மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 6 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள். பங்கேற்றவர்களைப் பாராட்டத் த்யங்காதீர்கள்
இன்றைய மாணவர் மலரை 6 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள். பங்கேற்றவர்களைப் பாராட்டத் த்யங்காதீர்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------பொய்யும் புறமும் வேண்டாமே!
ஆக்கம்: ஆலாசியம்.கோ. சிங்கப்பூர்
பொய் சொல்லால் ஆகாதப்பா நம்பி
மெய்க்குப் புறஞ் சொல்லல் ஆகாதப்பா!
கத்தியை கழுத்தில் அழுத்திய போதும்
கத்தி, கத்தி மிரட்டியே நினைக்கொடுங்
கயவர்கள் கூட்டம் சூழ்ந்துக் கடும்
பயம் காட்டிய போதிலும் - கொடும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி
தீயப்புறஞ் சொல்லல் ஆகாதப்பா!
பெட்டி நிறையப் பணம் தந்த போதிலும்
கட்டியணைத்து உச்சி முகர்ந்த போதிலும்
மெச்சியுனை மேனித் தழுவிய போதிலும்
இச்ஜகத்தை எழுதிக் கொடுத்தப் போதிலும்
பிச்சைபுக நேர்ந்திட்டப் பொழுதிலும் -மனம்
இச்சைகொண்டே ஆட்டி வைத்தப் போதிலும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி!
பேய்க்குணப் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!
தாய் தன்னை கொல்வேன் என்றாலும் - நல்
ஆயத்தந்தையை வெட்டி வீழ்த்தவே வந்தாலும்
சேய்தனை கடத்திச் சென்றாலும் - நின்
நேய மனைவியை நெருப்பிலிட துணிந்தாலும்
தாயனத்தகும் வேதமறைதனை வீதியில் எறிந்தாலும்
தூய உண்மையன்றி; வேறுபலக் கேடுறும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பீஇ - அறம்
மாய்க்கும் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!
பொன் பொருள் போனாலும் -புது
மண் மனையும் போனாலும்; இளங்
கன்றோடு பசுவும்; ஏருழும் எருதுகளோடு;
வண்டி, மாடுகளும் போனாலும் - நம்
வாழ்வதே போன தென்று - நின்
வாழும் வகையறியாது வயிறெரிந்து நின்றாலும்
பாழும்பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி!
தாழும் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!
நாளுமிதை மறவாமல்; நான்மறை உண்மையிதை
முருகவேல்கொண்டே உயிரில் எழுதிடப்பா -அருக
முக்கண்ணன் மகன் முருகனுனக்கு; எங்கும்
எக்கணமும்; துணைவரு வானப்பா -அதனாலே
முக்காலமும் தீமையே தரும்; பெருந்தப்பான
பொய்சொல்லல் ஆகாதப்பா நம்பி - விடக்
காயொப்ப புறஞ்சுவைத்தே அரும்பெரும் மானிடப்
பிறப்பே மாண்டிட கூடாதப்பா!
இலக்கியவாதி, பாரதி பித்தர், அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தஞ்சைப் பெரியவர் திரு வெ. கோபாலன் ஐயாவிற்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்.
கவிதைப் பிறந்த சூழல் நமது தஞ்சாவூரார் திருவாளர் வெ. கோபாலன் ஐயா அவர்களின் வலைப் பதிவில் உலாவரும் போது என்னை வாசித்த இந்த இடத்தில் ஒரு பொறித் தட்டியதால் பிறந்ததிந்த கவிதை. மேலும் திரு கோபாலன் ஐயாவிற்கே இந்தக் கவிதை சமர்ப்பணம்.
“இவர்கள் இருவருக்காகவும் மதுரை தேசபக்தர், பிரபல பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆஜரானார். மதுரையில் வழக்கு நடந்தது. ஆங்கிலேயரான மன்றோ என்பவரின் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் வாதம் போலீசாரின் பொய் வழக்கை நிர்மூலமாக்கியது.
ஜார்ஜ் ஜோசப் முன் வைத்த அலிபி முக்கியமானது. காமராஜ், முத்துச்சாமி இருவரும் விருதுநகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் அவ்விருவரும் அவ்வூரில் நடந்த பொருட்காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியான அனந்தராமகிருஷ்ணன் என்பாருடன் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.
உயர் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அனந்தராமகிருஷ்ணன் பொய்சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். காமராஜ் பொருட்காட்சியில் தன்னுடன் தான் இருந்தார் என்பதை அவர் உறுதி செய்தார். உண்மை பேசிய குற்றத்துக்காக அந்த அதிகாரி உடனே அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.”
முழுவதையும் படித்து முடிக்க; முடுக்க வேண்டினால், இங்கே சொடுக்கவும்:
http://tamilnaduthyagigal.blogspot.com/2011/08/blog-post_06.html
ஆக்கம்: ஆலாசியம். கோ, சிங்கப்பூர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
புதிய முயற்சியாக சகோத்ரி தேமொழி அவர்கள் கணினியில் வரைந்த ஓவியம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
சொல்லின் செல்வர்
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்;படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்பார்கள்.
இந்தச் சொல்லடைவு பொருளற்ற சொற் குவியல்களைப் பற்றி சிறிது அயர்ச்சியுடன் அறிவாளிகள் சொல்லியது.
ஆனாலும் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
சொன்னாலும் துக்கமடா.. சொல்லாவிட்டால் கஷ்டமடா...
வாய்க் கொழுப்பு சில சமயம் சீலையில் வழிந்து விடத்தான் செய்கிறது.
அதற்காக எல்லோரும் மெளனம் காத்தால் செயல்பாடுகள் நின்று போகும்.
ஊமைக்கு உளறுவாயன் தேவலை...
தீயினார் சுட்டதைப் 'புண்' என்ற வாசுகியின் கணவர் நாவினாற் சுட்டதை 'வடு', 'மறையாத வடு' என்று சொல்லிவிட்டார். புண் ஆறினாலும் வடு நினைவு
படுத்திக் கொண்டே இருக்கும்.
'சொல்லின் செல்வர்' என்று ஆஞ்சனேய மூர்த்தியைக் கம்பன் சொல்வார். அதனையே சிலேடையாக்கி '(நான்) சொல்லின் (மற்றவர்) செல்வர்' என்பார் கிவாஜ. (வாரியாரோ?); என்ன பொருள்? 'நான் பேசத் துவங்கினால், பேச்சு பிடிக்காமல் மக்கள் கலைந்து செல்வர்' என்று பொருள்படும்.
முன்பு இருமுறை 'இசைவாகப் பேசுவது எப்படி?"என்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றி நான் எழுதியதை ஐயா வெளியிட்டுள்ளார்கள்.
இப்போது எப்படி பேசக் கூடாது என்பதற்கு ஓரிரண்டு நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன்.
சுதந்திரப் போராட்டக் காலத் தலைவர்களுக்கு அலங்காரமாகப் பேச வராது.நேரடியாகவும் சுருக்கமாகவும்தான் பேசுவார்கள்.
மேடைப் பேச்சையே ஒரு கலையாக மாற்றியதில் திராவிடக் கட்சிகளுக்கே பெருமை சேர வேண்டும். 'அவர்களே,அவர்களே' என்று அவர்கள் நீட்டி முழக்கிப் பேசுவது ஆரம்பக் கால கட்டத்தில் ரசிக்கப்பட்டாலும் பின்னர் அந்தப் பாணி சிறிது அயர்வையே கொடுத்தது. இருந்தாலும் கேட்பவர்களைப் பற்றியோ, நேர விரயம் பற்றியோ அக்கறை கொள்ளாமல் இன்றளவும் அப்படியே விளித்து வருகிறார்கள்.
1967 தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெருந்தலைவர் காமராஜர் "படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்" என்று ஒரு கூட்டத்தில் கூறிவிட்டார்.
உண்மையாகவே அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதமே, 'நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து, எதிர்க் கட்சிகளை பிளவு படுத்தி வலு விழக்கச் செய்து, தான் குறைந்த வாக்குகள் பெற்றும் காங்கிரஸ் அரசோச்சுகிறது. தன்னை விட்டால் மக்களுக்கு வேறு நாதியில்லை என்ற மெத்தனம் கொண்டு விட்டது'என்பதுதான்.
பெருந் தலைவரின் இந்தப் பேச்சு எதிர்கட்சிகளின் வாதத்தை உறுதி செய்வதாக அமைந்தது. "பாருங்கள். எவ்வளவு அகங்காரம். மக்களிடம் சென்று வாக்குக்
கேட்காமலேயே படுத்துக்கொண்டே வெற்றி பெருவாராம்"என்று பட்டி தொட்டி எல்லாம் குட்டித் தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். இராஜாஜி மேடை
மேடையாக ஏறி "அவர் படுப்பது நிச்சயம்! ஜெயிக்கிறதுதான் சந்தேகம்'என்று பேசினார்.'குல்லுகபட்டர்' வாக்கு பலித்தேவிட்டது.
ஆம்!உண்மையாகவே காமராஜர் ஒரு விபத்துக்குள்ளாகி மருத்துவமனை சென்று படுக்கும்படி ஆகிவிட்டது.தேர்தலிலும் ஒரு பிரபலம் இல்லாத கல்லூரி மாணவனிடம் தோற்றுப் போனார் பெருந்தலைவர்.
மகாத்மா காந்திஜியை சர்ச்சிலுக்கு சிறிதும் பிடிக்காது. 'அரை நிர்வாணப் பக்கிரி'என்று மாஹாத்மாவை சர்ச்சில் குறிப்பிட்டுள்ளார். காந்திஜி அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. இன்று சர்ச்சிலை விட இங்கிலாந்தில் புகழ் பெற்றவராக நம் அண்ணல் விளங்குகிறார்.ஆனால் சர்ச்சில் அண்ணலைப் பற்றிச் சொன்னது வடுவாக நம் மனதில் பந்திந்து விட்டது.
அறிஞர் அண்ணாவும் மற்ற திராவிடத் தலைவர்களும், நாடகம், சினிமா மூலம்தான் மக்களிடம் புகழ் பெற்றார்கள்.அதனால் அவர்களை சிறிது ஒழுக்கத்தில் கொஞ்சம் 'வீக்' என்பது போல எதிர்கட்சிகள் இரண்டாந் தரவரிசைப் பேச்சாளர்களை விட்டுப் பேச வைப்பார்கள்.
அப்போது நடிகைகளில் பானுமதி புகழோடு இருந்த சமயம்.அண்ணா அவர்களோடு பானுமதியை முடிச்சுப்போட்டு ;கிசு கிசு; மிகவும் பாபுலர்.
அண்ணாவிடமே கேட்கப்பட்டது.அண்ணா சொன்னதாகச்சொல்வார்கள்:
"நானும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல; பானுமதியும் படிதாண்டா பத்தினியல்ல.."
இந்தப் பேச்சு அண்ணவின் மதிப்பைச் சற்றே குறைப்பதாகவே உள்ளது. அவர் அப்படி சொல்லியிருந்தால் பனுமதியின் கெளரவத்தைக் கணக்கில் எடுக்காமல் பேசப்பட்ட வார்த்தை.பானுமதி இதற்கு எவ்வாறு எதிர் வினை ஆற்றினார் என்று தெரியவில்லை.
சமீபத்தில் நாம் பார்த்த உதாரணம் வடிவேலு.படங்களில் நம்மையெல்லாம் சிரிக்க வைததவர் நிஜ வாழ்க்கையில் சிரிப்பாகச் சம்பவங்களை எடுத்துக் கொள்ளத் தெரியாமல், வகை தொகை தெரியாமல் மாட்டிக் கொண்டு திணறுகிறார்.
ஒரு நாள் நள்ளிரவில் படபிடிப்பு முடிந்து வீடு திரும்புகிறார் வடிவேலு. அவர் வீட்டு அருகினில் விஜயகாந்த் கட்சியினர் அவர்கள் அலுவலகத்தின் முன்னர்
வழியை மறைத்துக் கொண்டு நிற்கின்றனர்.
வழிவிடச் சொல்லி சினத்துடன் கத்துகிறார் வடிவேலு. வார்த்தை தடிக்கிறது. விஜயகாந்தைப்பற்றி ஏக வசனத்தில் பேசி விடுகிறார்.
அன்று பிடித்தது சனியன். வீம்புக்கு என்னமோ செய்வார்களாமே அது போலக் கிளம்பி தேர்தலில் எதிர்பிரசாரம் செய்து, தேர்தல் முடிவு வந்ததும்
ஓரங் கட்டப்பட்டு பட வாய்ப்பை இழந்து நிற்கிறார் வடிவேலு. சீந்துவாரில்லை.
இது தானய்யா வாய்க்கொழுப்பு சீலையில் வழிவது என்பது.
சரி சரி! மேலும் வளர்த்தினா இங்கேயும் அதுவே ஆகிவிடும்.வரட்டா...?
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
இன்று வகுப்பறையில் இடம் பெற்ற நகைச்சுவை மடலைக் கண்டதும் பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் ஒரு பேராசிரியர் கூறிய
கதையை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
ஒரு தந்தை தனது மகனை ஊரிலேயே கண்டிப்புக்கும் சிறந்த கல்வியை பயிற்றுவிப்பதற்ககும் பெயர் பெற்ற பள்ளியில் சேர்ப்பதற்க்காக அழைத்துச் சென்று தலைமையாசிரியரைச் சந்தித்து தனது மகன் புத்தி கூர்மையான பையன் என்றும் அவனிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் யார் அவன் கருத்துக்கு மாறுபட்ட கருத்தைக் கூறினாலும் பந்தயம் எவ்வளவு? என்று கேட்டு விடுகிறான், எப்படியாவது அவனை இந்த பழக்கத்தை விடுத்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தலைமை ஆசிரியரும்,பையனின் தந்தையிடம், கவலையை விடுங்கள், என்னிடம் பையனை ஒப்படைத்து விட்டீர்கள் அல்லவா? நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அடுத்த முறை என்னைச் சந்திக்கும் பொழுது உங்கள் மகன் இந்தப் பந்தயம் கட்டும் பழக்கத்தையே விட்டுவிட்டான் என்று கூறுவீர்கள் பாருங்கள் என உறுதி கூறி அனுப்பி வைத்தார்.
ஒரு வாரம் சென்றது, தகப்பனார் குறிப்பிட்ட பையன் உடற்பயிற்சி வகுப்பிற்க்காக மாணவர்களுடன் வரிசையில் சென்று கொண்டிருப்பதை கண்ட தலைமையாசிரியர், அவனை அழைத்து தம்பி! உன் தந்தை தானே சென்ற வாரம் உன்னை என்னிடம் உன்னை அழைத்து வந்து பையனுக்கு எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டும் பழக்கம் இருக்கிறது எப்படியாவது என் மகனை நல்வழிப் படுத்துங்கள் என்று கூறினார் என்று கேட்க ,மாணவனும் ஆமாம் ஐயா ! என்றான்.
அதன் பின்னர்,தலைமை ஆசிரியரும் பையனை எச்சரிக்கும் தொனியில், என் கண்டிப்பைப்பற்றி கேள்விப்பட்டிருப்பாய் என நினைக்கிறேன்,ஒழுங்காக படிக்க வேண்டும் இப்பொழுது வரிசையில் போய் சேர்ந்து கொள் என்றார்.
புத்திசாலி பையனோ, ஐயா! ஒரு சந்தேகம் கேட்கலாமா? என்றான், அதற்கு அவரும், “என்ன சந்தேகம் கேள்” என்றார். பையனோ தன்னுடைய பழக்க
தோஷத்தில், ஐயா உங்கள் முதுகில் வலப்பக்கம் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்கு மச்சம் உள்ளது தானே என்று கேட்டான்.
அதற்குத் தலைமை ஆசிரியர் மறுக்க, பையனோ சார்! நேற்று உங்களுடைய வீட்டின் பின்புறம் நீங்கள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் பார்த்தேன்.
பந்தயம் 25 ரூபாய், ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கேட்டான்.
பையனின் தகப்பனாருக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணிய தலைமை யாசிரியரும் பையனைத் திருத்த சரியான வாய்ப்பு மிகச் சீக்கிரமே அமைந்த
மகிழ்ச்சியில், தம்பீ! இங்கு வேண்டாம், என் அறைக்கு வா நீ கூறுவது போல என் முதுகில் மச்சம் இல்லாத பட்சத்தில்,25 ரூபாயைக் கொடுப்பதுடன் இந்த
பந்தயம் கட்டும் பழக்கத்தையும் முற்றிலுமாக விட்டுவிட வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றார், பையனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.
தனது முதுகைப் பற்றித் தனக்குத் தெரியாதா என்ற இறுமாப்பில் தலைமை ஆசிரியரும் அவருடைய சட்டையைக் கழற்ற அங்கே பையன் கூறியது போல எந்த மச்சமும் இல்லை. உடனே தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டு பையனும் வகுப்பறைக்குச் சென்று விட்டான். பையனை திருத்திவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் தலைமையாசிரியரும் மாணவனின் தந்தைக்குப் பள்ளியில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, வெற்றிப் பெருமிதத்தில், உங்களுடைய மகன் இனிமேல் யாரிடமும் பந்தயமே கட்ட மாட்டான் என்று கடிதம் எழுதினார்.
அதற்குப் புத்திசாலி மாணவனின் தந்தை பின் வருமாறு பதில் கடிதம் எழுதினார்.
ஐயா,
உங்கள் பள்ளியில் என் பையன் படித்தது போதும். அவனுடைய பந்தயம் கட்டும் பழக்கத்தை நீங்கள் திருத்தியதும் போதும், உங்கள் பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே, அவன்,என்னிடம் சேர்ந்து ஒரு மாதத்திற்குள்ளாக, தலைமை ஆசிரியரின் சட்டையை கழற்றச் செய்து அதையும் அவர் வாயிலாகவே உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன். 500 ரூபாய் பந்தயம் என்று கூறியிருந்தான், தற்பொழுது, உங்களால், நான் அவனிடம் 500 ரூபாயை இழக்க வேண்டும் அதனால் என் மகனுடைய மாற்றுச் சான்றிதழை அனுப்பி வைக்கவும்.
- ஆக்கம், சுந்தரம், மதுரை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
சின்னமாமா பெரிய மாமா
ஆக்கம்: தனுசு
+++++++++++++++++++++
என் மனைவியையும் மகளையும் ஒரு உறவினரின் வீட்டு கல்யாணத்திற்கு அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்தேன். அன்று ஞாயிறு என்பதால், நல்ல தூக்கத்தை முடித்து விட்டு சோம்பலிலேயே இருந்தேன்.
தனிமையில் இருப்பவர்களுக்கும், தனித்தே இருப்பவர்களுக்கும் சாப்பாடு என்பது பெரிய விசயமே இல்லை. கிடைத்ததை சாப்பிடுவார்கள் கிடைக்கா விட்டாலும் இருப்பார்கள். இருப்பதை சாப்பிடுவதற்கோ வெளியில் போய் சாப்பிடுவதற்கோ அப்படி ஒரு சோம்பேறித்தனம் உடம்போடு ஒட்டி இருக்கும்.எழுந்து குளிப்பதற்கே மதியம் ஆகிவிடும். இதுதான் பிரமச்சாரி களுக்கும் தனியாக இருப்பவர்களுக்கும் இருக்கு ஒரே ஒற்றுமை. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
என் மாமாக்கள் இருவரும் திடீரென்று என்னைப் பார்க்கக் கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தனர்!
"வாங்க மாமா வாங்க....வாங்க’ என்று வரவேற்றேன்
“என்னடா.... மாப்பிள்ளை ....எப்பிடி இருக்கிறாய் சவுக்கியமா...”.பலமாக விசாரித்தனர் இருவரும்
“நல்ல இருக்கிறேன் மாமா...... மாலாவும், மகளும் கல்யாணத்திற்கு போய் இருக்கிறார்கள் .....” வீட்டில் மனைவி இல்லாததை நாசுக்காக சொன்னேன்.
“ஏன்டா.... நீ போகலியா..” நான் போகாததைக் கேட்டனர்
"இல்லை மாமா, கொஞ்சம் வேலை இருந்தது அதான்". மாமா என்பதால் பவ்யமாக பதில் சொன்னேன்.
"சரி மாமா ரெண்டு பெரும் டீ சாப்பிடுங்க" என்று சொல்லி தேநீர் போட்டு எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தேன்.
"இந்தாங்க மாமா டீ குடிங்க" என்று சொன்னவன் தொடர்ந்து சொன்னேன்:
"சரி மாமா நீங்க ரெண்டு பேரும் வெய்யிலில் வந்து இருக்கிறிர்கள். ஒய்வு எடுங்க .மதிய சாப்பாட்டுக்கு நேரமாகிறது. நான் சாப்பாடை ரெடி பண்றேன்"
என்றேன் - சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்.
"என்னடா மாப்ளை பொண்டாட்டி இல்லாத நேரம் வந்து தொந்திரவு செய்றானுங்க என்று நினைக்கிறியா"
"சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. ஊரிலிருந்து ஒரு வேலையா வந்த நீங்க அப்படியே போகாம என்னை பார்க்கணுமேன்னு வந்தீங்களே அதுவே பெரிய விசயம். நீங்க ரெண்டு பேருமே கடை சாப்பாடு சாப்பிடமாட்டீர்கள் அதனாலதான் நானே தயார் பண்ணுகிறேன் என்றேன்"
சாப்பாடு இன்றியே அவர்களை அனுப்பி வைக்க முயற்சி செய்தேன்.
அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்பதால் சமையல் செய்யத் தயாரானேன்.
"சரி மாமா வாங்களேன் பேசிக்கிட்டே கடைக்கு போய் காய்கறி வாங்கி வருவோம்"
"இல்லடா மாப்ளே வந்த அசதி அப்பிடியே உடம்புல இருக்கு"
"சரி சரி மாமா, நீங்க ரெண்டு பெரும் ரெஸ்ட் எடுங்க நான் போய் வாங்கி வருகிறேன்" சொல்லிவிட்டு கடைத்தெருவுக்கு கிளம்பினேன்.
நல்ல காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிகொண்டு வியர்க்க வியர்க்க திரும்ப வீடு வந்து சேர்ந்தேன்.
"அட என்ன மாமா சும்மாவே உட்கார்ந்துகிட்டு இருக்கிறீங்க T.V பார்க்க வேண்டியதுதானே" என்று சொன்னவன் TV யை ஆன் செய்துவிட்டு
சமையலறைக்குள் சென்றேன்.
"TV எல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை சும்மா பேசிக்கிட்டே இருக்கிறோம்" என்றார் இருவரில் பெரியவர்.
"அப்படின்னா இப்படி வாங்க இந்த காய்கறியை வெட்டுங்க. நான் சமைக்கிறேன் "
"இல்லைடா மாப்பிளை வெய்யிலில் வந்தது தலை எல்லாம் வலிக்குது. நாங்க அப்பிடியே சத்த படுத்துக்கிட்டு இருக்கோம்டா " என்று சொல்லி இருவரும்
காலைகளை நீட்டிப் படுத்துக்கொண்டு விட்டார்கள்.
"சரி மாமா நீங்க ரெஸ்ட் எடுங்க " நான் சமையல் வேலையைத் துவங்கினேன்.
சமையலில் பெரிய நிபுணத்துவம் இல்லை. இருந்தும் வாங்கி வந்த தயிரில் தண்ணீரை விட்டு மோராக்கினேன், குக்கரில் அரிசியைப் போட்டு சோறாக்கினேன், பீன்சைப் பொரியலாக்கினேன், தக்காளியும் புளியையும் போட்டு ரசமாக்கினேன், பருப்பை வேக வைத்து முருங்கைக்காயை வெட்டிப்போட்டு சாம்பாராக்கினேன். அப்பளம் பொரித்தேன். பழங்களை வெட்டித் தட்டில் வைத்தேன்.
ஒரு வழியாக அனைத்தையும் முடித்து விட்டு,"மாமா வாங்க ரெண்டு பெரும்.சாப்பிடலாம் "என்று அழைத்தேன்.
படுத்திருந்த இருவரும் எழுந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதில் பெரிய மாமா சின்ன மாமாவைப் பார்த்து:
“தம்பி, நாமும் வந்ததிலிருந்து ஒரு வேலையையும் செய்யவில்லை. மாப்பிளை கடைத்தெருவுக்கு கூப்பிட்டான். நாம போகவில்லை. காய்கறி வெட்டக் கூப்பிட்டான் அதுக்கும் போகல்லை, சமையலில் ஒத்தாசைக்குக் கூப்பிட்டான் அதுக்கும் போகல்லை, இப்போது சாப்பிடக் கூப்பிடுகிறான் .இதற்கும் நாம போகவில்லை என்றால் அவன் கோவித்துக் கொள்வான் வா சாப்பிடப் போகலாம்” என்று எழுந்தார். கூடவே சின்ன மாமாவும் டைனிங் டேபிளை நோக்கி நடந்தார்.
ஊட்டிவிடச் சொல்லாமல் அதுக்காவது எழுந்து வந்தார்களே சாமிகளா!
-தனுசு-
வாழ்க வளமுடன்!
ஆக்கம்: ஆலாசியம்.கோ. சிங்கப்பூர்
பொய் சொல்லால் ஆகாதப்பா நம்பி
மெய்க்குப் புறஞ் சொல்லல் ஆகாதப்பா!
கத்தியை கழுத்தில் அழுத்திய போதும்
கத்தி, கத்தி மிரட்டியே நினைக்கொடுங்
கயவர்கள் கூட்டம் சூழ்ந்துக் கடும்
பயம் காட்டிய போதிலும் - கொடும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி
தீயப்புறஞ் சொல்லல் ஆகாதப்பா!
பெட்டி நிறையப் பணம் தந்த போதிலும்
கட்டியணைத்து உச்சி முகர்ந்த போதிலும்
மெச்சியுனை மேனித் தழுவிய போதிலும்
இச்ஜகத்தை எழுதிக் கொடுத்தப் போதிலும்
பிச்சைபுக நேர்ந்திட்டப் பொழுதிலும் -மனம்
இச்சைகொண்டே ஆட்டி வைத்தப் போதிலும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி!
பேய்க்குணப் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!
தாய் தன்னை கொல்வேன் என்றாலும் - நல்
ஆயத்தந்தையை வெட்டி வீழ்த்தவே வந்தாலும்
சேய்தனை கடத்திச் சென்றாலும் - நின்
நேய மனைவியை நெருப்பிலிட துணிந்தாலும்
தாயனத்தகும் வேதமறைதனை வீதியில் எறிந்தாலும்
தூய உண்மையன்றி; வேறுபலக் கேடுறும்
பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பீஇ - அறம்
மாய்க்கும் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!
பொன் பொருள் போனாலும் -புது
மண் மனையும் போனாலும்; இளங்
கன்றோடு பசுவும்; ஏருழும் எருதுகளோடு;
வண்டி, மாடுகளும் போனாலும் - நம்
வாழ்வதே போன தென்று - நின்
வாழும் வகையறியாது வயிறெரிந்து நின்றாலும்
பாழும்பொய் சொல்லல் ஆகாதப்பா நம்பி!
தாழும் புறஞ்சொல்லல் ஆகாதப்பா!
நாளுமிதை மறவாமல்; நான்மறை உண்மையிதை
முருகவேல்கொண்டே உயிரில் எழுதிடப்பா -அருக
முக்கண்ணன் மகன் முருகனுனக்கு; எங்கும்
எக்கணமும்; துணைவரு வானப்பா -அதனாலே
முக்காலமும் தீமையே தரும்; பெருந்தப்பான
பொய்சொல்லல் ஆகாதப்பா நம்பி - விடக்
காயொப்ப புறஞ்சுவைத்தே அரும்பெரும் மானிடப்
பிறப்பே மாண்டிட கூடாதப்பா!
இலக்கியவாதி, பாரதி பித்தர், அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தஞ்சைப் பெரியவர் திரு வெ. கோபாலன் ஐயாவிற்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்.
கோபாலன் ஐயா அவர்கள் தனது நூலகத்தில் |
“இவர்கள் இருவருக்காகவும் மதுரை தேசபக்தர், பிரபல பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆஜரானார். மதுரையில் வழக்கு நடந்தது. ஆங்கிலேயரான மன்றோ என்பவரின் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் வாதம் போலீசாரின் பொய் வழக்கை நிர்மூலமாக்கியது.
ஜார்ஜ் ஜோசப் முன் வைத்த அலிபி முக்கியமானது. காமராஜ், முத்துச்சாமி இருவரும் விருதுநகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் அவ்விருவரும் அவ்வூரில் நடந்த பொருட்காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியான அனந்தராமகிருஷ்ணன் என்பாருடன் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.
உயர் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அனந்தராமகிருஷ்ணன் பொய்சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். காமராஜ் பொருட்காட்சியில் தன்னுடன் தான் இருந்தார் என்பதை அவர் உறுதி செய்தார். உண்மை பேசிய குற்றத்துக்காக அந்த அதிகாரி உடனே அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.”
முழுவதையும் படித்து முடிக்க; முடுக்க வேண்டினால், இங்கே சொடுக்கவும்:
http://tamilnaduthyagigal.blogspot.com/2011/08/blog-post_06.html
ஆக்கம்: ஆலாசியம். கோ, சிங்கப்பூர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
சகோதரி தேமொழி வரைந்த வரைபடம் |
படம் வரைவதற்கு சகோதரி பயன்படுத்திய I' Pad |
3
சொல்லின் செல்வர்
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்;படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்பார்கள்.
இந்தச் சொல்லடைவு பொருளற்ற சொற் குவியல்களைப் பற்றி சிறிது அயர்ச்சியுடன் அறிவாளிகள் சொல்லியது.
ஆனாலும் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
சொன்னாலும் துக்கமடா.. சொல்லாவிட்டால் கஷ்டமடா...
வாய்க் கொழுப்பு சில சமயம் சீலையில் வழிந்து விடத்தான் செய்கிறது.
அதற்காக எல்லோரும் மெளனம் காத்தால் செயல்பாடுகள் நின்று போகும்.
ஊமைக்கு உளறுவாயன் தேவலை...
தீயினார் சுட்டதைப் 'புண்' என்ற வாசுகியின் கணவர் நாவினாற் சுட்டதை 'வடு', 'மறையாத வடு' என்று சொல்லிவிட்டார். புண் ஆறினாலும் வடு நினைவு
படுத்திக் கொண்டே இருக்கும்.
'சொல்லின் செல்வர்' என்று ஆஞ்சனேய மூர்த்தியைக் கம்பன் சொல்வார். அதனையே சிலேடையாக்கி '(நான்) சொல்லின் (மற்றவர்) செல்வர்' என்பார் கிவாஜ. (வாரியாரோ?); என்ன பொருள்? 'நான் பேசத் துவங்கினால், பேச்சு பிடிக்காமல் மக்கள் கலைந்து செல்வர்' என்று பொருள்படும்.
முன்பு இருமுறை 'இசைவாகப் பேசுவது எப்படி?"என்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றி நான் எழுதியதை ஐயா வெளியிட்டுள்ளார்கள்.
இப்போது எப்படி பேசக் கூடாது என்பதற்கு ஓரிரண்டு நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன்.
சுதந்திரப் போராட்டக் காலத் தலைவர்களுக்கு அலங்காரமாகப் பேச வராது.நேரடியாகவும் சுருக்கமாகவும்தான் பேசுவார்கள்.
மேடைப் பேச்சையே ஒரு கலையாக மாற்றியதில் திராவிடக் கட்சிகளுக்கே பெருமை சேர வேண்டும். 'அவர்களே,அவர்களே' என்று அவர்கள் நீட்டி முழக்கிப் பேசுவது ஆரம்பக் கால கட்டத்தில் ரசிக்கப்பட்டாலும் பின்னர் அந்தப் பாணி சிறிது அயர்வையே கொடுத்தது. இருந்தாலும் கேட்பவர்களைப் பற்றியோ, நேர விரயம் பற்றியோ அக்கறை கொள்ளாமல் இன்றளவும் அப்படியே விளித்து வருகிறார்கள்.
1967 தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெருந்தலைவர் காமராஜர் "படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்" என்று ஒரு கூட்டத்தில் கூறிவிட்டார்.
உண்மையாகவே அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதமே, 'நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்து, எதிர்க் கட்சிகளை பிளவு படுத்தி வலு விழக்கச் செய்து, தான் குறைந்த வாக்குகள் பெற்றும் காங்கிரஸ் அரசோச்சுகிறது. தன்னை விட்டால் மக்களுக்கு வேறு நாதியில்லை என்ற மெத்தனம் கொண்டு விட்டது'என்பதுதான்.
பெருந் தலைவரின் இந்தப் பேச்சு எதிர்கட்சிகளின் வாதத்தை உறுதி செய்வதாக அமைந்தது. "பாருங்கள். எவ்வளவு அகங்காரம். மக்களிடம் சென்று வாக்குக்
கேட்காமலேயே படுத்துக்கொண்டே வெற்றி பெருவாராம்"என்று பட்டி தொட்டி எல்லாம் குட்டித் தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். இராஜாஜி மேடை
மேடையாக ஏறி "அவர் படுப்பது நிச்சயம்! ஜெயிக்கிறதுதான் சந்தேகம்'என்று பேசினார்.'குல்லுகபட்டர்' வாக்கு பலித்தேவிட்டது.
ஆம்!உண்மையாகவே காமராஜர் ஒரு விபத்துக்குள்ளாகி மருத்துவமனை சென்று படுக்கும்படி ஆகிவிட்டது.தேர்தலிலும் ஒரு பிரபலம் இல்லாத கல்லூரி மாணவனிடம் தோற்றுப் போனார் பெருந்தலைவர்.
மகாத்மா காந்திஜியை சர்ச்சிலுக்கு சிறிதும் பிடிக்காது. 'அரை நிர்வாணப் பக்கிரி'என்று மாஹாத்மாவை சர்ச்சில் குறிப்பிட்டுள்ளார். காந்திஜி அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. இன்று சர்ச்சிலை விட இங்கிலாந்தில் புகழ் பெற்றவராக நம் அண்ணல் விளங்குகிறார்.ஆனால் சர்ச்சில் அண்ணலைப் பற்றிச் சொன்னது வடுவாக நம் மனதில் பந்திந்து விட்டது.
அறிஞர் அண்ணாவும் மற்ற திராவிடத் தலைவர்களும், நாடகம், சினிமா மூலம்தான் மக்களிடம் புகழ் பெற்றார்கள்.அதனால் அவர்களை சிறிது ஒழுக்கத்தில் கொஞ்சம் 'வீக்' என்பது போல எதிர்கட்சிகள் இரண்டாந் தரவரிசைப் பேச்சாளர்களை விட்டுப் பேச வைப்பார்கள்.
அப்போது நடிகைகளில் பானுமதி புகழோடு இருந்த சமயம்.அண்ணா அவர்களோடு பானுமதியை முடிச்சுப்போட்டு ;கிசு கிசு; மிகவும் பாபுலர்.
அண்ணாவிடமே கேட்கப்பட்டது.அண்ணா சொன்னதாகச்சொல்வார்கள்:
"நானும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல; பானுமதியும் படிதாண்டா பத்தினியல்ல.."
இந்தப் பேச்சு அண்ணவின் மதிப்பைச் சற்றே குறைப்பதாகவே உள்ளது. அவர் அப்படி சொல்லியிருந்தால் பனுமதியின் கெளரவத்தைக் கணக்கில் எடுக்காமல் பேசப்பட்ட வார்த்தை.பானுமதி இதற்கு எவ்வாறு எதிர் வினை ஆற்றினார் என்று தெரியவில்லை.
சமீபத்தில் நாம் பார்த்த உதாரணம் வடிவேலு.படங்களில் நம்மையெல்லாம் சிரிக்க வைததவர் நிஜ வாழ்க்கையில் சிரிப்பாகச் சம்பவங்களை எடுத்துக் கொள்ளத் தெரியாமல், வகை தொகை தெரியாமல் மாட்டிக் கொண்டு திணறுகிறார்.
ஒரு நாள் நள்ளிரவில் படபிடிப்பு முடிந்து வீடு திரும்புகிறார் வடிவேலு. அவர் வீட்டு அருகினில் விஜயகாந்த் கட்சியினர் அவர்கள் அலுவலகத்தின் முன்னர்
வழியை மறைத்துக் கொண்டு நிற்கின்றனர்.
வழிவிடச் சொல்லி சினத்துடன் கத்துகிறார் வடிவேலு. வார்த்தை தடிக்கிறது. விஜயகாந்தைப்பற்றி ஏக வசனத்தில் பேசி விடுகிறார்.
அன்று பிடித்தது சனியன். வீம்புக்கு என்னமோ செய்வார்களாமே அது போலக் கிளம்பி தேர்தலில் எதிர்பிரசாரம் செய்து, தேர்தல் முடிவு வந்ததும்
ஓரங் கட்டப்பட்டு பட வாய்ப்பை இழந்து நிற்கிறார் வடிவேலு. சீந்துவாரில்லை.
இது தானய்யா வாய்க்கொழுப்பு சீலையில் வழிவது என்பது.
சரி சரி! மேலும் வளர்த்தினா இங்கேயும் அதுவே ஆகிவிடும்.வரட்டா...?
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
அடையாளப் பெயர்கள்
This is quite an imaginative effort...
This is an absolute rib-tickler !! If Parsis can have their name as per the profession, why can't we have it? (After all, we are not Britishers to have Barber, Cook, Side Bottom, etc...). What is missing is names for new age profession - BPO, Call center... etc.,
Doctor -- Vaidyanathan

Dentist -- Pallavan
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver -- Parthasarathy
Author---Ananthamurugan.G
+++++++++++++++++++++++++++++++++++
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver -- Parthasarathy
Author---Ananthamurugan.G
+++++++++++++++++++++++++++++++++++
5
தன்னம்பிக்கையும் அதீத நம்பிக்கையும் (Self confidence and Over confidence)
- ஆக்கம், சுந்தரம், மதுரை
- ஆக்கம், சுந்தரம், மதுரை
இன்று வகுப்பறையில் இடம் பெற்ற நகைச்சுவை மடலைக் கண்டதும் பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் ஒரு பேராசிரியர் கூறிய
கதையை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
ஒரு தந்தை தனது மகனை ஊரிலேயே கண்டிப்புக்கும் சிறந்த கல்வியை பயிற்றுவிப்பதற்ககும் பெயர் பெற்ற பள்ளியில் சேர்ப்பதற்க்காக அழைத்துச் சென்று தலைமையாசிரியரைச் சந்தித்து தனது மகன் புத்தி கூர்மையான பையன் என்றும் அவனிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் யார் அவன் கருத்துக்கு மாறுபட்ட கருத்தைக் கூறினாலும் பந்தயம் எவ்வளவு? என்று கேட்டு விடுகிறான், எப்படியாவது அவனை இந்த பழக்கத்தை விடுத்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தலைமை ஆசிரியரும்,பையனின் தந்தையிடம், கவலையை விடுங்கள், என்னிடம் பையனை ஒப்படைத்து விட்டீர்கள் அல்லவா? நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அடுத்த முறை என்னைச் சந்திக்கும் பொழுது உங்கள் மகன் இந்தப் பந்தயம் கட்டும் பழக்கத்தையே விட்டுவிட்டான் என்று கூறுவீர்கள் பாருங்கள் என உறுதி கூறி அனுப்பி வைத்தார்.
ஒரு வாரம் சென்றது, தகப்பனார் குறிப்பிட்ட பையன் உடற்பயிற்சி வகுப்பிற்க்காக மாணவர்களுடன் வரிசையில் சென்று கொண்டிருப்பதை கண்ட தலைமையாசிரியர், அவனை அழைத்து தம்பி! உன் தந்தை தானே சென்ற வாரம் உன்னை என்னிடம் உன்னை அழைத்து வந்து பையனுக்கு எதற்கெடுத்தாலும் பந்தயம் கட்டும் பழக்கம் இருக்கிறது எப்படியாவது என் மகனை நல்வழிப் படுத்துங்கள் என்று கூறினார் என்று கேட்க ,மாணவனும் ஆமாம் ஐயா ! என்றான்.
அதன் பின்னர்,தலைமை ஆசிரியரும் பையனை எச்சரிக்கும் தொனியில், என் கண்டிப்பைப்பற்றி கேள்விப்பட்டிருப்பாய் என நினைக்கிறேன்,ஒழுங்காக படிக்க வேண்டும் இப்பொழுது வரிசையில் போய் சேர்ந்து கொள் என்றார்.
புத்திசாலி பையனோ, ஐயா! ஒரு சந்தேகம் கேட்கலாமா? என்றான், அதற்கு அவரும், “என்ன சந்தேகம் கேள்” என்றார். பையனோ தன்னுடைய பழக்க
தோஷத்தில், ஐயா உங்கள் முதுகில் வலப்பக்கம் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்கு மச்சம் உள்ளது தானே என்று கேட்டான்.
அதற்குத் தலைமை ஆசிரியர் மறுக்க, பையனோ சார்! நேற்று உங்களுடைய வீட்டின் பின்புறம் நீங்கள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நான் பார்த்தேன்.
பந்தயம் 25 ரூபாய், ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கேட்டான்.
பையனின் தகப்பனாருக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணிய தலைமை யாசிரியரும் பையனைத் திருத்த சரியான வாய்ப்பு மிகச் சீக்கிரமே அமைந்த
மகிழ்ச்சியில், தம்பீ! இங்கு வேண்டாம், என் அறைக்கு வா நீ கூறுவது போல என் முதுகில் மச்சம் இல்லாத பட்சத்தில்,25 ரூபாயைக் கொடுப்பதுடன் இந்த
பந்தயம் கட்டும் பழக்கத்தையும் முற்றிலுமாக விட்டுவிட வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றார், பையனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.
தனது முதுகைப் பற்றித் தனக்குத் தெரியாதா என்ற இறுமாப்பில் தலைமை ஆசிரியரும் அவருடைய சட்டையைக் கழற்ற அங்கே பையன் கூறியது போல எந்த மச்சமும் இல்லை. உடனே தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டு பையனும் வகுப்பறைக்குச் சென்று விட்டான். பையனை திருத்திவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் தலைமையாசிரியரும் மாணவனின் தந்தைக்குப் பள்ளியில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, வெற்றிப் பெருமிதத்தில், உங்களுடைய மகன் இனிமேல் யாரிடமும் பந்தயமே கட்ட மாட்டான் என்று கடிதம் எழுதினார்.
அதற்குப் புத்திசாலி மாணவனின் தந்தை பின் வருமாறு பதில் கடிதம் எழுதினார்.
ஐயா,
உங்கள் பள்ளியில் என் பையன் படித்தது போதும். அவனுடைய பந்தயம் கட்டும் பழக்கத்தை நீங்கள் திருத்தியதும் போதும், உங்கள் பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே, அவன்,என்னிடம் சேர்ந்து ஒரு மாதத்திற்குள்ளாக, தலைமை ஆசிரியரின் சட்டையை கழற்றச் செய்து அதையும் அவர் வாயிலாகவே உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன். 500 ரூபாய் பந்தயம் என்று கூறியிருந்தான், தற்பொழுது, உங்களால், நான் அவனிடம் 500 ரூபாயை இழக்க வேண்டும் அதனால் என் மகனுடைய மாற்றுச் சான்றிதழை அனுப்பி வைக்கவும்.
- ஆக்கம், சுந்தரம், மதுரை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
சின்னமாமா பெரிய மாமா
ஆக்கம்: தனுசு
+++++++++++++++++++++
என் மனைவியையும் மகளையும் ஒரு உறவினரின் வீட்டு கல்யாணத்திற்கு அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்தேன். அன்று ஞாயிறு என்பதால், நல்ல தூக்கத்தை முடித்து விட்டு சோம்பலிலேயே இருந்தேன்.
தனிமையில் இருப்பவர்களுக்கும், தனித்தே இருப்பவர்களுக்கும் சாப்பாடு என்பது பெரிய விசயமே இல்லை. கிடைத்ததை சாப்பிடுவார்கள் கிடைக்கா விட்டாலும் இருப்பார்கள். இருப்பதை சாப்பிடுவதற்கோ வெளியில் போய் சாப்பிடுவதற்கோ அப்படி ஒரு சோம்பேறித்தனம் உடம்போடு ஒட்டி இருக்கும்.எழுந்து குளிப்பதற்கே மதியம் ஆகிவிடும். இதுதான் பிரமச்சாரி களுக்கும் தனியாக இருப்பவர்களுக்கும் இருக்கு ஒரே ஒற்றுமை. இதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
என் மாமாக்கள் இருவரும் திடீரென்று என்னைப் பார்க்கக் கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தனர்!
"வாங்க மாமா வாங்க....வாங்க’ என்று வரவேற்றேன்
“என்னடா.... மாப்பிள்ளை ....எப்பிடி இருக்கிறாய் சவுக்கியமா...”.பலமாக விசாரித்தனர் இருவரும்
“நல்ல இருக்கிறேன் மாமா...... மாலாவும், மகளும் கல்யாணத்திற்கு போய் இருக்கிறார்கள் .....” வீட்டில் மனைவி இல்லாததை நாசுக்காக சொன்னேன்.
“ஏன்டா.... நீ போகலியா..” நான் போகாததைக் கேட்டனர்
"இல்லை மாமா, கொஞ்சம் வேலை இருந்தது அதான்". மாமா என்பதால் பவ்யமாக பதில் சொன்னேன்.
"சரி மாமா ரெண்டு பெரும் டீ சாப்பிடுங்க" என்று சொல்லி தேநீர் போட்டு எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தேன்.
"இந்தாங்க மாமா டீ குடிங்க" என்று சொன்னவன் தொடர்ந்து சொன்னேன்:
"சரி மாமா நீங்க ரெண்டு பேரும் வெய்யிலில் வந்து இருக்கிறிர்கள். ஒய்வு எடுங்க .மதிய சாப்பாட்டுக்கு நேரமாகிறது. நான் சாப்பாடை ரெடி பண்றேன்"
என்றேன் - சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்.
"என்னடா மாப்ளை பொண்டாட்டி இல்லாத நேரம் வந்து தொந்திரவு செய்றானுங்க என்று நினைக்கிறியா"
"சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. ஊரிலிருந்து ஒரு வேலையா வந்த நீங்க அப்படியே போகாம என்னை பார்க்கணுமேன்னு வந்தீங்களே அதுவே பெரிய விசயம். நீங்க ரெண்டு பேருமே கடை சாப்பாடு சாப்பிடமாட்டீர்கள் அதனாலதான் நானே தயார் பண்ணுகிறேன் என்றேன்"
சாப்பாடு இன்றியே அவர்களை அனுப்பி வைக்க முயற்சி செய்தேன்.
அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்பதால் சமையல் செய்யத் தயாரானேன்.
"சரி மாமா வாங்களேன் பேசிக்கிட்டே கடைக்கு போய் காய்கறி வாங்கி வருவோம்"
"இல்லடா மாப்ளே வந்த அசதி அப்பிடியே உடம்புல இருக்கு"
"சரி சரி மாமா, நீங்க ரெண்டு பெரும் ரெஸ்ட் எடுங்க நான் போய் வாங்கி வருகிறேன்" சொல்லிவிட்டு கடைத்தெருவுக்கு கிளம்பினேன்.
நல்ல காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிகொண்டு வியர்க்க வியர்க்க திரும்ப வீடு வந்து சேர்ந்தேன்.
"அட என்ன மாமா சும்மாவே உட்கார்ந்துகிட்டு இருக்கிறீங்க T.V பார்க்க வேண்டியதுதானே" என்று சொன்னவன் TV யை ஆன் செய்துவிட்டு
சமையலறைக்குள் சென்றேன்.
"TV எல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை சும்மா பேசிக்கிட்டே இருக்கிறோம்" என்றார் இருவரில் பெரியவர்.
"அப்படின்னா இப்படி வாங்க இந்த காய்கறியை வெட்டுங்க. நான் சமைக்கிறேன் "
"இல்லைடா மாப்பிளை வெய்யிலில் வந்தது தலை எல்லாம் வலிக்குது. நாங்க அப்பிடியே சத்த படுத்துக்கிட்டு இருக்கோம்டா " என்று சொல்லி இருவரும்
காலைகளை நீட்டிப் படுத்துக்கொண்டு விட்டார்கள்.
"சரி மாமா நீங்க ரெஸ்ட் எடுங்க " நான் சமையல் வேலையைத் துவங்கினேன்.
சமையலில் பெரிய நிபுணத்துவம் இல்லை. இருந்தும் வாங்கி வந்த தயிரில் தண்ணீரை விட்டு மோராக்கினேன், குக்கரில் அரிசியைப் போட்டு சோறாக்கினேன், பீன்சைப் பொரியலாக்கினேன், தக்காளியும் புளியையும் போட்டு ரசமாக்கினேன், பருப்பை வேக வைத்து முருங்கைக்காயை வெட்டிப்போட்டு சாம்பாராக்கினேன். அப்பளம் பொரித்தேன். பழங்களை வெட்டித் தட்டில் வைத்தேன்.
ஒரு வழியாக அனைத்தையும் முடித்து விட்டு,"மாமா வாங்க ரெண்டு பெரும்.சாப்பிடலாம் "என்று அழைத்தேன்.
படுத்திருந்த இருவரும் எழுந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதில் பெரிய மாமா சின்ன மாமாவைப் பார்த்து:
“தம்பி, நாமும் வந்ததிலிருந்து ஒரு வேலையையும் செய்யவில்லை. மாப்பிளை கடைத்தெருவுக்கு கூப்பிட்டான். நாம போகவில்லை. காய்கறி வெட்டக் கூப்பிட்டான் அதுக்கும் போகல்லை, சமையலில் ஒத்தாசைக்குக் கூப்பிட்டான் அதுக்கும் போகல்லை, இப்போது சாப்பிடக் கூப்பிடுகிறான் .இதற்கும் நாம போகவில்லை என்றால் அவன் கோவித்துக் கொள்வான் வா சாப்பிடப் போகலாம்” என்று எழுந்தார். கூடவே சின்ன மாமாவும் டைனிங் டேபிளை நோக்கி நடந்தார்.
ஊட்டிவிடச் சொல்லாமல் அதுக்காவது எழுந்து வந்தார்களே சாமிகளா!
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
சிங்கப்பூர் தமிழ் விரும்பி கவிதையொன்றை மிக அருமையாக எழுதிவிட்டு அதனை எழுதத் தூண்டியது என்னுடைய வலைப்பூவில் உள்ள விருதுநகர் சதிவழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடந்துகொண்ட நேர்மை என்றும் குறிப்பிட்டு என்னுடைய புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும். அவருடைய திறமை வெளிப்பட நானும் ஒரு காரணமாக அமைந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன். நன்றி திரு தமிழ் விரும்பி. ஆசிரியருக்கும் நன்றி. இன்றைய பதிவுகள் மிகவும் பெரிது. இரவு 9 மணிக்குத்தான் பார்க்க முடிந்தது. ஆனால் இதுவரை ஒரு பின்னூட்டமும் காணப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை. முத்துராமகிருஷ்ணன் அவர்கள் சில நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அத்தனையும் உண்மை. பேச்சில் புது வழக்கை அறிமுகம் செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர் சரிதான். ஆரம்ப காலத்தில் அந்தப் புதுமையை ரசித்தவர்கள் இப்போது சிலர் பேசத் தொடங்குமுன் மேடையில் இருப்பவர்கள், எதிரில் தன் கண்களில் பட்டவர்கள், போதாததற்கு மறைந்து நின்று தன் பேச்சைக் கேட்பவர்கள் என்ற அழைப்பு இத்தனையும் பேசி முடிக்க அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரமும் முடிந்துவிடும். சில நேரங்களில் அத்தகைய பேச்சு அலுப்பு தட்டிவிடும். எங்கள் பாரதி இயக்கத்து மாணவர்கள் அனைவரும் பேசத் தொடங்குமுன் ஒரே வரியில் தொடங்கிவிடுவார்கள். "அவையோர் அனைவருக்கும் வணக்கம்" தொடர்ந்து பேச்சு தொடங்கிவிடும். இதனை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பது எங்கள் விருப்பம். மற்ற பதிவுகளைப் படித்த பின் கருத்தை எழுதுகிறேன். நன்றி.
ReplyDeleteஇன்னிக்கு எல்லாமே நல்லா இருக்கு..
ReplyDeleteஆலாசியம்..தேமொழி படைப்புகள்..சிறப்பாக இருந்தன..
மதுரை சுந்தரம் பந்தயம் கட்டிய சிறுவனை வைத்து ஜாக்பாட் அடிச்சுட்டார்....
தனுசுவின் பெரிய மாமா சின்ன மாமா ரெண்டுபேரும் கடைசியில் காட்டிய கரிசனம்தான் இந்த மாணவர் மலரில் நினைவில் தங்கிய விஷயம்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
சொல்லின் செல்வர் KMRK யின் ஆறாத வடு பற்றிச் சொன்ன தணியாத தாகம் நன்று..
ReplyDeleteஇன்சுரன்ஸ் துறை சார்ந்தவர் என்பதால் அவர் அது குறித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வாரேயானால் சிலருக்கு உதவியாக இருக்கும்..
எந்த அடிப்படையில் இன்சுரன்ஸ் கணக்கீடுகள், சேமிப்பு விகிதங்கள், காப்பீடு வகைகள் என்று பலருக்கும் பயனுள்ள விஷயங்களைப் பதிவிடலாம்..
மேலும் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் மெத்தனம் இல்லாத அணுகுமுறை உள்ள முன்னோடி அவர்..
சுய புராணமாக சில அமைந்தாலும் அது அவரின் அனுபவம் சிலர் அதனின்றும் பாடம் படிக்கலாம்..
எனவே அவரைத் தொடர்ந்தும் எழுத வேண்டுகிறேன்..
குறிப்பாக தெரிந்தோ, தெரியாமலோ ஹிந்துவாய்ப் பிறந்துவிட்டோம்..
இவர்களுக்கென்று ஏதேனும் மத ரீதியில் 'ஐந்து வேலை நமாஸ்' போன்று கட்டாயம் ஒவ்வொரு ஹிந்துவும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் என்று பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வளவோ விழாக்கள் வைபவங்கள் இருக்கின்றனவே அவற்றிலே எதெது சாங்கியமாகக் கடைபிடிக்கவேண்டியது என்று வேதங்களில்சொல்லப்பட்டதாக இருந்தால் அவற்றைப் பதிவிடலாம்..
தீவிர ஆசார அனுஷ்டானங்கள் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை..
இந்த வேலையை KMRKஎடுத்துக் கொண்டு செய்யலாம்..
மத நம்பிக்கையுள்ளவர்களுக்காக.
வரவர மாணவர் மலர் வெகு சீக்கிரமாக பதிவிடப் படுகிறது..
ReplyDeleteஆசிரியரின் ஆர்வமும் வாசக எழுத்தார்வலரின் வேகமும் ஒன்றிணைய நான் சற்றுப் பின்தங்கிவிட்டேன்..
ஆதலால் கமென்ட் மட்டுமே அடித்து வைக்கிறேன்.
தினமும் காலை ஏழு மணிக்கு விழிப்பு. எட்டு மணிக்கு கம்பெனி..இரவு 9மணிவரை கம்பேனிவேளை(லை).பின்னிரவு 12 / 12 .30வரை வேறு வேலைகள்..அதன்பின் உறக்கம் .என்று ஒரு நாளைக்குபனிரெண்டு மணிநேர கம்பெனி வேலையைச் சேர்த்து குறைந்தது 17மணிநேரம் விழிப்பான நிலையில் இருக்கவேண்டியிருக்கிறது..
இன்றோ..இப்போதோ மணி
இரவு 2 .02
சனி இரவு என்பதால் 19மணிநேரம் ஆக ஏறியிருக்கிறது...
பகலில் 'என் ராத்தூக்கம் போச்சே' என்று பாட வேண்டியதுதான்..
இதனால் குறைந்த பட்சமாக இரண்டு மணி நேரமாவது ஒதுக்கி ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தால் அது நேரக் குறைபாட்டால் முடியாமல் போகிறது..
இருந்தும் தொடர முயற்சிக்கிறேன்..அட்லீஸ்ட் மாணவர் மலரை..
இந்தக் காரணங்களாலேயே ப்ளாக் ஒன்று (தோணியதை எழுதவென்று ) ஆரம்பிக்க இயலாமல் இருக்கிறது..
இன்றைய மாணவ மலரின் தஞ்சை பெரியவரின் படம் மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDeleteஉண்மையில் அவர் அன்பிற்கும் , மதிப்பிற்கும் உரிய பெரியவர்தான் .
சகோதரியின் வரைபடமும் மிகவும் நன்றாக உள்ளது.
எஸ். சந்திரசேகரன்
'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
ReplyDeleteசெய்யாமை செய்யாமை நன்று'
என்ற குறட்பாவை நினைவுபடுத்தும் ஹாலாஸ்யத்துன் கவிதையை ஆழ்ந்து வாசித்தேன்.
இச் ஜகமா? என்று முதலில் மயங்கினேன். அப்புறம் அவர் சங்கடம் புரிந்தது. 'இச்சகம்' என்றால் பொருளே மாறிவிடுமல்லவா?
தஞ்சாவூரருக்கு நான் ஒரு 'பிராடிகல் சன்'என்றால் ஹாலாஸ்யம் ஒரு விசுவாசமான சீடராக அமைந்துவிட்டார். 'birds of the same feather flock together.'
நூலகத்தில் ஹாலாஸ்யம் பற்றி முதலில் வியந்து கேட்ட தஞ்சாவூரார், தானும் அது போன்ற ஒரு படத்தினை பேத்தியை விட்டு எடுக்கச்சொல்லி தன் வலைப்பூவில் வெளியிட்டார். அதனை வகுப்பறைக்கு அறிமுகம் செய்த ஹாலாயத்தின் முன் யோசனையைப் பாராட்டுகிறேன்.
தேமொழியின் ஓவியம் அருமை. ஐபாட் ஓவியம் கூடுதல் மதிப்பளிக்கிற்து.
புத்தர்தானே?புத்தருக்குப் பொட்டும், குண்டலங்களும்...? அதுசரி. புத்தரையும் ஒரு விஷ்ணு அவதாரமாகக் கொள்வதும் உண்டுதானே?

ஆனந்தமுருகன் ஆனந்தமாக அடுத்த அடியை எடுத்து வைத்துவிட்டார்.
ReplyDeleteகேசவன் எப்படி லாயர் என்று திகைத்தேன். ஆங்கில 'கேஸ்' +அவன்=கேசவன்
கேசவனுக்கு பார்பர்தான் சரி. கேசம் என்ற பொருளில் கொண்டு செல்லலாம்.
வைத்தியநாதன், இருதயராஜ் எல்லாம் அருமை.பாராட்டுக்கள். நல்ல முயற்சி.
மதுரை சுந்தரம் அவர்களின் நகைச்சுவை கட்டுரை அருமை. இன்னும் நிறைய எழுதுங்கள் ஐயா!
தனுசு கவிதையிலிருந்து உரை நடைக்குத் தாவியது நல்ல மாற்றமே!முன்பே
நான் அவருக்கு வேண்டுகோள் வைத்ததை மனதில் கொண்டு ஒரு புது முயற்சி செய்துள்ளார். வரவேற்கிறேன்.நல்ல மாமாக்கள் நல்ல மருமகன்.
தனுசுவின் சமையல் நன்றாகவே இருக்கும் போல. ஒருமுறை ஐயாவுடன் வருகிறேன். மாமாக்களைப் போலவே உட்கார்ந்து சாப்பிட்டு வருவேன் சம்மதமா?
பொய்யும் புரட்டும் எத்தனை நாட்களுக்கு கை கொடுக்கும்.
ReplyDeleteபொய்யின்றி வாழ்ந்து
புகழோடு மறைவோம்.
ஆனால் நடப்பு உலகில்
"பொய்மையும் வாய்மை இடத்தே"
என்றே வாழா வேண்டி உள்ளது.
தமிழ் விரும்பியின் கவிதை நன்றாக உள்ளது.
தஞ்சாவூர் அய்யா அவர்களின் நூலகம் எனக்கு பொறாமையை தருகிறது.மிகப் பெரிய நூலகம் வைத்திருக்கும் அய்யா அவர்களோடு நமக்கும் தொடர்பு இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது.
என்னிடம் புத்தக சேகரிப்பு என்று எதுவும் இல்லை. வெட்கமாகவும் இருக்கிறது . இனிமேல் புத்தகங்கள் வாங்கவேண்டும் படிக்கவேண்டும் சேகரிக்க வேண்டும் என்ற ஆவலும் வருகிறது .
தேமொழியின்
ReplyDeleteதூரிகை தீட்டிய
தவப்புதல்வனின்
திரு உருவம்
தந்தது இனிமை.
KMRK அவர்கள் தமிழ்வாணனைப் போல் வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் தருகிறார்அவைகள் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது
ReplyDeleteபலரும் பணத்தை செலவு செய்து காரியம் சாதிப்பார்கள் .ஆனால் சிலர் மட்டுமே வாயை செலவு செய்தே காரியம் சாதிப்பார்கள்.இந்த வகையில் பெண்கள் இதற்க்கு முன்னோடிகள்.
ஆனந்த முருகனின் தொழில் சார்ந்த வார்த்தை அகராதி நன்றாகவே இருந்தது.
ReplyDeleteமதுரை சுந்தரம் அவர்களின் பந்தயக் குதிரை.இந்த வாரம் செம கலகலப்பை தந்தது
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteதஞ்சை திருவாளர் வெ. கோபாலன் ஐயாவிற்கு சமர்ப்பணமாக எழுதியக் கவிதையாய் வகுப்பறையிலே வெளியிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி இந்தத் தருணத்தில் தங்களுக்கு எனது நன்றிகளையும் கூறிக் கொள்கிறேன்..
அன்புடன்,
ஆலாசியம் கோ.
என்னுடைய ஆக்கத்திற்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும்
ReplyDeleteஎனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
சகோதிரி தேமொழி அவர்களின் படம் மிகவும் அருமை! அற்புதம்... புத்தரை தியான நிலையிலே தனது மனக்கண்ணிலே கொண்டு வந்து அதை அருமையான ஒரு ஓவியமாக வரைந்தும் தந்து நம்மை சந்தோசத்தில் திளைக்கச் செய்துள்ளார்கள்...
ReplyDeleteஅப்படி உங்களின் ஆழ்மனதில் அவரின் படத்தை தியானத்தில் நீண்ட நேரம் தொடந்து கண்டீர்களானால் (வேறு சிந்தனை வரவிடாமல்).... நல்ல பல சந்தோசமான உணர்வுகளை மனதில் உணரலாம் என நான் நினைக்கிறேன்... செய்து பாருங்களேன்...
உண்மையிலே ஆக்கம் மிகவும் நன்று அதனைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி...
'யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிளுக்கப் பட்டு' அதிலும் பொறுப்புள்ள மனிதர்களின் திருவாய் மலர்வது ஒரு தவமிருந்து சொல் வெளிப்பட வேண்டும்... தாக்கப் படும் போது வெளிப்படும் தமோ குணமே இப்படி காயங்களையும் வடுக்களையும் கொணர்கின்றன...
ReplyDeleteசிலருக்கு இயல்பாக இப்படி வரும்... சிலருக்கு சூழல் அப்படி செய்யும். எதுவானாலும் நிதானம் தவறினால் கஷ்டம் தான்...
கிருஷ்ணன் சார் தங்களின் ஆக்கம் நல்ல பல தகவல்களையும் கருத்தையும் தாங்கி மாணவர் மலரை அலங்கரிக்கிறது... பகிர்வுக்கு நன்றிகள் சார்.
//// kmr.krishnan said...
ReplyDelete'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று'
என்ற குறட்பாவை நினைவுபடுத்தும் ஹாலாஸ்யத்துன் கவிதையை ஆழ்ந்து வாசித்தேன்.
இச் ஜகமா? என்று முதலில் மயங்கினேன். அப்புறம் அவர் சங்கடம் புரிந்தது. 'இச்சகம்' என்றால் பொருளே மாறிவிடுமல்லவா?////
வடசொல் கலப்பு என்பதால் வந்த மயக்கமா! தொல்காப்பியமும் அதை தவறென்று குறிப்பிடவில்லை இருந்தும் தமிழ்ப் பிரியர்கள் என்பார் அதை கண்டும் கொள்வதில்லை...!
எங்கள் ஊரில் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரின் பெயர் தொல்காப்பியன் பெரியாரிசிசம் அவர்களின் தனின் வழியே இவரையும் ஆட கொண்டது... தந்தையாரின் மறைவிற்குப் பிறகு உள்ளூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் காரியக் கமிட்டித் தலைவராக இருத்திருக்கிறார் என்பதை சமீபத்தில் ஊருக்கு சென்றபோது அங்கே பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் பதாகையிலே கண்டே சந்தோசித்தேன்... அவர் எங்களது கல்லூரி நாட்களிலே தூயத் தமிழிலே பேசுவார்... தடம் என் இரண்டு பேரூந்து வந்துவிட்டதா? என்று வினவுவார்... நான் எனது புத்தக அட்டையிலே எனது பெயரை ஹிந்தியிலே பெரிதாக எழுதி வைத்தும் இருப்பேன்... அந்தக் காலம் அப்படி... தமிழை நேசிப்பதாக மற்றமொழியை வெறுப்பதில் என்ன லாபம்... எனது தாயை நான் காப்பேன் அதோடு பக்கத்து வீட்டு தாயிடமும் அன்பாகவே இருப்பேன்... பழைய ஞாபகம் வந்தது!..
மேலும் திருமூலர்கூட அதை தவறாகாது என்பார்... நமது மகாகவியின் பாணியும் அதுவே அதிலே அவனின் கவிதைகளையே முன்னிறுத்திப் பழகியதால் அது இயல்பாகிப் போயிற்று... நன்றிகள் சார்.
////தஞ்சாவூரருக்கு நான் ஒரு 'பிராடிகல் சன்'என்றால் ஹாலாஸ்யம் ஒரு விசுவாசமான சீடராக அமைந்துவிட்டார். 'birds of the same feather flock together.'////
ReplyDeleteஉண்மை தான் பாரதி என்னும் குருகுலத்தில் வழி வழி வருபவர்கள் தாம்... அதனாலே இது முற்றிலும் உண்மையே... ஐயா அவர்களின் வலைப் பதிவு தான் எனக்கு பாரதியைப் படம் பிடிக்க பேருதவி செய்தது... அதோடு பெரும் பாலும் எங்கள் இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதை நான் பல நேரம் உணர்ந்திருக்கிறேன்... பூர்வஜன்மத் தொடர்பாக இருக்கலாம் என்பதும் எனது எண்ணமே... நல்ல மனிதர், பெரிய மனிதர் என்றத் தகுதி நூறு சதவிகிதம் அவரிடம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதனால் தான் அவரை சிந்திக்கையிலே எனக்கு மரியாதையும், அன்பும் மேலிடுகிறது. நன்றிகள் சார்.
ஆனந்தமுருகனின் ஆக்கமும் நன்றி... ஹாஸ்யமான சிந்தனை, அடுத்து எப்படி யோசித்து எழுதியிருக்கிறார் என ஆர்வத்தோடு மேலும் மேலும் வாசிக்கச் செய்தது... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகவிஞர் தனுசு, தான் ஒரு கதையாசிரியர் என்பதையும் நிறுவியிருக்கிறார்... மாமாவின் நக்கல் கடைசியில் முத்தாய்ப்பாய் நின்றது... பகிர்வுக்கு நன்றிகள் கவிஞரே!
ReplyDeleteஆக்கங்களைப் படித்துப் பாராட்டிய அனைவருக்கும், அதற்கு ஒரு வாய்ப்பளித்த நமது சுப்பையா வாத்தியார் அவர்களுக்கும் நன்றிகள்...
ReplyDeleteஅன்புடன்,
ஆலாசியம் கோ.
ஆலாசிய சுந்தரம் என்றால் மதுரை சுந்தரம் என்ற ஒருப் பொருளும் உண்டு... அந்தவகையிலே சகோதரர் அவர்கள் எனக்கு இன்னும் சற்று நெருக்கமடைகிறார்...
ReplyDeleteதங்களின் ஆக்கம் நன்று... தமிழறிஞர் ஒருவரின் சுவாரஷ்யமானக் கருத்தை; உங்களின் மனம் கவர்ந்த அந்தக் கருத்தை மிகவும் நயத்துடன் எழுதி எங்களையும் சந்தோசப் படுத்தி விட்டீர்கள். மிகவும் நன்று... இது போன்ற கருத்துப் பரிமாற்றம் தொடர வேண்டும்.. நன்றி! வாழ்த்துக்கள்.
/////நூலகத்தில் ஹாலாஸ்யம் பற்றி முதலில் வியந்து கேட்ட தஞ்சாவூரார், தானும் அது போன்ற ஒரு படத்தினை பேத்தியை விட்டு எடுக்கச்சொல்லி தன் வலைப்பூவில் வெளியிட்டார். அதனை வகுப்பறைக்கு அறிமுகம் செய்த ஹாலாயத்தின் முன் யோசனையைப் பாராட்டுகிறேன்.////
ReplyDeleteஎனது படம் ஒரு சாதாரண சூழலில் எடுத்தது...
ஒரு நூலகத்திற்குள் இன்னொரு நூலகம் என்பது சிறப்பில்லையா! அதனால் தான் அப்படி ஒரு படத்தை வகுப்பறையில் பதிவிட எண்ணினேன்.. நன்றி Sir.
இன்றைய மற்ற பதிவுகளையும் மேலோட்டமாகப் படித்தேன். தேமொழி பல கலைகளில் வல்லவர் என்பது புரிகிறது. ஐ.பேடில் அவர் வரைந்த சித்திரம் அருமை. எப்படி முடிகிறது? சரிதான் என் காலத்தில் இந்த வாய்ப்புகளும் இல்லை, திறமையும் இல்லை. வாழ்த்துக்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பெயரை மிகவும் பொருத்தமாகச் சொல்லிச் சென்ற நண்பர் லாயர் என்பதற்கும், வட இந்திய லாயருக்கும் கொடுத்திருப்பது எப்படிப் பொருத்தம் என்பதை எனக்குச் சற்று விளக்கினால் நன்று. சில அதிர்வேட்டுச் சிரிப்புடன் ரசிக்கத் தோன்றியது. அயல் மண்ணை விட்டு உள்நாட்டுக்கு வந்திருக்கிறார் போலும் நண்பர் தனுசு. அருமையான படைப்பு. இப்படித் திகட்ட திகட்ட ஒருசேர வாரமலரில் கொடுத்து வருவதைச் சற்று விரிவுபடுத்தி, வார நாட்களிலும் கொடுங்களேன். ஆசிரியர் கவனிப்பார் என நினைக்கிறேன். புரிகிறது, தங்களது முதன்மைக் கடமை ஜோசியக் கட்டுரைகள், தல புராணங்கள் போன்றவைதான். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதுவரை என்னுடைய 80 ஆக்கங்கள் ஐயா வெளியிட்டு ஆதரவு கொடுத்துள்ளார்கள்.வாரத்திற்கு இரண்டு என்ற முறை தொடர்ந்து இருந்தால் இப்போது நான் 'சென்சுரி' போட்டவனாக இருந்திருப்பேன்.
ReplyDeleteஒரு சில மாதங்கள் பக்திமலர், ஞாயிறு மலர் இரண்டிலும் என்னுடைய கட்டுரைகள் மட்டுமே வெளியாகிக் கொண்டு இருந்தன. நான் எப்படி ஐயாவின் எளிய நடை, சுவையான நடையைப் பார்த்து, நாமும் இப்படி எழுதலாமே என்று ஊக்கம் பெற்றேனோ, அதேபோல என்னுடைய ஆக்கங்களால் சிலர் ஊக்கம் பெற்று எழுத வந்திருக்கலாம். அந்த அளவில் வகுப்பறை சிலருடைய திறமைகளை வெளிக் கொணரும் தளமாக இருந்து இருக்கிறது.இருந்து வருகிறது. இன்னும் பலர் தயங்கிக் கொண்டு கரைய்லேயே நிற்கிறார்கள். துணிந்து முன்னுக்கு வாருங்கள்.உங்களுக்குத் தெரிந்ததை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆரம்பத்திலிருந்தே மைனர் என்னுடைய வாசகர்/விமர்சகர்.எழுதத் துவங்கிய போது ஐயாவிடம் 20 கட்டுரைகளுக்குத்தான் அனுமதி கேட்டேன்.அது இப்போது நான்கு மடங்காகி 80 ஐத் தொட்டு விட்டது.அவ்வப் போது தொடர்ந்து எழுதவா என்று ஐயாவிடம் அனுமதி கேட்டுக் கொள்வேன். அப்படி ஒருமுறை அனுமதி கேட்கும் போது'மைனர் போன்றவர்கள் விரும்பும் படிக்கு என்னால் செய்திகளைச் சொல்ல முடிகிறதா?'என்று கூட கேட்டுள்ளேன்.
மைனர் கூறியுள்ள தலைப்புக்களை அசை போட்டுப் பார்க்கிறேன் ஏதாவது உருப்படியாக எழுத முடியுமானால் கட்டாயம் எழுதுவேன்.
அனபு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி!
நன்றாக உள்ளது.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஆலோசியம் அவர்களின் கவிதை,நல்ல கருத்துடன் அமைந்த நல்ல கவிதை...நேர்மையற்ற மனிதர்களிடம் இவ்வாறான பரிசை தான் பெற இயலும் ஆனால்,இறைவனிடத்தில் பெரிய வெகுமதியாக நிச்சயம் கிடைக்கும்...
தேமொழி அவர்களின் ஓவியம் மிகவும் அருமை...குழந்தை புத்தர் என்று நினைக்கின்றேன்,அதனால் தான் பொட்டு வைத்து அழகு பார்த்திருக்கிறீர்கள்...'பளிச்சென்று'இருக்கும் மஞ்சள் நிறம் தான் ஓவியத்தின் "ஹைலைட்"...
kmrk அவர்களின் ஆக்கம் நன்றாக இருந்தது...நான் அறிந்திடாத பல தகவல்களை தங்களுடைய கட்டுரையில் அறிந்து கொண்டேன்...உண்மையில் "சொல்லின் செல்வர்" பட்டம் நிச்சயம் தங்களுக்கும் பொருந்தும்...ஏனெனில் "செல்லாது" தங்களுடைய ஆக்கங்கள் பலவற்றை விரும்பி படிக்கும் மாணவ்ர்களுள் நானும் ஒருவள் என்பதனால் தான் இதை கூறுகின்றேன்...
ReplyDeleteஆனாந்த முருகனின் ஆக்கம் மிகவும் வித்தியாசமாகவும்,வேடிக்கையாகவும் இருந்தது...நானும் சில வெளிநாட்டினரின் பெயர்களில் வரும் winehouse,blade,cruise போன்ற பெயர்களை எண்ணி சிரிப்பேன்...ஆனால் நம் நாட்டு பெயர்களின் இந்த வடிவங்கள் தான் நன்றாக உள்ளன...வித்தியாசமான பதிவு...
ReplyDelete"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"என்ற சொல்லடை இந்த குடும்பத்திற்கு "சூப்ப்ராக" பொருந்தும் போலும்...சுந்தரம் அவர்களுக்கு நன்றிகள்...
ReplyDeleteதனுசு அவர்களின் நகைச்சுவை "கலக்கல்"...இது போன்று வீட்டுக்கு வீடு "சாப்பாட்டு ரா(மா)மா"க்களுக்கு மட்டும் இந்தியாவில் என்றுமே பஞ்சம் இருப்பதில்லை...ஹி ஹி ஹி..."சின்ன மாமா,பெரிய மாமா" எபிசோடுகள் வரும் வாரங்களிலும் தொடருமா?!
///நல்ல மனிதர், பெரிய மனிதர் என்றத் தகுதி நூறு சதவிகிதம் அவரிடம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதனால் தான் அவரை சிந்திக்கையிலே எனக்கு மரியாதையும், அன்பும் மேலிடுகிறது. ///
ReplyDeleteசத்தியம்... சத்தியம்... சத்தியம்...
அப்பாடி! வசிஷ்டர் வாயால் 'பிரம்மரிஷி'!
ReplyDeleteUma S
ReplyDelete28 Jan
to me
வகுப்பறை மாணவர் நந்தகோபால் அவர்களின் தந்தை புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
S.உமா, தில்லி
பாரதி பற்றி தஞ்சாவூரார் நடத்திய பாடங்களின் தொகுப்பை 'இலக்கியப்பயிலகம்' என்ற வலைப்பூவினைத் துவங்கி அதனை பதிவேற்றிக் கொடுத்தது அடியேன் தான்! அப்புறம்தான் தெரிந்தது அவரே ஒரு வலைப்பூவினைத் துவங்கி அதனைக் கைவிட்டு இருந்தார்.அதனையும் உயிர்பெறச் செய்ய சேவை செய்தேன்.
ReplyDelete'அதுசரி இதனையெல்லாம் யார் வாசிப்பார்கள்?' என்ற கேள்விக்குப் பதிலாகத்தான் அவரை வகுப்பறையிலும் மற்ற தளங்களிலும் அறிமுகப்படுத்தினேன். நல்ல பலன் கிடைத்தது. அதன்பின்னர் அவராகவே முனைந்து கம்பராமயணம், மற்றும் தியாகிகளின் வாழ்க்கைக் குறிப்புக்ளுக்காக
இரண்டு வலைப்பூக்களை உருவாக்கினார்.
ஐயா வகுப்பறையில் செய்யும் புதுமைகளைப் பார்த்துக் கற்று தானும் தன் வலைப்பூகளில் கவர்ச்சியான மாற்றங்களை செய்துள்ளார்.
அவருடைய வலைப்பூகள் துவங்கிய போது எங்களுடைய பொது நண்பர் ஒருவர், 'இலக்கியத்தையெல்லாம் யார் வாசிக்கப் போகிறார்கள்?'என்று 'வரவேற்பு'ச் செய்தி கொடுத்தார். அவருடைய சந்தேகத்தைப் போக்கும் விதமாக இன்று பாரதி இலக்கியப் பயிலகம் வலைப்பூ 14605 முறையும், கமபராமயணம் தஞ்சாவூரான் வலைப்பூ 9250 முறையும், தமிழகத் தியாகிகள் வலைப்பூ 8625 முறையும்,
பாரதி பயிலகம் வலைப்பூ 15456 முறையும் உலகம் முழுதும் பரவியுள்ள பல தமிழர்களால் திறக்கப்பட்டு வாசிக்கப்பட்டும் உள்ளன.
http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/2010/05/kamba-ramayanam.html
http://ilakkiyapayilagam.blogspot.com/
http:/www.tamilnaduthyagigal.blogspot.com
http:/www.bharathipayilagam.blogspot.com
இராமருக்கு அணை கட்ட அனுமார் அரிய பணி செய்தார்.அணிலார் ஆன பணிசெய்தார். நான் தஞ்சாவூராருக்கு ஓர் அணில்.
ஐயா வகுப்பறையில் முன்னுரிமை கொடுத்து தஞ்சாவூராருக்கு அளித்த அறிமுகமே இன்று பதிவர்களில் தஞாவூராருக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.அதற்காக ஐயாவுக்கு நன்றி.
'ஹாரம்' என்ற வலைஞர்களைத் தொகுக்கும் தளத்தைப்பார்க்கவும். அதில் தஞாவூராரின் மதிப்புத் தெரியும்.
http://www.haaram.com/default.aspx?ln=ta
நந்தகோபாலின் துக்கத்தில் பங்கேற்கிறேன். மறைந்த ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன்
ReplyDelete////Blogger Thanjavooraan said...
ReplyDeleteஎங்கள் பாரதி இயக்கத்து மாணவர்கள் அனைவரும் பேசத் தொடங்குமுன் ஒரே வரியில் தொடங்கிவிடுவார்கள். "அவையோர் அனைவருக்கும் வணக்கம்" தொடர்ந்து பேச்சு தொடங்கிவிடும். இதனை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பது எங்கள் விருப்பம். மற்ற பதிவுகளைப் படித்த பின் கருத்தை எழுதுகிறேன். நன்றி./////
நல்ல யோசனை. நன்றி கோபாலன் சார்!
////Blogger Thanjavooraan said...
ReplyDeleteஇப்படித் திகட்ட திகட்ட ஒருசேர வாரமலரில் கொடுத்து வருவதைச் சற்று விரிவுபடுத்தி, வார நாட்களிலும் கொடுங்களேன். ஆசிரியர் கவனிப்பார் என நினைக்கிறேன். புரிகிறது, தங்களது முதன்மைக் கடமை ஜோசியக் கட்டுரைகள், தல புராணங்கள் போன்றவைதான். வாழ்த்துக்கள்./////
நீங்கள் அனைவரும் விரும்பினால், மாணவர் மலருக்கு, தனியாக வலைப் பதிவு ஒன்றைத் துவங்கி நீங்கள், நான், உட்பட மேலும் 10 பேர்களுக்கு பதிவுகளை உள்ளிடும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்து விடுகிறேன். அதாவது மொத்தம் 10 வலைப்பதிவு ஆசிரியர்கள் உள்ள வலைப் பதிவு.
அதற்கு வேண்டிய விளம்பரத்தை நமது வகுப்பறையின் முகப்புப் பகுதியில் கொடுத்துவிடுகிறேன். உங்கள் விருப்பத்திற்கு எழுதுங்கள் கோபாலன் சார். மற்றவர்களும் எழுதலாம். 15 நிமிடங்களில் ஒரு தனி வலைப்பதிவைத் துவங்கி விடலாம். மாதம் 30 நாட்களுமே அது வெளியாகும்படி செய்துவிடலாம்!
//ஒரு தனி வலைப்பதிவைத் துவங்கி விடலாம். மாதம் 30 நாட்களுமே அது வெளியாகும்படி செய்துவிடலாம்!//
ReplyDeleteநல்ல ஆலோசனைதான்.ஆனாலும் சோதிடத்திற்காகவே வரும் வாசகர்களின் கண்களில் அந்தப் பதிவுகள் படாமல் போய்விடும். வகுப்பறையிலேயே ஒரு பக்கமாக அமர்ந்திருப்பதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. மெஜாரிடி என்ன சொல்கிறதோ அதற்குக் கட்டுப் படுகிறேன் ஐயா!
///வகுப்பறை மாணவர் நந்தகோபால் அவர்களின் தந்தை புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
ReplyDeleteS.உமா, தில்லி/////
இந்த செய்தியைக் கேட்டு நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ஐயாவின் ஆத்மா சாந்தியடைய அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..
//// iyer said...
ReplyDelete///நல்ல மனிதர், பெரிய மனிதர் என்றத் தகுதி நூறு சதவிகிதம் அவரிடம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதனால் தான் அவரை சிந்திக்கையிலே எனக்கு மரியாதையும், அன்பும் மேலிடுகிறது. ///
சத்தியம்... சத்தியம்... சத்தியம்.../////
நன்றி ஐயர் அவர்களே!
கவிதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!
//ஒருவள் என்பதனால் தான் இதை கூறுகின்றேன்...//
ReplyDelete'ஒருவன்' என்பதற்குப் பெண்பாலாக 'ஒருவள்' என்று கூறியிருக்கிறீர்கள். இது ஒரு புதிய சொல்லாட்சிதான். ஏனெனில் 'ஒருத்தி' என்பதுதான் தமிழில் உள்ள சொல்.
ஒரு முறை தமிழ் இலக்கணம் அதிகம் படித்திராத ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் இதேபோல் 'ஒருவள்' என்று அந்த எழுத்தாளர் எழுதியுள்ளதை சுட்டி அதனைப் பிழை என்று சுட்டினார். அது அப்போது பெரிய விவாதத்தைத் தோற்றுவித்தது.
சும்மா தகவலுக்காகச் சொன்னேன். இப்போது 'ஒருவள்' என்ற பிரயோகம் எல்லோரும் பயன் படுத்துகிறார்கள்.
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ஸ்ரீ ஷோபனா!
நேற்று ஒரே நாளில் நான்கு திருமணங்களில் கலந்து கொள்ளவேண்டி இருந்ததால் காலையிலேயே வகுப்புக்கு வந்து போய் விட்டேன் .மீண்டும் நேற்றைக்கே வரமுடியாமல் போய் விட்டது .
ReplyDeleteUma S
28 Jan
வகுப்பறை மாணவர் நந்தகோபால் அவர்களின் தந்தை புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
S.உமா, தில்லி
அண்ணார் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும். அவர் தம் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
.minorwall said...தனுசுவின் பெரிய மாமா சின்ன மாமா ரெண்டுபேரும் கடைசியில் காட்டிய கரிசனம்தான் இந்த மாணவர் மலரில் நினைவில் தங்கிய விஷயம்..
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி மைனர் அவர்களே.
kmr.krishnan said...தனுசு கவிதையிலிருந்து உரை நடைக்குத் தாவியது நல்ல மாற்றமே!முன்பே
நான் அவருக்கு வேண்டுகோள் வைத்ததை மனதில் கொண்டு ஒரு புது முயற்சி செய்துள்ளார். வரவேற்கிறேன்.நல்ல மாமாக்கள் நல்ல மருமகன்.
தனுசுவின் சமையல் நன்றாகவே இருக்கும் போல. ஒருமுறை ஐயாவுடன் வருகிறேன். மாமாக்களைப் போலவே உட்கார்ந்து சாப்பிட்டு வருவேன் சம்மதமா?
கவிதை எழுத வைத்தது வாத்தியார் அய்யா அவர்கள். அவ்வப்போது பெரிய ஊக்கம் தந்தது தஞ்சாவூர் அய்யா அவர்கள். மைனர் தேமொழி உமா ஷோபனா தமிழ் . போன்றோர் பின்னூட்டமிட்டு கூடுதல் ஆசையை வளர்த்தார்கள்.
கதையை ரசித்த மைனர். ஷோபனா தமிழ் மற்றும் யாவருக்கும் நன்றிகள்.
உங்களின் வரவேற்ப்புக்கு அப்புறம்தான் கதை எழுதி உள்ளேன் .இருந்தும் மதிப்பிற்குரிய iyer அவர்கள் சென்ற வாரம் என்னை வகுப்பறையின் ஆஸ்த்தான கவிஞர் என்றார் . அதனை தக்க வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகிறேன் .
உண்மையில் நான் நன்றாக சமையல் செய்வேன் . western, Chinese , மிகவும் அத்துப்படி.
தங்களுக்காகவும் வாத்தியார் மற்றும் நம் வகுப்பறை தோழர்கள் தோழிகள் யாவருக்காகவும் என் இல்லத்தில் நான் எப்போது காத்திருக்கிறேன்.
////SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteUma S
28 Jan
to me
வகுப்பறை மாணவர் நந்தகோபால் அவர்களின் தந்தை புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
S.உமா, தில்லி////
நந்தா மாம்ஸ்ஸிடம் பத்து நாட்களுக்குப் பின் எதார்த்தமாக நேற்று கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் இந்த துயரச் செய்தி கேள்விப்பட்டேன்..
இரங்கலையும் தெரிவித்திருந்தேன்..மீண்டும் இங்கேயும் இரங்கலைப் பதிவு செய்கிறேன்..
Uma S
ReplyDelete28 Jan
to me
வகுப்பறை மாணவர் நந்தகோபால் அவர்களின் தந்தை புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
S.உமா, தில்லி////
நந்தா மாம்ஸ்ஸிடம் பத்து நாட்களுக்குப் பின் எதார்த்தமாக நேற்று கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் இந்த துயரச் செய்தி கேள்விப்பட்டேன்..
இரங்கலையும் தெரிவித்திருந்தேன்..மீண்டும் இங்கேயும் இரங்கலைப் பதிவு செய்கிறேன்..////
வகுப்பறை தோழர்கள் அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கங்கள் . எமது தகப்பனார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த திருமதி S .உமா அவர்களுக்கும் திரு மைனர் வாள் , திரு தமிழ்விரும்பி அவர்களுக்கும் திரு ஆசிரியர் அவர்களுக்கும் திரு தனுசு அவர்களுக்கும் எமது மதிப்பிற்கும் மரியதைக்குமுறிய அய்யா KMRK அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் .
இப்படிக்கு
விரைவில் நமது நண்பர்களுடன் சொற்போரில் கலந்துகொள்ள விருக்கும்
நந்தகோபால்
தேமொழியின் ஓவியம் உற்று நோக்கினால் புத்தர்தானா? என்ற சந்தேகம் கூட வருகிறது.
ReplyDeleteவித்தியாசமான கெட் அப் பிலே வரைந்திருப்பதால் இதுகுறித்து அவரே விளக்கமளிப்பது ஓவிய ஞானம் அதிகமில்லாத என் போன்ற ஆட்களுக்கு அவரின் சிரத்தையைப் புரிய வைப்பதாக இருக்கும்..
பொட்டு கொஞ்சம் வலப்பக்கமாக ஒதுங்கியிருக்கிறது..
முகத்திலே கன்னக்கதுப்பை வெளிப்படுத்திக் காட்டவென்று செய்யப்பட்ட ஷேட் முகத்துக்கு உணர்வைக் கொடுத்திருக்கிறது..ஆனால் எந்தவகை உணர்வு என்று தெளிவுபடுத்தும் அளவுக்கு இல்லையோ என்று தோன்றுகிறது...
இது என்னவகை ஓவியம் என்றெல்லாம் கொஞ்சம் அவரே கிளாஸ் எடுக்கலாம்..
'விழிதனில் கருவிழியை
ஏன்மறந்தார் தேமொழி?'
எனும் கேள்வியை தூண்டுகிறது..
////தகப்பனார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த திருமதி S .உமா அவர்களுக்கும் திரு மைனர் வாள் , திரு தமிழ்விரும்பி அவர்களுக்கும் திரு ஆசிரியர் அவர்களுக்கும் திரு தனுசு அவர்களுக்கும் எமது மதிப்பிற்கும் மரியதைக்குமுறிய அய்யா KMRK அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் .
ReplyDeleteஇப்படிக்கு
விரைவில் நமது நண்பர்களுடன் சொற்போரில் கலந்துகொள்ள விருக்கும்
நந்தகோபால்/////
கெட்ட நேரத்திலும் ஒரு நல்லநேரம் என்று இதைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்..
சகோதரர் ஆலாசியம், பாரதியாரின் "பொய் சொல்லக் கூடாது பாப்பா" பாடலை அடிப்படையாகக் கொண்டு அதனை விரிவுபடுத்தி அதே சாயலில் பெரிய கவிதை ஒன்றை கொடுத்துள்ளார். பாரதியாரின் தாக்கம் வரிகளில் அதிகம். சிறந்த கவிஞர்தான். காந்திக்கு நினைவாஞ்சலி கவிதை என எண்ணி படித்த எனக்கு, முடிவில் தஞ்சாவூர் ஐயாவிற்கான சிறப்பு படைப்பு என்ற செய்தி எதிர்பாராததாக இருந்தது. அத்துடன் ஐயாவின் நூலகத்தை பார்த்தவுடன் மேற்கொண்டு படிக்க சிரமமாக இருந்தது. இந்த முறை படத்தை பார்த்து ஸ்டக் அப் ஆனது என் முறை.
ReplyDeleteபொதுவாக இந்த மலரின் படைப்புகள் நகைசுவையுடன் உள்ளது.
ReplyDeleteextrovert , introvert அவர்கள் குண நலன்களுகேற்ப பேசுவார்கள். சிலருக்கு பேசிக்கொண்டே இருக்கவேண்டும், பேசாமடந்தைகள் எப்பொழுதாவது வாயைத்திறந்தாலும் முத்துபோல் கருத்தினை உதிர்ப்பார்கள். ஆனால் பேசிக்கொண்டே இருப்பவர்கள் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சென்று ஆகிவிடும். நான் அதிகம் பேசாத கூட்டத்தை சேர்தவளாக இருந்தாலும் கள்ளமிலாமல், வெகுளித்தனமாக, பொதுவில் பேசிகொண்டிருப்பவர்களை கேட்கப் பிடிக்கும். நான் அதிகம் பேசாததன் காரணம் நானே என் அறிவு எவ்வளவு என்பதை காட்டிவிடுவேனோ என்ற பயமும் கூட. மற்றொரு காரணம் "சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை" என்பதை அனுபவம் உணர்த்தியதாலும். KMRK ஐயா "விநாச காலே விபரீத புத்தி" வந்து தனக்கு தானே குழி தோண்டிக் கொள்பர்வர்களை இனம் காட்டியுள்ளார், நன்றி
மதுரை சுந்தர்ஜி நகைச்சுவை கதை நன்றாக எழுதியுள்ளார். எத்தனை முறை படித்திருந்தாலும் சிரிக்க வைக்கும் கதையை நினைவூட்டியதற்கு நன்றி
சந்தேகம் இல்லாமல் மூளையை கசிக்கிப் பிழிந்து எழுதியிருப்பது ஆனந்தமுருகன்தான்.
தனுசுவின் மாமாக்கள் கதை நன்றாக இருந்தது, மாமாக்கள் "பரவாயில்லை நீ சமைக்க வேண்டாம்" என்று சொல்லிவிடுவார்கள் என பரிதாபமாக எதிர்பார்த்ததை நல்ல நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். "வேலைக்கு வாடாப்பா" "என்னால முடியாதப்பா" "சாப்பாட்டுக்கு வாடாப்பா" "போடப்பா பெரிய இலை" என்று சொல்லும் வழக்கை நினைவுபடுத்தியது. கதை எழுதுவதிலும் திறமையானவர்தான்.
என் ஓவியத்தை வெளியிட்ட ஆசிரியருக்கும், ரசித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும் நன்றி, நன்றி.
ReplyDeleteஅது சரி எங்கே எங்கே என தேடிப் பரிதவித்து கவிதை எழுதிய புதுகை கவிஞர் எங்கே...எங்கே...
ஸ்ரீஷோபனாவும் கதை சொல்ல மாட்டேங்கிறாங்க
///minorwall said...
ReplyDeleteதேமொழியின் ஓவியம் உற்று நோக்கினால் புத்தர்தானா? என்ற சந்தேகம் கூட வருகிறது.
வித்தியாசமான கெட் அப் பிலே வரைந்திருப்பதால் இதுகுறித்து அவரே விளக்கமளிப்பது ஓவிய ஞானம் அதிகமில்லாத என் போன்ற ஆட்களுக்கு அவரின் சிரத்தையைப் புரிய வைப்பதாக இருக்கும்..///
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி மைனர்.
"buddha head " என கூகிள் செய்தால் வரும் "image result " இல் http://tinyurl.com/7q2kjr7 ஒரு தங்க புத்தர் சிலை படத்தை அடிப்படையாகக் கொண்டு வரைந்தேன்,
மேற்கொண்டு தகவல்கள் கீழே ....வாத்தியார் ஐயாவிற்கு தெரிவித்ததை இங்கே வெட்டி ஒட்டியுள்ளேன்....
ஓவியம் பற்றிய தகவல்:
இந்த ஓவியம் நான் முதன் முதலாக வரைந்த டிஜிடல் ஓவியம். மகளுக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த "கிண்டில் ஃபையர்" மின்பலகையை (Kindle Fire Tablet), அவள் அசந்த சமயம் சுட்டு, அதில் இருந்த "ஸ்கெட்ச்புக்" மென்பொருளை (SketchBook Mobile Express App) http://tinyurl.com/3auld84 உபயோகித்து வரைந்த புத்தர் படம்.
புத்தரை வரைய தேர்ந்தெடுத்ததன் காரணம் சுலபமாக வரைய முடியும் என்ற காரணத்தினால்தான். விரலை உபயோகித்து வரைவது என்பது இது வரை பென்சில், தூரிகை கொண்டு வரைந்தே பழக்கப்பட்ட எனக்கு, நான் எதிபார்த்ததை விட மிக கடினமாக இருந்தது.
வரைவது போல் படத்திற்கு காட்சி தருவது...
விதி செய்த சதியால் மதி மயங்கி
சதி என்கரம் பற்றிய பதியின் கரம்
தங்களின் நீண்ட விளக்கத்துக்கு நன்றி தேமொழி அவர்களே..
ReplyDelete///kmr.krishnan said...ஆரம்பத்திலிருந்தே மைனர் என்னுடைய வாசகர்/விமர்சகர்.எழுதத் துவங்கிய போது ஐயாவிடம் 20 கட்டுரைகளுக்குத்தான் அனுமதி கேட்டேன்.அது இப்போது நான்கு மடங்காகி 80 ஐத் தொட்டு விட்டது.அவ்வப் போது தொடர்ந்து எழுதவா என்று ஐயாவிடம் அனுமதி கேட்டுக் கொள்வேன். அப்படி ஒருமுறை அனுமதி கேட்கும் போது'மைனர் போன்றவர்கள் விரும்பும் படிக்கு என்னால் செய்திகளைச் சொல்ல முடிகிறதா?'என்று கூட கேட்டுள்ளேன்.
ReplyDeleteமைனர் கூறியுள்ள தலைப்புக்களை அசை போட்டுப் பார்க்கிறேன் ஏதாவது உருப்படியாக எழுத முடியுமானால் கட்டாயம் எழுதுவேன்.///////
சக எழுத்தார்வலர் என்ற முறையிலே என்மீது தாங்கள் கொண்டிருக்கும் நன்மதிப்புக்கு மிகுந்த நன்றி..
இந்த அளவிற்கு எனது ரசிப்புக்கேற்ற அளவிற்கு தங்கள் படைப்புகள்உள்ளதா என்பது குறித்து ஆசிரியரிடம் கேட்கும் அளவுக்கு என்னை முன்னிலைப்படுத்திய ஒரு இமேஜ் தங்களிடம் ஏற்படும் அளவுக்கு நான் அப்படி என்ன எழுதிவிட்டேன்..?பாதிப்பை ஏற்படுத்திவிட்டேன்?என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள்..
மீண்டும் நன்றி..
1
ReplyDeleteUma S umas1234@gmail.com
to me
on 1.2.2012
நீங்கள் அனைவரும் விரும்பினால், மாணவர் மலருக்கு, தனியாக வலைப் பதிவு ஒன்றைத் துவங்கி நீங்கள், நான், உட்பட மேலும் 10 பேர்களுக்கு பதிவுகளை உள்ளிடும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்து விடுகிறேன். அதாவது மொத்தம் 10 வலைப்பதிவு ஆசிரியர்கள் உள்ள வலைப் பதிவு.
அதற்கு வேண்டிய விளம்பரத்தை நமது வகுப்பறையின் முகப்புப் பகுதியில் கொடுத்துவிடுகிறேன். உங்கள் விருப்பத்திற்கு எழுதுங்கள் கோபாலன் சார். மற்றவர்களும் எழுதலாம். 15 நிமிடங்களில் ஒரு தனி வலைப்பதிவைத் துவங்கி விடலாம். மாதம் 30 நாட்களுமே அது வெளியாகும்படி செய்துவிடலாம்!//
முதலில் இருந்தது போல வாரம் இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) இதற்கென்று ஒதுக்க முடிந்தால் ஒதுக்குங்கள் சார். சனிக்கிழமையன்று நகைச்சுவை ஆக்கங்கள், ஞாயிறன்று பிற என ஏதாவது ஒரு முறை வைத்துக்கொள்ளலாம்.
s. உமா, தில்லி
-----------------------------
2
Uma S umas1234@gmail.com
to me
on 1.2.2012
வாரமலரில் இடம்பெற்ற அனைத்து ஆக்கங்களும் நன்றாக இருந்தன.
நான் தொழில்நுட்பப் புளி என்பதால் தேமொழி எப்படி ஓவியம் வரைந்தார் என விளக்கியது எனக்குப்புரியவில்லை.
தனுசுவின் ஆக்கம் நல்ல காமெடி. இவர் விடாக்கண்டனாக மாமாக்களை துரத்தப்பார்க்க அவர்கள் கொடாக்கண்டனாக இருந்து சாப்பிட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.
இதில் கடைசியில் உள்ள 'ஊட்டிவிடச் சொல்லாமல் அதுக்காவது எழுந்து வந்தார்களே சாமிகளா!' வாத்தியார் கைவண்ணம் என நினைக்கிறேன், என் ஊகம் சரியா?
s. உமா, தில்லி