13.6.11

Astrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்?

------------------------------------------------------------------------------------
Astrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்?

ஜாதகத்தில் எத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும், இருக்கும் இடத்தின் தசாபுத்திக் காலத்தில்தான் அது நம் கைக்கு வந்து சேரும்.

இருந்து என்ன பலன்? கைக்கு வந்தால்தானே அனுபவிக்க முடியும்? வங்கியில் இருந்து என்ன பலன்? கைக்கு வந்தால்தானே செலவழிக்க முடியும்? அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்?

உதாரணத்திற்கு உங்களுக்கு வீடு வாங்கும் யோகம் இருந்தால், 4ஆம் வீட்டுக்காரனின் தசாபுத்திகளில்தான் அது நிறைவேறும். சில சமயம் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுபக் கிரகத்தின் தசா புத்தியிலும் அது நிறைவேறும்.

ஆகவே உங்களுக்கு நடைபெறும் தசா புத்திகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி பலன்களுக்கான நேரத்திற்கும் பொறுமையாகக் காத்திருங்கள்
----------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக 21.4.2011 அன்று சுக்கிரதிசையில் சூரிய புத்திக்கான பலன்களையும், சூரிய திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் சந்திர திசைக்கான பலன்களைப் பார்ப்போம்
---------------------------------------------------------------
இரண்டுமே சுபக் கிரகங்கள். ஆனாலும் பலன்கள் சரிசமமாக, சுபமாக இருப்பதில்லை. சந்திரனின் கடக வீடு சுக்கிரனுக்குப் பகைவீடு. அதுபோல சுக்கிரனின் இரண்டு வீடுகளில் துலாம் வீடு சந்திரனுக்குப் பகை வீடு. ஆனால் அதே நேரத்தில் சுக்கிரனின் ரிஷப வீடு சந்திரனுக்கு உச்ச வீடாகும். உச்சத்திற்கான பலனை அவர் தன்னுடைய தசா புத்தியில், அதாவது சுக்கிர மகா திசையில் தன்னுடைய தசா புத்தியில் தருவார். பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 20 மாதங்கள்

ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
   அருளில்லாமா தமது நாலைந்தாகும்
போவானே அதன்பலனை புகழக்கேளு
   பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்
சாவானே சம்பத்தும் குறைந்துபோகும்
   சதிரான மனையைவிட்டு ஓடிப்போவான்
நோவானே வியாதியது துடர்ந்துகொள்ளும்
   நுணுக்கமுள்ள வினைசமயம் நுகருந்தானே!


ஆனால் இந்தப் பலன்களுக்கு நேர் மாறாக சந்திர திசையில் சுக்கிர புத்தி மழிச்சி தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

கேளப்பா சந்திரதிசை சுக்கிரபுத்தி
   கெணிதமுள்ள நாளதுவுமாதம் நாலைந்து
ஆளப்பா அதன்பலனை சொல்லக்கேளு
   அன்பான லட்சுமியு மனதினமுநிற்பாள்
வாளப்பா வாகனமும் பொன்முத்துசேரும்
   வகையான பூஷணமும் மிகுதியுண்டாம்
கேளப்பாகலியாணங் கெணிதமுடன் நடக்குங்
   கெத்தமுடன் சுகந்தங்கள் அணிவான்பாரே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

5 comments:

  1. பதிவுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. சுக்கிரதசா சந்திரபுக்தி கடந்துவிட்டது. பாடல் சொல்வ‌துபோல் தாய் மரணம் அந்தக் காலகட்டத்தில்தான்.சந்திரதசா சுக்கிரபுக்தி வரும்போது அனுபவிக்க வயதில்லை.நன்றி ஐயா!
    என் மின் அஞ்சல் கண்டீர்களா ஐயா?

    ReplyDelete
  3. Dear Sir,

    Thanks for the explanations. Also I need outcome of the below,
    Sani Dhisai - Sukra Budhhi
    &
    Sukra Dhisai - Sani Budhhi.
    Can I expect this in next few days please. Because I heard these 2 planets are very good friends and they will give good benifits in their dhisa budhhi. True?

    Thanks
    Saravana from Coimbatore

    ReplyDelete
  4. சந்திக்க வாய்ப்பில்லை அந்த
    சந்திர திசையை..

    சுக்கிர திசையினையும் சுத்த
    சுகியான வாய்ப்பில்லை..

    ராசி எனக்கப்படி.. நல்லதையே
    யோசி என வேறு நல்லமைப்புடன்

    வழக்கம் போல்
    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  5. உங்களது வகுப்பறையில் உள்ள ஜோதிட பாடங்களும், இந்த http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6340 இருக்கும் விசயங்களும் ஒரே மாதிரி இருக்கின்றன. இவை இரண்டுமே உங்களுடையதா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com