Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒரு உதாரண ஜாதகம்!
ஒரு அன்பான பெற்றோர்களுக்குக் கடும் சோதனை. அவர்களுடைய பத்து வயது மகனுக்கு, ஒரு தீராத நோய் வந்து விட்டது. அத்துடன் அவர்களைக் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. பெரும் செலவையும் அது கூட்டிக் கொண்டு வந்தது.
மருத்துவர்கள் அந்த நோய்க்கு வாய்க்குள் நுழையாத ஒரு பெயரைச் சொன்னார்கள். Muscular dystrophy (MD) என்றார்கள். உடலின் சதைப் பகுதிகள் நாளுக்கு நாள் பலவீனமாகி இறுதியில் உடலின் பல இடங்கள் செயல் இழந்து போகும் என்றார்கள். மருந்துகளின் மூலம் பையனின் மரணத்தைத் தள்ளிப்போடலாம் என்றார்கள். இருபது ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கலாம் என்றார்கள். அதுவரை விடாமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள்
பையனின் ஜாதகம் என்ன சொல்கிறது?
அதை இன்று பார்ப்போம்
----------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:
1
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஏழில் சனியின் வீட்டில். அவனுடன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் உள்ளார்கள். புதன் இந்த ஜாதகத்திற்கு விரையாதிபதி (12th lord). பொதுவாக லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்று சேர்ந்தால், ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. அத்துடன் ராகுவும் இருப்பதால், நிலைமை இன்னும் மோசம். மற்றவர்களையும் கஷ்டத்திற்கு உள்ளாக்கக்கூடிய அமைப்பு அது!
2
கடக லக்கினத்திற்கு யோக காரகனான செவ்வாய் ஆறில் போய் அம்ர்ந்து கொண்டதால், அவனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை! அவனுடன் கூட்டாக அஷ்டமாதிப்தி சனியும் உள்ளான்
.
3
உடல்காரகன் சூரியன் லக்கினத்திற்கு எட்டில் அமர்ந்துவிட்டான். அவனாலும் பிரயோஜனமில்லை.
4
அத்துடன் பாக்கியாதிபதி குரு பன்னிரெண்டில் போய் அமர்ந்து கொண்டுவிட்டான். அவனாலும் பிரயோஜனமில்லை.
5
ஆயுள்காரகன் ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு, எட்டாம் வீட்டைப் பார்க்கிறான். அதனால் ஜாதகனுக்கு அல்ப ஆயுள் என்பது விதி
6
சந்திர ராசிக்கு எட்டாம் வீடு, அதன் அதிபதி சூரியன் பார்வையில், அதனால் உடல் தேறுவதற்கு சற்று வாய்ப்பு உள்ளது.
7.
ஆனாலும் லக்கினதிபதி கேந்திரத்தில் அமர்ந்திருந்தாலும், உடன் இரண்டு தீய கிரகங்களின் கூட்டணி. அதன் பலனும் ஜாதகனுக்கு அல்ப ஆயுள்
8
பையனின் நடப்பு திசை யோககாரகன் செவ்வாயின் திசை, அதனால் ஜாதகனுக்கு, மருந்து, மாத்திரைகளின் மூலமும், பிரார்த்தனைகளின் மூலமும் சிறிது தேறியது. அடுத்து வந்த ராகு திசையும் கஷ்டங்களைக் கொடுத்தது. ராகு சனியின் வேலையைச் செய்யும். ராகு தன் திசை முடியும்போது, பையனை மேலே அனுப்பி வைத்தது. அதாவது இறைவனடியில் சேர்த்தது!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Respected sir,
ReplyDeleteGood Morning Sir. Thank you for analysis of Horoscope of child who is suffering from Major disease. By giving points by points of the horoscope, I can understand little bit of the importance of the positions of the Lords. Thank you sir,
with kind regards,
Visvanathan N
வணக்கம் ஐயா,அலசல் அற்ப்புதம்.மிகவும் பயனுள்ள பாடம்.நன்றி.
ReplyDeletevery good analysis Sir. Thank you.
ReplyDeleteவாத்தியார் ஜயாவிற்கு வணக்கம்
ReplyDeleteலக்னாதிபனேடு விறையதிபதி மாரகாதிபதி ராகு &8ம் மற்றும் செவ்வாய்
இதற்கு நச்சத்திரகால் பார்க்க வேண்டுமா ஜயா
வணக்கம் குருவே!
ReplyDeleteகொஞ்சம் கஷ்டமான/கடினமான அலசல். எல்லோராலும் எளிதாக பலன் சொல்ல இயலாதோ என்று தான் தோன்றுகிறது.தாங்களின் அநுபவிக்கிறோம் சக்தி கொண்டு எல்லா ஜாதகங்களையும் நன்றாகத் துவைத்து,அலசிப் பிழிந்துவிடுகிறீர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை!
////Blogger Visvanathan N said...
ReplyDeleteRespected sir,
Good Morning Sir. Thank you for analysis of Horoscope of child who is suffering from Major disease. By giving points by points of the horoscope, I can understand little bit of the importance of the positions of the Lords. Thank you sir,
with kind regards,
Visvanathan N/////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அலசல் அற்புதம்.மிகவும் பயனுள்ள பாடம்.நன்றி.//////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeletevery good analysis Sir. Thank you.//////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன்சார்!!!!
//////Blogger Ashok Kumar said...
ReplyDeleteவாத்தியார் ஜயாவிற்கு வணக்கம்
லக்னாதிபனேடு விறையதிபதி மாரகாதிபதி ராகு &8ம் மற்றும் செவ்வாய்
இதற்கு நச்சத்திரகால் பார்க்க வேண்டுமா ஜயா//////
அதெல்லாம் வேண்டாம்!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
கொஞ்சம் கஷ்டமான/கடினமான அலசல். எல்லோராலும் எளிதாக பலன் சொல்ல இயலாதோ என்று தான் தோன்றுகிறது.தாங்களின் அநுபவிக்கிறோம் சக்தி கொண்டு எல்லா ஜாதகங்களையும் நன்றாகத் துவைத்து,அலசிப் பிழிந்துவிடுகிறீர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை!//////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!
Feeling sad to read this post
ReplyDeletea well detailed analysis sir thanks... we may know what kind of disease that the god had given to that child horoscope...satran is 6th house and inspects 8th house by his 3rd vision ...it is his own house then how he will yield bad effects...as by your 5th point...sir...thanks sir ...waiting for your response....
ReplyDeletevalzha valamudan
anbudan
manavan VasanthaRaja.....
Very nice Detailed lesson.
ReplyDelete////Blogger Shruthi Ramanath said...
ReplyDeleteFeeling sad to read this post/////
எதற்காக வருத்தம். பதிவுகளை பாடங்களாகப் பாருங்கள் சகோதரி!
///////Blogger Vasanth said...
ReplyDeletea well detailed analysis sir thanks... we may know what kind of disease that the god had given to that child horoscope...satran is 6th house and inspects 8th house by his 3rd vision ...it is his own house then how he will yield bad effects...as by your 5th point...sir...thanks sir ...waiting for your response....
valzha valamudan
anbudan
manavan VasanthaRaja...../////
அது ஜோதிட விதி (Rule) அப்படித்தான் உள்ளது. அதைக் கேள்வி கேட்க முடியாது. வகுத்தவர்கள் உயிருடன் இல்லை. நமக்குப் பதில் சொல்ல!
Thanks for Ur reply Sir....
Delete////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteVery nice Detailed lesson./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
லக்னாதிபதி சந்திரன் "பாவ கத்தரி" யில்.
ReplyDeleteஎளிமையான மற்றும் தெளிவான விளக்கம் ஐயா. நன்றி
ReplyDelete