22.5.15

பாதி புதிர்: Half Quiz: வாத்தியார் பாதி. நீங்கள் மீதி!


பாதி புதிர்: Half Quiz: வாத்தியார் பாதி. நீங்கள் மீதி!

Quiz No.84

22.5.2015


மேலே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகர் எந்த வேலைக்குப் போனாலும் அதில் நிலைத்து இருக்க மாட்டார். திரும்பி வந்து விடுவார். பெற்றோர்களுக்கு ஒரே கவலை. சுமார் எட்டு ஆண்டு காலம் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தார்.

ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தார்கள். ஒரு நல்ல பதிலைச் சொல்லியனுப்பினார். அவர் சொல்லியபடியே ஜாதகருக்கு அவரது 30ஆவது வயதில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அதில் நிலைத்து இருந்து விட்டார். கடைசிவரை அந்த வேலையிலேயே நிலையாக இருந்து விட்டார்.

அவ்விரண்டு நிலைப் பாடுகளுக்கும், அதாவது முதலில் கண்ணாம் பூச்சி ஆடியதற்கும் பிறகு ஆட்டத்தை விட்டு விட்டு வேலையில் நிலை பெற்றதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்?

மூன்று (3) முக்கியமான காரணங்கள் உள்ளன. அவைகள் என்ன என்பதை அலசி உங்கள் பதிலில் சொல்லுங்கள்.

வாத்தியாரின் பதில் திங்கட்கிழமை 25.5.2015 அன்று வரும். உங்கள் பதிலுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மதிப்பெண் போடும் வேலை எல்லாம் வாத்தியாருக்கு இல்லை. நீங்களே அதையும் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன் 
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. this is the first time I am trying to find the Answer
    1.Ragu period was giving lot of trouble & made him to loose his job as it is placed 9 th house from Lagna but placed 12 th house from 10 th house.
    2.After completion of Ragu , self period of Guru dasa and start of Saturn bukthi He has joined in permanent job as Satun is in lagna which the lord of dhrma karma athipathi and also yoga karaga for given lagnam.
    3.Lagna and saturn is well aspected by Guru, lagna lord & 5 th lord of puthan hence balance three major period ( Guru,Saturn & Puthan) is going to be good.

    ReplyDelete
  2. ஜாதகரின் வேலயில் ஊசலாட்டத்திற்கான காரணங்கள்.

    1.விரய ஸ்தானதிபதியும் 10ம் பாவ ஸ்தானதிபக்கு பரம எதிரியுமான செவ்வாய் 10ம் இடத்தில் அமர்ந்து பத்தாம் அதிபன் சனைச்சரனை நான்காம் பார்வையாகப் பார்த்தது. நவாம்சத்திலும் இந்த நிலை தொடர்கிறது.

    2. பத்தாம் அதிபதி, லக்கினத்திற்கு யோககாரகன்,மற்றும் கர்மகாரகனான
    சனைச்சரன், செவ்வாய் பார்வையால் பலம் இழந்து சுயவர்கபரல் எட்டுக்கு இரண்டுமட்டுமே பெற்றது.

    3.ந‌வாம்சம் மற்றும் தசாம்சத்தில் கர்மகாரகன் சனைச்சரன் நீசம் அடைந்தது.

    4.தசாம்சத்தில் அந்தச் சக்கரத்தின் லக்னாதிபதியும், கர்மகாரகனான சனைச்சரன்
    ராகு,செவ்வாய் மாந்தியால் சூழப்பட்டது.அதாவது பாபகர்தாரி.

    5. ஜாதகர் 14 11 1971 அன்று மாலை 5 மணி 45 நிமிடத்திற்குப் பிற‌ந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன் ஹஸ்த நட்சத்திரம். 12 வயது முதல் 30 வயது வரை ராகுதசா நடந்தது. அதனால் தான் படிப்பு வேலை ஆகியவற்றில் பல தடங்கல் தாமதங்கள்.ராகுதசா முடிந்ததும் ஓரளவு வாழ்க்கை சீராகியது. வேலை கிடைத்தது.

    6.ராசிச் சக்கரத்தில் தனஸ்தானம் கேது சனியல சூழப்பட்டது. எனவே தன வரவில் தடங்கல்.

    ReplyDelete
  3. ANSWER TO Quiz No.84

    1. 10th place is for job.In 10th
    place 12th load sevai is
    there.

    2. Up to 28th age he has Ragu
    dasa So he didn't get the
    permanent job
    3. 6th and 8th lord looking for
    saniswaran 10th lard In guru
    dasa hr got good job.

    M.Santhi

    ReplyDelete
  4. குரு வணக்கம்
    இந்த ஸ்டைல் நன்றாக இருக்கிரது

    விடைகள்

    1. பத்தாம் அதிபதி லக்னத்தில் சுபராக அமர்ந்து தனது 10ம் பார்வவை 10ம் இடத்தில்.

    2. 30வது வயதில் லாபாதிபதி குரு தசை சனி புத்தியில் வேலை கிடைத்தது

    3. லாப ஸ்தானதின் மீது பூர்வபுன்னிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து தன் நேரடி பார்வையும், குரு பகவான் 7ல் அமர்ந்து லாப ஸ்தானத்தையும் லக்னத்தையும் தன்னது பார்வையாலும் நிரந்தர வேலையக்கினார்கள்
    (லாப ஸ்தானம் குரு சந்திர யோகம் பெற்று இருக்கிரது)

    நன்றி
    ஜவஹர்

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயா வணக்கம்.

    அற்புதமான தலைப்பில் பாடம் கொடுத்து உள்ளீர்கள். நன்றி .

    மிகச்சிறந்த தமிழ் பாடலை பாடவைத்தமைக்கும் நன்றி.

    நீ பாதி நான் பாதி கண்ணே
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
    நீ பாதி நான் பாதி கண்ணே
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
    நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

    நீ பாதி நான் பாதி கண்ணா
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

    மானப்பறவை வாழ நினைத்தால்
    வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
    கானப்பறவை பாட நினைத்தால்
    கையில் விழுந்த பருவப்பாடல்
    மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
    பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே

    மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
    ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே
    மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

    நீ பாதி நான் பாதி கண்ணே
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணா
    நீ பாதி நான் பாதி கண்ணா
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

    இடது விழியில் தூசி விழுந்தால்
    வலது விழியும் கலங்கி விடுமே
    இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
    இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
    சோகம் எதற்கு என் பொன்னுலகம்
    பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

    இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும்
    நந்தவனம் தான் அன்பே வா
    சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்

    நீ பாதி நான் பாதி கண்ணா
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
    நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

    நீ பாதி நான் பாதி கண்ணா
    அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

    ReplyDelete
  6. i am a new student
    1.lakkanatil sani
    2.Nebunathuva yogam ullavar
    3.Guru thasa Sani puththiyel velai

    ReplyDelete
  7. Quiz no.84 வணக்கம் .
    17/11/1971 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை மாலை 5.45.03 மணிக்கு ஹஸ்த நட்சத்திரத்தில், ரிஷப லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம் - சென்னை).

    யோககார்கள் : சூரியன், சனி யோகமில்லாதவர்கள் : குரு,சந்திரன்

    ரிஷபராசி லக்கினாதிபதி சுக்கிரன், 7ம் வீட்டில் கிரக யுத்தத்தில் , 6ம் வீட்டிற்க்கும் அவனே அதிபதி.

    காரணம் -1

    10ம் வீடு (தொழில்) சிறப்பாக இருக்க லக்கினாதிபதி,சூரியன் , சந்திரன் ஆகிய மூன்று கிரகங்கள் வலிமையாக இருக்கவேண்டும். ஆனால் இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி சுக்கிரன் (2 பரல்) 7ம் வீட்டில் கிரக யுத்தத்தில் , சூரியன் (5 பரல்) துலா ராசியில் நீசம் , கன்னி ராசியில் சந்தரன் (5 பரல்) செவ்வாயின் 8ம் பார்வையில் உள்ளான். ஆக மொத்தம் மூன்று கிரகங்களும் வலிமையாக இல்லை.

    காரணம் - 2

    அதிகமான யோகங்களை தர கூடிய ரிஷப ராசி லக்கின யோககாரன் சனி லக்கினத்தில் அமர்ந்து வக்கிரம் அடைந்து விட்டான் . மேலும் , செவ்வாயின் 4ம் பார்வை சனியின் மீதும் , சனியின் 10ம் பார்வை 10ம் வீட்டில் அமர்ந்து இருக்கும் செவ்வாய் மீதும் இருப்பதாலும் , சனி 9ம் வீட்டிற்க்கும் அதிபதியாக இருப்பதால் செவ்வாயும், சனியும் சேர்ந்து ஜாதகரை தொழிலில் நிரந்திரம் இல்லாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவிட்டன .

    இது எல்லாம் நடந்தது ராகு தசையில்,
    ஜாதகருக்கு 10 வயது முதல் 27 வயது வரை ராகு தசை.
    9ல் ராஜ யோகத்தை கொடுக்ககூடிய ராகு இந்த ஜாதகத்தில் சனி, செவ்வாய் பரஸ்பர பார்வையால் பவீனமாக மாறிவிட்டான் .ஜாதகருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

    காரணம் - 3

    அடுத்து வந்த குரு (5 பரல்) தசை சனி புக்தியில் 30 வயதில் ஜாதகருக்கு நிரந்தரமாக வேலை கிடைத்தது . 7ம் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் 7ம் பார்வை சனியின் மீது இருப்பதே காரணம். சனி 1ல் இருப்பதால் ஜாதகர் சுய தொழில் செய்ய கூடியவர். அரசியல் வாதியாகவோ அல்லது விவசாயியாக இருக்க கூடியவர்.

    6ம் வீட்டு அதிபதி லக்கினாதிபதி சுக்கிரனின் 7ம் பார்வை 10ம் வீட்டு அதிபதி சனியின் மீதும் இருப்பதால் ஜாதகருக்கு தொழிலில் பிரச்சனை உண்டானது.

    கன்னி ராசியில் அமர்ந்துள்ள சந்திரனின் (5 பரல்) பார்வை 11ம் வீட்டின்மீது . 11ம் வீட்டில் 36 பரல்கள். செவ்வாயின் 8ம் பார்வை சந்திரன் மீதும் உள்ளது.

    7ம் வீட்டில் குரு ,சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் யுத்தத்தில் உள்ளன. (குரு தீர்காம்சம் -251:42;40), புதன் தீர்காம்சம் - 251:31:30) , சுக்கிரன் தீர்காம்சம் - 251:50:37). ஒரு பாகைக்கு குறைவாகவே உள்ளன.ஜாதகருக்கு கிடக்ககூடிய யோகங்கள் எல்லாம் கிடைக்காமல் செய்து விட்டன .மேலும் ஜாதகருக்கு தொழிலில் தாமதம் எற்பட்டது.

    7ம் வீட்டு அதிபதி 10ம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண் மனைவியாக கிடைப்பாள்.

    4ம் வீட்டு அதிபதி 6ம் வீட்டில் சூரியன் சுப கர்தாரி யோகத்தில் இருந்தாலும் (ஒரு பக்கம் குரு , சுக்கிரன், மறு பக்கம் சந்திரன் ) சூரியன் நீசமாக இருப்பதால் ஒரு பயனும் இல்லை. ஜாதகனுக்கு வீடு வாசல் சொத்து சுகம் இருக்காது.ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக பிரச்சனைகள் நிரம்பி இருக்கும்.எந்த சுப கிரகங்களின் பார்வையும் 6ம் வீட்டின் மீது இல்லை.

    சூரியனுக்கு 4ம் வீட்டில் ராகு இருப்பதால் சூரியனால் கிடைக்ககூடிய செல்வாக்குகள் , பெயர், புகழ் கிடைக்காமல் செய்து விட்டான் .
    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  8. DOB 14.11.1971 Time 5.44 PM place Chennai
    1) Vakkira Saneeswaran aspect (from Lakkinam) 6th Bavaga Athipathi Sukkiran

    2) 6th Bhavagam has Neecha Suriyan

    3) 10th Bhavagam is spoiled by Sevvai and Vakkira Saneeswaran aspect

    But when the Guru Disai starts the native got the job in the beginning of Guru Disai Sani Bukthi and continued in the service by the support of Guru Bagavan.

    ReplyDelete
  9. 1. 10th lord shani is in lagnam ,10th place jeevanasantham is in mars both take direct view between them shani see 10th view to mars and mars view 4th view to shani the above jathagam does not got the stable proffesion because the bakasthanam is in rahgu whose thasi gave lot of problems is in thasai after ragu dasi next guru dasi 7th place 3 number of good plannet who gave a stable profession to him

    ReplyDelete
  10. Ayya,

    1. Rishaba Lagnam. Lagnathibathy, Lagnathai 2 Subargaludan Paarkkum Nalla Amaippu. Lagnathil Yogakaaragar, Sani.

    2. Rahu Maha Dasavil Thozhilil siramam Irundhadhu. Kaaranam, Rahu 10m veettirkku 12-il. 10m veettil 12m Athibathi Sevvai matrum avarin 4m paarvai, 10m Athibathy Saniyinmel.

    3. Velaiyil siramam, Guru Dasa Guru Buthi Varai irundhirukkum. Guru Dasa Sani Buthiyil, Nalla Velai Kidaithirukkum. Kaaranam 3 Subargalin (Budhan,Sukkiran, Guru) 7m Paarvai, Lagnam, 10m Athibathy matrum Thozhil Kaaragararaana Saniyinmel. Aduthu vandha, Sani Maha Dasavum, thozhil vishayathil ivarukku nalla munnetram kidaithirukkum. Thanks.

    ReplyDelete
  11. born 14th november 1971
    around 7 pm .
    rahu in 9th house and retrograde saturn in 1st house gave all the troubles.12th lord in 10th also indicate waste in career path.
    when he go abroad and finishes rahu dasa got job.

    ReplyDelete
  12. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ,
    புதிர் எண் 84 .

    ரிஷப லக்னம் .கன்னி ராசி..
    1,..லக்னாதிபதி 7 மிடமான விருச்சிகத்தில் -லக்கனத்தில் ரிஷப லக்னத்திற்கு யோககாரகானனா , சனி லகனத்திலே.--.அவனே 10ம வீட்டதிபதி. 10 வீட்டில் செவ்வாய் ..
    2,,ஆக ஒரு முக்கோண பரிவர்த்தனை .....அதாவது லகனாதிபதி சுக்கிரன் செவ்வாய் வீடான விருச்சிகத்தில் .7ம வீடு -- செவ்வாய் 10ம சனி வீடான கும்பத்தில் ---லக்னத்தில் 10ம வீடதிபதி சனி
    3,,ஆரம்ப சந்திரா திசை இருப்பு 3.3.21.அடுத்து செவ்வாய் 7வருடம் அடுத்து 28 வயது வரை[9மிட பாக்கியஷ்தானத்தில் ] ராஹு திசை ..இதில் 22 வயது சுகிர புத்தி [லகனாதிபதி ] தொடங்கி குறு திசை தனது புத்தி முடிகிற வரை 30 வயது அந்த காலங்களில் இந்த முக்குண பரிவர்த்தன காரணமாக வேலை ஸ்திரமின்மை மேலும் 12ம விரய வீட்டதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானமான 10 ல் .அவனே 7ம வீட்டுக்கும் அதிபதி

    4,,,,,,7ம் வீட்டில் 3 க்ரகம் சுபர்களாக இருந்தது குரு திசை 28 வயதுக்கு மேல் நடப்பதால்தனது புக்தி முடிந்தவுடன் திருமண வாழ்க்கை அமைந்து அதனால் யோகம் ஏற்பட்டு வேலை ஸ்திரமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் வேலைக்கு சென்றார்.. வேலை நிரந்தரமாக இருக்கும்

    வாத்தியார் அலசி கொடுத்ததை ...பிழிந்து,,,, காயவைத்து.... எனக்கு தெரிந்த வரை இஸ்த்ரி போட்டாச்சு ...!!! போட்டுக்க [கருத்து]வேண்டியது அய்யாவின் வேலை

    இந்த மாதிரி புதிர் அலச சற்று நன்றாகவே இருக்கிறது..!!! நன்றி திரு KMRK .அய்யா .வுக்கு நன்றியோ ...நன்றிகள்...!!!!

    ReplyDelete
  13. Vanakkam Iyya,

    Jathagar rishaba lagna kaarar. Lagnathil Yogakaraganana saneeswaran (9 & 10 aam veetu adhipathi).

    Velai patri paarka vendum endral lagnathil irundhu 10 aam idathai paarka vendum.

    10 aam vetiruku veetin adhipathiyin paarvai ullathu (lagnathil irundhu 10aam paarvai aaga paarkirar). Andha saneeswaranku 7& 12 aam adhipathi aana sevaai yin (4aam paarvai ) + 7 il ulla sukran, budhan, guruvin paarvaiyum kooda.

    Raagu baagya sthanathil ullar (9aam veetil). Jaathagarku - 11 - 29 vayathu varai raaagu maha dasa. athanal velai kidaithum avarku velaiyil nilai illamal ponathu.

    chandra lagnathayum kanakil eduthu paarthal - 10aam veetil maandi. Antha veetin adhipathi andha veetiruku 6 il. ithuvum velai kidaithum velayil muzhumayaai illamal ponathiruku kaaranamaaga irundhathu

    30 vayathiruku mel thaan guru dasa arambam. Guruvin 7 aam paarvai+ Lagnathipathi sukran paarvayum lagnathin mel, yogathipathiyin meethum vizhugirathu.

    Ithanal nalla velai kidaithathu. Piragu vantha sani dasa + budhan dasa yum avaruku andha velayileye nirka udhavitru.

    Nandri,
    Bala

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய ஐயா !!!

    புதிர் எண்: 84 இற்கான பதில் !!!

    ஜாதகர் ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்கினத்தில் பிறந்தவர், லக்கினாதிபதி சுக்கரன் 7இல் அமர்ந்து லக்கினத்தை பார்த்தாலும், அவர் உடன் அமர்ந்த வில்லன்கள் ஆறாம்அதிபதி புதன் மற்றும் எட்டாம் அதிபதி குருவுடன் மிககடுமையான கிரக யுத்தம். கர்ம மற்றும் ஜீவன ஸ்தானாதிபதி சனி லக்கினத்தில் வக்கிரமாக, மேலும் நவாம்சத்தில் அவர் ராசிக்கு 12இல் நீச்சமாக அமர்ந்து விட்டார், அவரின் 10 ஆம் பார்வையில் 10 ஆம் இடம் !!!!! மேலும் 10ஆம் இடத்தில் விரையதிபதி செவ்வாய் குடிகொண்டுள்ளார். அவரும் அம்சத்தில் ராசிக்கு 12இல் உச்சமாக அமர்ந்து விட்டார் !!! தொழில் ஸ்தானம் இவற்றால் பலமிழந்து விட்டது !!!! மேலும் ஜாதகரின் 22 முதல் 30 வயது வரை நடந்ததோ ராகு திசை !!! இவற்றின் காரணமாக ஜாதகர் படித்தும் சரியான வேலையில் அமரவில்லை. 30 வயதில் வந்த குரு திசை ஜாதகருக்கு லாபாதிபதி திசை மேலும் அவர் 7ஆம் இடம் கேந்திரம் ஏறி 5 பரல்களுடன் வலுவாக உள்ளார். மேலும் கர்மக்காரகனின் பார்வை 10 ஆம் இடத்தில் விழுவதாலும், குரு, இரண்டாமதிபதி புதன், மற்றும் லக்கினாதிபதி சுக்கரன் ஆகிய சுப கிரகங்களின் பார்வை கர்மக்காரகனின் மேல். ஆகவே ஜாதகர் தன் 30 ஆம் வயதில் குரு திசையின் ஆரம்பத்தில் தொழில் கைகூடிவந்தது !!!!!!!!!

    இப்படிக்கு

    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  15. வ்யம் வியாஷ தேவாய நமஹா
    ஜாதகர் 14 நவம்பர் 1971ல் தேவகோட்டையில் (பிறந்த ஊர் தெரியாமல் ஜாதகம் பார்க்ககூடாது என்பதால்)இரவு மணி 7:43 க்கு, http://www.astraura.org/Charter2/CharterVak3.aspx வாக்கிய பஞ்சாங்கப்படி, ரிஷப லக்னம், சிம்ம நவாம்சம், ஹஸ்த நட்சத்திரம் 3ம் பாதம், கி.துவாதசி திதி, ப்ரீதி யோஹம், தைதுல கரணம், ஞாயிறு கிழமை, பிறப்பாக யெடுக்கப்பட்டது. சந்திர திசை இருப்பு 3வ 3மா 21நா.

    1. வேலைக்கு 10ம் வீடு (கும்பம் ச.பரல் 28). 10ல் 12ம் அதிபதி செவ்வாய் பாதிப்பு. 10ய் பார்பது அதன் அதிபதி வக்ரசனி மட்டுமே. ராசிநாதன் ராசியை பார்ப்பதால் பலன் உண்டு.சனியும் செவ்வாயும் பரஸ்பர பார்வையால் பாதிப்பும் உண்டு.

    2. 10 அதிபதி சனி லக்னத்தில் வக்ரம். ரிஷப ச.பரல் 26. சனியின் சுயப்பரல் 2தான். அம்ஸத்தில் சனி கும்பத்தில் சொந்த வீட்டில்.சனியை பார்க்கும் கிரஹங்கள் 12ம் அதிபதியும் அவயோஹியுமான (அவிட்டம்) செவ்வாய், கிரஹ யுத்ததில் மாட்டிக்கொண்ட திதிசூன்ய ராசி(துலாம்)லக்ன,ஆறாம் அதிபதியுமான சுக்ரன், மாந்திக்கு வீடு கொடுத்த புதன் மற்றும் 8/11ம்அதிபதி குரு.

    3.வேலைக்கு போகும் சமயம் ராஹு திசை. ராஹூ 10 பாவத்திற்கு 12ம் இடமான மகரம் 9ல்(அதிபதி சனி). வேலையை கொடுத்து கெடுப்பார். புக்திநாதர்கள் சூரியன் 6ல் நீச்சத்தில், சந்திரன் 3ம் அதிபதி 10க்கு 8ல் செவ்வாய் ராஹு பார்வையில், கடைசி செவ்வாய் புக்தி. சுய பரல்கள் 5. எனவே வேலையும் கிடைத்து போனது.

    4. அடுத்தது குரு திசை சுய புக்தி 8பாவப்பலன் . பின் 11ம் பலன் 11ல்சர்வாஷ்டகப்பரல் 36. குருவின் சுயப்பரல் 5. 11ம் பாவத்தை அதிபதி பார்வை செய்வதால் 11ம் பாவம் பலம் பெரும்.மேலும் அம்ஸத்திலும் தனுசில் ஆட்சி. தனது 8ம் வீட்டிற்க்கு 12 ல் உள்ளதால்(7ல்) பலம் பெற்ற தன் பார்வையில் உள்ள 11 ம் பலனையே குரு செய்வார். 10 அதிபதி சனியின் பரஸ்பர பார்வையில் உள்ளதாலும் 10க்கு 2/11ம் அதிபதி என்பதாலும் குரு வேலையை கொடுத்து லாபத்தை வழங்கினார். குரு திசை ஆரம்பம் வயது 28வ 3மா 21நா. சுய புக்தி முடிவு வயது 30வ 5மா 9நாட்கள்.

    குருவே துணை
    வணக்கம்

    ReplyDelete
  16. ஐயா அவர்களுக்கு

    1. (சந்திரன்,செவ்வாய்,)9மிடம் ராகு திசையில் வேலையில் தடை ஏற்படுத்தியிருப்பார்.

    2. பிறகு வந்த 7மிடம் குரு திசையில்(லக்கினாதிபதி) சனிபுத்தியில் நல்ல வேலை கொடுத்திருப்பபார். ஏனெனில் 9 மற்றும் 10க்கு உரியவர்.

    3. குரு லக்கினத்தை 7ம் பார்வை பார்கிறார், மேலும் 10மிடத்திற்கு உரிய கிரகமான சனியை (லக்கினாதிபதி) பார்கிறார். மேலும் புதன்,சுக்கிரன் 7 ம் பார்வை பார்கிறார்கள். எனவே வேலையில் நிலைத்திருப்பார்.

    அன்புடன்
    தனலஉ்ஷமி.

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா,

    விருஷப லக்கினம், கன்னி ராசி ஜாதகர்.

    1. 10மிட அதிபதியும் யோககாரகனுமான சனீஸ்வரன் வக்கிர கதியில்.
    2. 10மிடத்தில் 12 & 7 மிடஅதிபதி செவ்வாய்
    அமர்வு. சனி மற்றும் செவ்வாயின் பரஸ்பர பார்வையின் காரணமாக அவருக்கு 30வயது வரை வேலையில் நிரந்தரமாகாமல் "கண்ணாமூச்சி" ஆடினார்.
    30 வயதிற்கு மேல் குரு தசை சனி புத்தியில் வேலை நிரந்தரம் ஆனது.

    ReplyDelete
  18. வணக்கம் குரு,

    பாதக ஸ்தானத்தில் அமர்ந்த ராகு திசையில் வந்த சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளும் குரு திசை சுய புக்தியும் சரி இல்லாத அமைப்பும் ஒரு காரணம்.
    பத்தில் செவ்வாய் அமர்ந்து பத்தாமிடத்து அதிபதி சனியை பார்த்தது இன்னுமொரு காரணம்.
    ராசிக்கு 10ல் மாந்தி அமர்ந்தது மற்றும் ஒரு காரணம். பிறகு வந்த குரு திசை சனி புக்தியில் கிடைத்த வேலையில் நிறந்தரமாக அமர்ந்திருப்பார்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  19. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
    தாங்களின் சரியான அலசல் எப்போது வரும் புதிருக்கு சரியான விடை ..
    மாணவர்களின் கருத்துக்களுக்கு முதலில் தங்களின் விடை இருந்தால்தான் .... நாங்கள் எந்த இடத்தில தவறு செய்திருக்கிறோம் என் ""தெளிந்து"" கொள்ள முடியும் ...தயவு செய்து தங்களின் அலசல் விடை வெளி இட வேண்டுகிறேன். ...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com