19.12.17

நகைச்சுவை: நவீன அவ்வையார் !


நகைச்சுவை: நவீன அவ்வையார் !

"முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் அவ்வையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள். பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்! கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை. கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை."

"நல்லது வேலவா!"

"ஔவையே, கருப்பு, வெள்ளை - எளிய தமிழில் விளக்கு."

"ஐயனே, வரி கட்டியது வெள்ளை. கட்டாதது கருப்பு!"

"வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?"

"கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாதது எது?"

"சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்!"

"ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?"

"ஒழிக்க நினைத்தது கருப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"
 
"அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"

"தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

"என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"

"அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கருப்புதான் வேலவா!"

"மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு."

"பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே, உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன். தயங்காமல் கேள்."

"ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம்
என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என் கையில் தள்ளி விட்டான். அதற்கு இன்கம்டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்!"
-------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir very nice sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,மிகவும் அருமை.நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Wonderful ...thanks for sharing...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    ஆஹா! நல்ல நகைச்சுவை!
    நமுட்டுச் சிரிப்பு நான் சிரித்தேன்!
    அதற்கு சந்தர்ப்பம் தந்த தங்களுக்கு
    குமரக் கடவுள் நல்வரம் தந்து அருள்
    பாலிக்கட்டும் வாத்தியாரையா!!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.பட்டது,படப்போவது பகுத்தறிந்து கூறு ஔவையே.முருகா!பட்டது டிமானிடைசேசன்,GST. படப்போவது FRDI Bill.நன்றி.



    ReplyDelete
  6. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice sir thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிகவும் அருமை.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Wonderful ...thanks for sharing...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆஹா! நல்ல நகைச்சுவை!
    நமுட்டுச் சிரிப்பு நான் சிரித்தேன்!
    அதற்கு சந்தர்ப்பம் தந்த தங்களுக்கு
    குமரக் கடவுள் நல்வரம் தந்து அருள்
    பாலிக்கட்டும் வாத்தியாரையா!!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    Good humour////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  11. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.பட்டது,படப்போவது பகுத்தறிந்து கூறு ஔவையே.முருகா!பட்டது டிமானிடைசேசன்,GST. படப்போவது FRDI Bill.நன்றி./////

    ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான் ஆதித்தன். நன்றி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com