+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிருப்தி எப்போது போகும்?
-------------------------------------------
இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.
அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.
அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.
உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.
மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.
பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”
அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”
”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”
“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”
“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”
அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.
ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.
மின்னஞ்சலில் வந்தது. நன்றாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் வலையில் ஏற்றியுள்ளேன்
அன்புடன்
எஸ்.உமா
தில்லி
வாழ்க வளமுடன்!
Good Blog.
ReplyDeleteசுகி சிவம், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோர் வரிசையில் வைத்துப் படிக்கவேண்டிய உன்னதமான கதை. திருமதி உமா அவர்கள் அதனைத் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்து வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல். அவருடைய தமிழ் நடை உண்மையில் சிறப்பானதொன்று. சின்னச்சின்ன வரிகளில் சொல்ல வந்த செய்தியை அழகாகச் செய்திருக்கிறார். பாராட்டுகள்! உங்கள் முயற்சி தொடரட்டும். நல்ல ஆற்றல் இருக்கிறது. சிறந்த எழுத்தாளராகப் பாராட்டப்படுவீர்கள். இறைவன் அருள் கிடைக்கட்டும்.
ReplyDeleteடெல்லி உமாஜி!ஒவ்வொரு ஆக்கத்திலும் ஒவ்வொரு பரிமாணம் புலனாகிறது.அப்படியே வந்ததை சொல்லியுள்ளீர்களா? அல்லது கருத்தை எடுத்துக் கொண்டு உங்கள் நடையில் சொல்லியுள்ளீர்களா? உங்கள் தனி முத்திரை தெரிகிறது.பாராட்டுக்கள்.
ReplyDeleteஏணி, தோணி, கோணி, புராணி என்பார்கள்.ஏணியில் ஏறிச்சென்றபின் அதைப் பற்றிக் கவலையில்லை.
தோணியில் பயணம் செய்துவிட்டு, அதைத் திரும்பிப் பாராமல் சென்றுவிடுவர்.கோணியில் பொருள் வாங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் அதை ஒதுக்கி விடுவர். புராணத்தைக்கேட்கும் வரை நல்ல மனம் இருக்கும். முடிந்தவுடன் புராணம் ,சொன்னவர் இரண்டுமே மறந்துவிடுவர். அது போல் தான் ஆசிரியர்!
எந்தப்போர்வை போர்த்திக்கொண்டாலும்
ReplyDeleteசொந்தப்போர்வை தனக்குத் தெரியாமல்
இருப்பதில்லை. அதிலுள்ள அழுக்கும், அசிங்கமும்,
அம்மணமும் உள் மனம் உணரவே செய்கிறது என்ற
உண்மையை உணர்த்திய தில்லி உமாவுக்கு வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
ஆசானே வணக்கம்.
ReplyDeleteபாசமலர் சகோதரிக்கு முதற்கண் வணக்கம் எதற்கு என்று தானே கேட்கின்றீர்கள் சகாக்களே!
" தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்!" என்ற மிகவும் உயர்ந்த மனப்பான்மையுடன் அருமையான ஆக்கத்தை இன்றைய வகுப்பில் பகிர்ந்து கொண்டமைக்கு.
கீழே கண்ட வரி துளிகள் என்றைக்கும் வலையில் பாதுக்காக வேண்டி போக்கிஷம்கள்
வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”
--
வாத்தியார் ஐயா!
ReplyDeleteதை பூச திரு விழாக்கள் எல்லாம் எவ்வாறு இருந்தது.
தங்களுடைய " வருட செய்வாய் கிழமை திருவிழா !" வின் சிறப்பை பற்றி ஒரு சிறப்பு வாய்ந்த கட்டுரை தந்தாள் மிகவும் நன்றாக இருக்குமே வகுப்பறை
உமா அவர்களின் ஆக்கம் அருமை. இப்படி ஒரு ஆசிரியர் ஒருவர் அமைந்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். நல்ல ஆசிரியர் இறைவனுக்கு சமமானவர். இதுபோன்ற நல்ல ஆக்கங்களை வெளியிடும் உமா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். திரு தஞ்சாவூரான் அய்யா அவர்கள் சொல்லியுள்ளது போல உங்களுக்கு ஆண்டவன் அனுகிரகம் என்றென்றைக்கும் இருக்கட்டும்.
ReplyDeleteஇது கேட்ட கதை தான் . .
ReplyDeleteஆனாலும்
சகோதரி உமாவின் எழுத்துக்களில்
கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது...
உண்மைதான்..
அந்த விருந்திலும்
அனைத்து மாணவர்களுக்கும்
பாடம் சொல்லித்தரும்
ஆசிரியர் பாராட்டுக்குரியவர் . .
சுதந்திர போராட்ட வீரர் திலகரிடம் பத்திரிகை நிருபர்
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நீங்கள் (பிரதமராகவா.. ஜனாதிபதியாகவா) என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டார்களாம் . .
அதற்கு அவர்
நான் மீண்டும் ஆசிரியராவேன் பல 100 ஆட்சியாளர்களை உருவாக்குவேன் என்றாராம்..
ஆசிரியரின் இயல்பு நிலையை அப்படியே படம் பிடித்து காட்டியது பாராட்டுக்குரியது .
அது சரி - . .
இந்த முறை எந்தப் பேயும் அகப்படவில்லையா . . உமா பெகன்
மிகவும் அற்புதமான கருத்து பொதிந்த கதை...
ReplyDeleteவெளி பகட்டிலே வாழ்க்கையோடும் நேரத்தில் மிகவும் நேர்த்தியான அர்த்தம் மிகுந்த; இன்றைய சூழலில் எதார்த்த வாழ்க்கைக்கு தேவையான அற்புத நீதியை வழங்கியது இந்தக் கதை...
மிகவும் அருமை உமா!
வாழ்த்துக்கள்...
டெல்லி உமாஜி,
ReplyDeleteமிகவும் அருமை.
மேலும் தொடரடும் தஙகள் நற்பனி.
கோபாலன் சார், கிருஷ்ணன் சார், சுப்புரத்தினம் சார் உங்கள் பாராட்டுகளுக்கு உரியவர் இதை எழுதியவர்தான். மின்னஞ்சலில் வந்ததை அனுப்பியது மட்டுமே நான் செய்தது. மிக்க நன்றி.
ReplyDeleteகோபாலன் சார், கிருஷ்ணன் சார், சுப்புரத்தினம் சார். வாத்தியாருக்கு நான் எழுதிய ஒரு கதையை அனுப்பியுள்ளேன். அதைப் படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள். நன்றிகள் பல.
ReplyDeleteஎன்ன ஒற்றுமை பாருங்கள்.தஞ்சாவூரான்(கோபாலன்ஜி),அடியேன், சுப்புரெத்தினம்(சூரிஜி)ஆகிய மூவரும் ஒரு சேர அடுத்து அடுத்து பின்னூட்டம் இட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளில் ஒரு கால கட்டத்தில் மூவரும் அலுவலகத்திலும், வெளியிலும் பல சூழல்களில் இணைந்து பணியாற்றி
ReplyDeleteuள்ளோம்.சூரிஜியின் தளராத முயற்சியால் மேலும் மேலும் முன்னேறி பதவி உயர்வுபெற்று பெரும் பதவியை வகித்து ஓய்வு பெற்று, இப்போது 13 பிளாக் நடத்துகிறார்கள். வலை உலகில் உயிர்ப்புடன், உத்வேகத்துடன் உலாவருபவர்.ஏனோ என் ஆக்கங்களை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டார்.நான் வகுப்பறையில் என்னைப்பற்றிக்கூறிய செய்திகள் அனைத்தும் அவர் அறிவார்.போகட்டும்.வகுப்பறைக்கு வருவதன் மூலம் அவர் நலம் அறிய முடிகிறது.நான் அவருக்கு வயதிலும், பணிமூப்பிலும்,பதவியிலும், சமூக அந்தஸ்திலும் மிகவும் கீழ்ப்படியில் இருப்பவன்.எங்கோ என்னை அறியாமல் தவறான பக்கத்தில் அவ்ருடைய உணர்வுகளை உரசி விட்டேனோ?சொன்னால் தானே தெரியும். 'டூ'வை கைவிட்டு 'சேத்தி' விடுங்கள் சூரிஜி.
அன்புடன் வணக்கம்
ReplyDeleteமிக மிக அருமையான போதனை.. இதையே வேறு ஒரு விதமாக வேறு இடத்தில சொல்வார்கள்
ஆனாலும் இந்த பதிவு இந்த இடத்தில சிறப்பாக இருக்கிறது நன்றி திருமதி உமா ...
நல்லதொரு படிப்பினையைத் தந்த பதிவு. எல்லோரும் படித்து உணர வேண்டிய விஷயம். நிலையில்லாதது என்று தெரியாமல் ஒன்றைத் துரத்துவதே மனித இயல்பாகி விட்டது.
ReplyDeleteநன்றி கண்ணன்
ReplyDeleteஉங்களுக்கு ஆண்டவன் அனுகிரகம் //
ReplyDeleteநன்றி நந்தகோபால்
இந்த முறை எந்தப் பேயும் அகப்படவில்லையா . //
ReplyDeleteபேயைத்தான் தினமும் பார்க்கறேனே, அப்புறம் என்ன?
நன்றி ஆலாசியம்
ReplyDeleteநன்றி பிரசன்னகுமார்
ReplyDeleteகணபதி சார், நன்றி
ReplyDeleteநன்றி ஆனந்த்
ReplyDeleteAandavan yaarayum vittathilla Vaalkiyin mattathilla...
ReplyDeleteAasiya nenjula vevhiputtaan sothanai konjamilla...
Uma Madem,
Nalla kathai.
Pagirvirkku Nandri
Maanavan
டெல்லி..டீ பார்ட்டி..அப்பிடின்னாலே ஏதோ ஆட்சி கவிழ்ப்பு சமாச்சாரம்ன்னு நினைச்சேன்..
ReplyDeleteகதாசிரியர் பெரிய தத்துவஞானியாய்த் தன்னைக் காட்டிக் கொள்ள எடுத்த முயற்சின்னு நினைச்சுப் பார்த்தால்
அதுவும் சொந்த சரக்கு இல்லைன்னு..
கடைசிலே பார்த்தால்தான் தெரியுது..
எப்பிடியெல்லாம் ட்ரை பண்றாங்கப்பா?
Uma Madem,
ReplyDeleteNalla kathai.
Pagirvirkku நன்றி//
நன்றி வாசகன்
அதுவும் சொந்த சரக்கு இல்லைன்னு..
ReplyDeleteகடைசிலே பார்த்தால்தான் தெரியுது..
எப்பிடியெல்லாம் ட்ரை பண்றாங்கப்பா?//
ம்க்கும். சரி சரி உமா, பிரபல எழுத்தாளர்னா பொறாமைல இது மாதிரி கமெண்ட்ஸ் வரத்தான் வரும், லூஸ்ல விடு.
ஆமா, உங்க தொடர்கதை மூணாவது பகுதி எங்கே? எங்கே? எங்கே?
///////ம்க்கும். சரி சரி உமா, பிரபல எழுத்தாளர்னா பொறாமைல இது மாதிரி கமெண்ட்ஸ் வரத்தான் வரும், லூஸ்ல விடு.\\\\\\\
ReplyDeleteஏதோ இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..சரி..என்ன பண்றது..
///////ஆமா, உங்க தொடர்கதை மூணாவது பகுதி எங்கே? எங்கே? எங்கே?\\\\\\
மூணாவுது பார்ட் ஒண்ணு இருக்குன்னு எனக்கு ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி..
மூணாவுது பார்ட் ஒண்ணு இருக்குன்னு எனக்கு ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி//
ReplyDeleteஇதுக்கு முன்னாடி ரெண்டு பார்ட் எழுதினதை ஞாபகப்படுத்த வேண்டாமில்ல? அதுவரைக்கும் ஷேமம்தான்.