11.4.16

Astrology Q.No.108 Answer புதிருக்கான விடை!

Astrology Q.No.108 Answer புதிருக்கான விடை!

பங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.

ஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடைக்குமா என்ன?

வாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அதற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.

பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை! அதனால் அப்படி ஏற்பட்டது.

இப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.

சொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.

ஒரு ஜாதகத்தை வைத்து அலசுங்கள் என்று சொல்லியிருந்தேன். அது முன்பே 4 ஆண்டுகளுக்கு முன்பு அலசிய ஜாதகம்தான். 4 ஆண்டுகளுக்குள் நிறைய புது முகங்கள் வந்துள்ளதால் அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக மீண்டும் வலை ஏற்றினேன். முன்பே படித்துள்ளதை நினைவு படுத்தி சிலர் சரியாக பதில் எழுதியுள்ளார்கள். அவர்களுடைய நினைவாற்றல் வாழ்க!

போட்டியில் மொத்தம் 29 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
அவர்களில் 5 பேர்கள் சரியான விடையாக 2 கேள்விகளுக்கும் பதில் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு ஸ்டார் போட்டுக் குறிப்பிட்டுள்ளேன்
24 பேர்கள் பாதி விடையைச் சரியாகச் சொல்லியுள்ளார்கள். ஆனால் பணத்தை இழந்த தசாபுத்தியைக் குறிப்பிடுவதில் தவறு செய்துள்ளார்கள்
அவர்களுக்கும் பாஸ் மார்க் போட்டு பதிவில் ஏற்றியுள்ளேன்
அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள்!
-------------------------------------------------------------
சரியான விடை:

ஜாதகத்தைப் பாருங்கள்!



மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.

பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும், தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி

இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.

அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும்.
அப்படியே அந்த தசையில் பணம் போய் விட்டது!

அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.

உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
/////Blogger slmsanuma said...
முதல் நாள் பங்கு சந்தை பற்றிய சிறுகதை
அடுத்த நாள் பங்கு சந்தை பற்றிய புதிர்
முன்னோட்டம் அற்புதம் ஐயா
ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்!!!!
ஜாதகத்தை அலசிய ஐயாவின் வார்த்தைகள் அப்படியே !!!!!!
///மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.
பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம்.
ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.
அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதக்த்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம். உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்! ////
ஐயா நாங்கள் உங்களின் சீடர்கள் மற்றும் உங்களின் பயற்சி அப்படி
லக்கினாதிபதி வேறு 12ம் இடத்தில !!!!பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம்!!!
சந்தானம் சேலம்
Friday, April 08, 2016 6:47:00 AM//////
----------------------------------------------
2
/////Blogger KJ said...
Sir,
Lagnathypathy in 12th house. Kaaragar Guru also in 12.
Kethu sits in Second house with Lagnathypathy Sevvai. So every aspect regarding Money is affected here.. Dhana athipathy and Labathypathy, second house affected is reason.
Thanks
Sathishkumar GS
Friday, April 08, 2016 8:37:00 AM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதை நீங்கள் சொல்லவில்லையே!
----------------------------------------------------------
3
Blogger KARTHIKEYAN V K said...
1.12 m idathil maraintha dhana sthanathipathi sanipagavan
2.12m idathil maraintha danakaragan Gurupagavan
3.Neecham petra pagyathipathi puthan
4 lagnathipathi mattrum virayathipathiyin 12 m ida serkkai
5.10m veetirkku subar parvai illathathum 8m veetukkaran Suriyanudaya parvaium
II
Suriya dasa chevvai pukthiil jathakar panathai ezhanthiruuppar
Friday, April 08, 2016 10:25:00 AM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
----------------------------------------------------------
4
//////Blogger Sudharsan Dhamu said...
வாத்தியாருக்கு வணக்கம்,
1. லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதி சனி 12ல் விரைய ஸ்தானத்தில் உள்ளார். அம்சதிலும் சனி மாந்தியுடன் உள்ளார். பங்கு சந்தைக்கு 11ஆம் இடமான லாபஸ்தான அதிபதி செவ்வாய் மாந்தி மற்றும் கேதுவுடன் இரண்டாம் வீட்டில் உள்ளார். 9ஆம் வீட்டு அதிபதி புதன் 3ல் நீசமாகிவுள்ளார். 10ஆம் அதிபதி சுக்கிரன் அம்சத்தில் சனி, மாந்தியுடன். ஆதலால் ஜாதகருக்கு பங்கு சந்தை கைக்கொடுக்கவில்லை.
2. 2ஆம் வீட்டில் உள்ள கேது தசை, 12ஆம் அதிபதி குரு புக்தியில் தன்னுடைய 27ஆவது வயதில் பணயிழப்பு ஏற்பட்டிருக்கும்.
பழைய பாடங்களில் உள்ள half quiz பகுதி அருமை. அதையும் தொடருமாரு வேண்டிகொள்கிறேன் ஐயா.
Friday, April 08, 2016 11:19:00 AM ///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------------
5
///////Blogger kmr.krishnan said...
1.தனஸ்தானதிபதி (2க்கு உரிய )சனைச்சரன் 12ல் மறைவு.
தன காரகன் குருவும் 12ல் மறைவு.விரைய ஸ்தானத்தில் இருவரும் இருப்பதால் ஸ்பெசுலேஷன் துறை இவருக்கு ஆகாது.
தன ஸ்தானத்தில் கேது.
யோகாதிபதி சுக்ரன் மூன்றில் உச்சம் என்றாலும், அவருக்கு அது மறைவு வீடு.
இவை ஜாதகரை பங்குச்சந்தையில் வெற்றி பெறமல் செய்த காரணங்கள்.
2. சந்திரன் நீச்சம் என்பதால் அந்த தசாவில் நஷ்டம் அடைந்து இருப்பார்.சந்திர தசா சனி புக்தியில் அதல் பாதாளத்திற்குச் சென்று இருப்பார்.சுக்கிரதசாவில் சம்பாதித்ததை சூரியதசாவில் துவங்கி,சந்திர தசாவில் இழந்திருப்பார்.
முன்னரே பார்த்த ஜாதகமோ என்ற சந்தேகம் தோன்றியது.
Friday, April 08, 2016 1:03:00 PM ///////

உங்களின் நினைவாற்றல் வாழ்க!
------------------------------------------------
6
Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 15 - 04 – 1960
1. பங்குச் சந்தை, ஜாதககப்படி, ஜாதகருக்கு ஏன் ஒத்துவரவில்லை?
பங்குச் சந்தைக்குரிய (வியாபாரத்திற்குரிய) கிரகமான புதன் நீச்சம்
லக்னாதிபதி & தனஸ்தான அதிபதி சனி விரயஸ்தானதில்
லக்னாதிபதி & தனஸ்தான அதிபதி சனியின் சுயவர்க பரல்கள் : 2
பத்தாம் வீடு அதிபதி சுக்கிரன் பாப கர்த்தாரியில்
நவாம்சத்தில் பத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் சனி & மாந்தி
லக்னம் பாப கர்த்தாரியில்
தனஸ்தானத்தில் கேது
தனஸ்தானத்தில் மாந்தி
சனியின் பார்வையில் தனஸ்தானம்
விரயஸ்தான அதிபதி நவாம்சத்தில் உச்சம்
லாபஸ்தானத்தில் நீச்ச கிரகம்
லாபஸ்தான அதிபதி செவ்வாயின் சுயவர்க பரல்கள் : 3
தனகாரன் குரு 12ல் மறைவு
பத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரன், தனது வீட்டில் இருந்து ஆறாம் வீடான மூன்றில் அமர்வு
பத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் நீச்ச புதன்
எட்டாம் வீட்டு அதிபதி சூரியனின் பார்வையில் பத்தாம் வீடு (எட்டாம் அதிபதி உச்சம் & வர்கோதமம்)
2. எந்த மகா திசை, எந்த புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்தார்? அதற்கான காரணம் என்ன?
சுக்கிரன் திசை சனி புத்தியில் ஜாதகர் பணத்தை இழந்தார்
பத்தாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தாலும், பாப கர்த்தாரியில் சிக்கி கொண்டார். அவர் திசையில் சனியின் புத்தியில் (சனி லக்னாதிபதி + தனஸ்தான அதிபதி. அவர் விரயஸ்தானதில் மறைந்ததால் அவர் புத்தியில் பணத்தை இழந்தார்)
Friday, April 08, 2016 1:30:00 PM/////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------------
7
Blogger Narayanan V said...
V. நாராயணன்
புதுச்சேரி
புதிர் 108 பதில்
ஜாதகத்தில் உள்ள பாதகமான விஷயங்கள்
1) லக்னாபதி விரய ஸ்தானத்தில் அதுவும் விரயாதிபதியுடன் கூட்டு
2) 2ம் இட்த்தில் வர்க்கோத்தம் பெற்ற 4/11 அதிபதி ஆனால் கேது,மாந்தி சேர்க்கை
3) 11ல் நீச சந்திரன்
4) தனக்காரகன் விரயாதிபதி ஆனாதும், நவாம்சத்தில் உச்சம் பெற்றதும்
5) 3ம் இட்த்தில் நீசபங்கராஜயோகம், இருந்தினால், பணவரவுக்கு உதவவில்லை
கேது தசையில், சனி புக்தியில் போண்டியாக்கிருக்கும்
Friday, April 08, 2016 3:00:00 PM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
------------------------------------------------
8
Blogger Srinivasa Rajulu.M said...
1) பங்குச் சந்தை ஒத்துவர 2,10,11 ஆகிய இடங்களுடன், லக்னம் மற்றும் 5,9 வலுவாக இருக்க வேண்டும். லக்னம் கத்தரி அவயோகத்தில் மாட்டிக் கொண்டது. லக்னாதிபன் 12-ல் மறைவு.
ஜாதகருக்கு இரண்டாம் இடமும் சுத்தமாக கெட்டுவிட்டது. பாபியான செவ்வாயுடன் மாந்தி மற்றும் கேது கூட்டு. அந்தக் கூட்டணியை சனைஸ்சரன் வேறு பார்க்கிறார். இது "ஓட்டை அண்டா யோகம்".
2) தன காரகன் குரு மற்றும் தன ஸ்தானாதிபதி சனி 12-ல் மறைவு
3) யோக காரகன் சுக்கிரன் உச்சனானாலும், ஆறாம் அதிபனான நீச்ச புதனுடன் சேர்ந்து மூன்றாம் இடத்தில் மறைந்ததால் - 30 வயதில் ஆரம்பித்து 50-வயதில் முடிந்த சுக்கிர தசையில் பங்குச் சந்தையில் பணம் இழக்க நேரிட்டது!
4) 11-ல் நீச்சனான சந்திரன்.
5) 5,9 ஆம் இடங்களை நோக்கும் செவ்வாய்! 5-ஆம் இடத்தைப் பார்க்கும் நீச்ச (தேய்பிறை) சந்திரன்.
6) எட்டாம் அதிபதி சூரியன் உச்ச பலத்துடன் 10-ஆம் இடத்தைப் பார்ப்பது!
இவை போன்ற கெட்ட அமைப்புகள் (இரண்டு கிரகங்கள் உச்சம் மற்றும் இரண்டு நீச்சம் ஆக இருந்தும்) ஜாதகருக்கு பங்குச்சந்தை இழப்பை கொடுத்தன!
Friday, April 08, 2016 3:12:00 PM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
------------------------------------------------
9
Blogger venkatesh r said...
அய்யா வணக்கம்,
இந்த ஜாதகம் ஏற்கனவே 19.12.12 அன்று "அந்த பக்கம் தலை வைத்து படுக்காதே" என்று தாங்கள் எச்சரித்து பதிவிட்டது. அதற்கான சுட்டி இதோ! http://classroom2007.blogspot.in/2012/12/astrology_19.html
(QUOTE)வாத்தியாரின் அலசல்.
மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.
பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி!
இந்த ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.
அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(UNQUOTE)
இரண்டாம் கேள்விக்கான விடை.
ஜாதகருக்கு அஷ்டம சனி 2008ல், சுக்கிர தசை புதன் புத்தி நடைபெற்ற போது பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியில் தன் முதலீட்டு பணத்தை இழந்தார்.
வெங்கடேசன்.
Friday, April 08, 2016 4:13:00 PM///////

உங்களின் நினைவாற்றல் வாழ்க!
-----------------------------------------
10
////Blogger sundar said...
1.lagna,2nd lord saturn has joined with 3,12th lord guru and standing in 12thplace.morever
11th lord Mars has joined with kethu and manthi and sitting in 2nd place.So there is no
chance of getting more money.and his life will be keep on spend for others welfare not his welfare.Since 7th lord is Responsible for Share market related things but 7th lord is neecham
so sharemarket won't help him.
2.When surya disa ,chandra bhuthi came in the age 51-52 he will encounter huge loss.since
surya is 8th lord and moon is 7th lord which is neecham and also chandran is seated at 8th position to surya
Friday, April 08, 2016 6:11:00 PM /////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------------------
11
//////Blogger Radha Sridhar said...
குரு வணக்கம்.
12ம் இடத்தில் , 1,2 கு அதிபதி சனீஸ்வரர் 12ம் அதிபதியோடு கூட்டணி.
10ம் அதிபதி 3ல் மறைவு. பங்கு சந்தை வெற்றி பெறுவது கஷ்டம்.
7ம் அதிபதி, லாப ஸ்தானமான 11ல் நீசம்
தன ஸ்தானம், 2ம் இடம், கேது, மாந்தி அமர்ந்து தோஷம்
சுக ஸ்தானத்தில், அஷ்டமதிபதி உச்சம்.
அன்புடன்,
ராதா
Friday, April 08, 2016 9:16:00 PM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதைச் சொல்லவில்லை!
--------------------------------------------------------
12
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
புதிர்
108 க்கு பதில்.
லக்கினாதிபதி விரையத்தில் உள்ளார். லக்கினம் பாபகர்த்தாரி யில் உள்ளது.
போராட்டமான வாழ்க்கை.
தனஸ்தானம் 2ஆம் அதிபதி 12ல் விரையத்தில் உள்ளார்
2ஆம் இடத்தில் மாந்தி,கேது,செவ்வாய் சேர்க்கை
கையில் காசு தங்காது
11ஆம் அதிபதி உடன் கேது கூட்டணி
பண இழப்புவரும்
கேது தசா சனி புக்தியில் அது நடந்தது.
நன்றி ஐயா.
கண்ணன்
Saturday, April 09, 2016 5:50:00 AM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
------------------------------------------------------
13
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ 108 வணக்கம்
15ம் தேதி ஏப்ரல் 1960 நேரம் : 02:30:28 காலை வெள்ளி கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார். (எடுத்துக்கொண்ட இடம்: சென்னை )
1. பங்கு சந்தை ஜாதகருக்கு ஏன் ஒத்து வரவில்லை .
பதில் : லக்கினம் (4 பரல்) (பாப கர்த்தாரி தோஷம்) லக்கினாதிபதி 12ம் வீட்டு விரயத்தில் சனி (2 பரல்) 11ம் வீட்டில் வந்து அமர்ந்த கிரகம் சந்திரன் (5 பரல்) நீசம். 11ம் வீட்டு அதிபதி செவ்வாய் (3 பரல்) தீய கிரகத்துடன் 2ல் கூட்டு இவைகள் எல்லாம் பலவீனமாக ஓன்று சேர்ந்து இருப்பதால் பங்கு சந்தை ஒத்து வராது.
2. எந்த மாக தசை எந்த புக்தியில் பணத்தை இழந்தார்?
பதில் : சுக்கிர தசை புதன் புக்தி 07-05-2006 முதல் 07-03-2009 வரை அந்த காலத்தில். புதன் 6ம் வீட்டு அதிபதிஉடன் சுக்கிரன் கூட்டு அதலால் பணத்ததை இழந்தார். (47 வயதில்).
சூரிய மகா தசையில் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. 5ம் வீட்டில் மேஷ ராசியில் சூரியன் உச்சம். நவாம்சத்திலும் மேஷ ராசியில் சூரியன் உச்சம். ஆகையால் வர்கோத்தமம் . மேலும் குருவின் 5ம் பார்வை சூரியன் மீது இருப்பதால் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. சூரிய மகா தசை 50 வயதில் 07-05-2010 முதல் 07-05-2016 வரை.
30 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் . 07-05-1990 முதல் 07-05-2010 வரை அந்த காலகட்டத்தில். சுக்கிர தசை சனி புக்தியில் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. காரணம் மகர லக்கினத்திற்கு ராஜ யோகத்தை கொடுப்பவர்கள் சனியும் சுக்கிரனும். நவாம்சத்தில் சுக்கிரனும் சனியும் 11ம் வீட்டில் கூட்டு.
3. காரணம் என்ன ?
மகர லக்கினம் . லக்கினாதிபதி சனி லக்கினத்திற்கு 12ல் விரய ஸ்தானத்தில் லக்கினம் பாப கர்த்தாரி யோகம் (ஒரு பக்கம் சனி மறு பக்கம் செவ்வாய் கேது) - எப்பொழுதும் மன அழுத்தம் இருக்கும் . விபத்து நேரிடும்.
11ம்வீடு விருச்சிக ராசி லாபாதிபதி ஆவார். 11ம் வீட்டில் வந்து அமரும் கிரகம் நீசமாகி இருந்தால் ஜாதகன் குடும்ப சொத்துக்களை இழப்பார். இந்த ஜாதகத்தில் 11ல் சந்திரன் நீசம்.
சந்திரன் நீசம் அடைந்தால் எப்பொழுதும் அமைதியற்ற மனநிலை எற்படும். மன வருத்தும் இருக்கும்.
2ல் மாந்தி இருப்பதால் வறுமையில் வாட நேரிடும். தீய கிரங்கள் கூட இருந்தால் செல்வம் இருக்காது. சொத்துக்கள் கரைந்துவிடும் .
2ல் செவ்வாயும் கேதுவும் சேர்ந்து இருப்பதால் சொத்துக்கள் தீய வழிகளில் கரையும்.
3ம் வீடு 11ம் வீட்டிலிருந்து 5ம் வீடு. 3ல் சுக்கிரன் இருப்பது நல்லதல்ல. கொடுக்கல் வாங்கல் பண விகாரங்கள் சுமுகமாக இருக்காது . சிக்கல் ஏற்படும்.
6ம் வீட்டு அதிபதி புதன் 3ல் இருப்பதால் பண இழப்புகள் எற்படும்.
8ல் ராகு இருப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும்.
Saturday, April 09, 2016 8:18:00 AM ///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
14
Blogger SSS CONSTRUCTION said...
SIR, 1. THE LAGNA LORD IS IN 12TTH PLACE WITH 12TH LORD
2 THANA STHANAM IS AFFECTED BY TWO MALEFICS AND SECOND LORD IS IN 12 PLACE WITH 12TH LORD
3. SPECULATIION BUSINESS THE 5TH PLACE AND THE 5TH LORD IS IN 3RD PAACE WTH SIX LORD BUDHA AND THE 12TH LORRD ASPPECT THEE 5H LORD VENUS
4.. IIN CHANDRAN LAGNA THE 5TH PLLACE OCCUPIED BY 8TH AND 12TH LORD
5. IN KETHU DASA HE LOST HIS MONEY IN SHARE BUSINESS..
Saturday, April 09, 2016 9:33:00 AM/////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------------------
15
************Blogger adithan said...
வணக்கம் ஐயா,4ல் எட்டாம் அதிபதி சூரியன் வர்கோத்தமம்.நன்கு படித்தவர் தாய் தந்தை சொத்தும் கிடைக்க பெற்றவர்.கல்விக்காரகன் புதன் நீசபங்கம்.குறைவில்லாத கல்வி.10ம் அதிபதி சுக் 3ல் உச்சம்.கை நிறைய சம்பளம்.எல்லாம் இருந்தும் 2ம் மற்றும்,லக்னாதிபதி விரையத்தில்.விரையத்திற்க்கான நேரம் வரவில்லை.11ம் அதிபதி செவ்,2ல் உடன் கேது, சனி
பார்வையுடன்.சனி சொந்த வீட்டை பார்ப்பதாலும்,அவர் லக்னாதிபதியானதாலும்,2ம் வீட்டில் உள்ள கிரகங்களால் விரயம் இல்லை.யார்தான் அந்த வில்லன்.நிச்சயம் 11ல் அமர்ந்த 7ம் அதிபதி நீச்ச சந்திரனே.முதல் தசை சனி-இளம்பிராயம்.2ம்தசை புதன் -படிப்பு,வேலை.3ம் தசை -கேது-பாண்டித்தியம்.4,5ம் தசை சுக்,சூரி-வரவு என்று போன வாழ்க்கை சந்திர தசையில் விரையத்திற்க்கு வித்திட்டு லாபஸ்தானம் என்ற 11ம் இடம் கெட்டதால் விதி எப்படி விளையாடியது என்று உணர்த்தியது.நன்றி.
Saturday, April 09, 2016 9:54:00 AM /////
-------------------------------------------
16
***********Blogger daya nidhi said...
<<< லக்னாதிபதி யும் ,தனதிபதியுமான சனி ஆட்சி பெற்ற விரயாதிபதி குருவுடன் சேர்க்கை >>>>..
<<< தன காரகன் குரு அம்சத்தில் நீசம் >>
<<<7 க்குரிய சந்திரன் பாதகஸ்தானத்தில் நீசம் >>
<<< பாதகதிபதி செவ்வாய் வர்கோதமம் பெற்று வலுவடைந்தது >>
<<< தன ஸ்தானத்தில் பதகாதி சேவையுடன் கேது சேர்கை >>
<< இரண்டு மற்றும் ஏழாம் இடங்கள் பாதிப்படைந்ததால் பங்கு
சந்தை ஒத்து வரவில்லை >>
2
<< 8 க்குரிய சூரிய தசாவில் .நீசம் பெற்ற சந்திரன் புத்தியில்
பண இழப்பு >>
நன்றி , சு . தயாநிதி , அவியனுர்.
Saturday, April 09, 2016 11:00:00 AM///////
--------------------------------------------------------
17
Blogger asbvsri said...
Quiz no: 108 Answer:
Dear Sir,
Person born on 15th April 1960. Makara lagnam. Lagnathipathi Sani in 12th house with Guru in Thanuzu. In 2nd house Sevvai (Varkothamam) with Kethu and Mahdi. In 11th house Chandran Needham. In 4th house Supriya Ucham and Varkothamam. Owner of 12th house Guru (Dhanakarakan) in 12th but Ucham in Navamsam.. Owner of 6th and 9th house Budan Needham. Since Budan is Needham he won’t be successful in share market. But Budan is Neecha bangam but won’t help. Yogathipathi Sukran Ucham.
Sukran, Supriya and Guru Ucham. Budan Neecha bangam. Chandran Neecham. The person has earned a lot during Sukra dasa from 1991 to 2010 as he is yogathipathi.
After Sukra dasa at the age of 51 Suriya dasa started and he started loosing heavily since Suriyan is the lord of 8th house and also he is Ucham. During Surya dasa Chandra bukthi as Chandran is neecham he should have lost heavily in the share market.
Best regards,
K R Ananthakrishnan
Chennai
Saturday, April 09, 2016 12:09:00 PM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------------
18
//////Blogger seenivasan said...
Dear sir,
During Kethu dasa he must have lost his money due to the following reasons
1. Second place for wealth and there are three villans kethu,Mars and Mandhi in that place . Kethu is meant for lottery ,suthu & vathu hence his period made him to loose all his fortunes
2.Second place lord Saturn who is also lagna lord and placed in 12 th house along with 12 th house lord from lagnam-this is not beneficial point.
Saturday, April 09, 2016 12:16:00 PM////////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
----------------------------------------------------------
19
//////Blogger amuthavel murugesan said...
ஜோதிட புதிர் 108 பதில்:
வணக்கம் ஐயா,
இவர் 15.04.1960ல் பிறந்து இருக்க வேண்டும்
1. லக்னாதிபதி விரயச்சானத்தில் விரயாதிபதி குருவுடன்.
2. 11ல் நீச்ச சந்திரன் 2 ல் செவ்வாய் மற்றும் கேது
3. லக்னம் சனி மற்றும் செவ்வாய்,கேதுவால் சுழப்பட்டு உள்ளது.
4. 50 வயதிற்கு மேல் சுரியன் மகாதிசையில் சந்திர புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்து இருப்பார்.
மு.சாந்தி
Saturday, April 09, 2016 1:37:00 PM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------
20
////////Blogger sriram1114 said...
வணக்கம் ஐயா
ஜாதகர் 15 ஏப்ரல் 1960,2:30AM பிறந்தவர்.
1.லக்னாதிபதி மற்றும் தனாதிபதி சனி 12ல் மறைவு மற்றும் 12ஆம் அதிபதியுடன்
2.வர்த்தககாரகர் குரு 12ல்
3.தனஸ்தானம் 27 பரல் மற்றும் சனி 2 பரல் மட்டும்
4.2ஆம் வீட்டில் லாபாதிபதி செவ்வாய் ஆனால் பகை வீட்டில் வலுவிழந்து கேது மற்றும் மாந்தியுடன்
5.7ஆம் வீட்டவர் வியாபாரத்திற்கு உரியவர் சந்திரன் ராசியில் நீச்சம்.
கேது தசை சந்திர புக்தியில் பங்குச்
சந்தையில் பணத்தை இழந்திருக்கலாம்.
நன்றி
ஸ்ரீராம்
Sunday, April 10, 2016 1:23:00 AM //////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------
21
////////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for Quiz No. 108:
Reason for Question No.1:
i) Lagna lord is in twelfth house as well as alongwith twelfth lord. This is first and foremost reason for business is not suitable for him. (even speculation business).
ii) Tenth lord is in 6th house from its own house.(6/8 position)
iii) Lagna lord is alongwith house of loss (12th house) (here 12th lord also as dhana karaga) lord. Job is suitable for him. 2nd house also affected.
Reason for Question No.2:
i) In Sun dasa, Guru, Rahu and Sani bhutis he incurred heavy loss in speculation business.
With kind regards,
Ravichandran-avn
Sunday, April 10, 2016 1:58:00 AM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
22
/////Blogger Kumanan Samidurai said...
அய்யா வணக்கம்
1. குரு மற்றும் சனி 12ல் இருந்து ஷேர் மார்க்கெட் பெரிதாக சம்பாதிக்க முடியலை புதன் நீசம் ஆகையாலும்
சம்பாதிக்க முடியலை
2. சூரிய தசையால் நஷ்டம். சூரியன் 8ஆம் வீடு தசை அங்கு ராகு உள்ளார் ஆகயால்சூரிய தசை ராகு புத்தியால் நஷ்டம்
அன்புடன் சா.குமணன்.
Sunday, April 10, 2016 12:48:00 PM /////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
23
//////Blogger bala said...
Vanakkam Iyya,
Magara lagna kaarar.
Lagnathipathi + 2 aam idathu athipathi - Saneeswaran - Langathirku 12il (Viraya sthanathil) + Viraya sthana athipathi Guru vudan Kootani. Viraya sthanathipathi Guru aatchi balathudan.
2 il - Sevvai(Villan - Magara lagnathirku - 11 aam athipathi/Paathagathipathi) + Kethu+ Maandi
11il - Chandran neecham (Thei pirai chandran - 7aam idathu athipathium kooda)
1. Pangu chandai tholvi
Suya thozhil, pangu chandai - Ivaigaluku - Lagnathipathi+2aam idathuathipathi+10aam athipathi+11aam athipathi nandraga iruka vendum.
Intha jaathagathil - 10 aam ida athipathi matum ucham petrullar. Matra anaivarum baathipathu adainthu ullanar.
Saneeswaran (1&2 aam idam athipathi) - Virayathi pathi kootal ketttu ullar + 11aam athipathi sevvai kethu udan kootal ketttu ullar
Ivai anaithum sernthu avarku pangu chandayil tholviyai thandhathu
2. Kethu dasai - Guru/Sani buthiyil Jaathagar panathai izhandhar. Saneeswaran paarvai 2aam idathiruku irundhalum Guru vudan sernthu sella kaasaga aagivitar. Lagnathipathium, virayathipathium sernthal vaazhakai avanuku alla, vazhakai poratamaga irukum.
Nandri,
Bala
Sunday, April 10, 2016 2:24:00 PM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------
24
/////Blogger JAWAHAR P said...
குரு வணக்கம்
பங்கு வர்தகத்திற்க்கு குரு, ராகு
2ம் இடத்து சனி குருவுடன் 12ல், ராகு 8ல்
மற்றும் 2ல் கேது
குரு, ராகு தசா மற்றும் புத்தி நடக்கும் போது தன்னிடம் இருப்பதை
பங்கு வர்தகத்தில் இழப்பார்
நன்றி
ப.ஜவஹர்
Sunday, April 10, 2016 10:48:00 PM/////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------------------------
25
Blogger mohan said...
ஆசிரியர் ஐயா வணக்கம்.
சிறு மாணவன் நான், ஆசையினால் பதில் அளிக்கின்றேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
புதிர் 108க்கான் பதில்:
பிறந்த தேதி: 15.4.1960,
நேரம்: 2.30 அதிகாலை
லக்னம்: மகரம்
ராசி: விருச்சிகம் மேலும் சந்திரன் நீசம்.
லக்னாதிபதி சனி 12ல் மறைவு.
குரு ஆட்சி வீட்டில் இருந்தாலும் 12ல் மறைவு.
சூரியன்: உச்சம்.
சுக்கிரன் உச்சத்தில் இருந்தாலும் நீசப் புதனுடன் கிரக யுத்தம். அதாவது புதன்:5.06 பகை, சுக்கிரன்: 13.23 பாகை. மேலும் 3ல் மறைவு.
பாபகர்தாரி யோகம்.
செவ்வாயும் சூரியனும் வர்க்கோத்தம் பெற்றுள்ளது.
10க்குரிய தொழில்பாக அதிபதி சுக்கிரன் 3ல் மறைவு அதனால் பங்குச்சந்தை ஒத்துப்போகவில்லை.
சுக்கிர தசை புதன் புத்தியில் சிரமப்பட்டிருப்பார்
நன்றி ஐயா.
அன்பன்
ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி
Monday, April 11, 2016 1:32:00 AM /////////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. அருமையான விளக்கம் வாத்தியாரே...

    திரு. adithan, திரு. daya nidhi மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    நன்றி.



    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  2. ஆசிரியர் ஐயா வணக்கம்.
    புதிர் 108 க்கான விடையை இரவு 1.30 மணிக்கு எழுதினேன். காலை 6.30 மணிக்கு உங்கள் பதிலும், கூடவே எனது பதிவும் வந்திருந்ததைப்பார்க்கும் போது மிக மகிழ்வு கொண்டேன். நன்றி ஐயா.

    எனக்கு ஒரு சந்தேகம் ஐயா.
    சனி மகா தசை இருப்பு 6 வருடம்
    புதன் மகா தசை 17 வருடம்
    கேது மகா தசை 7 வருடம்
    சுக்கிரன் மகா தசை 20 வருடம்
    சூரியன் மகா தசை 6 வருடம்
    அதற்கு அடுத்து தானே சந்திர மகா தசை வரும்.

    அதாவது சாதகரின் 56 வயதில் தானே சந்திர மகா தசை ஆரம்பிக்கும்.
    அதாவது 8 மே 2016 ல் தானே சந்திர மகா தசை துவங்கும்.

    எனது இலவச சாப்ட்வேர் அப்படித்தான் காட்டுகிறது.

    அப்புறம் எப்படி சாதகர் சந்திர திசையில் பணத்தை இழந்தார்.

    எனக்கு புரியும்படி சொல்லுங்கள் ஐயா.

    என் கேள்வியில் தவறு இருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன்

    அன்பன்
    ந.மோகனசுந்தரம்
    திருநெல்வேலி.

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்
    பாஸ் மார்க் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி ஐயா
    கண்ணன்

    ReplyDelete
  4. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான விளக்கம் வாத்தியாரே...
    திரு. adithan, திரு. daya nidhi மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
    நன்றி.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    உங்களின் வாழ்த்துக்கள் அவர்களை மகிழ்விக்கட்டும்!

    ReplyDelete
  5. //////Blogger mohan said...
    ஆசிரியர் ஐயா வணக்கம்.
    புதிர் 108 க்கான விடையை இரவு 1.30 மணிக்கு எழுதினேன். காலை 6.30 மணிக்கு உங்கள் பதிலும், கூடவே எனது பதிவும் வந்திருந்ததைப்பார்க்கும் போது மிக மகிழ்வு கொண்டேன். நன்றி ஐயா.
    எனக்கு ஒரு சந்தேகம் ஐயா.
    சனி மகா தசை இருப்பு 6 வருடம்
    புதன் மகா தசை 17 வருடம்
    கேது மகா தசை 7 வருடம்
    சுக்கிரன் மகா தசை 20 வருடம்
    சூரியன் மகா தசை 6 வருடம்
    அதற்கு அடுத்து தானே சந்திர மகா தசை வரும்.
    அதாவது சாதகரின் 56 வயதில் தானே சந்திர மகா தசை ஆரம்பிக்கும்.
    அதாவது 8 மே 2016 ல் தானே சந்திர மகா தசை துவங்கும்.
    எனது இலவச சாப்ட்வேர் அப்படித்தான் காட்டுகிறது.
    அப்புறம் எப்படி சாதகர் சந்திர திசையில் பணத்தை இழந்தார்.
    எனக்கு புரியும்படி சொல்லுங்கள் ஐயா.
    என் கேள்வியில் தவறு இருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன்
    அன்பன்
    ந.மோகனசுந்தரம்
    திருநெல்வேலி.//////

    56 வயதில் பங்குச் சந்தையில் பணத்தை இழந்தார் என்பது உண்மை. அந்த வயதில் பணத்தை இழக்கக்கூடாது என்று நியதி ஏதும் இல்லையே சாமி!

    ReplyDelete
  6. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    பாஸ் மார்க் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி ஐயா
    கண்ணன்//////

    இதற்கெல்லாம் நன்றி எதற்கு?

    ReplyDelete
  7. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா//////

    வணக்கம் சிவா!

    ReplyDelete
  8. வணக்கம் திரு.லஷ்மி நாரயண்,எல்லா பெருமையும் வாத்தியார் ஐயாவிற்கே.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com