12.2.11

நகைச்சுவை: மனைவி எப்போது அழகாகத் தெரிவார்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: மனைவி எப்போது அழகாகத் தெரிவார்?

இன்றைய இளைஞர் மலரை நமது வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1. டாக்டர், நிச்சயமா சொல்லுங்க எனக்குப் புற்றுநோய்தானா?  எதுக்குக் கேட்கறேன்னா ஒரு டாக்டர் ஒரு நோயாளிக்கு புற்றுநோய்க்கு வைத்தியம் பார்த்தாரு, ஆனா அவர் TB ல இறந்துட்டாரு.

கவலைப்படாதீங்க.  நான் உங்களுக்கு வைத்தியம் பார்த்தேன்னா நீங்க நிச்சயம் புற்றுநோயால மட்டும்தான் இறப்பீங்க.

--------

2. இந்த ரவுடியால நம்ம பகுதில தொல்லை ரொம்ப அதிகமாயிடுச்சி.  அவனை இங்கேர்ந்து துரத்த என்ன பண்ணலாம்?

மிஸ்டர் எக்ஸ்: வர தேர்தல்ல நிக்க வெச்சு MLA ஆக்கிடுவோம்.  ஒரு அஞ்சு வருஷத்துக்குத் தொந்தரவு இல்லாம நிம்மதியா இருக்கலாம்.

---------

3. நீங்க என்ன சோப்பு உபயோக்கிறீங்க?

விகாஸ் சோப்பு.  சோப்பு மட்டுமில்ல, ஷாம்பூ, பேஸ்ட், தேங்காய் எண்ணெய், ஷேவிங் கிரீம் எல்லாம் அதேதான்.

இந்த brand நான் கேள்விப்பட்டதேயில்லையே?

விகாஸ் என்னோட ரூம் மேட்.

----------

4. மிஸ்டர் எக்ஸ் தன் நண்பரிடம்:  என்னோட கல்யாணத்துக்கு ஏன் வரலை?

பத்திரிகை கிடைக்கலை.

நான்தான் அதுல பத்திரிகை கிடைக்காட்டாலும் கண்டிப்பா வந்துடுங்கன்னு எழுதிருந்தேன் இல்ல?

---------

5. மனைவி: இன்னிக்கு சொற்பொழிவில சுவாமிஜி சொன்னாரு, சொர்க்கத்துல கணவனையும், மனைவியையும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க விடமாட்டாங்களாம்.

கணவன்: அதனாலதான் அத சொர்க்கம்னு சொல்றாங்க.

---------

6. ஏங்க?  பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு.  நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க?

நானும்தான் கூப்பிட்டேன்.  அவங்க மாட்டேன்னுட்டாங்க.  அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?

--------

7. ஏங்க?  நீங்க கண்ணாடியைக் கழட்டிநீங்கன்னா ரொம்ப handsome ஆ இருக்கீங்க.

நீ கூடத்தான் ரொம்ப அழகாத் தெரியற.

--------

8. ஏன் பள்ளிக்கு இன்னிக்கு தாமதமா வர்ற?

சார், ஸ்கூட்டர் puncture ஆயிடுச்சு.

அதனால என்ன? பஸ் ல வரவேண்டியதுதானே?

அதான் சார் நானும் சொன்னேன், ஆனா உங்க பொண்ணு கேக்க மாட்டேன்னுடுச்சு.

--------

9. அக்பர் யாரு?

தெரியல டீச்சர்.

படிப்புல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

நீங்க சொல்லுங்க டீச்சர், சுரேஷ் யாரு?

தெரியல

உங்க பெண் மேல கவனம் இருந்தா தெரிஞ்சிருக்கும்.

---------

10. நேத்து எங்க போயிருந்த?

காதலியோட சினிமாவுக்கு.

எவ்ளோ செலவாச்சு?

முன்னூறு

அவ்ளோதானா?

அரே யார்! அவகிட்ட அவ்ளோதான் இருந்திச்சு.

-------

11. என்னது?  ராத்திரி பூரா உங்க பையன் புக் முன்னாடி உட்கார்ந்தும் தேர்ச்சி பெறலையா?

அவன் உட்கார்ந்திருந்தது facebook முன்னாடியாம்.

-------

12. நர்ஸ் நீங்க என்னோட இதயத்தைத் திருடிட்டீங்க.

அதுக்கு முன்னாடி டாக்டர் உங்க கிட்னியைத் திருடிட்டாரு.

--------

13. எதிர்த்த வீட்டு சுனிதாவைப் பாரு, வகுப்புலயே முதல் மாணவியா வந்துருக்கா.  நீ என்னடான்னா பெயில் ஆயிருக்க.

சுனிதாவைப் பார்த்ததால்தான் mummy.

--------

14. உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?

கூகுள் னு.

ஏன்?

நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.

----

15. என்னது? அவர் எரிஞ்சிட்டிருக்கிற கட்டடத்துலேர்ந்து ஆறு பேரைக் கஷ்டப்பட்டுக் வெளில அழைச்சுட்டு வந்தும் அவரைப்போட்டு மக்கள் கும்மு கும்முன்னு கும்மி எடுத்திட்டாங்களா?

ஆமா, அவர் அழைச்சுக்கிட்டு வந்தது தீயணைப்பு வீரர்களை.

----

16. ஒரு காட்டில் சிங்கத்தின் திருமணம் நடந்தது.  எல்லா மிருகங்களும் நடனமாடிக்கொண்டிருந்தன.  ஓர் ஓரத்தில் எலி ஒன்றும் நடனமாடிக்கொண்டிருந்தது.

அதைப்பார்த்து புலி கேட்டது 'ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?'

'என்னோட தம்பி சிங்கத்துக்கு இன்னிக்கு திருமணம், அதான்'

'அட சிங்கம் எப்போ உன் தம்பியாச்சு?'

'திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்'.

----

17. ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்: என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.

பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?

இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா.  அவளைத் திட்டும்போதெல்லாம் 'உனக்கு ஒரு கழுதையைக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிட்டிருக்கார்.  அந்த ஒரு காரணத்துக்காகத்தான் அடியைச் சகிச்சுகிட்டிருக்கேன்'.

----
ஆக்கம்: திருமதி.எஸ்.உமா, தில்லி


வாழ்க வளமுடன்!

21 comments:

  1. நகைச்சுவையான நல்ல பதிவு.

    ReplyDelete
  2. நிஜமாவே சிரிப்பு வருது...

    ReplyDelete
  3. நகைச்சுவை சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  4. என்னது..
    உமா சகோதரிக்கு பேய் பிடிச்சுருச்சா . .
    நகைசுவையா
    அள்ளி வீசறாங்க..

    அவுங்களுக்காக கொஞ்சம் சிரிச்சுட்டேன்..

    ஹிஹிஹி

    ReplyDelete
  5. நகைச்சுவை மனிதனுகு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். தொடரட்டும் இந்தப் பணி. ஆசிரியர் அவர்களும் தங்கள் பதிவில் அதிகம் நகைச்சுவைக்கு இடம் கொடுக்கட்டும். நன்றி.

    ReplyDelete
  6. அன்புடன் வணக்கம் திருமதி உமா.
    ஒரு துர் நடத்தை உள்ள பையனின் அம்மா தினமும் பிரார்த்தனை செய்தாளாம் சாமீ எனக்கு நரக வாழ்வு கொடு
    அவள கணவன் கேட்டாராம் என்மா இப்பிடி ?? எனது மகன் எப்பிடியும் நரகத்திற்கு தான் போவன் அங்கே போய் அவன் சிரம பட கூடாது ஆகவே நான்
    அவனுக்கு முன் அங்கே போய் இருந்து அவன் வந்தவுடன் அவனை கவனிக்க??.உங்களின் 5..வது துணுக்கு அதை ஞாபக படுத்துகிறது!! மற்றவைகள் நன்கு சிரிக்க வைக்கிறது... நன்றி

    ReplyDelete
  7. I like 14th and 17th. Nice Umaji.

    I expect more creative works from you.

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    ஜோக்ஸ் அனைத்தும் புதுமை, ஆனாலும் அசத்தல், பதிவருக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  9. வழக்கம் போலே..எல்லாம் கலக்கல்..பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு அத்கம் என்று நகையின் மேல் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டைக் குறித்து சொல்லுவார்கள்..

    இங்கே உண்மையிலேயே சிறந்த ரசனை உள்ளவராகத் தன்னை இவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்..பாராட்டுக்கள்..நன்றிகள்..எல்லோருக்கும் பகிர்ந்து கொண்டதற்கு.....

    ReplyDelete
  10. ரத்தினவேல், கண்ணகி, தட்சிணாமூர்த்தி - தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. உமா சகோதரிக்கு பேய் பிடிச்சுருச்சா . .//

    இப்பதான் உங்களுக்குத் தெரிஞ்சதா?

    ReplyDelete
  12. தொடரட்டும் இந்தப் பணி. //

    நன்றி கோபாலன் சார்

    ReplyDelete
  13. பிரசன்னகுமார், கணபதி சார், கிருஷ்ணன் சார், அரசு அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  14. உண்மையிலேயே சிறந்த ரசனை //

    தங்கள் பாராட்டுக்கு நன்றி. அது எப்படிங்க, ஜோக் போட்டாக்கூட இவ்ளோ விவரமா பின்னூட்டம் போடறீங்க. (உங்களுக்கு 'பின்னூட்ட நாயகன்' அப்படிங்கற பட்டத்தை வகுப்பறை சார்பா வழங்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கோம். வாத்தியாரின் ஒப்புதலுக்காக waiting).

    ReplyDelete
  15. தங்களின் கற்பனையில் உருவான நகைச்சுவை அனைத்தும் அருமை....

    முன்பு நீங்கள் மொழிபெயர்ப்பு என்றுக் கூறியதில் "காதல்" ஜில்லுனு ஒரு காதல்" என்பதுகூட உங்களின் சொந்த சரக்கு என்றே தான் எனக்குத் தோன்றிற்று... நன்றி உமா.

    பெண்களுக்கு நகைச்சுவை... நகை சுவை இதுவும் கூட நன்றாகவே இருக்கிறது...

    ReplyDelete
  16. தங்களின் கற்பனையில் உருவான நகைச்சுவை அனைத்தும் அருமை....//

    இப்பதான் கவனிச்சேன் டிஸ்கி போடாததை. இது எதுவுமே சொந்த சரக்கல்ல. நான் படிச்சதில் எனக்குப் பிடிச்சிருந்ததை மொழிபெயர்த்துப் போட்டேன் அவ்வளவுதான். தவறுக்கு வருந்துகிறேன்.

    பெண்களுக்கு நகைச்சுவை... நகை சுவை இதுவும் கூட நன்றாகவே இருக்கிறது...// நகை சுவையைவிட நகைச்சுவைதான் ரொம்ப பிடிக்கும்.

    அப்படியே நகை சுவை இருந்தாலும் டெல்லில அலுவலகத்துக்கு ஒரு குந்துமணி தங்கம் கூட போட்டுட்டு வரமுடியாது. அவ்ளோ திருட்டு இங்க. தி கிரேட் காபிடல் of இந்தியாவுக்கே இந்த நிலைமைன்னா மத்த நகரங்களைப் பத்தித் தெரியல. ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஊரிலேர்ந்து ஒரு கவரிங் செயின் வரவழைச்சேன் 1200 ரூபாய்க்கு. பத்து நாள் முன்னாடி பஸ் ஏறப்போகும்போது ஸ்கூட்டர் ல (அதுல நம்பர் plate இல்லை) வந்த ரெண்டு பேர் கட் பண்ணிட்டுப்போயிட்டாங்க. சரி கவரிங் தானேன்னு நானும் ரொம்ப பீல் பண்ணலை. அவனுங்கதான் நொந்து போயிருப்பாங்க. இருந்தாலும் இனிமே கவரிங் வாங்கினாக்கூட முன்னூறு ரூபாய்க்கு மேல செலவு பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணி வெச்சிருக்கேன். போன வாரம் நான் வழக்கமா அலுவலகம் வரும் பகுதில ஆட்டோவை நிறுத்தி கத்தியைக் காண்பித்து (ஆட்டோல இருந்தது மூன்று பெண்கள் மட்டுமே) நகை, மொபைல் எல்லாத்தையும் திருடிட்டுப்போயிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  17. ////இருந்தாலும் இனிமே கவரிங் வாங்கினாக்கூட முன்னூறு ரூபாய்க்கு மேல செலவு பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணி வெச்சிருக்கேன். போன வாரம் நான் வழக்கமா அலுவலகம் வரும் பகுதில ஆட்டோவை நிறுத்தி கத்தியைக் காண்பித்து (ஆட்டோல இருந்தது மூன்று பெண்கள் மட்டுமே) நகை, மொபைல் எல்லாத்தையும் திருடிட்டுப்போயிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்./////

    பாரதி சொன்னது போல் அனைத்து பெண்களும் சண்டைப் பயிற்சி செய்வது அவசியம் / கட்டாயம் தேவை தான் போலும்..

    எதுனாலும் சரி மிகவும் மெல்லியதாகப் போட்டுக் கொள்ளுங்கள் அவர்கள் கட் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்....

    ////தி கிரேட் காபிடல் of இந்தியாவுக்கே இந்த நிலைமைன்னா மத்த நகரங்களைப் பத்தித் தெரியல////

    மகாத்மா சொன்னது இரவு 12 மணியை ஆனால் பகல் பொழுதே இப்படி இருந்தால் என்ன செய்வது..... பஞ்சாப் பெண்களைப் போல் கையில் ஒரு பெரிய தடிமனான அழுக்கில்லா இரும்பால் (Stainless Steel ) ஆனா வளையம் ஒன்றை தற்காப்புக்காகப் போட்டுக் கொள்ளுங்கள் உபயோகப் படும்.

    ReplyDelete
  18. எதுனாலும் சரி மிகவும் மெல்லியதாகப் போட்டுக் கொள்ளுங்கள் அவர்கள் கட் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்....//

    !!!!!!!!!!!!!!

    ReplyDelete
  19. பஞ்சாப் பெண்களைப் போல் கையில் ஒரு பெரிய தடிமனான அழுக்கில்லா இரும்பால் (Stainless Steel ) ஆனா வளையம் ஒன்றை தற்காப்புக்காகப் போட்டுக் கொள்ளுங்கள் உபயோகப் படும்//

    அட நீங்க வேற என்னை வெச்சு காமெடி பண்ணிக்கிட்டு. 'வாய்ப்பேச்சு'ல மட்டும்தான் நாங்கள்லாம் வீரத்தை வெளிப்படுத்துவோம்.

    ReplyDelete
  20. அனைத்துமே படு சூப்பர்...
    கண்ணுல நீர் வரும்வரை சிரிச்சேன்..

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com