14.6.11

Astrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்?

-----------------------------------------------------------------------------------
Astrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் நேற்று சுக்கிரதிசையில் சந்திர புத்திக்கான பலன்களையும், சந்திர திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் செவ்வாய் புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்
---------------------------------------------------------------
ஒன்று சுபக்கிரகம். ஒன்று தீயகிரகம். பலன்கள் நன்மையுடையதாக இருப்பதில்லை. பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 14 மாதங்கள்

தானென்ற சுக்கிர திசை செவ்வாய்புத்தி
   தாழ்வானமா தமது பதினாலாகும்
ஏனென்ற அதன்பலனை இயம்பக்கேளு
   எலிகடியும் பீனிசமுமும் இணைப்புமுண்டாம்
வானென்ற வயிற்றினிலே நோவுண்டாகும்
   வகையுடனே ஆசனத்தில் கடுப்புண்டாகும்
தேனென்ற தெரிவையர்கள் விகற்பமாகும்
   தீதான சத்துருவும் சேர்வான்பாரே!


ஆனால் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு தீய பலன்களை செவ்வாய் மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

தானென்ற சேய்திசையில் சுக்கிரன்புத்தி
   தாழ்வானமா தமது பதினாலாகும்
வீணென்ற அதன்பலனை வினவக் கேளு
   விரசாவு சத்துருவாகி விலங்குமுண்டாம்
ஏனென்ற யீனஸ்திரி போகமுண்டாம்
   இன்பமில்லா துன்பமது இடஞ்சல்காட்டும்
கோனென்ற இராஜாவால் கலகமுண்டு
   கோதண்டம்தான் வருகும் கொடுமைபாரே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

4 comments:

  1. 2029=30ல் தான் செவ்வாய் தசா சுக்கிரதசை வருகிறது. 80 வயதாகிவிடும் அப்போது. ஈன ஸ்திரி பற்றியெல்லாம் கவலையில்லை.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா..

    செவ்வாய் திசை சுக்கிரன் புத்தியில் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என
    அறிகிறோம்..

    நன்றி ஐயா..

    ReplyDelete
  3. ஆகா.. அப்படியானால் அந்த
    'அ' சிங்கங்களுக்கு ஆயுள் முழுதும்

    செவ்வாய் கோல் ஓச்சுகிறோதோ
    கொவ்வாயை(சிவந்த இதழ்) எண்ணி..

    இருக்கட்டும் அவர்களையும் இப்போது
    இந்த சேவை வரிக்குள் வர

    நிதியமைச்சகத்திடம் பரிந்துரைக்கலாம்
    பாதிபேராவது மனம் திருந்தட்டுமே..

    ReplyDelete
  4. ஐயா,
    உங்கள் வகுப்பு மிக அருமை.
    இப்போது தான் ஜோதிடம் கற்று வருகிறேன்.
    எனக்கு ராகு திசை புதன் (19/02/2009-07/09/2011) புத்தி நடக்கிறது.
    திருமணம் எப்போது நடக்கும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com