20.7.11

Astrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள்ளிக் கொடுத்த வெற்றிகள்

------------------------------------------------------------------------------------------
Astrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள்ளிக் கொடுத்த வெற்றிகள்
       ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, ராகுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள். எனக்குத்தெரிந்தவரை 90 சதவிகித ஜாதகர்களை ராகு தன்னுடைய மகாதிசைகளிலும் அல்லது வேறு கிரகங்களின் திசைகளில் வரும் தன்னுடைய புத்திக்காலங்களில் படுத்தி எடுத்திருக்கிறார்.

      விதிவிலக்காக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்த ராகு அற்புதமாகப் பல நன்மைகளைச் செய்தான். பெயர், பணம், புகழ் என்று அவருக்கு அனைத்தையும் வாரி வழங்கினான். திரையுலகில் அவரைச் ஜொலிக்க வைத்தான். மின்ன வைத்தான். 1952ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டுவரை அவருக்கு ராகு மகாதிசை நடைபெற்ற 18 ஆண்டு காலமும் அவரின் வாழ்க்கையில் ஒரு பொற்காலமாகும்.

      1952ஆம் ஆண்டில் வெளியான அவருடைய முதல் படமான பராசக்தி திரைப்படத்தில் இருந்து, 1970ஆம் ஆண்டு வெளியான வீயட்நாம் வீடு வரை அவர் நடித்து வெளியான ஏராளமான படங்கள் வெற்றியைக் குவித்தன. அத்துடன் அவருக்கு லட்சக்கான ரசிகர்களையும் பெற்றுத்தந்தன!

     அந்த கால கட்டத்தில் அவர் எத்தனை வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார் என்று பட்டியல் இட்டுள்ளேன் பாருங்கள். வண்ண எழுத்தில் உள்ளவைகள் அதீத வெற்றி பெற்ற படங்கள்!

Paraasakthi  1952
Panam  1952
Poongodhai   1953
Thirumbi Paar   1953
Anbu  1953
Kangal  1953
Manidhanum Mirugamum 1953
Manohara  1954
Illara Jyothi  1954
Andha Naal First songless Tamil film. 1954
Kalyanam Panniyum Brammachari   1954
Thulivisham   1954
Koondukkili Only film co-starred with M. G. Ramachandran 1954
Thooku Thooki  1954
Edhir Paradhathu  1954
Kaveri  1955
Mudhal Thedhi 1955
Ulagam Palavidham 1955 
Mangayar Thilakam 1955
Kodeeswaran  1955
Kalvanin Kadhali  1955
Naan Petra Selvam  1956
Nalla Veedu  1956
Naane Raja  1956
Tenali Raman  1956
Pennin Perumai 1956
Raja Rani 1956
Amara Deepam  1956
Vaazhviley Oru Naal' 1956
Rangoon Radha  1956
Makkalai Petra Magarasi  1957
Vanangamudi 1957
Pudhaiyal  1957
Manamagan Thevai 1957
Thangamalai Ragasiyam 1957
Rani Lalithangi  1957
Ambikapathy  1957
Baagyavathi 1957
Uthama Puthiran First Dual Role 1957
Padhi Bhakti  1957
Sampoorna Ramayanam  1957
Bommai Kalyanam 1957
Annaiyin Aanai  1957
Sarangadhara 1957
Sabaash Meena  1957
Kaathavaraayan 1958
Thanga Padumai  1958
Naan Sollum Ragasiyam  1958
Thaayaippola Pillai Nooliappola Selai 1958
Veerapandiya Kattabomman Acting award at AfroAsian film festival 1958
Maragadham 1959
Aval Yaar  1959
Baga Pirivinai  1959
Irumbu Thirai  1960
Kuravanji  1960
Dheivapiravi  1960
Raja Bakthi  1960
Padikkadha Medhai  1960
Kuzhandhaigal Kanda Kudiyarasu  1960
Paavai Vilakku 1960
Pava Mannippu  1961
Punar Jenmam 1961
Pasamalar  1961
Ellam Unakkaga 1961
Sri Valli  1961
Maruthanaattu Veeran  1961
Palum Pazhamum 1961
Kappal Ottiya Thamizhan  1961
Paarthaal Pasi Theerum 1962
Nichaya Thaamboolam  1962
Valar Pirai 1962
Padithaal Mattum Podhuma  1962
Bale Pandiya First movie in three roles 1962
Vadivukku Valaikaappu 1962
Senthamarai  1962
Bandhapaasam 1962 
Aalayamani  1962
Chittoor Rani Padmini  1963
Arivaali  1963
Iruvar Ullam  1963
Naan Vanangum Dheivam 1963
Kulamagal Raadhai  1963
Paar Magale Paar 1963
Kungumam 1963
Ratha Thilagam 1963
Kalyaniyin Kanavan 1963
Annai Illam  1963
Karnan Role from Mahabharata 1964
Pachai Vilakku 1964 
Aandavan Kattalai 1964
Kai Kodutha Dheivam  1964
Pudhiya Paravai 1964

Muradan Muthu 1964
Navarathri 100th film  Portrayed 9 different roles 1964
Pazhani  1965
Anbu Karangal  1965
Santhi  1965
Thiruvilaiyadal Biggest hit of Tamil history at its time 1965
Neelavanam 1965 
Motor Sundaram Pillai  1966
Mahakavi Kalidas  1966
Thaaye Unakkaga  1966
Saraswathi Sabatham 1966
Selvam 1966
Kandhan Karunai  1967
Nenjirukkum Varai 1967
Pesum Dheivam 1967
Thangai  1967
Paaladai 1967
Thiruvarutchelvar 1967
Iru Malargal 1967
Ooty Varai Uravu 1967
Thirumal Perumai  1968

Harichandra 1968
Galatta Kalyanam 1968
En Thambi  1968

Thillana Mohanambal 1968
Enga Oor Raja 1968
Lakshmi kalyanam 1968
Uyarndha Manidhan 1968

Anbalippu  1969
Thanga Surangam 1969
Kaaval Dheivam 1969
Gurudhatchanai 1969
Anjal Petti 520 1969
Nirai Kudam 1969
Dheiva Magan ( Triple roles ) 1969
Thirudan  1969
Sivandha Mann First Tamil film to be shooted in Foreign Locations 1969
Enga Mama  1970
Ethiroli 1970

Vilaiyaattu Pillai 1970
Vietnam Veedu 1970
 
--------------------------------------------------------------------------------------------------
       முன் பாடங்களில், சந்திர மகா திசையில் அதன் சுயபுத்தி நடைபெறும் பத்து மாத காலத்திற்கான பலன்களையும், அதற்கு அடுத்து சந்திர மகா திசையில் செவ்வாயின் புத்திக்கான பலன்களையும் பார்த்தோம். இன்று சந்திர மகா திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.

      அது நடைபெறும் காலம் 18 மாதங்கள் (அதாவது ஒன்றரை ஆண்டுகள்)

       ராகு தீய கிரகம் தன்னுடைய புத்தியில் நன்மையான பலன்களை அளிக்க மாட்டார். ஜாதகனைப் பாடாய்ப் படுத்தி விடுவார்.

      பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

பாரப்பா சந்திரதிசை ராகுபுத்தி
    பகையான நாளதுவும் மாதம்பதினெட்டாகும்
ஆரப்பா அதனுடைய பலத்தைக்கேளு
    அடங்காத சத்துருவால் தனநஷ்டமாகும்
வீரப்பா வியாதியது பீடிப்பாகும்
    விதியளவும் புத்திமதி நாசம்பண்ணும்
காரப்பா களருடனே காலிசாவாம்
    கனகமது சிலவாகும் கண்டுதேறே!


       அடுத்து ராகு திசையில் சந்திர புத்திக்கான பலன்கள் (அதுவும் 18 மாத காலமே) சந்திரன் சுபக்கிரகம் என்றாலும் தசா நாதனை மீறீ அல்லது கடாசிவிட்டு அவர் நன்மையான பலன்களைத் தர முடியாது. அது நடைபெறும் 18 மாத காலமும் தீமையானதாகவே இருக்கும். பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

காலியென்ற ராகுதிசை சந்திரபுத்தி
    கனமில்லா மாதமது ஈரொன்பதாகும்
வேலியென்ற அதன்பலனை விளம்பக்கேளு
    விதமில்லா மனைவிதன்னால் பொருளுஞ்சேதம்
வாலியென்ற குரங்கதுபோல் மாண்டுபோவான்
    வகையான தேசம்விட்டு அலைவான்பாரு
மாலியென்ற மனைவியால் சுகபோகமில்லை
    மக்கள்முதல் மாடுடன் கேடாங்கேளே1


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
20.7.2011

==============================================
வாழ்க வளமுடன்!

18 comments:

  1. வணக்கம் வாத்தியார் ஐயா,

    ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, ராகுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள்.

    உண்மை நான் அனுபவித்திருக்கிறேன்..

    சிவாஜி கணேசன் ( கூட கணேசன் இருந்து ராகு -வை பார்த்துட்டார் போல )


    பகிர்வுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,

    நடிகர் திலகத்தின் ஜாதகத்தில் ராகு அவரை எல்லாவிதத்திலும் உச்சத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளது என்பதை பதிவில் அறிய முடிகிறது. நன்றி.
    "ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, கேதுவைப் போல கெடுப்பாருமில்லை" என்பார்கள்.
    மேல் கூறியப் வழக்கு மொழிபோல்... நிறையக் கொடுத்தாலும் அவர் அந்தக் காலங்களில் எண்ணப் பாடு பட்டிருப்பார்... எவ்வளவு ஓயாது உழைத்து இருப்பார் என்பதை நினைக்கும் போது; ராகு கொடுத்தது என்னவோ உண்மை என்றாலும்... அவர் தாங்கள் சொன்னது போல் பயங்கரமாகப் படுத்தியும் இருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. அடுத்து எனக்கு ராகு திசை தான் 2017 க்கு மேல். மூன்றில் ராகு. அப்பன் முருகன் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. மிகவும் மெனக்கிட்டு செய்திகளைத் தருகிறீர்கள் ஐயா!ராகுவின் போக்கை நன்றாகச்சொல்லி உள்ளீர்கள். ஸ்ரீதுர்கா நாமம் காக்கும்.

    ReplyDelete
  4. உத்திரம் கன்னி ராசி ,BIRTHDAY 5.10.1972 ,PM11.16
    நான் ஆரம்பித்த மில் கடனில் இருக்கிறது ,நடத்தலாமா ,அல்லது கொடுக்கலாமா ?
    முடியவில்லை ....என்ன செய்யலாம்?

    ReplyDelete
  5. ஒரு ராகுவிற்கு விதிவிலக்காக
    ஒருவரை அடையாளம் காட்டியதும்

    விரிவான வரிசையில்
    வித்தியாசமான வெற்றிப்படங்கள் என

    கலவையான செய்தியுடன்
    கலக்கலாக பாடம் நடத்தும் உங்களை

    பாராட்ட வார்த்தைகளை அகராதியில்
    பார்த்துக் கொண்டு இருக்கிறோம்

    வாழ்க பல்லாண்டு.....நீவிர்
    வளர்க உமது தொண்டு..

    வழக்கம் போல் இந்த வகுப்பிற்கு
    வரும் குறள் சிந்தனை ...


    சால்பிற்கு கட்டளை யாதெனில்
    தோல்வி
    துலையல்லலார் கண்ணும் கொளல்

    ReplyDelete
  6. அன்புத் தோழர்
    ஆலாசியம் அவர்களே..

    நலம் தானே.. அவ்வப்போது
    நாம் சந்திக்கும் இந்த

    வகுப்பறைக்கு விடுமுறையோ மீண்டும்
    வருவது எப்போது என

    ஆவலுடன்..
    அன்புடன்..

    ReplyDelete
  7. உள்ளேன் ஐயா....!
    நண்பர் சிவ.சி.மா.ஜானகிராமன் சொன்னதுபோல
    ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, ராகுவைப் போல கெடுப்பாருமில்லை

    உண்மை தான் போல ...

    சிவாஜி கணேசனின் வெற்றி படத்தொகுப்பினை அழகாக கொடுத்துள்ளீர்கள்...

    அவர் வெற்றியடைந்ததற்கான காரணத்தையும் சொல்லியுள்ளீர்கள்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  8. வாழ்வில் முன்னேற்றத்தைக்கொடுக்கும் ராகுவை எதிர்பார்த்து ராஜேஸ்

    ReplyDelete
  9. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    வணக்கம் வாத்தியார் ஐயா,
    ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, ராகுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள்.
    உண்மை நான் அனுபவித்திருக்கிறேன்..
    சிவாஜி கணேசன் ( கூட கணேசன் இருந்து ராகு -வை பார்த்துட்டார் போல )
    பகிர்வுக்கு நன்றி ஐயா..////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜானகிராமன்!

    ReplyDelete
  10. /////Blogger தமிழ் விரும்பி said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    நடிகர் திலகத்தின் ஜாதகத்தில் ராகு அவரை எல்லாவிதத்திலும் உச்சத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளது என்பதை பதிவில் அறிய முடிகிறது. நன்றி.
    "ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, கேதுவைப் போல கெடுப்பாருமில்லை" என்பார்கள்.
    மேல் கூறியப் வழக்கு மொழிபோல்... நிறையக் கொடுத்தாலும் அவர் அந்தக் காலங்களில் எண்ணப் பாடு பட்டிருப்பார்... எவ்வளவு ஓயாது உழைத்து இருப்பார் என்பதை நினைக்கும் போது; ராகு கொடுத்தது என்னவோ உண்மை என்றாலும்... அவர் தாங்கள் சொன்னது போல் பயங்கரமாகப் படுத்தியும் இருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. அடுத்து எனக்கு ராகு திசை தான் 2017 க்கு மேல். மூன்றில் ராகு. அப்பன் முருகன் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.
    நன்றிகள் ஐயா!/////

    அதெல்லாம் பார்த்துக்கொள்வார். கவலையின்றி இருங்கள் நண்பரே!

    ReplyDelete
  11. //Blogger kmr.krishnan said...
    மிகவும் மெனக்கிட்டு செய்திகளைத் தருகிறீர்கள் ஐயா!ராகுவின் போக்கை நன்றாகச்சொல்லி உள்ளீர்கள். ஸ்ரீதுர்கா நாமம் காக்கும்.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. Blogger Babu (பாபு நடராஜன்} said...
    உத்திரம் கன்னி ராசி ,BIRTHDAY 5.10.1972 ,PM11.16
    நான் ஆரம்பித்த மில் கடனில் இருக்கிறது ,நடத்தலாமா ,அல்லது கொடுக்கலாமா ?
    முடியவில்லை ....என்ன செய்யலாம்?

    உங்களுக்கு ஏழரைச் சனி நடக்கிறது. நடக்கும் திசை போன்ற வேறு அம்சங்களையும் பார்த்துவிட்டு ஒரு முடிவு செய்யுங்கள்

    ReplyDelete
  13. ////Blogger iyer said...
    ஒரு ராகுவிற்கு விதிவிலக்காக ஒருவரை அடையாளம் காட்டியதும்
    விரிவான வரிசையில் வித்தியாசமான வெற்றிப்படங்கள் என கலவையான செய்தியுடன் கலக்கலாக பாடம் நடத்தும் உங்களை பாராட்ட வார்த்தைகளை அகராதியில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்//////

    பாராட்டெல்லாம் வேண்டாம் சுவாமி. அகராதியில் வேறு சொற்களைத் தேடுங்கள்

    ReplyDelete
  14. //////Blogger iyer said... அன்புத் தோழர்
    ஆலாசியம் அவர்களே.. நலம் தானே.. அவ்வப்போது
    நாம் சந்திக்கும் இந்த வகுப்பறைக்கு விடுமுறையோ மீண்டும்
    வருவது எப்போது என
    ஆவலுடன்..
    அன்புடன்..//////

    தினமும் வந்து கொண்டிருக்கிறார் - புனைப் பெயரில்.
    முடிந்தால் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்
    நான் சொல்ல மாட்டேன்!

    ReplyDelete
  15. Blogger மாய உலகம் said...
    உள்ளேன் ஐயா....!
    நண்பர் சிவ.சி.மா.ஜானகிராமன் சொன்னதுபோல
    ராகுவைப்போல கொடுப்பாருமில்லை, ராகுவைப் போல கெடுப்பாருமில்லை
    உண்மை தான் போல ...
    சிவாஜி கணேசனின் வெற்றி படத்தொகுப்பினை அழகாக கொடுத்துள்ளீர்கள்...
    அவர் வெற்றியடைந்ததற்கான காரணத்தையும் சொல்லியுள்ளீர்கள்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா..///////

    நல்லது. நன்றி நண்பரே

    ReplyDelete
  16. Blogger மாய உலகம் said...
    வாழ்வில் முன்னேற்றத்தைக்கொடுக்கும் ராகுவை எதிர்பார்த்து ராஜேஸ்//////

    உலக வாழ்வை மாயை (illusion) என்று சொல்லிவிட்டீர்கள். அதற்குப் பிறகு எதற்கு எதிர்பார்ப்பெல்லாம்?

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி ஐயா....
    அடுத்த மாதத்தில் இருந்து எனக்கு ராகு திசை ஆரம்பம்..
    ராகு 7 ல் லக்னாதிபதியோடு உள்ளார் ...
    ராகுவை எதிர்பார்த்து .காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. பல மாதங்களுக்கு பிறகு வகுப்பறைக்கு வருகிறேன். ஜாதகம் கணிக்க கற்கும் ஆர்வத்தில் வாங்கிய 50 வருட வாக்கிய பஞ்சாங்க புத்தகம் அப்பாவால் பீரோவில் மறைத்து வைக்கப்பட்டது(for me to concentrate in my career). புக்திநாதன் சனி தாமதப்படுத்துகிறார். இனி வெளிவரவுள்ள தங்கள் ஜோதிட நூல்களை படித்தல், திருமணம் போன்ற பாக்கியங்களுக்கு இன்னும் 1 ஆண்டு(புதன் புக்திக்கு) i have to wait...எனினும் 4 மாதங்களுக்கு முன்பு செய்த சங்கல்பத்தை நாள் தவறாது தொடர்கிறேன் - அதாவது, தினமும் மலர்கள், துளசியால் இறைவனை பூஜித்து 108 போற்றி போன்ற ஸ்லோகங்களை தினமும் கூறுவது என. ஏகாதசி , சனிக்கிழமைகளில் தவறாது ஆலய தரிசனமும் செய்கிறேன். விரக்தியில் தானே ஞானம் பிறக்கிறது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com