11.2.11

பழத்தைப் பனித்தலையர் ஏன் தரவில்லை?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பழத்தைப் பனித்தலையர் ஏன் தரவில்லை?

இன்று தைக் கார்த்திகை. எங்கள் பகுதியில் உள்ள அத்தனை முருகன் கோவில்களிலும், இன்று முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை,
அன்னதானம் நடைபெறும். தேவகோட்டையில் உள்ள எங்கள் பங்காளிகளுக்குச்சொந்தமான முருகன் கோவிலில் இன்று காலையில் அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும்  நடைபெறவுள்ளது. இன்றைய கட்டளை எங்கள் வீட்டைச் சேர்ந்தது. அதை நடத்திவைப்பதற்காக என் சகோதரர்கள் மூவரும் சென்றுள்ளார்கள். அதீத வேலையின் காரணமாக நான் மட்டும் செல்ல வில்லை. இங்கிருந்தவாறே முருகனுக்கு என்னுடைய பிரார்த்தனை களை செலுத்திவிடுவேன்.

பழநி அப்பன் என் நண்பன். என் நிலைமை அவனுக்குத் தெரியும். கோபித்துக்கொள்ளமாட்டான். அவனுக்கும்  என்னைப்போலவே
Take it easy policy தான். இல்லாவிட்டால் அவன் எப்படி என்னுடைய நண்பனாக  இருக்க முடியும்?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா..!
 
நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..!

உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது
என்று நாணித்தான் முருகா!
 
நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த  நல்ல குருநாதன்!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவது
என்று நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை...!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!
 
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!
 
அப்பனித் தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!
 
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
 
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ...
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
 
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..!
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்
தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி..!
தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே..!
 
பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!
பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!
 
சபைதன்னில்
திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!
 
கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு  கமலத்தில் உருவாய் நின்றாய்!
கார்த்திகைப் பெண்பால் உண்டாய்!
திருக்கார்த்திகைப் பெண் பாலுண்டாய்!
உலகன்னை அணைப்பாலே
திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!
 
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு 

உற்றார் பெற்றாரும் உண்டு..!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் 

நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு! மனம் உண்டு..!!
தாயுண்டு! மனம் உண்டு..!
அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு
 
உன் தத்துவம் தவறென்று சொல்லவும்
ஒள்வையின் தமிழுக்கு உரிமை உண்டு ..!
 
ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?
 
ஏறு மயிலேறு..! ஈசனிடம் நாடு..!!

இன்முகம் காட்டவா நீ..!!!
ஏற்றுக் கொள்வார்.. கூட்டிச் செல்வேன்..
என்னுடன் ஓடி வா நீ..!
என்னுடன் ஓடி வா நீ..!

- பாடிப்பரவசப் படுத்தியவர் கே.பி.சுந்தராம்பாள்
பாடலைக் கேட்டு மகிழ்வதற்கான சுட்டி இங்கே உள்ளது!




வாழ்க வளமுடன்!

8 comments:

  1. முருகனை மட்டும் கயிலைக்கு அழைக்கவில்லை,நம்மையும் அழைக்கிறர்.

    ReplyDelete
  2. அன்புடன் வணக்கம் சிவஸ்ரீமதி K.P.S. இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் அந்த பழனி அப்பன் பக்கத்தில் வருவது போல் இருக்கும் உதாரணமாக அய்யபன் மாலை போட்டு எனது நண்பர் கருப்பசாமி பாடலை பாடுவார் அந்த வாரான் !!இந்தா வாரான் !!கருப்பசாமி காடு மாலை ஏறி வரான் ! இந்த வந்துட்டான் எனும்போது அங்குள்ள எதாவது அன்பர் சாமி வந்து அருள் கூடி நிற்பார் அது போல இந்த பாடல் கேட்கும்போது தண்டபாணி தெய்வம் வந்து என்ன கூபிட்டே?? என்ன வேணும்??. என்பது போல் இருக்கும்!!!.... நன்றி வாத்தியார் சார்...

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!

    ஜோதிட வித்வான்கள் அல்லது தவ வலிமை உடையவர்கள் கூற்று நிறைய அப்படியே நடந்து உள்ளது .

    அதில் ஒன்றும் மட்டும்
    " கண் திருஷ்டி", க்கு உள்ளது போல நடை பெறாமல் உள்ளது ஐயா!

    ஒரு வேலை " இராதை",யின் வரவீர்க்காக இருக்குமோ வாத்தியார் ஐயா , முத்து ராமகிருஷ்ணன் ஐயா மற்றும் என்பக்கம் தோழன்/தோழியே.

    ஒரு சந்தேகம் ?

    முதலில் சங்கமம் மீன்ஸ் கடைக்கண் காட்டியது " இராதையானோ ", அல்லது " கண்ணனானோ",

    ஆண்டாண்டு காலமாக போற்றி வணக்கும் அளவீர்க்கு காதலுக்கு இலக்கணமானவர்கள் பிரிய காரணமும் விதி தானோ ?

    கண்ணன், இராதையை தவிர்க்க விட்டு சென்றபின் இராதையின் மனது என்ன பாடு பட்டு இருக்கு அல்லவா வாத்தியார் ஐயா ?

    ReplyDelete
  4. iyaa!

    சந்திரமுகியில் ஒரு நகைசுவை வருமே அது தான் கீழே கண்டதை படித்தால் ஞாபகதீர்க்கு வருகின்றது. :-)

    %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

    ராதை வேறு லட்சுமி வேறா? இருவருமே கண்ணனின் அன்பிற்குப் பாத்திரமானவர்களே!

    Thursday, February 10, 2011 8:08:00 PM

    ReplyDelete
  5. அன்புடன் கண்ணன் வணக்கம் கவலைபடதீர்கள் ஒரு ராதையோ -லக்ஷ்மியோ இனிமேல பிறக்க போறாள்?? இருக்கா எங்கோ!! வருவாள் உம்மை நாடி !!அதுவரை பொறுமை. பெரியோர்கள் எல்லோரும் ஆசி வழங்க நல்ல மணமகள் வருவாள்.

    ReplyDelete
  6. ஐயா!

    கணபதி ராமன் சார்! நீங்கள் தான் மிகவும் அருகில் உள்ள பெரியவர் என்பதனால் முன்னரே வந்து அனைத்து ஆலோசனை உதவிகளை
    செய்து தர வேண்டுகின்றேன் .

    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    hamaragana said...
    அன்புடன் கண்ணன் வணக்கம் கவலைபடதீர்கள் ஒரு ராதையோ -லக்ஷ்மியோ இனிமேல பிறக்க போறாள்?? இருக்கா எங்கோ!! வருவாள் உம்மை நாடி !!அதுவரை பொறுமை. பெரியோர்கள் எல்லோரும் ஆசி வழங்க நல்ல மணமகள் வருவாள்.

    ReplyDelete
  7. அன்புடன் கண்ணன் வணக்கம்
    நீங்கள் வரும் நாள் சொல்லுங்கள் .. உங்களுக்கு இல்லாத உதவியா. கண்டிப்பாக செய்கிறோம்.

    ReplyDelete
  8. உங்கள் கடமை உணர்வு உங்களை கட்டிப் போட்டுள்ளது.செய்யும் தொழிலே

    தெய்வம்.நெஞ்சால் நினைந்தாலே அஞ்சேல் என ஓடிவருவான் குஞ்ச‌ரி
    மணாளன்.அவனே தஞ்சையிலும் மேவிய பெருமாள்!அப்பன்,பழனி அப்பன்!
    கேபி எஸ் அவர்களின் குரலைக்க்கேட்டு,உருக்கத்தைக்க்கேட்டு உருகாத மனம்
    கல் மனமே!நன்றி அய்யா!

    3 நாட்களாக BSNL Server problem. No connectivity for entire Thanjavur.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com