31.1.11

Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா? - பகுதி இரண்டு!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா? - பகுதி இரண்டு!

இதன் முதற்பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு இங்கே வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். முதற்பகுதிக்கான சுட்டி இங்கே உள்ளது: URL link for the part one

"நமது துன்பங்களுக்கு மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும்
நமது துன்பங்களை அறுத்து எடுத்து அல்லது நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான
ஜோதிடம் இருக்கிறதா? இல்லை! ஆனால் வேறு ஒன்று இருக்கிறது."
என்று முன் பதிவில் எழுதியிருந்தேன். அதை இப்போது பார்ப்போம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அச்யுதா பிசாரதி என்ற மகான் கேரளாவில் தோன்றி, சுமார் எழுபதாண்டுகாலம் வாழ்ந்து, வடமொழிக்கும், வானவியலுக்கும், ஜோதிடத்திற்கும், கணிதவியலுக்கும் பல பாடங்களை உருவாக்கி அனைவருக்கும் பயன்படும்விதமாகக் கொடுத்துவிட்டு இறைவனடி சேர்ந்தார். அத்துடன் எண்ணற்ற சீடர்களையும் உருவாகினார் அவருடைய காலம் (1,550 முதல் 1,621 வரை) அவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கு இந்தத் தளத்திற்கு சென்று பாருங்கள். அவர் எழுதிய நூல்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

இங்கே சொல்லவந்த விஷயம், அவருடைய மாணவர்களில் ஒருவரும், நாராயணீயம்’ என்னும் குருவாயூரப்பன் மேல் எழுதப்பெற்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவருமான மகான் நாராயண பட்டத்ரியைப் பற்றியதாகும்.

என்ன செய்தார் நாராயண பட்டத்ரி?

வயதான காலத்தில் வாதநோயால் அவதியுற்ற தன் குருவின் அவதியைக் காணச் சகிக்காமல், அதைத் தான் வாங்கிக்கொண்டு, குருவிற்கு நிவாரணம் அளித்தாராம். Bhattathiri's Guru, Achyuta Pisharati, was struck with paralysis. Unable to see his pain, by yogic strength and by way of Gurdakshina, Bhattathri is said to have taken the disease upon himself and relieved his guru.

சாத்தியமா அது?

அவருக்குச் சாத்தியப் பட்டிருக்கிறது?

அது மட்டுமல்ல, மாற்றப் பட்டதால் தனக்கு வந்த வாத நோயையும் 100 நாட்களில் விரட்டி அடித்திருக்கிறார்.

உண்மையா?

கட்டுக்கதையல்ல! நடந்ததுதான் அது. வரலாறு அது. அதற்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறேன். முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள அதைப் படியுங்கள்

கேரளாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த வரலாறு தெரியும்.

அதுபோல நமக்கும் ஒரு கதை தெரியும். தொழுநோயால் அவதிப்பட்டு,
கபால மோட்சம் பெற திருவண்ணாமலை கோபுரத்தின் மீதிருந்து தலை
கீழாகக் குதித்த அருணகிரியாரை முருகப்பெருமான் ஆட்கொண்டு, ஷண நொடியில் அருணகிரிநாதரின் நோயைப் போக்கியதுடன், தமிழுக்கும், இறைப்பணிக்கும் அவரை ஆட்படுத்திய கதை நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.


அதுபோல குமரகுருபரர், காசி சுல்தானை, சிங்கத்தின் மீது சென்று சந்தித்த கதையும், சுல்தானின் பாராசீக மொழியில் பேசிய கதையும், வாரணாசியில் இடம் கேட்டு வாங்கிய கதையும் நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதெல்லாம் மகான்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. நமக்கு சாத்தியப்படுமா? நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். ஆசாபாசங்களில் இறைவனையே மறந்து விடக்கூடியவர்கள். நமக்கு எப்படி சாத்தியப்படும்?
 
“இவனுக்கென்று எதைக் கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்”
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)"

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் வர்ணனை செய்தபடி உள்ள ஜென்மங்கள்தான் நாம்!

ஆனால் இறைவன் பேதம் இல்லாதவர். மகான், மனிதன் என்ற பேதம் இல்லாதவர் அவர். இருந்தால் அவர் எப்படி இறைவன் ஆக முடியும்?

ஆகவே பேதம் இல்லாதவர் அவர். தன்னைச் சரணடையும் எவருக்கும் முன் நின்று உதவுபவர் அவர்.

ஆகவே ஜாதகக் கோளாறால் எற்படும் எல்லாத் துன்பங்களுக்கும், இறைவனைச் சரணடையுங்கள். அவர் உங்கள் துன்பங்களைப் போக்குவார். துன்பங்களைத் தாங்கும் வலிமையைத் தருவார் 

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்


கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட வேறு வழி அதுதான்!

எனக்கு அந்த அனுபவம் உண்டு. பழநி அப்பனால் ஏற்பட்ட அனுபவம் அது. பின்னொரு நாளில் அது பற்றி விவரமாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

30.1.11

நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்!

இன்றைய வாரமலரை மூத்த மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்பினால் நம்புங்கள் - BELIEVE  IT OR  NOT

நான் 6 வது வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக மாறு வேடப் போட்டியில் கலந்து கொண்டேன்.சந்து  முனையில் மாய மந்திர வித்தை காட்டும் மந்திரவாதியாக 'மானோ ஆக்டிங்' செய்து காண்பித்தேன்.

தலைமைஆசிரியரைப் பார்த்து "ரத்தம் கக்கி சாவாய்"என்றெல்லாம்
'பீலா' விiட்டதில் சக மாணவர்கள் எல்லோரும்  'குஷி'  ஆகிக் கையைத்
தட்டோ தட்டென்று தட்டிப் பாராட்டி விட்டனர். கொஞ்சம் கடுப்பான
தலைமை ஆசிரியர்,  வெறுப்புடனே முதல் பரிசைக் கொடுத்து விட்டார்.
மக்கள் தீர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. (இதை
வைத்து ஒரு 'பன்ச்' பின்னூட்டம் இடுங்கள் மைனர்வாள்))

இப்போ சொன்ன செய்தியெல்லாம் முக்கியமில்லை. அந்த முதல் பரிசு ஒரு ஆங்கிலப் புத்தகம்.அதன் தலைப்பு

BELIEVE  IT OR NOT....! ஆம்! 'நம்பினால் நம்புங்கள்!.இல்லாவிட்டால் விடுங்கள்.'அதில் பல உலக அதிசய  நிகழ்வுகள் தொகுக்கப் பெற்று இருக்கும்.அது போல ஒரு நிகழ்வு ஒன்று சொல்கிறேன். என்
வாழ்வில் நடந்தது.....

1984ல் எனக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் அடுத்த வருடம்
6 வது வகுப்புச்  சேர வேண்டிய  தருணம். மறைந்த அண்ணன்
குழந்தைகளும் அதே போல மேல் வகுப்புக்கள் செல்ல வேண்டும்.
நாங்கள் வசித்த பகுதியில் ஐந்தாம் வகுப்புவரை இருக்கும் அரசு
அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகள் இரண்டு இருந்தனவே  அன்றி
அங்கீகாரம் பெற்ற  உயர்நிலைப் பள்ளிகள் எதுவும் கிடையாது.

5 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சை நகரத்துக்கு, கூட்டமான பேருந்தில் நெருக்கியடித்துப் பயணம் செய்து  பள்ளியில் படிக்க வேண்டும். இது
எங்கள் இல்லத்துக் குழந்தைகளுக்கு சாத்தியமா என்ற கவலை
என்னைப் பிடித்துக் கொண்டது. ஏதாவது  ஒரு செய்தியை மனதில்
வாங்கிக் கொண்டால் அவ்வளவுதான்; பசி தூக்கம்  போய்விடும்.
அதே சிந்தனையாகப் பைத்தியம் போல அலைய ஆரம்பித்து விடுவேன்.பக்கத்தில் பள்ளியில்லையெனில்,  ஒரு 'பள்ளியை உருவாக்கு!பள்ளியை உருவாக்கு! பள்ளியை உருவாக்கு!'என்று
மனதில் மந்திரம் ஜபமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

சாதாரணமாக காலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்குச் செல்லும் நான்,
அந்த இரவு, நேரத்தைப் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.மனம் முழுவதும் "பள்ளி பள்ளி பள்ளி" என்ற ஜபம்தான்.
20 நிமிடங்கள் நடந்த பின்னர் தான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.
என் வலப்புறம் செந்நிற ஒளி ஒன்று கூடவே மிதந்து வந்து கொண்டிருப்
பதைக் கண்டேன்.

கொஞ்சம் பயம் ஏற்பட்டது வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.அந்த ஒளிப்
பந்தும் அதே வேகத்தில் தொடர்ந்தது. நான் ஓடினால் அதுவும் ஓடிவந்தது. நின்றால் தானும் நின்றது.தொட்டுப்பார்ப்போம் என்று கையை நீட்டினேன்.

நகர்ந்து கொண்டது.பயம் கல‌ந்த ஒரு வியப்புடன் அதனைப்  ர்த்தேன்.
அப்போது அந்த பந்து பேசியது,

"பள்ளிக்கூடம் தானே‌ வேண்டும் என்கிறாய்? நாம் சொல்வதைக் கேட்டால் ப‌ள்ளி அமையும். கேட்பாயா?"

"ச‌ரி.கேட்கிறேன்!"

"அப்ப‌டியானால் நாளை விடிந்த‌தும் காலை 8 ம‌ணிக்கு பெரிய‌வ‌ர் ஸ்ரீநிவாசரா‌க‌வ‌னைப் போய் சந்திக்க‌வும்"

"அந்த‌ப் பெரிய‌வ‌ரிட‌ம் என்ன‌ சொல்ல‌ வேண்டும்!?"

"அங்கே சென்றால் உன் மூல‌மாக‌ நாம் அவ‌ரிட‌ம் சொல்லுவோம்"

"ச‌ரி! தேவ‌ரீர் நீங்கள் யார்?"

"தென்க‌ரை ம‌ஹாராஜா!"

என‌க்கு அஸ்தியில் சுர‌ம் க‌ண்ட‌து. ப‌ய‌த்தில் குலை ந‌டுங்கக் கண்ணை மூடினேன்.மீண்டும் க‌ண்ணைத் திற‌ந்த‌போது  அந்த‌ ஒளிப் ப‌ந்து ம‌றைந்து விட்டு இருந்த‌து.

எங்க‌‌ளுக்கு இர‌ண்டு குலதெய்வ‌ம் என்பார்க‌ள். த‌ந்தை வ‌ழியில் 'தென்க‌ரை ம‌ஹாராஜா' என்பார்க‌ள். சாஸ்தாதான்!

அதுவ‌ரை நான் அந்தக் கோவிலுக்குப்போன‌வ‌ன் இல்லை.இந்தக் கோவில் நெல்லை நாக‌ர் கோவில் மார்க‌த்தில் வ‌ள்ளியூரில் இற‌ங்கி 8 கி.மி உள்ளே ஒரு கிராம‌த்திற்குச் செல்ல‌வேண்டும்.

தாய் வ‌ழிக்காணி என்று அம்பாச‌முத்திர‌த்திற்கு அருகில் பாப்பாங்குள‌ம் என்ற‌ கிராம‌த்தில் ச‌டைவுடையார் என்ற‌  ம‌ற்றொரு சாஸ்தா!

வ‌ந்த‌வ‌ர் தென்க‌ரை ம‌ஹாராஜாவா? ந‌ம்ப‌வும் முடிய‌வில்லை. ந‌ம்பாம‌ல் இருக்க‌வும் முடிய‌வில்லை. என்னை நானே  கிள்ளிப் பார்த்தேன்.வ‌லித்த‌து. ஓட்ட‌மும் ந‌டையுமாக‌ வீட்டுக்குத் திரும்பினேன்.ஒரே ஆயாச‌மாக‌ இருந்த‌து.

விடிந்து இருக்க வேண்டுமே என்று ம‌ணியைப் பார்த்தால் ம‌ணி காலை 3!அப்ப‌டியானால் நான் வீட்டை விட்டு  வெளியேறும் போது 2.30
ம‌ணியாக‌ இருந்திருக்குமோ? ஐயோ! அகால‌த்தில் வெளியில் போய்
இப்ப‌டி எதையோ பார்த்துவிட்டோமே!அது தெய்வ‌மா? வேறு
ஏதாவ‌தோ? "த‌ர்ம‌ சாஸ்தாவே காப்பாற்று"என்று அல‌றிக் கொண்டு  மூர்ச்சையாகி விழுந்தேன்.
                +++++++++++++++++++++++++++++++++++++

மீண்டும் க‌ண்விழித்த‌போது காலை ம‌ணி 7 !  அருகில் மனைவி குழ‌ந்தைக‌ள் தாயார் எல்லோரும் க‌வ‌லையுட‌ன்  பார்த்த‌ வ‌ண்ண‌ம் சுற்றி நின்ற‌ன‌ர். சுர‌ம் விட்டிருந்த‌து. உடலில் ஒரு தெம்பு, உத்வேக‌ம் இருப்ப‌தை  உண‌ர‌ முடிந்த‌து.

விறு விறுப்பாக‌ குளிய‌ல் அறையில் நுழைந்து குளித்து முடித்து ஆடை மாற்றி திருநீரு அணிந்து பூஜை  அல‌மாரிக்கு முன் கைகூப்பிவிட்டு பெரிய‌வ‌ர் வீட்டை நோக்கிச் சென்றேன்."என்ன‌!என்ன‌?!"என்று ம‌னைவியின்  குர‌ல் கேட்ப‌திற்குப் ப‌தில் சொல்லாம‌ல் மெளன‌மாக‌ பெரிய‌வ‌ர் வீட்டிற்குச் சென்றேன்.

இங்கே பெரிய‌வ‌ர் ப‌ற்றி ஒரு சிறிய‌ அறிமுக‌ம். என‌க்கு அப்போது
35 வ‌ய‌து என்றால் அவ‌ருக்கு 60 வ‌யது  இருக்க‌லாம். ஸ்ரீவைஷ்ண‌வ‌ர்.
அதாவ‌து ஐயங்கார் வ‌குப்பின‌ர்.நாங்க‌ள் சேல‌த்தில் இருந்த‌போது
சேல‌ம் அர‌சுக்க‌ல்லூரியில் அலுவ‌ல‌க‌ மேலாள‌ராக‌ வேலை பார்த்தார்.
நாங்க‌ள் சேல‌த்தை விட்ட‌ ச‌ம‌ய‌ம் அவ‌ரும் சொந்த‌  மாவ‌ட்ட‌மான‌ த‌ஞ்சைக்கு மாற்ற‌லில் வ‌ந்து த‌ஞ்சை அர‌சு ம‌க‌ளிர் க‌ல்லூரியில் க‌ண‌க்குத் த‌ணிக்கை அதிகாரியாக‌  இருந்து ஓய்வு பெற்றார். அந்தப் ப‌த‌விக்கு "ப‌ர்சார்"என்று பெய‌ர்.எல்லோரும் அவ‌ரை 'ப‌ர்சார்'  என்றே அழைப்பார்க‌ள்.அதில் உள்ள 'சார்'அவ‌ருக்கு அளிக்கும் உரிய‌ ம‌ரியாதையாக‌ அமைந்த‌து.அமை‌ச்ச‌க‌ப் ப‌ணியாள‌ர்களுக்கு முத‌ன் முத‌லாக‌ ச‌ங்க‌ம் அமைத்துப் ப‌ல‌ ஆக்க‌ங்க‌ளைப் பெற்றுத் த‌ந்தார்.அத‌ன் பின்ன‌ரே சிவ‌இள‌ங்கோ மிக‌ப்பெரிய‌ த‌லைவ‌ராக‌ உருவெடுத்தார்.அர‌சுப் ப‌ணியாள‌ர்க‌ளின் தொழிற்ச‌ங்க‌  இய‌க்க‌த்தின்  முன்னோடி நம் பெரியவ‌ர் ஸ்ரீநிவாச‌ராக‌வ‌ன்!

சிதில‌மாக‌க் கிட‌ந்த‌ த‌ஞ்சை மேல‌வீதி ந‌வ‌னீத‌ கிருஷ்ண‌ன் கோவிலைப் புதுப்பித்து‌ ந‌டை முறைப் ப‌டுத்தினார்.  இன்று அது ஒரு க‌லாசார‌ மைய‌மாக‌ விள‌ங்குகின்ற‌‌து.

அவ‌ருக்குக் குழ‌ந்தை பாக்கிய‌ம் இல்லை.ப‌க‌வான் க‌ண்ண‌னையே த‌ன் குழ‌ந்தையாக‌ப் பாவித்து வ‌ந்தார். நாள்தோறும் ஸ்ரீபால‌கிருஷ்ண‌ருக்குத் திரும‌ஞ்ச‌ன‌ம் செய்வார்.சரியாகக் காலை 8 ம‌ணிக்கு ‌ ஆராத‌னை 
முடியும்.அன்று ஆராத‌னை முடிந்து கையில் வெள்ளி ப‌ஞ்ச‌பாத்திர‌ம், நெய்வேத்திய‌ம் செய்த‌ வாழைப்ப‌ழம், திருத்துழாய் ச‌கித‌ம் யாரையோ எதிர்பார்ப‌தைப் போல‌ கிழ‌‌க்கு நோக்கி துவா‌த‌ச‌ நாம‌ம் ப‌ளிர் என‌ மின்ன‌
த‌கத்தக‌ய‌மாக‌  ஒளிவிட்டுக்கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

அவ‌ரைக் க‌ண்ணுற்ற‌வுட‌னே அவ‌ருடைய‌ தெய்வீகத் தோற்ற‌த்தால் ஈர்க்க‌ப்ப‌ட்டு நெடுஞ்சாண் கிடையாக‌க் காலில்  விழுந்து ந‌ம‌ஸ்க‌ரித்தேன்.

பிர‌சாத‌ம் தீர்த்த‌ம் அளித்த‌ப‌டியே நான் எதுவும் சொல்வ‌த‌ற்கு முன்பாக‌வே "இங்கேயும்  க‌ண்ண‌ன் உத்த‌ர‌வு  போட்டாயிற்று. நீர் வ‌ருகிறீரென்று பூஜைக்கு முன்பாக‌வே சொல்லி விட்ட‌ன் க‌ண்ண‌ன்."

"அப்ப‌டியா!இந்த‌ப்ப‌குதியில் வாழும் எல்லா குழ‌ந்த‌க‌ளும் உங்க‌ள் பேர‌ப் பிள்ளைக‌ளே!அவ‌ர்க‌ள் ந‌க‌ர‌த்திற்குச் சென்று சிரம‌‌ப்ப‌டாம‌ல் அருகில் ப‌டிக்க ஓர் உய‌ர் நிலைப்ப‌ள்ளியைத் துவ‌ங்க வேண்டும்."

"செய்துவிட‌லாமே!"

அவ்வள‌வுதான்‌!இருவ‌ரும் சுறுசுறுப்பாக‌ வேலையைத் துவ‌ங்கினோம். ப‌ல‌ரையும் ச‌ந்தித்தோம்.வாராது வ‌ந்த‌ மாமழை போல தெய்வத்திரு
ராங்கிய‌ம் ஏ. சுப்பிர‌மணிய‌ம் செட்டியார் அவ‌ர்க‌ளுடன் தொடர்பு
கிடைத்தது. பணமாகவும்பொருட்களாகவும் தந்து உதவினார். கீற்றுக்கொட்ட‌கையில் ஒரு வ‌குப்புட‌ன் 6 ஜூன் 1985ல் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌
ப‌ள்ளி இன்று வெள்ளிவிழா கண்டு விட்ட‌து. ப‌ள்ளிக்கு இன்று
27 வகுப்பு அறைக‌ளும் ப‌ல‌ த‌ளவா‌ட‌ங்க‌ளும் உள்ள‌ன‌.ஏழை, கீழ்நிலை
ம‌த்திய‌ த‌ர‌ குடும்ப‌த்தின‌ருக்கான‌ ப‌ள்ளியாகத் திக‌ழ்கிற‌து.குறைந்த‌
ம‌திப்பெண் பெற்று பிற பள்ளிக‌ளில் சேர‌ முட்யாத‌வ‌ர்க‌ளே இப்
ப‌ள்ளிக்கு என‌ எழுததாத‌ ச‌ட்ட‌மாகி விட்ட‌து.இருப்பினும்  10ம்
வ‌குப்பில் 100%தேர்ச்சி ப‌ல்லாண்டுக‌ள்  பெற்று ந‌ற்பெய‌ருட‌ன்
விள‌ங்கி வருகிற‌‌து. மேல் நிலைப் ப‌ள்ளியாக‌வும் விளங்குகிற‌து.
எங்க‌ள் வீட்டுப் பிள்ளைக‌ள் 5 பேர் இப்ப‌ள்ளி மாண‌விக‌ள். இப்ப‌ள்ளியில்
பெற்ற அனுப‌வ‌த்தை வைத்து "க‌ம‌லா சுப்பிர‌ம‌ணிய‌ம் மேல் நிலைப்
ப‌ள்ளி"யை செட்டியார்  துவ‌ங்கினார்.இன்று அது ஒரு உல‌க‌த்த‌ர‌ம்
வாய்ந்த‌ ப‌ள்ளியாக‌த் திக‌ழ்கிற‌து.

இன்று ப‌ர்சார், செட்டியார் இருவ‌ருமே இல்லை.

நின‌த்துப் பார்த்தால் ம‌லைப்பாக‌ உள்ள‌து.தெய்வ‌ அனுக்கிர‌ஹ‌ம்
முழுதுமாக‌க் கிடைத்த‌ ஆண்டுக‌ள் 1984 முதல்  1993 வ‌ரை..அப்போது
சாப்பா‌டு தூக்க‌ம் குறைவு என்றாலும் உற்சாக‌ம் குறையாம‌ல்
இருந்த‌து.

"என்ன‌ மாமூ! கொஞ்ச‌ம் லூசுல‌ விட்டா காதுல‌ பூ சுத்தரா‌ரே!"என்று குறுந்த‌க‌வ‌ல் ஜ‌ப்பானை  விட்டுக் கிள‌ம்பி  விட்டிருக்கும் இந்நேர‌ம்.

அதான் ஆர‌ம்ப‌த்திலேயே சொன்னேனே!

ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள்.! BELIEVE  IT  OR  NOT!

அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்,
தஞ்சாவூர்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருவாளர் K.R ஸ்ரீநிவாசராகவன் தமபதியருடன் கட்டுரையாளர், தன் மனைவி, மக்களுடன் இருக்கும் காட்சி (பழைய படம்)
-----------------------------------------------------------------------------------------

வள்ளல் ராங்கியம் தெய்வத்திரு. ஏ. சுப்பிர‌மணிய‌ம் செட்டியார் அவர்கள்
........................................................................................................................................................
வாழ்க வளமுடன்!

29.1.11

நக்கல்கள் சிலவிதம்!


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நக்கல்கள் சிலவிதம்!

நக்கல் என்றால், கிண்டல், கேலி என்று பொருள்படும். உங்கள்
மொழியில் சொன்னால் ‘லொள்ளு’ என்றும் சொல்லலாம். இங்கே
ஒருவரி நக்கல்கள் சிலவற்றைத் தொகுத்துக்கொடுத்திருக்கிறேன்.
சொந்த சரக்கல்ல. இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.
மொழியாக்கம் செயவதற்கு நேரமில்லை.தனிதமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும். மன்னிக்கவும். எது மிகவும் நன்றாக உள்ளது
என்று பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லவும்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. Regular naps prevent old age, especially if you take them while driving.

2  Having one child makes you a parent; having two you are a referee.

3  Marriage is a relationship in which one person is always right and the other is the husband!

4 I believe we should all pay our tax with a smile. I tried - but they wanted cash.

5 A child's greatest period of growth is the month after you've purchased new school uniforms.

6 Don't feel bad. A lot of people have no talent.

7 Don't marry the person you want to live with, marry the one you cannot live without, but whatever you do, you'll regret it later.

8 You can't buy love, but you pay heavily for it.

9 Bad officials are elected by good citizens who do not vote.

10 Laziness is nothing more than the habit of resting before you get tired.

11 Marriage is give and take. You'd better give it to her or she'll take it anyway.

12 My wife and I always compromise. I admit I'm wrong and she agrees with me.

13 Those who can't laugh at themselves leave the job to others.

14 Ladies first. Pretty ladies sooner.

15 A successful marriage requires falling in love many times, always with the same person.

16 You're getting old when you enjoy remembering things more than doing them.

17 It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.

18 Real friends are the ones who survive transitions between address books.

19 Saving is the best thing. Especially when your parents have done it for you.

20 Wise men talk because they have something to say; fools talk because they have to say something

21 They call our language the mother tongue because the father seldom gets to speak!

22 Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but then the thought of long life will never come.

23 Why do couples hold hands during their wedding? It's a formality just like two boxers shaking hands before the fight begins!

24 Wife: Darling today is our anniversary, what should we do?
Husband: Let us stand in silence for 2 minutes.

25 It's funny when people discuss Love Marriage vs Arranged. It's like asking someone, if suicide is better or being murdered.

26 There is only one perfect child in the world and every mother has it.

27 There is only one perfect wife in the world and every neighbor has it!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

28.1.11

ஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்!

இன்றைய பக்தி மலரை முருகனின் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++=====

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

சேவடியைக் காணவென்றே ஓடிவருவார் - அவர்
சிந்தையிலே உந்தனையே பாடிவருவார்
முருகா பாடிவருவார்

மச்சக் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

மாறாத மலையினிலே ஏறிவருவார்
ஏறுமயில் வாகனனை காணவருவார்

உள்ளவனும் இல்லார் என்ற பேதமில்லை - அருள்
வள்ளல் உந்தன் அன்புக்கோர் எல்லை இல்லை

பன்னீர் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார் - வள்ளி
தெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார்

பூங்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பாடியவர்கள். சூலமங்கலம் சகோதரிகள்
இசை: குன்றக்குடி வைத்தியநாதன்
பாடல் ஆக்கம்: கோவைக்கூத்தன்


வாழ்க வளமுடன்!

25.1.11

Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா?

கடவுளால் உண்டாக்கப்பெற்ற மனித உடம்பிற்கு, ஒரு காலத்தில் ஒரு மருத்துவர்தான் இருந்தார். ஒரு  நூற்றாண்டுகால வளர்ச்சியில் இன்று எண்ணற்ற மருத்துவர்கள் உள்ளார்கள்.

சுவாமிஜி தயானந்த சரஸ்வதி அவர்கள், அதைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்:

“கடவுளால் படைக்கபெற்ற இந்த உடம்பிற்கு, அறுபதிற்கும் மேற்பட்ட விதம் விதமான மருத்துவர்கள்  உள்ளார்கள். யமன் வந்தால் உயிர் மட்டும்தான் போகும். மருத்துவர் வந்தால், உயிருடன் பணமும் சேர்ந்து போகும்.”

(“For a body manifested by God, we are having more than sixty different doctors.We are having a society of  doctors. If yama comes, only the prana will go; If a doctor comes, the prana and money will go!")

ஆனால் இன்று மருத்துவர்களின் பணி அளவிட முடியாத சிறப்புக்களுடன் இருக்கிறது.

சராசரி வயது ஐம்பதாக இருந்ததை இன்று எண்பதாக உயர்த்தியிருக்கிறார்கள்.

மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை, இதயக்குழாய்களின் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை எல்லாம் இன்று  சாத்தியப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கும் ஒருவனை அள்ளிக்கொண்டு வந்து போட்டால், அவனை உயிர் பிழைக்க வைத்து, மீண்டும்  நடமாட வைக்கும் வித்தை எல்லாம் இன்று வசப்பட்டு உள்ளது.

மருத்துவத்தில் இன்று எத்தனை பிரிவுகள் உள்ளன - எத்தனை விதமான மருத்துவர்கள் உள்ளார்கள் என்பதை  உங்களின் பார்வைக்காகக் கீழே பட்டியல் இட்டிருக்கிறேன்.

பாமரனுக்கு அதெல்லாம் தெரியாது. அவனைப் பொறுத்தவரை இரண்டுவிதப் பிரிவுகள்தான். மருந்து கொடுக்கும் மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுனர் என்று இரண்டு பிரிவிற்குள் அது அடங்கிவிடும்.

1. Physician

A physician—also known as MD, DO, MDCM, BMed, MBBS, medical doctor, or simply doctor—practices the  ancient profession of medicine, which is concerned with maintaining or restoring human health through the study,  diagnosis, and treatment of disease or injury. This properly requires both a detailed knowledge of the academic  disciplines (such as anatomy and physiology) underlying diseases and their treatment—the science of medicine— and also a decent competence in its applied practice—the art or craft of medicine.

2. Surgeon

A surgeon is a specialist in surgery. Surgery is a broad category of invasive medical treatment that involves the cutting of a body, whether human or animal, for a specific reason such as the removal of diseased tissue or to repair a tear or breakage. Surgeons may be physicians, dentists, podiatrists or veterinarians.

இதுபோல, ஜோதிடத்திலும், இரண்டு பிரிவுகள் இருக்கிறதா?

இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

நமது துன்பங்களுக்கு மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும் நமது துன்பங்களை அறுத்து எடுத்து அல்லது  நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான ஜோதிடம் இருக்கிறதா?

இல்லை! 

ஆனால் வேறு ஒன்று இருக்கிறது. 

அது என்ன?

கட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன்  நிறைவு செய்கிறேன்.

அதை அடுத்த வகுப்பில் பார்ப்போம்!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 28.1.2011 வெள்ளிக்கிழமையன்று!

(தொடரும்)

+++++++++++++++++++++++++++++++++++
மருத்துவத்தில் உள்ள துறைகள்
Accident & Trauma Centre                 
Anaesthesiology                          
Bariatric Surgery                          
Biochemistry
Cardiac Surgery                         
Clinical Pathology                          
Critical Care                          
Dental Surgery                           
Dermatology                           
Dietetics & Nutrition         
Emergency Medicine         
Endocrinology                
ENT                     
Gastroenterology               
Geriatrics                
Gynaecology & Obstetrics           
Histopathology
Interventional Cardiology
Interventional Radiology               
Joint Surgery               
Microbiology               
Minimally Invasive Surgery
Nephrology
Opthalmology
Orthopaedics
Paras Neurosciences Centre
Physiotherapy and Rehabilitation
Plastic Surgery and Cosmetic Surgery
Preventive Health Checkups
Psychiatry & Psychology
Radiology
Respiratory Medicine
Rheumatology
Skin & Cosmetic Clinic
Spinal Surgery
Urology
+++++++++++++
மருத்துவர்களில் உள்ள பிரிவுகள்:
    * Clitoridectomy
    * Surgery
    * Thyroidectomy
    * Mammaplasty
    * Percutaneous
    * Discectomy
    * Internal bleeding
    * Cordotomy
    * Fasciotomy
    * Septoplasty
    * Surgical mask
    * Vulvectomy
    * Thymectomy
    * Endocrine surgery
    * Macewen's operation
    * Curettage
    * Hemipelvectomy
    * Abdominoperineal resection
    * Surgeon's assistant
    * Mentoplasty
    * Genioplasty
    * Chondroplasty
    * Rastelli procedure
    * Decortication
    * Salpingectomy
    * Lumpectomy
    * Reconstructive surgery
    * Revascularization
    * Smith's fracture
    * Foraminotomy
    * Portal:Medicine/Selected picture
    * Pancreatectomy
    * Cystectomy
    * Gastrointestinal perforation
    * Corpus callosotomy
    * Reduction (orthopedic surgery)
    * Portal:Medicine/Selected picture archive
    * Arteriovenous fistula
    * Pneumonectomy
    * Arteriotomy
    * Spinal cord untethering
    * Esophagectomy
    * Avulsion fracture
    * Craniotome (tool)
    * Commissurotomy
    * Bronchotomy
    * Maxillomandibular advancement
    * Genioglossus advancement
    * Hybrid coronary revascularization
    * Umbilicoplasty
    * Glanuloplasty
    * Radical mastectomy
    * Radical perineal prostatectomy
    * Balloon septostomy
    * Vaginectomy
    * Hand surgery
    * Polyaxial screw
    * Adrenalectomy
    * Cheiloplasty
    * Pulmonary-to-systemic shunt
    * Baffle (medical)
    * Vicryl
    * Laser surgery
    * Pulmonary thrombectomy
    * Salpingoophorectomy
    * Urethrotomy
    * Upper gastrointestinal surgery
    * Lower gastrointestinal surgery
    * Liver resection
    * Ganglionectomy
    * Incisional hernia
    * Stomatoplasty
    * Instruments used in general surgery
    * Laparoscopic anterior hernia repair
    * Endovascular surgery
    * Gynecological surgery
    * Epicanthoplasty
    * Postoperative fever
    * Brunelli procedure
    * Ileojejunal bypass
    * Catagmatic
    * Rashkind balloon atrial septostomy
    * Caustic pencil
    * Wikipedia:WikiProject Medicine/Stub sorting
    * Batista procedure
    * Patient safety
    * Anterior temporal lobectomy
    * Template:Surgery-stub
    * Bone cutter
    * Brain biopsy
    * Hartmann's operation
    * Bowel resection
    * Hypophysectomy
    * Proctocolectomy
    * Venous cutdown
    * Wikipedia:WikiProject Dentistry/Stub sorting
    * Epikeratophakia
    * Senn retractor
    * Total mesorectal excision
    * Bulldogs forceps

There are many hospital departments, staffed by a wide variety of healthcare professionals, with some crossover  between departments.

For example, physiotherapists often work in different departments and doctors often do the same, working on a general medical ward as well as an intensive or coronary care unit.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

23.1.11

இசைவாகப் பேசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இசைவாகப் பேசுவது எப்படி?

இன்றைய வாரமலரை நமது வகுப்பறைக் கண்மணிகள் இருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

------------------------------------------
என் 12 ஜனவரி 2011 ஆக்கத்தின் (சுவாமி    விவேகானந்தரைப் பற்றியது) பின்னூட்டங்களை எத்தனை பேர் படித்தீர்களோ தெரியாது.எனக்கும் என் மதிப்புக்கு உரிய இளவல் ஹாலாஸ்யம்ஜி அவர்களுக்கும் இடையில் நடந்த சம்வாதத்தினை படிக்காதவர்கள் படிக்கும்படி பணிந்து வேண்டுகிறேன்.அது ஒரு பூப்ப‌ந்து விளையாட்டுப் போல‌ ந‌ட‌ந்த‌து.என் ம‌ன‌துக்கு இத‌மாக‌ இருந்த‌து.

சுவார‌ஸ்ய‌மாக‌ இருந்த‌து.ப‌ல‌ செய்திக‌ளை தெரிவிக்கும் முக‌மாக அமைந்த‌து. ஹாலாஸ்ய‌ம்ஜியின் அறிவின் ஆழத்தை அவ‌ருடைய‌ முடிவுரை தெற்றென‌ வெளிப்ப‌டுத்திய‌து. "அட‌! நீங்க‌ செயிச்சுப்புட்டீங்க‌!"என்று சொன்ன‌த‌ன் மூல‌ம் அவ‌ர்தான் ஜெயித்தார்.

"தோற்றேன் என‌ நீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்"என்ப‌து ம‌ஹாக‌வி பார‌தியின் கூற்று. (க‌ண்ண‌ன் பாட்டு - க‌ண்ண‌ன் என் சீட‌ன்)

அந்த‌ ச‌ம்வாத‌த்தில், 'ம‌ஹான்க‌‌ள் த‌ன் எதிர் வ‌ரும் ஜீவான்மாவுக்கு இருக்கும் அஹ‌ங்கார‌த்தைப் போக்கும் வ‌ண்ண‌ம் பேசுவார்க‌ள்; அது தனி ந‌ப‌ர்க‌ளுக்குச் செய்த‌  உப‌தேச‌ம்.சில‌ சம‌ய‌ம் அது ந‌ம‌க்கு முர‌ணாகக்கூடத் தோன்றும்.என‌வே இடம் சுட்டிப் பொருள் விள‌க்குத‌ல் அவ‌சிய‌ம்"என்று தொனிக்கும் வ‌ண்ண‌ம் சொல்லியிருந்தேன்.

இது தொட‌ர்பாக‌ ஏற்க‌ன‌வே எப்ப‌டி ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர் ஒரு சீட‌ருக்கு வீர‌ம் ச‌ற்று வருமாறும்,வேறு ஒருவ‌ருக்கு அவ‌ருடைய‌ வீர‌த்தைச் ச‌ற்றே குறைக்கும் வ‌ண்ண‌மும் உப‌தேசித்தார் என்ப‌தை ஆக்க‌மாக‌ எழுதியுள்ளேன்.(க‌ங்கையில் ப‌ட‌கில் இர‌ண்டு சீட‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ ஒரே வித‌மான‌ நிக‌ழ்வுக்குப் ப‌ர‌ம‌ஹ‌ம் ஸ‌ரின் ம‌றுமொழியை எழுதியுள்ளேன்).அதே க‌ருத்தை வ‌லியுறுத்த‌ மீண்டும் இர‌ண்டு நிக‌ழ்வுக‌ளை இங்கே கூற‌ விழைகிறேன்.
-----------------------------------------------------------------------------
ம‌ஹாக‌வி பார‌தியார் கூறுவார் க‌ண்ண‌னைப்ப‌ற்றி:

"அம்மைக்கு ந‌ல்ல‌வ‌ன் க‌ண்டீர் - மூளி
அத்தைக்கு ந‌ல்ல‌வ‌ன் த‌ந்தைக்கும் அஃதே.
எம்மைத் துய‌ர் செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவ‌ர்க்கும் ந‌ல்ல‌வன் போலே ந‌ட‌ப்பான்"

"கோளுக்கு மிக‌வும் ச‌ம‌ர்த்த‌ன் - பொய்மை
சூத்திரம் ப‌ழிச்சொல‌க் கூசாச் ச‌ழ‌க்க‌ன்
ஆளுக்கிசைந்த‌ப‌டி பேசித் - தெருவில்
அத்த‌னை பெண்களையும் ஆகாது அடிப்பான்"
என்பார்.

மஹான்க‌‌ளும் க‌ண்ண‌னைப் போன்றே 'ஆளுக்கிசைந்த‌ப‌டி' பேச‌க்கூடிய‌வ‌ர் க‌ளே!அத‌ன்மூல‌ம் கேட்ப‌வ‌ருடைய‌ ஆன்மீக‌ நிலையினை அவ‌ர்க‌ளின் அப்போதை‌ய‌ இட‌த்தில் இருந்து ச‌ற்றே மேல்நோக்கி நகர்த்தும் வ‌ண்ண‌ம்  அமைந்து இருக்கும்.

ஸ்ரீராம‌கிருஷ்ண‌ருக்குப் ப‌ல‌ இல்ல‌ற‌ சீட‌ர்க‌ள். 'ப‌ற‌வைக‌ள் ப‌ல‌வித‌ம். ஒவ்வொன்றும் ஒருவித‌ம்'.

ஒரு சீட‌ர் தொழிலில் வெற்றி அடைந்து பெரும் பொருள் ஈட்டி விட்டார். த‌ன் தேவைக‌ள் ந‌ன்கு பூர்த்தியாகி உப‌ரியாக‌ நிறைய‌ வ‌ருமான‌ம்.வேண்டிய‌ சொத்துக்க‌ள் 5 த‌லைமுறைக்குத் தேவைக்கு மேல் சேர்த்தாகி விட்ட‌து. த‌ற்கால‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் அள‌வு இல்லாவிடினும், ஏதோ அந்த‌க் கால‌ அள‌வுகோலுக்கு அவ‌ர் ச‌ம்ப‌த்து மிக‌ அதிக‌மே!அவ‌ருக்கு தான‌ த‌ரும‌ம் செய்வ‌தில் ஆர்வ‌ம் தோன்றிய‌து.ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ரிட‌ம் வ‌ந்து கூறினார்: "பாபா!நீங்க‌ள் சுட்டிக்காட்டும் ஏதாவ‌து ஒரு த‌ர்ம‌த்தை நான் உட‌னே செய்கிறேன்.என்ன‌செய்ய‌லாம் என்று கூறி வ‌ழிகாட்டுங்க‌ள்"

ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர்: "நீ ஏன் சிர‌ம‌ப்ப‌ட்டு ச‌ம்பாதித்த‌ காசை விர‌ய‌மாக்குகிறாய்? இந்த‌ உல‌க‌ ம‌க்க‌ளின் தேவையோ மிக‌ அதிக‌ம்.அவ‌ர்க‌ளுடைய‌ தேவைக‌ளை ஆண்ட‌வ‌னால் கூட‌ நிறைவு செய்ய‌ முடிய‌வில்லை. உன்னால் என்ன‌ செய்துவிட‌ முடியும்? உன் த‌ர்ம‌ம் எல்லாம் க‌ட‌லில் க‌ரைத்த‌ பெருங்காய‌மே! விழ‌லுக்கு இறைத்த‌ நீரே!ஆக‌வே உன் ப‌ண‌த்தை ப‌த்திர‌மாக‌ வைத்துபூட்டு. வீண் செல‌வு செய்ய‌ வேண்டாம்"

கேட்ட‌ த‌ன‌வான் நொந்து நூலாகியிருப்பார் இல்லையா?

வேறு ஒரு சீட‌ர்.எண்ணை விற்கும் செட்டியார் பிரிவைச் சேர்ந்த‌வ‌ர்.அவ‌ரும் பொருள் ப‌டைத்த‌வ‌ரே.தான‌ த‌ரும‌ங்க‌ளைப் ப‌ற்றிய சிந்த‌னையே இல்லாத‌வ‌ர். குருதேவ‌ரைப் பார்க்க‌ வ‌ரும் போதுகூட‌ வ‌ண்டி ச‌த்த‌ம் மிச்ச‌ப்ப‌டுத்த‌ நீண்ட‌ தூர‌ம் ந‌ட‌ந்தே வ‌ருவார்.

ஒரு நாள் ப‌ல‌ரும் இருக்கும் ச‌ம‌ய‌ம் ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர்கூறினார்: "இந்த‌ எண்ணைக்கார‌ செட்டியார்க‌ள் எல்லாம் ச‌ரியான‌ க‌ஞ்ச‌ர்க‌ள்.அவ‌ர்க‌ள் காசெல்லாம் பிசுக்கு நாற்ற‌ம் அடிக்கும்.காற்றுப் ப‌டாத‌ இருட்ட‌றையில் எண்ணைக் க‌றை ப‌டிந்த‌ நோட்டுக்க‌ளை வ‌ருட‌க்க‌ண‌க்கில் அடுக்கி வைத்தால் நாற்ற‌ம் அடிக்காம‌ல் இருக்குமா?"

செட்டியாருக்குக் கோப‌ம் வ‌ந்துவிட்ட‌து. ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் போன‌பின்ன‌ர், ப‌ர‌ம‌ஹ‌ம்ஸ‌ரை த‌னிமையில் ச‌ந்தித்து த‌ன் ஆட்சேப‌ணையைச் சொன்னார்: "என்னைக் க‌ஞ்ச‌ன் என்று சொல்லியிருந்தால்  கூட‌ப்ப‌ர‌வா யில்லை. எங்க‌‌ள் மொத்த‌ சாதியின‌ரையும் எப்ப‌டி நீங்க‌ள் க‌ஞ்ச‌ர்க‌ள் என்று சொல்ல‌ப் போயிற்று?"

குருதேவ‌ர் வ‌ருத்த‌ம‌டையாம‌ல் சிரித்துக்கொண்டே,"நீங்க‌ள் நான் சொன்ன‌ப‌டி  இல்லையெனில் அதைச் செய்கை மூல‌ம் உறுதிப்ப‌டுத்துங்க‌ள்.என் அபிப்பிராய‌த்தை மாற்றிக்கொள்கிறேன்." என்றார்.

"அப்ப‌டியா! ச‌ரி என்ன‌ தான‌ம் நான் செய்ய‌ வேண்டும்? சொல்லுங்க‌ள். உட‌னே செய்து கா‌ண்பித்து உங்க‌ளிட‌ம் என் சாதிக்கு ந‌ல்ல‌ பெய‌ரைப் பெற்றுக் கொள்கிறேன்." என்றார் செட்டியார்

"ப‌க்க‌த்து கிராம‌த்து ம‌க்க‌ள் த‌ண்ணீருக்காக‌ அலைந்து திரிந்து சிர‌ம‌ப் ப‌டுகிறார்க‌ள்.அவ‌ர்க‌ளுக்கு உன் செல‌வில் ஒரு குள‌ம் வெட்டிக் கொடுக்க‌லா‌மே!" என்றார் குருதேவ‌ர்.

ரோஷ‌த்துட‌ன் போன‌ செட்டியார்  செய‌லில் இற‌ங்கி ஆவ‌ன‌ செய்து குள‌த்தை உட‌னே வெட்டிக்கொடுத்தார்.

"இப்போது என்ன‌ சொல்கிறீர்க‌ள்!" செட்டியார் கேட்டார். ஒப்புக்கொள்கிறேன்! நீர் த‌ர்ம‌வான்தான்" என்றார் ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர்.
 ‌
இந்த‌ ச‌ம்ப‌வங்களில் இருந்து என்ன‌ தெரிகிறது?

ப‌ண‌த்தை வைத்து புக‌ழ் பெற‌விரும்பிய‌ ப‌ண‌க்கார‌ருக்கு 'உன் ப‌ண‌ம் ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை' என்ப‌தை  உண‌ர்த்தினார்.

ப‌ண‌த்திற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌ செட்டியாருக்குப் ப‌ண‌த்தினை எப்ப‌டி ந‌ல் வ‌ழியில் செல‌வு செய்ய‌ வேண்டும் என்ப‌தை சொல்லிக் கொடுத்தார்.

இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌‌ளில் அவ‌ர் பேசிய‌தை இட‌ம் சுட்டாம‌ல் சொன்னால், ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர் முன்னுக்குப்பின் முர‌ணாக‌ப் பேசினார் என்று  ஆகிவிடும‌ல் ல‌வா?  என‌வே தொங்க‌‌லாக‌ விட‌ப்ப‌ட்ட‌ பொன் மொழிக‌ளைக் கொண்டு எந்த‌ அபிப்பிராய‌மும் நாம் வைத்துக் கொள்ள‌க் கூடாது.

என்ன‌ ஏதோ கொஞ்ச‌மாவ‌து புரிகிற‌தா?

'அய்யோ! க‌ண்ணைக்க‌ட்டுகிற‌த‌டா சாமி!' என்று அந்த‌ குண்டு விழுந்த‌ நாட்டுக் கார‌ரைப்போல‌ எல்லோரும் நினைக்கிறீர்க‌ளா?

ஒரு வாக்கிய‌ம் பின்னூட்ட‌த்தில் சொல்லுங்க‌ளேன்.
ந‌ன்றி.
அன்புடன்.
கே. முத்துராமகிருஷ்ணன்,
தஞ்சாவூர்


 திருவாளர்  கே.முத்துராமக்ருஷ்ணன் அவர்கள் 
தன் துணைவியாருடன் இருக்கும் புகைப்படம்
( தில்லியில் எடுக்கப்பெற்றது. ஆண்டு 2000)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
சிறுகதை:

நல்லதும்  கெட்டதும்  நம்  பார்வையில்தான்!
 

'ஸ்ஸ் ப்பா என்ன வெயில்' என்று முனகிக்கொண்டே குடையுடன் வெளியில் வந்தவரின் முகம் சட்டென்று சுருங்கியது.

'இந்தப் படுபாவி எதுக்கு நம்மாத்து வாசல்ல நிக்கறான்?  ஒரு நல்ல  காரியத்துக்காகக் கிளம்பினால் போயும் போயும் இந்தக் கிராதகன் முகத்துலயா முழிக்கணும்?'

'காமாட்சி, குடிக்க கொஞ்சம் ஜலம் கொண்டா'

'இதோ வரேன்னா'

வந்தவள் 'ஏன் வாசல்லேயே நின்னுண்டு?  என்னாச்சு?' என்றாள்.

'சும்மாதான் சித்த ஆசுவாசப்படுத்திண்டு போகலாம்னு' என்று சத்தமாகச் சொன்னவர், மனைவியிடம் திரும்பி கிசுகிசுப்பான குரலில் 'வெளில வந்ததும் இவன் மூஞ்சில முழிச்சுத் தொலைச்சேன்.  அவன் இந்த இடத்தைவிட்டு நகரட்டும்.  அப்புறமா போறேன்' என்றவாறு திண்ணையில் அமர்ந்தார்.

'சரி அதுக்கு ஏன் திண்ணைல உக்காருவானேன்? உள்ள வாங்கோளேன்'

'இல்லடி, ஆத்தை விட்டுக் கிளம்பினது கிளம்பியாச்சு.  இப்படியே சித்த உக்கார்ந்துட்டுப் போறேன்.  நீ கதவைத் தாழ்ப்பாள் போட்டுண்டு உள்ள போ'.

'இல்ல நீங்க போறச்சே சொல்லுங்கோ, வந்து தாழ்ப்பாள் போடறேன்'

                  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சங்கர ஐயரின்  குடும்பம் சிறியது.  மனைவி, இரண்டு மகள்கள்.  ஒரு நகராட்சிப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.

இந்தப் பகுதிக்குக் குடிவந்து ஆறு மாதங்களாகிவிட்டன.  இப்போது ஓய்வூதியப் பணத்திலும், இரண்டாவது பெண்ணுக்கு வரும் சிறிய வருமானத்திலும்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

மூத்தவள் சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்தாயிற்று.  கடைசிப் பெண் ரம்யாவுக்கும் எப்படியாவது கல்யாணம் செய்து கொடுத்துவிட்டால் இருக்கவே இருக்கிறது பிறந்த கிராமத்தில் ஒரு சிறிய ஓட்டு வீடு.   அங்கே போய் வரும் பணத்தை வைத்துக்கொண்டு சொச்ச காலத்தை ஓட்டிவிடலாம்.

அது விஷயமாகத்தான் கிளம்பிக்கொண்டிருந்தார்.  ரம்யாவைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் நேரில் பேச வருமாறு கூப்பிட்டனுப்பி யிருந்தார்கள்.  என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை.  அவர் தகுதிக்கு எட்டாத உயர்ந்த இடம்.  அருண் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். வீட்டுக்கு ஒரே பையன்.  சொந்த வீடு, வாகனம் எல்லாம் இருக்கிறது.

அவர்கள் பெண் பார்க்க வந்ததே அவருடைய பால்ய சிநேகிதன் வேணு சொல்லித்தான்.  அவர் இது பற்றிப் பேசியபோதுகூட சங்கர ஐயர் இது ஒத்து வராது என்றுதான் சொன்னார்.  அவர்தான் விடாப்பிடியாக ரொம்ப நல்ல குடும்பம். பணத்தையும், வசதியையும் அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை.  உன் பெண்ணைப் பார்த்தால் பிடித்துவிடும் என்று சொல்லி ஏற்பாடு செய்தார்.
                   &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

'ம்ம் இத்தனை நேரமா என்ன பண்ணிண்டிருக்கான் போய்த் தொலையாம?' யோசித்துக்கொண்டே அவன் புல்லட்டைக் குடைவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனை நேருக்கு நேர் அதிகம் பார்த்ததில்லை.  எல்லாம் மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதுதான்.  அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் கோபால்தான் கதை கதையாகச் சொல்லுவார்.  'அந்த ரவுடி மணி பெரிய போக்கிரி.  உங்க வீட்டுல வயசுப் பொண்ணு வேற இருக்கா.  ரொம்ப ஜாக்கிரதையா இருங்க' என்று வேறு சொல்லி அவரின் ராத்தூக்கத்துக்கு ஆப்பு வைத்திருந்தார்.

நல்ல கறுப்பு.  சுருட்டை சுருட்டையான முடி.  கண்கள் இரண்டும் சிவந்திருந்தன.  தினம் குடிப்பானோ?  அதப்பத்தி நமக்கென்ன?  பத்து பேர் சண்டைக்கு வந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நின்று சமாளிக்கும் அளவு திடகாத்திரமான உடம்பு.  மடித்துக் கட்டிய லுங்கியும், முழங்கைக்கு மேல் தூக்கி விட்டிருந்த சட்டையும், பொத்தான்கள் கழட்டப்பட்டிருந்த சட்டையும் அவனின் பலத்தைப் பறைசாற்றின.  கழுத்தில் ஒரு மொத்த செயின்.  கடைவாயோரம் கடித்தபடி சிகரெட்.  அதை அவ்வப்போது எடுத்து புகையை மேல்நோக்கி விட்டுக்கொண்டிருந்தான்.  முகத்திலிருந்து வழிந்த வேர்வையை சட்டைக்காலருக்குள் கழுத்தைச் சுற்றிக் கொடுத்திருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தான்.  பேஷ் பேஷ் ஒரு ரவுடிக்கு உரிய அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களும் இவனுக்கு அம்சமாப் பொருந்தறதே.

சட்டென்று தலையை சிலுப்பிக்கொண்டு தன் நினைவோட்டத்தை நிறுத்தினார்.  'ச்சே, பகவானே என் புத்தி என்ன பேதலிச்சுடுத்தா?  இவனைப்பார்த்து ரசிச்சு வர்ணனை பண்ணின்டிருக்கேனே?'

ஒரு வழியாக சரி செய்து விட்டான் போலிருக்கிறது. திருப்தியுடன் 'அப்பாடா சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணினா சரி' என்று நினைத்தவர் அவன் இவர் வீட்டை நோக்கி வரவும் விருட்டென்று எழுந்தார்.  'இங்க எதுக்கு வரான்?'.

'ஐயரே, குடிக்க கொஞ்சம் தண்ணி குடு' சொல்லிவிட்டு திரும்ப முகத்தைத் துடைத்துக்கொண்டான்.

'இது என்ன இன்னிக்கு நேரமே சரியில்லையே'.  உள்நோக்கிக் குரல் கொடுக்க எத்தனித்தவர் 'ம்ஹூம் வேண்டாம் நாமளே உள்ள போய் எடுத்துண்டு வருவோம்' என்று வீட்டுக்குள் போனார்.

ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தவர் சற்றே தயங்கவும் அவனே 'ஐயரே இப்படிக் கீழே வெச்சுடு, நானே எடுத்துக்கறேன், நீங்கதான் ரொம்ப சுத்தம் பார்ப்பீங்களே' என்று சொல்லி அதை உடைத்தெறிந்தான்.  வெளியில் கேட்காதபடி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவர், அவன் குடித்து முடித்துவிட்டுக் கிளம்பும்வரை காத்திருந்துவிட்டுக் கிளம்பும் முன் மனைவியிடம் 'செம்பை ஜலம் தெளிச்சு எடுத்து தேய்ச்சு வெச்சுடு' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
                      &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


'எதற்காகக் கூப்பிட்டிருப்பார்கள்?  ஒருவேளை பிடிக்கவில்லை என்றால் தொலைபேசியிலேயே அந்த மாமி சொல்லியிருப்பாரே?  நகை, வரதட்சணை பற்றிப் பேசுவார்களோ?'.  கிளம்பும் முன்பே மனைவி 'ஏன்னா அவா அப்படி எதாவது நிறைய எதிர்பார்த்தா எங்களுக்கு அவ்ளோ சக்தி கிடையாதுன்னு தெளிவாச் சொல்லிடுங்கோ.  குழந்தைக்குன்னு ஒருத்தன் பிறந்திருக்காமையா இருப்பான்?' என்று சொன்னது நினைவு வரவே 'என்ன அப்படி ஏதாவது பேசினா நம்மளோட இயலாமையை சாத்வீகமாச் சொல்லிட்டு வந்துடலாம்.  விரலுக்குத் தகுந்த வீக்கம் இருக்கறதுதான் நல்லது' என்று தெளிவான ஒரு முடிவுக்கு வந்தார்.

'சத்யாவைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு வாங்கற பேச்சே போதும்.  சக்திக்கு மீறி செஞ்சும் அந்த மாமிக்கு திருப்தி கிடையாது.  இன்னமும் ஏதாவது குறை சொல்லிண்டுதான் இருக்கா.  சத்யா எதுக்கும் வாயைத் திறக்கவே மாட்டா.  ரம்யாவும் அப்படித்தான்.  வளர்த்த விதம் அப்படி.  அதுவே தப்போன்னு சில சமயம் தோணறது.  எப்பப் பார்த்தாலும் நச்சு நச்சுனு ஏதாவது பிடுங்கிண்டு.  குழந்தை பாவம் பொறுமையா குடும்பம் நடத்தறா.  எதையும் குறைக்காம பார்த்துப் பார்த்து செஞ்சும் அவசரத்துல வெண்கல அடுக்கு வாங்கறது விட்டுப்போச்சுன்னு கல்யாண வீட்டிலேயே என்ன களேபரம் பண்ணிட்டா.  அதுக்கப்புறம் வாங்கித் தராமையா இருந்துட்டோம்?  இன்னமும் மீனு ஆத்திலிருந்து போன் வந்திருக்குன்னு கூப்பிட்டனுப்பினா சத்யாவோட மாமியாரா இருக்கக்கூடாதே பகவானேன்னுதான் முதல்ல தோணறது.  நானும் ஒவ்வொரு தடவை பேசும்போதும் நம்மளால குழந்தைக்கு எதுவும் பிரச்சனை வரப்படாதேன்னு பவ்யமாதான் பேசறேன்.  போன வாரம் பேசினப்ப கூட பேரன் ஆயுஷ்ஹோமத்துக்கு என்ன பண்ணப் போறேள்னுதான் பேச்சையே தொடங்கினா.  மாப்பிள்ளை நல்லவர்தான்னாலும் அவரால அம்மா பேச்சை மீற முடியாது.  என்னமோ பகவான்தான் வழிவிடணும்' என்று சிந்தனைக்குதிரையைக் கட்டுக்கடங்காமல் ஓட விட்டுக்கொண்டு வந்ததில் அருண் வீடு வந்துவிட்டிருந்தது.
                &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


'எவ்ளோ பெரிய வீடு, உள்ள நாய் ஏதும் இருக்குமோ' என்று நினைத்தபடியே பார்வையைச் சுழல விட்டவருக்கு வரவேற்பு நன்றாகவே கிடைத்தது.

'வாங்கோ உள்ள வாங்கோ' என்றவாறே சதாசிவம் வந்து கதவைத் திறந்துவிட்டவர் மனைவியிடம் தகவலைத் தெரிவித்தார்.

'இருங்கோ குடிக்க ஏதாவது கொண்டு வரேன்' என்று சிறிது நேரத்தில் கையில் காபி தம்ளருடன் வந்த அவரின் மனைவி 'முதல்ல நான் உங்களைக் கூப்பிடனுப்பினேன்னு தப்பா எடுத்துக்காதீங்கோ.  பையன் போன வாரமே ஊருக்குப் போயாச்சு.  நாளன்னிக்கு நாங்க கிளம்பறோம்.   இன்னும் ஒரு வேலையும் ஆகலை.  வாங்கின சாமான்களும் போட்டது போட்டபடி கிடக்கு.  இனிமேதான் ஆரம்பிக்கணும்.  அதான் எங்களுக்கு வந்து பேச ஒழியல' என்றதும் 'இல்ல இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு' என்றதுடன் நிறுத்திவிட்டு அவரே தொடரட்டும் என்று காத்திருந்தார்.

'சரி முதல்ல உங்காத்துப் பெண்ணை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.  அதான் பாக்கி விஷயத்தையும் பேசி முடிச்சுடலாம்னு.  நாங்க உங்ககிட்டேர்ந்து ஒண்ணும் எதிர்பார்க்கல.  உங்களால எதெது முடியும்னு சொல்லிட்டேள்னா நாங்களே மீதி செலவப் பார்த்துக்கறோம்.  ஏன்னா நாங்க எப்படி வேணும்னு ஆசைப்பட்டோமோ அதே மாதிரி உங்க பொண்ணு இருக்கா.  உங்காத்து மாமிகிட்டையும் கலந்து பேசிண்டு சொன்னேள்னா நிச்சயதார்த்தம், கல்யாணத்துக்கு நாள் குறிச்சுடலாம்.  உங்களுக்குச் சம்மதம்தானே?'

சங்கர ஐயருக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.  எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.  உடனே மனைவிடம் பறந்து போய்ச் சொல்லவேண்டும் என்ற பரபரப்பு தொற்றியது.  இவ்வளவு பெரிய விஷயம் இத்தனை எளிதாக முடிந்து விடுமா?

'எனக்குச் சம்மதம்' என்று திக்கித் திணறிச் சொல்லிவிட்டு மேலும் சில சம்பிரதாயப் பேச்சுக்களுக்குப் பின் கிளம்பினார்.
             &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


'இது முடிஞ்சிடும்னு நான் நினைக்கவே இல்லேன்னா'

'நானும்தாண்டி.  நிஜமாவே அவா பெரிய மனுஷாதான்.  சரி என்ன சமையல் இன்னிக்கு?  பசிக்கறது'.

'சேனை மசியல், தொட்டுக்க அப்பளம் பொரிச்சிருக்கேன்'.

'பேஷ் பேஷ் தட்டை எடுத்து வை, நான் கை, கால் அலம்பிண்டு வரேன்.  சாப்பிட்டுட்டு முதல்ல வேணு ஆத்துக்குப் போய் நன்றி சொல்லிட்டு வரேன்.  அவனாலேதான் ரம்யாவுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையறது'.
             &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


'என்ன இன்னும் ரம்யாவைக் காணும், இருட்டிடுத்தே.  திடீர்னு மழை வேற பெய்யறது.  வழக்கமா ஆறு மணிக்குள்ள வந்துடுவாளே'.

அவருக்கும் அப்போதுதான் உரைத்தது.  'மழைங்கரதால கொஞ்சம் நேரமாயிருக்கும்.  இன்னொரு பத்து நிமிஷம் பார்ப்போம்.  இல்லேன்னா நான் போய் பார்த்துட்டு வரேன்'.

'இந்த மழைல எங்க போய் பார்ப்பேள்?'

நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.  ரம்யா வருகிற வழியாக இல்லை.

'கடவுளே, குழந்தையை நல்லபடியா கொண்டு வந்து சேர்த்துடுப்பா'.
                &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


மரத்தடியில் நின்றிருந்த ரம்யாவும், அவள் தோழியும் தொப்பலாக நனைந்திருந்தனர்.

'என்னடி ரம்யா இன்னிக்கு வழக்கமா வர பேருந்து வரலை?  இப்ப என்ன பண்றது?'

'நானும் அதாண்டி யோசிச்சிண்டிருக்கேன்'

தடதடவென்று புல்லெட் சத்தம் நெருங்கி வந்தது.

'என்ன தங்கச்சி, இன்னும் வீட்டுக்குப் போகாம இங்க நின்னுட்டிருக்க?  பஸ் வரலையா?'

'இல்ல' பயத்தில் மென்று விழுங்கினாள்.

'பக்கத்துல ஆட்டோ ஸ்டான்ட் இருக்கே, அதுல போக வேண்டியதுதானே?'

'இல்ல அது வந்து ...... வந்து பஸ் க்கு மட்டும்தான் காசு எடுத்துண்டு வந்தேன்'.

'அட இந்த ஊர்ல நம்ம பொண்டாட்டியைத் தவிர நம்மளைப் பார்த்து எல்லாரும் ஏன் பயப்படறாங்க?'

'சரி இங்கயே இரு வரேன்' என்று போனவன் ஒரு ஆட்டோவைக் கையோடு அழைத்து வந்தான்.

'இதுல ஏறுங்க ரெண்டு பெரும், நான் பின்னாடி வண்டில வரேன்' என்றவன் ஓட்டுனரிடம் 'இந்தா எவ்ளோ காசுன்னு சொல்லு தரேன்' என்றான்.

'ஐயோ அண்ணே, உங்ககிட்ட போய் நான் காசு கேட்பேனா?  வேண்டாண்ணே'

'அதெல்லாம் வேணாம், இந்தா பிடி' என்று ஒரு நூறு ரூபாய்த்தாளை அவன் சட்டைப்பையில் திணித்தான்.
                &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


ஆட்டோ சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் மனைவியிடம் 'ஏய், ரம்யா வந்துட்டா' என்று சத்தம்போட்டு சொன்னார்.

'கடவுளே என் வயிற்றில் பாலை வார்த்தே.  நாளைக்கே கொழுக்கட்டை பண்ணி நைவேத்தியம் பண்ணிடறேன்' என்றவாறே வேகமாக ஓடி வந்தாள்.

மழை நின்றிருந்தது.

உள்ளே வந்த ரம்யா சட்டென்று நினைத்துக்கொண்டு திரும்ப வாசலை நோக்கி நடந்தாள்.  மணியைப் பார்த்து 'அண்ணா, ரொம்ப நனைஞ்சிட்டேளே, உள்ள வந்து தலையை துவட்டிண்டு போங்கோ'.

'அட நீ வேற தங்கச்சி.  நம்ம வீடு இதோ பத்தடி தூரத்தில இருக்கு.  நீ உள்ளாற போ' என்றவாறே புல்லட்டைக் கிளப்பினான்.
                 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆக்கம்
திருமதி உமா,
தில்லி  



வாழ்க வளமுடன்!

22.1.11

அதிருப்தி எப்போது போகும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிருப்தி எப்போது போகும்?
-------------------------------------------
இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

மின்னஞ்சலில் வந்தது. நன்றாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் வலையில் ஏற்றியுள்ளேன்
அன்புடன்
எஸ்.உமா
தில்லி




வாழ்க வளமுடன்!

21.1.11

திருநாள் எது?

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பக்திமலர்: திருநாள் எது?

முருகனுக் கொருநாள் திருநாள் - அந்த
முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக்குகொருநாள் திருநாள் -நல்ல
கார்த்திகை பெருநாள் ஒருநாள்

(முருகனுக்.....)

வைகாசி விசாக திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொரு திருநாள்
கந்தன் கருணைபொழிகின்ற பெருநாள்

(முருகனுக்.....)

சரவணன் பிறந்த திருநாள் - அருள்
சந்தனம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒருநாள்
கந்தனின்காவடி ஆடிடும் பெருநாள்
வள்ளி குமரனின் மணநாள் - நம்
வாழ்வின் சுடரொளி பெருநாள்!

(முருகனுக்.....)

பாடல் ஆக்கம்: கனக கிருஷ்ணன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
இசை: குன்றக்குடி வைத்தியநாதன்



வாழ்க வளமுடன்!

18.1.11

Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்? பகுதி இரண்டு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்? பகுதி இரண்டு

இதன் முதற்பகுதியை படித்திராதவர்கள் அதைப் படைத்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

அப்படிச் சென்று கொண்டிருந்தவனை, அரவம் ஒன்று தீண்டி விட்டது என்று சொன்னேனில்லையா?

தன்னைத் தீண்டிய அரவம் வளைந்து. நெளிந்து, விரைவாகச் சென்று ஒரு புதருக்குள் மறைவதைக் கண்கூடாகப் பார்த்தவன், தன் துணிச்சலைக் கைவிடாமல், பையில் இருந்த சிறு கத்தியால், காலில் அரவம் தீண்டிய இடத்தைக் கிழித்து விட்டு விஷம் பரவாமல் தடுத்து அதை வெளியேற்றினான். பிறகு தனது வேஷ்டியைக் கிழித்து, காலின் மேல் பகுதியில் இறுக்கிக் கட்டினான்.

சற்று தூரத்தில் கண்ணில் பட்ட  மூலிகைச் செடியின் இலைகளைப் பறித்து மென்று விழுங்கினான். அவன் அந்தக் காட்டுப் பகுதிக்குப் பழகியவன் என்பதாலும், மூலிகைகளைப் பற்றித் தெரிந்ததாலும், அது சாத்தியமாயிற்று.

போட்டுவிட்டுப் போனது சாதாரணப் பாம்பு போலிருக்கிறது. அதுவே சாரையாக இருந்திருந்திருந்தால், இந்நேரம்  சர்வேஸ்வரனிடம் போய்ச் சேர்ந்திருப்பான்.

தாகமாக இருந்தது.

சுற்று முற்றும் பார்த்தான். பக்கத்தில் நீர் நிலைகள் ஒன்றும் இல்லை.

சட்டென்று மின்னலென அவன் மனதில் கேள்வி ஒன்று எழுந்து நின்றது. இறையனார் தன்னுடன் எப்போதும் துணையாக வருவேனென்று வாக்குறுதியளித்தாரே! அவர் உடன் வந்துமா - நம்மை அரவம் தீண்டியது?

உடனே மனதிற்குள் கடுமையாகப் பிரார்த்தனை செய்துவிட்டு, தான் வந்த வழியைத் திரும்பிப்பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக ஒரு ஜோடி பாதச் சுவடுகள் மட்டுமே தெரிந்தன.

மனதிற்குள் பொருமினான். “நாம் நினைத்தது சரியாகிப்போய் விட்டது. இறைவன் வாக்களித்தபடி நம்முடன் வரவில்லை” என்று நினைத்தவன், சென்று கொண்டிருந்த வேலையைவிட்டுவிட்டு, திருக்கோவிலை நோக்கி ஓடினான்.

பதிகத்தைப்பாடிவிட்டு, தரையில் புரண்டு அழுதான்.

இறையனார் காட்சி கொடுத்தார்.

“அய்யனே, வாக்களித்தபடி ஏன் நீங்கள் என்கூட வரவில்லை?”

“யார் சொன்னது அப்பனே? எதைவைத்துச் சொல்கிறாய் நீ?” என்று இறையனார் பதிலுரைக்க, மடக்கும் விதமாகச் சொன்னான்:

”ஒரு ஜோடி பாதச்சுவடு மட்டும்தானே உள்ளது”

“அது என்னுடைய அடிச்சுவடுகள்”

“அப்படியென்றால், என்னுடைய சுவடுகள்?”

”நீ நன்றாக இருக்கும்போது உன்னுடன் நடந்து வந்தேன். மிகவும் சிரம திசையில் இருக்கும்போது உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். உன்னை அரவம் தீண்டியது உன் வினைப்பயன். விஷம் ஏறாமல் செய்தது நான்தான். அத்துடன் உனக்கு அருகிலேயே பச்சிலை காட்சி கொடுக்கும்படி செய்ததும் நான்தான்!”

அவன் வெட்கித் தலை குனிந்ததுடன், தன்னை மன்னித்தருளும்படி அவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுதான் நம்பிக்கை என்பது.

நீ எதைத் தொடர்ந்து நினைக்கிறாயோ, அதுவாக மாறிவிடுவாய் என்பது வேத வாக்கு!

ஆகவே தொடர்ந்து மனம் தளராமல் நம்பிக்கை வையுங்கள். இறைவன் நமக்குத் துணையாக வருவார்.

நான் என்பர்களிடம் அடிக்கடி சொல்வேன்:

"when God is with you, who can be against you?"

கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் மன வேதனைகள் என்பதெல்லாம் கர்ம வினைப் பயன்கள். அதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது போகாது. ஆனால் உங்களுடன் இருக்கும் இறையனார், உங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தியைத் தருவார். He will give you standing power. He will give you withstanding power.

அதுதான் அதி முக்கியமானது.
---------------------------------------------------
என் நண்பர் ஒருவருக்கு, மூன்று மாதங்களாக கோச்சாரம் நன்றாக இல்லை. சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மனிதர் பாடுபட்டு அவைகளைச் சமாளித்தார். இப்போது தசா புத்தியும் நன்றாக இல்லை. அதாவது புதன் திசையில் கேது புத்தி துவங்கியுள்ளது. அது சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு இருக்கும். அதுவும் சேர்ந்து அவரை படுத்தத் துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் இரண்டு எதிரிகளைச் சமாளித்தாக வேண்டும்.

எல்லாம் ஒரு ஆண்டு காலத்திற்குத்தான். அதற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிடும். நல்ல காலம்.

ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள ஒரு குகைப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கும்மிருட்டாக இருக்கிறது. அதுவும் இரவு நேரம். என்ன செய்ய முடியும் உங்களால்? வெளிச்சம் வரட்டும் என்று உட்கார்ந்திருக்க முடியுமா? வருவது வரட்டும் என்று தட்டுத்தடுமாறியாவது நடக்க வேண்டியதுதான். இறைவன் இருக்கிறார். நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை இருந்தால் உங்களால், எந்த பாதிப்பும் இன்றி நடக்க முடியும்

அதை நினைவில் வையுங்கள்
--------------------------------------------------
சரி ஜோதிடத்திற்கு வருவோம்.

பழைய பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். படியுங்கள்

புதன் திசை கேது புத்திக்கான பாடல்:

“வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி
    வகையில்லா மாதமது பதினொன்றாகும்
குள்ளலாம் நாளதுவும் இருபத்தியேழு
    கொடுமையுள்ள அதன்பலனைக் கூறக்கேளு
மாளலாம் பகைவரும் உத்தார் நாசம்
    மனமில்லா வியாதியது மடித்துக் கொல்லும்
தேடலாம் திரவியங்கள் சேதமாகும்
    தினந்தோறும் சத்துருவும் நீதான் பாரே!”


பாடலில் கண்டுள்ளபடி அந்த நண்பரை உடல் ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

அது யார்?

அது நான்தான்!
++++++++++++++++++++++++++++++++++++++++
கேது என்றாலே அப்படித்தானா?

இல்லை. கேது மகா திசையில், சில கிரகங்களின் புத்திகள் உள்ளே நுழைந்து, கேதுவை உட்காரவைத்துவிட்டு, நன்மைகள் செய்யத் துவங்கிவிடும்.

உதரணத்திற்கு இன்னும் ஒரு பழைய பாடலைக் கொடுத்துள்ளேன்.

கேது திசை புதன் புத்திக்கான பாடல்:

“பாரப்பா கேது திசை புதனார் புத்தி
    பாங்குள்ள மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் இருபத்திதேழு
    சேதமில்லா அதன் பலனை செப்பக்கேளு
வீரப்பா கொண்டு நின்ற மயக்கம்போய்
    மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய்
சீரப்பா லட்சுமியும் சேர்ந்து கொள்வாள்
    தீங்கில்லா மனக்கவலை இல்லை காணே!”

இதுவும் ஒரு ஆண்டுகாலம்தான். புதன் திசையில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இது பரிகாரம். அதாவது நஷ்ட ஈடு. அந்த நஷ்டம் இங்கே சரிசெய்யப்படும்.

அதானால்தான் நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலா பலன்கள்.

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.
ஒன்று நடக்காவிட்டால் இன்னொன்று நடக்கும்
ஒன்று கிடைக்காவிட்டால் இன்னொன்று கிடைக்கும்.

உங்களுக்குப் புரியும்படி சொன்னால், நம் அனைவருக்கும் அந்த மாஜிக் எண்தான் மதிப்பெண்,

அதாவது 337
++++++++++++++++++++++++++++
நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்?

“யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க”


என்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல், அதே பாடலில் சரணத்தில் வரும் இந்த வரிகளைப் பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்:

“நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்!”


அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
தைப்பூசத்தை முன்னிட்டு வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த பாடம் 21.1.2011 வெள்ளியன்று. வாத்தியார் இல்லையே என்று லூட்டியடிக்காமல் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்




வாழ்க வளமுடன்!

17.1.11

Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரியதாகத் 
தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

14.1.11

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

நீங்கள் இன்புற்று மகிழ, வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் பொங்கல் விடுமுறை! அடுத்த வகுப்பு 17.1.2011 திங்களன்று நடைபெறும்.

அன்புடன்,
நட்புடன்,
நேசத்துடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

சர்வமும் நீதான் சண்முகநாதா!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சர்வமும்  நீதான்  சண்முகநாதா!

இன்றைய பக்தி மலரை முருகப்பெருமானின் பெருமையைச் சொல்லும் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்.
---------------------------------------------------
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முறை கேளாயோ குறை தீராயோ
மான்மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா - மனம் - உருகாதா

மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
(முருகா)

ஜன்மபாபவினை தீரவே பாரினில்
தனமே தேடி நின்றோம்
தவ சீலா சிவ பாலா
சர்வமும் நீயே சிவசக்தி வேலா
(முருகா)


பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன் அவர்கள்!

வாழ்க வளமுடன்!

13.1.11

இலக்கியச் சோலை - பகுதி இரண்டு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலக்கியச் சோலை - பகுதி இரண்டு!

நம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.

கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது வைத்துக்கொள்ளலாம் இல்லையா?

உங்களுக்காக வாரம் ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைத் தரலாம் என்றுள்ளேன். இன்று, இரண்டாவது பாட்டைக் கொடுத்துள்ளேன். தொடர்ந்து வாரம் ஒரு பாடல் இனி வரும். படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களில் வாழ்ந்துகொண்டிருந்த சமண முனிவர்கள், ஒரு பஞ்ச காலத்தில் இடம்பெயர்ந்து, பாண்டிய நாட்டிற்குச் சென்று, அன்று அரசாட்சி செய்து கொண்டிருந்த உக்கிரப் பெருவழுதி என்னும் மன்னனிடம்  தஞ்சம் அடைந்தனர்.

மன்னனும் அவர்களை, அரசவைப்புலவர்களாக அமர்த்தி தஞ்சம் அளித்தான்.

பின்னர் சில மாதங்கள் கழித்து, அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்செல்ல விரும்பி, மன்னனிடம் விடை கேட்டனர்.  அவர்களைப் பிரிய மனமில்லாத மன்னன், “இல்லை, இங்கேயே நீங்கள் இருங்கள்” என்று கூறிவிட்டான்.

இந்நிலையில், அச்சமண முனிவர்கள் ஒவ்வொருவரும், பனை ஏடுகளில் ஒவ்வொரு வெண்பாவை இயற்றி, அவரவர் இருக்கைகளில் வைத்துவிட்டு, அன்று நள்ளிரவே சொல்லிக்கொள்ளாமல் பாண்டிய நாட்டைவிட்டு அகன்றனர்.

முனிவர்கள் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதை, மறுநாள் காலையில் அறிந்த மன்னன் மிக்க மனவருத்த முற்றான். அத்துடன் அவர்கள் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்த எட்டாயிரம் ஓலைகளையும் வைகை ஆற்றில் வீசி ஏறிந்தான்.

வியக்கும் வகையில், வீசி எறிந்த ஓலைகளில் 400 ஓலைகள் மட்டும், வெள்ளத்தை எதிர்த்துக் கரை சேர்ந்தன. அதைக் கண்டு வியந்த மன்னன். அவற்றைத் தொகுத்து, நாலடி நானூறு’ என்னும் பெயரில் நூலாக்கினான். இது நடந்தது கி.பி.முதலாம் நூற்றாண்டு. அதை மனதில் கொள்க,

அந்த நாலடியார் நானூறிலிருந்து ஒரு பாடல்:

நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்து
ஒன்றின வொன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.


பொருள்: வாழ்நாட்கள் கழிந்து கொண்டே போகின்றன. சினம் கொண்ட காலன் நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறான். உள்ள செல்வங்கள் யாவும் நிலையற்றவை என அறிந்து, நிலையான தர்மங்களை, விரைவாகச் செய்ய முன் வர வேண்டும்!

வாழ்க வளமுடன்!