15.10.07

JL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்!


---------------------------------------------------------------------------
JL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்!

ஜோதிடம் பகுதி 45

இது தொடர்பான முன் பதிவு இங்கே உள்ளது. அதைப்
படித்துவிட்டு மேலே தொடரவும். இல்லையென்றால
தலையும் புரியாது, காலும் புரியாது!


ஜோதிடர் ஆசான் அவர்கள் சொல்லிய பூஜை சாமான்கள்
வந்து சேர்ந்தன. கூடவே அவர் கேட்டபடி ஒரு பெரிய
வாழைத்தாரும் வந்து சேர்ந்தது.

வீட்டின் நடுவில் 20' x 30' அடிக்கு முற்றம்.அதைச் சுற்றி
வரும்படியான ஆறு அடி அகலமுள்ள பத்தி (வராந்தா)
இரு பக்கங்களிலும் தலா ஐந்து அறைகள். நான்கு
மூலைகளிலும் பெட்டக சாலை எனப்ப்டும் பெரிய
பத்திகள் (Halls) நடுவில் நடைபாதை (Passage)

முகப்புப் பகுதியில் இருந்து உள்ளே நுழைந்ததும் இடது
பக்க பெட்டக சாலைப் பத்தி என் பெரியப்பாவின் பங்கிற்கு
உரியது.

அந்த இடத்தில் ஒரு துர் தேவதையின் படத்தை வைத்து,
தரையில் கரித்துண்டால ஒரு கட்டங்கள் அடங்கிய
படத்தை அவர் வரைந்தார். வாழைத்தார் உட்பட்ட பூஜை
சாமான்களை வைத்து ஒரு 15 அல்லது 20 நிமிட நேரம்
அவர் பூஜை செய்தார்.

என் அப்பா, அவருடைய சகோதரர்கள் மூவர், மற்றும்
நண்பர்கள் எழுவர் - ஆக மொத்தம் பத்துப் பேர்கள் எதிரில்
உள்ள பத்தியில் அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர்.

அது இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த
காலம். யாருமே வெளியூர்ப் பயணம் எல்லாம் அதிகமாக
செல்லாத காலம். எல்லோருமே ஓரளவு பணக்கார இளைஞர்
கள். சுக ஜீவனம். ஆகவே தங்களை மறந்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தனர்.

பூஜை முடிந்ததும், ஆசான், ஒவ்வொருவராக அழைத்து,
தாரில் உள்ள ஏதாவது வாழைக்காய் ஒன்றில் ஒரு பேனாக்
கத்தியால் தங்கள் பெயரை எழுதப் பணித்தார்.

அனைவரும் சென்று அதில் இருந்த சுமார் நூறு காய்களில்
ஒன்றைத் தெரிவு செய்து தங்கள் பெயரைக் கத்தியால் கீறி
எழுதிவிட்டு வந்தார்கள். சிலர் தங்கள் இன்ஷியலையும்,
பெயரின் முதல் இரண்டெழுத்தையும் எழுதிவிட்டு வ்ந்தார்கள்

ஆசான், என் பெரியப்பாவை அழைத்து,"மாணிக்கம் அண்ணே,
இந்தத் தாரை, உங்களுடைய உள் அறையில் வைத்து பூட்டி
விட்டு வாருங்கள்" என்றார்.

அவரும் அப்படியே செய்தார். ஒரே அறைக்குள், உள்ளே
மற்றும் ஒரு அறை இருக்கும். அடுத்தடுத்து இரண்டு கதவுகள்
சாவி தொலைந்து விட்டால் தாவு தீர்ந்து விடும். இரண்டு
சாவியையும் சேர்த்தால் அரைக் கிலோ எடை இருக்கும்
அது எங்கள் பகுதி வீடுகளைச் சுற்றிப் பார்த்தவர்களுக்குத்
தெரியும். அதற்கு இரட்டை அறை என்று பெயர்.

என் பெரியப்பாவும், என் அப்பாவும் அந்த வாழைத்தாரைக்
கொண்டுபோய், ஒரு உள் அறையில் வைத்து - இரண்டு
கதவுகளையும் பூட்டி சாவிகளை எடுத்துக் கொண்டு வந்து
விட்டார்கள்.

அதற்குப் பிறகுதான் ஆசானின் show ஆரம்பமானது. நடந்தது
அனைத்தும் சாதாரண மனிதனால் நம்ப முடியாதது. சிலருக்கு
அதைப் பார்த்தால் கிலி வந்து விடும். அப்படிப்பட்ட நிகழ்வு.

"ஏ, அம்மே, மாணிக்கம் அண்ணணோட காயைப் பிச்சு
எடுத்துக் கொண்டு வா" என்று ஆங்காரமான தன்னுடைய
கனத்த குரலில் சொல்லிவாறு, கையில் இருந்த
பிரம்பால், அந்தக் கரிக் கட்டத்திற்குள் இருந்த துணிப்
பொம்மை மீது ஓங்கி ஆசான் அடிக்கவும், அடுத்த நிமிடம்
அது நிகழ்ந்தது.

நடுவில் இருந்த முற்றத்தில், சூரிய ஒளியால் வெய்யில்
காய்ந்து கொண்டிருந்த முற்றத்தில், வான வெளியில் இருந்து
ஒரு வாழைக்காய் வந்து, டொம்மென்ற ஓசையுடன் தரையில்
விழுந்தது.

ஆசான் கை காட்ட, அங்கிருந்த நண்பர்களில் ஒருவர்
நான்கே எட்டில் ஓடிப்போய் அதை எடுத்துக் கொண்டுவர,
காயைப் பார்த்தால், அது மாணிக்கம்' என்று பேனாக் கத்தியால்
கீறப்பட்ட பெயருடன் இருந்தது.

அதுபோல அடுத்தடுத்து அங்கிருந்த ஒவ்வொருவரின்
பெயரையும் கேட்டு, அதைச் சொல்லி அந்த பொம்மையை
அவர் பிரம்பால் அடிக்க அடிக்க ஒவ்வொரு காயாக
அத்தனை பேர்களுடைய காய்களும் வந்து விழுந்தன.

கடைசியில், அறையைத் திறந்து, அந்த வாழைத்தாரை
எடுத்துப் பார்க்கும்படி சொன்னார். என்னவொரு ஆச்சரியம்.
பிய்த்து எடுக்கப்பட்ட பத்துக் காய்களுக்கான அடையாளத்துடன்
மற்ற காய்கள் அப்படியே இருந்தன.

அதற்குப் பிறகு, அந்தக் கலை பற்றி ஆசான் நெடியதொரு
லெக்சர் கொடுத்தார். அது ஒருவனை முடக்கவும், அல்லது
ஒரு குடும்பத்தையே சிரழிக்கவும் மட்டுமே பயன்படும்
என்றும், அதை ஏவி விடும்போது, ஏவப்பட்டவன் குடும்பம
தெய்வ அருள் பெற்ற சத்தியததைக் கடைப் பிடிக்கும்
குடும்பமாக இருந்தால், அது பலிக்காது என்றும், மேற்கொண்டு
அது அதை ஏற்படுத்தியவனையே திருப்பித் தாக்கிவிட்டு,
முடக்கிவிட்டுப்போய் விடும் என்றும் கூறினார்.

'களவும் கற்று மற' என்பதற்காக தான் அதைக் கற்று
வைத்திருப்பதாகவும், ஆனால் அதை யாருக்கும் எதிராக
செய்ததில்லை என்றும் இனியும் செய்யப்போவதில்லை
என்றும் கூறினார்.
----------------------------------------------------------------
இந்த உண்மைச் சம்பவங்களையெல்லாம், என் தந்தையாரும்
என் பெரிய தகப்பனாரும் கூறக் கேட்டவைகள். அது என்
உள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டாதால் அதை நேரில்
பார்த்ததைப்போல எழுதியுள்ளேன்.அவ்வளவுதான்.

இதுபோன்ற கதைகள் பலவற்றைப் பின்னாட்களில் கேள்விப்
பட்டிருக்கிறேன். அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

ஆகவே ஆசான் ஜோதிடத்தை மட்டுமே பணியாகக் கொண்டு
வாழ்ந்தார். நான் அறிந்த வரையில் மிகப் பெரிய ஜோதிடர்
அவர். அவருடைய ஜோதிடப் பலன்கள் அசத்தலாக இருக்கும்

யுத்தம் முடிந்தபின் என் தந்தையாரும், அவருடைய சகோதரர்
களும், தங்களுடைய சொத்துக்களையும், வியாபாரத்தையும்
பார்ப்பதற்காக சூம்பியோவிற்குச் (A place in Burma) சென்று
விட்டார்கள்.ஆசானும் இடம் பெயர்ந்து கேரளாவிற்குச் சென்று
விட்டார்

ஆட்சி மாற்றத்தால், சொத்துக்களையெல்லாம் பறிகொடுத்து
விட்டுக் கையில் இருந்த பணத்துடன், சகோதரர்கள் நால்வரும்
இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டனர்.

"உன் ஜாதகத்தில் ஒன்பதில் ராகு இருக்கிறது - ஆகவே உனக்கு
பூர்வீகச் சொத்து எதுவும் நிலைக்காது" என்று ஆசான் சொல்லியது
என்னுடைய தந்தையின் 25 வயதிலேயே நடந்து விட்டது.

முதலில் திருநெல்வேலி, அதற்குப் பிறகு நாமக்கல், அதற்குப்
பிறகு சேலம், அதற்குப் பிறகு கோவை என்று என் தந்தையார்
தன் தொழில்/பணி நிமித்தமாக நான்கு ஊர்களுக்கு மாறும்படி
ஆகிவிட்டது.

ஆனால் ஆசான் கடைசி வரை என் தந்தையாருடன் தொடர்பு
கொண்டிருந்தார். அப்போது நான் சேலத்தில் படித்துக்கொண்டிருந்த
காலம். வருடம் ஒருமுறையாவது எங்கள் வீட்டிற்கு அவர்
வருவார்.

ஆசான் என் தந்தையாரைவிட பத்து வயது மூத்தவர். அவர்
என் தந்தையாருடைய ஆயுள் பாவத்தைப் பற்றி அவருடைய
ஐம்பதாவது வயதில் சொல்லும்போது இப்படிச் சொன்னார்

"உனக்கு எழுப்த்தி நான்கு வயதுதான் ஆயுள்.ஆனால் கடைசி
நிமிடம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பாய்"

அது அப்படியே நடந்தது!

அவரைப் பற்றி, அவருடைய ஜோதிட அறிவைப் பற்றி,
சொல்லிக் கேட்ட அவருடைய அனுபவங்களைப் பற்றி
பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் என்னுடைய நேரம்,
உங்களுடைய பொறுமை, பதிவின் நீளம் ஆகியவை கருதி
இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)
--------------------------------------
Tantrics of Kerala என்ற் கட்டுரைக்கான சுட்டி இங்கே உள்ளது
நேரம் இருப்பவர்கள் அதையும் படிக்கலாம்

9 comments:

  1. வாழைக்காய்- பெயர்.. அதிசியமாகத்தான் இருக்கிறது.
    நான் நாகையில் இருந்த போது பக்கத்து வீட்டில் ஒரு தமிழாசிரியர் அவரும் ஜோதிடத்தில் வல்லுனர் போலும்,தான் இறக்கப்போகும் நாளை துல்லியமாக எழுதிவைத்து சென்றாராம்.அதுவரை நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.
    அவர் இறந்த பிறகு தான் அது தெரியவந்தது.

    ReplyDelete
  2. ஆச்சரியமா இருக்கு.

    ஆசான் இன்னும் இருக்காரா?

    ReplyDelete
  3. ////வடுவூர் குமார் said...
    நான் நாகையில் இருந்த போது பக்கத்து வீட்டில் ஒரு தமிழாசிரியர் அவரும் ஜோதிடத்தில் வல்லுனர் போலும்,தான் இறக்கப்போகும் நாளை துல்லியமாக எழுதிவைத்து சென்றாராம்.அதுவரை நல்ல ஆரோக்கியமாக இருந்தார்.
    அவர் இறந்த பிறகு தான் அது தெரியவந்தது.////

    ஒருவர் இறக்கும் நாளைத் தெரிந்து கொள்ள, சூத்திரங்கள், செய்முறை விளக்கங்கள் என்று விவரமாக ஒரு புத்தகத்தில் உள்ளது குமார்.
    புத்தகத்தின் பெயர்: How to Judge a Horoscope - Part 2 / Chapter 8
    பதிப்பகத்தின் பெயர்: Raman Publications, Bangalore - முகவரி எனது முன் பதிவில் உள்ளது!

    ReplyDelete
  4. ///Anonymous said...
    Present Sir/////

    அனானிகளுக்கெல்லாம் வருகைப் பதிவேடு இல்லையே கண்ணா!

    ReplyDelete
  5. ////துளசி கோபால் said...
    ஆச்சரியமா இருக்கு.
    ஆசான் இன்னும் இருக்காரா?///

    இல்லை டீச்சர்! அவர் காலமாகிவிட்டார்!
    முன் பதிவில் அவர் புகைபபடத்தை வெளியிட்டுள்ளேன்

    ReplyDelete
  6. என்ன பின்னூட்டம் இடுவது - தெரியவில்லை - இடுகையைப் படித்து மனதின் ஒரு பகுதியில் பதிந்துவிட்டேன் - அவ்வளவுதான்.

    ReplyDelete
  7. Present Sir :)
    Time difference is the cause for the delay :)

    Swetha Canada

    ReplyDelete
  8. இது போன்ற சம்பவங்களை நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது யாருக்கும் தெரியாமல் இரகசியமாய் பார்த்தது உண்டு. ஒரு கம்பம்(மலாய் கார கிராமம்) பகுதியில் பாட்டிலில் ஆவியை அடைப்பதை பார்த்து சில நாள் காய்ச்சலில் படுத்ததுண்டு. சதாரன மனிதனை மீறிய பல விசயங்கள் பூமியில் உண்டு. நீண்ட நாள் காக்க வைத்து மீதி கதையை போட்டு உள்ளீர்கள். நன்றி. சுட்டியில் கொடுத்துள்ள கேரள பதிவை படித்து விட்டு வருகிறேன். கூல்......

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com