13.2.16

வழிபாடுகளில்தான் எத்தனை விதங்கள்!



வழிபாடுகளில்தான் எத்தனை விதங்கள்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!இந்து மதத்தின் பெருமை!!!!!!

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்.
..
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

இன்னும் நிறையாக உள்ளது பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
--------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===============================================

16 comments:

  1. அருமையான தகவல் ஐயா!

    இன்னும் புதிது புதிதாகக் கடவுள்களை தேவைக்கு ஏற்பப் படைக்கும் உரிமையையும் நமக்கு அளித்துள்ளார்கள் நமது முன்னோர்கள்.

    வழிவிடு முருகன், பாஸ்போர்ட் விநாயகர்,குட்வில் ஆஞ்சனேயர் போன்ற கோவில்களும் முளைத்துவிட்டன.நமது பண்பாட்டின் முக்கியத்துவமே அதன் பன்முகத் தன்மைதான்.இந்த பன்முகத் தன்மைதான் பிறமதங்களையும் இங்கே செழிக்கச் செய்துள்ளது.

    ReplyDelete
  2. உண்மை தான். இந்துக்களாக பிறப்பதற்கும், அதன் அருமைகளை உணர்ந்து வளர்வதற்கும் நாம் கொடுத்து வைத்தவர்களே.

    ReplyDelete
  3. குருஜி அவர்களுக்கு வணக்கம். அருமையானதொரு செய்தி... எங்கள் வாத்தியாருக்கு பாரட்டுகள்! பல. இறைவனை எப்பயெல்லாம் மனிதன் நினைகிறானோ அப்படியே காட்சி தருகிறார் போல. ஒரு பழைய படத்தில் ஒரு காட்சியை பார்த்தேன். ஒரு நாட்டு அரசன் மது போதையில், மாதுவின் மோகத்தில் சிக்கி கொண்டுள்ளான். ஆனால் தினமும் மறவாது இறைவனை மனதார வணங்குகிறான்.சிவனும், பார்வதியும்: தேவி இறைவனிடம் இந்த காமுகனின் பிரார்த்தனையை ஏன் ஏற்கிறிர்கள் என்று கேட்க, இறைவனோ எந்த நிலையிலும் ஒருவன் நம்பிக்கையோடு மனதார பக்தி என்ற நெய் ஊற்றி விளக்கை ஏற்றி வைத்தால் போதும் என்று சொல்வார், மன்னனை ஏற்று அருள்புரிகிறார் இறைவன். அது போல் எத்தனை தெய்வங்கள் இருக்கிறது!. நான் உட்பட மனிதனுக்கு நம்பிக்கைதான் உண்டாவதில்லை.
    நேசமுடன்
    வெங்டேஷ்.சின்னசாமி.

    ReplyDelete
  4. எல்லாத்துக்கும் சரி...
    எங்களை போன்றவர் கேட்பது "சாப்பாட்டிற்கு" யார்?

    தூக்கத்திற்கு யார்?
    துணிந்து சொல்லுங்கள் கம்ப்யூட்டர் ருக்கு யார்?

    ReplyDelete
  5. ///வழிவிடு முருகன், பாஸ்போர்ட் விநாயகர்,குட்வில் ஆஞ்சனேயர் போன்ற கோவில்களும் முளைத்துவிட்டன.////

    யக்கோவா என்ற கடவுள்
    புதிதாக வந்துள்ளார் கிருத்துவத்தில்....

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    அருமையான தகவல் ஐயா!
    இன்னும் புதிது புதிதாகக் கடவுள்களை தேவைக்கு ஏற்பப் படைக்கும் உரிமையையும் நமக்கு அளித்துள்ளார்கள் நமது முன்னோர்கள்.
    வழிவிடு முருகன், பாஸ்போர்ட் விநாயகர்,குட்வில் ஆஞ்சனேயர் போன்ற கோவில்களும் முளைத்துவிட்டன.நமது பண்பாட்டின் முக்கியத்துவமே அதன் பன்முகத் தன்மைதான்.இந்த பன்முகத் தன்மைதான் பிறமதங்களையும் இங்கே செழிக்கச் செய்துள்ளது.//////

    அதே பன்முகத்தன்மைதான் இஸ்லாமியர் ஆட்சிக் காலத்திலும் (குறிப்பாக அக்பர் அவுரங்கசீப் போன்றவர்களின் ஆட்சிக்காலத்திலும்) நம்மைக் காத்தது! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  7. /////Blogger Mrs Anpalagan N said...
    உண்மை தான். இந்துக்களாக பிறப்பதற்கும், அதன் அருமைகளை உணர்ந்து வளர்வதற்கும் நாம் கொடுத்து வைத்தவர்களே./////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger C.P. Venkat said...
    குருஜி அவர்களுக்கு வணக்கம். அருமையானதொரு செய்தி... எங்கள் வாத்தியாருக்கு பாரட்டுகள்! பல. இறைவனை எப்பயெல்லாம் மனிதன் நினைகிறானோ அப்படியே காட்சி தருகிறார் போல. ஒரு பழைய படத்தில் ஒரு காட்சியை பார்த்தேன். ஒரு நாட்டு அரசன் மது போதையில், மாதுவின் மோகத்தில் சிக்கி கொண்டுள்ளான். ஆனால் தினமும் மறவாது இறைவனை மனதார வணங்குகிறான்.சிவனும், பார்வதியும்: தேவி இறைவனிடம் இந்த காமுகனின் பிரார்த்தனையை ஏன் ஏற்கிறிர்கள் என்று கேட்க, இறைவனோ எந்த நிலையிலும் ஒருவன் நம்பிக்கையோடு மனதார பக்தி என்ற நெய் ஊற்றி விளக்கை ஏற்றி வைத்தால் போதும் என்று சொல்வார், மன்னனை ஏற்று அருள்புரிகிறார் இறைவன். அது போல் எத்தனை தெய்வங்கள் இருக்கிறது!. நான் உட்பட மனிதனுக்கு நம்பிக்கைதான் உண்டாவதில்லை.
    நேசமுடன்
    வெங்டேஷ்.சின்னசாமி./////

    ஆமாம். நம்பிக்கை இருந்தால் போதும்! நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    எல்லாத்துக்கும் சரி...
    எங்களை போன்றவர் கேட்பது "சாப்பாட்டிற்கு" யார்?
    தூக்கத்திற்கு யார்?
    துணிந்து சொல்லுங்கள் கம்ப்யூட்டர்ருக்கு யார்?/////

    சாப்பாட்டிற்கு அன்னபூரணி!
    தூக்கத்திற்கும் நிம்மதிக்கும் வைத்தீஸ்வரன்!
    கம்ப்யூட்டருக்கு கூகுள் ஆண்டவர்!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    ///வழிவிடு முருகன், பாஸ்போர்ட் விநாயகர்,குட்வில் ஆஞ்சனேயர் போன்ற கோவில்களும் முளைத்துவிட்டன.////
    யக்கோவா என்ற கடவுள்
    புதிதாக வந்துள்ளார் கிருத்துவத்தில்..../////

    அவரவர் விருப்பம். நாம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. யாஹோவா, அல்லது ஜெஹோவா என்பது அப்ரஹாமிய மதங்களின் ஆதிகடவுள்தான்.புதிதாக வந்தவரல்ல‌.

    ReplyDelete
  12. //தூக்கத்திற்கு யார்?
    துணிந்து சொல்லுங்கள் கம்ப்யூட்டர் ருக்கு யார்?//

    தூகத்திற்கு - கும்பகர்ணன்
    கம்ப்யூட்டர் - ஆர்யபட்டர்
    சாப்பாட்டிற்கு - பீமசேனன்

    ReplyDelete
  13. வணக்கம்,. நல்ல அருமையான தகவல்.
    நன்றி,.

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    யாஹோவா, அல்லது ஜெஹோவா என்பது அப்ரஹாமிய மதங்களின் ஆதிகடவுள்தான்.புதிதாக வந்தவரல்ல‌.//////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    //தூக்கத்திற்கு யார்?
    துணிந்து சொல்லுங்கள் கம்ப்யூட்டர் ருக்கு யார்?//
    தூகத்திற்கு - கும்பகர்ணன்
    கம்ப்யூட்டர் - ஆர்யபட்டர்
    சாப்பாட்டிற்கு - பீமசேனன் ///////

    உண்மைதான். கம்ப்யூட்டருக்கு ஆர்யபட்டாதான் முன்னோடி. நன்றி

    ReplyDelete
  16. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்,. நல்ல அருமையான தகவல்.
    நன்றி,.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com