---------------------------------------------------------------------------------------
முதலில் யாருக்குச் சிறந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்?
மூன்று தையற்காரர்கள் இருந்தார்கள். தொழிலில் நன்றாகத் தேர்ச்சியடைந்த பின் முன்னேற்றத்தைத் தேடி மூவரும் ஒரு பெரிய நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மூவரும் நகரின் பிரதான சாலையில் தகுந்த இடத்தை வாடகைக்குப் பிடித்து, தங்கள் தொழிலைத் தனித்தனியாகச் செய்யத் துவங்கினார்கள்.
அடுத்த நாள் காலை, முதலாமவன், தன் கடை வாசலில் கீழ்க்கண்டவாறு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்:
“நகரின் மிகச்சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”
அதேபோல இரண்டாவது ஆசாமியும் தன் கடை வாசலில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்.
“உலகின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”
இரண்டையும் கண்ணுற்ற மூன்றாமவன், திகைத்துப்போனான். அதே
போல தன் கடை வாயிலும் ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைக்க விரும்பினான். அத்துடன் தன்னுடைய கடைப்பலகை அவை
இரண்டையும் விட மேன்மை உடையதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். பலமாக யோசனை செய்து, அடுத்த நாள் இப்படி ஒரு அறிவிப்புப் பலகையை வைத்தான்.
“இந்தத் தெருவின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே கடை வைத்திருக் கிறார். ஒருமுறை தைத்துப் பாருங்கள்”
யாரிடம் கூட்டம் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மூன்றாவது ஆசாமியிடம்தான் கூட்டம் சேர்ந்தது!
உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது. அதுதான்
அதிகமான வரவேற்பைப் பெறும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்
அன்புடன்
வாத்தியார்
21.7.2011
வாழ்க வளமுடன்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஇரத்தினச் சுருக்கம் என்பதுவும் இது தானோ!
"நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது. அதுதான்
அதிகமான வரவேற்பைப் பெறும்"
நான் சில தனியார் தொழில் நிறுவன முதலாளிகளிடம் நேர்முகத் தேர்வில் அமர்ந்திருக்கிறேன்... அதில் ஒருவர் எனது சான்றிதழ்களை காண்பிக்க நினைத்த போது, இல்லை அது ஒரு பக்கம் இருக்கட்டும் அதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை! ஆகவே உங்களுக்கு என்னத் தெரியும் என்று சொல்லுங்கள் (என்ன செய்ய முடியும் என்று) அதில் எத்தனை அர்த்தம் இருந்தது. சான்றிதழ்கள் தாம் அறிவாளி என்பதை விளம்பரப் படுத்த மட்டும் பெரிதும் உபயோகப் படும். ஆனால், நாம் செய்யப் போகிற காரியம் தான் இருவருக்கும் உபயோகப் படும் என்பதாக.
"முதலில் சொன்ன நேரத்தில் கொடுத்தால் அவரே நல்ல தையல் காரர்"
பதிவு சிறுதுளி இருப்பினும்
அது தரும் கருத்து பெருவெள்ளம்.
நன்றிகள் ஐயா!
பொன்மொழிகள் என்பார்களே அது இதுதானோ ?
ReplyDeleteஅருமை வாத்தியார் ஐயா..
இதுபோன்ற வாசகங்களால் நமது அறிவும் விருத்தியாகிறது..
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
தாய் வயிற்றைப் பட்டினி போட்டுவிட்டு மகேஸ்வர பூஜை செய்வது பலன் தராது என்பது போல உள்ளது. முதலில் தெருவில் உள்ள கோவில், ஊரில் உள்ள கோவிலை நன்கு பராமரித்து விட்டுத்தான் வெளியூர் கோவிலுக்குச் செய்ய வேண்டும் என்பார்கள். அதுபோல அந்த 3வது தையர்காரர் புத்திசாலித்தனமாக அடிப்படை இயல்பை மூலதனமாக்கிவிட்டார். நன்று
ReplyDeleteஆ.. ஆகா..
ReplyDeleteஅவர் இங்கே இருக்கிறார்..
கையில் இருந்தாலும்-சிங்
கையில் இருந்தாலும்
தமிழை விரும்பும் நம்மவர்போல்
தம்மை சேர்ந்தவருக்காக இவர்
அவர் போலவே நாமும்..
ஆனந்த வெள்ளத்தை அள்ளி தந்தபடி
வழக்கமாக குறள் சிந்தனை
வணக்கங்களுடன்.. வாழ்த்துக்களுடன்.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை
அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்..
///கையில் இருந்தாலும்-சிங்
ReplyDeleteகையில் இருந்தாலும்
தமிழை விரும்பும் நம்மவர்போல்
தம்மை சேர்ந்தவருக்காக இவர்
அவர் போலவே நாமும்..
ஆனந்த வெள்ளத்தை அள்ளி தந்தபடி///
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
இரத்தினச் சுருக்கம் என்பதுவும் இது தானோ!
"நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது. அதுதான்
அதிகமான வரவேற்பைப் பெறும்"
நான் சில தனியார் தொழில் நிறுவன முதலாளிகளிடம் நேர்முகத் தேர்வில் அமர்ந்திருக்கிறேன்... அதில் ஒருவர் எனது சான்றிதழ்களை காண்பிக்க நினைத்த போது, இல்லை அது ஒரு பக்கம் இருக்கட்டும் அதில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை! ஆகவே உங்களுக்கு என்னத் தெரியும் என்று சொல்லுங்கள் (என்ன செய்ய முடியும் என்று) அதில் எத்தனை அர்த்தம் இருந்தது. சான்றிதழ்கள் தாம் அறிவாளி என்பதை விளம்பரப் படுத்த மட்டும் பெரிதும் உபயோகப் படும். ஆனால், நாம் செய்யப் போகிற காரியம் தான் இருவருக்கும் உபயோகப் படும் என்பதாக.
"முதலில் சொன்ன நேரத்தில் கொடுத்தால் அவரே நல்ல தையல்காரர்"
பதிவு சிறுதுளி இருப்பினும்
அது தரும் கருத்து பெருவெள்ளம்.
நன்றிகள் ஐயா!//////
சொன்ன நேரத்தில் கொடுப்பது மட்டுமல்ல - கொடுத்த அளவிலும் தைத்துக்கொடுக்க வேண்டும் நண்பரே!
///Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ReplyDeleteபொன்மொழிகள் என்பார்களே அது இதுதானோ ?
அருமை வாத்தியார் ஐயா..
இதுபோன்ற வாசகங்களால் நமது அறிவும் விருத்தியாகிறது..
நன்றி.. http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ..//////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஜானகிராமன்!
///////Blogger kmr.krishnan said...
ReplyDeleteதாய் வயிற்றைப் பட்டினி போட்டுவிட்டு மகேஸ்வர பூஜை செய்வது பலன் தராது என்பது போல உள்ளது. முதலில் தெருவில் உள்ள கோவில், ஊரில் உள்ள கோவிலை நன்கு பராமரித்து விட்டுத்தான் வெளியூர் கோவிலுக்குச் செய்ய வேண்டும் என்பார்கள். அதுபோல அந்த 3வது தையர்காரர் புத்திசாலித்தனமாக அடிப்படை இயல்பை மூலதனமாக்கிவிட்டார். நன்று//////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
///////Blogger iyer said...
ReplyDeleteஆ.. ஆகா..
அவர் இங்கே இருக்கிறார்..
கையில் இருந்தாலும்-சிங்
கையில் இருந்தாலும்
தமிழை விரும்பும் நம்மவர்போல்
தம்மை சேர்ந்தவருக்காக இவர்
அவர் போலவே நாமும்..
ஆனந்த வெள்ளத்தை அள்ளி தந்தபடி
வழக்கமாக குறள் சிந்தனை
வணக்கங்களுடன்.. வாழ்த்துக்களுடன்.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை
அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்../////
நல்லது. நன்றி விசுவநாதன்!
//////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDelete///கையில் இருந்தாலும்-சிங்
கையில் இருந்தாலும்
தமிழை விரும்பும் நம்மவர்போல்
தம்மை சேர்ந்தவருக்காக இவர்
அவர் போலவே நாமும்..
ஆனந்த வெள்ளத்தை அள்ளி தந்தபடி///
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.////////
நல்லது. நன்றி நண்பரே!