+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இல்லாளுக்குக் கோபம் வந்தால் என்ன ஆகும்?
அரங்கை அதிரவைக்கும் பேச்சாளர் அவர். அவர் பேசவிருக்கிறார் என்றால், நிகழ்ச்சி துவங்குவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பாகவே அரங்கு நிறைந்துவிடும்.
அன்றும் அப்படித்தான். செமையான கூட்டம். அதாவது அரங்கு நிரம்பி வழிந்தது.
கால்பந்துப் பொட்டியில் ஆட்டம் ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே லாவகமாக ஒரு கோலைப்போட்டுவிடும் ரெனால்டோவைப்போல இவரும் பேச்சின் துவக்கத்திலேயே அதிரடியாக இப்படிச் சொன்னார்:
”என் வாழ்நாளின் அற்புதத் தருணங்கள் எல்லாம் ஒரு பெண்ணின் கரங்களில் தவழ்ந்தபோது கிடைத்தன. ஆனால் அந்தப் பெண் என் மனைவி அல்ல!”
அரங்கில் இருந்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். நிசப்தமாக இருந்தது.
தொடர்ந்து அவர் சொன்னார்: ”அந்தப் பெண் வேறு யாருமல்ல. அவர்தான் என் தாய்!”
கைதட்டல் ஒலியால், அரங்கு அதிர்ந்தது. வந்திருந்த சில பெண்களின் கண்கள் பனித்துவிட்டன!
**************
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நிறுவனத்தின் மேலாளர், இதைப் போல சொல்லி தன்னுடைய மனைவியையும் அசத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.கூட்டம் நடந்த அன்று இரவு, அவர் மனைவி ஊரில் இல்லாததால், ஒரு வாரம் கழித்து, அவருடைய மனைவி, திரும்பி வந்தவுடன்தான் அவரால் அதைச் செயல் படுத்தமுடிந்தது.
அவருடைய போதாத நேரம், அலுவலகத்தில் வேலை முடிந்து திரும்பும்போது, வாடிக்கையாளர் ஒருவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, மூன்று லார்ஜ் சரக்கு அடித்த கையோடு, வீட்டுக்குத் திரும்பியிருந்தார்.
வந்தவுடன், தன் மனைவியுடன் பேச்சைத் துவக்கினார்:
அது சமயம் அவருடைய இல்லாள் சமையல் அறையில் இரவு உணவிற்கான வேலையில் மூழ்கியிருந்தார்.
”என் வாழ்நாளின் அற்புதத் தருணங்கள் எல்லாம் ஒரு பெண்ணின் கரங்களில் தவழ்ந்தபோது கிடைத்தன. ஆனால் அந்தப் பெண் நீ அல்ல!”
அதிர்ச்சியும், கோபமும் கொண்ட மனைவி,” ஓகோ” என்று மட்டும் சொன்னார்.
அந்த ஜோக்கின் இரண்டாவது பகுதியைத் தன் நினைவிற்குக் கொண்டுவந்து, சொல்ல முயன்றவர், 20 வினாடிகள் முயற்சித்துவிட்டு, மறந்துவிட்ட நிலையில்,” ஆனால், அந்தப் பெண் யாரென்று இப்போது சொல்லமுடியாது” என்று மட்டும் முணு முணுத்துவிட்டு, ஹாலில் உள்ள நாற்காலியில் வந்து
அமர்ந்துவிட்டார்.
அதற்குப் பிறகு என்ன ஆனது?
மனைவி கொண்டு வந்து அவர் தலை மேல் கொட்டிய வெந்நீரால், நினைவு திரும்ப ஒரு நாள் ஆயிற்று. மருத்துவ மனையில் இருந்து திரும்ப
மூன்று நாள் ஆயிற்று!
.................................................................................................................
Moral of the story...
Don't Copy if you can't PASTE
--------------------------------------------------------------------Don't Copy if you can't PASTE
2
தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரில் அமர்ந்திருந்த கணவனின் அருகே வந்த மனைவி, ஒரு இருப்புச் சட்டியை (Fry Pan ஐ) வைத்து, கணவனின் தலையில் திருஷ்டி சுற்றுவதைப் போல மூன்று முறை சுற்றிவிட்டு, அந்தஇருப்புச்சட்டியில் (Fry Pan) இருந்த சீட்டின் மீது,”த்தூ” வென்று
துப்பச் சொன்னார்.
சீட்டை எழுத்துப்பார்த்த கணவன் சற்று நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
அதில்,”ஜென்னி” என்று எழுதப்பெற்றிருந்தது.
மனைவி சொன்னாள்:” துவைக்கும்போது பார்த்தேன்.உங்கள் பாண்ட் பாக்கெட்டில் இருந்தது”
கணவன் பதில் சொன்னான்,”அடி, பைத்தியமே, இது ரேசில் ஓடப்போகிற குதிரையின் பெயர். அடுத்தவாரம் இதன்மேல் பணம் கட்டி விளையாட வேண்டும். அதற்காகக் குறித்து வைத்திருக்கிறேன்.”
‘ஸோ, சாரி!” என்று சொல்லிவிட்டு மனைவி போய்விட்டாள்.
ஒருவாரம் ஆனது.
மீண்டும் இருப்புச் சட்டியுடன் வந்த மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்டான்:
“இப்போது என்ன சீட்டு?”
நச் சென்று அந்த இருப்புச் சட்டியால், அவன் மண்டை மீது ஒரு போடுபோட்ட மனைவி, போடும் முன்பாகச் சொன்னாள்.
“அந்தக்குதிரை போனில் பேசியது.”
-----------------------------------------------
இரண்டில் எது நன்றாக உள்ளது?
இது வார இறுதிப்பதிவு.
சொந்த சரக்கல்ல; இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.
மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteமுதல் கதை மிகவும் நன்றாக உள்ளது.
வாத்தியார் ஐயா!
ReplyDeleteஅதிகாலை பொழுது வணக்கம்.
இரண்டாவது மிகவும் நன்றாக உள்ளது.
கண்டிப்பிலும் கூட, என்ன ஒரு அன்பு (காதல்).
அதிகாலையில், அன்னையை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.
தாய்ப்பாசம்!
விபரமறிந்த வயதிலையும்
அரிவாளால் முழங்கால் வெட்டுபட்டு
குருதிகொட்டிய என் நிலைகண்டு
என்னிலும் கதறி அழத
என் குல தெய்வமே!
கைநிறைய ஊதியமும்
பெற்று நான் வாழ்ந்தாலும்
அத்தனையும் நீயெனக்கு
போட்ட பிச்சை தானே அம்மா!
இந்த ஜீவன் ஜீவிச்சு இருக்கும் வரைக்கும்,
உன்னையே கை தொழுது வாழ
வாழ்த்து கூறு அம்மா! நீ எனக்கு
Vanakam sir,
ReplyDeleteஇது ரெண்டும் வில்லங்கமான கதைகளா இருக்கு.......but the story number one is interesting....
Thanks
Thanuja
Anbu Aiyya,
ReplyDeleteGud Morning, Am I the first one to comment. The last joke is simply superb.
You have started numerology which is my favourite. Congrats.
Sara,
CMB.
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
ReplyDeletemoral of the story:-
இல்லாளுக்குக் கோபம் வரும் விஷயங்களில் விளையாடக்கூடாது
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-06
ஐயா,
ReplyDeleteசமிபத்தில் எனக்கு ஒரு அனுபவம். எங்கள் அலுவகத்தில், சில இளம் பெண்மணிகள் ஒரு போட்டி நடத்தினார்கள். இது நடந்தது எங்கள் கான்டீன் அறையில். இது தெரியாத நான், அங்கு சென்று அகப்பட்டு கொண்டேன்.
என்னிடம் ஒரு நிமிடத்திற்கு "என் முதல் காதல்" (My first love) பற்றி பேச சொன்னார்கள்.
நான், "அவள் என்னை என் தந்தையின் முன் முத்தம் இட்டாள், இதை என் சகோதரி பார்த்தாள், சகோதரன் பார்த்தான்... என்று ஆரம்பித்து சுமார் இரண்டு நிமிடம் பேசினேன். கூட்டத்தில் இருந்த மக்கள், கூச்சல் போட்டார்கள், நா சொல்வது பொய் என்று நினைத்து.
கடைசியில், அவள் வேறு யாரும் இல்லை, என் தாய் தான் எண்டு சொன்ன போது அங்கே ஆரவாரம் அடங்க சில நிமிடம் பிடித்தது.
இரண்டாம் பகுதி, ஒரு ஜோக்காக எங்கயோ படித்தேன்.
நன்றி.
ஸ்ரீதர்
Don't copy if you cannot paste.இதை கட்டாயமாக காப்பி அடிக்க போகிறேன்.
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம் ...
ReplyDeleteஇன்றைய நகைசுவை அருமை அதில் என்னை கவர்ந்தது
Moral of the story...
Don't Copy if you can't PASTE
மேற்கண்ட வாசகம் தான் அய்யா ....
நன்றி வணக்கம்
இந்த வகையான சிரிப்புக்கள் இப்போது மலிந்துவிட்டன. இதைவிட நாசுக்காக
ReplyDeleteதிருவள்ளுவர் கூறுவார்:காதலன் தும்மினான்.'யாரை நினத்துத் தும்மினாய்?'என்று காதலி கேட்டாள்.'என் மனதில் யாருமே இல்லை' என்றான். 'நானும் கூடவா இல்லை?' என்று ஊடினாள்.
'வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று'
Both are very super joke. i enjoyed very much.
ReplyDeleteவணக்கம்....
ReplyDelete“அந்தக்குதிரை போனில் பேசியது.”
குழுங்கி குழுங்கி சிரிதேன்..
இரண்டாவது தான் சூசூசூப்பர்...
வாழ்க வளமுடன்
சூப்பர் ,..சார்
ReplyDeleteமிகவும் சுவையான பகுதிகள் , ஆசானே ...
ReplyDelete///V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
முதல் கதை மிகவும் நன்றாக உள்ளது.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா!
அதிகாலை பொழுது வணக்கம்
இரண்டாவது மிகவும் நன்றாக உள்ளது.
கண்டிப்பிலும் கூட, என்ன ஒரு அன்பு (காதல்).
அதிகாலையில், அன்னையை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்க வைத்து விட்டீர்கள் ஐயா.
தாய்ப்பாசம்!
விபரமறிந்த வயதிலையும்
அரிவாளால் முழங்கால் வெட்டுபட்டு
குருதிகொட்டிய என் நிலைகண்டு
என்னிலும் கதறி அழத
என் குல தெய்வமே!
கைநிறைய ஊதியமும்
பெற்று நான் வாழ்ந்தாலும்
அத்தனையும் நீயெனக்கு
போட்ட பிச்சை தானே அம்மா!
இந்த ஜீவன் ஜீவிச்சு இருக்கும் வரைக்கும்,
உன்னையே கை தொழுது வாழ
வாழ்த்து கூறு அம்மா! நீ எனக்கு!////
நல்லது.நன்றி முருகா!
///Thanuja said...
ReplyDeleteVanakam sir,
இது ரெண்டும் வில்லங்கமான கதைகளா இருக்கு.......but the story number one is interesting....
Thanks
Thanuja////
நல்லது.நன்றி சகோதரி1
////R.Saravanakumar said...
ReplyDeleteAnbu Aiyya,
Gud Morning, Am I the first one to comment. The last joke is simply superb.
You have started numerology which is my favourite. Congrats.
Sara,
CMB./////
நல்லது.நன்றி சரவணன்!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
moral of the story:-
இல்லாளுக்குக் கோபம் வரும் விஷயங்களில் விளையாடக்கூடாது
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
உண்மை! நல்லது. நன்றி நண்பரே!
/////Sridhar Subramaniam said...
ReplyDeleteஐயா,
சமிபத்தில் எனக்கு ஒரு அனுபவம். எங்கள் அலுவகத்தில், சில இளம் பெண்மணிகள் ஒரு போட்டி நடத்தினார்கள். இது நடந்தது எங்கள் கான்டீன் அறையில். இது தெரியாத நான், அங்கு சென்று அகப்பட்டு கொண்டேன்.
என்னிடம் ஒரு நிமிடத்திற்கு "என் முதல் காதல்" (My first love) பற்றி பேச சொன்னார்கள்.
நான், "அவள் என்னை என் தந்தையின் முன் முத்தம் இட்டாள், இதை என் சகோதரி பார்த்தாள், சகோதரன் பார்த்தான்... என்று ஆரம்பித்து சுமார் இரண்டு நிமிடம் பேசினேன். கூட்டத்தில் இருந்த மக்கள், கூச்சல் போட்டார்கள், நா சொல்வது பொய் என்று நினைத்து.
கடைசியில், அவள் வேறு யாரும் இல்லை, என் தாய் தான் எண்டு சொன்ன போது அங்கே ஆரவாரம் அடங்க சில நிமிடம் பிடித்தது.
இரண்டாம் பகுதி, ஒரு ஜோக்காக எங்கயோ படித்தேன்.
நன்றி.
ஸ்ரீதர்//////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////krish said...
ReplyDeleteDon't copy if you cannot paste.இதை கட்டாயமாக காப்பி அடிக்க போகிறேன்.////
நல்லது.நன்றி நண்பரே!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம் ...
இன்றைய நகைசுவை அருமை அதில் என்னை கவர்ந்தது
Moral of the story...
Don't Copy if you can't PASTE
மேற்கண்ட வாசகம் தான் அய்யா ....
நன்றி வணக்கம்/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////kmr.krishnan said...
ReplyDeleteஇந்த வகையான சிரிப்புக்கள் இப்போது மலிந்துவிட்டன. இதைவிட நாசுக்காக
திருவள்ளுவர் கூறுவார்:காதலன் தும்மினான்.'யாரை நினத்துத் தும்மினாய்?'என்று காதலி கேட்டாள்.'என் மனதில் யாருமே இல்லை' என்றான். 'நானும் கூடவா இல்லை?' என்று ஊடினாள்.
'வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று'////
ஆமாம். வள்ளுவர் பெருந்தகை எதையும் விட்டு வைக்கவில்லை!
/////Success said...
ReplyDeleteவணக்கம்....
“அந்தக்குதிரை போனில் பேசியது.”
குலுங்கிக் குலுங்கிச் சிரிதேன்..
இரண்டாவது தான் ச்சூப்பர்...
வாழ்க வளமுடன்////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////CJeevanantham said...
ReplyDeleteBoth are very super joke. i enjoyed very much.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////மதி வேங்கை said...
ReplyDeleteமிகவும் சுவையான பகுதிகள் , ஆசானே ...//////
நல்லது.நன்றி!
/////மதி வேங்கை said...
ReplyDeleteசூப்பர் ,..சார்/////
நல்லது.நன்றி!
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் நான் மிகவும் ரசித்து படித்தேன்.மிகவும் அருமையான வரிகள் நன்றி அய்யா
ReplyDeleteDear Sir,
ReplyDeleteI like the first one.
Thanks,
Aalaasiam G
அன்பு அய்யாவுக்கு வணக்கம், தாங்கள் எழுதிய முதல் கதை சிறப்பு, இரண்டாவது கதை சிரிப்போ சிரிப்பு, நீங்கள் எழுதியவிதம் சிறப்போ
ReplyDeleteசிறப்பு மிக மிக சிறப்பு, நன்றி.
அன்புடன் ஜீவா
போனில் பேசிய குதிரைதான் நன்றாக இருந்தது...
ReplyDelete/////rajesh said...
ReplyDeleteஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் நான் மிகவும் ரசித்து படித்தேன்.மிகவும் அருமையான வரிகள் நன்றி அய்யா/////
நல்லது.நன்றி!
//////Alasiam G said...
ReplyDeleteDear Sir,
I like the first one.
Thanks,
Aalaasiam G//////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிஆலாசியம்!
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யாவுக்கு வணக்கம், தாங்கள் எழுதிய முதல் கதை சிறப்பு, இரண்டாவது கதை சிரிப்போ சிரிப்பு, நீங்கள் எழுதியவிதம் சிறப்போ சிறப்பு மிக மிக சிறப்பு, நன்றி.
அன்புடன் ஜீவா/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////கண்ணகி said...
ReplyDeleteபோனில் பேசிய குதிரைதான் நன்றாக இருந்தது...//////
நல்லது.நன்றி சகோதரி1
வாத்தியாரே.. நீங்களுமா..?
ReplyDeleteஇதுபோல முக்கியமான
ReplyDeleteஆபீஸ் call ஐ வூட்டுக்காரம்மா attend பண்ணிட்டா ஒரே டெண்சன்தான் போங்க..
////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே.. நீங்களுமா..?/////
இல்லாவிட்டால் உங்களை வகுப்பறைக்குள் வரவழைப்பது எப்படி - உனா தானா?
/////minorwall said...
ReplyDeleteஇதுபோல முக்கியமான ஆபீஸ் call ஐ வூட்டுக்காரம்மா attend பண்ணிட்டா ஒரே டென்சன்தான் போங்க..///////
இதைப்படிக்கச் சொல்லுங்க! இனிமேல் டென்சன் ஆகமாட்டாங்க!:-))))
சார் வணக்கம்,
ReplyDeleteஉண்மை தமிழ்ன் வெப் சைட் சொல்லுங்க அவர் எழுதுவதை படிக்கப்பேறேன் சர்ர்
நீங்க வேற எதோ ஒரு பிளாக்ல்ல எழுதிறீங்களா கொஞ்சம் அதையும் தாங்க
சார் மனமே ம்யில் வாகனம் கதை படிக்கணும் சார் சார் கொஞ்ச வேலையாயிருந்தேன் கூட சந்திரர்ஷ்டமும் வேற மெயில கொடுக்கமுடியவில்லை
பயிற்ச்சி வகுப்பு பாடம் நல்லாயிருந்தது.
/////sundari said...
ReplyDeleteசார் வணக்கம்,
உண்மை தமிழ்ன் வெப் சைட் சொல்லுங்க அவர் எழுதுவதை படிக்கப்போகிறேன் சார்!
நீங்க வேற எதோ ஒரு பிளாக்ல்ல எழுதிறீங்களா கொஞ்சம் அதையும் தாங்க
சார் மனமே ம்யில் வாகனம் கதை படிக்கணும் சார் சார் கொஞ்ச வேலையாயிருந்தேன் கூட சந்திரர்ஷ்டமும் வேற மெயில கொடுக்கமுடியவில்லை
பயிற்ச்சி வகுப்பு பாடம் நல்லாயிருந்தது./////
உண்மைத்தமிழரின் இணைய தள முகவரி: http://truetamilans.blogspot.com/
என்னுடைய இன்னொரு தளம் (அதில் இப்போது எழுதுவதற்கு நேரமில்லை) http://devakottai.blogspot.com
இரண்டும் நல்லாக இருந்தது வாய் விட்டு சிரிக்க கூடியதாக.. நன்றி..
ReplyDelete///Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஇரண்டும் நல்லாக இருந்தது வாய் விட்டு சிரிக்க கூடியதாக.. நன்றி..////
நல்லது. நன்றி இமானுவேல்
ரெண்டுமே சூப்பர். ஒண்ணை விட ஒண்ணு சூப்பர் (எனக்கு என்னமோ இது உங்க சொந்த அனுபவமோனு ஒரு சந்தேகம்...)
ReplyDelete////அப்பாவி தங்கமணி said...
ReplyDeleteரெண்டுமே சூப்பர். ஒண்ணை விட ஒண்ணு சூப்பர் (எனக்கு என்னமோ இது உங்க சொந்த அனுபவமோனு ஒரு சந்தேகம்...)/////
அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே!:-))))
////அந்தக்குதிரை போனில் பேசியது./////
ReplyDeleteஇது வரை இரண்டு மாதங்களாக தங்களது பாடங்களை படித்து வருகிறேன். ஆனால் எதற்கும் பின்னூட்டம் இட்டதில்லை. ஆனால் இந்த வரியை படித்தவுடன் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஜோதிட அறிவு மட்டும்மல்லாமல் எங்களை சிரிக்கவும் வைக்கும் ஆசானுக்கு வணக்கங்கள் பல உரித்தாகுக.
//////Admin said...
ReplyDelete////அந்தக்குதிரை போனில் பேசியது./////
இது வரை இரண்டு மாதங்களாக தங்களது பாடங்களை படித்து வருகிறேன். ஆனால் எதற்கும் பின்னூட்டம் இட்டதில்லை. ஆனால் இந்த வரியை படித்தவுடன் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஜோதிட அறிவு மட்டும்மல்லாமல் எங்களை சிரிக்கவும் வைக்கும் ஆசானுக்கு வணக்கங்கள் பல உரித்தாகுக.////
நல்லது. நன்றி நண்பரே!