16.2.16

எப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் இருக்கும்?


எப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் இருக்கும்?

சுவரைத் தட்டுங்கள், கதவு திறக்கும்

இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத் தடுமாறி, நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும், சுவரைத் தட்டிக்கொண்டே நடந்தான், ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது.

சுவரைத் தட்டுங்கள் கதவு திறக்கும்.
நண்பர்களே, என்னவொரு கவித்துவமான தலைப்பு, பார்த்தீர்களா.
   
நல்லவரை கெட்டவர் என்று கணக்கிட்டோ, கெட்டவரை நல்லவர் என்று மதிப்பிட்டோ, மற்றவர்கள் ஏமாந்து போகலாம். நம்மை மதிப்பிடுவதில் நாம் ஒரு நாளும் ஏமாந்து போகக் கூடாது.

வாழ்க்கை என்னும் தேர்வில், உங்களுக்குத் தரப்படுகிற, வினாத் தாளில், ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது .....

நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான். வருபவர்கள் எல்லோரும் துணை செய்தாலும், செய்யாவிட்டாலும், பயணம் உங்களுடையது.

 அவரை மலைபோல் நம்பினேன் கை கழுவி விட்டார். இவரை ஏகத்துக்கும் எதிர்பார்த்தேன், ஏமாற்றி விட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள், தன்னிரக்கத்தைத் தவிர எதையும் தராது.

 உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு, மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவாதவர்கள் பற்றிய சலிப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் பாதை. உங்கள் பயணம். உங்கள் இலக்கு. உங்கள் திட்டம். உலகம் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி எனத் தொடர்ந்தால் வளர்ச்சி.

 இருக்கும் நேரத்தில், இயன்ற உயரங்களை எட்ட முயல்வதே புத்திசாலித்தனம். அதற்கு வேண்டியது, மலையளவு மன உறுதி.
 உங்களை நீங்களே நம்புங்கள், இன்னும் தொடர்ந்து செல்லுங்கள்.

உங்கள் பயணத்தின் ஒரே துணை ............ நீங்கள்தான்.

உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள், உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள்.

உங்களைத் தள்ளிவிட, அவர்கள் செய்த அதிரடி வேலைதான், உங்கள்
தகுதிக் குறைவை, உங்களுக்கே உணர்த்தி இருக்கும். அதைத் திருத்திக் கொள்ளவும் வழி படைக்கும்.

 உங்கள் பலவீனங்களை அறிந்து, பலங்களை உணர்ந்து, இன்னும் வலிவடைய உதவியவரை, வெறுத்து விடாதீர்கள். அதே நேரம், அவரை உங்கள் நண்பராகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

உலகமே உங்கள் பலங்களைப் பாராட்டும் போது, உங்கள் பலவீனங்களைச் சுட்டிக் காட்ட, அவர் அதே நிலையில், உங்கள் வாழ்க்கை முழுவதும் வேண்டும்.

காட்டிக் கொடுத்தவரைக் காப்பாற்றுங்கள்.........

பழகியவர்கள் எதிர்க்கும்போது, பதட்டம் வருவது இயற்கை. ஆனால் அந்தப் பதட்டம்தான் நம்மை வீழ்த்துமே தவிர, அவர்களின் பகைமை நம்மை வீழ்த்தாது.

 நண்பனே பகைவனானால் கூட, நம்மை வீழ்த்தும் வல்லமை அவனுக்கு இல்லை.

 எனவே கும்பிட்ட கைகள், குழி வெட்ட வந்தால், புன்னகையோடு பொறுத்திருங்கள். அவர்கள் வெட்டிய குழியில், உங்கள் அடுத்த வெற்றிக்கான விதைகளைப் போடுங்கள்.

கும்பிட்ட கைகளே, குழி வெட்ட வந்தால் .......

 சாமார்த்தியம் உள்ள மனிதர்கள், சதுரங்க விளையாட்டில் அமரும்போது, பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு, விளையாடுபவர்களுக்கும் விறுவிறுப்பு.

 வாழ்க்கை கூட, ஒவ்வொரு விடியலிலும், உங்களை விளையாட அழைக்கின்றது.

  அந்த அழைப்பை விளையாட்டாய் எதிர்கொள்ளாமல், விருப்பமுடன் எதிர் கொண்டால், வாழ்வின் சுவாரசியத்தை சுவைத்தவர் ஆவீர்கள்.

களம் எத்தனை கடிதாய் இருந்தாலும், கையில் இருக்கும் கருவியை, கையாளத் தெரிந்தவனுக்கு கவலையில்லை.

 வாழ்க்கை முன் வைக்கும் ஒவ்வொரு பேராட்டங்களும், உங்களை, முன்னைவிட, இன்னும் வலிமையாய் செதுக்கித்தரப் போகிறது.

 பேராட்டங்களை, விரும்பி எதிர் கொள்ளுங்கள். அவை சுகமானவை.
சுவாரசியமானவை!
-------------------------------------------------------
2

மருத்துவர் சொல்லி  அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்லி தினமும் கீரை சாப்பிடுகிறீர்களா? அப்ப்டியானால் கீழே உள்ள வீடியோ கிளிப்பிங் உங்களுக்காகத்தான். அவசியம் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19 comments:

  1. ஐயா,

    மிக மிக அருமையான பதிவு இன்றையது. சிலர் தன் பலத்தால் முன்னேறுவர், ஆனால், பலரோ அடுத்தவரின் பலவீனத்தை வைத்து அவரை வீழ்த்தி, அதன் மூலம் தாம் மேலே இருப்பதாக மகிழ்ந்து கொள்வர்! என்ன செய்வது அது மட்டுமே அவர்களின் பலமாக இருக்கிறது! ஆனால், பலமுள்ளவனுக்கு, அந்த வீழ்ச்சியே போதுமானது அவன் அதை விட மேலே போவதற்கு என்பதை, காலம் தான் இந்த மடையர்களுக்கு புரிய வைப்பது. சரி, அவனவன் கீழான தன்மைகளை நினைத்து, நமது காலத்தை வீணடிப்பதிலும், இவர்கள் இப்படித்தான் என்று தெரிந்து, விலத்தி, நமது பிரச்சனைகளில் கவனத்தை செலுத்தினாலே போதுமானது. ஏனையவை தானே நடக்கும்.

    அத்துடன் காணொளி அருமை!
    முன்பு எனதருமை தாயார், சில காய் கறிகளை வாங்குவதோ, சமைப்பதோ கிடையாது.
    ஓரளவு வளர்ந்தபின், அதற்கான காரணத்தை கேட்டபோது தான் விடயம் தெரிந்தது.
    இந்த இந்த காய் கறிகள் வரப்பில் நடுவார்கள். நாய்கள் அங்கு மலசலம் கழிக்கும் என்று.

    ReplyDelete
  2. ஒன்றை அவதானித்தீர்களா? கீரைகளின் செழிப்பை! உங்கள் வீட்டில், என் வீட்டில் வளருமா இப்படி?
    ஆக, சத்துக்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன என்று!

    நாம், நாகரிகம் என்ற பெயரில், கழிவிடங்களை சுகாதார மையங்களாக்கியது தான், விட்ட முதல் பெரும் பிழை போலும்!

    ஆனாலும், அந்த தண்ணியிலேயே அவற்றை கழுவி, நம்மிடமெல்லாம் விற்று விடுகிறார்கள் பாருங்கள்; அது தான் இங்கு ஹை லைட்!

    ReplyDelete
  3. ஆக கீரை சாப்பிடுவதும்
    அந்த போராட்டம் தான் ...

    சதுரங்க காய் தான்
    சாதுர்யமாக அய்யர் profileலில் ..

    ///உங்கள் திட்டம்.
    உலகம் உதவினால் மகிழ்ச்சி.

    இல்லையென்றாலும் முயற்சி என
    இப்படி தொடர்ந்தால் வளர்ச்சி.///

    இது மனதை தொட்ட வரிகள்...

    ReplyDelete
  4. Really energized! i was often feeling that no body is helping us! This article really motivating me to know about me!

    ReplyDelete
  5. நம் வாழ்க்கைப் பயணத்தில் நாமேதான் நமக்குத் துணை என்பதை விட, நமது துணைவன் இறைவன் என்பது மேலும் நம் துணிவை பலப்படுத்தும்.

    கீரை கழுவும் தண்ணீர் சாக்கடைத் தண்ணீர் என்பது அதிர்ச்சிதான்.பாலில் ஊற்றும் தண்ணீரும் இப்படித்தான்.

    ReplyDelete
  6. இறைவனை நம்புங்கள்

    அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்

    உங்களை நோக்கி பத்து அடி நெருங்கி வருவார்...

    இடைவிடாது பிரார்த்தனை செய்யுங்கள்
    அதோடு கூடி முயற்சியும் செய்யுங்கள்

    கண்டிப்பாக கடவுள் அனுக்கிரகம் முழுமையாய் (100 சதவீதம் இல்லை அதுக்கும் மேல)
    உங்களுக்குத் தான்

    வெற்றிகள் எல்லாம் உரித்தாகும்
    உரிய காலத்தில்...

    ReplyDelete
  7. அருமையான பதிவு. வாழ்வில் நிகழும் எதிர்மறையான நபர்களைக்கூட நேர்மறையாக கையாளத் தூண்டும் பதிவு.

    ReplyDelete
  8. ////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா,
    மிக மிக அருமையான பதிவு இன்றையது. சிலர் தன் பலத்தால் முன்னேறுவர், ஆனால், பலரோ அடுத்தவரின் பலவீனத்தை வைத்து அவரை வீழ்த்தி, அதன் மூலம் தாம் மேலே இருப்பதாக மகிழ்ந்து கொள்வர்! என்ன செய்வது அது மட்டுமே அவர்களின் பலமாக இருக்கிறது! ஆனால், பலமுள்ளவனுக்கு, அந்த வீழ்ச்சியே போதுமானது அவன் அதை விட மேலே போவதற்கு என்பதை, காலம் தான் இந்த மடையர்களுக்கு புரிய வைப்பது. சரி, அவனவன் கீழான தன்மைகளை நினைத்து, நமது காலத்தை வீணடிப்பதிலும், இவர்கள் இப்படித்தான் என்று தெரிந்து, விலத்தி, நமது பிரச்சனைகளில் கவனத்தை செலுத்தினாலே போதுமானது. ஏனையவை தானே நடக்கும்.
    அத்துடன் காணொளி அருமை!
    முன்பு எனதருமை தாயார், சில காய்கறிகளை வாங்குவதோ, சமைப்பதோ கிடையாது.
    ஓரளவு வளர்ந்தபின், அதற்கான காரணத்தை கேட்டபோது தான் விடயம் தெரிந்தது.
    இந்த இந்த காய் கறிகள் வரப்பில் நடுவார்கள். நாய்கள் அங்கு மலசலம் கழிக்கும் என்று.///////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. ////Blogger Mrs Anpalagan N said...
    ஒன்றை அவதானித்தீர்களா? கீரைகளின் செழிப்பை! உங்கள் வீட்டில், என் வீட்டில் வளருமா இப்படி?
    ஆக, சத்துக்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன என்று!
    நாம், நாகரிகம் என்ற பெயரில், கழிவிடங்களை சுகாதார மையங்களாக்கியது தான், விட்ட முதல் பெரும் பிழை போலும்!
    ஆனாலும், அந்த தண்ணியிலேயே அவற்றை கழுவி, நம்மிடமெல்லாம் விற்று விடுகிறார்கள் பாருங்கள்; அது தான் இங்கு ஹை லைட்!/////

    இங்கே ஊட்டி, குன்னூர் போன்ற மலைப் பிரதேசங்களில் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் இப்படித்தான் கழுவிப் பிறகு சந்தைகளுக்கு அனுப்புகிறார்கள்!

    ReplyDelete
  10. ///Blogger வேப்பிலை said...
    ஆக கீரை சாப்பிடுவதும்
    அந்த போராட்டம் தான் ...
    சதுரங்ககாய் தான்
    சாதுர்யமாக அய்யர் profileலில் ..
    ///உங்கள் திட்டம்.
    உலகம் உதவினால் மகிழ்ச்சி.
    இல்லையென்றாலும் முயற்சி என
    இப்படி தொடர்ந்தால் வளர்ச்சி.///
    இது மனதை தொட்ட வரிகள்...//////

    அப்பாடா, அந்த வரிகள் உங்கள் மனதைத் தொட்டதில் எனக்கும் மகிழ்ச்சிதான் வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. ////Blogger GAYATHRI said...
    Really energized! i was often feeling that no body is helping us! This article really motivating me to know about me!//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!.

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    நம் வாழ்க்கைப் பயணத்தில் நாமேதான் நமக்குத் துணை என்பதை விட, நமது துணைவன் இறைவன் என்பது மேலும் நம் துணிவை பலப்படுத்தும்.
    கீரை கழுவும் தண்ணீர் சாக்கடைத் தண்ணீர் என்பது அதிர்ச்சிதான்.பாலில் ஊற்றும் தண்ணீரும் இப்படித்தான்.////

    அதோடு மட்டுமா? ஊட்டி, குன்னூர் போன்ற மலைப் பிரதேசங்களில் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் இப்படித்தான் கழுவிப் பிறகு சந்தைகளுக்கு அனுப்புகிறார்கள்! நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. ////Blogger A. Anitha said...
    இறைவனை நம்புங்கள்
    அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்
    உங்களை நோக்கி பத்து அடி நெருங்கி வருவார்...
    இடைவிடாது பிரார்த்தனை செய்யுங்கள்
    அதோடு கூடி முயற்சியும் செய்யுங்கள்
    கண்டிப்பாக கடவுள் அனுக்கிரகம் முழுமையாய் (100 சதவீதம் இல்லை அதுக்கும் மேல)
    உங்களுக்குத் தான்
    வெற்றிகள் எல்லாம் உரித்தாகும்
    உரிய காலத்தில்...////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ///Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவுக்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  15. ////Blogger விசயக்குமார் said...
    அருமையான பதிவு. வாழ்வில் நிகழும் எதிர்மறையான நபர்களைக்கூட நேர்மறையாக கையாளத் தூண்டும் பதிவு/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விசயக்குமார்!.

    ReplyDelete
  16. Dear Sir,
    I have sent you an email to spvrsubbiah@gmail.com . Could you please check when you are able to?
    Thanking you

    Sincerely
    Mrs N Anpalagan

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா.தோல்வியை ,வெற்றிக்கான பாதையாக மாற்ற முயற்சி்க்க வேண்டிய ஆலோசனைகள்.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com