21.5.11

மரப்பெட்டிக்குள் கிடைத்த பொக்கிஷம்!

--------------------------------------------------------------------------------
மரப்பெட்டிக்குள் கிடைத்த பொக்கிஷம்!

இளைஞர் மலர்

கவிச் சூரியன் அவன்!
கனிவோடு வேண்டினால் - கவிக்
கனி அமுதுப் படைப்பான்,
இனிது, இனிது என்றால் -இமைதிறவாது
இன்னிசை இசைப்பான்.

கலைமகளின் கைப் பொருளவன்
மீட்டுபவரின் விரல்களைப் பொறுத்தே
நாதம் உயிர்ப்பான்; அதற்கு
நாமகளையே நர்த்தனமும் ஆடச்செய்வான்.

சோதிக்க நினைப்பவரின் மனம்
பாதிக்க தீந்தமிழ் கவிபாடி
சுகத்தில் ஆழ்த்திடுவான்.

வீண் வம்பிற்கு வந்தவரையும்
விண்முட்டும் கவித்திறத்தால்
மண்முட்ட விழ செய்து  - தன்
கண்ணிரெண்டும் அகலவிரித்தே
கண்ணிவெடி சிரிப்பு ஒலியால்
விண்ணையும் மண்ணையும்
இணைத்து இமயமாக உயர்ந்து நிற்பான்!!

யாரவன்?
கவியோகி பாரதி -  அவன்
கவி பாடும் பாங்கைப் பார்ப்போம் வாரீர்!!!
---------------------------------------------------------------------------------
ஆடை குலைவுற்று நிற்கிறாள்: - அவள்
  ஆவென் றழுது துடிக்கிறாள்: - வெறும்
மாடு நிகர்த்ததுச் சாதனன் - அவள்  
  மைக்குழல் பற்றி இழுக்கிறான்.. 

பூமியைத் தாங்குகின்ற பொற்பாம்பே ! - பூதேவி
   சாமியவன் தூங்குகின்ற சாற்றரவே! - நாமிறைஞ்சும்
செஞ்சடையான் மேலணியுஞ் செய்ய படமுடையாய்
   நஞ்சை நீக்குவாய், நன்று.

பாட்டும் அது கூறும் அற்புத நிகழ்வும் படித்து இன்புறுவீர்!.

(இந்த அருமையான செய்தி 1968 - ஜூன் மாத கலைமகள்
பத்திரிகையில் வெளிவந்ததாக எனது தந்தையார் பென்சிலில்
முதல் பக்கத்தின் மேலேக் குறித்து வைத்திருக்கிறார்கள்.
நான் பிறப்பதற்கு  ஓராண்டிற்கு முன்பே பத்திரப் படுத்திய
பொக்கிஷம். நீங்களும் படித்து இன்புறவேண்டுகிறேன்).


----------------------------------------------------------------------------------------
கவியோகி பாரதி இவன் ஒரு மகாகவியே !!!......

நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிஙகப்பூர்



வாழ்க வளமுடன்!

19 comments:

  1. பாஞ்சாலி சபதம் ஓர் உன்னதமான படைப்பு. பாரதியை மகாகவியாக உலக்குக்குக் காட்டியவற்றில் குயில்பாட்டும், பாஞ்சாலி சபதமும் அடங்கும். உணர்ச்சி மேலோங்கி வையம் பிரளயத்தின் வசப்படுமோ என ஐயப்படும் காட்சி இது. தீய துச்சாதனன் அன்னை திரெளபதியின் துகில் உரியும் காட்சி. பாரதியின் ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து படித்து சுவைக்க வேண்டும். நண்பர் ஆலாசியத்தின் இலக்கியப் பற்று பாரம்பரியமாக வருகிறது என்பதற்கு அவரது தந்தை படித்து குறித்து வைத்த பக்கங்களே சாட்சி. வாழ்த்துக்கள் நன்பர் ஆலாசியம்.

    ReplyDelete
  2. பாரதியாருடன் நேரடித் தொடர்பில் இருந்த இலக்கிய ஆர்வலர்கள் தங்கள் அனுபவப் பகிர்வை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள எடுத்துக்கொண்ட உங்கள் முயற்சிக்கு நன்றி..மரப்பெட்டியில் பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கும் உங்கள் தந்தையாருக்கு என் வணக்கங்கள்..
    இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்கள் வீட்டில் நான் பார்த்தபோதும் வணக்கம் சொன்னபோதும் அவர் தன் புத்தகத்திலிருந்து தலையை திருப்பாமல் பார்வையை மட்டுமே திருப்பி பதில் சொன்னது அவருக்கு படிப்பதன் மேலிருந்த ஆர்வத்தை காட்டியது..

    நண்பர் ஆலாசியம் இருக்கும் இந்த போட்டோ எடுக்கப்பட்ட லைப்ரரி அவர் வீட்டில் எங்கே இருக்கிறதெனத் தேடித் பார்த்தேன்..வேறிடத்தில் எடுக்கப்பட்டதென அவரின் பதிலை அறிந்தேன்..நான் நேரில் சந்தித்தபொழுது இந்தப் படத்தில் தோன்றும் அளவுக்கு வயது அதிகமாகத் தெரியவில்லை அவருக்கு..35 டு 37 வயதுக்குள் மதிக்கும் படியாகவே இருந்தார்..போட்டோவில் பார்ப்பதற்கும் நேரில் பாற்பதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்..நல்ல துடிப்பும் ஆர்வமும் கொண்ட இவர் தமிழ்ப் பண்பாட்டை தன் எழுத்திலே மட்டும் வெளிப்படுத்தாமல் தன் வாழ்விலும் கடைபிடிக்க அதீத முயற்சி எடுக்கிறார்..சிங்கப்பூரின் இன்றைய பரிணாமத்திலே நான் கண்ட மற்ற அனைத்து சிங்கப்பூரியன் உறவினர்கள் (கிட்டத்தட்ட 500 பேர்களுக்கு மேல் ஒரு திருமண வைபவத்தில் கூடினோம்..ஒரு மாறுபட்ட கலாச்சாரத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிறார்கள்) அனைவரிலிருந்தும் மாறுபட்டு தமிழர் பண்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற அவரின் தொடர்முயற்சியைக் கண்டேன்..வாழ்த்துக்கள் நண்பர் ஆலாசியம் அவர்களே..

    ReplyDelete
  3. சுப்பையாவின் பொக்கிசத்தை
    சுப்பையாவின் ரசிகர் தொகுத்துத்தர
    சுப்பையா அவர்கள் வெளியிட்டுள்ளது
    சூப்பரையா...

    ReplyDelete
  4. சுப்பையாவின் பொக்கிசத்தை சிங்கப்பூர்
    சுப்பையா தொகுத்துத்தர
    சுப்ரமண்யம் எனப் போற்றும்
    சுப்பையா வாத்தியார்
    சுவைக்கத் தந்தார்

    என்றும் சொல்லலாமே ?

    ReplyDelete
  5. /////
    சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    சுப்பையாவின் பொக்கிசத்தை
    சுப்பையாவின் ரசிகர் தொகுத்துத்தர
    சுப்பையா அவர்கள் வெளியிட்டுள்ளது
    சூப்பரையா.../////////
    எனக்கும் படிக்கும்போது இப்படி சுப்பையா காம்பினஷன் கண்ணில் பட்டு எழுதத் தோன்றியது..

    சிவசிமாஜா 'சூப்பரையா'ன்னு சூப்பரா ஒரு கமென்ட் அட்சுகிறீங்கோ..
    கலக்குறீங்க போங்க..

    ReplyDelete
  6. ஆசிரியருக்கு வணக்கம்,
    கவிகளின் சூப்பர் ஸ்டார் நம்ம
    சுப்ரமணிய பாரதியின்
    கவி பாடும் ஸ்டைல்....
    அவரின் இசை அறிவு தாங்கிய நிகழ்வுகளை....
    வகுப்பறையில் பதிவிட்டதற்கு
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  7. தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் ராஜகோபாலன் ஐயா அவர்களே.

    ReplyDelete
  8. மைனர்வாள்... உங்களின் நண்பர் என்பதற்காக என்னைப் பெருமைப் படுத்தி எழுதியுள்ளீர்கள்.
    தங்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  9. அடியார்களுக்கு அடியார் - சிவன்
    அடிபோற்றும் நல்லார்
    அன்பர் சிவயசிவ வின் கம்பர்
    என் நண்பர் சி.மா.ஜா அவர்களின்
    பின்னூட்டத்திற்கு நன்றிகள்...

    ReplyDelete
  10. வணக்கம் மைனர்வாள்,

    //எனக்கும் படிக்கும்போது இப்படி சுப்பையா காம்பினஷன் கண்ணில் பட்டு எழுதத் தோன்றியது..//

    ஒருமித்த மனிதர்களின் எண்ணவோட்டங்களும் ஒரேவாறு சிந்திக்கும் என்பதை தங்களது கருத்து புலப்படுத்தியுள்ளது.

    நன்றி..
    மைனர்வாள், ஆழ்ந்த அறிவும், பழகுதற்கும் இனிமை படைத்த தாங்கள் - எங்க சிவயசிவ - பக்கமும் வந்தீகனா நாங்களும் இளமையாவோமில்லையா ?

    வருகை தாருங்களேன்.
    http://sivaayasivaa.blogspot.com

    நன்றி..

    ReplyDelete
  11. வணக்கம் ஆலாசியம்,

    //என் நண்பர் சி.மா.ஜா அவர்களின்
    பின்னூட்டத்திற்கு நன்றிகள்...//

    என்ன அனுராதாவின் பின் ஊட்டத்தைப் பார்த்தீர்களோ ?

    இதுவும் நல்லாத் தான் இருக்கு !
    அதுக்கான தகுதியை ஆண்டவனே தரட்டும்..

    ReplyDelete
  12. வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.

    கவிச் சூரியனே(ஆலாசியம் அவர்களே) தலை வணங்குகிறோம் உமக்கு.பாரதி என்றால் யாராவது சினிமா நடிகையா எனக் கேட்கும் இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற இலக்கிய ஆர்வலர்களின் ஆக்கம் அவசியம்.

    உங்கள் தந்தையாரைப் பற்றி நண்பர் சொன்னதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.

    "விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?"

    "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?"

    உங்கள் படைப்புகள் தொடரட்டும்.
    தமிழ் எங்கும் பரவட்டும்.

    நன்றி கவிச் சூரியன்.

    நன்றி வாத்தியார் ஐயா.

    ReplyDelete
  13. பொக்கிஷத்தை ஒரு
    கொக்கி போட்டு கையில்


    தொட்டுத் தழுவ வைத்தஉங்களுக்கோர்
    சொட்டு போடத்தான் வேண்டும்..


    சேகரித்ததகவல்களைவைத்துக்கொண்டு
    கொக்கரிக்காமல் உள்ள உம் பணிவுக்கு


    வணக்கமும்..வாழ்த்துக்களும்..
    வள்ளுவரின் வாக்கு..

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து

    என்ற திருக்குறளினை நினைவு செய்து
    எப்பவும் போல் தரும் வருகை பதிவு

    ReplyDelete
  14. ///என்ன அனுராதாவின் பின் ஊட்டத்தைப் பார்த்தீர்களோ ?///

    சைவப் பெரியவர்களை சுவாசிப்பவர் நீவீர் இன்னும் கொஞ்சம் அதிகம் தருவீர்கள் என நினைத்தேன்.. நன்றி.

    ReplyDelete
  15. ///பாரதி என்றால் யாராவது சினிமா நடிகையா எனக் கேட்கும் இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற இலக்கிய ஆர்வலர்களின் ஆக்கம் அவசியம்.////
    உண்மை தான் இந்த நிலை பல ஆண்டுகளாகவே இருக்கிறது... இந்த அவலத்தைப் போக்க உங்களைப் போற்ற ஆசிரியப் பெருமக்கள் தான் பெரும் பாடு பட வேண்டும்.. அதிலும் உயர்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர்கள் குறியாக்கப் படவேண்டும்... அன்பின் பொருட்டு கொஞ்சம் அல்ல நிறையவே என்னை புகழ்ந்திருக்கிறீர்கள்.. தங்களின் அன்பிற்கு நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  16. ////பொக்கிஷத்தை ஒரு
    கொக்கி போட்டு கையில்

    தொட்டுத் தழுவ வைத்தஉங்களுக்கோர்
    சொட்டு போடத்தான் வேண்டும்..///

    சொடக்குப் போட்டு திருஷ்டிக் கழித்து
    வாழ்த்துக்களையும் தெரிவித்த
    வகுப்பறை கவி வள்ளுவர் நெறி போற்றும்
    மதுராபதி ஐயர் அவர்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  17. ////சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    எங்க சிவயசிவ - பக்கமும் வந்தீகனா ?////////

    'சிவாயசிவ'பக்கம் வந்து படிச்சிப் பார்த்தேன்..கிரேட்..இப்படி ஒரு dedication..இந்த ஆங்கில வார்த்தையை எல்லா இடங்களிலும் இப்போது பரவலாக உபயோகப்படுத்திவருகிறார்கள்..உங்களுக்குத்தான் அது சாலப்பொருந்தும்..

    நானெல்லாம் உங்க ப்ளாக் பக்கம் வந்து..படிச்சு..பின்னூட்டம் இட்டு..ம்..ஹும்..

    'சிவனே'ன்னு இருக்குறது பத்தாதா?எதுக்கு இப்படி சம்பந்தமே இல்லாம என்னை மாதிரி ஆளையெல்லாம் அங்க கூப்புடுறீங்க..

    அந்த அளவுக்கெல்லாம் சிவனைப் பற்றி எழுதுகிற இடத்துக்கு நெருங்கவே கொஞ்சம் அச்சமாக இருக்கு..
    என்னதான் இருந்தாலும் அழிக்கும் கடவுள் அல்லவா?
    ஏதோ உங்க ரூபத்துலே சிவன் எனக்கு கடைக்கண் பார்வையை வீசுனதா நினைச்சுக்குறேன்..நன்றி..

    ReplyDelete
  18. வணக்கம் மைனர்வாள்,

    //சிவனைப் பற்றி எழுதுகிற இடத்துக்கு நெருங்கவே கொஞ்சம் அச்சமாக இருக்கு..

    என்னதான் இருந்தாலும் அழிக்கும் கடவுள் அல்லவா?//

    இப்படித்தான் கருணையே வடிவான சிவபரம்பொருளை நம்போன்ற பலரும் தவறாக நினைக்கிறோம் தோழரே..

    இந்த உலகில்,

    சிவபெருமான் ஒருவரே ஐந்தொழில் ஆற்றவல்ல கடவுள்..

    அதில் ஒரு பகுதியாக அழித்தலையும் செய்கிறார்..

    அழித்தல் என்றால் எதை அழிக்கிறார் தெரியுமா ?

    நம்மிடத்தில் ( உயிர்களிடத்தில் )
    உள்ள,
    ஆணவம், கன்மம், மாயை
    என்ற மும்மலங்களைத் தான் சிவபெருமான் அழிக்கிறார்..

    நிற்க..

    உலகில் உள்ள எல்லா கடவுளரும்

    ( திருமால், பிரமன், இந்திராதி தேவர்கள் என யாவரும் )

    சிவபெருமானிடம் இருந்து தான்
    அருள் பெற்று - தத்தமது பக்தர்களுக்கு வழங்குகின்றனர்..

    அன்பே சிவம்..

    சிவபெருமானைப் பற்றி மாதிரிக்கு ஒரு தேவாரம் பாருங்கள் தோழரே..

    கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
    பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
    தனிமுடி கவித்து ஆளும் அரசினும் இனியன் - தன் அடைந்தார்க்கு இடைமருது ஈசனே

    என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம்..

    தோழரே..

    இயன்றால் இதுகுறித்து விரைவில் ஒரு ஆக்கம் தர முயற்சிக்கிறேன் மைனர்வாள்...

    நன்றி...

    என்றென்றும் அன்புடன்,
    சி.மா.ஜா.

    ReplyDelete
  19. சி.மா.ஜா.அவர்களே,
    சிவன் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி..ஆக்கத்தையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com