18.1.11

Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்? பகுதி இரண்டு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்? பகுதி இரண்டு

இதன் முதற்பகுதியை படித்திராதவர்கள் அதைப் படைத்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

அப்படிச் சென்று கொண்டிருந்தவனை, அரவம் ஒன்று தீண்டி விட்டது என்று சொன்னேனில்லையா?

தன்னைத் தீண்டிய அரவம் வளைந்து. நெளிந்து, விரைவாகச் சென்று ஒரு புதருக்குள் மறைவதைக் கண்கூடாகப் பார்த்தவன், தன் துணிச்சலைக் கைவிடாமல், பையில் இருந்த சிறு கத்தியால், காலில் அரவம் தீண்டிய இடத்தைக் கிழித்து விட்டு விஷம் பரவாமல் தடுத்து அதை வெளியேற்றினான். பிறகு தனது வேஷ்டியைக் கிழித்து, காலின் மேல் பகுதியில் இறுக்கிக் கட்டினான்.

சற்று தூரத்தில் கண்ணில் பட்ட  மூலிகைச் செடியின் இலைகளைப் பறித்து மென்று விழுங்கினான். அவன் அந்தக் காட்டுப் பகுதிக்குப் பழகியவன் என்பதாலும், மூலிகைகளைப் பற்றித் தெரிந்ததாலும், அது சாத்தியமாயிற்று.

போட்டுவிட்டுப் போனது சாதாரணப் பாம்பு போலிருக்கிறது. அதுவே சாரையாக இருந்திருந்திருந்தால், இந்நேரம்  சர்வேஸ்வரனிடம் போய்ச் சேர்ந்திருப்பான்.

தாகமாக இருந்தது.

சுற்று முற்றும் பார்த்தான். பக்கத்தில் நீர் நிலைகள் ஒன்றும் இல்லை.

சட்டென்று மின்னலென அவன் மனதில் கேள்வி ஒன்று எழுந்து நின்றது. இறையனார் தன்னுடன் எப்போதும் துணையாக வருவேனென்று வாக்குறுதியளித்தாரே! அவர் உடன் வந்துமா - நம்மை அரவம் தீண்டியது?

உடனே மனதிற்குள் கடுமையாகப் பிரார்த்தனை செய்துவிட்டு, தான் வந்த வழியைத் திரும்பிப்பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக ஒரு ஜோடி பாதச் சுவடுகள் மட்டுமே தெரிந்தன.

மனதிற்குள் பொருமினான். “நாம் நினைத்தது சரியாகிப்போய் விட்டது. இறைவன் வாக்களித்தபடி நம்முடன் வரவில்லை” என்று நினைத்தவன், சென்று கொண்டிருந்த வேலையைவிட்டுவிட்டு, திருக்கோவிலை நோக்கி ஓடினான்.

பதிகத்தைப்பாடிவிட்டு, தரையில் புரண்டு அழுதான்.

இறையனார் காட்சி கொடுத்தார்.

“அய்யனே, வாக்களித்தபடி ஏன் நீங்கள் என்கூட வரவில்லை?”

“யார் சொன்னது அப்பனே? எதைவைத்துச் சொல்கிறாய் நீ?” என்று இறையனார் பதிலுரைக்க, மடக்கும் விதமாகச் சொன்னான்:

”ஒரு ஜோடி பாதச்சுவடு மட்டும்தானே உள்ளது”

“அது என்னுடைய அடிச்சுவடுகள்”

“அப்படியென்றால், என்னுடைய சுவடுகள்?”

”நீ நன்றாக இருக்கும்போது உன்னுடன் நடந்து வந்தேன். மிகவும் சிரம திசையில் இருக்கும்போது உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். உன்னை அரவம் தீண்டியது உன் வினைப்பயன். விஷம் ஏறாமல் செய்தது நான்தான். அத்துடன் உனக்கு அருகிலேயே பச்சிலை காட்சி கொடுக்கும்படி செய்ததும் நான்தான்!”

அவன் வெட்கித் தலை குனிந்ததுடன், தன்னை மன்னித்தருளும்படி அவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுதான் நம்பிக்கை என்பது.

நீ எதைத் தொடர்ந்து நினைக்கிறாயோ, அதுவாக மாறிவிடுவாய் என்பது வேத வாக்கு!

ஆகவே தொடர்ந்து மனம் தளராமல் நம்பிக்கை வையுங்கள். இறைவன் நமக்குத் துணையாக வருவார்.

நான் என்பர்களிடம் அடிக்கடி சொல்வேன்:

"when God is with you, who can be against you?"

கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் மன வேதனைகள் என்பதெல்லாம் கர்ம வினைப் பயன்கள். அதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது போகாது. ஆனால் உங்களுடன் இருக்கும் இறையனார், உங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தியைத் தருவார். He will give you standing power. He will give you withstanding power.

அதுதான் அதி முக்கியமானது.
---------------------------------------------------
என் நண்பர் ஒருவருக்கு, மூன்று மாதங்களாக கோச்சாரம் நன்றாக இல்லை. சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மனிதர் பாடுபட்டு அவைகளைச் சமாளித்தார். இப்போது தசா புத்தியும் நன்றாக இல்லை. அதாவது புதன் திசையில் கேது புத்தி துவங்கியுள்ளது. அது சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு இருக்கும். அதுவும் சேர்ந்து அவரை படுத்தத் துவங்கியுள்ளது. ஒரே நேரத்தில் அவர் இரண்டு எதிரிகளைச் சமாளித்தாக வேண்டும்.

எல்லாம் ஒரு ஆண்டு காலத்திற்குத்தான். அதற்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிடும். நல்ல காலம்.

ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள ஒரு குகைப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கும்மிருட்டாக இருக்கிறது. அதுவும் இரவு நேரம். என்ன செய்ய முடியும் உங்களால்? வெளிச்சம் வரட்டும் என்று உட்கார்ந்திருக்க முடியுமா? வருவது வரட்டும் என்று தட்டுத்தடுமாறியாவது நடக்க வேண்டியதுதான். இறைவன் இருக்கிறார். நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை இருந்தால் உங்களால், எந்த பாதிப்பும் இன்றி நடக்க முடியும்

அதை நினைவில் வையுங்கள்
--------------------------------------------------
சரி ஜோதிடத்திற்கு வருவோம்.

பழைய பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளேன். படியுங்கள்

புதன் திசை கேது புத்திக்கான பாடல்:

“வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி
    வகையில்லா மாதமது பதினொன்றாகும்
குள்ளலாம் நாளதுவும் இருபத்தியேழு
    கொடுமையுள்ள அதன்பலனைக் கூறக்கேளு
மாளலாம் பகைவரும் உத்தார் நாசம்
    மனமில்லா வியாதியது மடித்துக் கொல்லும்
தேடலாம் திரவியங்கள் சேதமாகும்
    தினந்தோறும் சத்துருவும் நீதான் பாரே!”


பாடலில் கண்டுள்ளபடி அந்த நண்பரை உடல் ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

அது யார்?

அது நான்தான்!
++++++++++++++++++++++++++++++++++++++++
கேது என்றாலே அப்படித்தானா?

இல்லை. கேது மகா திசையில், சில கிரகங்களின் புத்திகள் உள்ளே நுழைந்து, கேதுவை உட்காரவைத்துவிட்டு, நன்மைகள் செய்யத் துவங்கிவிடும்.

உதரணத்திற்கு இன்னும் ஒரு பழைய பாடலைக் கொடுத்துள்ளேன்.

கேது திசை புதன் புத்திக்கான பாடல்:

“பாரப்பா கேது திசை புதனார் புத்தி
    பாங்குள்ள மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் இருபத்திதேழு
    சேதமில்லா அதன் பலனை செப்பக்கேளு
வீரப்பா கொண்டு நின்ற மயக்கம்போய்
    மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய்
சீரப்பா லட்சுமியும் சேர்ந்து கொள்வாள்
    தீங்கில்லா மனக்கவலை இல்லை காணே!”

இதுவும் ஒரு ஆண்டுகாலம்தான். புதன் திசையில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இது பரிகாரம். அதாவது நஷ்ட ஈடு. அந்த நஷ்டம் இங்கே சரிசெய்யப்படும்.

அதானால்தான் நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலா பலன்கள்.

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.
ஒன்று நடக்காவிட்டால் இன்னொன்று நடக்கும்
ஒன்று கிடைக்காவிட்டால் இன்னொன்று கிடைக்கும்.

உங்களுக்குப் புரியும்படி சொன்னால், நம் அனைவருக்கும் அந்த மாஜிக் எண்தான் மதிப்பெண்,

அதாவது 337
++++++++++++++++++++++++++++
நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்?

“யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க”


என்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல், அதே பாடலில் சரணத்தில் வரும் இந்த வரிகளைப் பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்:

“நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்!”


அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
தைப்பூசத்தை முன்னிட்டு வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த பாடம் 21.1.2011 வெள்ளியன்று. வாத்தியார் இல்லையே என்று லூட்டியடிக்காமல் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்




வாழ்க வளமுடன்!

41 comments:

  1. உண்மை, புதன் திசைமுடிந்து,கேது திசையில் புதன்புத்தி 6 மாதம் கழீந்து விட்டது,பாடலின் நிகழ்வை எதிர்பார்த்து இருக்கிறோன்.

    ReplyDelete
  2. உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். கேது தங்களுடைய லக்னாதிபதிக்கு பகையாகவும் போய் விட்டார். எப்படி நன்மை செய்வார். அறிஞர் அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம் இப்போது தங்களுக்கு தேவைப்படும்.

    ReplyDelete
  3. ////arthanari said...
    உண்மை, புதன் திசைமுடிந்து,கேது திசையில் புதன்புத்தி 6 மாதம் கழிந்து விட்டது,பாடலின் நிகழ்வை எதிர்பார்த்து இருக்கிறேன்./////

    துணிவோடு இருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். நன்றி!

    ReplyDelete
  4. /////ananth said...
    உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். கேது தங்களுடைய லக்னாதிபதிக்கு பகையாகவும் போய் விட்டார். எப்படி நன்மை செய்வார். அறிஞர் அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம் இப்போது தங்களுக்கு தேவைப்படும்.////

    ஆகா, உங்களுடைய அறிவுரைக்கு நன்றி! நான் எதற்கும் கவலைப் படுவதில்லை. பழநி அப்பன் பார்த்துக் கொள்வான்.

    ReplyDelete
  5. "உன்னை எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்பதில்லை".... என்பதைப் போல இவைகளை எதனை முறைப் படித்தாலும்.. சலிக்காது... நன்றி.. நன்றி..

    பாடலில் கண்டுள்ளபடி அந்த நண்பரை உடல் ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

    அது யார்?

    அது நான்தான்! நான் யூகித்தது சரி தான்...

    Please take care Sir...

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. வாத்தியார் இல்லையே என்று லூட்டியடிக்காமல் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்//

    நீங்க சொல்லி நாங்க கேக்காம இருப்போமா?

    ReplyDelete
  7. Thangal seekiram gunamadaiya vazhthukkal. My Prayers are with you. Let this phase move on quickly. BALA RIYADH.

    ReplyDelete
  8. Dear Sir

    Please Take your health. Thanks sir.

    thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  9. ஆண்டவன் அருள் தங்களுக்கு உண்டு.

    தாங்கள் நலம் அடைய வாழ்த்துகள்.

    நனறிகள் ஐயா

    ReplyDelete
  10. /////Blogger Alasiam G said...
    "உன்னை எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்பதில்லை".... என்பதைப் போல இவைகளை எதனை முறைப் படித்தாலும்.. சலிக்காது... நன்றி.. நன்றி..
    பாடலில் கண்டுள்ளபடி அந்த நண்பரை உடல் ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
    அது யார்?
    அது நான்தான்! நான் யூகித்தது சரி தான்...
    Please take care Sir...
    நன்றிகள் ஐயா!////

    உங்களின் மேலான அன்பிற்கு நன்றி ஆலாசியம்!.

    ReplyDelete
  11. ///Blogger Uma said...
    வாத்தியார் இல்லையே என்று லூட்டியடிக்காமல் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்//
    நீங்க சொல்லி நாங்க கேக்காம இருப்போமா?/////

    தாய்க்குலங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?

    ReplyDelete
  12. ////Blogger Balasubramanian Pulicat said...
    Thangal seekiram gunamadaiya vazhthukkal. My Prayers are with you. Let this phase move on quickly. BALA RIYADH./////

    உங்களின் மேலான அன்பிற்கு நன்றி பாலா!

    ReplyDelete
  13. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Please Take your health. Thanks sir.
    thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்களின் மேலான அன்பிற்கு நன்றி ராஜாராமன்.

    ReplyDelete
  14. ////Blogger vprasanakumar said...
    ஆண்டவன் அருள் தங்களுக்கு உண்டு.
    தாங்கள் நலம் அடைய வாழ்த்துகள்.
    நனறிகள் ஐயா////

    நமக்கு உண்டு என்று சொல்லுங்கள். நன்றி பிரசன்னகுமார்!

    ReplyDelete
  15. Dear Sir,
    Let Lord Dhanvanthri and vaitheswaran cure your disease soon

    ReplyDelete
  16. பழனியப்பனின் அடிமைக்கு வணக்கம்,

    ஐயா தங்களிடம் நீண்ட நெடும்காலமாக கேட்க வேண்டி ஒரு கேள்வி ஒன்று மனதில் உள்ளது அது என்ன வென்றால் தங்களை எவ்வாறு

    " தகப்பன் சுவாமி, பாலதண்டாயுதபானி தெய்வம், பழனியப்பன்!" ஆட்கொண்ட விதத்தை பற்றியது ஐயா..

    ReplyDelete
  17. நோய்க்கு மருந்து அறிந்த மருத்துவருக்கு , அந்நோய் எதிர் கொள்ளும் பக்குவம் இருக்கும் , இந்த பதிவு என்னை போன்றவர்களுக்கான அருமருந்து . நன்றி குருவே !!!

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா.
    இன்றைய நீதி கதை பிரமாதம்,நன்றி.
    அரிபாய். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  19. ///"ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.அது யார்?அது நான்தான்!""///
    ஐயா! நன்கு ஓய்வெடுங்கள்..ம‌ருத்துவ‌ர் ஆலோச‌னைப்ப‌டி ம‌ருந்துக‌ளைச் சா‌ப்பிடுங்க‌ள்.கூடிய விரை‌வில் புன்னை ந‌ல்லூர் மாரிய‌ம்ம‌ன், பங்காரு காமாட்சி,பெரிய‌கோவில் வாராகி ஆகிய‌‌ தாயா‌ர்க‌ளிட‌ம் வேண்டிக்கொண்டு குங்கும‌ம் பிர‌சாத‌ம் அனுப்பி வைக்கிறேன்.வ‌ந்த‌ உட‌ல் அனாரோக்கிய‌ம் ப‌னிபோல் வில‌கிவிடும்.திருவோண‌ ந‌ட்ச‌த்திரம்,ம‌க‌ர‌ராசி ச‌ரிதானே?!

    ReplyDelete
  20. ////Pallathur Ramanathan said...
    Dear Sir,
    Let Lord Dhanvanthri and vaitheswaran cure your disease soon/////

    உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி ராமநாதன்!

    ReplyDelete
  21. //////kannan said...
    பழனியப்பனின் அடிமைக்கு வணக்கம்,
    ஐயா தங்களிடம் நீண்ட நெடும்காலமாக கேட்க வேண்டி ஒரு கேள்வி ஒன்று மனதில் உள்ளது அது என்ன வென்றால் தங்களை எவ்வாறு
    " தகப்பன் சுவாமி, பாலதண்டாயுதபானி தெய்வம், பழனியப்பன்!" ஆட்கொண்ட விதத்தை பற்றியது ஐயா..//////

    பக்கம் பக்கமாக எழுதலாம். நேரம் வரும்போது எழுதுகிறேன்!

    ReplyDelete
  22. /////profit500 said...
    நோய்க்கு மருந்து அறிந்த மருத்துவருக்கு , அந்நோய் எதிர் கொள்ளும் பக்குவம் இருக்கும் , இந்த பதிவு என்னை போன்றவர்களுக்கான அருமருந்து . நன்றி குருவே !!!///////

    அனுபவத்தைப் பதிவு செய்ய வேண்டும். அது மற்றர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் பதிவு. நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ///aryboy said...
    வணக்கம் அய்யா.
    இன்றைய நீதிக் கதை பிரமாதம்,நன்றி.
    அரிபாய். வாழ்க வளமுடன்////

    நல்லது. நன்றி அரிபாய்!

    ReplyDelete
  24. //////kmr.krishnan said...
    ///"ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.அது யார்?அது நான்தான்!""///
    ஐயா! நன்கு ஓய்வெடுங்கள்..ம‌ருத்துவ‌ர் ஆலோச‌னைப்ப‌டி ம‌ருந்துக‌ளைச் சா‌ப்பிடுங்க‌ள்.கூடிய விரை‌வில் புன்னை ந‌ல்லூர் மாரிய‌ம்ம‌ன், பங்காரு காமாட்சி,பெரிய‌கோவில் வாராகி ஆகிய‌‌ தாயா‌ர்க‌ளிட‌ம் வேண்டிக்கொண்டு குங்கும‌ம் பிர‌சாத‌ம் அனுப்பி வைக்கிறேன்.வ‌ந்த‌ உட‌ல் அனாரோக்கிய‌ம் ப‌னிபோல் வில‌கிவிடும்.திருவோண‌ ந‌ட்ச‌த்திரம்,ம‌க‌ர‌ராசி ச‌ரிதானே?!/////

    நட்சத்திரமும் ராசியும் சரிதான். உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  25. வாத்தியாருக்கு வணக்கம்+கோடி நன்றிகள்,
    நான் உங்க வலை பூவிர்க்கு புதுசு எங்க ஆரம்பிப்பது எப்படி தொடர்வது தயவு செய்து என்ன மாதிரி ஆட்களுக்கு ஒரு இடுகை போடுங்களேன்.

    ReplyDelete
  26. //////////////// நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்?

    “யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க”

    என்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல்/////////////
    என்னா ஒரு வேவ்லெங்க்த் மாட்சிங் சார்..நேத்திக்குக் கூட இந்தப் பாட்டை முணுமுணுத்தேன்..எனக்குப் ரொம்பப் புடிச்ச வரிகள்..
    ரொம்ப காலம் இதைத்தான் பாடிட்டே இருந்தேன்..நீங்க எனக்காகவென்றே இந்த வரிகளை தவிர்த்துவிட்டு பிற வரிகளை மனதில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள்..
    காலம் கடந்த அறிவுரை..வேறு யார்க்காவது பயன்படும்..

    ReplyDelete
  27. Dear Sir,

    Please take good care of yourself.
    You will get ready soon.

    Thanks
    Saravana

    ReplyDelete
  28. சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..

    சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..

    KG ஹோஸ்பிடல்லே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணினா எல்லாம் சரியாயிடும்..

    ReplyDelete
  29. ///////Blogger nappayya007 said...
    வாத்தியாருக்கு வணக்கம்+கோடி நன்றிகள்,
    நான் உங்க வலை பூவிர்க்கு புதுசு எங்க ஆரம்பிப்பது எப்படி தொடர்வது தயவு செய்து என்ன மாதிரி ஆட்களுக்கு ஒரு இடுகை போடுங்களேன்./////

    துவக்கத்தில் இருந்து வரிசையாகப் படியுங்கள். மொத்தம் 400 பாடங்கள் உள்ளன. பாடங்களுக்கான லிங்க் சைடு பாரில் உள்ளது.

    ReplyDelete
  30. Blogger minorwall said...
    //////////////// நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்?
    “யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க”
    என்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல்/////////////
    என்னா ஒரு வேவ்லெங்க்த் மாட்சிங் சார்..நேத்திக்குக் கூட இந்தப் பாட்டை முணுமுணுத்தேன்..எனக்குப் ரொம்பப் புடிச்ச வரிகள்..
    ரொம்ப காலம் இதைத்தான் பாடிட்டே இருந்தேன்..நீங்க எனக்காகவென்றே இந்த வரிகளை தவிர்த்துவிட்டு பிற வரிகளை மனதில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள்..
    காலம் கடந்த அறிவுரை..வேறு யார்க்காவது பயன்படும்..///////

    எனக்கும் பிடித்த பாடல். உங்கள் வயதில் நானும், முதல் இரண்டு வரிகளை மட்டுமே பாடிக்கொண்டிருந்தேன்.
    காலதேவன் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் செய்து மடித்துவைத்து விட்டுப்போன பிறகுதான் மற்ற வரிகளின் மேன்மை புரிந்தது...மைனர்.....ஹி.ஹி!

    ReplyDelete
  31. /////Blogger Saravana said...
    Dear Sir,
    Please take good care of yourself.
    You will get ready soon.
    Thanks
    Saravana////

    உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி

    ReplyDelete
  32. /////Blogger minorwall said...
    சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..
    சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..
    KG ஹோஸ்பிடல்லே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணினா எல்லாம் சரியாயிடும்..//////

    அந்த அளவிற்கு இல்லை. துவக்கம்தான். மருந்தை வைத்தே ஓட்டிவிடலாம். உங்கள் பரிவிற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  33. அன்புள்ள வாத்தியாருக்கு ..,

    எல்லா diseaseமே disorderன் வெளிப்பாடுதான் . . . .

    சுமந்து செல்லும் இறைவனை தொடர்ந்து பற்றுவதால் . .

    பற்றுக்கள் நிறைந்த மாணவர்கள் இன்று.. இப்போது உங்களை சுற்றி . .

    அன்பால் அரவனைக்க . .
    ஆதராவான வார்த்தைகளுக்கு..
    ஆண்டவனிடம் வேண்டுதற்கு..
    இயல்பான ஆலோசனைக்கு
    உண்மையாள் இரங்க . .
    என ...

    எப்போது வேண்டுமானாலும்..
    எந்த உதவியாவாது தேவையெனில் .
    எவ்வித தயக்கமும் இன்றி தனி மின்னஞ்சலில் எழுதுங்கள்..
    வகுப்பறை மாணவராக இல்லை..
    அன்பு சகோதரனாக . .

    காத்திருக்கின்றோம்
    கடமையாற்ற . .

    அந்த பழக்கத்தை மட்டும் கொஞ்சம் கூடுதலாக குறைத்துக் கொள்ளுங்கள்..
    அது உடல் நலனை பலப்படுத்தும்

    நலமும் வளமும் பெற . .

    விதியை வெல்ல . .
    இறைவன் திருமுன்
    வேண்டி நிற்கிறோம்

    visuiyer@yahoo.com

    ReplyDelete
  34. ///iyer said...
    அன்புள்ள வாத்தியாருக்கு ..,
    எல்லா diseaseமே disorderன் வெளிப்பாடுதான் . . . .
    சுமந்து செல்லும் இறைவனை தொடர்ந்து பற்றுவதால் .
    பற்றுக்கள் நிறைந்த மாணவர்கள் இன்று.. இப்போது உங்களை சுற்றி .
    அன்பால் அரவனைக்க . .
    ஆதராவான வார்த்தைகளுக்கு..
    ஆண்டவனிடம் வேண்டுதற்கு..
    இயல்பான ஆலோசனைக்கு
    உண்மையாள் இரங்க . . என ...
    எப்போது வேண்டுமானாலும்..
    எந்த உதவியாவாது தேவையெனில் .
    எவ்வித தயக்கமும் இன்றி தனி மின்னஞ்சலில் எழுதுங்கள்..
    வகுப்பறை மாணவராக இல்லை..
    அன்பு சகோதரனாக . .
    காத்திருக்கின்றோம்
    கடமையாற்ற . .
    அந்த பழக்கத்தை மட்டும் கொஞ்சம் கூடுதலாக குறைத்துக் கொள்ளுங்கள்..
    அது உடல் நலனை பலப்படுத்தும்
    நலமும் வளமும் பெற .
    விதியை வெல்ல . .
    இறைவன் திருமுன்
    வேண்டி நிற்கிறோம்////

    உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி மிஸ்டர் விஸ்வநாதன்!
    வார்த்தைகளால் ‘டச்சிங், டச்சிங்’ பண்ணீட்டீங்க நண்பரே!
    வாழ்க உங்களின் உயர்ந்த உள்ளம்!

    ReplyDelete
  35. எங்கள் அன்புள்ள வாத்தியார் ஐயா குணமடய முருகனை வேண்டுகிறேன்.

    -Ganesh

    ReplyDelete
  36. ///துவக்கத்தில் இருந்து வரிசையாகப் படியுங்கள். மொத்தம் 400 பாடங்கள் உள்ளன. பாடங்களுக்கான லிங்க் சைடு பாரில் உள்ளது///

    நன்றி அய்யா!!!

    ReplyDelete
  37. சிந்தனைக்கு:

    1.பணத்தை சம்பாதித்தால் அதனை செலவு செய்துவிடலாம் ஆனால் பாவத்தை சம்பாதித்தால் செலவழிக்கமுடியாது அதனால் யாரும் பாவத்தை ச்ம்ப்திக்க கூடாது.

    2.ஏழ்மையில் பிறக்கலாம் ஆனால் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழக்கூடாது இள்மையில் வறுமை கொடியது அதைவிட இதான் ரொம்ப கொடியது

    3.எல்லாவற்றையும் அறிந்தவன் எவருமில்லை அதே சமயத்தில் எல்லாவற்றையும் அறிந்தவனும் எவருமில்லை முட்டாள்,புத்திசாலி என்ற வார்த்தை அர்த்தமற்றது.

    4.பணத்தைவிட அறிவும் ஒழுக்கமும் உயர்வானவை ஆனால் பணமே மேன்மையானது

    5.எதிரியானைப்போலயிருந்தாலும் நாம் அவனை எறும்பு போல க்ருதி அவனை
    விட்டுவிடவேண்டும்

    ReplyDelete
  38. ஆண்டவன் அருள் தங்களுக்கு உண்டு.
    வ‌ந்த‌ உட‌ல் அனாரோக்கிய‌ம் ப‌னிபோல் வில‌கிவிடும்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    தாங்கள் நலம் அடைய வாழ்த்துகள்.
    அன்புடன்
    எழில்

    ReplyDelete
  39. எனக்கும் கேது திசையில் புதன் புத்தி 6 மாதம் கழிந்து விட்டது. கேது முடியும் தருவாயில் புதனுடன் சேர்ந்து படாத பாடு படுத்துகிறான்.
    தங்கள் பாடல் கொடுத்ததற்கு நன்றி ஐயா.. உங்கள் உடல் நலனை பார்த்து கொள்ளுங்கள். அடிக்கடி சுற்று பயணம் மேற்கொள்ளர்தீர்கள்....

    ReplyDelete
  40. sir
    i have been reading all your articles. It is informative and gives lot of confidence in life.

    can u please write some articles on existence of spirit ( avigal) and its influence on human being...we have good spirits and bad spirits and how these can be identified in a horoscope.

    thanking you

    ReplyDelete
  41. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    சிம்ம லக்ன ஜாதகருக்கு இரண்டு மற்றும் பதினோறாம் இடங்களின் அதிபதியாகிய புதன் தன்னுடைய தசா புத்திக்காலங்களில் நன்மையே செய்வார்
    என்பது இதே வகுப்பறையில் மாணவர்களாகிய நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். தசா நாதனை மீறி புத்தி நாதர்கள் கெடுதல் செய்து விட முடியாது
    என்பதையும் படித்துள்ளோம். எனவே பெரிய பிரச்சினைகள் ஏதும் ஏற்பட‌
    வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். சரிதானே அய்யா.
    அன்புடன், அரசு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com