-------------------------------------------------------------------------------------
முகவரி தெரியாமல் மோதியபோது!
புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற எண்ணம்தான் காவியத்திற்கு ஆரம்பம்.
புதுக்கவிதைக்கு காவிய அந்தஸ்த்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.
புதுப்புதுச் சொற்கள். புதிய பிரயோகங்கள். சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார்.
ஒரு கவிஞருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்ட இந்த நெடுங்கவிதை பல நூற்றாண்டுகளைக் காணப்போவது உறுதி.
சா.விஸ்வநாதன்.
(கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிராஜன் கதை என்னும் நூலிற்கு திரு சாவி அவர்களின் வாழ்த்துரை)
ஒரு கவிஞனின் வாழ்க்கை வரலாறு புதுக் கவிதையில் எழுதப் பட்டது என்றால் அது கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்த கவிராஜன் கதையாகத்தான் இருக்கும். சரி அதன் 48 -ஆவது பகுதிக்குப் பயணிப்போம்.
மகாகவியின் மரணம்
கொஞ்சம் தாமதித்திருந்தால்
சில நிமிஷங்களில்
ஒரு சகாப்தத்தையே
சாகடித்திருக்கும்.
நல்லவேளை
தரையில்
கொட்டிக்கிடந்த பாரதியை
குவளைக் கண்ணனின்
அம்புக்கைகள் விரைந்து
அள்ளி எடுத்தன.
காய்ந்த உடம்பெங்கும்
காயங்கள்
தேகமெல்லாம் அங்கங்கே
சின்ன சின்ன
கிழிசல்கள்
அவன் பட்ட துயருக்காய்
அங்கங்கள் அங்கங்கே
ரத்தமாய் அழுதன.
அங்கே
இன்னும் சில நிமிஷங்கள்
இருந்திருந்தால்-
அந்த யானை
தேங்காய் தந்தவனையே
சிதறு தேங்காய் போட்டிருக்கும்.
காயப்பட்ட கவிஞனை
ராயப்பேட்டை மருத்துவமனையில்
சீனுவாச்சாரியார் சேர்த்தார்.
பகைவனுக்கு அருளச்சொன்ன
பாவலன் - தன்னைப்
பழுதாக்கிய யானையைப்
பழித்தானா?... இல்லை.
கண்ணீரின் வலிக்கு -
புன்னகை ஒத்தடம்
கொடுத்துக் கொண்டான்.
"யானை - என்
முகவரி தெரியாமலே
மோதிவிட்டது
இருந்தாலும் அதற்கு
இறக்கமதிகம்
இல்லையேல் -
துதிக்கையால் என்னைத்
துவைத்திருக்காதா? "
அங்கங்களின் காயம்
ஆறிவிட்டது
ஆனால் அந்த அதிர்ச்சி
அவசர வியாதிகளை
அழைத்து வந்தது.
....................................
...................................
ஏ மரணமே
எங்கள் மகாகவியின்
படுக்கையை அன்று
பாடையாக்கி விட்டாயே
அந்த மரண இரவில்
ஒரு மயான மௌனம்
விளக்குகள் வெளிச்சத்தை
அழுது கொண்டிருந்தன.
ஒரு மகாகவி
மரணத்தோடு
மல்யுத்தம் நடத்துகிறான்
வெளியேறத் துடிக்கும் உயிர்
உடம்பை அடிக்கடி
உதைக்கிறது.
மருந்தை மாகவிஞன்
மறுதலிக்கிறான்.
*******************************************************
ஆம், மரணப் படுக்கையில்
முடங்கிக் கிடக்கும்
செஞ்சூரியனை
சமதர்ம சங்க நாதத்தை,
பெண்ணடிமை ஒழிக்கப் புறப்பட்ட
கவிச் சுடரொளியை
நாள்தோறும்
மறவாமல் சென்று
ஆறுதல் கூறும்
அந்த மீனவ நண்பர்
அன்றும்
காணச் சென்றார்.
சிங்காரவேலர்,
தனது தோழருக்கு;
எப்போதும் போல் அன்றும்,
அக்னிக் குஞ்சிற்கு ஆகாரம் தர
வெந்நீரில் 'ஹார்லிக்சைக்'
கலந்து கொண்டார்.
அறிவு ததும்பும் அமுதக் கலசத்தை
தன் மடியிலே வைத்து கொண்டு - ஆம்
மகாகவியின் சிரத்தை தன் மடியில்
இருத்திக் கொண்டு
அமுதுக்கு அமுதூட்டினார்.
கலந்த ஹார்லிக்சை கனிவோடு
ஊட்டினார்.
அமுது பருகும் அந்நேரம்..
வெடித்துச் சிதறி விண்ணையே
முட்டிய எரிமலை
அமைதி கொள்கிறது.
சுயராஜ்ஜியம் வேண்டி
புறப்பட்ட புரட்சிப் புயல்
நிசப்தம் கொள்கிறது.
காலனையே மிதிக்கத்
துணிந்தவனை,
சக்தியும் மடியில் இருந்து
இறக்கி விட்டாள்.
அமரத்துவம் கொண்ட
கவிகளைப் படைத்து
உலகமே உய்ய
மானுடம் பாடிய மகாகவி
அமைதி கொள்கிறான்.
அடுத்த சில மணித்துளிகள் - தன்
அருமை நண்பர் மடியிலே
அமரர் ஆனார்.
********************************************************************
(மேலே உள்ள அந்த செவ்வரிகள் நான் கூறியவை. அதை கவிஞர் வைரமுத்து தனது கவிராஜன் கதையில் செதுக்கவில்லை?! இப்போது மீண்டும் வைரமுத்துவின் வரிகளுக்கே செல்வோம்)
ஏகாதிபத்தியத்தை
எதிர்த்துப் பறந்த ராஜாளி
சிரமத்தில் துடித்துச்
சிறகடிக்கிறது.
அந்த இரவில்
ஒரு யுகபாஷை
ஊமையாகிவிட்டது.
செப்டம்பர் ராத்திரி
அதிகாலை இரண்டு மணி
மரணம் - அந்த
முப்பத்தொன்பது வருஷக்
கவிதைக்கு
முற்றுப் புள்ளி வைத்தது.
உயிர் துடிக்கிறது பாரதி
உடம்பெல்லாம் கண்ணீர்
ஓடுகிறது மகாகவியே
இன்று நினைத்தாலும்
தலையறுந்த சேவலாய்த்
தவிக்கிறது நெஞ்சு
என் கண்ணீர் - உன்
எரிந்த சடலந்தேடி
எங்கெங்கோ அலைகிறது.
அந்த சமூகச் சிற்பிகளின் சிந்தனையோடு வணக்கம் கூறுகிறேன்.
நன்றி!
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வணக்கம் ஆலாசியம்,
ReplyDelete//"யானை - என்முகவரி தெரியாமலேமோதிவிட்டதுஇருந்தாலும் அதற்குஇறக்கமதிகம்இல்லையேல் -துதிக்கையால் என்னைத்துவைத்திருக்காதா? //
யானைக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கும் அந்த மகா கவியின் முகவரி தெரியாமலேயே இருக்கிறது..
அக்கவிஞனை தொடர்ந்து வகுப்பறைக்கு கொண்டுவரும் ஆலாசியத்துக்கு ஒரு ஓ போடுகிறோம்.
வாழ்த்துக்கள் தோழரே...
அன்புடன் வணக்கம் திரு அலசியம்
ReplyDeleteகவிதை ...கவி..தாயின் . கடைசி நேரம .கண்ணீர் படிப்பவர்களையும் உருக வைக்கிறது..
நன்றி
புதுக் கவிதை புனைந்த ஹாலாஸ்யம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteபதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா!
////யானைக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கும் அந்த மகா கவியின் முகவரி தெரியாமலேயே இருக்கிறது..
ReplyDeleteஅக்கவிஞனை தொடர்ந்து வகுப்பறைக்கு கொண்டுவரும் ஆலாசியத்துக்கு ஒரு ஓ போடுகிறோம்.
வாழ்த்துக்கள் தோழரே...////
உண்மை தான் தோழரே! மஹாகவி மட்டும் அல்ல அவன் ஒரு மகாத்மாவும் கூட....
எல்லாவற்றிலும் இறைவனைக் கண்ட கவியோகி / அத்வைதி.... ஆண்டவனின் அற்புதப் படைப்பு அவன்
மறுப்போரும் மறைப்போரும் பெருகியதில் வியப்பில்லை... கலியுகத்தில் தர்மம் ஒற்றைக் காலிலே அதுவும் ஊனத்தொடு தான் உலாவருகிரதாம்..
அவனோடு வாழ்ந்திருக்கனும்.... வாழ்ந்திருந்தோமா என்றுத் தெரியவில்லை
அவன் சிந்தனையோடு வாழ்கிறோம்.... இந்த உண்மை நிகழ்வுகளை பதிவிட்ட நம் வாத்தியாருக்கு தான் நாம நன்றி கூறவேண்டும்
///கவி..தாயின் . கடைசி நேரம .கண்ணீர் படிப்பவர்களையும் உருக வைக்கிறது.////
ReplyDeleteஆம் ஐயா! அற்புதக் கவிஞன் மறைந்து விட்டாலும் அவன் நினைவுகள் உலகம் உள்ளவரை
உலா வந்துக் கொண்டு இருக்கும்.
///kmr.krishnan said...
ReplyDeleteபுதுக் கவிதை புனைந்த ஹாலாஸ்யம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்////
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சார்.
ஆழமிக்க வரிகள்.. அருமை அன்பரே..
ReplyDelete