15.2.16

தேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்?

தேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்?

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பஃபெட்" நமக்கு கூறும் அறிவுரை!
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

அன்புடன்
வாத்தியார்
==========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. வணக்கம் ஐயா
    மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது. உன்மையான வார்த்தை

    ReplyDelete
  2. அய்யா வணக்கம்.

    நல்ல கருத்து .. அவரின் வெற்றி பாதை கருத்து பரிமாற்றத்துக்கு நன்றி.

    அன்புடன் சா. குமணன்.

    ReplyDelete
  3. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தங்கள் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து கொண்டுள்ளது என நம்புகின்றேன். இதுவரையிலும் படித்த பதிவுகளில் எம்மை மிகவும் பாதித்தது, தங்களின் உடல் நலன் பற்றிய பதிவே! தங்கப் பதக்கம் படத்தில் வரும் வசனத்தை ஞாபகப்படுத்திய பதிவு.
    “துன்பப் படுகிறவர்கள் எல்லாரும் தெய்வத்திடம் சென்று முறையிடுவார்கள். ஆனால் அந்த தெய்வமே கலங்கி நின்றால், யாரிடம் சென்று முறையிடுவது?” - வகுப்பறையில் என்னைப் போன்ற மாணவர்கள் தங்கள் துன்பங்களை பின்னூட்டத்தின் மூலம் தங்களின் ஆறுதலைப் பெற்று வந்தோம்! தங்களின் உடல்நலம் மிக விரைவில் குணமடைய பரம் பொருளான இறைவன் என்றென்றும் துண இருக்க மன்றாடி பிரார்த்திக்கின்றோம்!
    சனீஷ்வரரின் போர்டிங் பாஸ் எல்லோருக்கும் உண்டு எனினும், இப்போதைக்கு அனுமதி மறுக்கப் படுகின்றது!!! வையிட் ஃபார் ஸம் மோர் இயர்ஸ் ப்ளீஸ்!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி!
    தவிர்க்க இயலாத சில இக்கட்டுகளால் இன்றுதான் வகுப்பறை பதிவுகள் படிக்க முடிந்தது.

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Hope all is well.

    Time is gold. nice post.

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
    - இதனால் தான் லஞ்சம் வளர்ந்ததா ?
    2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
    - இந்தியா அரசு செய்யும் செலவுகளை பார்க்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது
    3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
    - சேமிப்புக்கும் வரி போடுகிறது அரசு.... தனியார் சீட்டு போட்டால் அவர்கள் தூக்கி கொண்டு போகிறார்கள்... சேமித்து இழப்பதை விட செலவழித்து மகிழலாமே

    ReplyDelete
  6. சிட்டுப் பருவத்தில்
    சிறகடித்து
    நண்பர்களோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...

    பதின்ம பருவத்தில்
    படி படி படி
    அதுவே முன்னேற்றத்தின் முதற்படி...

    வாலிப பருவத்தில்
    தேடு தேடு தேடு
    நாட்டமுள்ள தொழில், வேலையினை நாடு...

    நாடியபின்
    உனக்கேற்ற துணை தேடு...

    நடுத்தர பருவத்தில்
    சிக்கனமாய் செலவு செய்
    சேமிப்பும் வேண்டும் உனக்கு...

    முதுமைப் பருவத்தில்
    இறை நாடு
    இளஞ்சிறார்களோடு (பேரன் பேத்தி)
    இளமையாக விளையாடு...

    இவையெல்லாம் கிட்டிட்டால்
    நீதான்
    மாபெரும் கோடீஸ்வரன்...

    ReplyDelete
  7. /////Blogger Prasanna Venkatesh said...
    அருமை.......////

    நல்லது. நன்றி பிரசன்னா!

    ReplyDelete
  8. /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது. உன்மையான வார்த்தை////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  9. ////Blogger Kumanan Samidurai said...
    அய்யா வணக்கம்.
    நல்ல கருத்து .. அவரின் வெற்றி பாதை கருத்து பரிமாற்றத்துக்கு நன்றி.
    அன்புடன் சா. குமணன்./////

    நல்லது. நன்றி குமணன்!!

    ReplyDelete
  10. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தங்கள் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து கொண்டுள்ளது என நம்புகின்றேன். இதுவரையிலும் படித்த பதிவுகளில் எம்மை மிகவும் பாதித்தது, தங்களின் உடல் நலன் பற்றிய பதிவே! தங்கப் பதக்கம் படத்தில் வரும் வசனத்தை ஞாபகப்படுத்திய பதிவு.
    “துன்பப் படுகிறவர்கள் எல்லாரும் தெய்வத்திடம் சென்று முறையிடுவார்கள். ஆனால் அந்த தெய்வமே கலங்கி நின்றால், யாரிடம் சென்று முறையிடுவது?” - வகுப்பறையில் என்னைப் போன்ற மாணவர்கள் தங்கள் துன்பங்களை பின்னூட்டத்தின் மூலம் தங்களின் ஆறுதலைப் பெற்று வந்தோம்! தங்களின் உடல்நலம் மிக விரைவில் குணமடைய பரம் பொருளான இறைவன் என்றென்றும் துண இருக்க மன்றாடி பிரார்த்திக்கின்றோம்!
    சனீஷ்வரரின் போர்டிங் பாஸ் எல்லோருக்கும் உண்டு எனினும், இப்போதைக்கு அனுமதி மறுக்கப் படுகின்றது!!! வையிட் ஃபார் ஸம் மோர் இயர்ஸ் ப்ளீஸ்!!!!
    அன்புடன்,
    -பொன்னுசாமி!
    தவிர்க்க இயலாத சில இக்கட்டுகளால் இன்றுதான் வகுப்பறை பதிவுகள் படிக்க முடிந்தது./////

    உங்களின்ம் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி போனுசாமி அண்ணா! நீங்கள் உங்கள் வசதிக்குத்தகுந்தபடி எப்போது வேண்டுமென்றால் பதிவுகளைப் படியுங்கள். படித்தால் போதும்!

    ReplyDelete
  11. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Hope all is well.
    Time is gold. nice post.
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசிக்காரரே!

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    Good advice. Thank you for sharing.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. ///Blogger வேப்பிலை said...
    1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
    - இதனால் தான் லஞ்சம் வளர்ந்ததா ?
    2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
    - இந்தியா அரசு செய்யும் செலவுகளை பார்க்கும் போது இப்படித்தான் தோன்றுகிறது
    3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
    - சேமிப்புக்கும் வரி போடுகிறது அரசு.... தனியார் சீட்டு போட்டால் அவர்கள் தூக்கி கொண்டு போகிறார்கள்... சேமித்து இழப்பதை விட செலவழித்து மகிழலாமே ////

    சேமிப்பு இல்லாமல் இருந்தால், வயதான காலத்தில் யாரை எதிர்பார்த்து வாழ்க்கையை ஓட்டுவது. செலவழிக்கவும் வேண்டும். சேமிப்பும் அவசியம் வேண்டும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  14. ///Blogger A. Anitha said...
    சிட்டுப் பருவத்தில்
    சிறகடித்து
    நண்பர்களோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...
    பதின்ம பருவத்தில்
    படி படி படி
    அதுவே முன்னேற்றத்தின் முதற்படி...
    வாலிப பருவத்தில்
    தேடு தேடு தேடு
    நாட்டமுள்ள தொழில், வேலையினை நாடு...
    நாடியபின்
    உனக்கேற்ற துணை தேடு...
    நடுத்தர பருவத்தில்
    சிக்கனமாய் செலவு செய்
    சேமிப்பும் வேண்டும் உனக்கு...
    முதுமைப் பருவத்தில்
    இறை நாடு
    இளஞ்சிறார்களோடு (பேரன் பேத்தி)
    இளமையாக விளையாடு...
    இவையெல்லாம் கிட்டிட்டால்
    நீதான்
    மாபெரும் கோடீஸ்வரன்.../////

    உண்மைதான் சகோதரி. உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. வணக்கம் குருஜி அவர்களே!. மிகவும் அருமையான கருத்துக்கள்!... வாழ்த்துக்கள் குருஜி!!!.
    நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
    *
    (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

    எல்லா கருத்துக்களும் அருமை. உலகின் மிகப் பெரிய பணக்காரராய் வலம் வருவது எளிதான ஒன்று இல்லை...

    ReplyDelete
  16. ////Blogger C.P. Venkat said...
    வணக்கம் குருஜி அவர்களே!. மிகவும் அருமையான கருத்துக்கள்!... வாழ்த்துக்கள் குருஜி!!!.
    நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....*
    (மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
    எல்லா கருத்துக்களும் அருமை. உலகின் மிகப் பெரிய பணக்காரராய் வலம் வருவது எளிதான ஒன்று இல்லை.../////

    உண்மைதான். இந்த மனப்பாங்கும், அணுகுமுறையும் தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது! நன்றி!

    ReplyDelete
  17. ஐயா, வணக்கம்.கடன் மற்றும் க்ரடிட் கார்ட் பற்றியும் சேர்த்திருந்தால் மேலும் அருமையாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  18. அன்பின் ஐயா,
    நான் தினமும் படிக்கும் தங்கள் ஒவ்வோர் பதிவும் அற்புதம் அடுத்தவர் வாழவேண்டும் என்னும் பொதுநல அற்புத குணமுடைய தங்களை இறைவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் தந்து அருள்புரிய பிரார்த்திக்கிறேன் அன்பின் ஐயா.

    அன்புடன்
    சுந்தரேஸ்வரன்
    லண்டன்
    ============================================================

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com