்று முடிந்தால் சொல்லுங்கள்!

இந்த ஒன்பதில் எது மிகவும் நன்றாக உள்ளது? ஒரு வார்த்தை சொல்லுங்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

30 comments:

  1. எனது தளத்தின் பெயரையே கவியாழி என்று வைத்துள்ளேன்.கவியாழி என்பதற்கு யாழின்(இசைக்கருவி) இசைபோல இனிமையான கவிதையாக .இருக்குமென்றே சுருக்கமான வார்த்தைக்கு புனைப்பெயரை வைத்திருக்கிறேன். கவி+யாழி=கவியாழி.

    (கவிஞர்.கண்ணதாசன் என்று அந்த மகானைக் கேவலப் படுத்தவேண்டாம் )என்று நானே எனக்கு நாலு எழுத்தில் பெயரிட்டுள்ளேன்.இது எனக்கு கொடுத்த அல்லது
    நானே வைத்துக்கொண்ட பட்டமோ,பதவியோ அல்ல

    ReplyDelete
  2. ஒன்பதும் நவகிரகங்களா..
    ஒங்களிடம் கேட்டதால்

    வில்லுக்குரியவருக்கு
    வித்தியாசமான சமர்பணம்

    தஞ்சை தோழரின் பதிவில்
    தமிழை எப்படி கையாள்வதென

    நடையில் அறியலாம்
    நல்லதொரு பயில் அரங்கம்..

    அமைதிபடை 2 இப்போ
    அல்லோல படுகிறதே.. யாரை

    எந்த அணிக்கு தலைவராக்குவது
    என அவர் தரும் "நச்" டயலாக்

    கொஞ்சமாக வந்தால் பாப்கார்ன்
    கொஞ்சம் கூடுதலாக வந்தால்

    அது டாஸ்மாக்..
    அத்துடன் தொட்டுக் கொள்ள

    காண் ஒளி மற்றும்
    கலந்து அடிக்க சமர்பணம்

    எப்படியோ கிக்
    ஏத்திடறீங்க..

    வழக்கம் போல்
    வலமாக இந்த பாட்டை

    தனி பின் ஊட்டமாக
    தருகிறோம்..


    ReplyDelete
  3. வலமாக வருது இந்த பாட்டு
    வழக்கம்போல்..

    ....
    ஓ ஹோ ஹோ கிக்கு ஏறுதே
    உள்ளுக்குளே ஞானம் ஊறுதே

    உண்மை எல்லாம்
    சொல்ல தோணுதே

    இந்த வாழ்கை வாழ தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல?

    குழந்தை ஞானி, இந்த
    இருவரை தவிர

    இங்கெ சுகமாய்
    இருப்பது யார் காட்டு

    ஜீவன் இருக்கும் மட்டும்
    வாழ்கை நமது மட்டும்
    இதுதான் ஞானசித்தர் பாட்டு

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை... நன்றி...

    ReplyDelete
  5. வரிசையில் நிற்க மாற்றாக
    வரிசையாக உள்ளது காலணிகள்

    ஒரு ஜோடிக்கு பதில்
    ஒன்று மட்டும் வைத்தால்

    இடம் மிச்சமாகும்
    இத்துடன் அதிக காலணிகள்

    அடுக்கலாம்
    அதாவது நிறைய பேர் நிற்கலாம்
    (sorry உட்காரலாம்)

    ReplyDelete
  6. பாரதி பயிலகம் தவிர வேறு தளங்களுக்கு இதுவரை சென்றதில்லை. இனி நேரம் கிடக்கும் போது சென்று வருகிறேன்.

    தனுசு என்பது என்னைத்தான் என நினைக்கிறேன். சமர்பனத்துக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,
    பதிவுகளை ப்டித்தேன் ஆயினும் பொறுமையாக அவ்வவ் வலத்தளங்களை படிக்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  8. எல்லா அயிட்டங்களுமே அருமை.சுவைத்ததில் பிடித்தது இட்லிவடையே.சாம்பாரிலும் சட்னியிலும் கொஞ்சம் டாஸ்மாக் சரக்கு கலந்துவிட்டாற் போல் தெரிகிறது.
    கடைசி படம் தாங்களே தெரிவித்து விடலாமே,சாமி.
    நன்றி.

    ReplyDelete
  9. Halebidu temple

    மிகவும் அருமை ஐயா. நன்றி

    ReplyDelete
  10. தஞ்சாவூர் பெரியவர் இந்த வலைப்பூவை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடராமல் விட்டு வைத்திருந்தார்.இது தெரியாமல் நான் அவ‌ருடைய பாரதியார் பற்றிய அஞ்சல் வழிப்பாடங்களை 'இலக்கியப் பயிலகம்' என்ற வ‌லைப்பூவைத் துவங்கி அதில் பதிவு செய்து கொடுத்தேன்.அந்த வேலைகளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். சில நாட்களிலேயே கைவிடப்பட்டுக் கிடந்த 'பாரதி பயிலகம்' வலைப்பூவை உயிரூட்டி பல சிறப்பான ஆக்கங்களை வெளியிட்டார்.

    தானாகவே தமிழக சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கு என சிறப்பான வலைப்பூவைத் துவங்கி 100க்கும் மேற்பட்ட தியாகிகளின் வாழ்க்கைச் சுருக்கங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கம்ப ராமாயணத்தினை முழுமையாக
    பாடலுக்குப் பாடல் உரை நடை எழுதி படங்களுடன் ஒரு வலைப்பூ துவங்கினார்.

    'இதையெல்லாம் படிக்க யார் வருவார்கள்?'என்ற கேள்விக்கு விடையாகத்தான் தஞ்சாவூராரை வகுப்பறையில் அறிமுகம் செய்தேன். ஐயா அவர்களின் பெருந்தன்மையால் வகுப்பறை அவருக்குப் பல நல்ல நண்பர்களையும், அவருடைய எழுத்துக்கு ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.
    இன்று 40800 திறப்புக்கள் பெற்றுள்ளது அவர் வலைப்பூ. ஆரம்பித்த போது அவநம்பிக்கை தெரிவித்த நண்பர்கள் சிலர் உண்டு.

    பாரதியைப் பற்றி ஒரு நூல், திருவையாறு வரலாறு ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார்.இன்று தாங்கள் வெளிய்ட்டுள்ள தொடர்புகள் அனைத்துமே சுவையானவை என்றாலும், தஞ்சாவூராரின் வலைப்பூ கல்வி பயிற்றுவிக்கும்
    தன்மை கொண்டது.

    ஐயாவுக்கு நன்றி.






    ReplyDelete
  11. மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா அவர்கள் என்னுடைய பாரதி பயிலகம் வலைப்பூவைப் பற்றி வகுப்பறையில் குறிப்பிட்டு படிக்க்ச் சொல்லியிருப்பது என் இலக்கியப் பணிக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். ஆசிரியரின் பணி மிகச் சிறப்பாக இருந்ததால் அதில் தொடந்து நானும் பங்கு கொண்டேன். மீண்டும் என் நன்றி.

    ReplyDelete
  12. The four blogspots of Thanjavuooran

    1.http//www.bharathipayilagam.blogspot.com
    2.http//www.ilakkiyapayilagam.blogspot.com
    3.http//www.tamilnadythyagigal.blogspot.com
    4.http//www.kambaramayanam-thanjavooraan.blogspot.com

    ReplyDelete
  13. இரண்டு நகைச்சுவைகளும் நன்று. அடுத்து தஞ்சாவூர் ஐயாவின் பதிவும் அந்த கோயில் Halebidu temple, மைசூர் பிடித்திருக்கிறது. எனக்கு இருக்கும் நேர நெருக்கடியில் இது போன்ற பதிவுகளைப் முழுதுமாகப் படிக்க முடியவில்லையே என்ற குறை இருக்கிறது.

    மே 5ம் தேதி இங்கு பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இன்று வேட்பு மனு நாள். இதைப் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தில் (இதற்கு அதீதமான ஆர்வம்தான் காரணம்) எனக்கு இன்று வகுப்பறையே மறந்து விட்டது. இப்போதுதான் ஞாபகத்திற்கே வந்தது.

    ReplyDelete
  14. யாழ் என்றாலே இசைக் கருவிதான். யாழி என்றும் சொல்வதுண்டோ? தமிழ் அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.

    ஆழி என்றால் கடல்.('ஆழி சூழ் உலகிற்கெல்லாம்.......')கவி+ஆழி=கவியாழி
    =கவிக்கடல் என்பது சரியாக இருக்கலாமோ?

    கடலுக்கு எல்லையும் ஆழமும் காண முடியாததுபோல் கவியாழியின் கவிதைகளும் பரந்து விரிந்து பொருள் ஆழ‌மும் கொண்டனவாகக் கொள்ளலாம்தானே?

    ReplyDelete
  15. ////Blogger கவியாழி கண்ணதாசன் said...
    எனது தளத்தின் பெயரையே கவியாழி என்று வைத்துள்ளேன்.கவியாழி என்பதற்கு யாழின்(இசைக்கருவி) இசைபோல இனிமையான கவிதையாக .இருக்குமென்றே சுருக்கமான வார்த்தைக்கு புனைப்பெயரை வைத்திருக்கிறேன். கவி+யாழி=கவியாழி.
    (கவிஞர்.கண்ணதாசன் என்று அந்த மகானைக் கேவலப் படுத்தவேண்டாம் )என்று நானே எனக்கு நாலு எழுத்தில் பெயரிட்டுள்ளேன்.இது எனக்கு கொடுத்த அல்லது நானே வைத்துக்கொண்ட பட்டமோ,பதவியோ அல்ல/////

    நல்லது. உங்களின் பெய்ர் விளக்கத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger அய்யர் said...
    ஒன்பதும் நவகிரகங்களா..
    ஒங்களிடம் கேட்டதால்
    வில்லுக்குரியவருக்கு
    வித்தியாசமான சமர்பணம்
    தஞ்சை தோழரின் பதிவில்
    தமிழை எப்படி கையாள்வதென
    நடையில் அறியலாம்
    நல்லதொரு பயில் அரங்கம்..
    அமைதிபடை 2 இப்போ
    அல்லோல படுகிறதே.. யாரை
    எந்த அணிக்கு தலைவராக்குவது
    என அவர் தரும் "நச்" டயலாக்
    கொஞ்சமாக வந்தால் பாப்கார்ன்
    கொஞ்சம் கூடுதலாக வந்தால்
    அது டாஸ்மாக்..
    அத்துடன் தொட்டுக் கொள்ள
    காண் ஒளி மற்றும்
    கலந்து அடிக்க சமர்பணம்
    எப்படியோ கிக்
    ஏத்திடறீங்க..
    வழக்கம் போல்
    வலமாக இந்த பாட்டை
    தனி பின் ஊட்டமாக
    தருகிறோம்..//////

    உங்களுடைய சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!!

    ReplyDelete
  17. /////Blogger அய்யர் said...
    வலமாக வருது இந்த பாட்டு
    வழக்கம்போல்..
    ....
    ஓ ஹோ ஹோ கிக்கு ஏறுதே
    உள்ளுக்குளே ஞானம் ஊறுதே
    உண்மை எல்லாம்
    சொல்ல தோணுதே
    இந்த வாழ்கை வாழ தான்
    நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல?
    குழந்தை ஞானி, இந்த
    இருவரை தவிர
    இங்கெ சுகமாய்
    இருப்பது யார் காட்டு
    ஜீவன் இருக்கும் மட்டும்
    வாழ்கை நமது மட்டும்
    இதுதான் ஞானசித்தர் பாட்டு/////

    பாடல் வரிகளுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  18. /////Blogger ஸ்கூல் பையன் said...
    அனைத்தும் அருமை... நன்றி.../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger அய்யர் said...
    வரிசையில் நிற்க மாற்றாக
    வரிசையாக உள்ளது காலணிகள்
    ஒரு ஜோடிக்கு பதில்
    ஒன்று மட்டும் வைத்தால்
    இடம் மிச்சமாகும்
    இத்துடன் அதிக காலணிகள்
    அடுக்கலாம்
    அதாவது நிறைய பேர் நிற்கலாம்
    (sorry உட்காரலாம்)/////

    உங்கள் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது:-)))))
    நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  20. ////Blogger arul said...
    9 th picture is nice////

    ஆமாம். அது ஹலபேடு கோவில். நன்றி

    ReplyDelete
  21. /////Blogger thanusu said...
    பாரதி பயிலகம் தவிர வேறு தளங்களுக்கு இதுவரை சென்றதில்லை. இனி நேரம் கிடக்கும் போது சென்று வருகிறேன்.
    தனுசு என்பது என்னைத்தான் என நினைக்கிறேன். சமர்ப்பணத்திற்கு நன்றிகள் ஐயா./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  22. /////Blogger சர்மா said...
    வணக்கம் ஐயா,
    பதிவுகளை ப்டித்தேன் ஆயினும் பொறுமையாக அவ்வவ் வலத்தளங்களை படிக்கிறேன்
    நன்றி/////

    அப்படியே செய்யுங்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete

  23. /////Blogger GOWDA PONNUSAMY said...
    எல்லா அயிட்டங்களுமே அருமை.சுவைத்ததில் பிடித்தது இட்லிவடையே.சாம்பாரிலும் சட்னியிலும் கொஞ்சம் டாஸ்மாக் சரக்கு கலந்துவிட்டார்ப்போல் தெரிகிறது. கடைசி படம் தாங்களே தெரிவித்து விடலாமே,சாமி.
    நன்றி./////

    ஹலபேடு கோவில். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  24. /////Blogger vprasana kumar said...
    Halebidu temple
    மிகவும் அருமை ஐயா. நன்றி/////

    கரெக்ட். சரியான விடை. நன்றி பிரசன்னகுமார்!

    ReplyDelete
  25. /////Blogger kmr.krishnan said...
    தஞ்சாவூர் பெரியவர் இந்த வலைப்பூவை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடராமல் விட்டு வைத்திருந்தார்.இது தெரியாமல் நான் அவ‌ருடைய பாரதியார் பற்றிய அஞ்சல் வழிப்பாடங்களை 'இலக்கியப் பயிலகம்' என்ற வ‌லைப்பூவைத் துவங்கி அதில் பதிவு செய்து கொடுத்தேன்.அந்த வேலைகளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். சில நாட்களிலேயே கைவிடப்பட்டுக் கிடந்த 'பாரதி பயிலகம்' வலைப்பூவை உயிரூட்டி பல சிறப்பான ஆக்கங்களை வெளியிட்டார்.
    தானாகவே தமிழக சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கு என சிறப்பான வலைப்பூவைத் துவங்கி 100க்கும் மேற்பட்ட தியாகிகளின் வாழ்க்கைச் சுருக்கங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கம்ப ராமாயணத்தினை முழுமையாக
    பாடலுக்குப் பாடல் உரை நடை எழுதி படங்களுடன் ஒரு வலைப்பூ துவங்கினார்.
    'இதையெல்லாம் படிக்க யார் வருவார்கள்?'என்ற கேள்விக்கு விடையாகத்தான் தஞ்சாவூராரை வகுப்பறையில் அறிமுகம் செய்தேன். ஐயா அவர்களின் பெருந்தன்மையால் வகுப்பறை அவருக்குப் பல நல்ல நண்பர்களையும், அவருடைய எழுத்துக்கு ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.
    இன்று 40800 திறப்புக்கள் பெற்றுள்ளது அவர் வலைப்பூ. ஆரம்பித்த போது அவநம்பிக்கை தெரிவித்த நண்பர்கள் சிலர் உண்டு.
    பாரதியைப் பற்றி ஒரு நூல், திருவையாறு வரலாறு ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார்.இன்று தாங்கள் வெளிய்ட்டுள்ள தொடர்புகள் அனைத்துமே சுவையானவை என்றாலும், தஞ்சாவூராரின் வலைப்பூ கல்வி பயிற்றுவிக்கும்
    தன்மை கொண்டது.
    ஐயாவுக்கு நன்றி./////

    ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் வலைப் பதிவுகள் எழுதத்துவங்கியபோது படிப்பதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அன்பர்கள் வந்தார்கள். ஒரு ஆண்டு காலம் அந்த நிலைமை. பிறகு பிக்கப் ஆனது. நான் எண்ணிக்கையைப் பற்றி எப்போதும் நினைப்பதில்லை. நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும், நமக்குத் தெரிந்தவற்றையும் ஆவணப்படுத்துகிறோம் எனற நம்பிக்கையிலும், ஆர்வத்திலும்தான் எழுதுகிறேன்! உங்களின் விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  26. //////Blogger Thanjavooraan said...
    மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா அவர்கள் என்னுடைய பாரதி பயிலகம் வலைப்பூவைப் பற்றி வகுப்பறையில் குறிப்பிட்டு படிக்க்ச் சொல்லியிருப்பது என் இலக்கியப் பணிக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். ஆசிரியரின் பணி மிகச் சிறப்பாக இருந்ததால் அதில் தொடந்து நானும் பங்கு கொண்டேன். மீண்டும் என் நன்றி./////

    உங்களுக்குத் தமிழ் அன்னையின் அங்கீகாரம் உள்ளது. நன்றாக எழுதுகிறீர்கள். அதுதான் முக்கியம்! உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கோபால்ன் சார்!

    ReplyDelete
  27. /////Blogger kmr.krishnan said...
    The four blogspots of Thanjavuooran
    1.http//www.bharathipayilagam.blogspot.com
    2.http//www.ilakkiyapayilagam.blogspot.com
    3.http//www.tamilnadythyagigal.blogspot.com
    4.http//www.kambaramayanam-thanjavooraan.blogspot.com/////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. //////Blogger Ak Ananth said...
    இரண்டு நகைச்சுவைகளும் நன்று. அடுத்து தஞ்சாவூர் ஐயாவின் பதிவும் அந்த கோயில் Halebidu temple, மைசூர் பிடித்திருக்கிறது. எனக்கு இருக்கும் நேர நெருக்கடியில் இது போன்ற பதிவுகளைப் முழுதுமாகப் படிக்க முடியவில்லையே என்ற குறை இருக்கிறது.
    மே 5ம் தேதி இங்கு பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இன்று வேட்பு மனு நாள். இதைப் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தில் (இதற்கு அதீதமான ஆர்வம்தான் காரணம்) எனக்கு இன்று வகுப்பறையே மறந்து விட்டது. இப்போதுதான் ஞாபகத்திற்கே வந்தது.///////

    உங்கள் வேலைகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போது படிக்கலாம். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  29. /////Blogger kmr.krishnan said...
    யாழ் என்றாலே இசைக் கருவிதான். யாழி என்றும் சொல்வதுண்டோ? தமிழ் அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.
    ஆழி என்றால் கடல்.('ஆழி சூழ் உலகிற்கெல்லாம்.......')கவி+ஆழி=கவியாழி
    =கவிக்கடல் என்பது சரியாக இருக்கலாமோ?
    கடலுக்கு எல்லையும் ஆழமும் காண முடியாததுபோல் கவியாழியின் கவிதைகளும் பரந்து விரிந்து பொருள் ஆழ‌மும் கொண்டனவாகக் கொள்ளலாம்தானே?/////

    புனைப்பெயர்தானே! அதற்கு இலக்கணம் பார்க்க வேண்டாம். விருப்பபடி வைத்துக்கொள்ளலாம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com