2.4.13

Astrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலையாக விரும்புபவைகள் எவை?


Astrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலையாக விரும்புபவைகள் எவை?
Key points (in a horoscope) பகுதி ஒன்று!

உட் தலைப்பு: Stable Life (ஸ்திரமான வாழ்க்கை)
நிலையான வாழ்க்கை என்றுதான் குறிப்பிட நினைத்தேன். வாழ்க்கையில் எதுவுமே  நிலையில்லை. எல்லாமே ஒரு நாள் நம்மைவிட்டுப் போகக் கூடியவை. நீங்கக் கூடியவை. ஏன் நாமே ஒரு நாள் இவ்வுலகை விட்டு நீங்கத்தான் போகிறோம். அதனால் ஸ்திரமான வாழ்க்கை  என்று குறிப்பிடுவதுதான் பொறுத்தமாக இருக்கும்

   “உறவு என்றொரு சொல்லிருந்தால்
       பிரிவு என்றொரு பொருளிருக்கும்”

என்றார் கவியரசர் கண்ணதாசன்

Stable என்ற சொல்லிற்கு இவ்வாறான பொருள் (meaning) வரும்
1.
a. Resistant to change of position or condition; not easily moved or disturbed: a house built on stable ground; a stable platform.
b. Not subject to sudden or extreme change or fluctuation: a stable  economy; a stable currency.
c. Maintaining equilibrium; self-restoring: a stable aircraft.
2. 

Enduring or permanent: a stable peace.

சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

ஒரு ஜாதகனுக்கு, ஸ்திரமான வாழ்க்கை அமைய எது முக்கியம்?

சந்தேகமில்லாமல், லக்கினம்தான் முக்கியம்.

லக்கினம் வலுவாக இருந்தால், அதாவது வலிமையுடன் (Strength) இருந்தால்,
கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஜாதகன் அனுபவிக்க முடியும். நல்ல பலன்கள் உரிய நேரத்தில் வந்து சேரும்.

நன்மையான பலன்கள் என்னென்ன?

1. உடல் ஆரோக்கியம்
2. நீண்ட ஆயுள்
3. செல்வம் (உங்கள் மொழியில் சொன்னால் பணம்)
4. மகிழ்ச்சி
5..எடுத்த காரியங்களில் வெற்றி
6. செல்வாக்கு (சமூக அந்தஸ்து, புகழ், மதிப்பு, மரியாதை என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்)
-------------------------------------------------------------------------------------
அதற்கான ஜாதக விதிமுறைகள்

கீழே குறிப்பிட்டுள்ள 7 பலாபலன்களில் ஒன்று இருந்தாலும் போதும்.

1. லக்கின அதிபதி திரிகோணம் ஏறி இருக்க வேண்டும். திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். திரிகோணம் என்பது 1, 5, 9ஆம் வீடுகள். அம்மூன்றில் வீடு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு மிகவும் சிறப்பான திரிகோண வீடாகும். லக்கினாதிபதி ஒன்பதில் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். பாக்கியசாலி. உங்கள் மொழியில் சொன்னால்
கொடுத்துவைத்தவன். என் மொழியில் சொன்னால் வரத்துடன் வந்தவன்.

2. அதற்கு அடுத்த நிலை (அதாவது லக்கினாதிபதி திரிகோணங்களில் இல்லாவிட்டால்)  கேந்திரவீடுகளில் இருக்க வேண்டும். கேந்திர வீடுகள் நினைவில் உள்ளதல்லவா? 4, 7, 10ஆம்  வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இம்மூன்றில் 10ஆம் வீடு மிகச் சிறந்த கேந்திர ஸ்தானமாகும்.

3. லக்கினமும், லக்கின அதிபதியும் சுபக் கிரகங்களின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலை. சுபக்கிரகங்களை நினைவில் வைத்துள்ளீர்கள் அல்லவா? சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள் ஆகும். அம்மூன்றில் குரு நம்பர் ஒன் சுபக்கிரகம் ஆகும். சந்திரனுக்கும்
சுக்கிரனுக்கும் ஏழாம் பார்வை மட்டுமே உண்டு. ஆனால் குரு பகவானுக்கு 7ஆம் பார்வையோடு, 5 மற்றும் 9 ஆகிய விஷேசப் பார்வைகள் உண்டு அதை மனதில் கொள்க!

4. லக்கினத்தில் சுபக்கிரகங்கள் வந்தமர்ந்திருந்தாலும் அல்லது லக்கின அதிபதி தான் அமர்ந்திருக்கும் இடத்தில் சுபக்கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் நன்மையானது. (Lagna is occupied by benefics or lagna lord is associated with benefics)

5. லக்கினம் அல்லது லக்கினாதிபதி ஆகியவற்றின் இருபக்கமும் (இருபக்க
வீடுகளில்)சுபக்கிரகங்கள் இருக்கும் நிலைமை. அதாவது லக்கினத்தையோ அல்லது லக்கினாதிபதியை சுபக்கிரகங்கள் சூழ்ந்திருக்கும் நிலைமை.

6. வகோத்தம லக்கினம். லக்கினம் வகோத்தமம் அடைவது. அதாவது இராசி மற்றும்  நவாம்சத்தில் லக்கினம் ஒரே லக்கினமாக இருக்கும் நிலைமை. இந்த அமைப்பு இயற்கையிலே வலுவான லக்கினமாகும்.

7. பார்வையால் மேன்மையுறுவது. லக்கினத்தின் இருபக்க வீடுகளும் சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்கும் நிலைமை. அதாவது லக்கினதிற்கு 6 மற்றும் 8ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் இருக்கும் நிலைமை

8. லக்கினத்தில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருப்பது.

இவைகள் எதுவுமே இல்லையா?

கவலை வேண்டாம்!

லக்கினம் பலவீனமாக (weak - lacking strength) இருந்தாலும், சுபக்கிரகங்கள்
ஜாதகத்தில் வலுவாக இருந்தால் போதும். அதாவது அவைகள் ஆட்சி அல்லது உச்ச பலத்துடன் இருக்கும் நிலைமை.

அப்படி இருந்தால், ஜாதகன் அசமந்தமாக (அசடாக) இருந்தாலும், எல்லாச் செல்வங்களும், எல்லா நன்மைகளும் அவனைத் தேடி வரும். (Less potential but much gain in life)

லக்கினம் பலமாக இருந்தாலும், சுபக்கிரகங்கள் ஜாதகத்தில் வலுவாக இல்லாவிட்டால், ஜாதகனின் விருப்பங்கள், அபிலாஷைகள் நிறைவேறாது. வெறுப்பு மட்டுமே எஞ்சி நிற்கும்
-------------------------------------------------------
லக்கினத்துடன் தீய கிரகங்களின் தொடர்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை கஷ்டங்களும், துன்பங்களும் நிறைந்ததாக இருக்கும்.

சமூக சேவைகளிலும், பக்தி மார்க்கத்திலும் திளைப்பதற்கு லக்கினமும் அதன் அதிபதியும் பலவீனமாக இருக்க வேண்டும். லக்கினம் என்பது தன்னைத் தானே (self) குறிப்பது. அது இல்லாதவர்கள்தான் அதாவது தான் தன்னுடையது என்கின்ற உணர்வு இல்லாதவர்கள் மட்டுமே பக்தி மார்க்கங்களில் ஈடுபாடு கொள்ள முடியும். அல்லது பொது மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடமுடியும்!

இது மேல்நிலை வகுப்பில் நடத்தப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று இதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++=

24 comments:

  1. What about Lord Saturn being lagna lord [capricorn lagna] placed in 9th house. Won't affect the 9th house affairs?

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய ஐயா,

    காலை வணக்கங்கள்.

    ஒரு ஐயம்.

    லக்கினம் வலுப்பெற்று இருப்பதற்கும் லக்கினாதிபதி வலுப்பெற்று இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

    லக்கினம், லக்கினாதிபதி இவற்றில்:

    இதில்

    1. இரண்டும் வலுப்பெற்ற நிலை,

    2. இரண்டுமே வலுவிழந்த நிலை,

    3. லக்கினம் வலுவிழந்து லக்கினாதிபதி நல்ல பலம்,

    4. லக்கினம் நல்ல பலம் ஆனால் லக்கினாதிபதி பலமிழந்த நிலை. இவற்றில்

    கடைசி இரண்டின் வேறுபாடுகள் (இருந்தால்) என்ன?

    நன்றி!

    காலகாலதாசன்
    புவனேஷ்

    ReplyDelete
  3. VANAKAM SIR ..MAHRALAGNAM LAKNATHIPATHI..9TH HOSSE CHAVAIKUTTANI..ATHU ..NALLATHA SIR..

    ReplyDelete
  4. ''1. இரண்டும் வலுப்பெற்ற நிலை,

    2. இரண்டுமே வலுவிழந்த நிலை,

    3. லக்கினம் வலுவிழந்து லக்கினாதிபதி நல்ல பலம்,

    4. லக்கினம் நல்ல பலம் ஆனால் லக்கினாதிபதி பலமிழந்த நிலை. இவற்றில்

    கடைசி இரண்டின் வேறுபாடுகள் (இருந்தால்) என்ன?''

    சகோதரர் புவனேஷின் கேள்விக்கு நான் இப்படி பதில் கூற விரும்புகிறேன்!

    லக்னம் வண்டி என்றால்
    லக்னாதிபதி அதன் அச்சாணி எனலாம்.

    லக்னம் வண்டியின் அளவைத் தான் குறிக்கும்
    லக்னாதிபதி அந்த வாடி ஓடுமா அல்லது மெதுவாக ஓடணுமா!
    அல்லது ஓடாது ஓரிடத்திலே நிற்குமா என்று குறிக்கும் எனலாம்!

    வண்டி சிறியது என்றாலும் கூடப் பரவாயில்லை.. அச்சாணி நன்றாக இருந்து வண்டி நன்றாக ஓடினால் தானே நன்றாக இருக்கும்.:):))

    சரி தானே ஐயா!

    ReplyDelete
  5. வருகை பதிவுடன்
    வழக்கம் போல் சுழல விடுகிறோம்

    தோல்வி நிலையென நினைத்தால்..
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

    வாழ்வை சுமையென நினைத்து..
    தாயின் கனவை மிதிக்கலாமா...

    விடியலுக்கில்லை தூரம் ...
    விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..

    உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
    இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

    ReplyDelete
  6. ஐயா சொன்ன 7 இல் 3 இருக்கிறது. தப்பித்தேன்.

    ஐயா ஒரு சந்தேகம். தனுசு அல்லது மீன லக்னாதிபதி (குரு) கேந்திரம் பெற்றால் அது கேந்திராதிபத்ய தோஷம் கொடுக்குமா அல்லது லக்னாதிபதி என்பதால் லக்னத்தை பார்ப்பதால் தோஷம் இல்லாமல் இருக்குமா.

    ReplyDelete
  7. வாத்தியார் ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
    நல்ல அலசல் பாடம். பழைய பாடம் ஒன்றில் லக்கினாதிபதி 11ம் இடத்தில் இருப்பது முதல் தரமான யோகம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.கேந்திர,கோணங்களில் இருப்பது அடுத்த நிலை என சொல்லப் பட்டுள்ளது.
    இன்றைய பாடத்தில் குறிப்பிட்ட படி கிரக நிலைகள் அமைவது மிக அரிதான சாத்தியமே.ஒரு ஜாதகத்தில் பாவ கிரகங்களான சூரியன்,சனி இரண்டுமே உச்சம்,நேர் எதிர் பார்வையுடன்.சுபரான சுக்கிரன் உச்சம் எந்த கிரகத்தின் பார்வையுமின்றி.
    லக்கினமும் குருவுடன் சேர்க்கை,அத்துடன் இரண்டுமே வர்க்கோத்தமம்.லக்கினத்தில் சந்திரனும் கேதுவும் சேர்க்கை மற்றும் ராகுவின் பார்வை.மிதுன லக்கினம்.
    அலசலுக்கு நன்றி.
    -Peeyes.

    ReplyDelete
  8. Thank you very much sir. Easily understood.

    ReplyDelete
  9. வணக்கம்
    ரிஷப லக்னம் லக்னத்தில் சந்திரன் குரு/ லக்னாதிபதி சுக்ரன் மகரத்தில் த்ரிகோணம் ஏற/ கடகத்தில் வக்ர சனியும்/ விருச்சிகத்தில் அதன் அதிபதி செவ்வாய் சூரியனுடன்/ அஷ்டமத்தில் புதன்/ மற்றும் மேஷத்தில் கேது /துலாமில் ராகு ஆயின் நல்லவரத்துடன் வந்தாரா?

    ReplyDelete
  10. வணக்கம் வாத்தியார்‍
    நான் கும்ப இலக்கினம் இலக்கினாதிபதி சனி 9ல் (துலா இராசி)இருக்கிரார். ஆனால் பெரிய அதிஷ்ரம் ஒன்றும் இல்லை. போராடி தான் வெல்ல வேண்டி இருக்கிறது. இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.

    ReplyDelete
  11. கடக லக்னத்தைச்சூழ்ந்துள்ள கிரகங்களில் செவ்வாய், சூரியன், சனி உள்ளனர்.லக்னத்திற்கு செவ்வாய் யோககாரகர். சூரியன் நட்புக்கிரகம், 2ம் அதிபதி தன் வீட்டிலேயே உள்ளார்.சனிமட்டுமே 7,8க்கு உடையவர்.பாதி நல்லவர் பாதி விரோதி. இருப்பினும் கூட ஜாதகர் பூச நட்சத்திரக்காரர் என்பதால் சனியின் நட்சத்திரகாரர்;சனியின் காலில் பிறந்தவர். லக்கினம் ராசி இரண்டும் ஒன்றேயான கடகத்துக்காரருக்கு மகரத்திலிரிந்து நீச குருவின் 7ம் பார்வை.நீச குருவாக இருந்தாலும் சுய வர்கத்தில் 7 பரல்கள்.நவம்சத்திலும் நீசம் பெற்று குரு வர்கோத்தமம்.இந்த ஜாதகத்தில் லக்னம் வலிமையா உள்ளதா? இல்லையா?

    இப்போது புரிந்திருக்குமே யார் ஜாத்கம் என்று.ஹி.. ஹி.. ஹி?

    ReplyDelete
  12. /////Blogger sugumar said...
    What about Lord Saturn being lagna lord [capricorn lagna] placed in 9th house. Won't affect the 9th house affairs?/////

    லக்கினாதிபதி தனக்குத்தானே கெடுதல்களைச் செய்து கொள்ள மாட்டார்!

    ReplyDelete
  13. ////Blogger arul said...
    good lesson sir/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger Bhuvaneshwar said..
    மதிப்பிற்குரிய ஐயா,
    காலை வணக்கங்கள்.
    ஒரு ஐயம்.
    லக்கினம் வலுப்பெற்று இருப்பதற்கும் லக்கினாதிபதி வலுப்பெற்று இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?
    லக்கினம், லக்கினாதிபதி இவற்றில்:
    இதில்
    1. இரண்டும் வலுப்பெற்ற நிலை,
    2. இரண்டுமே வலுவிழந்த நிலை,
    3. லக்கினம் வலுவிழந்து லக்கினாதிபதி நல்ல பலம்,
    4. லக்கினம் நல்ல பலம் ஆனால் லக்கினாதிபதி பலமிழந்த நிலை. இவற்றில்
    கடைசி இரண்டின் வேறுபாடுகள் (இருந்தால்) என்ன?
    நன்றி!
    காலகாலதாசன்
    புவனேஷ்/////

    ஏராளமான சொத்துக்கள் இருந்து, அது உரிய வயதில் கிடைத்து நாம் மகிழ வேண்டுமென்றால், லக்கினம், லக்கினாதிபதி இருவரும் வலுவாக இருக்க வேண்டும். மாறாக உரிய காலத்தில் கிடைக்காமல், நீதிமன்றம், வம்பு வழக்கு என்று அந்த சொத்திற்காக அலைய நேரிட்டால் இரண்டில் ஒன்று பழுது என்று தெரிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  15. ////Blogger eswari sekar said...
    VANAKAM SIR ..MAHRALAGNAM LAKNATHIPATHI..9TH HOSSE CHAVAIKUTTANI..ATHU ..NALLATHA SIR../////

    சனியுடன், செவ்வாய் கூட்டணி வைத்தால், நம் நாட்டு அரசியல் (தேர்தல்) கூட்டணி போல தலைவலியானதாகும். ஆனாலும் லக்கினாதிபதி ஒன்பதில் இருப்பதால் எல்லாத் துன்பங்களையும் மன்மோகன் சிங்கைப் போல ஊதித் தள்ளி விடுவார்!

    ReplyDelete
  16. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ''1. இரண்டும் வலுப்பெற்ற நிலை,
    2. இரண்டுமே வலுவிழந்த நிலை,
    3. லக்கினம் வலுவிழந்து லக்கினாதிபதி நல்ல பலம்,
    4. லக்கினம் நல்ல பலம் ஆனால் லக்கினாதிபதி பலமிழந்த நிலை. இவற்றில்
    கடைசி இரண்டின் வேறுபாடுகள் (இருந்தால்) என்ன?''
    சகோதரர் புவனேஷின் கேள்விக்கு நான் இப்படி பதில் கூற விரும்புகிறேன்!
    லக்னம் வண்டி என்றால்
    லக்னாதிபதி அதன் அச்சாணி எனலாம்.
    லக்னம் வண்டியின் அளவைத் தான் குறிக்கும்
    லக்னாதிபதி அந்த வாடி ஓடுமா அல்லது மெதுவாக ஓடணுமா!
    அல்லது ஓடாது ஓரிடத்திலே நிற்குமா என்று குறிக்கும் எனலாம்!
    வண்டி சிறியது என்றாலும் கூடப் பரவாயில்லை.. அச்சாணி நன்றாக இருந்து வண்டி நன்றாக ஓடினால் தானே நன்றாக இருக்கும்.:):))
    சரி தானே ஐயா!/////

    சரிதான்! சக்கரம், அச்சாணி உதாரணம் நல்ல உதாரணம். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  17. ////Blogger அய்யர் said...
    வருகை பதிவுடன்
    வழக்கம் போல் சுழல விடுகிறோம்
    தோல்வி நிலையென நினைத்தால்..
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
    வாழ்வை சுமையென நினைத்து..
    தாயின் கனவை மிதிக்கலாமா...
    விடியலுக்கில்லை தூரம் ...
    விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
    உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
    இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் /////..

    நல்லது. உங்களின் வருகைப்பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  18. /////Blogger thanusu said...
    ஐயா சொன்ன 7 இல் 3 இருக்கிறது. தப்பித்தேன்.
    ஐயா ஒரு சந்தேகம். தனுசு அல்லது மீன லக்னாதிபதி (குரு) கேந்திரம் பெற்றால் அது கேந்திராதிபத்ய தோஷம் கொடுக்குமா அல்லது லக்னாதிபதி என்பதால் லக்னத்தை பார்ப்பதால் தோஷம் இல்லாமல் இருக்குமா.////

    நீங்கள் கப்பலில் பணி செய்வதால், உங்களுக்கு எந்த தோஷமும் கிடையாது. ஆழ் கடலில் நீந்தி வந்து உங்களைப் பிடிப்பதற்கு எந்த தோஷத்திற்கு துணிவு இருக்காது:-)))) எந்த நிலையில் இருந்தாலும் குரு நன்மையே செய்யும். அது முதல் நிலை சுபக்கிரகம். அதை மனதில் வையுங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியார் ஐய்யாவிற்கு வணக்கங்கள்.
    நல்ல அலசல் பாடம். பழைய பாடம் ஒன்றில் லக்கினாதிபதி 11ம் இடத்தில் இருப்பது முதல் தரமான யோகம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.கேந்திர,கோணங்களில் இருப்பது அடுத்த நிலை என சொல்லப் பட்டுள்ளது.
    இன்றைய பாடத்தில் குறிப்பிட்ட படி கிரக நிலைகள் அமைவது மிக அரிதான சாத்தியமே.ஒரு ஜாதகத்தில் பாவ கிரகங்களான சூரியன்,சனி இரண்டுமே உச்சம்,நேர் எதிர் பார்வையுடன்.சுபரான சுக்கிரன் உச்சம் எந்த கிரகத்தின் பார்வையுமின்றி.
    லக்கினமும் குருவுடன் சேர்க்கை,அத்துடன் இரண்டுமே வர்க்கோத்தமம்.லக்கினத்தில் சந்திரனும் கேதுவும் சேர்க்கை மற்றும் ராகுவின் பார்வை.மிதுன லக்கினம்.
    அலசலுக்கு நன்றி.
    -Peeyes./////

    ஒவ்வொரு பாடத்தையும் உங்கள் ஜாதகத்துடன் வைத்து ஒப்பிட்டுப் பார்க்காமல். படித்து முடித்தவுடன், 337 டானிக்கில் இரண்டு மடக்குக் குடித்துவிட்டு, அடுத்த வேலையில் கவனத்தைச் செலுத்துங்கள் அன்பர் பொன்னுசாமி அவர்களே!

    ReplyDelete
  20. /////Blogger C Jeevanantham said...
    Thank you very much sir. Easily understood.////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  21. /////Blogger சர்மா said...
    வணக்கம்
    ரிஷப லக்னம் லக்னத்தில் சந்திரன் குரு/ லக்னாதிபதி சுக்ரன் மகரத்தில் த்ரிகோணம் ஏற/ கடகத்தில் வக்ர சனியும்/ விருச்சிகத்தில் அதன் அதிபதி செவ்வாய் சூரியனுடன்/ அஷ்டமத்தில் புதன்/ மற்றும் மேஷத்தில் கேது /துலாமில் ராகு ஆயின் நல்லவரத்துடன் வந்தாரா?////

    எல்லோருமே நல்ல வரத்துடன் வந்துள்ளோம். 337 ஊக்க மருந்தை மறந்து விட்டீர்களே - நியாயமா?

    ReplyDelete
  22. ////Blogger Jeyram said...
    வணக்கம் வாத்தியார்‍
    நான் கும்ப இலக்கினம் இலக்கினாதிபதி சனி 9ல் (துலா இராசி)இருக்கிரார். ஆனால் பெரிய அதிஷ்ரம் ஒன்றும் இல்லை. போராடி தான் வெல்ல வேண்டி இருக்கிறது. இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.////

    லக்கினாதிபதி திரிகோணம் ஏறியுள்ளதால் போராடும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். அதற்கு சந்தோஷப்படுங்க்ள்!

    ReplyDelete
  23. ///Blogger kmr.krishnan said...
    கடக லக்னத்தைச்சூழ்ந்துள்ள கிரகங்களில் செவ்வாய், சூரியன், சனி உள்ளனர்.லக்னத்திற்கு செவ்வாய் யோககாரகர். சூரியன் நட்புக்கிரகம், 2ம் அதிபதி தன் வீட்டிலேயே உள்ளார்.சனிமட்டுமே 7,8க்கு உடையவர்.பாதி நல்லவர் பாதி விரோதி. இருப்பினும் கூட ஜாதகர் பூச நட்சத்திரக்காரர் என்பதால் சனியின் நட்சத்திரகாரர்;சனியின் காலில் பிறந்தவர். லக்கினம் ராசி இரண்டும் ஒன்றேயான கடகத்துக்காரருக்கு மகரத்திலிரிந்து நீச குருவின் 7ம் பார்வை.நீச குருவாக இருந்தாலும் சுய வர்கத்தில் 7 பரல்கள்.நவம்சத்திலும் நீசம் பெற்று குரு வர்கோத்தமம்.இந்த ஜாதகத்தில் லக்னம் வலிமையா உள்ளதா? இல்லையா?
    இப்போது புரிந்திருக்குமே யார் ஜாத்கம் என்று.ஹி.. ஹி.. ஹி?/////

    மூன்று முறை ஹி.. ஹி.. ஹி போட்டுள்ளதால் (எழுதியுள்ளதால்) இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்!:-))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com