10.6.11

யாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது?

------------------------------------------------------------------------------------
 யாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது?

பக்தி மலர்

கிரீஷ் ச‌ந்திர கோஷ் என்ற பெயரைத் தெரியாத வங்காளிகளே இருக்க முடியாது.

எப்படித் தமிழ் நாட்டில் சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்மல் சம்பந்த முதலியாரையும், மதுரைபாய்ஸ் கம்பெனிக் காரர்களையும், நவாப் ராஜமாணிக்கத்தையும், மேடை நாடகங்களைப் பற்றிப் பேசும்போது
தவறாமல் குறிப்பிடுவார்களோ, அதுபோல வங்கத்தில் நாடகத்
தந்தையாகவே கிரீஷ் சந்திரகோஷ் இன்றளவும் போற்றப் படுகிறார்.

இந்த கிரீஷ் கோஷ் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர்.

கலை ஞானம் உள்ளவர்களே  சமூக‌ ஒழுக்கத்தில் சற்றே ஏறுமாறாகத்தான் காட்சி கொடுப்பார்கள். நமது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மதுபானத்திற்கு அடிமை என்பது ஊர் அறிந்த ரகசியம்.பலரையும் அது போலச் சுட்டலாம். ஆனால் அதுவல்ல நாம் சொல்ல வருவது.

கிரீஷ் கோஷும் ஒரு மொடாக் குடியர். எப்போதும் புதிய புதிய மதுபான வகைகளை விரும்பி அருந்துவார். ஆங்கிலேய அரசாங்கத்தில் 'ஆக்டராய்' என்ற மதுவால் வரும் வரிதான் பிரதானமானது.

மேலும் வங்கத்தில் முதல் முதலில் பெண்களை மேடையில் ஏற்றி நடிக்க வைத்தவர் கிரீஷ். அவர் பெண்களை மேடை ஏற்றும் வரை பெண் பாத்திரங்களையும் ஆண்க‌ளே நடித்து வந்தனர்.நம் தமிழ்நாட்டிலும் ஸ்த்ரி பார்ட் இருந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே முதல் முதலில் ஸ்திரி பார்ட் செய்தவர்தான்.

மது,மாது,மாமிசம் ஆகியவைகளுக்கு கட்டுப்பட்டுத் தன் நிலை இழந்தவராகவே கிரீஷ் வாழ்ந்துள்ளார்.இந்நிலை அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்றுக்கொள்ளும் வரை நீடித்தது.

ஒரு நாள் கிரீஷின் நண்பர் ஒருவர்," நீ என்ன‌ப்பா குடித்து விட்டு ஆனந்தம் என்கிறாயே! உன்னை விட ஆனந்தமாக இருப்ப‌வர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா?"என்று கேட்டுள்ளார்.

"அது யாரைய்யா என்னை விட ஆனந்தம் அதிகமாக அனுபவிப்பது? எங்கே உள்ளான் அந்த மனிதன்?"

"தட்சிணேஸ்வரக் காளிகோயிலில் ஓர் அறையில் தங்கியுள்ளார் அந்த அபூர்வ மனிதர்"

"அப்படியா!? இதோ உடனே போய் எந்த அளவு அந்த மனிதன் என்னை விட அதிக ஆனந்தமாக இருக்கிறான் என்று பார்த்து விடுகிறேன்" என்று வீராப்பாகக் கிளம்பி வந்தார் கிரீஷ் கோஷ்.

கையில் பாட்டிலுடனும், உள்ளத்தில் ஆவேசத்துடனும் வந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அறை வாசலில் நின்ற கிரீஷை ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவரோ இறை ஞானத்தில் மூழ்கித் திளைத்து ஆனந்த பரவசத்தில் ஆடிப்பாடிக் கொண்டு இருக்கிறார். ஆடை போன இடம் தெரியவில்லை. சுற்று முற்றும் என்ன நடக்கிறது என்றும் பார்க்கவில்லை. தன்னுள்தானே மூழ்கிப் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார்.

இதை கண்ணுற்ற கிரிஷுக்குத் தன் நண்பர் சொல்லியது சரிதான் என்று தோன்றிவிட்டது.

"உண்மையில் இந்த மனிதர் என்னைக் காட்டிலும் ஆனந்தமாகத்தான் இருக்கிறார். எந்தக் கடையில் சரக்கு வாங்குகிறார் என்று கேட்போம்"

கிரீஷ் ஸ்ரீராமகிருஷ்ணரை பிடித்து உலுக்கினார். சற்றே நினைவு திரும்பிய குருதேவர்,"என்ன வேண்டும் உமக்கு?" என்றார்.

"இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறீரே!எந்தக் கடையில் மதுபானம் வங்குகிறீர் என்று சொல்லலாமா?"

"ஓ!தாரளமாகச்சொல்லலாம்தான். இந்த மது இலவசமாக வேறு கிடைக்கிறது. அளவும் நம‌க்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். என்ன, உடனே அதை உமக்குச் சொல்ல மாட்டேன். அடிக்கடி நீர் இங்கு வந்தால் அந்தக் கடைக்காரரிடம் அறிமுகப்படுத்தி விடுகிறேன்."

"அப்படியா!சரி அடிக்கடி வருகிறேன்" என்று கூறிவிட்டு அன்று கல்கத்தா திரும்பிவிட்டார் கிரீஷ் கோஷ்.

மகானின் தரிசனமும், ஸ்பரிசமும் அவர் மனதில் பல மாற்றங்களை வரவழைத்தன. இருந்தாலும் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தார் கிரீஷ்.செல்லும் போது கையில் புட்டியுடந்தான் செல்லுவார். குருதேவர் முன்னிலையிலேயே குடிப்பார். சில சமயம் குடிக்காமல் கட்டுப்படுத்தப் பார்ப்பார். ஆனால் பழகிவிட்ட உடல் கேட்கத் துவங்கும் அவர் பதட்டப்படுவதைப் பார்த்த குருதேவர் குடிக்க அனுமதிப்பார். இப்படியே சில மாதங்கள் கடந்தன.

ஆன்மீக வழிகளையெல்லாம் கிரீஷுக்கு எடுத்துச்சொல்லுவார் குருதேவர்.

"கொஞ்சம் ஜபம் செய். ஐந்து நிமிடம் தியானம் பழகு" என்றெல்லாம் சொல்வார் குருதேவர்.கிரீஷும் முயல்வார். ஆனால் 'முடியவில்லையே' என்று தவிப்பார்.

ஒருநாள்,"என்னால் நீங்கள் சொல்லும் எந்த முறைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை. எனக்காக நீங்களே எல்லாவற்றையும் செய்து, பலனை மட்டும் எனக்குத் தாருங்கள்" என்று குருதேவரிடம் விண்ணப்பம் செய்தார் கிரீஷ்.

"அப்படியா! சரி உன் பொறுப்பு இனி என‌க்கா? அப்படியே ஆகட்டும்.உன்னால் முடிந்த ஒன்றைமட்டும் செய்வாயா?"

"சரி செய்கிறேன். என்ன அது?"

"இன்று முதல் நீ குடிக்கும் ஒவ்வொரு கோப்பையையும் 'என் குருதேவரான ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணம் என்று சொல்லிவிட்டு அருந்துவாயா?"

"சரி அப்படியே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிரீஷ் வீடு திரும்பினார்.

இரவு படுக்கப் போகும் முன்னால் குடிக்கப் புட்டியைத் திறந்தார்.

குருதேவர் கூறியது நினைவுக்கு வந்தது.

"இந்தக் கோப்பை குருதேவருக்கு அர்ப்பணம்" என்று சொல்லி வணங்கினார். கோப்பையின் உள்ளே குருதேவர் சிரிக்கிறார். இது ஏதோ பிரமை என்று வேறு ஒரு கோப்பை எடுத்து மீண்டும் மது ஊற்றி அர்ப்பணம் என்றால் அதிலும் குருதேவர்!

கிரீஷ் கோஷால் குடிக்க முடியவில்லை. அப்போதே குருதேவரைக் காண ஓடிவந்தார்.

'குடிப்பதை நிறுத்த முடியவில்லை' என்றவர் 'குடிக்க முடியவில்லை' என்று சொல்பவராக மாறினார்.

பின்னரும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கிரிஷுக்கு அவ்வப்போது அனுமதி அளித்து சிறிது சிறிதாகக் குடியைவிடச் செய்தார். ஆங்கில மனோதத்துவம் எல்லாம் அறியாத குருதேவர் "Withdrawal syndrome"  பற்றி எப்படித்தான் அறிந்தாரோ?!

கிரீஷ் தன்னை அடிக்கடி "பாவி பாவி" என்று கூறிக் கொள்ளுவார்.ஒருமுறை குருதேவர் கிரீஷைக் கண்டிக்கும் குரலில், " ஏன் அப்படிச்சொல்கிறாய்? யார் ஒருவன் 'பாவி பாவி' என்று சொல்கிறானோ அவன் பாவம் செய்தவனாகிறான். நான் தேவியின் பக்தன் எப்படி பாவம் செய்வேன் என்று சொல்லு. பாவம் உன்னை அண்டாது!"என்றார்.

இதை சுவாமி விவேகானந்தர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் உள்ளத்தில் இது ஆழப் பதிந்தது.

இதைத்தான் அமெரிக்காவில் சுவாமிஜி கூறினார்,"Ye!  Divinity on earth! Sinners! It is a sin to call a man so!" கிரீஷின் குருபக்தி அவரைக் காத்தது!

நாமும் குருபக்தி, இறை பக்தியைப் பெறுவோமாக!.

நன்றி, வணக்கத்துடன்,
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


வாழ்க வளமுடன்!

4 comments:

  1. //குடிப்பதை நிறுத்த முடியவில்லை' என்றவர் 'குடிக்க முடியவில்லை' என்று சொல்பவராக மாறினார்.//

    அற்புதம்..

    குருவே சரணம்..

    ReplyDelete
  2. Vanakkam ayya.......

    Pathivu nanru....Neenda idaiveliku piragu varugiren vaguparaiku......

    Anaivarum nalama enru ariya aaval......

    Ore oru kelvi....sani ucha veetuku selvathaaal 71/2 thaakam miga miga kuraivu engiraargal athu unmaiya.......naan kanni raasi kaaran ayya.

    Nanri.

    ReplyDelete
  3. கிரீஷ் சந்திர கோஷ் பற்றிய கட்டுரையை வெளியிட்ட‌மைக்கு மிக்க நன்றி ஐயா!

    வகுப்பறை சக‌ மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி.

    நானும் என் மனைவியும் 26 ஜூன் 2011 அன்று இலண்டன் மாநகருக்குப் பயணம் ஆகிறோம். செப்டெம்பெர் மாதம் 22 தேதி வரை அங்கு மகள் வீட்டில் இருப்பதாக எண்ணியுள்ளோம்.அங்கு எங்க‌ள் பயணம்,கணினி கிடைப்பது எல்லாவற்றையும் பொறுத்தே எனது ஆக்க‌ங்கள் அமையும். இது ஒரு
    நற்செய்திதானே?

    20 ஜூன்2011 துவங்கியே என் ஆக்கங்கள் சிறிது சிறிதாகக் குறையத் துவங்கிவிடும். கொஞ்ச வாரங்கள் நிம்மதியாக இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம் திருKMRK.. அவர்களேஸ்ரீ ராம கிருஷ்ணரின் ஒவ்வுரு நிகழ்வும் உங்களுக்கு அத்துபடி ..அருகிலே இருந்தவர் போல் எழுதுக்றீர்கள்.. அருமை.. ==
    இது போன்ற முகுளதிற்கு அடிமையான பழக்கத்தை நிறுத்த ஒரு பயிற்சி உள்ளாது... ரெம்ப சுலபம்.. தனிப்பட மெயில் ல கேளுங்கள்..பதிவு மிக அருமை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com