திருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது!
கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்
பல அவதாரங்களை எடுத்தவர் திருமால். அவர் பெருமைகளைப் பாடுவதற்கு அந்தக் காலத்தில் அவரது அடியார்களான ஆழ்வார்கள்
இருந்தார்கள்
ஸ்ரீநாராயண மூர்த்தி உன்னைப் பாடிப் பரவசப்படுவதைவிட எங்களுக்குப் பெரிதாக வேறு என்ன கிடைத்துவிடப்போகிறது? ஒன்றும் வேண்டாம்
அது இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னதோடு, அப்படியே வாழ்ந்தும் காட்டியவர்கள் அவர்கள்.
பிறகு முண்டாசுக் கவிஞர் பாரதி வந்து திருமாலின் கண்ணன் அவதாரத்தின் மேல் தீராத பக்தி கொண்டதோடு அவரைப் பலவிதமாக தன் மனதிற்கண்டு இன்புற்றுச் சிறப்பாகப் பல பாடல்களை இயற்றினார்.
1.கண்ணன் என் தோழன், 2.கண்ணன் என் தாய் 3.கண்ணன் என் தந்தை 4.கண்ணன் என் சேவகன்
5.கண்ணன் என் அரசன் 6.கண்ணன் என் சீடன் 7.கண்ணன் என் சற்குரு 8. கண்ணம்மா என் குழந்தை
9.கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை 10.கண்ணன் என் காதலன் (5 பகுதிகள்)
11.கண்ணன் என் காந்தன் என்று அந்த மாயக்கண்ணனைப் பல வடிவங்களில் கண்டு இன்புற்று,உருகி உருகி எழுதியவர் அவர்.
இறைவனையே, தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் கற்பனை செய்து எழுதியதோடு மட்டுமல்லாமல் தோழனாகவும், சீடனாகவும்,
ஏன் சேவகனாவும், அதற்கும் மேலே ஒரு படி சென்று காதலனாகவும் எழுதிக் களிப்புற்றதோடு பலரையும் கிறங்க வைத்தவர் அவர்.
அவருக்குப் பிறகு, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன.
------------------------------------------------------------
திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்
(திருமால்)
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!
பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!
நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!
மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!
ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்
அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்
ஸ்ரீராகம்:
விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!
(திருமால்)
படம்: திருமால் பெருமை - வருடம் 1968
பரந்தாமன் எடுத்த அவதாரங்களைப் பட்டியலிட்டவர், எடுக்க வேண்டிய அவதாரத்தையும் முத்தாய்ப்பாய்ச் சொல்லிப் பாடலை நிறைவு செய்ததுதான்
இந்தப் பாடலின் சிறப்பு
-------------------------------------------
மற்றுமொரு பாடல்:
மலர்களிலே பலநிறம் கண்டேன் - திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பலமணம் கண்டேன் - அதில்
மாதவன் கருணை மனம் கண்டேன்!
(மலர்)
பச்சைநிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவிமுகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்!
(மலர்)
பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப்
பாசமென்னும் சிறு நூலெடுத்துச்
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!
(மலர்)
நானிலம் நாரணன் விளையாட்டு
நாயகன் பெயரில் திருப்பாட்டு
ஆயர் குலப்பிள்ளை விளையாட்டு - இந்த
அடியவர்க் கென்றும் அருள்கூட்டு!
(மலர்)
படம்: திருமால் பெருமை - வருடம் 1968
அந்தப் பரந்தாமனுக்குக் கவியரசர் எதைச் சாற்றினார் பார்த்தீர்களா?
பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப் பாசமென்னும் சிறு நூலெடுத்துச் சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!
சத்தியம் என்னும் சரத்தில் பக்தி, பாசம் எல்லாவற்றையும் தொடுத்தல்லவா சாற்றியுள்ளார்!!
அந்தப் பரந்தாமனின் அருள் கிடைக்க நாமும் அதையே சாற்றுவோம்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வாத்தியார் அவர்கட்கு ,
ReplyDeleteஎனது மரியாதைகள்.
பாரதியின் கூற்று முற்றிலும் உண்மை .. கண்ணபிரான் மீதான காதல் பாலினத்திற்கு அப்பாற்பட்டது...
பரந்தாமனைப் பற்றி தாங்கள் எழுதியதும், எனக்கு நாச்சியார் திருமொழியில் கோதை நாச்சியார் பாஞ்சசன்னியமிடம் முறையிடும் கலிவிருத்தம் நினைவிற்கு வருகிறது ....
கற்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி என் வெண்சங்கே....
நன்றி
ராம் சுதர்சன் .மோ
மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டுக்களையும் நினைவு கூர்ந்து கவியரசரின்
ReplyDeleteபாடலகளைக் கூறியது அருமை.
வணக்கம் குருஜி அவர்களே!.. அருமையானதொரு பதிவு..பாராட்டுகள் பல. இன்னோரு அவதாரம் (கல்கி) எப்போது எடுப்பாரோ?.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHoly morning...Om Namo Narayana...
Thanks & Regards,
Ravi-avn
வணக்கம் குருவே!
ReplyDeleteஇரண்டு தினங்கள் வெளிமாநிலம் சென்றேன், ஆனால் வகுப்பறைக்கு வருகை தர இயலவில்லை, காரணம், நெட்வொர்க் தான்!?
திருமாலின் அருள் பெற்ற கவியரசர், தான் பெற்ற அருள் இன்பத்தை நமக்கெல்லாம் பல புத்தகங்கள் வாயிலாகவும், அமரபாடல்கள் மூலமும்
வெளிப்படுத்தியுள்ளார்.அவரும் அமரகவியானார்.தன் மனக்கண்ணால் அநுபவித்த 'கல்கி' அவதாரம் பற்றியும் எழுதியுள்ள 'மாகவி'!
இடையிடையே, தாங்கள் அம்மாபெரும் மனிதரை நினைவு கூர்வதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி, ஐயா!!
வணக்கம் ஐயா.திருமால் பெருமை மிகவும் அருமை. நன்றி.
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteலக்ஸ்மி நாராயண நாராயண நாராயன
/////Blogger M RAMSUDARSAN said...
ReplyDeleteவாத்தியார் அவர்கட்கு ,
எனது மரியாதைகள்.
பாரதியின் கூற்று முற்றிலும் உண்மை .. கண்ணபிரான் மீதான காதல் பாலினத்திற்கு அப்பாற்பட்டது...
பரந்தாமனைப் பற்றி தாங்கள் எழுதியதும், எனக்கு நாச்சியார் திருமொழியில் கோதை நாச்சியார் பாஞ்சசன்னியமிடம் முறையிடும் கலிவிருத்தம் நினைவிற்கு வருகிறது ....
கற்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி என் வெண்சங்கே....
நன்றி
ராம் சுதர்சன் .மோ /////
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டுக்களையும் நினைவு கூர்ந்து கவியரசரின்
பாடலகளைக் கூறியது அருமை.///////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்1
//////Blogger C.P. Venkat said...
ReplyDeleteவணக்கம் குருஜி அவர்களே!.. அருமையானதொரு பதிவு..பாராட்டுகள் பல. இன்னோரு அவதாரம் (கல்கி) எப்போது எடுப்பாரோ?./////
பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் அவதாரம் எடுப்பார்!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Holy morning...Om Namo Narayana...
Thanks & Regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
இரண்டு தினங்கள் வெளிமாநிலம் சென்றேன், ஆனால் வகுப்பறைக்கு வருகை தர இயலவில்லை, காரணம், நெட்வொர்க் தான்!?
திருமாலின் அருள் பெற்ற கவியரசர், தான் பெற்ற அருள் இன்பத்தை நமக்கெல்லாம் பல புத்தகங்கள் வாயிலாகவும், அமரபாடல்கள் மூலமும்
வெளிப்படுத்தியுள்ளார்.அவரும் அமரகவியானார்.தன் மனக்கண்ணால் அநுபவித்த 'கல்கி' அவதாரம் பற்றியும் எழுதியுள்ள 'மாகவி'!
இடையிடையே, தாங்கள் அம்மாபெரும் மனிதரை நினைவு கூர்வதற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி, ஐயா!!/////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா.திருமால் பெருமை மிகவும் அருமை. நன்றி.//////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger siva kumar said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா
லக்ஸ்மி நாராயண நாராயண நாராயன///////
நல்லது. நன்றி சிவகுமார்!
Vanakkam sir.thanks for the information
ReplyDelete