8.3.10

முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ!

மனிதர்களில் பலவிதமான குணமுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேர்களும் ஒன்றிலிருந்து ஒன்பதிற்குள் உரிய எண்களின் குணங்களில் வகைப்பட்டுவிடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சார்ந்தவர்களின் குணங்கள் பொதுவாக ஒன்றாக இருக்கும். அதாவது அந்த எண்ணின் குணாதிசயங்களைச் சார்ந்து இருக்கும்.

இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்.

உயர்வான, சாதுவான, இனிமையான குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு என்ன தேவை என்று உணரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதன்காரணமாக ஒரு குழுவாகச் செயல்படும் தன்மையை உடையவர்களாக இருப்பார்கள். அழகை நேசிப்பவர்களாக இருப்பார்கள்.

ஆசிரியர், ஆலோசகர், இசைக்கலைஞர், கட்டடக்கலைஞர், தூதுவர் போன்ற தொழில்களில் அல்லது வேலைகளில் பரிணமளிப்பார்கள். அதாவது பெயர் எடுப்பார்கள்.

சிலர், கோழைத்தனம், பயஉணர்வு அல்லது தன்னம்பிக்கைக் குறைபாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாக வெற்றிபெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இதுவும் அந்த எண்ணின் தன்மையாகும். தேய்பிறைச் சந்திரனில் பிறந்தவர்களுக்கு இந்தத்தன்மை இருக்கும்!

சிலர் சட்டென்று மனதளவில் காயப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் எதிர்ப்பில் இருந்தும், விமர்சனங்களில் இருந்தும் தப்பிக்கும் உணர்வுடையவர்களாகவும் இருப்பார்கள்.


இந்த எண்ணிற்கு நட்பான எண்கள் 1, 3
நட்பு இல்லாத எண்கள் 5, 4
உரிய நாள்: திங்கட்கிழமை
உரிய நிறம்: வெண்மை! (White)
உரிய நவரத்தினம்: முத்து (Pearl)
உரிய உலோகம்: வெள்ளி (Silver)

தொழில் அல்லது வேலை:

நீதித்துறையில் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர்கள். இந்த எண்காரர்களுக்கு இயற்கையாகவே பேச்சுத்திறமை இருக்கும் என்பதால், அவர்களால் நீதித்துறையில் வெற்றிபெறமுடியும். அதுபோலவே இந்த எண்காரர்களுக்கு அரசியலும் பொருத்தமான துறையாகும். நடனம், இசை, இலக்கியம், சிற்பக்கலை ஆகிய துறைகளும் இவர்களுக்கு வெற்றிகரமான துறையாகும். பதிப்பகம், ஜவுளித்துறை, நகைவியாபாரம் ஆஇய துறைகளில் பணியாற்றும் இந்த எண்காரர்களுக்கு அபரிதமான செல்வம் சேரும்.

உடல் நலம்: நீரழிவு நோய்க்கு (Diabetes) ஆட்பட நேரிடும். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் ஆளாக நேரிடும்.

திருமணம்: இந்த எண்ணுடைய பெண்கள் ஒன்றாம் எண்காரர்களையும், இந்த எண்ணில் பிறந்த ஆண்கள் 7ஆம் எண்ணுடைய பெண்களையும் மனந்து கொள்ளலாம். பொருத்தமாக இருக்கும்!

மகாத்மா காந்திஜி, லால் பஹதூர் சாஸ்த்ரி ஆகியவர்கள் இந்த எண்ணில் பிறந்த இந்தியப் பிரபலங்கள்.

அன்புடன்
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

28 comments:

  1. Vanakam sir,

    From my experience, people who are born in this number only use people.....if there is a benefit from them, they will be nice to that person and if the same person is financially lost or hurt in hospital....they are the first one to run away from them...and they create sympathy for them!!!!And they cannot be trusted becoz they change all the time....they won't be the same as the next day!!!

    Thanks
    Thanuja

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    இரண்டாம் எண்ணுக்கு உரிய

    பலன் மற்றும் பாடம் நன்றாக உள்ளது. நன்றி!

    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-08

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,

    உதிர்ந்த முத்துக்களைக் கோர்த்து
    தந்தமைக்கு நன்றிகள் ஐயா!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. /////Thanuja said...
    Vanakam sir,
    From my experience, people who are born in this number only use people.....if there is a benefit from them, they will be nice to that person and if the same person is financially lost or hurt in hospital....they are the first one to run away from them...and they create sympathy for them!!!!And they cannot be trusted becoz they change all the time....they won't be the same as the next day!!!
    Thanks
    Thanuja/////

    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    இரண்டாம் எண்ணுக்கு உரிய பலன் மற்றும் பாடம் நன்றாக உள்ளது. நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  6. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    உதிர்ந்த முத்துக்களைக் கோர்த்து
    தந்தமைக்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் தொடர் அருமையாக உள்ளது நன்றி அய்யா. நேற்று நான் ஓரு web site பார்த்தேன் அய்யா அதில் ஜதகம் பார்க்க வருபவர்களில் என்ன கேள்வி கேட்பார்கள் என்று கூறமுடியும் என்று சொல்லி இருந்தார்கள் அது ஒரு software ஆக கிடைக்கும் என்று எழுதி இருந்தார்கள் இது உண்மையா அய்யா. அப்படி இருந்தால் அதன் புத்தகம் எங்கு கிடைக்கும். அந்த வெப்சைட்டின் முகவரி http://psssrf.org.in/

    ReplyDelete
  8. அன்பு அய்யாவுக்கு காலை வணக்கம்,எண் 2, சந்திரன் பற்றிய‌
    பாடம் நன்றாக இருந்தது. எனக்கு சந்திரன் ஆறாம் இடத்தில்
    உள்ளது‍(மிதுனம் ராசியில்)சந்திரனுக்கு முன்னும், பின்னும்
    எந்த கிரகமும் இல்லை. சந்திரன் தனியாக உள்ளது.
    நான் முத்து மோதிரம் அணியலாமா? தயவு செய்து சொல்லவும்
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  9. /////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் தொடர் அருமையாக உள்ளது நன்றி அய்யா.

    நேற்று நான் ஓரு web site பார்த்தேன் அய்யா அதில் ஜாதகம் பார்க்க வருபவர்களில் என்ன கேள்வி

    கேட்பார்கள் என்று கூறமுடியும் என்று சொல்லி இருந்தார்கள் அது ஒரு software ஆக கிடைக்கும் என்று

    எழுதி இருந்தார்கள் இது உண்மையா அய்யா. அப்படி இருந்தால் அதன் புத்தகம் எங்கு கிடைக்கும். அந்த

    வெப்சைட்டின் முகவரி http://psssrf.org.in/

    எனக்குத் தெரியவில்லை நண்பரே! அது சாத்தியமும் இல்லை!

    ReplyDelete
  10. /////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு காலை வணக்கம்,எண் 2, சந்திரன் பற்றிய‌
    பாடம் நன்றாக இருந்தது. எனக்கு சந்திரன் ஆறாம் இடத்தில்
    உள்ளது‍(மிதுனம் ராசியில்)சந்திரனுக்கு முன்னும், பின்னும்
    எந்த கிரகமும் இல்லை. சந்திரன் தனியாக உள்ளது.
    நான் முத்து மோதிரம் அணியலாமா? தயவு செய்து சொல்லவும்
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா/////

    உங்களுடைய பிறந்த தேதி என்ன?

    ReplyDelete
  11. அன்பு அய்யா என்னுடைய பிறந்த தேதி‍ 22 (ஏப்ரல் -1969)
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  12. ////ஜீவா said...
    அன்பு அய்யா என்னுடைய பிறந்த தேதி‍ 22 (ஏப்ரல் -1969)
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா////

    உங்களுடைய பிறப்பு எண் 4 வருகிறது. ஆகவே முத்து அணிய வேண்டாம்!

    ReplyDelete
  13. 2ம் எண் காரர்கள் கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். நல்ல கற்பனை வளம் தேவைப் படும் கதை கவிதை போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்குவார்கள்.

    எந்த எண் காரர்களாக இருந்தாலும் 3 வகையாக பிரிக்கலாம். அந்த குறிப்பிட்ட எண் கொண்ட கிரகத்தின் பூரண அருள் (கிரக பலம்) பெற்றவர்கள், நடுத்தர பலம், குறைந்த பலம் பெற்றவர்கள். முதலில் சொல்லப் பட்டவர்கள் உயர் குணமுடையவர்கள். இறுதியாக சொல்லப் பட்டவர்கள் மட்டரகத்தைச் சேர்ந்தவர்கள். ஆக எந்த எண்ணைச் சார்ந்தவர்களையும் பொத்தாம் பொதுவாக கெட்டவர்கள் என்று சொல்லவும் முடியாது.

    ReplyDelete
  14. Dear Sir

    Naanum Indha En Sir( 20).

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  15. Dear Sir

    Chandran 8il (20 August 1976). 20(2) sir...

    Eppadi Sir

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  16. ////ananth said...
    2ம் எண் காரர்கள் கற்பனை வளம் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். நல்ல கற்பனை வளம் தேவைப் படும் கதை கவிதை போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்குவார்கள்.
    எந்த எண் காரர்களாக இருந்தாலும் 3 வகையாக பிரிக்கலாம். அந்த குறிப்பிட்ட எண் கொண்ட கிரகத்தின் பூரண அருள் (கிரக பலம்) பெற்றவர்கள், நடுத்தர பலம், குறைந்த பலம் பெற்றவர்கள். முதலில் சொல்லப் பட்டவர்கள் உயர் குணமுடையவர்கள். இறுதியாக சொல்லப் பட்டவர்கள் மட்டரகத்தைச் சேர்ந்தவர்கள். ஆக எந்த எண்ணைச் சார்ந்தவர்களையும் பொத்தாம் பொதுவாக கெட்டவர்கள் என்று சொல்லவும் முடியாது.////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  17. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Naanum Indha En Sir( 20).
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  18. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Chandran 8il (20 August 1976). 20(2) sir...
    Eppadi Sir
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////


    சந்திரன் எட்டில் இருப்பது சரி. லக்கினம் என்ன ராஜாராமன்?

    ReplyDelete
  19. இயற்கை ஜாதகத்தில் கடகம் 4 வதாக வருகிறது. ஆனால் எண்கணிதத்தில்
    சந்திரன் 2ம் எண் என்கிறது உச்சவீடுகளுக்கான வரிசையை எடுத்துக்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  20. அய்யா வணக்கம் ,
    அய்யா முத்தான பாடத்திற்க்கு முத்ற்க்கண் நன்றிகள்......

    ஒரு சந்தேகம் அய்யா ஒருவர் பிறந்த தேதியை மட்டும் வைத்து பலன் பார்களாமா அல்லது தேதி மாதம் வருடம் மூன்றையும் கூட்ட கிடைக்கும் எண் வைத்து பலன் பார்ப்பதா?எது சிறந்தது அய்யா ...

    நன்றி வணக்கம்......

    ReplyDelete
  21. சார் வணக்கம்,
    ஆ என்னவொரு அருமையான தலைப்பு ("முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ! இப்படி சொல்லி கொஞ்சிட்டிங்க எனக்கு பிறவி எண் 2 விதி எண் 1 இரண்டும் நட்பாயிருக்குது. நீஙக் ரொம்ப நல்ல சொல்லியிருக்கிறிங்க நீங்க சொனன எல்லா எனக்கு பொருத்தம், நீங்க த்ர பதிவுக்கு ரொமப நன்றி சார். சனி கிழமை பிரதோஷம் எல்லா சிவன் கோயிலுக்கு போங்க பால் அபிஷேகம் பண்ணுங்க.

    ReplyDelete
  22. //////kmr.krishnan said...
    இயற்கை ஜாதகத்தில் கடகம் 4 வதாக வருகிறது. ஆனால் எண்கணிதத்தில்
    சந்திரன் 2ம் எண் என்கிறது உச்சவீடுகளுக்கான வரிசையை எடுத்துக்கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது./////

    அப்படி இல்லை கிருஷ்ணன் சார். அடுத்து உச்சனாக வரும் குருவிற்கு எண் 3 . சரியாக உள்ளது.. அடுத்து உச்சனாக வரும் புதனுக்கு 4 அல்லவா வரவேண்டும். இல்லையே? புதனின் எண் 5 அல்லவா?

    ReplyDelete
  23. /////astroadhi said...
    அய்யா வணக்கம் ,
    அய்யா முத்தான பாடத்திற்கு முதற்க்கண் நன்றிகள்......
    ஒரு சந்தேகம் அய்யா ஒருவர் பிறந்த தேதியை மட்டும் வைத்து பலன் பார்களாமா அல்லது தேதி மாதம் வருடம் மூன்றையும் கூட்ட கிடைக்கும் எண் வைத்து பலன் பார்ப்பதா?எது சிறந்தது அய்யா ...
    நன்றி வணக்கம்......

    கூட்டல் எண் என்பதுதான் விதி எண் எனப்படும். அதைவைத்துத்தான் பலன்கள் கிடைக்கும்!

    ReplyDelete
  24. /////kannan said...
    yes sir!
    thanks.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  25. /////sundari said...
    சார் வணக்கம்,
    ஆ என்னவொரு அருமையான தலைப்பு ("முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ! இப்படி சொல்லி கொஞ்சிட்டிங்க எனக்கு பிறவி எண் 2 விதி எண் 1 இரண்டும் நட்பாயிருக்குது. நீஙக் ரொம்ப நல்ல சொல்லியிருக்கிறிங்க நீங்க சொனன எல்லா எனக்கு பொருத்தம், நீங்க த்ர பதிவுக்கு ரொமப நன்றி சார். ////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  26. //அப்படி இல்லை கிருஷ்ணன் சார். அடுத்து உச்சனாக வரும் குருவிற்கு எண் 3 . சரியாக உள்ளது.. அடுத்து உச்சனாக வரும் புதனுக்கு 4 அல்லவா வரவேண்டும். இல்லையே? புதனின் எண் 5 அல்லவா?//
    Raghu ,Kethu or/ uranus neptune are inserted in between . Venus alone is not in the exaltation order. All other 6 get their number in exaltation order in the natural chart.

    ReplyDelete
  27. /////kmr.krishnan said...
    //அப்படி இல்லை கிருஷ்ணன் சார். அடுத்து உச்சனாக வரும் குருவிற்கு எண் 3 . சரியாக உள்ளது.. அடுத்து உச்சனாக வரும் புதனுக்கு 4 அல்லவா வரவேண்டும். இல்லையே? புதனின் எண் 5 அல்லவா?//
    Raghu ,Kethu or/ uranus neptune are inserted in between . Venus alone is not in the exaltation order. All other 6 get their number in exaltation order in the natural chart./////

    உச்ச வரிசை: சூரியன், சந்திரன், குரு, புதன், சனி, ராகு/கேது, செவ்வாய், சுக்கிரன்
    எண் வரிசை: 1, 2, 3, 5, 8, 4/7, 9, 6
    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com