3.4.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

தொடர் பாடம். பகுதி 21

பார்த்தால் பசி தீரும் என்னும் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதினார். அந்தக் காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமான பாடல்
திருமதி. பி .சுசிலா அம்மையார் பாடிய அந்தப் பாடலின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?
எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ?

(யாருக்கு மாப்பிள்ளை)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

ஊரறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?

-------------------------------------------------------
சின்ன இடை எண்ணி வருகிறவர்கள்தான் இன்று அதிகம். சீர்வரிசைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய டிக்கெட்டுக்கள்தான் தேடிக் கொண்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்சத்திரத்தை உடையவராக இருப்பார் என்று சொல்ல முடியுமா? முடியும். அதற்கான ஃபார்முலா ஒன்று உள்ளது. அதை இந்தத் தொடரின் இறுதியில் கொடுக்க உள்ளேன். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக ஊற்றினால் சாப்பிடமுடியாது. முதலில் பருப்பு, நெய், அடுத்து சாம்பார், அடுத்து வற்றல்குழம்பு, அடுத்து ரசம், அடுத்து தயிர், அடுத்து பாயாசம் என்று வரிசையாகப் பார்ப்போம் (சாப்பிடுவோம்) எல்லாவற்றையும் தட்டில் ஒன்றாக ஊற்றி, கலக்கி அடியுங்கள் என்றால் எப்படிச் சாப்பிட முடியும்?

ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!

   “சார். திருமணம் ஆக வேண்டியவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதுமல்லவா?”

   “திருமணம் ஆனவர்களும் பார்க்கலாம். பொருத்தமில்லாத தேவதையைத்தான் மணந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவளை அனுசரித்துக்கொண்டு போகலாம் இல்லையா?”
-----------------------------------------------------
21. விசாகம் 1, 2 மற்றும் 3ம் பாதங்கள்

இது குரு பகவானின் நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு
1. மிருகசீரிஷம்
2. ஆயில்யம்
3. மகம்
4. சித்திரை
5. விசாகம் (ஏக நட்சத்திரம்)
6. மூலம்
7. திருவோணம்
8. அவிட்டம்
ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். துலாம் ராசிக்கு ரிஷபம் எட்டாம் வீடு. ரிஷபத்திற்கு துலாம் ஆறாம் வீடு.. ரோஹிணி,  மிருகசீரிஷம் 1 & 2ம் பாதங்கள் ரிஷப ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

துலாம் ராசிக்கு கன்னி ராசி 12ம் வீடு. கன்னிக்கு துலாம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஹஸ்தம், சித்திரை 1 & 2ம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் விசாகம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

பரணி, பூரம், அனுஷம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் பொருந்தாது.

அஸ்விணீ, ரோஹிணி, திருவாதிரை, பூசம், ஹ்ஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய 7 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு செய்து எடுத்துக் கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆய்தங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

  1. /////மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? ////

    சரி தான் கட்டிலுக்கு போனக் காதல் இதை கருமம் என்றுத் தானே சொல்லும் :):)
    சுவாரஸ்யம் உங்களின் சுயமல்லவா!
    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. பாடலே இந்த
    பதிவில் வந்தமையால் சுழலவில்லை

    திருமணத்திற்கு அழைப்பது
    திருவிருந்து கொடுப்பது என்பதன்

    மூலம் சொன்னால் தான்
    முறையாக ஏன் இது என புரியும்

    மூன்றாம் நுற்றாண்டு செய்திகளை
    முட்டிப்பார்த்தால் நன்று...

    ReplyDelete
  3. ///ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்சத்திரத்தை உடையவராக இருப்பார் என்று சொல்ல முடியுமா? ///

    இதே போல கைரேகை கலையிலும்
    mars negative மற்றும் 2nd phal of Thumb இடத்தை வைத்து

    அவரின் துணையின் பெயர் எழுத்துக்களையும் அவரின் குணத்தையும் சொல்ல முடியும்..

    காத்திருக்கிறோம் புதிய செய்திகளுக்காக..

    ReplyDelete
  4. //சரி தான் கட்டிலுக்கு போனக் காதல் இதை கருமம் என்றுத் தானே சொல்லும் //

    உங்கள் வரிகளை பார்த்ததும்
    உள்ளபடியே கவிஞரின் இந்த வரிகளே

    நிழலாடியது

    (வான் நிலா என தொடங்கும் பாடல்)

    பொன்னிலா பொட்டிலா
    புன்னகை மொட்டிலா
    அவள் காட்டும் அன்பிலா

    இன்பம் கட்டிலா அவள்
    தேகக்கட்டிலா

    தீதிலா காதலா ஊடலாகூடலா
    அவள் மீட்டும் பண்ணிலா

    ReplyDelete
  5. ////Blogger ஜி ஆலாசியம் said...
    /////மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? ////
    சரி தான் கட்டிலுக்கு போனக் காதல் இதை கருமம் என்றுத் தானே சொல்லும் :):)
    சுவாரஸ்யம் உங்களின் சுயமல்லவா!
    நன்றிகள் ஐயா!////

    உப்பு, புளி காரம் இல்லாத சமையலா? சுவாரசியம் இல்லாத எழுத்தா? யார் சாப்பிடுவது? யார் படிப்பது? நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  6. ////Blogger அய்யர் said...
    பாடலே இந்த
    பதிவில் வந்தமையால் சுழலவில்லை
    திருமணத்திற்கு அழைப்பது
    திருவிருந்து கொடுப்பது என்பதன்
    மூலம் சொன்னால் தான்
    முறையாக ஏன் இது என புரியும்
    மூன்றாம் நுற்றாண்டு செய்திகளை
    முட்டிப்பார்த்தால் நன்று...//////

    மூன்றாம் நூற்றாண்டா? என்ன சாமி அது?

    ReplyDelete
  7. /////Blogger அய்யர் said...
    ///ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்சத்திரத்தை உடையவராக இருப்பார் என்று சொல்ல முடியுமா? ///
    இதே போல கைரேகை கலையிலும்
    mars negative மற்றும் 2nd phal of Thumb இடத்தை வைத்து
    அவரின் துணையின் பெயர் எழுத்துக்களையும் அவரின் குணத்தையும் சொல்ல முடியும்..
    காத்திருக்கிறோம் புதிய செய்திகளுக்காக../////

    ஓஹோ அப்படியா? ஒரு வலைப்பூவைத் துவங்கி உங்களுக்குத் தெரிந்த அக்கலையை அனைவரும் அறியத் தாருங்களேன் விசுவநாதன்!

    ReplyDelete
  8. vanakam sir nengal answer sollum vathema nanrga ullathu ......entha krganglum yarryum .... patutmal eruthanal .evvalvu nanrga ..erukkum...

    ReplyDelete
  9. ///Blogger eswari sekar said...
    vanakam sir nengal answer sollum vathema nanrga ullathu ......entha krganglum yarryum .... patutmal eruthanal .evvalvu nanrga ..erukkum...////

    எல்லாமும் எல்லோருக்கும் பொருத்தம் என்றால், ஒரு சுவாரசியம் இல்லாமல் போய்விடுமே சகோதரி!

    ReplyDelete
  10. yaruku yentha natchathiram porunthum, yentha natchathira karararuku yentha natchathiram amaium yendra mullu alasalukaha kathuirukirom...

    ReplyDelete

  11. ////Blogger kmr.krishnan said...
    present sir////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger manikandaprakash said...
    yaruku yentha natchathiram porunthum, yentha natchathira karararuku yentha natchathiram amaium yendra mullu alasalukaha kathuirukirom...////

    நடக்கின்ற பாடங்கள் முடியுட்டும். அந்த வரிசையில் அது கடைசியாக வரும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com