4.3.10

உங்களுக்காக ஒரு இணைய தளம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக ஒரு இணைய தளம்!

உங்களுடைய பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுடைய பிறந்த தேதியை வைத்து உங்களுடைய
அதிஷ்ட எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கை சொடுக்கும் நேரத்தில் அதைக் கணித்துத்தர ஒரு இணைய தளம் உள்ளது.

அதை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன். அதற்கான சுட்டி இங்கே உள்ளது

அது உலகப்புகழ் பெற்ற எண்கணித மேதை சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண் சாஸ்திரப்படி உள்ளது. அதுதான் அதன் (அந்த தளத்தின்) சிறப்பு அம்சமாகும்! சீரோ எண் கணிதத்தைக் கற்றுக்கொண்டது இந்தியாவில் என்பது அதைவிடச் சிறப்பான செய்தியாகும்!

பார்த்து மகிழுங்கள்! பயன்படுத்தி மகிழுங்கள்!

அதை நமக்கு அடையாளம் காட்டிய ms torrent அவர்களுக்கு உங்களின் சார்பாக ஒரு நன்றியைச் சொல்லிவிடுகிறேன். நன்றி ms torrent
-------------------------------------------
அந்த தளத்தை வைத்து நம் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பெயர் எப்படி உள்ளது? அதிர்ஷ்டமானதாக உள்ளதா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அத்தனை பெயர்களுமே சூப்பரான அதிர்ஷ்டத்துடன் உள்ளன.

1. Tata = 10 (Lucky Number)
2. Birla = 9 (Lucky Number)
3. Goenka = 23 (Lucky Number)
4. Tirubhai Ambani = 36 (Lucky Number)
5. Venkateshwara = 46 (Lucky Number)

ஐந்தாவதாக உள்ளவர் யாரென்று கேட்கிறீர்களா? அவர்தான் நம்ம வெங்கி. ஏழுமலை மேலே தலைமை அலுவலகம் வைத்திருக்கிறாரே - அந்த வெங்கிதான்!:-))))))))

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

32 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு

    சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண்கணிதப்படி

    அமைக்கப்பட்டுள்ள இனைய தளத்தினை நாங்கள்

    பயன்படுதுவதர்க்கு வழி காட்டிய தங்களுக்கு

    மிக மிக நன்றி!

    வணக்கம் .


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-04

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமை! அருமை!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா, வணக்கம்!
    வந்தனம் ஐயா, வந்தனம்!


    இது ஒரு பொன்காலைப் பொழுது!

    மின்வலையத்தின் வழியாக, அதிஷ்ட மகள் தோன்றுகின்றாள்
    தான் யாரு என்று, தன்னை (அதிஷ்டத்தை) காட்டுகின்றாள்!

    இது ஒரு பொன்காலைப் பொழுது!

    ReplyDelete
  4. நானும் பார்த்தேன். பெயரின் கூட்டு எண் 1,3,5,6,9ஆக இருந்தால் lucky என்றும் 2,7 ஆக இருந்தால் average என்றும் 4,8 ஆக இருந்தால் not so lucky என்றும் காட்டுகிறது.

    ReplyDelete
  5. பகிர்வுக்கு மிக்க நன்றி,

    இதற்க்கு shiro'வின் ஒரு செயலி உள்ளது மின் அஞ்சலில் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  6. அய்யா இனிய காலை வணக்கம்...
    தளம் அருமை அதை அறிய தந்தமைக்கு நன்றி அய்யா ...பெயரை இனிசியலுடன் கொடுதேன் லக்கி நம்பர் என்று வந்தது மீண்டும் இனிசியல் தராமல் பெயரை மட்டும் தந்து பார்தேன் அதற்க்கும் லக்கி நம்பர் என்று தான் வந்தது .....

    நன்றி வணக்கம் .......

    ReplyDelete
  7. வணக்கம்

    நலம்..நலம்மரிய ஆவழ்...

    குருவே ஒன்றுக்கு அடுத்தபடியாக இரண்டு என்று எதிர் பார்த்ததால் இன்று ஏமாந்துட்டேன்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. எண் கணிதத்திலார்வம் இல்லாமல் இருந்த எனக்கு ஆர்வத்தை ஊட்டிவிடீர்கள் அய்யா! நன்றி!

    ReplyDelete
  9. i want change my name with simple adjustment . (PRAKASH.D) to (PRAKAASH.D) i m living in coimbatore, could i change my name here?

    ReplyDelete
  10. /////Shyam Prasad said...
    நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  11. ///V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
    சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண்கணிதப்படி
    அமைக்கப்பட்டுள்ள இனைய தளத்தினை நாங்கள்
    பயன்படுத்துவதற்கு வழி காட்டிய தங்களுக்கு
    மிக மிக நன்றி!
    வணக்கம் .
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  12. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமை! அருமை!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    ஆலாசியம் சொன்னால் அருமையும் பெருமை பெறாதோ?

    ReplyDelete
  13. //////kannan said...
    வணக்கம் ஐயா, வணக்கம்!
    வந்தனம் ஐயா, வந்தனம்!
    இது ஒரு பொன்காலைப் பொழுது!
    மின்வலையத்தின் வழியாக, அதிஷ்ட மகள் தோன்றுகின்றாள்
    தான் யாரு என்று, தன்னை (அதிஷ்டத்தை) காட்டுகின்றாள்!
    இது ஒரு பொன்காலைப் பொழுது!//////

    அதிகாலைப் பொழுதின் வேளையிலே
    அதிர்ஷ்டம் வந்தது தோழியரே
    அதிர்ஷ்டம் வந்த வழியினிலே
    அன்புக்கண்ணன் வந்தான் தோழியரே!

    ReplyDelete
  14. //////ananth said...
    நானும் பார்த்தேன். பெயரின் கூட்டு எண் 1,3,5,6,9ஆக இருந்தால் lucky என்றும் 2,7 ஆக இருந்தால்

    average என்றும் 4,8 ஆக இருந்தால் not so lucky என்றும் காட்டுகிறது.////

    கணக்காய்வாளர் அல்லவா? இதையும் ஆய்ந்துவிட்டீர்கள் போல!

    ReplyDelete
  15. மதி said...
    பகிர்வுக்கு மிக்க நன்றி,
    இதற்க்கு shiro'வின் ஒரு செயலி உள்ளது மின் அஞ்சலில் அனுப்புகிறேன்.////

    ஆகா, அனுப்புங்கள்! நன்றி!

    ReplyDelete
  16. /////Success said..
    வணக்கம்
    நலம்..நலமறிய ஆவல்...
    குருவே ஒன்றுக்கு அடுத்தபடியாக இரண்டு என்று எதிர் பார்த்ததால் இன்று ஏமாந்துட்டேன்..
    வாழ்க வளமுடன்//////

    சினிமாவில் மட்டும்தான் சஸ்பென்ஸா? இங்கேயும் உண்டு!

    ReplyDelete
  17. /////kmr.krishnan said...
    எண் கணிதத்திலார்வம் இல்லாமல் இருந்த எனக்கு ஆர்வத்தை ஊட்டிவிடீர்கள் அய்யா! நன்றி!////

    அதனுடைய வளமை குறைவானது. ஆடுகளமும் சின்னது. எனக்கும் அதில் முழு ஆர்வம் இதுவரை

    இருந்ததில்லை. நமது வகுப்பறை மாணவர்களுக்காக இப்போது எழுதுகிறேன். அவர்களுக்கு ஜோதிடத்தின்

    அனைத்துப்பிரிவையும் அறியத்தரவேண்டும் எண்பது எனது விருப்பம்!

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா....

    என்னுடைய பெயரின் கூட்டு தொகையும் 36

    திருபாய் அம்பானி, கோயம்புத்தூர் - எல்லாமே 36, அட!

    நல்லா இருக்கு அந்த தளம்.. அது போக குழந்தைகள் பெயர்கள் மற்றும் படங்கள் வேற இருக்கு...

    நன்றி
    உங்கள் அருண் பிரகாஷ்

    ReplyDelete
  19. ///Blogger astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்...
    தளம் அருமை அதை அறிய தந்தமைக்கு நன்றி அய்யா ...பெயரை இனிசியலுடன் கொடுதேன் லக்கி நம்பர் என்று வந்தது மீண்டும் இனிசியல் தராமல் பெயரை மட்டும் தந்து பார்தேன் அதற்கும் லக்கி நம்பர் என்று தான் வந்தது .....
    நன்றி வணக்கம் ......./////

    இரண்டு பெயர்களுமே சிறந்ததாக இருக்கக்கூடாதா என்ன? வடிவமைக்கப்பெற்ற தளத்தின் மீது சந்தெகம் வேண்டாம்

    ReplyDelete
  20. ////Prakaash Duraisamy said...
    i want change my name with simple adjustment . (PRAKASH.D) to (PRAKAASH.D) i m living in coimbatore, could i change my name here?////

    why not? Use the site, find out your lucky number by giving your date of birth and then give your various options, in the name window to find out a suitable name for your lucky number.

    ReplyDelete
  21. ////அருண் பிரசங்கி said...
    வணக்கம் அய்யா....
    என்னுடைய பெயரின் கூட்டு தொகையும் 36
    திருபாய் அம்பானி, கோயம்புத்தூர் - எல்லாமே 36, அட!
    நல்லா இருக்கு அந்த தளம்.. அது போக குழந்தைகள் பெயர்கள் மற்றும் படங்கள் வேற இருக்கு...
    நன்றி
    உங்கள் அருண் பிரகாஷ்/////

    அதானால்தான் கோவைவாசிகள் அனைவரும்,” சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊரு போலாகுமா?” என்று சொல்வார்கள்

    ReplyDelete
  22. /////Jeevanantham said...
    Thank you sir.////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  23. அன்பு அய்யாவுக்கு வணக்கம், சீரோ எண் கணித வளைய தளத்தினை தந்த உங்களுக்கு மிக்க நன்றி,
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  24. Hope the below URL is usefull to find panchang

    http://www.scientificastrology.com/approve/panchang.aspx

    ReplyDelete
  25. /////Blogger ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம், சீரோ எண் கணித வளைய தளத்தினை தந்த உங்களுக்கு மிக்க நன்றி,
    அன்புடன் ஜீவா/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  26. ///////Blogger ramakrishnan said...
    Hope the below URL is usefull to find panchang
    http://www.scientificastrology.com/approve/panchang.aspx///////

    தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. உங்கள் மினஞ்சல் முகவரி கொடுங்கள் ஜிமெயில் தவிர்த்து....

    ReplyDelete
  28. Many thanks for your post.
    It is very useful for all the readers.
    Gobinat

    ReplyDelete
  29. /////மதி said...
    உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் ஜிமெயில் தவிர்த்து....//////

    spvrsubbiah@yahoo.co.in

    ReplyDelete
  30. ////Gobinat said...
    Many thanks for your post.
    It is very useful for all the readers.
    Gobinat/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. பிறந்த தேதி சொல்லாமலேயே லக்கி/அன் லக்கி/ஆவரேஜ் என்று சொல்கிறது!

    ஆனால் எனது பெயரில் சிறு மாற்றம் செய்து ஒரு பெயரை உள்ளீடு செய்தேன்!

    Your name calculates to a LUCKY NUMBER! என்று வந்தது!
    உண்மையிலேயே அந்த எண் எனது பிறந்த நாளுடனும் ஒத்து வருகிறது!

    ReplyDelete
  32. /////Blogger நாமக்கல் சிபி said...
    பிறந்த தேதி சொல்லாமலேயே லக்கி/அன் லக்கி/ஆவரேஜ் என்று சொல்கிறது!
    ஆனால் எனது பெயரில் சிறு மாற்றம் செய்து ஒரு பெயரை உள்ளீடு செய்தேன்!
    Your name calculates to a LUCKY NUMBER! என்று வந்தது!
    உண்மையிலேயே அந்த எண் எனது பிறந்த நாளுடனும் ஒத்து வருகிறது!/////

    நாமக்கல்காரர்களுக்கு எல்லா எண்களுமே நல்ல எண்தான் சிபியாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com