17.10.07

JL.46. First House எனப்படும் முதல் பாவம்


====================================================
JL.46. First House எனப்படும் முதல் பாவம்

ஜோதிடப் பாடம் - பகுதி 46

நீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்த
வீடுகளுடன்தான் பிறந்துள்ளீர்கள்.
அந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட
இடத்தின் பெயர்தான் ஜாதகம்.

வட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி
அந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.ஆங்கிலத்தில்,They will say them as houses.

உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.
அதுதான் தலைமைச் செயலகம்.

அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
மொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று
எல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால்
எப்படிச் சாப்பிட முடியும்?

ஆகவே ஒவ்வொரு கட்டமாக ரசித்து ரசித்துப் பார்ப்போம்!

இன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்!

முதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின்
தோற்றம், குணம்,வாழ்க்கையில் அடையப்போகும் மேன்மை
ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.



எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம
லக்கினத்திற்கும் அதற்கு எதிர்வீடான கும்ப லக்கினத்
திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.

அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச்
சிங்கத்தையும் கும்பலக்கினத்திற்கு அடையாளமாக
மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின் கூடிய
கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள்

சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல
கும்ப லக்கினத்தின் அதிபதி சனி.
ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்

சிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள்
இருக்கும் துறையில் நாயகர்களாக இருப்பார்கள்.
(They will be Heroes)

மேலே உள்ள இரண்டு ஜாதகங்களையும் பாருங்கள்.
சொல்லவும் வேண்டுமா? ரஜினி & கமல் ஆகிய அவர்கள்
இருவருமே சிம்ம லக்கினக்காரர்கள்தான். சிம்ம லக்கினம்
என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.
பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம்
வேண்டுமென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்

சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்
இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.

ஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ
அல்லது லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்
திருந்தாலோ அப்படிப்பட்ட தோற்றம் அவர்களுக்கு இருக்காது.
நவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்

சூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு? என்று
கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல்
என்னும் சொல். சூரியன் லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது
எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய இடங்களில் அமர்வதையும்,
அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று அமர்ந்து
விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்
சேர்ந்து விடுவதையும் குறிக்கும்.

சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்க்ள்.பிடிவாதக்காரர்கள்
அவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும்
அவர்களை மாற்ற முடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான்
சட்டம். அவர்களை யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது.
அவர்களாக வந்தால்தான் உண்டு. சிங்கம் தனியாக இருப்பதுபோல
தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும் அதிகமான ஒட்டுதல்
இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும் உள்
குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே
தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்

சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும்
அதிபதியும் (அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு
திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்) சிம்ம லக்கினத்திற்கு
யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்
அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம்
பன்முகத் திறமை இருக்கும். அதே பலன் லக்கினத்தில்
வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில் செவ்வாய்
வலுவாக இருந்தாலும் கிடைக்கும்.

சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான
பலன்களைக் கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும்.
கும்ப லக்கினக்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்
கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள்.

கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக்
கொண்டவளாக இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால்
கண்ணை மூடிக்கொண்டு அவளைத் திருமணம் செய்து
கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.

கும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ
அல்லது கேந்திர, திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த
ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய
சாதனையாளராக இருப்பார்.

அதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும்
உள்ளது. கும்ப லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான்
அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ் வீடும், 12ம் வீடுமாகிய
விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது
கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே -
விரையாதிபதியும் (Lord for the losses) அவனே!

ஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or
great failure என்கின்ற இரண்டு பலன்களில் ஒரு பலன்
தான் வாழ்க்கையில் அமையும்!

அதை எப்படிக் கண்டு பிடிப்பது?

அது நாளையப் பாடத்தில்!

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

(தொடரும்)

39 comments:

  1. உள்ளேன் ஐயா.

    அந்த 12 கட்டத்தில் முதல் வீடு என்பது எந்தக் கட்டம்?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் லக்னம் எங்குள்ளதோ அதுவே முதல் வீடு!

      Delete
  2. Sir - excellent. Please continue.

    one request - can you store/show the image of owners of 12 houses and athipathi in the image below the vagupparai image so that for every post we can see the house owner and lagnathipathi details for reference. This way learning will be better than just memorising.

    thanks

    ReplyDelete
  3. ///துளசி கோபால் said..
    அந்த 12 கட்டத்தில் முதல் வீடு என்பது எந்தக் கட்டம்?///

    ஜாதகத்தில் லக்கினம் அல்லது ல' என்று அல்லது Lagna என்று போட்டிருக்கும்
    அதுதான் அந்தக் குறிப்பிட்ட ஜாதகருக்கு முதல் வீடு

    இந்த லக்கினம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்
    உங்களூக்காக Chart ஒன்றைத் தயாரித்துப் பதிவில் சேர்த்துள்ளேன்
    பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  4. ///Sambar Vadai said...
    Sir - excellent. Please continue
    one request - can you store/show the image of owners of 12 houses and athipathi in the image below the vagupparai image so that for every post we can see the house owner and lagnathipathi details for reference. This way learning will be better than just memorising.///

    உங்களூக்காக Chart ஒன்றைத் தயாரித்துப் பதிவில் சேர்த்துள்ளேன்
    பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  5. Sir - thanks.
    what I meant is this image can come in your template page itself so that it appears for all the posts - reference can be easier for each post. (upload this image in widget or the section below that ( above labels)).

    thanks again.

    ReplyDelete
  6. Dear Sir,

    My laknam is Kumbam. Can I marry the same Kumba Lakna Girl ?

    Thanks
    Balaji

    ReplyDelete
  7. வாத்யாரே.. நான் கன்னி ராசி.. அஸ்தம் நட்சத்திரம். இனிமேலாச்சம் எனக்கு ஏதாவது 'தப்புத் தண்டா' நடக்க சான்ஸ் இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க..

    ReplyDelete
  8. Chart மிக்க பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.
    கெ.பி.

    ReplyDelete
  9. இப்படியா சஸ்பென்ஸ் வைப்பீங்க???? எனக்கு பார்த்திருக்கிற பெண் கும்ப லக்னப் பெண்..ஆனால், லக்னாதிபதி சனி எட்டில் மறைந்துவிட்டார்..
    நாளைய பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. ஐயா,
    தாங்கள் அழகுத் தமி்ழில் அடிப்படை விடையங்களை விளக்கியதால், இப்போ ஆங்கிலத்தில் கிடைக்கும் தொகுப்புகள் இலகுவாக விளங்குகிறது.

    குகிள் ஆண்டவர் சில புத்தகங்களின் சிலபக்கங்களை சேமி்த்து வைத்திருக்கிறார் (ஆங்கிலத்தில்). சக மாணவர்களுக்காக
    How to Judge a Horoscope By B.V.Raman

    Vol 1

    http://books.google.com/books?id=osTJP7z-dn0C&pg=PP9&dq=GAYATRI+DEVI+VASUDEV,&sig=7jKeN7uBmhVfqqQZpnKVcEyg3wc#PPP7,M1

    Vol 2

    http://books.google.com/books?id=wqC1Ea88fTcC&pg=PA304&dq=%22How+to+Judge+a+Horoscope+I%22&sig=Ub9QisNMe0c4Q57XhNkk_rQxq7E#PPP1,M1

    ReplyDelete
  11. Sir,
    Its me Swetha who gave the Google Book link. Sorry forgot to attach my name with the comments

    Awetha- canada

    ReplyDelete
  12. ///Sambar Vadai said...
    Sir - thanks.
    what I meant is this image can come in your template page itself so that it appears for all the posts - reference can be easier for each post. (upload this image in widget or the section below that ( above labels)).///

    No problem in adding that chart in the posting itself whenever it is necessary
    I will do it! அடியேன் ஹோட்டல்களுக்குச் சென்றால் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது சாம்பார் வடைதான்.உங்கள் பெயரிலேயே அது இருப்பது ருசியாக இருக்கிறது

    ReplyDelete
  13. ///Anonymous said...
    My laknam is Kumbam. Can I marry the same Kumba Lakna Girl ?///

    மணக்கலாம். ஆனால் பெண்ணுடைய நட்சத்திரம், ராசி மற்ற பொருத்தங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும். அந்தப் பாடம் பின்னால் வரும்

    ReplyDelete
  14. ///உண்மைத் தமிழன்(15270788164745573644) said..
    வாத்யாரே.. நான் கன்னி ராசி.. அஸ்தம் நட்சத்திரம். இனிமேலாச்சம் எனக்கு ஏதாவது 'தப்புத் தண்டா' நடக்க சான்ஸ் இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க..///

    கன்னிராசி சீட்டாத்தில் ஜோக்கர் மாதிரி.எல்லோருடனும் சேரக்கூடிய ராசி.அது பற்றிய பதிவு பின்னால் வருகிறது! தப்புத்தண்டா ஏன் நடக்காது? நீங்கள் மனது வைத்தால் நவம்பர் 4ற்குப் பிறகு
    ஜாமாய்க்கலாம். ராகு திசை முடிந்துவிட்டதா? அதையும் பாருங்கள்

    ReplyDelete
  15. ///கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    Chart மிக்க பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.
    கெ.பி.///
    உங்களுக்காகத்தான் பதிவில் கொடுத்தேன்

    ReplyDelete
  16. ///Thangs said...
    இப்படியா சஸ்பென்ஸ் வைப்பீங்க???? எனக்கு பார்த்திருக்கிற பெண் கும்ப லக்னப் பெண்..ஆனால், லக்னாதிபதி சனி எட்டில் மறைந்துவிட்டார்..
    நாளைய பதிவுக்காக காத்திருக்கிறேன்.///
    லக்கினாதிபதி மறைந்தால் என்ன? நல்லவன் எந்த சூழலிலும் நல்லவன்தான்
    குரு எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். பெண்களுக்கு அவர் துணை அவசியம்!

    ReplyDelete
  17. ///Anonymous said...,
    தாங்கள் அழகுத் தமி்ழில் அடிப்படை விடையங்களை விளக்கியதால், இப்போ ஆங்கிலத்தில் கிடைக்கும் தொகுப்புகள் இலகுவாக விளங்குகிறது.
    குகிள் ஆண்டவர் சில புத்தகங்களின் சிலபக்கங்களை சேமி்த்து வைத்திருக்கிறார் (ஆங்கிலத்தில்). சக மாணவர்களுக்காக -
    Its me Swetha who gave the Google Book link. Sorry forgot to attach my name with the comments
    Awetha- canada///
    ந்ன்றி சுவேதா அவர்களே!

    ReplyDelete
  18. ஆசானே,

    கமலஹாசனின் ஜாதகத்தில் லக்னாதிபதி துலாத்தில் நீசம் அடைந்துள்ளார். இதனால் என்ன பாதிப்பு?

    புதனுடன் சேர்ந்திருப்பதால் புத ஆதித்ய யோகம் அதை நிவர்த்தி செய்கிறதா?

    ReplyDelete
  19. ஆசானே,

    கமலஹாசனின் ஜாதகத்தில் லக்னாதிபதி துலாத்தில் நீசம் அடைந்துள்ளார். இதனால் என்ன பாதிப்பு?

    புதனுடன் சேர்ந்திருப்பதால் புத ஆதித்ய யோகம் அதை நிவர்த்தி செய்கிறதா?

    ReplyDelete
  20. ஆசானே,

    கமலஹாசனின் ஜாதகத்தில் லக்னாதிபதி துலாத்தில் நீசம் அடைந்துள்ளார். இதனால் என்ன பாதிப்பு?

    புதனுடன் சேர்ந்திருப்பதால் புத ஆதித்ய யோகம் அதை நிவர்த்தி செய்கிறதா?

    ReplyDelete
  21. ஆசானே,

    கமலஹாசனின் ஜாதகத்தில் லக்னாதிபதி துலாத்தில் நீசம் அடைந்துள்ளார். இதனால் என்ன பாதிப்பு?

    புதனுடன் சேர்ந்திருப்பதால் புத ஆதித்ய யோகம் அதை நிவர்த்தி செய்கிறதா?

    ReplyDelete
  22. நன்றி ஐயா!குரு செவ்வாயுடன் சேர்ந்து 9ம் இடத்தில் இருக்கிறார்..புகுந்த இடத்திற்கு யோகம் தரும்னு சொல்லியிருக்காங்க:-)

    ReplyDelete
  23. சனி - கருமை, செவ்வாய் - செம்மண்
    நிறமெல்லாம் பொருத்தமா போட்டு
    ரொம்ப சிரத்தை எடுத்து பண்ணியிருக்கீங்க ஐயா..

    ReplyDelete
  24. பதிவிற்கு நன்றி ஐயா. நேற்று V.B.RAMAN அவர்களின் மாதந்திர ஆங்கில மாத இதழை வாங்கினேன். சிறப்பாக இருந்தது. மேலும் தெளிவான விளக்கம் காண உங்கள் பதிவுகளை தொடருங்கள். லக்கின அதிபதி மற்றும் ராசி அதிபதி மறைவு ஸ்தானங்களில் அமர்வது எது அதிக கெடுதலை கொடுக்கும்? ஒரு லக்கினத்தை பற்றிய விளக்கம் கொடுத்தவுடன். அவர் மறைந்திருந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தை கூற முடியுமா?

    ReplyDelete
  25. அந்த புத்தகத்தை மேலோட்டமாக தெரிந்து கொள்ளவற்கான தளம் இங்கே உள்ளது.
    http://www.astrologicalmagazine.com/

    ReplyDelete
  26. Dear Sir,
    Expecting some details on Thirikona parvai. About dasa bukthi it was really superb. In the past one week I've learnt a lot on astrology.

    Regards,
    S.Kumar
    Colombo.

    ReplyDelete
  27. வணக்௧ம் ஐயா. நான் ௨ங்கள் new student. எந்ெதந்த நாட்௧ளில் ௨ங்கள் pathivu varum? Awaiting your next posting.

    S.Kumar,
    Colombo

    ReplyDelete
  28. My son's lagna is dhanur.Guru(retrogate) is in vrichiga(12th house) in rasi .He is also in vrichiga in amsam.Will this vargothamam remove the guru's 12th house effect?

    ReplyDelete
  29. 01. ஓரு சந்தேகம் in Given Kamalhassan jathakam ,லக்னாதிபதி சுரியன் 3ல் துலாதில் நீச்ச மாக,12ல் குரு (மறைவு ஸ்தானம் BUT உச்சம்), 6ல் செவ்வாய் மறைவு ஸ்தானம் BUT உச்சம்),
    லக்னாதிபதி நீச்ச மாக இருக்க, இப்படி உச்ச கிரகங்கள் எல்லாம் மறைவு ஸ்தனத்தில் இருக்க whICH of that Xfactors took him to this heights.

    02. Certainly Kamal is not the only child Born in paramakudi 7/11/1954 same time there must be one or 2 kids born on the same time, Does all kids with the same time will shine? or does Darwins Survival of Fittest rule plays the game of fate here?

    ReplyDelete
  30. Ananth said...
    ஆசானே,
    கமலஹாசனின் ஜாதகத்தில் லக்னாதிபதி துலாத்தில் நீசம் அடைந்துள்ளார். இதனால் என்ன பாதிப்பு?
    புதனுடன் சேர்ந்திருப்பதால் புத ஆதித்ய யோகம் அதை நிவர்த்தி செய்கிறதா?/////

    நீசனான சூரியன் உச்சமான சனியுடன் சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்றுள்ளார்!

    ReplyDelete
  31. singaiSuri said...
    01. ஓரு சந்தேகம் in Given Kamalhassan jathakam ,லக்னாதிபதி சுரியன் 3ல் துலாதில் நீச்ச மாக,12ல் குரு (மறைவு ஸ்தானம் BUT உச்சம்), 6ல் செவ்வாய் மறைவு ஸ்தானம் BUT உச்சம்),
    லக்னாதிபதி நீச்ச மாக இருக்க, இப்படி உச்ச கிரகங்கள் எல்லாம் மறைவு ஸ்தனத்தில் இருக்க whICH of that Xfactors took him to this heights.


    குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள் உச்சம், நீச சூரியன் உச்ச சனியுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகமும் உள்ளது. அதுதான் அவரை இவ்வளவு பிரபலம் ஆக்கியது.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////02. Certainly Kamal is not the only child Born in paramakudi 7/11/1954 same time there must be one or 2 kids born on the same time, Does all kids with the same time will shine? or does Darwins Survival of Fittest rule plays the game of fate here?///

    அப்படி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் அதற்கு parallel birth என்று பெயர். பலன்கள் ஒரே மாதியாக இருக்கும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  32. can you tell us the impact of pancha vargothamam in the horoscope on lifespan , general ,spouse, career etc.

    ReplyDelete
  33. ////Vinitha said...
    can you tell us the impact of pancha vargothamam in the horoscope on lifespan , general ,spouse, career etc.////


    ஐந்து இடங்கள் வர்கோத்தமா? ஒரு ஜாதகத்தைக் காட்டுங்கள். பார்க்கலாம்!

    ReplyDelete
  34. rasi chakra
    mesham- budan
    rishaba- suriyan, seva
    midunam- lagnam, raghu,sukran
    thulam- sani
    virichiga-guru
    thanu-kethu
    magara-chandran
    hamsa chakra
    mesham-kethu
    rishaba-suriyan
    midunum-seva,sukran
    thulam-lagnam, sani,raghu
    virchigam- guru,budan
    magara-chandran

    ReplyDelete
  35. ஆசானே ,
    Knowing character of person,
    1.we look at the first house, who is lagna lord, planet occupied in 1st house,where Lagna lord is residing etc.
    2. Should we consider also lord of 4th,9th and planets occupied ?

    ஐயா,
    Can you also tell us the properties/nature of all 9 planet eg sani lagnathi erunthal .... i am seraching through out blog i cannot find sir.

    ReplyDelete
  36. thank you for your good job I read your blogs continously, its nice and informative .one question sir what is the difference between rasi and bhava ??

    ReplyDelete
  37. அய்யா , உங்கள் புது மாணவன் தான் நான். உங்கள் விளக்கங்களும் பதிவுகளும் மிக அருமை. தொடர்ந்து படிக்க விரும்புகிறேன் .வாழ்க வளமுடன் !
    அருணாசலம்

    ReplyDelete
  38. Sir, Excellent. I want to make a small request. The Ads are disturbing while reading. So can you please do something for that.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com