21.5.15

பட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் என்ன சொல்லுவார்?



பட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் என்ன சொல்லுவார்?

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்றபெயர் வாங்காதே”

என்று அன்று எழுதிய பட்டுக்கோட்டையார் இன்று என்ன எழுதுவார்?

தூங்குடா தம்பி தூங்குடா - முறைப்படி
தூங்குடா தம்பி தூங்குடா

தூக்கத்தின் அவசியத்தைப் பற்றி நம் சித்தர்கள் சொன்னவற்றைத்
தொகுத்துக் கொடுத்துள்ளேன். படித்து, செயல் படுத்திப் பயனடையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது:

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும்,
உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட
வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும்
சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய
சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும்
என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க 
மெத்தனுக் கமைந்த மென்பவை 
களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் 
கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண் .  

இதன் விளக்கம் :- இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,பயம், படபடப்பு, அக்னி
மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து

வரும் காந்தசக்திதலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள்,
நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண
வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும்,
வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக
ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால்
உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம்
வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில்
உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை
நாமும் பின்பற்றி பயன் பெறுவோம்.
==========================================
வாட்ஸப்பில் எனக்கு வந்தது. நன்றாக இருந்ததால், உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

  1. நல்ல தூக்கம் இல்லை என்றால் அதுவும் துக்கமே என உணர்த்தும் பாடம்.

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியார் ஐயா!

    சித்தர்கள் கூறிய அற்புதமான கருத்துகளை எங்களிடம் பகிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஆசானே .

    ReplyDelete
  3. வயதோ 65ஐக் கடந்துவிட்டது. இரவில் 5 மணி நேரம் தான் தூக்கம். வேறு வழி தெரியாமல் பகலிலும் சிறிது நேரம் தூங்குகின்றோம்.தூக்கம் சரியாக இல்லாவிட்டால் துக்கம்தான்.நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  4. வணக்கம் வாத்தியார் ஐயா!

    மனிதனின் வாழ்க்கை அமைப்பானது எப்படி எப்படி எல்லாம் அமையனும் என்பதனை

    "சித்தர்கள்",

    கூறி சென்ற கருத்துகளை ஒட்டி தான் கவி பேரரசு உயர் திரு வைரமுத்து அவர்கள் .

    சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த பாட்ஷா என்னும் திரை படத்தில் ஒரு தத்துவ பாடலில் கூறி இருப்பார்

    அந்த தத்துவ வரிகள் .

    முதல் எட்டில் ஆடாதது விளையாடல்ல.

    நீ 2'ஆம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல.

    3'ஆம் எட்டில் செய்யாதது திருமணமல்ல.

    நீ 4'ஆம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல.

    5'ஆம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல.

    நீ 6'ஆம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல.

    7'ஆம் எட்டில் காணதது ஒய்வும்மில்ல.

    நீ 8'ஆம் எட்டுக்கு நிலை இருந்தா நிம்மதி இல்ல


    எட்டு எட்ட மனுஷன் வாழ்வா பிருசுகோ .

    என்பது ஆகும் .

    நன்றி . வணக்கம்.

    ReplyDelete
  5. இது
    இபரவில் பணிபுரியும் தோழருக்கா..

    சுமப்பது 5இலக்க சம்பளமானதால்
    சுகம் தான் என மறந்து விட்டார்கள்

    உறக்கத்தை மட்டுமல்ல நல்ல
    உறவுகளையும்...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com