18.12.17

Astrology: நீங்களும், நானும், சனிப் பெயர்ச்சியும்!


Astrology: நீங்களும், நானும், சனிப் பெயர்ச்சியும்!

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய்க்கிழமை காலை 9:59 மணி அளவில் விருச்சிக ராசியில் இருந்து
தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இடம் பெயர்கிறார்.
வீட்டை மாற்றுகிறார். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்
கொள்ளுங்கள்.

எதற்காக வாக்கிய பஞ்சாங்கம்?

திருநள்ளாறு கோவிலில் அதைத்தான் வைத்து காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே வாக்கிய பஞ்சாங்கம்!

சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில்
சஞ்சாரம் செய்வார். 12 ராசிகளுக்கான பலன்கள் சுருக்கமாக்
கீழே கொடுத்துள்ளேன்.

விரிவான, ராசிகள் வாரியான பலன்கள் வேண்டுமென்றால் எழுதுங்கள். ஏ4 சைசில் 9 பக்கங்கள் பி.டி.எஃப் (PDF) ஃபார்மாட்டில் உள்ளது. உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

எனது மின்னஞ்சல் முகவரி spvrsubbiah@gmail.com (இந்த முகவரிக்கு மட்டுமே எழுத வேண்டும்)

Subject boxல் மறக்காமல் ‘சனிப் பெயர்ச்சி’ என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================
சுருக்கமான பலன்கள்:

----------------------------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்!


காரைக்கால்:
திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தெர்பாரண்யேஸ்வரர் கோயில்
(சனி பகவான் கோயில்) உள்ளது.

இங்கு வரும் 19ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் கேசவன் பேசுகையில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பக்தர்களை திருநள்ளாறுக்கு அழைத்து வருவதுபோல் மீண்டும் அதே பகுதிக்கு பக்தர்களை கொண்டு செல்வதிலும் பேருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்
என்றார்!

சென்னை உள்ளிட்ட தொலைதூர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விழா முடியும் வரை சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ஏறி இறங்கும் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று கூறக்கூடாது என்றும் கூறினார்.

பக்தர்கள் வசதிக்காக காரைக்கால்- கும்பகோணம் வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், காரைக்கால்- சென்னை வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், எஸ்இடிசி பேருந்துகள் 50, காரைக்கால்- புதுச்சேரி வழியாக 40 புதுச்சேரி சாலை போக்குவரத்து பேருந்துகள், 25 தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 350 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல் திருநள்ளாறு யாத்ரிகா நிவாஸ் அருகில் ஒரு பேருந்து நிலையம், தேனூர் சுரக்குடி அருகில் ஒரு பேருந்து நிலையம் உட்பட 3 பேருந்து நிலையங்கள் மற்றும் வேன், கார், டூவீலர்கள் நிறுத்த தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். 

கோயில்கள் நிர்வாக அதிகாரி  விக்ராந்தராஜா, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் பழனிச்சாமி  மற்றும்
புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக, தமிழக சாலை  போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Sir as per thirukanidam panchangam on Oct 26 the sani has been moved to dhanushu ....but still we follow vakkiyam....for horoscopes when we check we follow thirukanidham but y for peyarchi we follow vakkiyam.sir..please tell me which is correct

    ReplyDelete
  2. ////Blogger Shruthi Ramanath said...
    Sir as per thirukanidam panchangam on Oct 26 the sani has been moved to dhanushu ....but still we follow vakkiyam....for horoscopes when we check we follow thirukanidham but y for peyarchi we follow vakkiyam.sir..please tell me which is correct//////

    திருநள்ளாற்றில் உள்ள சனீஷ்வரன் கோவிலில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படிதான் பூஜைகள், பரிகாரங்களைச் செய்கிறார்கள். ஆகவே சனிப் பெயர்ச்சிக்கு அவர்கள் சொல்வதையே கேட்போம்!

    ReplyDelete
  3. Sir for me sani is lagna lord (makara )n I'm Scorpio rasi so will this be gud one?லக்னப்படி அவர் விரைய ஸ்தானதில் வருவார் அல்லவா??? ராசி படி தன ஸதானம் அல்லவோ??

    ReplyDelete
  4. ////Blogger kausalya muralikannan said...
    Sir for me sani is lagna lord (makara )n I'm Scorpio rasi so will this be gud one?
    லக்னப்படி அவர் விரைய ஸ்தானதில் வருவார் அல்லவா??? ராசி படி தன ஸதானம் அல்லவோ?

    கோச்சார பலன்கள் ராசியை வைத்துத்தான். ஆகவே விருச்சிகத்திற்கு இரண்டில் அவர் வருகிறார்.
    விருச்சிக ராசிக்கு பாதச் சனி.

    ReplyDelete
  5. மிக்க நன்றி அய்யா நானும் தங்களது
    வகுப்பில் மாணவனாக விரும்புகிறேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com